திருமுறை 8

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் , திருக்கோவையார் (பாடல்கள் 1 - 400)
திரு மாணிக்கவாசகர் திருவடிகளில் சமர்ப்பணம்
🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻
8-எட்டாம் திருமுறை
திருவாசகம்
00.மாணிக்கவாசகர் வரலாறு 11.திருத்தெள்ளேணம் 21.கோயில்_மூத்த_திருப்பதிகம் 31.கண்ட பத்து 41.அற்புதப் பத்து
1.சிவபுராணம் 12.திருச் சாழல் 22.கோயில் திருப்பதிகம் 32.பிரார்த்தனைப்_பத்து 42.சென்னிப் பத்து
2.கீர்த்தித் திருஅகவல் 13.திருப் பூவல்லி 23.செத்திலாப் பத்து 33.குழைத்த பத்து 43.திரு வார்த்தை
3.திரு அண்டப்பகுதி 14.திரு உந்தியார் 24.அடைக்கலப் பத்து 34.உயிருண்ணிப் பத்து 44.எண்ணப் பதிகம்
4.போற்றித்_திருஅகவல் 15.திருத்_தோள்_நோக்கம் 25.ஆசைப் பத்து 35.அச்சப் பத்து 45.யாத்திரைப் பத்து
5.திருச் சதகம் 16.திருப் பொன்னூசல் 26.அதிசயப் பத்து 36.திருப்_பாண்டிப்_பதிகம் 46.திருப்படையெழுச்சி
6.நீத்தல் விண்ணப்பம் 17.அன்னைப் பத்து 27.புணர்ச்சிப் பத்து 37.பிடித்த பத்து 47.திரு வெண்பா
7.திருவெம்பாவை 18.குயில் பத்து 28.வாழாப் பத்து 38.திரு ஏசறவு 48.பண்டாய நான்மறை
8.திரு அம்மானை 19.திருத் தசாங்கம் 29.அருள் பத்து 39.திருப் புலம்பல் 49.திருப் படையாட்சி
9.திருப்பொற்சுண்ணம் 20.திருப்பள்ளியெழுச்சி 30.திருக்கழுக்குன்றப் பதிகம் 40.குலாப் பத்து 50.ஆனந்த மாலை
10.திருக் கோத்தும்பி 51.அச்சோப் பதிகம்
8-எட்டாம் திருமுறை
திருக்கோவையார் அதிகாரங்கள்(பாடல்கள் 1 - 400)
1.இயற்கைப்புணர்ச்சி
2.பாங்கற் கூட்டம்
3.இடந்தலைப்பாடு
4.மதியுடம்படுதல்
5.இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
6.முன்னுறவுணர்தல்
7.குறையுறவுணர்தல்
8.நாண நாட்டம்
9.நடுங்க நாட்டம்
10.மடல் திறம்
11.குறைநயப்புக்கூறல்
12.சேட்படை
13.பகற்குறி
14.இரவுக்குறி
15.ஒருவழித்தணத்தல்
16.உடன்போக்கு
17.வரைவுமுடுக்கம்
18.வரைபொருட்பிரிதல்
19.மணம்சிறப்புரைத்தல்
20.ஓதற்பிரிவு
21.காவற்பிரிவு
22.பகைதணிவினைப்பிரிவு
23.வேந்தற்கு உற்றுழிப்பிரிவு
24.பொருள்வயின் பிரிவு
25.பரத்தையிற்பிரிவு
பாடல் எண்கள்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350 351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400
 

மேல்


 மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 
@1 சிவபுராணம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குரு மணி-தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க		                 05
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க	             10
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி
தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி	              15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்		            20

கண்_நுதலான் தன் கருணை கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்	          25
புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி
பல் விருகம் ஆகி பறவை ஆய் பாம்பு ஆகி
கல் ஆய் மனிதர் ஆய் பேய் ஆய் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்
செல்லாஅநின்ற இ தாவர_சங்கமத்துள்		                  30
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடை பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே	            35
வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெருமானே
அஞ்ஞானம்-தன்னை அகல்விக்கும் நல் அறிவே	              40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே		                45
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்-தன்னை	      50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய		            55
விலங்கு மனத்தால் விமலா உனக்கு
கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும்
நலம்-தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம்-தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காஅட்டி
நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு		                  60

தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட		            65
பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே
ஆரா_அமுதே அளவு_இலா பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே		             70
அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆய்
சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே
ஆதியனே அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார்-தம் கருத்தில்     75
நோக்கு_அரிய நோக்கே நுணுக்கு_அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பு_அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்ற சுடர் ஒளி ஆய் சொல்லாத நுண் உணர்வு ஆய்	        80	

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம்
தேற்றனே தேற்ற தெளிவே என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று		           85
போற்றி புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே
கள்ள புல குரம்பை கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே		         90
அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானை சொல்லி திருவடி கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடி கீழ்
பல்லோரும் ஏத்த பணிந்து			                    95
மேல்
@2 கீர்த்தித் திருஅகவல்

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்_இல் பல் குணம் எழில் பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்		                    05
என்னுடை இருளை ஏற துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூர
குடியா கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்		                10
கல்லாடத்து கலந்து இனிது அருளி
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப்பள்ளியில் பால்_மொழி-தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக_வாயவள்		                   15
விராவு கொங்கை நல்_தடம் படிந்தும்
கேவேடர் ஆகி கெளிறு-அது படுத்தும்
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்		                  20

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்
அந்தம்_இல் ஆரியன் ஆய் அமர்ந்தருளியும்
வேறுவேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இ புவனியை உய்ய		                    25
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி
குதிரையை கொண்டு குடநாடு-அதன் மிசை
சதிர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும்
வேலம்புத்தூர் விட்டேறு அருளி
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்		                  30
தர்ப்பணம்-அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழு தழல் மேனி
சொக்கது ஆக காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்		              35
நரியை குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன்-தனக்கு பரிமா விற்று
ஈண்டு கனகம் இசைய பெறாஅது
ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப		               40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திரஞாலம் காட்டிய இயல்பும்
மதுரை பெரு நல் மா நகர் இருந்து
குதிரை சேவகன் ஆகிய கொள்கையும்		                45
ஆங்கு அது-தன்னில் அடியவர்க்கு ஆக
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தரகோசமங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி		          50
தூ வண மேனி காட்டிய தொன்மையும்
வாதவூரினில் வந்து இனிது அருளி
பாத சிலம்பு ஒலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறை செல்வன் ஆகி
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்		                   55
பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர் பந்தர் சயம் பெற வைத்து
நல் நீர் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில்		                  60

குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும்
பட்டமங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உரு கொண்டு
காடு-அது-தன்னில் கரந்த கள்ளமும்		                    65
மெய்க்காட்டிட்டு வேண்டு உரு கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரியூரில் உகந்து இனிது அருளி
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்		                     70
தேவூர் தென்-பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலை திருவாரூரில்
ஞானம்-தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது-அதனில் ஈண்ட இருந்து		                 75
படிம பாதம் வைத்த அ பரிசும்
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து
மரு_ஆர்_குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்		                80

சேவகன் ஆகி திண் சிலை ஏந்தி
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர்-தன்னில் இடம் பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழில்-அது காட்டியும்
ஐயாறு-அதனில் சைவன் ஆகியும்			                  85
துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்
கழுமலம்-அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று-அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம்-அதனில் அறம் பல அருளியும்		                 90
குற்றாலத்து குறியாய் இருந்தும்
அந்தம்_இல் பெருமை அழல் உரு கரந்து
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு
இந்திரஞாலம் போல வந்தருளி
எவ்வெவர் தன்மையும் தன்-வயின் படுத்து		              95
தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திரதீபத்து சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மா மலை மகேந்திர வெற்பன்		                  100

அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம்-தமை ஆண்ட பரிசு-அது பகரின்
ஆற்றல்-அது உடை அழகு அமர் திரு உரு
நீற்று கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம்-தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்		              105
ஆனந்தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன்
நாத பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக்கடை-தன்னை கைக்கொண்டு அருளியும்		             110
மூலம் ஆகிய மு_மலம் அறுக்கும்
தூய மேனி சுடர் விடு சோதி
காதலன் ஆகி கழுநீர் மாலை
ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்		                  115
பரிமாவின் மிசை பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழி அருள்புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்
பக்தி செய் அடியாரை பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்			               120

ஆதி_மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய
தேவதேவன் திரு பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்
எ பெரும் தன்மையும் எவ்வெவர் திறமும்		                125
அ பரிசு-அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம் மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்று உடன்சென்ற அருள் பெறும் அடியவர்	             130
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மால்-அது ஆகி மயக்கம் எய்தியும்
பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால் விசைத்து ஓடி கடல் புக மண்டி		              135
நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கு அருளிய பரம_நாடக என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்            140

பொலிதரு புலியூர் பொதுவினில் நடம் நவில்
கனி தரு செம் வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன்                 145
ஒலிதரு கைலை உயர் கிழவோனே
மேல்
@3 திரு அண்டப்பகுதி

அண்ட பகுதியின் உண்டை பிறக்கம்
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன
இல் நுழை கதிரின் துன் அணு புரைய                              05
சிறிய ஆக பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து                              10
எறியது வளியின்
கொட்க பெயர்க்கும் குழகன் முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள் காப்பவை
காப்போன் கரப்பவை கருதா                                     15
கருத்துடை கடவுள் திருத்தகும்
அறுவகை சமயத்து அறுவகையோர்க்கும்
வீடுபேறு ஆய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள்-தொறும்
அருக்கனின் சோதி அமைத்தோன் திருத்தகு		                     20

மதியில் தண்மை வைத்தோன் திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்
நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட		                   25
மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று
எனை பல கோடி எனை பல பிறவும்
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்_நேர்_இல்லோன்-தானே காண்க		                          30
ஏன தொல் எயிறு அணிந்தோன் காண்க
கான புலி_உரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினை-தொறும் நினை-தொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன் இசை வீணையில் இசைத்தோன் காண்க		                35
அன்னது ஒன்று அ-வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன் மால் காணா பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொல்_பதம் கடந்த தொல்லோன் காண்க		                     40

சித்தமும் செல்லா சேட்சியன் காண்க
பத்தி_வலையில் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க		                      45
இணைப்பு_அரும் பெருமை ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவி எ பொருளும் வளர்ப்போன் காண்க
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க
மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க		                        50
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க		                       55
தேவரும் அறியா சிவனே காண்க
பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க		                    60

புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளை கண்ணி கூறன் காண்க
அவளும் தானும் உடனே காண்க			                    65
பரமானந்தம் பழம் கடல்-அதுவே
கரு மா முகிலின் தோன்றி
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி
திருத்தகு மின் ஒளி திசைதிசை விரிய
ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய		                      70
வெம் துயர் கோடை மா தலை கரப்ப
நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர
எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து
முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி
பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட			                   75
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள
செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற
கேத குட்டம் கையற ஓங்கி
இரு மு சமயத்து ஒரு பேய்த்தேரினை
நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம்		               80

தவ பெரு வாயிடை பருகி தளர்வொடும்
அவ பெரும் தாபம் நீங்காது அசைந்தன
ஆயிடை வான பேரியாற்று அக-வயின்
பாய்ந்து எழுந்து இன்பம் பெரும் சுழி கொழித்து
சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து	            85
ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து
உருவ அருள்_நீர் ஓட்டா அரு வரை
சந்தின் வான் சிறை கட்டி மட்டு அவிழ்
வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில்		                 90
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின்
மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு
தொண்ட உழவர் ஆர தந்த
அண்டத்து அரும்_பெறல் மேகன் வாழ்க		                 95
கரும் பண கச்சை கடவுள் வாழ்க
அரும் தவர்க்கு அருளும் ஆதி வாழ்க
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க		                   100

எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேர் அமை தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க		                    105
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நால் திசை
நடப்பன நடாஅய் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇ				                           110
சொல்_பதம் கடந்த தொல்லோன்
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து	எங்கும்		                115
ஒழிவு_அற நிறைந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந்து அருளி
அழிதரும் ஆக்கை ஒழிய செய்த ஒள் பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி		                 120

ஊற்றிருந்து உள்ளம் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய
போற்றா ஆக்கையை பொறுத்தல் புகலேன்
மரகத குவாஅல் மா மணி பிறக்கம்
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ		               125
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்
மறை திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்	               130
இ தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு
அ தந்திரத்தில் அ-வயின் ஒளித்தும்
முனிவு அற நோக்கி நனி வர கௌவி
ஆண் என தோன்றி அலி என பெயர்ந்து
வாள் நுதல் பெண் என ஒளித்தும் சேண்-வயின்	               135
ஐம்புலன் செல விடுத்து அரு வரை-தொறும் போய்
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும்
பண்டே பயில்-தொறும் இன்றே பயில்-தொறும்	             140

ஒளிக்கும் சோரனை கண்டனம்
ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில்
தாள் தளை இடு-மின்
சுற்று-மின் சூழ்-மின் தொடர்-மின் விடேன்-மின்
பற்று-மின் என்றவர் பற்று முற்று ஒளித்தும்		             145
தன்_நேர்_இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி
அறைகூவி ஆட்கொண்டு அருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு		                  150
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
கட களிறு ஏற்றா தட பெரு மதத்தின்		                  155
ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு
கோல்_தேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்து ஆங்கு அன்று
அருள் பெரும் தீயின் அடியோம் அடி குடில்		             160

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
தட கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்
சொல்லுவது அறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான் எனை செய்தது
தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு		                 165
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்லகில்லேன்
செழும் தண் பாற்கடல் திரை புரைவித்து
உவா கடல் நள்ளும் நீர் உள்_அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்-தோறும்		              170
தேக்கிட செய்தனன் கொடியேன் ஊன் தழை
குரம்பை-தோறும் நாய்_உடல் அகத்தே
குரம்பு கொண்டு இன் தேன் பாய்த்தினன் நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்
எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது		               175
உள்ளம் கொண்டோர் உரு செய்து ஆங்கு எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான் தேன் கலக்க			                   180

அருளொடு பராவமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியா பெற்றியோனே
மேல்
@4 போற்றித் திருஅகவல்

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூ_உலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலர
போற்றி செய் கதிர் முடி திரு நெடுமால் அன்று
அடி முடி அறியும் ஆதரவு-அதனில்		                     05
கடும் முரண் ஏனம் ஆகி முன் கலந்து
ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர் அடி_இணைகள்
வழுத்துதற்கு எளிது ஆய் வார் கடல் உலகினில்                  10
யானை முதலா எறும்பு ஈறு ஆய
ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும்
மானுட பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும்
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும்	                   15
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்		                 20

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச_மதி தாயொடு தான் படும்
துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும்		                      25
ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும்
காலை மலமொடு கடும் பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில்                 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்து
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து
ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம்
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும்		                35
பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள்
மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும்
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்	                   40

புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாதது ஓர் பொருள்-அது கருதலும்
ஆறு கோடி மாயா_சக்திகள்
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின		                 45
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல் பசு குழாங்கள்
பற்றி அழைத்து பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும்			                  50
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமயவாதிகள் தம்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா_வாதம் என்னும்
சண்டமாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து	                   55
உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின்
கலா_பேதத்த கடு விடம் எய்தி
அதில் பெரு மாயை எனை பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியா
தழல்-அது கண்ட மெழுகு-அது போல	                    60

தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாது எனும்
படியே ஆகி நல் இடை_அறா அன்பின்
பசு மரத்து ஆணி அறைந்தால் போல		                65
கசிவது பெருகி கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலம் ஆய் மெய் விதிர்த்து
சகம் பேய் என்று தம்மை சிரிப்ப
நாண்-அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண்-அது ஆக கோணுதல் இன்றி		                   70
சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரம_அதிசயம் ஆக
கற்றா மனம் என கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அரு பரத்து ஒருவன் அவனியில் வந்து		               75
குருபரன் ஆகி அருளிய பெருமையை
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை
பிறிவினை அறியா நிழல்-அது போல
முன் பின் ஆகி முனியாது அ திசை
என்பு நைந்து உருகி நெக்குநெக்கு ஏங்கி	                 80

அன்பு எனும் ஆறு கரை-அது புரள
நன் புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கர_மலர் மொட்டித்து இருதயம் மலர
கண் களி கூர நுண் துளி அரும்ப		                  85
சாயா அன்பினை நாள்-தொறும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினை கெட
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி			                  90
கூடல் இலங்கு குரு மணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி		               95
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனக குன்றே போற்றி
ஆஆ என்-தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி	               100

இடரை களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேச பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி		                 105
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செம் சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி	                  110
கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி		                   115
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மூ_ஏழ் சுற்றமும் முரணுறு நரகிடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி		                  120

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
விரி கடல் உலகின் விளைவே போற்றி		                125
அருமையில் எளிய அழகே போற்றி
கரு முகில் ஆகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும் ஒருவன் ஆக்கி இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி		                130
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி
வழுவு_இலா ஆனந்த_வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி		                135
வானகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி		              140

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது உறையும் எந்தாய் போற்றி		                 145
சடையிடை கங்கை தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுத கடலே போற்றி		                  150
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி                   155
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி		                  160

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
இத்தி-தன்னின் கீழ் இரு_மூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடு உடைய சிவனே போற்றி
எ நாட்டவர்க்கும் இறைவா போற்றி		                 165
ஏன குருளைக்கு அருளினை போற்றி
மான கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவா போற்றி
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி		             170
களம் கொள கருத அருளாய் போற்றி
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி			                175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி		              180

உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி		              185
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலை_நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி			              190
திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி			            195
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி
தோளா முத்த சுடரே போற்றி
ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி
ஆரா_அமுதே அருளா போற்றி
பேர் ஆயிரம் உடை பெம்மான் போற்றி		              200

தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தன சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி
மந்திர மா மலை மேயாய் போற்றி		                  205
எம்-தமை உய்ய கொள்வாய் போற்றி
புலி முலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி
கரும்_குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி	              210
படி உற பயின்ற பாவக போற்றி
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்கம் நால்_நிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவு_அற நிறைந்த ஒருவ போற்றி		              215
செழு மலர் சிவபுரத்து அரசே போற்றி
கழு நீர் மாலை கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி	           220

புரம் பல எரித்த புராண போற்றி
பரம்பரம் சோதி பரனே போற்றி
போற்றி போற்றி புயங்க பெருமான்
போற்றி போற்றி புராண_காரண
போற்றி போற்றி சயசய போற்றி			                  225
மேல்
@5 திருச்சதகம்

#1
மெய்-தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்-தான் தவிர்ந்து உன்னை போற்றி சயசய போற்றி என்னும்
கை-தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டுகொள்ளே

#2
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்
எள்ளேன் திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே

#3
உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும்
தம்தம் மனத்தன பேச எஞ்ஞான்று-கொல் சாவதுவே

#4
சாவ முன் நாள் தக்கன் வேள்வி தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர்-அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

#5
தவமே புரிந்திலன் தண் மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு_கண்டாய் அடியேற்கு எம் பரம்பரனே

#6
பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லா கள்வனே நின்-தன் வார் கழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே

#7
முழுவதும் கண்டவனை படைத்தான் முடி சாய்ந்து முன் நாள்
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி கதி_இலியாய்
உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேல் கொண்டு உழிதருமே

#8
உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின்
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை
கழிதரு காலமும் ஆய் அவை காத்து எம்மை காப்பவனே

#9
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன் என்ன இ பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு ஆவது இயம்புகவே

#10
புகவே தகேன் உனக்கு அன்பருள் யான் என் பொல்லா மணியே
தகவே எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை எ புன்மையரை
மிகவே உயர்த்தி விண்ணோரை பணித்தி அண்ணா அமுதே
நகவே தகும் எம்பிரான் என்னை நீ செய்த நாடகமே

#11
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிக பெரிதும் விரைகின்றேன்
ஆடக சீர் மணி குன்றே இடை_அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருக தந்தருள் எம் உடையானே

#12
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே எம்பெருமான் எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே

#13
வருந்துவன் நின் மலர் பாதம் அவை காண்பான் நாய்_அடியேன்
இருந்து நல மலர் புனையேன் ஏத்தேன் நா தழும்பு ஏற
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்
வருந்துவன் அ தமியேன் மற்று என்னே நான் ஆம் ஆறே

#14
ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன்
பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே

#15
வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
கோன் ஆகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு-
வான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

#16
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்-பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய்_அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே

#17
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவு வார் கழல்_இணைகள் காண்பாரோ அரியானே

#18
அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்_கழல் கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன்
தரியேன் நான் ஆம் ஆறு என் சாவேன் நான் சாவேனே

#19
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருக புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே

#20
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினை பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே

#21
வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆக பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே

#22
வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினை_கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே

#23
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து யான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கி கண்டும் நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய் அடியார்-தாம் இல்லையே அன்றி மற்று ஓர்
பேயனேன் இது-தான் நின் பெருமை அன்றே எம்பெருமான் என் சொல்லி பேசுகேனே

#24
பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்று என்றே பேசிப்பேசி
பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே

#25
வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு
எண்ணம்-தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்-தன்
வண்ணம்-தான்-அது காட்டி வடிவு காட்டி மலர் கழல்கள்-அவை காட்டி வழி_அற்றேனை
திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே

#26
சிந்தனை நின்-தனக்கு ஆக்கி நாயினேன்-தன் கண்_இணை நின் திருப்பாத போதுக்கு ஆக்கி
வந்தனையும் அ மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணி_வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை
தந்தனை செந்தாமரை காடு அனைய மேனி தனி சுடரே இரண்டும் இல் இ தனியனேற்கே

#27
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு
இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல் கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே

#28
கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே

#29
விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார்-தம் அடியன் ஆக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே

#30
தேவர்_கோ அறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டுகொண்டான் யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே

#31
ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்பு உருகி
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாத_மலர்
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவு-தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே

#32
அறிவு இலாத எனை புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மெய்ந்நெறி
எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானை
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிக கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னை கெடுமாறே

#33
மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே
தேறுகின்றிலம் இனி உனை சிக்கென சிவன்-அவன் திரள் தோள் மேல்
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இ காயம்
கீறுகின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே

#34
கிற்ற வா மனமே கெடுவாய் உடையான் அடி_நாயேனை
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர் திருப்பாதம்
முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன்
அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே

#35
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்திருந்தேயும்
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே

#36
புகுவது ஆவதும் போதரவு இல்லதும் பொன்_நகர் புக போதற்கு
உகுவது ஆவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் சுழற்கு அன்பு
நெகுவது ஆவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி
மிகுவது ஆவதும் இன்று எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே

#37
வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே
முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன்
இனையன் பாவனை இரும்பு கல் மனம் செவி இன்னது என்று அறியேனே

#38
ஏனை யாவரும் எய்திடலுற்று மற்று இன்னது என்று அறியாத
தேனை ஆன் நெயை கரும்பின் இன் தேறலை சிவனை என் சிவலோக
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம்
ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே

#39
ஓய்வு இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் தாள் தந்து
நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நல் நெறி காட்டி
தாயில் ஆகிய இன் அருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்
தீயில் வீழ்கிலேன் திண் வரை உருள்கிலேன் செழும் கடல் புகுவேனே

#40
வேனில் வேள் கணை கிழித்திட மதி சுடும் அது-தனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன் நகர் புக போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல்பொருட்டு இனும் உண்டு உடுத்து இருந்தேனே

#41
இரு கை யானையை ஒத்திருந்து என் உள
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே
வருக என்று பணித்தனை வான் உளோர்க்கு
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே

#42
உண்டு ஓர் ஒள் பொருள் என்று உணர்வார்க்கு எலாம்
பெண்டிர் ஆண் அலி என்று அறி ஒண்கிலை
தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்
கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே

#43
மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உனை என்று-கொல் காண்பதே

#44
காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர்
வாள் நிலா பொருளே இங்கு ஒர் பார்ப்பு என
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனை
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே

#45
போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று
ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்
ஏற்று வந்து எதிர் தாமரை தாள் உறும்
கூற்றம் அன்னது ஒர் கொள்கை என் கொள்கையே

#46
கொள்ளும்-கில் எனை அன்பரில் கூய் பணி
கள்ளும் வண்டும் அறா மலர் கொன்றையான்
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே

#47
எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு_அரும் செல்வனே

#48
செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழு
புல் வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள்
எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே

#49
கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறியேனையே

#50
அறிவனே அமுதே அடி_நாயினேன்
அறிவன் ஆக கொண்டோ எனை ஆண்டதும்
அறிவு_இலாமை அன்றே கண்டது ஆண்ட நாள்
அறிவனோ அல்லனோ அருள் ஈசனே

#51
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே
தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே

#52
செய்வது அறியா சிறு நாயேன் செம்பொன் பாத_மலர் காணா
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும்
பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே

#53
போர் ஏறே நின் பொன்_நகர்-வாய் நீ போந்தருளி இருள் நீக்கி
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேர கண்டும் கண் கெட்ட
ஊர் ஏறு ஆய் இங்கு உழல்வேனோ கொடியான் உயிர்-தான் உலவாதே

#54
உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான்
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய்
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான்
அலவாநிற்கும் அன்பு இலேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

#55
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லை
கோனே உன்-தன் திருக்குறிப்பு கூடுவார் நின் கழல் கூட
ஊன் ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே

#56
உடையானே நின்-தனை உள்கி உள்ளம் உருகும் பெரும் காதல்
உடையார் உடையாய் நின் பாதம் சேர கண்டு இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன் நெஞ்சு உருகாதேன் கல்லா மனத்தேன் கசியாதேன்
முடை ஆர் புழுக்கூடு-இது காத்து இங்கு இருப்பது ஆக முடித்தாயே

#57
முடித்த ஆறும் என்-தனக்கே தக்கதே முன் அடியாரை
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர்
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என்-தனக்கே சூழ்ந்தேனே

#58
தேனை பாலை கன்னலின் தெளியை ஒளியை தெளிந்தார்-தம்
ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்கு
தானும் சிரித்தே அருளலாம் தன்மை ஆம் என் தன்மையே

#59
தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி எந்தாய் எங்கு புகுவேனே

#60
புகுவேன் எனதே நின் பாதம் போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன் பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்
நெகும் அன்பு இல்லை நினை காண நீ ஆண்டு அருள அடியேனும்
தகுவனே என் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே

#61
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பு_இல்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி

#62
போற்றி ஓ நமச்சிவாய புயங்களே மயங்குகின்றேன்
போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை
போற்றி ஓ நமச்சிவாய புறம் எனை போக்கல் கண்டாய்
போற்றி ஓ நமச்சிவாய சயசய போற்றி போற்றி

#63
போற்றி என் போலும் பொய்யர்-தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ
காற்று இயமானன் வானம் இரு சுடர் கடவுளானே

#64
கடவுளே போற்றி என்னை கண்டுகொண்டு அருளு போற்றி
விட உளே உருக்கி என்னை ஆண்டிடவேண்டும் போற்றி
உடல்-இது களைந்திட்டு ஒல்லை உம்பர் தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி

#65
சங்கரா போற்றி மற்று ஓர் சரண் இலேன் போற்றி கோல
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண்
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி
இங்கு இ வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே

#66
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடை பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடு இ வாழ்வு போற்றி உம்பர் நாட்டு எம்பிரானே

#67
எம்பிரான் போற்றி வானத்தவர்-அவர் ஏறு போற்றி
கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி
செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி
உம்பராய் போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி

#68
ஒருவனே போற்றி ஒப்பு_இல் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமள கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்-பால் வாங்கிடவேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே

#69
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்மை ஆட்கொண்டு அருளும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிடவேண்டும் போற்றி

#70
போற்றி இ புவனம் நீர் தீர் காலொடு வானம் ஆனாய்
போற்றி எ உயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கையானே

#71
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என் இது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழல்-கணே
புணர்ப்பது ஆக அம் கணாள புங்கம் ஆன போகமே

#72
போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்
ஏக நின் கழல்_இணை அலாது இலேன் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலி-கணே
ஆக என் கை கண்கள் தாரை_ஆறு-அது ஆக ஐயனே

#73
ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன்
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என் எம்பிரான்
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல்-கணே
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே

#74
வேண்டும் நின் கழல்-கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டுகொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும்
மாண்டுமாண்டு வந்துவந்து மன்ன நின் வணங்கவே

#75
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கி யாம் விசேடங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை_பங்க என்-கொலோ நினைப்பதே

#76
நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்
தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எ புறத்தது எந்தை பாதம் எய்தவே

#77
எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இ வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்-கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில்
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு
இஃது அல்லாது நின்-கண் ஒன்றும்வண்ணம் இல்லை ஈசனே

#78
ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும்
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான்
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஒர் நின் அலால்
தேசனே ஒர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே

#79
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீர் இல் ஐம்புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே

#80
இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்ன தாள்
கருப்பு மட்டு வாய் மடுத்து எனை கலந்து போகவும்
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும்
விருப்பும் உண்டு நின்-கண் என்-கண் என்பது என்ன விச்சையே

#81
விச்சு கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம்
பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே

#82
பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று
ஏசப்பட்டேன் இனி படுகின்றது அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே

#83
அடியேன் அல்லேன்-கொல்லோ தான் எனை ஆட்கொண்டிலை-கொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார்
செடி சேர் உடலம்-இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா
கடியேன் உன்னை கண்ணார காணும் ஆறு காணேனே

#84
காணும் ஆறு காணேன் உன்னை அ நாள் கண்டேனும்
பாணே பேசி என்-தன்னை படுத்தது என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன்
ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு எழுகேன் எம்மானே

#85
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே

#86
புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான்
அறவே நின்னை சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்
சிறவே செய்து வழுவாது சிவனே நின் தாள் சேர்ந்தாரே

#87
தாராய் உடையாய் அடியேற்கு உன் தாள்_இணை அன்பு
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைத்து ஆங்கு உன் தாள்_இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே மயல்கொண்டு அழுகேனே

#88
அழுகேன் நின்-பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின் ஆர் பொன் ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னை தொடர்ந்தாரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே

#89
பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையை பொடி ஆக்கி
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய் தீர் மெய்யானே

#90
யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே

#91
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை
வேறு இலா பத பரிசு பெற்ற நின் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

#92
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் அரியை என்று உனை கருதுகின்றேன்
மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனை புகுதவிட்டு நீ போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே

#93
பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் போத என்று எனை புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே

#94
இல்லை நின் கழற்கு அன்பு-அது என்-கணே ஏலம் ஏலும் நல் குழலி_பங்கனே
கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறு_இல் வானனே

#95
வான நாடரும் அறி ஒணாத நீ மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே

#96
விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சக பெரும் புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே

#97
உடைய நாதனே போற்றி நின் அலால் பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி
உடையனோ பணி போற்றி உம்பரார்-தம் பராபரா போற்றி யாரினும்
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் கருணையாளனே போற்றி என்னை நின்
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே

#98
அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில் உரியனாய் உனை பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து எங்கள் மன்னனே

#99
மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனை பாவ_நாச நின் சீர்கள் பாடவே

#100
பாடவேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந்து உருகி நெக்குநெக்கு
ஆடவேண்டும் நான் போற்றி அம்பலத்து ஆடும் நின் கழல் போது நாயினேன்
கூடவேண்டும் நான் போற்றி இ புழுக்கூடு நீக்கு எனை போற்றி பொய் எலாம்
வீடவேண்டும் நான் போற்றி வீடு தந்தருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே
மேல்
@6 நீத்தல் விண்ணப்பம்

#1
கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே

#2
கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய் நின் விழு தொழும்பின்
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு ஆண்டது எ காரணமே

#3
கார் உறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய் விளங்கும் திருவா
ரூர் உறைவாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே

#4
வளர்கின்ற நின் கருணை கையில் வாங்கவும் நீங்கி இ-பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
தெளிகின்ற பொன்னும் மின்னும் அன்ன தோற்ற செழும் சுடரே

#5
செழிகின்ற தீ புகு விட்டிலின் சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே
வழி நின்று நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே

#6
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொறுப்பார் அன்றே பெரியோர் சிறு நாய்கள்-தம் பொய்யினையே

#7
பொய்யவனேனை பொருள் என ஆண்டு ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே விட்டிடுதி கண்டாய் விடம் உண் மிடற்று
மையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
செய்யவனே சிவனே சிறியேன் பவம் தீர்ப்பவனே

#8
தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே

#9
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே

#10
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையை போக்க பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே

#11
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே

#12
நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுத பெரும் கடலே

#13
கடலினுள் நாய் நக்கி ஆங்கு உன் கருணை கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய் விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே

#14
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
கள்ளத்து உளேற்கு அருளாய் களியாத களி எனக்கே

#15
களிவந்த சிந்தையோடு உன் கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே

#16
என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும் பொருளே

#17
பொருளே தமியேன் புகலிடமே நின் புகழ் இகழ்வார்
வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும்
அருளே அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே
இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே

#18
இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே

#19
மடங்க என் வல்வினை காட்டை நின் மன் அருள் தீ கொளுவும்
விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோசமங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே

#20
கொம்பர் இல்லா கொடி போல் அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே
அம்பரமே நிலனே அனல் காலொடு அப்பு ஆனவனே

#21
ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய் வினையேன் மனத்து
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்து
ஊனையும் என்பினையும் உருக்காநின்ற ஒண்மையனே

#22
ஒண்மையனே திருநீற்றை உத்தூளித்து ஒளி மிளிரும்
வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு
அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம்
பெண்மையனே தொன்மை ஆண்மையனே அலி பெற்றியனே

#23
பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன்
மற்று அடியேன்-தன்னை தாங்குநர் இல்லை என் வாழ்_முதலே
உற்று அடியேன் மிக தேறி நின்றேன் எனக்கு உள்ளவனே

#24
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை
பொள்ளல் நல் வேழத்து உரியாய் புலன் நின்-கண் போதல் ஒட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய் குடம்-தன்னை எறும்பு எனவே

#25
எறும்பிடை நாங்கூழ் என புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடி போது-அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே

#26
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே

#27
கொழு மணி ஏர் நகையார் கொங்கை குன்றிடை சென்று குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய் மெய் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்துவைத்து ஆட்கொண்டருளி என்னை
கழு மணியே இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே

#28
புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து இங்கு ஒர் பொய் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய் விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே

#29
குலம் களைந்தாய் களைந்தாய் என்னை குற்றம் கொற்ற சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கம் அம் தாமரை மேனி அப்பா ஒப்பு_இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து உறவே

#30
மத்து உறு தண் தயிரின் புலன் தீ கதுவ கலங்கி
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி
கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி
தத்துறு நீறுடன் ஆர செம் சாந்து அணி சச்சையனே

#31
சச்சையனே மிக்க தண் புனல் விண் கால் நிலம் நெருப்பு ஆம்
விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய்
பச்சையனே செய்ய மேனியனே ஒள் பட அரவ
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே

#32
அடல் கரி போல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய் விட்டிடுதி கண்டாய் விழு தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே

#33
கண்டது செய்து கருணை_மட்டு பருகி களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய் நின் விரை மலர் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து பணிசெய கூவித்து என்னை
கொண்டு என் எந்தாய் களையாய் களை ஆய குதுகுதுப்பே

#34
குதுகுதுப்பு இன்றி நின்று என் குறிப்பே செய்து நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய் விரை ஆர்ந்து இனிய
மதுமது போன்று என்னை வாழைப்பழத்தின் மனம் கனிவித்து
எதிர்வது எப்போது பயில்வி கயிலை பரம்பரனே

#35
பரம்பரனே நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய் மென் முயல் கறையின்
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சி பொதும்பு உறவே

#36
பொதும்புறு தீ போல் புகைந்து எரிய புலன் தீ கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் வண்டு
அதும்பும் கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே

#37
அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால்
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண்
திரை சேர் மடந்தை மணந்த திரு பொன் பத புயங்கா
வரை சேர்ந்து அடர்ந்து என்ன வல்வினை-தான் வந்து அடர்வனவே

#38
அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய் விரிந்தே எரியும்
சுடர் அனையாய் சுடுகாட்டு அரசே தொழும்பர்க்கு அமுதே
தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே

#39
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த
வினை துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே

#40
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை
கலை தலையாய் கருணாகரனே கயிலாயம் என்னும்
மலை தலைவா மலையாள் மணவாள என் வாழ்_முதலே

#41
முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலை செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சிதலை செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே

#42
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில்
பதி உடை வாள் அர பார்த்து இறை பைத்து சுருங்க அஞ்சி
மதி நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே

#43
மன்னவனே ஒன்றும் ஆறு அறியா சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய் மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே கழியா தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே

#44
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரி தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள்
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே

#45
பாடிற்றிலேன் பணியேன் மணி நீ ஒளித்தாய்க்கு பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய் வியந்து ஆங்கு அலறி
தேடிற்றிலேன் சிவன் எ இடத்தான் எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன் கிடந்து உள் உருகேன் நின்று உழைத்தனனே

#46
உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன்
பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே

#47
பழிப்பு_இல் நின் பாத பழம் தொழும்பு எய்தி விழ பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்த பெருமை
தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே

#48
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண்
வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார்
ஆர் அடியான் என்னின் உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான் என்று நின்னை சிரிப்பிப்பனே

#49
சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று
விரப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியின்
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு
எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே

#50
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின்
தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ண கடையவனே
மேல்
@7 திருவெம்பாவை

#1
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம் பாட கேட்டேயும் வாள் தடம் கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய்
வீதி-வாய் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசு எல் ஓர் எம்பாவாய்

#2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இரா_பகல் நாம்
பேசும்போது எப்போது இ போது ஆர் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேர்_இழையாய் நேர்_இழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
கூசும் மலர் பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்

#3
முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறி
தித்திக்க பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழ அடியீர் பாங்கு உடையீர்
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்

#4
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ண கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழு பொருளை
கண்ணுக்கு இனியானை பாடி கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணி குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்

#5
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளி கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏல_குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#6
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவு_அரியான்
தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

#7
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லாமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#8
கோழி சிலம்ப சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்
கேழ்_இல் பரஞ்சோதி கேழி_இல் பரங்கருணை
கேழ்_இல் விழு பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை_பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய்

#9
முன்னை பழம் பொருட்கும் முன்னை பழம் பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே
உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்

#10
பாதாளம் ஏழினும் கீழ் சொல்_கழிவு பாத_மலர்
போது ஆர் புனை முடியும் எல்லா பொருள் முடிவே
பேதை ஒரு-பால் திருமேனி ஒன்று அல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனை பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

#11
மொய் ஆர் தடம் பொய்கை புக்கு முகேர் என்ன
கையால் குடைந்துகுடைந்து உன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல்
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மை ஆர் தடம் கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்

#12
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன் நல் தில்லை சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இ வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல் மேல் வண்டு ஆர்ப்ப
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#13
பைம் குவளை கார் மலரால் செங்கமல பைம் போதால்
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தம்-கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில் புக பாய்ந்துபாய்ந்து நம்
சங்கம் சிலம்ப சிலம்பு கலந்து ஆர்ப்ப
கொங்கைகள் பொங்க குடையும் புனல் பொங்க
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#14
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட
சீத புனல் ஆடி சிற்றம்பலம் பாடி
வேத பொருள் பாடி அ பொருள் ஆமா பாடி
சோதி திறம் பாடி சூழ் கொன்றை தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்_வளை-தன்
பாத திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#15
ஓர் ஒரு கால் எம்பெருமான் என்று என்றே நம் பெருமான்
சீர் ஒரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீர் ஒரு கால் ஓவா நெடும் தாரை கண் பனிப்ப
பார் ஒரு கால் வந்தனையாள் விண்ணோரை தான் பணியாள்
பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#16
முன்னி கடலை சுருக்கி எழுந்து உடையாள்
என்ன திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னி பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன் அம் சிலம்பில் சிலம்பி திரு புருவம்
என்ன சிலை குலவி நம்-தம்மை ஆள் உடையாள்-
தன்னில் பரிவு_இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே
என்ன பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய்

#17
செங்கண்-அவன்-பால் திசைமுகன்-பால் தேவர்கள்-பால்
எங்கும் இலாதது ஓர் இன்பம் நம்-பாலதா
கொங்கு உண் கரும் குழலி நம்-தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள்-தோறும் எழுந்தருளி
செங்கமல பொன் பாதம் தந்தருளும் சேவகனை
அம் கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை
நங்கள் பெருமானை பாடி நலம் திகழ
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#18
அண்ணாமலையான் அடி கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணி தொகை வீறு அற்றால் போல்
கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்ப
தண் ஆர் ஒளி மழுங்கி தாரகைகள்-தாம் அகல
பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர்
விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகி
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடி
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய்

#19
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர்_அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எ பணியும் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இ பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்

#20
போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத_மலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை_அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய்
மேல்
@8 திரு அம்மானை

#1
செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு_அரிய
பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#2
பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனை பாடுதும் காண் அம்மானாய்

#3
இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்க சிவன் அவனி வந்தருளி
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய்
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்
பந்தம் பறிய பரி மேல்கொண்டான் தந்த
அந்தம்_இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய்

#4
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பு_அரிய
தான் வந்து நாயேனை தாய் போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#5
கல்லா மனத்து கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை
தில்லை நகர் புக்கு சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய்

#6
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி
தாள்_தாமரை காட்டி தன் கருணை தேன் காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடு எய்த
ஆள்-தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய்

#7
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானை
சேயானை சேவகனை தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை
நாய் ஆன நம்-தம்மை ஆட்கொண்ட நாயகனை
தாயானை தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானை பாடுதும் காண் அம்மானாய்

#8
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றி கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அ கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்

#9
துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம்
பண்டை பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய்

#10
விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானை
பெண் ஆளும் பாகனை பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை பாடுதும் காண் அம்மானாய்

#11
செப்பு_ஆர் முலை_பங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்
அ பாண்டி நாட்டை சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய்

#12
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும்
எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால்
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து
மெய்ப்பொருள்-கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எ பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அ பொருள் ஆம் நம் சிவனை பாடுதும் காண் அம்மானாய்

#13
கை ஆர் வளை சிலம்ப காது ஆர் குழை ஆட
மை ஆர் குழல் புரள தேன் பாய வண்டு ஒலிப்ப
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய்

#14
ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய்
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன்-அவன் போல் வந்து என்னை தன் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய்

#15
சந்திரனை தேய்த்தருளி தக்கன்-தன் வேள்வியினில்
இந்திரனை தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்து
சிந்தி திசைதிசையே தேவர்களை ஓட்டு உகந்த
செம் தார் பொழில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய்

#16
ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து
தேன் ஆய் அமுதமும் ஆய் தீம் கரும்பின் கட்டியும் ஆய்
வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும்
தேன் ஆர் மலர் கொன்றை சேவகனார் சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய் அளவு_இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய்

#17
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செம் வாய்க்கு உருகுவேன் உள் உருகி
தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய்

#18
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை
தெளி வந்த தேறலை சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்_அரிய இன் அருளால்
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணனை பாடுதும் காண் அம்மானாய்

#19
முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும்
பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை
தென் ஆனைக்காவானை தென் பாண்டி நாட்டானை
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை அம்மானை பாடுதும் காண் அம்மானாய்

#20
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்ற குதிரையின் மேல் வந்தருளி தன் அடியார்
குற்றங்கள் நீக்கி குணம் கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்ற தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி இ பாசத்தை பற்று அற நாம் பற்றுவான்
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய்
மேல்
@9 திருப் பொற்சுண்ணம்

#1
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின்
சத்தியும் சோமியும் பார்_மகளும் நா_மகளோடு பல்லாண்டு இசை-மின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்-மின்
அத்தன் ஐயாறன் அம்மானை பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#2
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும்
மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள்
கூவு-மின் தொண்டர் புற நிலாமே குனி-மின் தொழு-மின் எம் கோன் எம் கூத்தன்
தேவியும் தானும் வந்து எம்மை ஆள செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே

#3
சுந்தர நீறு அணிந்து மெழுகி தூய பொன் சிந்தி நிதி நிரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்து கொடி எடு-மின்
அந்தரர் கோன் அயன்-தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேலன் தாதை
எம் தரம் ஆள் உமையாள் கொழுநற்கு ஏய்ந்த பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#4
காசு அணி-மின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணி-மின்கள் கறை உரலை
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
பாச வினையை பறிந்து நின்று பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#5
அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர்
நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம்
செறிவு உடை மு_மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
முறுவல் செம் வாயினீர் முக்கண்_அப்பற்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#6
உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே
கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு நாள்_மலர் பாதங்கள் சூட தந்த
மலைக்கு மருகனை பாடிப்பாடி மகிழ்ந்து பொன்_சுண்ணம் இடிந்தும் நாமே

#7
சூடகம் தோள் வளை ஆர்ப்பஆர்ப்ப தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்பஆர்ப்ப
நாடவர் நம்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப நாமும் அவர்-தம்மை ஆர்ப்பஆர்ப்ப
பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை_பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#8
வாள் தடம் கண் மட மங்கை நல்லீர் வரி வளை ஆர்ப்ப வண் கொங்கை பொங்க
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி
நாள் கொண்ட நாள்_மலர் பாதம் காட்டி நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#9
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடி செம்பொன் உலக்கை வல கை பற்றி
ஐயன் அணி தில்லைவாணனுக்கே ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#10
முத்து அணி கொங்கைகள் ஆடஆட மொய் குழல் வண்டு இனம் ஆடஆட
சித்தம் சிவனொடும் ஆடஆட செம் கயல் கண் பனி ஆடஆட
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொடு ஆடஆட ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#11
மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி
தேடு-மின் எம்பெருமானை தேடி சித்தம் களிப்ப திகைத்து தேறி
ஆடு-மின் அம்பலத்து ஆடினானுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#12
மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை
ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர்-தம் பொய்யினை மெய்யர் மெய்யை போது அரி கண்_இணை பொன் தொடி தோள்
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#13
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர்
என்னுடை ஆர் அமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமவான் மகட்கு
தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடி
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#14
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி
கங்கை இரைப்ப அரா இரைக்கும் கற்றை சடை முடியான் கழற்கே
பொங்கிய காதலின் கொங்கை பொங்க பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#15
ஞான கரும்பின் தெளியை பாகை நாடற்கு_அரிய நலத்தை நந்தா
தேனை பழ சுவை ஆயினானை சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி
பானல் தடம் கண் மடந்தை நல்லீர் பாடி பொன்_சுண்ணம் இடித்தும் நாமே

#16
ஆவகை நாமும் வந்து அன்பர்-தம்மோடு ஆட்செய்யும் வண்ணங்கள் பாடி விண் மேல்
தேவர் கனாவிலும் கண்டு அறியா செம் மலர் பாதங்கள் காட்டும் செல்வ
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே

#17
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல்
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும்
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனகம் ஆக நஞ்சு உண்டல் பாடி பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே

#18
அயன் தலை கொண்டு செண்டு_ஆடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி
கயம்-தனை கொன்று உரி போர்த்தல் பாடி காலனை காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
நயம்-தனை பாடிநின்று ஆடிஆடி நாதற்கு சுண்ணம் இடித்தும் நாமே

#19
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி
சிட்டர்கள் வாழும் தென் தில்லை பாடி சிற்றம்பலத்து எங்கள் செல்வம் பாடி
கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல்
இட்டுநின்று ஆடும் அரவம் பாடி ஈசற்கு சுண்ணம் இடித்தும் நாமே

#20
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு
பாதியும் ஆய் முற்றும் ஆயினார்க்கு பந்தமும் ஆய் வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே
மேல்
@10 திருக்கோத்தும்பி

#1
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த
நா ஏறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா
சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#2
நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன்
தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ

#3
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே
நினை-தொறும் காண்-தொறும் பேசும்-தொறும் எப்போதும்
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்த தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#4
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின்
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ண பணித்து என்னை வா என்ற வான் கருணை
சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#5
அ தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன்
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற
மெய் தேவர் தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#6
வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகார கலக்கம் தெளிவித்த
வித்தக தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#7
சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனை
கெட்டேன் மறப்பேனோ கேடுபடா திருவடியை
ஒட்டாத பாவி தொழும்பரை நாம் உரு அறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#8
ஒன்று ஆய் முளைத்து எழுந்து எத்தனையோ கவடு விட்டு
நன்று ஆக வைத்து என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த
என் தாதை தாதைக்கும் எம் அனைக்கும் தம் பெருமான்
குன்றாத செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#9
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு
மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த
கருணை கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#10
நோயுற்று மூத்து நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து
நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம்
தாய் உற்று வந்து என்னை ஆண்டுகொண்ட தன் கருணை
தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#11
வல் நெஞ்ச கள்வன் மன வலியன் என்னாதே
கல் நெஞ்சு உருக்கி கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன்
பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#12
நாயேனை தன் அடிகள் பாடுவித்த நாயகனை
பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#13
நான் தனக்கு அன்பு இன்மை நானும் தானும் அறிவோம்
தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்
ஆன கருணையும் அங்கு உற்றே-தான் அவனே
கோன் என்னை கூட குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

#14
கரு ஆய் உலகினுக்கு அப்புறம் ஆய் இ புறத்தே
மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி
அரு ஆய் மறை பயில் அந்தணன் ஆய் ஆண்டுகொண்ட
திரு ஆன தேவற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#15
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எ இடத்தோம்
தானும் தன் தையலும் தாழ் சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#16
உள்ளப்படாத திருவுருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான் கருணை
வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்
கொள் அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#17
பொய் ஆய செல்வத்தே புக்கு அழுந்தி நாள்-தோறும்
மெய்யா கருதி கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயா என் ஆருயிரே அம்பலவா என்று அவன்-தன்
செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#18
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடை தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

#19
கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே
வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே
உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம்
தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

#20
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த
தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
மேல்
@11 திருத்தெள்ளேணம்

#1
திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#2
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#3
அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம் வந்து நம்மை
உருக்கும் பணி கொள்ளும் என்பது கேட்டு உலகம் எல்லாம்
சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#4
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே
பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி
நவம் ஆய செம் சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து
சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#5
அருமந்த தேவர் அயன் திருமாற்கு அரிய சிவம்
உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த
திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#6
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல்
வரை ஆடு மங்கை-தன் பங்கொடும் வந்து ஆண்ட திறம்
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர்
திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#7
ஆஆ அரி அயன் இந்திரன் வானோர்க்கு அரிய சிவன்
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான்
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே
தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#8
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும்
அறம் பாவம் ஒன்று இரண்டு அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்
மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய அ
திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#9
கல் நார் உரித்து என்ன என்னையும் தன் கருணையினால்
பொன் ஆர் கழல் பணித்து ஆண்டபிரான் புகழ் பாடி
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர்
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ

#10
கனவேயும் தேவர்கள் காண்பு_அரிய கனை கழலோன்
புன வேய் அன வளை தோளியோடும் புகுந்தருளி
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம்
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ

#11
கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல்
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#12
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட
அத்திக்கு அருளி அடியேனை ஆண்டுகொண்டு
பத்தி கடலுள் பதித்த பரஞ்சோதி
தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#13
பார் பாடும் பாதாளர் பாடும் விண்ணோர்-தம் பாடும்
ஆர் பாடும் சாரா வகை அருளி ஆண்டுகொண்ட
நேர் பாடல் பாடி நினைப்பு_அர்¢ய தனி பெரியோன்
சீர் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#14
மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே
நூலே நுழைவு_அரியான் நுண்ணியன் ஆய் வந்து அடியேன்-
பாலே புகுந்து பரிந்து உருக்கும் பாவகத்தால்
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ

#15
உருகி பெருகி உளம் குளிர முகந்துகொண்டு
பருகற்கு இனிய பரம் கருணை தடம் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#16
புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும்
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த
அத்தன் அணி தில்லை அம்பலவன் அருள் கழல்கள்
சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ

#17
உவலை சமயங்கள் ஒவ்வாத சாத்திரம் ஆம்
சவலை கடல் உளனாய் கிடந்து தடுமாறும்
கவலை கெடுத்து கழல்_இணைகள் தந்தருளும்
செயலை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

#18
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும்
தான் கெட்டல் இன்றி சலிப்பு அறியா தன்மையனுக்கு
ஊன் கெட்டு உயிர் கெட்டு உணவு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ

#19
விண்ணோர் முழு_முதல் பாதாளத்தார் வித்து
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம்
கண்ணார வந்துநின்றான் கருணை கழல் பாடி
தென்னாதென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ

#20
குலம் பாடி கொக்கு_இறகும் பாடி கோல் வளையாள்
நலம் பாடி நஞ்சு உண்டவா பாடி நாள்-தோறும்
அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பு ஆடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
மேல்
@12 திருச்சாழல்

#1
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காண் ஏடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை
ஈசன்-அவன் எ உயிர்க்கும் இயல்பு ஆனான் சாழலோ

#2
என் அப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா
தன்னையே கோவணமா சாத்தினன் காண் சாழலோ

#3
கோயில் சுடுகாடு கொல் புலி தோல் நல் ஆடை
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் காண் ஏடீ
தாயும்_இலி தந்தை_இலி தான் தனியன் ஆயிடினும்
காயில் உலகு அனைத்தும் கல்_பொடி காண் சாழலோ

#4
அயனை அனங்கனை அந்தகனை சந்திரனை
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ
நயனங்கள் மூன்று உடைய நாயகனே தண்டித்தால்
சயம் அன்றோ வானவர்க்கு தாழ் குழலாய் சாழலோ

#5
தக்கனையும் எச்சையும் தலை அறுத்து தேவர் கணம்
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தது-தான் என் ஏடீ
தொக்கென வந்தவர்-தம்மை தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு
எச்சனுக்கு மிகை தலை மற்று அருளினன் காண் சாழலோ

#6
அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய்
நில முதல் கீழ் அண்டம் உற நின்றது-தான் என் ஏடீ
நில முதல் கீழ் அண்டம் உற நின்றிலனேல் இருவரும் தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ

#7
மலை_மகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி
சலமுகத்தால் அவன் சடையில் பாயும்-அது என் ஏடீ
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ

#8
கோலாலம் ஆகி குரை கடல்-வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதிர்-தான் என் ஏடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட
மேல் ஆய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ

#9
தென் பால் உகந்து ஆடும் தில்லை சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ
பெண் பால் உகந்திலனேல் பேதாய் இரு நிலத்தோர்
விண்-பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

#10
தான் அந்தம்_இல்லான் தனை அடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்
வான் உந்து தேவர்கட்கு ஓர் வான் பொருள் காண் சாழலோ

#11
நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

#12
கான் ஆர் புலி தோல் உடை தலை ஊண் காடு பதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆர் ஏடி
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வான் நாடர் கோவும் வழி அடியார் சாழலோ

#13
மலை அரையன் பொன் பாவை வாள் நுதலாள் பெண் திருவை
உலகு அறிய தீ வேட்டான் என்னும்-அது என் ஏடீ
உலகு அறிய தீ வேளாது ஒழிந்தனனேல் உலகு அனைத்தும்
கலை நவின்ற பொருள்கள் எல்லாம் கலங்கிடும் காண் சாழலோ

#14
தேன் புக்க தண் பனை சூழ் தில்லை சிற்றம்பலவன்
தான் புக்கு நட்டம் பயிலும்-அது என் ஏடீ
தான் புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணி எல்லாம்
ஊன் புக்க வேல் காளிக்கு ஊட்டு ஆம் காண் சாழலோ

#15
கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறிய ஆறு எனக்கு அறிய இயம்பு ஏடீ
தட மதில்கள்-அவை மூன்றும் தழல் எரித்த அ நாளில்
இடபம்-அது ஆய் தாங்கினான் திருமால் காண் சாழலோ

#16
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ

#17
அம்பலத்தே கூத்து ஆடி அமுது செய பலி திரியும்
நம்பனையும் தேவன் என்று நண்ணும்-அது என் ஏடீ
நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாம் அறியோ
எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ

#18
சலம் உடைய சலந்தரன்-தன் உடல் தடிந்த நல் ஆழி
நலம் உடைய நாரணற்கு அன்று அருளிய ஆறு என் ஏடீ
நலம் உடைய நாரணன் தன் நயனம் இடந்து அரன் அடி கீழ்
அலர் ஆக இட ஆழி அருளினன் காண் சாழலோ

#19
அம்பரம் ஆம் புள்ளி தோல் ஆலாலம் ஆர் அமுதம்
எம்பெருமான் உண்ட சதிர் எனக்கு அறிய இயம்பு ஏடீ
எம்பெருமான் ஏது உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும்
தம் பெருமை தான் அறியா தன்மையன் காண் சாழலோ

#20
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து அவருக்கு அருளும்-அது எனக்கு அறிய இயம்பு ஏடீ
அரும் தவருக்கு அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ
மேல்
@13 திருப்பூவல்லி

#1
இணை ஆர் திருவடி என் தலை மேல் வைத்தலுமே
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ

#2
எந்தை எம் தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான்
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ

#3
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ

#4
பண் பட்ட தில்லை பதிக்கு அரசை பரவாதே
எண் பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்து அனல்
விண் பட்ட பூத படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ

#5
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி நாடி வந்து உட்புகுந்தான் உலகர் முன்னே
நான் ஆடிஆடி நின்று ஓலம் இட நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ

#6
எரி மூன்று தேவர்க்கு இரங்கி அருள்செய்தருளி
சிரம் மூன்று அற தன் திரு புருவம் நெரித்தருளி
உரு மூன்றும் ஆகி உணர்வு_அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ

#7
வணங்க தலை வைத்து வார் கழல் வாய் வாழ்த்த வைத்து
இணங்க தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#8
நெறி செய்தருளி தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி
முறி செய்து நம்மை முழுது உழற்றும் பழ வினையை
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ

#9
பல் நாள் பரவி பணி செய்ய பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய்
கல் நார் உரித்து என்னை ஆண்டுகொண்டான் கழல்_இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ

#10
பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான்
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ

#11
பாலும் அமுதமும் தேனுடன் ஆம் பராபரம் ஆய்
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம் அ நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ

#12
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன்-அவன் ஆய் நின்று கூடல்_இலா குண குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ

#13
அன்று ஆல நீழல் கீழ் அரு மறைகள் தான் அருளி
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும்
நின்று ஆர ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றை
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#14
படம் ஆக என் உள்ளே தன் இணை போது-அவை அளித்து இங்கு
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான்
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ

#15
அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
செம் கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும்
பங்கம்_இல் தக்கனும் எச்சனும் தம் பரிசு அழிய
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#16
திண் போர் விடையான் சிவபுரத்தார் போர் ஏறு
மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி
தண்டாலே பாண்டியன்-தன்னை பணிகொண்ட
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#17
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும்
பொன் ஆர் திருவடி தாம் அறியார் போற்றுவதே
என் ஆகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

#18
சீர் ஆர் திருவடி திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை-அது ஆய் அடியேன் அகம் மகிழ
தேர் ஆர்ந்த வீதி பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ

#19
அத்தி உரித்து அது போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய்
முத்தி முழு_முதல் உத்தரகோசமங்கை வள்ளல்
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ

#20
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி
தே ஆர்ந்த கோலம் திகழ பெருந்துறையான்
கோ ஆகி வந்து எம்மை குற்றேவல் கொண்டருளும்
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ
மேல்
@14 திருஉந்தியார்

#1
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற

#2
ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற

#3
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

#4
உய்ய வல்லார் ஒரு மூவரை காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இள முலை பொங்க நின்று உந்தீ பற

#5
சாடிய வேள்வி சரிந்திட தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திரநாதனுக்கு உந்தீ பற

#6
ஆஆ திருமால் அவி பாகம் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று உந்தீ பற
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற

#7
வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய
கையை தறித்தான் என்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற

#8
பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை
பார்ப்பது என்னே ஏடி உந்தீ பற
பணை முலை_பாகனுக்கு உந்தீ பற

#9
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி
மரம்-தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற

#10
வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சியவா பாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற

#11
ஆட்டின் தலையை விதிக்கு தலை ஆக
கூட்டியவா பாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற

#12
உண்ண புகுந்த பகன் ஒளித்து ஓடாமே
கண்ணை பறித்தவாறு உந்தீ பற
கரு கெட நாம் எல்லாம் உந்தீ பற

#13
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட
சோமன் முகன் நெரித்து உந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற

#14
நான்மறையோனும் மகத்து இயமான் பட
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற

#15
சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி நெரித்த ஆறு உந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற

#16
தக்கனார் அன்றே தலை இழந்தார் தக்கன்
மக்களை சூழ நின்று உந்தீ பற
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற

#17
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட
கோல சடையற்கே உந்தீ பற
குமரன்-தன் தாதைக்கே உந்தீ பற

#18
நல்ல மலரின் மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற

#19
தேரை நிறுத்தி மலை எடுத்தான் சிரம்
ஈர்_ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற
இருபதும் இற்றது என்று உந்தீ பற

#20
ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீ பற
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீ பற
மேல்
@15 திருத் தோள்நோக்கம்

#1
பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி
பேய்த்தேர் முகக்க உறும் பேதை குணம் ஆகாமே
தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தை திரு நடம் செய்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணம் தோள்_நோக்கம்

#2
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய
குன்றாத சீர் தில்லை அம்பலவன் குணம் பரவி
துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ

#3
பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க
செருப்பு உற்ற சீர் அடி வாய் கலசம் ஊன் அமுதம்
விருப்புற்று வேடனார் சேடு எறிய மெய் குளிர்ந்து அங்கு
அருள் பெற்று நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#4
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக கருணையினால்
நிற்பானை போல என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி
நல்-பால் படுத்து என்னை நாடு அறிய தான் இங்ஙன்
சொல்-பாலது ஆனவா தோள்_நோக்கம் ஆடாமோ

#5
நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு நிலா பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய புணர்ந்துநின்றான்
உலகு ஏழ் என திசை பத்து என தான் ஒருவனுமே
பல ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#6
புத்தன் முதல் ஆய புல் அறிவின் சில் சமயம்
தம்தம் மதங்களில் தட்டுளுப்பு பட்டு நிற்க
சித்தம் சிவம் ஆக்கி செய்தனவே தவம் ஆக்கும்
அத்தன் கருணையினால் தோள்_நோக்கம் ஆடாமோ

#7
தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை
சாதியும் வேதியன் தாதை-தனை தாள் இரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழ
பாதகமே சோறு பற்றினவா தோள்_நோக்கம்

#8
மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர்
வானம் தொழும் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
ஆனந்த கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வணமே
ஆனந்தம் ஆகி நின்று ஆடாமே தோள்_நோக்கம்

#9
எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம்

#10
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய
தம் கண் இடந்து அரன் சேவடி மேல் சாத்தலுமே
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு
எங்கும் பரவி நாம் தோள்_நோக்கம் ஆடாமோ

#11
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன்
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோள்_நோக்கம் ஆடாமோ

#12
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்
பரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உரு ஆய் அங்கே அளவு இறந்து
பரம் ஆகி நின்றவா தோள்_நோக்கம் ஆடாமோ

#13
ஏழை தொழும்பனேன் எத்தனையோ காலம் எல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனை பணியாதே
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ

#14
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும்
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே
இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ

#15
பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று
உணக்கு பசை அறுத்தான் உயிர் ஒன்றி நின்ற
குணக்குன்று வந்து என்னை ஆண்டலுமே என்னுடைய
கணக்கு அற்றவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ
மேல்
@16 திருப்பொன்னூசல்

#1
சீர் ஆர் பவளம் கால் முத்தம் கயிறு ஆக
ஏர் ஆரும் பொன் பலகை ஏறி இனிது அமர்ந்து
நாராயணன் அறியா நாள்_மலர் தாள் நாய்_அடியேற்கு
ஊர் ஆக தந்தருளும் உத்தரகோசமங்கை
ஆரா_அமுதின் அருள் தாள்_இணை பாடி
போர் ஆர் வேல் கண் மடவீர் பொன்_ஊசல் ஆடாமோ

#2
மூன்று அங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலர்_அடிகள்
தேன் தங்கி தித்தித்து அமுது ஊறி தான் தெளிந்து அங்கு
ஊன் தங்கிநின்று உருக்கும் உத்தரகோசமங்கை
கோன் தங்கு இடைமருது பாடி குல மஞ்ஞை
போன்று அங்கு அன நடையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#3
முன் ஈறும் ஆதியும் இல்லான் முனிவர் குழாம்
பல் நூறு கோடி இமையோர்கள் தாம் நிற்ப
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை
மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#4
நஞ்சு அமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை
அம் சொலாள்-தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி கருணை செய்து
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#5
ஆணோ அலியோ அரிவையோ என்று இருவர்
காணா கடவுள் கருணையினால் தேவர் குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சு-தனை
ஊண் ஆக உண்டருளும் உத்தரகோசமங்கை
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#6
மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கை
தாது ஆடு கொன்றை சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான்
காது ஆடு குண்டலங்கள் பாடி கசிந்து அன்பால்
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#7
உன்னற்கு அரிய திரு உத்தரகோசமங்கை
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே
பன்னி பணிந்து இறைஞ்ச பாவங்கள் பற்று அறுப்பான்
அன்னத்தின் மேல் ஏறி ஆடும் மணி மயில் போல்
என் அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில் பாடி
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ

#8
கோல வரை குடுமி வந்து குவலயத்து
சால அமுது உண்டு தாழ் கடலின் மீது எழுந்து
ஞாலம் மிக பரி மேற்கொண்டு நமை ஆண்டான்
சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி
பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ

#9
தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை
தங்கு உலவு சோதி தனி உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான்
பங்கு உலவு கோதையும் தானும் பணிகொண்ட
கொங்கு உலவு கொன்றை சடையான் குணம் பரவி
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ
மேல்
@17 அன்னைப் பத்து

#1
வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
நாத பறையினர் அன்னே என்னும்
நாத பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இ நாதனார் அன்னே என்னும்

#2
கண் அஞ்சனத்தார் கருணை கடலினர்
உள் நின்று உருக்குவர் அன்னே என்னும்
உள் நின்று உருக்கி உலப்பு_இலா ஆனந்த
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

#3
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்

#4
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு அன்னே என்னும்
வேடம் இருந்த ஆறு கண்டுகண்டு என் உள்ளம்
வாடும் இது என்னே அன்னே என்னும்

#5
நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டி நல் நாடரால் அன்னே என்னும்
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால் அன்னே என்னும்

#6
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்

#7
வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர்
பள்ளி குப்பாயத்தர் அன்னே என்னும்
பள்ளி குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு என்
உள்ளம் கவர்வரால் அன்னே என்னும்

#8
தாளி அறுகினர் சந்தன சாந்தினர்
ஆள் எம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆள் எம்மை ஆளும் அடிகளார்-தம் கையில்
தாளம் இருந்த ஆறு அன்னே என்னும்

#9
தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்
நையும் இது என்னே அன்னே என்னும்

#10
கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே
இன்று எனக்கு ஆன ஆறு அன்னே என்னும்
மேல்
@18 குயிற்பத்து

#1
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
சோதி மணி முடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான் அந்தம்_இலான் வர கூவாய்

#2
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த எ உருவும் தன் உரு ஆய்
ஆர்கலி சூழ் தென் இலங்கை அழகு அமர் வண்டோதரிக்கு
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய்

#3
நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள் உறை கோயில்
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வர கூவாய்

#4
தேன் பழ சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ
வான் பழித்து இ மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு-அது ஆய ஒருத்தன்
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய்

#5
சுந்தரத்து இன்ப குயிலே சூழ் சுடர் ஞாயிறு போல
அந்தரத்தே நின்று இழிந்து இங்கு அடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவும் ஆகிய மூவர் அறியா
சிந்துர சேவடியானை சேவகனை வர கூவாய்

#6
இன்பம் தருவன் குயிலே ஏழ் உலகும் முழுது ஆளி
அன்பன் அமுது அளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்
நல் பொன் மணி சுவடு ஒத்த நல் பரி மேல் வருவானை
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி_நாதனை கூவாய்

#7
உன்னை உகப்பன் குயிலே உன் துணை தோழியும் ஆவன்
பொன்னை அழித்த நல் மேனி புகழின் திகழும் அழகன்
மன்னன் பரி மிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன் சீர் புயங்கள் வர கூவாய்

#8
வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி
மேவி அன்று அண்டம் கடந்து விரி சுடர் ஆய் நின்ற மெய்யன்
தாவி வரும் பரி பாகன் தாழ் சடையோன் வர கூவாய்

#9
கார் உடை பொன் திகழ் மேனி கடி பொழில் வாழும் குயிலே
சீர் உடை செங்கமலத்தின் திகழ் உரு ஆகிய செல்வன்
பாரிடை பாதங்கள் காட்டி பாசம் அறுத்து எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை நீ வர கூவாய்

#10
கொந்து அணவும் பொழில் சோலை கூம் குயிலே இது கேள் நீ
அந்தணன் ஆகிவந்து இங்கே அழகிய சேவடி காட்டி
எம் தமர் ஆம் இவன் என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய்
மேல்
@19 திருத் தசாங்கம்

#1 எ
ஏர் ஆர் இளம் கிளியே எங்கள் பெருந்துறை கோன்
சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல்
எம் பெருமான் தேவர் பிரான் என்று

#2
ஏதம்_இலா இன் சொல் மரகதமே ஏழ் பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் காதலவர்க்கு
அன்பு ஆண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும்
தென் பாண்டி நாடே தெளி

#3
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும்
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி
பத்தர் எல்லாம் பார் மேல் சிவபுரம் போல் கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்

#4
செய்ய வாய் பைம் சிறகின் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் தையலாய்
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து இழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு

#5
கிஞ்சுக வாய் அஞ்சுகமே கேடு_இல் பெருந்துறை கோன்
மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து
இருள் அகல வாள் வீசி இன்பு அமரும் முத்தி
அருளும் மலை என்பது காண் ஆய்ந்து

#6
இ பாடே வந்து இயம்பு கூடு புகல் என் கிளியே
ஒப்பு ஆடா சீர் உடையான் ஊர்வது என்னே எப்போதும்
தேன் புரையும் சிந்தையர் ஆய் தெய்வ பெண் ஏத்து இசைப்ப
வான் புரவி ஊரும் மகிழ்ந்து

#7
கோல்_தேன் மொழி கிள்ளாய் கோது_இல் பெருந்துறை கோன்
மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார்
அழுக்கு அடையா நெஞ்சு உருக மு_மலங்கள் பாயும்
கழுக்கடை காண் கைக்கொள் படை

#8
இன் பால் மொழி கிள்ளாய் எங்கள் பெருந்துறை கோன்
முன் பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால்
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும்
பரு மிக்க நாத பறை

#9
ஆய மொழி கிள்ளாய் அள்ளூறும் அன்பர்-பால்
மேய பெருந்துறையான் மெய் தார் என் தீய வினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளி அறுகு ஆம் உவந்த தார்

#10
சோலை பசும் கிளியே தூ நீர் பெருந்துறை கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் தூண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும்
கோது_இலா ஏறு ஆம் கொடி
மேல்
@20 திருப்பள்ளியெழுச்சி

#1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்று உயர் கொடி உடை யாய் எனை உடையாய் எம் பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#2
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர் திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயன கடி மலர் மலர மற்று அண்ணல் அம் கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே

#3
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவ நல் செறி கழல் தாள்_இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
யாவரும் அறிவு_அரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#4
இன் இசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன் அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#5
பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனை கண்டு அறிவாரை
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#6
பப்பு அற விட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்
மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#7
அது பழ சுவை என அமுது என அறிதற்கு அரிது என எளிது என அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மது வளர் பொழில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எது எமை பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்
பந்து அணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்-தொறும் எழுந்தருளிய பரனே
செம் தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே

#9
விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம்
கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார்
எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

#10
புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய் கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே
மேல்
@21 கோயில் மூத்த திருப்பதிகம்

#1
உடையாள் உன்-தன் நடுவு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளை புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே என் கருத்து முடியும்வண்ணம் முன் நின்றே

#2
முன் நின்று ஆண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்று
பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே
என் என்று அருள் இவர நின்று போந்திடு என்னாவிடில் அடியார்
உன் நின்று இவன் ஆர் என்னாரோ பொன்னம்பல கூத்து உகந்தானே

#3
உகந்தானே அன்பு உடை அடிமைக்கு உருகா உள்ளத்து உணர்வு இலியேன்
சகம்-தான் அறிய முறையிட்டால் தக்க ஆறு அன்று என்னாரோ
மகம்-தான் செய்து வழி வந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்கு உன்
முகம்-தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்து எம் முழு_முதலே

#4
முழு_முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என்-தனக்கும்
வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமி
கெழு முதலே அருள் தந்து இருக்க இரங்கும்-கொல்லோ என்று
அழும்-அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே

#5
அரைசே பொன்னம்பலத்து ஆடும் அமுதே என்று உன் அருள் நோக்கி
இரை தேர் கொக்கு ஒத்து இரவு பகல் ஏசற்று இருந்தே வேசற்றேன்
கரை சேர் அடியார் களி சிறப்ப காட்சி கொடுத்து உன் அடியேன்-பால்
பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ

#6
ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம்
பேசா நிற்பர் யான்-தானும் பேணா நிற்பேன் நின் அருளே
தேசா நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க
ஈசா பொன்னம்பலத்து ஆடும் எந்தாய் இனி-தான் இரங்காயே

#7
இரங்கும் நமக்கு அம்பல கூத்தன் என்றுஎன்று ஏமாந்திருப்பேனை
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ
நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று அருளாயே

#8
அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர் இங்கு
பொருளா என்னை புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பல கூத்தா
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ

#9
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டு உன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம்
தரிப்பார் பொன்னம்பலத்து ஆடும் தலைவா என்பார் அவர் முன்னே
தரிப்பு ஆய் நாயேன் இருப்பேனோ நம்பி இனி-தான் நல்காயே

#10
நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி
பல்கால் உன்னை பாவித்து பரவி பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே
மேல்
@22 கோயில் திருப்பதிகம்

#1
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழு பரஞ்சோதி உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே

#2
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய் கசிந்து உருக
என் பரம் அல்லா இன் அருள் தந்தாய் யான் இதற்கு இலன் ஒர் கைம்மாறு
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே
தென் பெருந்துறையாய் சிவபெருமானே சீர் உடை சிவபுரத்து அரைசே

#3
அரைசனே அன்பர்க்கு அடியனேன் உடைய அப்பனே ஆவியோடு ஆக்கை
புரைபுரை கனிய புகுந்துநின்று உருக்கி பொய் இருள் கடிந்த மெய் சுடரே
திரை பொரா மன்னும் அமுத தெண் கடலே திருப்பெருந்துறை உறை சிவனே
உரை உணர்வு இறந்துநின்று உணர்வது ஓர் உணர்வே யான் உன்னை உரைக்கும் ஆறு உணர்த்தே

#4
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே
குணங்கள்-தாம் இல்லா இன்பமே உன்னை குறுகினேற்கு இனி என்ன குறையே

#5
குறைவு_இலா நிறைவே கோது_இலா அமுதே ஈறு_இலா கொழும் சுடர் குன்றே
மறையும் ஆய் மறையின் பொருளும் ஆய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை-வாய் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே

#6
இரந்துஇரந்து உருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே இமையோர்
சிரம்-தனில் பொலியும் கமல சேவடியாய் திருப்பெருந்துறை உறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ கால் ஆய் அவை அல்லை ஆய் ஆங்கே
கரந்தது ஓர் உருவே களித்தனன் உன்னை கண்ணுற கண்டுகொண்டு இன்றே

#7
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை
சென்றுசென்று அணுவாய் தேய்ந்துதேய்ந்து ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை யார் உன்னை அறியகிற்பாரே

#8
பார் பதம் அண்டம் அனைத்தும் ஆய் முளைத்து படர்ந்தது ஓர் படர் ஒளி பரப்பே
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே
ஆர் உறவு எனக்கு இங்கு யார் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதி

#9
சோதியாய் தோன்றும் உருவமே அரு ஆம் ஒருவனே சொல்லுதற்கு அரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே
தீது_இலா நன்மை திருவருள்_குன்றே திருப்பெருந்துறை உறை சிவனே
யாது நீ போவது ஒர் வகை எனக்கு அருளாய் வந்து நின் இணை_அடி தந்தே

#10
தந்தது உன்-தன்னை கொண்டது என்-தன்னை சங்கரா ஆர்-கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்-பால்
சிந்தையே கோயில்கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
மேல்
@23 செத்திலாப் பத்து

#1
பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன்
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா
செய்ய மேனியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#2
புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும்
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து
பற்றினாய் பதையேன் மனம் மிக உருகேன் பரிகிலேன் பரியா உடல்-தன்னை
செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#3
புலையனேனையும் பொருள் என நினைந்து உன் அருள்புரிந்தனை புரிதலும் களித்து
தலையினால் நடந்தேன் விடை பாகா சங்கரா எண்_இல் வானவர்க்கு எல்லாம்
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த
சிலையனே எனை செத்திட பணியாய் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#4
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனை பலர் நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை மர கண் என் செவி இரும்பினும் வலிது
தென் பராய்த்துறையாய் சிவலோகா திருப்பெருந்துறை மேவிய சிவனே

#5
ஆட்டு தேவர்-தம் விதி ஒழித்து அன்பால் ஐயனே என்று உன் அருள் வழி இருப்பேன்
நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை
காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய்
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே

#6
அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன்
பொறுக்கிலேன் உடல் போக்கிடம் காணேன் போற்றி போற்றி என் போர் விடை பாகா
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய்
சிறை-கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#7
மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ
சேயன் ஆகிநின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே

#8
போது சேர் அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்று என்னை
கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய்
யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#9
ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று எனை நயந்து இனிது ஆண்டாய்
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

#10
அளித்து வந்து எனக்கு ஆவ என்று அருளி அச்சம் தீர்த்த நின் அருள் பெரும் கடலில்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே
மேல்
@24 அடைக்கலப் பத்து

#1
செழு கமல திரள் அன நின் சேவடி நேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன்
புழு கண் உடை புன் குரம்பை பொல்லா கல்வி ஞானம் இலா
அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே

#2
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வே
ரறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#3
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#4
பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான் யான் இடர் கடல்-வாய்
சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#5
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்து இங்கு
இருள் புரி யாக்கையிலே கிடந்து எய்த்தனன் மை தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான்
அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#6
மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து
தாழியை பாவு தயிர் போல் தளர்ந்தேன் தட மலர் தாள்
வாழி எப்போது வந்து எ நாள் வணங்குவன் வல் வினையேன்
ஆழி அப்பா உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே

#7
மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு
புன் கணன் ஆய் புரள்வேனை புரளாமல் புகுந்து அருளி
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#8
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே
கூவிடுவாய் கும்பிக்கே இடுவாய் நின் குறிப்பு அறியேன்
பா இடை ஆடு குழல் போல் கரந்து பரந்தது உள்ளம்
ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#9
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ்
மறிவு அறியா செல்வம் வந்து பெற்றார் உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
அறிவு அறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

#10
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
மேல்
@25 ஆசைப்பத்து

#1
கருட கொடியோன் காணமாட்டா கழல் சேவடி என்னும்
பொருளை தந்து இங்கு என்னை ஆண்ட பொல்லா மணியே ஓ
இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும்
அருளை பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#2
மொய்-பால் நரம்பு கயிறு ஆக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்ககில்லேன் கூவிக்கொள்ளாய் கோவே ஓ
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே ஓ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#3
சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில்-இது சிதைய
கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம் நோக்கி
ஆஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#4
மிடைந்து எலும்பு ஊத்தை மிக்கு அழுக்கு ஊறல் வீறு_இலி நடை கூடம்
தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே
உடைந்து நைந்து உருகி உள் ஒளி நோக்கி உன் திரு மலர் பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#5
அளி புண் அகத்து புறம் தோல் மூடி அடியேனுடை யாக்கை
புளியம்பழம் ஒத்திருந்தேன் இருந்தும் விடையாய் பொடி ஆடி
எளிவந்து என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே ஓ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#6
எய்த்தேன் நாயேன் இனி இங்கு இருக்ககில்லேன் இ வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர் சேவடியானே
முத்தா உன்-தன் முக ஒளி நோக்கி முறுவல் நகை காண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#7
பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே
பேர் ஆயிரமும் பரவி திரிந்து எம் பெருமான் என ஏத்த
ஆரா_அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#8
கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழும தழுவிக்கொண்டு
எய்யாது என்-தன் தலை மேல் வைத்து எம் பெருமான் பெருமான் என்று
ஐயா என்-தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#9
செடி ஆர் ஆக்கை திறம் அற வீசி சிவபுர நகர் புக்கு
கடி ஆர் சோதி கண்டுகொண்டு என் கண்_இணை களிகூர
படி-தான் இல்லா பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

#10
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன்
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா பவள திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே
மேல்
@26 அதிசயப் பத்து

#1
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே
செப்பு நேர் முலை மடவரலியர்-தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு_இலாதன உவமனில் இறந்தன ஒள் மலர் திரு பாதத்து
அப்பன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#2
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவரொடும் கூடேன்
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#3
முன்னை என்னுடை வல் வினை போயிட முக்கண்-அது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு
பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#4
பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர்
ஒத்து சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம்-அது அறியாமே
செத்துப்போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#5
பரவுவார்-அவர் பாடு சென்று அணைகிலேன் பல் மலர் பறித்து ஏத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை
இரவு நின்று எரி ஆடிய எம் இறை எரி சடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#6
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு_எழுத்தும் என் ஏழைமை-அதனாலே
நண்ணிலேன் கலை_ஞானிகள்-தம்மொடு நல் வினை நயவாதே
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை
அண்ணல் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#7
பொத்தை ஊன் சுவர் புழு பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய் கூரை
இத்தை மெய் என கருதிநின்று இடர் கடல் சுழி-தலை படுவேனை
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#8
நீக்கி முன் எனை தன்னொடு நிலாவகை குரம்பையில் புக பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொல் செய்து நுகம் இன்றி விளாக்கைத்து
தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி
ஆக்கி ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#9
உற்ற ஆக்கையின் உறு பொருள் நறு மலர் எழுதரு நாற்றம் போல்
பற்றல் ஆவது ஓர் நிலை_இலா பரம்பொருள் அ பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே
அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே

#10
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல் வினை சிறு குடில் இது இத்தை
பொருள் என களித்து அரு நரகத்திடை விழ புகுகின்றேனை
தெருளும் மு_மதில் நொடி வரை இடிதர சின பதத்தொடு செம் தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே
மேல்
@27 புணர்ச்சிப்பத்து

#1
சுடர் பொன் குன்றை தோளா முத்தை வாளா தொழும்பு உகந்து
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன்
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை
புடைபட்டு இருப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#2
ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி_தலத்து ஐம்புலன் ஆய
சேற்றில் அழுந்தா சிந்தைசெய்து சிவன் எம்பெருமான் என்று ஏத்தி
ஊற்று மணல் போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டு
போற்றி புகழ்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#3
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆர் அமுதை அள்ளூறு உள்ளத்து அடியார் முன்
வேண்டும்தனையும் வாய்விட்டு அலறி விரை ஆர் மலர் தூவி
பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#4
அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும்
சொல்லி பரவும் நாமத்தானை சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லி கனியை தேனை பாலை நிறை இன் அமுதை அமுதின் சுவையை
புல்லி புணர்வது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#5
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும்
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும்
நிகழ பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆஆ என்ற நீர்மை எல்லாம்
புகழப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#6
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள்செய்ய
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பு ஆய்
புரிந்து நிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#7
நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை
தனை ஒப்பாரை இல்லா தனியை நோக்கி தழைத்து தழுத்த கண்டம்
கனைய கண்ணீர் அருவி பாய கையும் கூப்பி கடி மலரால்
புனையப்பெறுவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#8
நெக்குநெக்கு உள் உருகிஉருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றி
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர்சிலிர்த்து
புக்குநிற்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#9
தாதாய் மூ_ஏழ் உலகுக்கும் தாயே நாயேன்-தனை ஆண்ட
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும்
ஏது ஆம் மணியே என்றுஎன்று ஏத்தி இரவும் பகலும் எழில் ஆர் பாத
போது ஆய்ந்து அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே

#10
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும் கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம்
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனை ஆண்ட
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடி பணிந்து பாத
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே
மேல்
@28 வாழாப்பத்து

#1
பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#2
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும்
செம் பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக்கொண்டருளே

#3
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#4
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்று இலேன் கண்டாய்
தில்லை வாழ் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எல்லை மூ_உலகும் உருவி அன்று இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#5
பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்று இவை நின்-கணே வைத்து
மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#6
பஞ்சின் மெல் அடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

#7
பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
திரு உயர் கோல சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
கருணையே நோக்கி கசிந்து உளம் உருகி கலந்து நான் வாழும் ஆறு அறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#8
பந்து அணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செம் தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
அந்தம்_இல் அமுதே அரும் பெரும் பொருளே ஆர் அமுதே அடியேனை
வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

#9
பாவ_நாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
தேவர்-தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
மூ_உலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே

#10
பழுது_இல் சொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்
செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்
மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே
மேல்
@29 அருட்பத்து

#1
சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே சுரி குழல் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே செல்வ திருப்பெருந்துறையில் நிறை மலர் குருந்தம் மேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#2
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன்
திருத்தம் ஆம் பொய்கை திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருத்தமே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#3
எங்கள் நாயகனே என் உயிர் தலைவா ஏல வார் குழலி-மார் இருவர்
தங்கள் நாயகனே தக்க நல் காமன்-தனது உடல் தழல் எழ விழித்த
செம் கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அம் கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#4
கமல நான்முகனும் கார் முகில் நிறத்து கண்ணனும் நண்ணுதற்கு அரிய
விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அமலனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#5
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு
பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அடிகளே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#6
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே
செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#7
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள் மூன்று எரித்த
கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி
செய்யனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
ஐயனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#8
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டு_அறா மலர் பறித்து இறைஞ்சி
பத்தியாய் நினைந்து பரவுவார்-தமக்கு பரகதி கொடுத்து அருள்செய்யும்
சித்தனே செல்வ திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#9
மருளனேன் மனத்தை மயக்கு_அற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த
பொருளனே புனிதா பொங்கு வாள் அரவம் கங்கை நீர் தங்கு செம் சடையாய்
தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அருளனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

#10
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
இருந்தவாறு எண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடை எம்பிரான் என்றுஎன்று
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று
பொருந்த வா கயிலை புகு நெறி இது காண் போதராய் என்று அருளாயே
மேல்
@30 திருக்கழுக்குன்றப் பதிகம்

#1
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#2
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#3
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன்
இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#4
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும்
நாண்_ஒணாதது ஒர் நாணம் எய்தி நடு கடலுள் அழுந்தி நான்
பேண்_ஒணாத பெருந்துறை பெரும் தோணி பற்றி உகைத்தலும்
காண்_ஒணா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#5
கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறை கொண்டலே
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமே கரி ஆக நான் உனை நச்சி நச்சிட வந்திடும்
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#6
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய்
சாதல்சாதல் பொல்லாமை அற்ற தனி சரண் சரண் ஆன் என
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#7
இயக்கி-மார் அறுபத்துநால்வரை எண் குணம் செய்த ஈசனே
மயக்கம் ஆயது ஒர் மு_மல பழ வல் வினைக்குள் அழுந்தவும்
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை
கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#8
விடையனே விடம் உண்டு வேதம் விளைந்த விண்ணவர் வேந்தனே
இடையிலே உனக்கு அன்புசெய்து பெருந்துறைக்கு அன்று இருந்திலேன்
சடையனே சைவ நாதனே உனை சாரும் தொண்டரை சார்கிலா
கடையனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

#9
நரி எலாம் தெரியாவணம் இந்த நாடு எலாம் அறியும்படி
பரிகள் ஆக படைத்து நீ பரிவு ஆக வந்து மெய்க்காட்டிடும்
புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே
மேல்
@31 கண்டபத்து

#1
இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணம் ஆய்
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேனை
சிந்தை-தனை தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அந்தம்_இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே

#2
வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு
தனை சிறிதும் நினையாதே தளர்வு எய்தி கிடப்பேனை
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை
அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

#3
உரு தெரியா காலத்தே உள் புகுந்து என் உளம் மன்னி
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய்_அடியேன் அணிகொள் தில்லை கண்டேனே

#4
கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் ஆய் வந்து வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்
பல்லோரும் காண என்-தன் பசு_பாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே

#5
சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும்
ஆதம்_இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே

#6
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும்
உறவினொடும் ஒழிய சென்று உலகு உடைய ஒரு முதலை
செறி பொழில் சூழ் தில்லைநகர் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே

#7
பத்திமையும் பரிசும் இலா பசு_பாசம் அறுத்து அருளி
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே
சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே

#8
அளவு_இலா பாவகத்தால் அமுக்குண்டு இங்கு அறிவு இன்றி
விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு
அளவு_இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை
களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே

#9
பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை
ஓங்கி உளத்து ஒளி வளர உலப்பு இலா அன்பு அருளி
வாங்கி வினை மலம் அறுத்து வான் கருணை தந்தானை
நான்கு மறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே

#10
பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி
பேதங்கள் அனைத்தும் ஆய் பேதம்_இலா பெருமையனை
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே
மேல்
@32 பிரார்த்தனைப் பத்து

#1
கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள்
உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்ப சுடர் காண்பான்
அலர்ந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே

#2
அடியார் சிலர் உன் அருள் பெற்றார் ஆர்வம் கூர யான் அவமே
முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியேனுடைய கடு வினையை களைந்து உன் கருணை கடல் பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவாது உருக அருளாயே

#3
அருள் ஆர் அமுத பெரும் கடல்-வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த
இருள் ஆர் ஆக்கை-இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனை கண்டார்
வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே

#4
வேண்டும் வேண்டும் மெய் அடியாருள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே
தூண்டா விளக்கின் சுடர் அனையாய் தொண்டனேற்கும் உண்டாம்-கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது மிக்க அன்பே மேவுதலே

#5
மேவும் உன்-தன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேரும் கயல் கண்ணான் பங்கா உன்-தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரமானந்த பழம் கடல் சேர்ந்து
ஆவி யாக்கை யான் எனது என்று யாதும் இன்றி அறுதலே

#6
அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம்_இன்றி அகம் நெகவும்
புறமே கிடந்து புலை_நாயேன் புலம்புகின்றேன் உடையானே
பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே

#7
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண
இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி_நாயேன்
உடையாய் நீயே அருளிதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன்
சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே

#8
துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து
திணி ஆர் மூங்கில் சிந்தையேன் சிவனே நின்று தேய்கின்றேன்
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய் அருள் அளிய
தணியாது ஒல்லை வந்தருளி தளிர் பொன் பாதம் தாராயே

#9
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ
சீர் ஆர் அருளால் சிந்தனையை திருத்தி ஆண்ட சிவலோகா
பேரானந்தம் பேராமை வைக்கவேண்டும் பெருமானே

#10
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா
நான் ஓர் தோளா சுரை ஒத்தால் நம்பி இனி-தான் வாழ்ந்தாயே
ஊனே புகுந்த உனை உணர்ந்த உருகி பெருகும் உள்ளத்தை
கோனே அருளும் காலம்-தான் கொடியேற்கு என்றோ கூடுவதே

#11
கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய்
வாடிவாடி வழி அற்றே வற்றல் மரம் போல் நிற்பேனோ
ஊடிஊடி உடையாயொடு கலந்து உள் உருகி பெருகி நெக்கு
ஆடிஆடி ஆனந்தம் அதுவே ஆக அருள் கலந்தே
மேல்
@33 குழைத்த பத்து

#1
குழைத்தால் பண்டை கொடு வினை நோய் காவாய் உடையாய் கொடு வினையேன்
உழைத்தால் உறுதி உண்டோ-தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே

#2
அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன்
கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆஆ என்று அருளி
செடி சேர் உடலை சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா
உடையாய் கூவி பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே

#3
ஒன்றும் போதா நாயேனை உய்ய கொண்ட நின் கருணை
இன்றே இன்றி போய்த்தோ-தான் ஏழை பங்கா எம் கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால்
என்-தான் கெட்டது இரங்கிடாய் எண் தோள் முக்கண் எம்மானே

#4
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ
ஊனே புக என்-தனை நூக்கி உழல பண்ணுவித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக்கொள்ளும் நாள் என்றுஎன்று உன்னை கூறுவதே

#5
கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ
தேறும் வகை நீ திகைப்பு நீ தீமை நன்மை முழுதும் நீ
வேறு ஓர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின்
தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ

#6
வேண்ட தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்-தன் விருப்பு அன்றே

#7
அன்றே என்-தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ எண் தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே

#8
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி
ஆய கடவேன் நானோ-தான் என்னதோ இங்கு அதிகாரம்
காயத்து இடுவாய் உன்னுடைய கழல் கீழ் வைப்பாய் கண்_நுதலே

#9
கண் ஆர் நுதலோய் கழல்_இணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும்-இது அல்லால்
மண் மேல் யாக்கை விடும் ஆறும் வந்து உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா எண்ண கடவேனோ அடிமை சால அழகு உடைத்தே

#10
அழகே புரிந்திட்டு அடி_நாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னை பணிகொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்கு புராண நீ தந்தருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னை குழைத்தாயே
மேல்
@34 உயிருண்ணிப்பத்து

#1
பை நா பட அரவு ஏர் அல்குல் உமை பாகம்-அது ஆய் என்
மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா
செந்நாவலர் பசும் புகழ் திருப்பெருந்துறை உறைவாய்
எ நாள் களித்து எ நாள் இறுமாக்கேன் இனி யானே

#2
நான் ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்கு தவிசு இட்டு இங்கு
ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான்
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான்
வானோர்களும் அறியாதது ஓர் வளம் ஈந்தனன் எனக்கே

#3
எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன்
மன_வாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்தன் ஆக்கி
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்
பனவன் எனை செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே

#4
வினைக்கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியன் உலகில்
எனை தான் புகுந்து ஆண்டான் எனது அன்பின் புரை உருக்கி
பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே

#5
பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது பற்றி
நற்று ஆம் கதி அடைவோம் எனின் கெடுவீர் ஓடி வம்-மின்
தெற்று ஆர் சடைமுடியான் மன்னு திருப்பெருந்துறை இறை சீர்
கற்று ஆங்கு அவன் கழல் பேணினரோடும் கூடு-மின் கலந்தே

#6
கடலின் திரை-அது போல் வரு கலக்கம் மலம் அறுத்து என்
உடலும் எனது உயிரும் புகுந்து ஒழியாவண்ணம் நிறைந்தான்
சுடரும் சுடர் மதி சூடிய திருப்பெருந்துறை உறையும்
படரும் சடை மகுடத்து எங்கள் பரன்-தான் செய்த படிறே

#7
வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும்
தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறை தாள்
பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே

#8
கோல்_தேன் எனக்கு என்கோ-குரை கடல்-வாய் அமுது என்கோ
ஆற்றேன் எங்கள் அரனே அரு மருந்தே எனது அரசே
சேற்று ஆர் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்று ஆர்தரு திருமேனி நின்மலனே உனை யானே

#9
எச்சம் அறிவேன் நான் எனக்கு இருக்கின்றதை அறியேன்
அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனது அமுதே
செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை உறைவான்
நிச்சம் என நெஞ்சில் மன்னி யான் ஆகி நின்றானே

#10
வான் பாவிய உலகத்தவர் தவமே செய அவமே
ஊன் பாவிய உடலை சுமந்து அடவி மரம் ஆனேன்
தேன் பாய் மலர் கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனல் ஆமே
மேல்
@35 அச்சப்பத்து

#1
புற்றில் வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்-தம் மெய்யும் அஞ்சேன்
கற்றை வார் சடை எம் அண்ணல் கண்_நுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம்-தன்னை உண்டு என நினைந்து எம் பெம்மாற்கு
அற்றிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#2
வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம்
திரு உரு அன்றி மற்று ஓர் தேவர் எ தேவர் என்ன
அருவராதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#3
வன் புலால் வேலும் அஞ்சேன் வளை கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பு எலாம் உருக நோக்கி அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி இனிது அருள் பருகமாட்டா
அன்பு இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#4
கிளி அனார் கிளவி அஞ்சேன் அவர் கிறி முறுவல் அஞ்சேன்
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு
அளி இலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#5
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால்
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#6
வாள் உலாம் எரியும் அஞ்சேன் வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோள் உலாம் நீற்றன் ஏற்றன் சொல்_பதம் கடந்த அப்பன்
தாள தாமரைகள் ஏத்தி தட மலர் புனைந்து நையும்
ஆள்_அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#7
தகைவு இலா பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகை முகந்து எரி கை வீசி பொலிந்த அம்பலத்துள் ஆடும்
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி
அகம் நெகாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#8
தறி செறி களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா
அறிவிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#9
மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

#10
கோண் இலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீள் நிலா அணியினானை நினைந்து நைந்து உருகி நெக்கு
வாள் நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்தமாட்டா
ஆண் அலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
மேல்
@36 திருப்பாண்டிப் பதிகம்

#1
பரு வரை மங்கை-தன் பங்கரை பாண்டியற்கு ஆர் அமுது ஆம்
ஒருவரை ஒன்றும் இலாதவரை கழல்-போது இறைஞ்சி
தெரிவர நின்று உருக்கி பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவு அறியாது என்-தன் உள்ளம்-அதே

#2
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம்
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர்
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே

#3
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே

#4
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு
இறைவன் கிளர்கின்ற காலம் இ காலம் எ காலத்துள்ளும்
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே

#5
காலம் உண்டாகவே காதல் செய்து உய்-மின் கருது_அரிய
ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்_அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு
மூல_பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்து-மினே

#6
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க
தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்
வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்பு-மின் தாள்
பாண்டியனார் அருள் செய்கின்ற முத்தி பரிசு இதுவே

#7
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும்
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும் பெரும் சீர் உடை தன் அருளே அருளும்
சேய நெடும் கொடை தென்னவன் சேவடி சேர்-மின்களே

#8
அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி
கழிவு_இல் கருணையை காட்டி கடிய வினை அகற்றி
பழ மலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டி பெரும் பதமே
முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்து-மினே

#9
விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க
பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார்
புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார்
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

#10
கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால்
வீற்றிருந்தான் பெரும் தேவியும் தானும் ஒர் மீனவன்-பால்
ஏற்று வந்து ஆர் உயிர் உண்ட திறல் ஒற்றை சேவகனே
தேற்றம் இலாதவர் சேவடி சிக்கென சேர்-மின்களே
மேல்
@37 பிடித்த பத்து

#1
உம்பர்கட்கு அரசே ஒழிவு_அற நிறைந்த யோகமே ஊத்தையேன்-தனக்கு
வம்பு என பழுத்து என் குடி முழுது ஆண்டு வாழ்வு_அற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#2
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே வினையனேனுடைய மெய்ப்பொருளே
முடை விடாது அடியேன் மூத்து அற மண் ஆய் முழு புழு குரம்பையில் கிடந்து
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே
இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#3
அம்மையே அப்பா ஒப்பு_இலா மணியே அன்பினில் விளைந்த ஆர் அமுதே
பொய்ம்மையே பெருக்கி பொழுதினை சுருக்கும் புழு தலை புலையனேன்-தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#4
அருள் உடை சுடரே அளிந்தது ஓர் கனியே பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே
பொருள் உடை கலையே புகழ்ச்சியை கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே
இருளிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#5
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய் பதம் அறியா வீறு_இலியேற்கு விழுமியது அளித்தது ஓர் அன்பே
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#6
அறவையேன் மனமே கோயிலா கொண்டு ஆண்டு அளவு_இலா ஆனந்தம் அருளி
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#7
பாச வேர் அறுக்கும் பழம் பொருள் தன்னை பற்றும் ஆறு அடியனேற்கு அருளி
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே
தேசு உடை விளக்கே செழும் சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#8
அத்தனே அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே யாதும் ஈறு_இல்லா
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#9
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு_இலா ஆனந்தம் ஆய
தேனினை சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

#10
புன் புலால் யாக்கை புரைபுரை கனிய பொன் நெடும் கோயிலா புகுந்து என்
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே
மேல்
@38 திருஏசறவு

#1
இரும்பு தரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு உருக்கி
கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள்
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேரருளே

#2
பண் ஆர்ந்த மொழி மங்கை_பங்கா நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன
கண்ணார உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே

#3
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம்பரனே

#4
பச்சை தாள் அரவு ஆட்டீ படர் சடையாய் பாத மலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்து ஆர் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே உன் திறம் நினைந்தே

#5
கற்று அறியேன் கலை_ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும்
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து
உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்கு
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் அருளே

#6
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால்
உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே

#7
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா
தென்பாலை திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்
அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது
என்-பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே

#8
மூத்தானே மூவாத முதலானே முடிவு_இல்லா
ஓத்தானே பொருளானே உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால்
பேர்த்தே நீ ஆண்ட ஆறு அன்றே எம்பெருமானே

#9
மருவு இனிய மலர் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருக
தெருவு-தொறும் மிக அலறி சிவபெருமான் என்று ஏத்தி
பருகிய நின் பரம் கருணை தடம் கடலில் படிவு ஆம் ஆறு
அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே

#10
நானேயோ தவம் செய்தேன் சிவாயநம என பெற்றேன்
தேன் ஆய் இன் அமுதமும் ஆய் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே
மேல்
@39 திருப்புலம்பல்

#1
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே

#2
சடையானே தழல் ஆடீ தயங்கு மூ_இலை சூல
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே

#3
உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே
மேல்
@40 குலாப் பத்து

#1
ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து
கூடும் உயிரும் குமண்டையிட குனித்து அடியேன்
ஆடும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#2
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்
முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த
அடியேன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#3
என்பு உள் உருக்கி இரு வினையை ஈடு அழித்து
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து
முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள் புகுத்த
அன்பின் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#4
குறியும் நெறியும் குணமும் இலா குழாங்கள்-தமை
பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை
செறியும் கருத்தில் உருத்து அமுது ஆம் சிவபதத்தை
அறியும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#5
பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம்
சேரும் வகையால் சிவன் கருணை தேன் பருகி
ஆரும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#6
கொம்பில் அரும்பு ஆய் குவி மலர் ஆய் காய் ஆகி
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே
நம்பும் என் சிந்தை நணுகும்வண்ணம் நான் அணுகும்
அம் பொன் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#7
மதிக்கும் திறல் உடைய வல் அரக்கன் தோள் நெரிய
மிதிக்கும் திருவடி என் தலை மேல் வீற்றிருப்ப
கதிக்கும் பசு_பாசம் ஒன்றும் இலோம் என களித்து இங்கு
அதிர்க்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#8
இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே
நடக்கும் திருவடி என் தலை மேல் நட்டமையால்
கடக்கும் திறல் ஐவர் கண்டகர்-தம் வல் அரட்டை
அடக்கும் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#9
பாழ் செய் விளாவி பயன்_இலியாய் கிடப்பேற்கு
கீழ் செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டு
தாள் செய்ய தாமரை சைவனுக்கு என் புன் தலையால்
ஆட்செய் குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே

#10
கொம்மை வரி முலை கொம்பு அனையாள் கூறனுக்கு
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும் பயன் இத்தனையும் ஈங்கு ஒழிக்கும்
அம்மை குலா தில்லை ஆண்டானை கொண்டன்றே
மேல்
@41 அற்புதப்பத்து

#1
மையல் ஆய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு
தையலார் எனும் சுழி-தலை பட்டு நான் தலை தடுமாறாமே
பொய் எலாம் விட திருவருள் தந்து தன் பொன் அடி_இணை காட்டி
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே

#2
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே
சாந்தம் ஆர் முலை தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே

#3
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை
அடித்துஅடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே

#4
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனை
திருந்து சேவடி சிலம்பு-அவை சிலம்பிட திருவொடும் அகலாதே
அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே

#5
மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே

#6
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும்
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை
குணங்களும் குறிகளும் இலா குண கடல் கோமளத்தொடும் கூடி
அணைந்து வந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#7
இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது நான் தட முலையார்-தங்கள்
மைப்பு உலாம் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலர் அடி_இணை காட்டி
அப்பன் என்னை வந்து ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#8
ஊசல் ஆட்டும் இ உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து என்னை
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு_அரியவன் உணர்வு தந்து ஒளி ஆக்கி
பாசம் ஆனவை பற்று அறுத்து உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து அடியார் அடி கூட்டிய அற்புதம் அறியேனே

#9
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து அங்கு இணங்கியே திரிவேனை
விச்சகத்து அரி அயனும் எட்டாத தன் விரை மலர் கழல் காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே

#10
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும்
கிறியும் கீழ்மையும் கெண்டை அம் கண்களும் உன்னியே கிடப்பேனை
இறைவன் எம்பிரான் எல்லை_இல்லாத தன் இணை மலர் கழல் காட்டி
அறிவு தந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே
மேல்
@42 சென்னிப்பத்து

#1
தேவ_தேவன் மெய் சேவகன் தென் பெருந்துறை நாயகன்
மூவராலும் அறி_ஒணா முதல் ஆய ஆனந்த_மூர்த்தியான்
யாவராயினும் அன்பர் அன்றி அறி_ஒணா மலர் சோதியான்
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே

#2
அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன்
மட்டு வார் குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன்-தன்
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#3
நங்கைமீர் எனை நோக்கு-மின் நங்கள் நாதன் நம் பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன்
மங்கை-மார் கையில் வளையும் கொண்டு எம் உயிரும் கொண்டு எம் பணிகொள்வான்
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே

#4
பத்தர் சூழ பராபரன் பாரில் வந்து பார்ப்பான் என
சித்தர் சூழ சிவபிரான் தில்லை மூதூர் நடம்செய்வான்
எத்தன் ஆகி வந்து இல் புகுந்து எமை ஆளுங்கொண்டு எம் பணிகொள்வான்
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#5
மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான்
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
காயத்துள் அமுது ஊறஊற நீ கண்டு கொள் என்று காட்டிய
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#6
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீ வினை கெடுத்து உய்யல் ஆம்
பத்தி தந்து தன் பொன் கழல்-கணே பல் மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்து இந்த மூ_உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#7
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான்
அறவை என்று அடியார்கள்-தங்கள் அருள்_குழாம் புகவிட்டு நல்
உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#8
புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய்-தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி எம் ஈசன் எம்பிரான் என்னுடை அப்பன் என்றுஎன்று
தொழுத கையினர் ஆகி தூ மலர் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு
வழு_இலா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே

#9
வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும்
உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்
அன்பர் ஆனவர்க்கு அருளி மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே

#10
முத்தனை முதல் சோதியை முக்கண்_அப்பனை முதல் வித்தனை
சித்தனை சிவலோகனை திருநாமம் பாடி திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்-மின் நீர் உங்கள் பாசம் தீர பணி-மினோ
சித்தம் ஆர் தரும் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே
மேல்
@43 திருவார்த்தை

#1
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி
கோது_இல் பரம் கருணை அடியார் குலாவும் நீதி குணம் ஆக நல்கும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே

#2
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன்
ஞாலம்-அதனிடை வந்திழிந்து நல் நெறி காட்டி நலம் திகழும்
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு
சீலம் மிக கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே

#3
அணி முடி ஆதி அமரர் கோமான் ஆனந்த கூத்தன் அறு சமயம்
பணி வகை செய்து படவு-அது ஏறி பாரொடு விண்ணும் பரவி ஏத்த
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து
மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே

#4
வேடு உரு ஆகி மகேந்திரத்து மிகு குறை வானவர் வந்து தன்னை
தேட இருந்த சிவபெருமான் சிந்தனைசெய்து அடியோங்கள் உய்ய
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி ஐயன் பெருந்துறை ஆதி அ நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#5
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார்
பந்தனை விண்டு அற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அ நாள்
உந்து திரை கடலை கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை-அதனில்
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே

#6
வேவ திரிபுரம் செற்ற வில்லி வேடுவன் ஆய் கடி நாய்கள் சூழ
ஏவல்_செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான்-தான் இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழல் ஆய் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#7
நாதம் உடையது ஒர் நல் கமல போதினில் நண்ணிய நல் நுதலார்
ஓதி பணிந்து அலர் தூவி ஏத்த ஒளி வளர் சோதி எம் ஈசன் மன்னும்
போது அலர் சோலை பெருந்துறை எம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றி
பேதம் கெடுத்து அருள்செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே

#8
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன்
ஏது_இல் பெரும் புகழ் எங்கள் ஈசன் இரும் கடல் வாணற்கு தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே

#9
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன் தென்னன் பெருந்துறை ஆளி அன்று
காதல் பெருக கருணை காட்டி தன் கழல் காட்டி கசிந்து உருக
கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே

#10
அம் கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே
மேல்
@44 எண்ணப்பதிகம்

#1
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செங்கமல மலர் போல்
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே

#2
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும்
தரியேன் நாயேன் இன்னது என்று அறியேன் சங்கரா கருணையினால்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்று உன் பெய்_கழல் அடி காட்டி
பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே

#3
என்பே உருக நின் அருள் அளித்து உன் இணை மலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு_முதலே
இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே
நன்பே அருளாய் என் உயிர் நாதா நின் அருள் நாணாமே

#4
பத்து_இலனேனும் பணிந்திலனேனும் உன் உயர்ந்த பைம் கழல் காண
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே
முத்து_அனையானே மணி_அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே

#5
காணும்-அது ஒழிந்தேன் நின் திரு பாதம் கண்டு கண் களிகூர
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே
தாணுவே அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால்
காணும்-அது ஒழிந்தேன் நீ இனி வரினும் காணவும் நாணுவனே

#6
பால் திருநீற்று எம் பரமனை பரம் கருணையோடு எதிர்ந்து
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன்
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்தி புகழ்ந்து அழைத்து அலறி என்னுள்ளே
ஆற்றுவன் ஆக உடையவனே எனை ஆவ என்று அருளாயே
மேல்
@45 யாத்திரைப் பத்து

#1
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால்
ஆஆ என்னப்பட்டு அன்பு ஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படு-மின்
போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

#2
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினை-மின் மிக்க எல்லாம் வேண்டா போக விடு-மின்கள்
நகவே ஞாலத்துள் புகுந்து நாயே அனைய நமை ஆண்ட
தகவே உடையான்-தனை சார தளராது இருப்பார் தாம்தாமே

#3
தாமே தமக்கு சுற்றமும் தாமே தமக்கு விதி வகையும்
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக
கோமான் பண்டை தொண்டரொடும் அவன்-தன் குறிப்பே குறிக்கொண்டு
போம் ஆறு அமை-மின் பொய் நீக்கி புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே

#4
அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடு-மின் விளையாட்டை
கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இரு-மின் திரு குறிப்பை
செடி சேர் உடலை செல நீக்கி சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே

#5
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை
உடையான் அடிக்கீழ் பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படு-மின்
அடைவோம் நாம் போய் சிவபுரத்துள் அணி ஆர் கதவு-அது அடையாமே
புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே

#6
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு
இகழ்-மின் எல்லா அல்லலையும் இனி ஓர் இடையூறு அடையாமே
திகழும் சீர் ஆர் சிவபுரத்து சென்று சிவன் தாள் வணங்கி நாம்
நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே

#7
நிற்பார் நிற்க நில்லா உலகில் நில்லோம் இனி நாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாம் திருமேனி புயங்கன் ஆவான் பொன் அடிக்கே
நிற்பீர் எல்லாம் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படு-மின்
பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே

#8
பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள்
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து
திருமால் அறியா திரு புயங்கன் திரு தாள் சென்று சேர்வோமே

#9
சேர கருகி சிந்தனையை திருந்த வைத்து சிந்தி-மின்
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன் புயங்கன் அருள் அமுதம்
ஆர பருகி ஆராத ஆர்வம்கூர அழுந்துவீர்
போர புரி-மின் சிவன் கழற்கே பொய்யில் கிடந்து புரளாதே

#10
புரள்வார் தொழுவார் புகழ்வார் ஆய் இன்றே வந்து ஆள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இது செய்-மின் சிவலோக கோன் திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார் அகல் இடத்தே அந்தோ அந்தோ அந்தோவே
மேல்
@46 திருப்படை எழுச்சி

#1
ஞான வாள் ஏந்தும் ஐயர் நாத பறை அறை-மின்
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின்
ஆன நீற்று கவசம் அடைய புகு-மின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே

#2
தொண்டர்காள் தூசி செல்லீர் பக்தர்காள் சூழ போகீர்
ஒண் திறல் யோகிகளே பேர் அணி உந்தீர்கள்
திண் திறல் சித்தர்களே கடை கூழை செல்-மின்கள்
அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல்_படை வாராமே
மேல்
@47 திருவெண்பா

#1
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி
பொய்யும் பொடி ஆகாது என் செய்கேன் செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து

#2
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என் செய்தேன் தீர்ப்பு_அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-
தான் என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து

#3
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து உறையுள் வேல் மடுத்து என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

#4
முன்னை வினை இரண்டும் வேரறுத்து முன் நின்றான்
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்
வரும் துயரம் தீர்க்கும் மருந்து

#5
அறையோ அறிவார்க்கு அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று

#6
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம்
மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்து இறவா பேரின்பம் வந்து

#7
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி
ஆரா_அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன் பெருந்துறையான் என் சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி

#8
யாவர்க்கும் மேல் ஆம் அளவு_இலா சீர் உடையான்
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு என் எம்பெருமான்
மற்று அறியேன் செய்யும் வகை

#9
மூவரும் முப்பத்துமூவரும் மற்று ஒழிந்த
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்

#10
இருந்து என்னை ஆண்டான் இணை_அடியே சிந்தித்து
இருந்து இரந்துகொள் நெஞ்சே எல்லாம் தரும் காண்
பெருந்துறையின் மேய பெரும் கருணையாளன்
மருந்து உருவாய் என் மனத்தே வந்து

#11
இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆக கொண்டான் உவந்து
மேல்
@48 பண்டாய நான்மறை

#1
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும்
கண்டாரும் இல்லை கடையேனை தொண்டு ஆக
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மாறு உரை

#2
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்
வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்து-மின்கள் வாழ்த்த
கருவும் கெடும் பிறவி காடு

#3
காட்டகத்து வேடன் கடலில் வலை வாணன்
நாட்டில் பரி பாகன் நம் வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அம் கமல பாதம்
மருளும் கெட நெஞ்சே வாழ்த்து

#4
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று இறைஞ்சி ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்

#5
நண்ணி பெருந்துறையை நம் இடர்கள் போய் அகல
எண்ணி எழு கோகழிக்கு அரசை பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னி
கழியாது இருந்தவனை காண்

#6
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என
பேணும் அடியார் பிறப்பு அகல காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயார பேசு

#7
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய் பேச்சு இறந்த
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து
மேல்
@49 திருப்படை ஆட்சி

#1
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள்-தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான் படை_ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே

#2
ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே
உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே
கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு-அது ஆகாதே
காரணம் ஆகும் மனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே
நன்று இது தீது என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
நாமும் மேல் ஆம் அடியாருடனே செல நண்ணினும் ஆகாதே
என்றும் என் அன்பு நிறைந்த பராவமுது எய்துவது ஆகாதே
ஏறு உடையான் எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே

#3
பந்த_விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே
பாவனை ஆய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே
அந்தம்_இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே
ஆதி முதல் பரம் ஆய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே
என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

#4
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து உடன் இன்புறும் ஆகாதே
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே
நல் மணி நாதம் முழங்கி என் உள் உற நண்ணுவது ஆகாதே
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே
மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே

#5
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே
வானவரும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே
கண்_இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே
காதல்செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே
பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்_இலி ஆகிய சித்திகள் வந்து எனை எய்துவது ஆகாதே
என்னை உடை பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே

#6
பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே
வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே
தன் அடியார் அடி என் தலை மீது தழைப்பன ஆகாதே
தான் அடியோமுடனே உய வந்து தலைப்படும் ஆகாதே
இன்னியம் எங்கும் நிறைந்து இனிது ஆக இயம்பிடும் ஆகாதே
என்னை முன் ஆளுடை ஈசன் என் அத்தன் எழுந்தருளப்பெறிலே

#7
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே
துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே
பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பராபரம் ஆகாதே
பண்டு அறியாத பரானுபவங்கள் பரந்து எழும் ஆகாதே
வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே
விண்ணவரும் அறியாத விழு பொருள் இ பொருள் ஆகாதே
எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே

#8
சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே
ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே
செம் கயல் ஒள் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தெரித்திடும் ஆகாதே
எங்கும் நிறைந்து அமுது ஊறு பரஞ்சுடர் எய்துவது ஆகாதே
ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப்பெறிலே
மேல்
@50 ஆனந்தமாலை

#1
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம்
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார் அமரர் எல்லாம்
கல் நேர் அனைய மன கடையாய் கழிப்புண்டு அவல கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன் இனி உன்னை கூடும்வண்ணம் இயம்பாயே

#2
என்னால் அறியா பதம் தந்தாய் யான் அது அறியாதே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை உடையாய் அடிமைக்கு யார் என்பேன்
பல் நாள் உன்னை பணிந்து ஏத்தும் பழைய அடியாரொடும் கூடாது
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே

#3
சீலம் இன்றி நோன்பு இன்றி செறிவே இன்றி அறிவு இன்றி
தோலின் பாவைக்கூத்தாட்டு ஆய் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற
கோலம் காட்டி ஆண்டானை கொடியேன் என்றோ கூடுவதே

#4
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன் கேடு இலாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே
நடு ஆய் நில்லாது ஒழிந்த-கால் நன்றோ எங்கள் நாயகமே

#5
தாய் ஆய் முலையை தருவானே தாராது ஒழிந்தால் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனி-தான் நல்குதியே
தாயே என்று உன் தாள் அடைந்தேன் தயா நீ என்-பால் இல்லையே
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய் நான்-தான் வேண்டாவோ

#6
கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ-தான்
சாவார் எல்லாம் என் அளவோ தக்க ஆறு அன்று என்னாரோ
தேவே தில்லை நடம் ஆடீ திகைத்தேன் இனி-தான் தேற்றாயே

#7
நரியை குதிரை பரி ஆக்கி ஞாலம் எல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே
மேல்
@51 அச்சோப் பதிகம்

#1
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை
பத்தி நெறி அறிவித்து பழ வினைகள் பாறும்வண்ணம்
சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#2
நெறி அல்லா நெறி-தன்னை நெறியாக நினைவேனை
சிறு நெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறி ஒன்றும் இல்லாத கூத்தன்-தன் கூத்தை எனக்கு
அறியும்வண்ணம் அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#3
பொய் எல்லாம் மெய் என்று புணர் முலையார் போகத்தே
மையலுற கடவேனை மாளாமே காத்தருளி
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#4
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை
எண்ணம்_இலா அன்பு அருளி எனை ஆண்டிட்டு என்னையும் தன்
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#5
பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்
உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று
அஞ்சேல் என்று அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#6
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி
கொந்து குழல் கோல் வளையார் குவி முலை மேல் விழுவேனை
பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து
அந்தம் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#7
தையலார் மையலிலே தாழ்ந்து விழ கடவேனை
பையவே கொடு போந்து பாசம் எனும் தாழுருவி
உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை
ஐயன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#8
சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி
காதலின் மிக்கு அணி இழையார் கலவியிலே விழுவேனை
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம்
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#9
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை
மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன்-தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#10
செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும்
அத்தனையும் அறியாதார் அறியும் அறிவு எ அறிவோ
ஒத்த நிலம் ஒத்த பொருள் ஒரு பொருள் ஆம் பெரும் பயனை
அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#11
படி-அதினில் கிடந்து இந்த பசு_பாசம் தவிர்ந்துவிடும்
குடிமையிலே திரிந்து அடியேன் கும்பியிலே விழாவண்ணம்
நெடியவனும் நான்முகனும் நீர் கான்றும் காண_ஒண்ணா
அடிகள் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

#12
பாதி எனும் இரவு உறங்கி பகல் எமக்கே இரை தேடி
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட
ஆதி எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே
மேல்  

 மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் (1 - 400) 


* களவியல் - முதல் அதிகாரம்
*1 இயற்கைப் புணர்ச்சி
*1.1 காட்சி

#1
திரு வளர் தாமரை சீர் வளர் காவிகள் ஈசர் தில்லை
குரு வளர் பூம் குமிழ் கோங்கு பைம் காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ
மரு வளர் மாலையர் வல்லியின் ஒல்கி அன நடை வாய்ந்து
உரு வளர் காமன்-தன் வென்றி கொடி போன்று ஒளிர்கின்றதே
மேல்
*1.2. ஐயம்

#2
போதா விசும்போ புனலோ பணிகளது பதியோ
யாதோ அறிகுவது ஏதும் அரிது யமன் விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லை தில்லை
மாதோ மட மயிலோ என நின்றவர் வாழ் பதியே
மேல்
*1.3. தெளிதல்

#3
பாயும் விடை அரன் தில்லை அன்னாள் படை கண் இமைக்கும்
தோயும் நிலத்து அடி தூ மலர் வாடும் துயரம் எய்தி
ஆயும் மனனே அணங்கு அல்லள் அம் மா முலை சுமந்து
தேயும் மருங்குல் பெரும் பணை தோள் இ சிறு_நுதலே
மேல்
*1.4. நயப்பு

#4
அகல்கின்ற அல்குல் தடம் அது கொங்கை அவை அவம் நீ
புகல்கின்றது என்னை நெஞ்சு உண்டே இடை அடையார் புரங்கள்
இகல் குன்ற வில்லில் செற்றோன் தில்லை ஈசன் எம்மான் எதிர்ந்த
பகல் குன்ற பல் உகுத்தோன் பழனம் அன்ன பல் வளைக்கே
மேல்
*1.5. உட்கோள்

#5
அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லை சிந்தா
மணி உம்பரார் அறியா மறையோன் அடி வாழ்த்தலரின்
பிணியும் அதற்கு மருந்தும் பிறழ பிறழ மின்னும்
பணியும் புரை மருங்குல் பெருந்தோளி படை கண்களே
மேல்
*1.6. தெய்வத்தை மகிழ்தல்

#6
வளை பயில் கீழ் கடல் நின்று இட மேல் கடல் வான் நுகத்தின்
துளை வழி நேர் கழி கோத்து என தில்லை தொல்லோன் கயிலை
கிளை-வயின் நீக்கி இ கெண்டை அம் கண்ணியை கொண்டு தந்த
விளைவை அல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே
மேல்
*1.7. புணர்ச்சி துணிதல்

#7
ஏழு உடையான் பொழில் எட்டு உடையான் புயம் என்னை முன் ஆள்
ஊழ் உடையான் புலியூர் அன்ன பொன் இ உயர் பொழில் வாய்
சூழ் உடை ஆயத்தை நீக்கும் விதி துணையா மனனே
யாழ் உடையார் மணம் காண் அணங்காய் வந்து அகப்பட்டதே
மேல்
*1.8. கல்வியுரைத்தல்

#8
சொற்பால் அமுது இவள் யான் சுவை என்ன துணிந்து இங்ஙனே
நற்பால் வினை தெய்வம் தந்து இன்று நான் இவள் ஆம் பகுதி
பொற்பு ஆர் அறிவார் புலியூர் புனிதன் பொதியில் வெற்பில்
கல் பாவிய வரைவாய் கடிது ஓட்ட களவகத்தே
மேல்
*1.9. இருவயின் ஒத்தல்

#9
உணர்ந்தார்க்கு உணர்வு அரியோன் தில்லை சிற்றம்பலத்து ஒருத்தன்
குணம் தான் வெளிப்பட்ட கொவ்வை செ வாய் இ கொடி இடை தோள்
புணர்ந்தால் புணரும்-தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்
மணம் தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே
மேல்
*1.10. கிளவி வேட்டல்

#10
அளவியை யார்க்கும் அறிவு அரியோன் தில்லை அம்பலம் போல்
வளவிய வான் கொங்கை வாள் தடம் கண் நுதல் மா மதியின்
பிளவு இயல் மின் இடை பேர் அமை தோள் இது பெற்றி என்றால்
கிளவியை என்றோ இனி கிள்ளையார் வாயில் கேட்கின்றதே
மேல்
*1.11. நலம் புனைந்துரைத்தல்

#11
கூம்பு அல் அம் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருக குனிக்கும்
பாம்பு அலங்கார பரன் தில்லை அம்பலம் பாடலரின்
தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும்
ஆம்பல் அம் போது உளவோ அளிகாள் நும் அகன் பணையே
மேல்
*1.12. பிரிவுணர்த்தல்

#12
சிந்தாமணி தெள் கடல் அமிர்தம் தில்லையான் அருளால்
வந்தால் இகழப்படுமே மட மான் விழி மயிலே
அம் தாமரை அன்னமே நின்னை யான் அகன்று ஆற்றுவனோ
சிந்தாகுலமுற்று என்னோ என்னை வாட்டம் திருத்துவதே
மேல்
*1.13. பருவரல் அறிதல்

#13
கோங்கின் பொலி அரும்பு ஏய் கொங்கை பங்கன் குறுகலர் ஊர்
தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள்
நீங்கின் புணர்வு அரிது என்றோ நெடிது இங்ஙனே இருந்தால்
ஆங்கு இற்பழி ஆம் எனவோ அறியேன் அயர்கின்றதே
மேல்
*1.14. அருட்குணம் உரைத்தல்

#14
தேவரில் பெற்ற நம் செல்வ கடி வடிவு ஆர் திருவே
யாவரின் பெற்று இனி யார் சிதைப்பார் இமையாத முக்கண்
மூவரின் பெற்றவர் சிற்றம்பலம் அணி மொய் பொழில்-வாய்
பூ அரில் பெற்ற குழலி என் வாடி புலம்புவதே
மேல்
*1.15. இடம் அணித்துக் கூறி வற்புறுத்தல்

#15
வரும் குன்றம் ஒன்று உரித்தோன் தில்லை அம்பலவன் மலயத்து
இரும் குன்ற வாணர் இளம்_கொடியே இடர் எய்தல் எம் ஊர்
பரும் குன்ற மாளிகை நுண் களபத்து ஒளி பாய நும் ஊர்
கரும் குன்றம் வெள் நிற கஞ்சுகம் ஏய்க்கும் கனம்_குழையே
மேல்
*1.16. ஆடு இடத்து உய்த்தல்

#16
தெளி வளர் வான் சிலை செம் கனி வெண் முத்தம் திங்களின் வாய்ந்து
அளி வளர் வல்லி அன்னாய் முன்னி ஆடு பின் யான் அளவா
ஒளி வளர் தில்லை ஒருவன் கயிலை உகு பெரும் தேன்
துளி வளர் சாரல் கரந்து உங்ஙனே வந்து தோன்றுவனே
மேல்
*1.17. அருமை அறிதல்

#17
புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்பும் தன் பூம் கழலின்
துணர் போது எனக்கு அணி ஆக்கும் தொல்லோன் தில்லை சூழ் பொழில்-வாய்
இணர் போது அணி சூழல் ஏழை-தன் நீர்மை இ நீர்மை என்றால்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே
மேல்
*1.18. பாங்கியை அறிதல்

#18
உயிர் ஒன்று உளமும் ஒன்று ஒன்றே சிறப்பு இவட்கு என்னோடு என்ன
பயில்கின்ற சென்று செவியுற நீள் படை கண்கள் விண்-வாய்
செயிர் ஒன்று முப்புரம் செற்றவன் தில்லை சிற்றம்பலத்து
பயில்கின்ற கூத்தன் அருள் எனல் ஆகும் பணி_மொழிக்கே
மேல்


* இரண்டாம் அதிகாரம்

*2  பாற்கற் கூட்டம்
*2.1. பாங்கனை நினைதல்

#19
பூம் கனை ஆர் புனல் தென் புலியூர் புரிந்து அம்பலத்துள்
ஆங்கு எனை ஆண்டுகொண்டு ஆடும் பிரான் அடி தாமரைக்கே
பாங்கனை யான் அன்ன பண்பனை கண்டு இ பரிசு உரைத்தால்
ஈங்கு எனை யார் தடுப்பார் மட_பாவையை எய்துதற்கே
மேல்
*2.2. பாங்கன் வினாதல்

#20
சிறை வான் புனல் தில்லை சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும்
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின்
துறை-வாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசை சூழல் புக்கோ
இறைவா தட வரை தோட்கு என்-கொலாம் புகுந்து எய்தியதே
மேல்
*2.3. உற்றது உரைத்தல்

#21
கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும்
பாம்பை பிடித்து படம் கிழித்து ஆங்கு அ பணை முலைக்கே
தேம்பல் துடி இடை மான் மடம் நோக்கி தில்லை சிவன் தாள்
ஆம் பொன் தட மலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே
மேல்
*2.4. கழறியுரைத்தல்

#22
உளம் ஆம் வகை நம்மை உய்ய வந்து ஆண்டு சென்று உம்பர் உய்ய
களம் ஆம் விடம் அமிர்து ஆக்கிய தில்லை தொல்லோன் கயிலை
வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல்
இளம் மான் விழித்தது என்றோ இன்று எம் அண்ணல் இரங்கியதே
மேல்
*2.5. கழற்றெதிர் மறுத்தல்

#23
சேணில் பொலி செம்பொன் மாளிகை தில்லை சிற்றம்பலத்து
மாணிக்க கூத்தன் வட வான் கயிலை மயிலை மன்னும்
பூணின் பொலி கொங்கை ஆவியை ஓவிய பொன் கொழுந்தை
காணின் கழறலை கண்டிலை மென் தோள் கரும்பினையே
மேல்
*2.6 கவன்றுரைத்தல்

#24
விலங்கலை கால் விண்டு மேன்மேல் இட விண்ணும் மண்ணும் முந்நீர்
கலங்கலை சென்ற அன்றும் கலங்காய் கமழ் கொன்றை துன்றும்
அலங்கலை சூழ்ந்த சிற்றம்பலத்தான் அருள் இல்லவர் போல்
துலங்கலை சென்று இது என்னோ வள்ளல் உள்ளம் துயர்கின்றதே
மேல்
*2.7. வலியழிவுரைத்தல்

#25
தலைப்படு சால்பினுக்கும் தளரேன் சித்தம் பித்தன் என்று
மலைத்து அறிவார் இல்லை யாரையும் தேற்றுவன் எத்துணையும்
கலை சிறு திங்கள் மிலைத்த சிற்றம்பலவன் கயிலை
மலை சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே
மேல்
*2.8. விதியொடு வெறுத்தல்

#26
நல்வினையும் நயம் தந்தின்று வந்து நடுங்கு மின் மேல்
கொல் வினை வல்லன கோங்கு அரும்பு ஆம் என்று பாங்கன் சொல்ல
வில் வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கி
தொல்வினையால் துயரும் எனது ஆருயிர் துப்புறவே
மேல்
*2.9. பாங்கன் நொந்துரைத்தல்

#27
ஆலத்தினால் அமிர்து ஆக்கிய கோன் தில்லை அம்பலம் போல்
கோலத்தினாள் பொருட்டு ஆக அமிர்தம் குணம் கெடினும்
காலத்தினால் மழை மாறினும் மாறா கவி கை நின் பொன்
சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே
மேல்
*2.10. இயல் இடங்கேட்டல்

#28
நின்னுடை நீர்மையும் நீயும் இவ்வாறு நினை தெருட்டும்
என்னுடை நீர்மை இது என் என்பதே தில்லை ஏர் கொள் முக்கண்
மன்னுடை மால் வரையோ மலரோ விசும்போ சிலம்பா
என் இடம் யாது இயல் நின்னை இன்னே செய்த ஈர்ம்_கொடிக்கே
மேல்
*2.11. இயலிடங் கூறல்

#29
விழியால் பிணை ஆம் விளங்கு இயலான் மயில் ஆம் மிழற்று
மொழியால் கிளி ஆம் முது வானவர்-தம் முடி தொகைகள்
கழியா கழல் தில்லை கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன்
கொழியா திகழும் பொழிற்கு எழில் ஆம் எம் குலதெய்வமே
மேல்
*2.12. வற்புறுத்தல்

#30
குயிலை சிலம்பு அடி கொம்பினை தில்லை எம் கூத்தப்பிரான்
கயிலை சிலம்பில் பைம் பூம் புனம் காக்கும் கரும் கண் செ வாய்
மயிலை சிலம்ப கண்டு யான் போய் வருவன் வண் பூம் கொடிகள்
பயில சிலம்பு எதிர் கூய் பண்ணை நண்ணும் பளிக்கறையே
மேல்
*2.13. குறிவழிச் சேறல்

#31
கொடும் கால் குல வரை ஏழு ஏழ் பொழில் எழில் குன்றும் அன்றும்
நடுங்காதவனை நடுங்க நுடங்கும் நடு உடைய
விடம் கால் அயில்_கண்ணி மேவும்-கொலாம் தில்லை ஈசன் வெற்பில்
தடம் கார் தரு பெரு வான் பொழில் நீழல் அம் தண் புனத்தே
மேல்
*2.14. குறிவழிக்காண்டல்

#32
வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம்
துடிக்கின்றவா வெற்பன் சொல் பரிசே யான் தொடர்ந்து விடா
அடி சந்த மா மலர் அண்ணல் விண்ணோர் வணங்கு அம்பலம் போல்
படிச்சந்தமும் இதுவே இவளே அ பணி_மொழியே
மேல்
*2.15. தலைவனை வியந்துரைத்தல்

#33
குவளை களத்து அம்பலவன் குரை கழல் போல் கமலத்
தவளை பயங்கரமாக நின்று ஆண்ட அவயவத்தின்
இவளை கண்டு இங்கு நின்று அங்கு வந்து அத்துணையும் பகர்ந்த
கவள களிற்று அண்ணலே திண்ணியான் இ கடலிடத்தே
மேல்
*2.16 கண்டமை கூறல்

#34
பணம் தாழ் அரவு அரை சிற்றம்பலவர் பைம்பொன் கயிலை
புணர்ந்து ஆங்கு அகன்ற பொரு கரி உன்னி புனத்து அயலே
மணம் தாழ் பொழில்-கண் வடி கண் பரப்பி மட பிடி வாய்
நிணம் தாழ் சுடர் இலை வேல கண்டேன் ஒன்று நின்றதுவே
மேல்
*2.17. செவ்வி செப்பல்

#35
கயல் உளவே கமலத்து அலர் மீது கனி பவளத்து
அயல் உளவே முத்தம் ஒத்த நிரை அரன் அம்பலத்தின்
இயல் உளவே இணை செப்பு வெற்பா நினது ஈர்ம் கொடி மேல்
புயல் உளவே மலர் சூழ்ந்து இருள் தூங்கி புரள்வனவே
மேல்
*2.18. அவ்விடத்து ஏகல்

#36
எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து
குயில் குலம் கொண்டு தொண்டை கனி வாய் குளிர் முத்தம் நிரைத்து
அயில் குல வேல் கமலத்தில் கிடத்தி அனம் நடக்கும்
மயில் குலம் கண்டது உண்டேல் அது என்னுடை மன் உயிரே
மேல்
*2.19. மின்னிடை மெலிதல்

#37
ஆவி அன்னாய் கவலேல் அகலேம் என்று அளித்து ஒளித்த
ஆவி அன்னார் மிக்க அவாவினராய் கெழுமற்கு அழிவுற்று
ஆவி அன்னார் மன்னி ஆடு இடம் சேர்வர்-கொல் அம்பலத்து எம்
ஆவி அன்னான் பயிலும் கயிலாயத்து அரு வரையே
மேல்
*2.20. பொழில்கண்டு மகிழ்தல்

#38
காம்பு இணையால் களி மா மயிலால் கதிர் மா மணியால்
வாம் பிணையால் வல்லி ஒல்குதலால் மன்னும் அம்பலவன்
பாம்பு இணையா குழை கொண்டோன் கயிலை பயில் புனமும்
தேம்பிணை வார் குழலாள் என தோன்றும் என் சிந்தனைக்கே
மேல்
*2.21. உயிரென வியத்தல்

#39
நேயத்ததாய் நென்னல் என்னை புணர்ந்து நெஞ்சம் நெக போய்
ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன் அம்பலம் போல்
தேயத்ததாய் என்றன் சிந்தையதாய் தெரியின் பெரிதும்
மாயத்தது ஆகி இதோ வந்து நின்றது என் மன் உயிரே
மேல்
*2.22. தளர்வு அகன்று உரைத்தல்

#40
தாது இவர் போது கொய்யார் தையலார் அங்கை கூப்ப நின்று
சோதி வரிப்பந்து அடியார் சுனை புனல் ஆடல்செய்யார்
போது இவர் கற்பக நாடு புல்லென்ன தம் பொன் அடி பாய்
யாது இவர் மா தவம் அம்பலத்தான் மலை எய்துதற்கே
மேல்
*2.23. மொழிபெற வருந்தல்

#41
காவி நின்று ஏர்தரு கண்டர் வண் தில்லை கண் ஆர் கமல
தேவி என்றே ஐயம் சென்றது அன்றே அறிய சிறிது
மா இயன்று அன்ன மெல் நோக்கி நின் வாய் திறவாவிடின் என்
ஆவி அன்றே அமிழ்தே அணங்கே இன்று அழிகின்றதே
மேல்
*2.24. நாணிக் கண் புதைத்தல்

#42
அகலிடம் தாவிய வானோன் அறிந்து இறைஞ்சு அம்பலத்தின்
இகல் இடம் தா விடை ஈசன் தொழாரின் இன்னற்கு இடமாய்
உகல் இடம் தான் சென்று எனது உயிர் நையாவகை ஒதுங்க
புகலிடம் தா பொழில்-வாய் எழில் வாய் தரு பூம்_கொடியே
மேல்
*2.25. கண் புதைக்க வருந்தல்

#43
தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர்
சூழ செய்தான் அம்பலம் கைதொழாரின் உள்ளம் துளங்க
போழச்செய்யாமல் வை வேல் கண் புதைத்து பொன்னே என்னை நீ
வாழச்செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னை வாள்_நுதலே
மேல்
*2.26. நாண்விட வருந்தல்

#44
குரு நாள்_மலர் பொழில் சூழ் தில்லை கூத்தனை ஏத்தலர் போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்று என் கண்மணி போன்று
ஒருநாள் பிரியாது உயிரின் பழகி உடன் வளர்ந்த
அரு நாண் அளிய அழல் சேர் மெழுகு ஒத்து அழிகின்றதே
மேல்
*2.27. மருங்கணைதல்

#45
கோல தனி கொம்பர் உம்பர் புக்கு அஃதே குறைப்பவர்-தம்
சீலத்தன கொங்கை தேற்றகிலேம் சிவன் தில்லை அன்னாள்
நூல் ஒத்த நேர் இடை நொய்ம்மை எண்ணாது நுண் தேன் நசையால்
சால தகாது கண்டீர் வண்டுகாள் கொண்டை சார்வதுவே
மேல்
*2.28. இன்றியமையாமை கூறல்

#46
நீங்க அரும் பொன் கழல் சிற்றம்பலவர் நெடு விசும்பும்
வாங்கு இரும் தெண் கடல் வையமும் எய்தினும் யான் மறவேன்
தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும்
கோங்கு அரும்பும் தொலைத்து என்னையும் ஆட்கொண்ட கொங்கைகளே
மேல்
*2.29. ஆயத்து உய்த்தல்

#47
சூளாமணி உம்பர்க்கு ஆயவன் சூழ் பொழில் தில்லை அன்னாய்க்கு
ஆளா ஒழிந்தது என் ஆருயிர் ஆர் அமிழ்தே அணங்கே
தோளா மணியே பிணையே பல சொல்லி என்னை துன்னும்
நாள் ஆர் மலர் பொழில்-வாய் எழில் ஆயம் நணுகுகவே
மேல்
*2.30. நின்று வருந்தல்

#48
பொய்யுடையார்க்கு அரன் போல் அகலும் அகன்றால் புணரின்
மெய்யுடையார்க்கு அவன் அம்பலம் போல மிக நணுகும்
மை உடை வாள் கண் மணி உடை பூண் முலை வாள்_நுதல் வான்
பை உடை வாள் அரவத்து அல்குல் காக்கும் பைம் பூம் புனமே
மேல்

* மூன்றாம் அதிகாரம்

*3  இடந்தலைப் பாடு
*3.1. பொழிலிடைச் சேறல்

#49
என் அறிவால் வந்தது அன்று இது முன்னும் இன்னும் முயன்றால்
மன் நெறி தந்தது இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின் எறி செம் சடை கூத்தப்பிரான் வியன் தில்லை முந்நீர்
பொன் எறி வார் துறை-வாய் சென்று மின் தோய் பொழிலிடத்தே
மேல்

* நான்காம் அதிகாரம்

*4 மதியுடம்படுத்தல்
*4.1. பாங்கிடைச் சேறல்

#50
எளிது அன்று இனி கனி வாய் வல்லி புல்லல் எழில் மதி கீற்று
ஒளி சென்ற செம் சடை கூத்தப்பிரானை உன்னாரின் என்-கண்
தெளிசென்ற வேல் கண் வருவித்த செல்லல் எல்லாம் தெளிவித்து
அளி சென்ற பூம் குழல் தோழிக்கு வாழி அறிவிப்பனே
மேல்
*4.2. குறையுறத் துணிதல்

#51
குவளை கரும் கண் கொடி ஏர் இடை இ கொடி கடைக்கண்
உவளை தனது உயிர் என்றது தன்னோடு உவமை இல்லா
தவளை தன்-பால் வைத்த சிற்றம்பலத்தான் அருள் இலர் போல்
துவள தலைவந்த இன்னல் இன்னே இனி சொல்லுவனே
மேல்
*4.3. வேழம் வினாதல்

#52
இரும் களியாய் இன்று யான் இறுமாப்ப இன்பம் பணிவோர்
மருங்கு அளியா அனல் ஆட வல்லோன் தில்லையான் மலை ஈங்கு
ஒருங்கு அளி ஆர்ப்ப உமிழ் மும்மதத்து இரு கோட்டு ஒரு நீள்
கரும் களி ஆர் மத யானை உண்டோ வர கண்டதுவே
மேல்
*4.4. கலைமான் வினாதல்

#53
கரும் கண்ணனை அறியாமை நின்றோன் தில்லை கார் பொழில்-வாய்
வரும் கள் நனைய வண்டு ஆடும் வளர் இள வல்லி அன்னீர்
இரும் கண் அனைய கணை பொரு புண் புணர் இ புனத்தின்
மருங்கண் அனையது உண்டோ வந்தது ஈங்கு ஒரு வான் கலையே
மேல்
*4.5. வழி வினாதல்

#54
சிலம்பு அணிகொண்ட செம் சீறடி பங்கன் தன் சீர் அடியார்
குலம் பணிகொள்ள எனை கொடுத்தோன் கொண்டு தான் அணியும்
கலம் பணி கொண்டு இடம் அம்பலம் கொண்டவன் கார் கயிலை
சிலம்பு அணிகொண்ட நும் சீறூர்க்கு உரை-மின்கள் செல் நெறியே
மேல்
*4.6. பதி வினாதல்

#55
ஒருங்கு அட மூவெயில் ஒற்றை கணை கொள் சிற்றம்பலவன்
கரும் கடம் மூன்று உகு நால் வாய் கரி உரித்தோன் கயிலை
இரும் கடம் மூடும் பொழில் எழில் கொம்பர் அன்னீர்கள் இன்னே
வருங்கள் தம் ஊர் பகர்ந்தால் பழியோ இங்கு வாழ்பவர்க்கு
மேல்
*4.7. பெயர் வினாதல்

#56
தார் என்ன ஓங்கும் சடை முடி மேல் தனி திங்கள் வைத்த
கார் என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை
ஊர் என்ன என்னவும் வாய் திறவீர் ஒழிவீர் பழியேல்
பேர் என்னவோ உரையீர் விரை ஈர்ம் குழல் பேதையரே
மேல்
*4.8. மொழி பெறாது கூறல்

#57
இரதம் உடைய நடம் ஆட்டு உடையவர் எம் உடையர்
வரதம் உடைய அணி தில்லை அன்னவர் இ புனத்தார்
விரதம் உடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டு அது அன்றேல்
சரதம் உடையர் மணி வாய் திறக்கின் சலக்கு என்பவே
மேல்
*4.9. கருத்தறிவித்தல்

#58
வில் நிற வாள் நுதல் வேல் நிற கண் மெல்_இயலை மல்லல்
தன் நிறம் ஒன்றில் இருத்தி நின்றோன்-தனது அம்பலம் போல்
மின் நிற நுண் இடை பேர் எழில் வெள் நகை பைம் தொடியீர்
பொன் நிற அல்குலுக்கு ஆமோ மணி நிற பூம் தழையே
மேல்
*4.10. இடை வினாதல்

#59
கலை கீழ் அகல் அல்குல் பாரம் அது ஆரம் கண் ஆர்ந்து இலங்கு
முலை கீழ் சிறிது இன்றி நிற்றல் முற்றாது அன்று இலங்கையர்_கோன்
மலை கீழ் விழ செற்ற சிற்றம்பலவர் வண் பூம் கயிலை
சிலை கீழ் கணை அன்ன கண்ணீர் எது நுங்கள் சிற்றிடையே
மேல்

* ஐந்தாம் அதிகாரம்

*5 இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
*5.1. ஐயறுதல்

#60
பல் இலன் ஆக பகலை வென்றோன் தில்லை பாடலர் போல்
எல் இலன் நாகத்தோடு ஏனம் வினா இவன் யாவன்-கொலாம்
வில் இலன் நாக தழை கையில் வேட்டை கொண்டாட்டம் மெய் ஓர்
சொல் இலன் ஆ கற்ற வா கடவான் இ சுனை புனமே
மேல்
*5.2. அறிவு நாடல்

#61
ஆழம்-மன்னோ உடைத்து இ ஐயர் வார்த்தை அனங்கன் நைந்து
வீழ முன் நோக்கிய அம்பலத்தான் வெற்பின் இ புனத்தே
வேழ முன்னாய் கலையாய் பிறவாய் பின்னும் மெல் தழையாய்
மாழை மெல் நோக்கி இடையாய் கழிந்தது வந்துவந்தே
மேல்

* ஆறாம் அதிகாரம்

*6 முன்னுற வுணர்தல்
*6.1. வாட்டம் வினாதல்

#62
நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து நெற்றி தனி கண்
ஒருத்தன் பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி
திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி சிலம்பு எதிர் கூய்
வருத்தம் பயின்று-கொல்லோ வல்லி மெல்_இயல் வாடியதே
மேல்

* ஏழாம் அதிகாரம்

*7 குறையுற வுணர்தல்
*7.1. குறையுற்று நிற்றல்

#63
மடுக்கோ கடலின் விடு திமில் அன்றி மறி திரை மீன்
படுக்கோ பணிலம் பல குளிக்கோ பரன் தில்லை முன்றில்
கொடுக்கோ வளை மற்று நும் ஐயர்க்கு ஆய குற்றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணி ஈர் மலர் நும் கரி குழற்கே
மேல்
*7.2. அவன் குறிப்பறிதல்

#64
அளிய மன்னும் ஒன்று உடைத்து அண்ணல் எண் அரன் தில்லை அன்னாள்
கிளியை மன்னும் கடிய செல்ல நிற்பின் கிளர் அளகத்து
அளி அமர்ந்து ஏறின் வறிதே இருப்பின் பளிங்கு அடுத்த
ஒளி அமர்ந்த ஆங்கு ஒன்று போன்று ஒன்று தோன்றும் ஒளி முகத்தே
மேல்
*7.3. அவள் குறிப்பறிதல்

#65
பிழை கொண்டு ஒருவி கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும்
முழை கொண்டு ஒருவன் செல்லாமை நின்று அம்பலத்து ஆடும் முன்னோன்
உழை கொண்டு ஒருங்கு இரு நோக்கம் பயின்ற எம் ஒள்_நுதல் மாம்
தழை கொண்டு ஒருவன் என்னா முன்னம் உள்ளம் தழைத்திடுமே
மேல்
*7.4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்

#66
மெய்யே இவற்கு இல்லை வேட்டையின் மேல் மனம் மீட்டு இவளும்
பொய்யே புன தினை காப்பது இறை புலியூர் அனையாள்
மை ஏர் குவளை கண் வண்டினம் வாழும் செந்தாமரை-வாய்
எய்யேம் எனினும் குடைந்து இன்ப தேன் உண்டு எழில் தருமே
மேல்

* எட்டாம் அதிகாரம்

*8 நாண நாட்டம்
*8.1. பிறை தொழுகென்றல்

#67
மை வார் கரும்_கண்ணி செம் கரம் கூப்பு மறந்தும் மற்று அ
பொய் வானவரில் புகாது தன் பொன் கழற்கே அடியேன்
உய்வான் புக ஒளிர் தில்லை நின்றோன் சடை மேலது ஒத்து
செ வான் அடைந்த பசும் கதிர் வெள்ளை சிறு பிறைக்கே
மேல்
*8.2. வேறுபடுத்துக் கூறல்

#68
அக்கின் தவா மணி சேர் கண்டன் அம்பலவன் மலயத்து
இ குன்ற வாணர் கொழுந்து இ செழும் தண் புனம் உடையாள்
அ குன்ற ஆறு அமர்ந்து ஆட சென்றாள் அங்கம் அவ்வவையே
ஒக்கின்ற ஆர் அணங்கே இணங்கு ஆகும் உனக்கு அவளே
மேல்
*8.3. கனையாடல் கூறி நகைத்தல்

#69
செ நிற மேனி வெள் நீறு அணிவோன் தில்லை அம்பலம் போல்
அம் நிற மேனி நின் கொங்கையில் அங்கு அழி குங்குமமும்
மை நிற வார் குழல் மாலையும் தாதும் வளாய் மதம் சேர்
இ நிறமும் பெறின் யானும் குடைவன் இரும் சுனையே
மேல்
*8.4. புணர்ச்சி உரைத்தல்

#70
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய்
கரும் கண் சிவப்ப கனி வாய் விளர்ப்ப கண் ஆர் அளி பின்
வரும் கள் மலை மலர் சூட்டவற்றோ மற்று அ வான் கனையே
மேல்
*8.5. மதியுடம் படுதல்

#71
காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்த ஆங்கு இருவர்
ஆகத்துள் ஓர் உயிர் கண்டனம் யாம் இன்று யாவையும் ஆம்
ஏகத்து ஒருவன் இரும் பொழில் அம்பலவன் மலையில்
தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே
மேல்

* ஒன்பதாம் அதிகாரம்

*9 நடுங்க நாட்டம்
*9.1. 

#72
ஆவா இருவர் அறியா அடி தில்லை அம்பலத்து
மூவாயிரவர் வணங்க நின்றோனை உன்னாரின் முன்னி
தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து
ஆவா மணி வேல் பணி கொண்ட ஆறு இன்று ஓர் ஆண்டகையே
மேல்

* பத்தாம் அதிகாரம்

*10 மடல் திறம்
*10.1. ஆற்றாது உரைத்தல்

#73
பொருளா எனை புகுந்து ஆண்டு புரந்தரன் மால் அயன்-பால்
இருளாய் இருக்கும் ஒளி நின்ற சிற்றம்பலம் எனல் ஆம்
சுருள் ஆர் கரும் குழல் வெள் நகை செ வாய் துடியிடையீர்
அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே
மேல்
*10.2. உலகின்மேல் வைத்துரைத்தல்

#74
காய் சின வேல் அன்ன மின் இயல் கண்ணின் வலை கலந்து
வீசின போது உள்ளம் மீன் இழந்தார் வியன் தென் புலியூர்
ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஓர் கிழி பிடித்து
பாய் சின மா என ஏறுவர் சீறூர் பனை மடலே
மேல்
*10.3. தன் துணிபு உரைத்தல்

#75
விண்ணை மடங்க விரிநீர் பரந்து வெற்பு கரப்ப
மண்ணை மடங்க வரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும்
அண்ணல் மடங்கல் அதள் அம்பலவன் அருள் இலர் போல்
பெண்ணை மடல் மிசை யான் வர பண்ணிற்று ஓர் பெண் கொடியே
மேல்
*10.4. மடலேறும் வகையரைத்தல்

#76
கழிகின்ற என்னையும் நின்ற நின் கார் மயில்-தன்னையும் யான்
கிழி ஒன்ற நாடி எழுதி கை கொண்டு என் பிறவி கெட்டு இன்று
அழிகின்றது ஆக்கிய தாள் அம்பலவன் கயிலை அம் தேன்
பொழிகின்ற சாரல் நும் சீறூர் தெருவிடை போதுவனே
மேல்
*10.5. அருளால் அரிதென விலக்கல்

#77
நடன் நாம் வணங்கும் தொல்லோன் எல்லை நான்முகன் மால் அறியா
கடன் ஆம் உருவத்து அரன் தில்லை மல்லல் கண் ஆர்ந்த பெண்ணை
உடன் ஆம் பெடையொடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழித்து
மடல் நாம் புனைதரின் யார் கண்ணதோ மன்ன இன் அருளே
மேல்
*10.6. மொழிநடை எழுதல் அரிதென விலக்கல்

#78
அடி சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டுகொண்டு என்
முடி சந்த மா மலர் ஆக்கும் முன்னோன் புலியூர் புரையும்
கடி சந்த யாழ் கற்ற மென் மொழி கன்னி அன நடைக்கு
படிச்சந்தம் ஆக்கும் படம் உளவோ நும் பரிசகத்தே
மேல்
*10.7. அவயவம் எழுதல் அரிதென விலக்கல்

#79
யாழும் எழுதி எழில் முத்து எழுதி இருளில் மென் பூ
சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி
ஏழும் எழுதாவகை சிதைத்தோன் புலியூர் இள மாம்
போழும் எழுதிற்று ஒர் கொம்பர் உண்டேல் கொண்டு போதுகவே
மேல்
*10.8. உடம்படாது விலக்கல்

#80
ஊர்வாய் ஒழிவாய் உயர் பெண்ணை திண் மடல் நின் குறிப்பு
சீர் வாய் சிலம்ப திருத்த இருந்திலம் ஈசர் தில்லை
கார் வாய் குழலிக்கு உன் ஆதரவு ஓதி கற்பித்து கண்டால்
ஆர் வாய்தரின் அறிவார் பின்னை செய்க அறிந்தனவே
மேல்
*10.9. உடம்பட்டு விலக்கல்

#81
பை நாண் அரவன் படு கடல்-வாய் படு நஞ்சு அமுது ஆம்
மை நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்த பொன் இ
மொய் நாள் முது திரை-வாய் யான் அழுந்தினும் என்னின் முன்னும்
இ நாள் இது மது வார் குழலாட்கு என்-கண் இன் அருளே
மேல்

* பதினொன்றாம் அதிகாரம்

*11 குறை நயப்புக் கூறல்
*11.1. குறிப்பறிதல்

#82
தாது ஏய் மலர் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி
தேதே எனும் தில்லையோன் சேய் என சின வேல் ஒருவர்
மாதே புனத்திடை வாளா வருவர் வந்து யாதும் சொல்லார்
யாதே செய தக்கது மது வார் குழல் ஏந்து_இழையே
மேல்
*11.2. மென்மொழியால் கூறல்

#83
வரி சேர் தடம்_கண்ணி மம்மர் கைம்மிக்கு என்ன மாயம்-கொலோ
எரி சேர் தளிர் அன்ன மேனியன் ஈர்ந்தழையன் புலியூர்
புரி சேர் சடையோன் புதல்வன்-கொல் பூம் கணை வேள்-கொல் என்ன
தெரியேம் உரையான் பிரியான் ஒருவன் இ தேம் புனமே
மேல்
*11.3. விரவிக் கூறல்

#84
நீ கண்டனை எனின் வாழலை நேர்_இழை அம்பலத்தான்
சேய் கண்டு அனையன் சென்று ஆங்கு ஓர் அலவன் தன் சீர் பெடையின்
வாய் வண்டு அனையது ஓர் நாவல் கனி நனி நல்க கண்டு
பேய் கண்டு அனையது ஒன்று ஆகி நின்றான் அ பெருந்தகையே
மேல்
*11.4. அறியாள் போறல்

#85
சங்கம் தரு முத்து யாம் பெற வான் கழி தான் கெழுமி
பொங்கும் புனல் கங்கை தாங்கி பொலி கழி பாறு உலவு
துங்க மலிதலை ஏந்தலின் ஏந்து_இழை தொல்லை பல் மா
வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர்வருமே
மேல்
*11.5. வஞ்சித்து உரைத்தல்

#86
புரம் கடந்தான் அடி காண்பான் புவி விண்டு புக்கு அறியாது
இரங்கிடு எந்தாய் என்று இரப்ப தன் ஈர் அடிக்கு என் இரண்டு
கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதும் காட்டிடு என்று
வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அ மாயவனே
மேல்
*11.6. புலந்து கூறல்

#87
உள்ளப்படுவன உள்ளி உரை தக்கவர்க்கு உரைத்து
மெள்ள படிறு துணி துணியேல் இது வேண்டுவல் யான்
கள்ள படிறர்க்கு அருளா அரன் தில்லை காணலர் போல்
கொள்ளப்படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே
மேல்
*11.7. வன்மொழியாற் கூறல்

#88
மேவி அம் தோல் உடுக்கும் தில்லையான் பொடி மெய்யில் கையில்
ஓவியம் தோன்றும் கிழி நின் எழில் என்று உரை உளதால்
தூவி அம் தோகை அன்னாய் என்ன பாவம் சொல்லாடல் செய்யான்
பாவி அந்தோ பனை மா மடல் ஏற-கொல் பாவித்ததே
மேல்
*11.8. மனத்தொடு நேர்தல்

#89
பொன் ஆர் சடையோன் புலியூர் புகழார் என புரி நோய்
என்னால் அறிவு இல்லை யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார்
சொன்னார் எனும் இ துரிசு துன்னாமை துணை மனனே
என் ஆழ் துயர் வல்லையேல் சொல்லு நீர்மை இனியவர்க்கே
மேல்

* பன்னிரண்டாம் அதிகாரம்

*12. சேட்படை
*12.1. தழைகொண்டு சேறல்

#90
தே மென் கிளவி தன் பங்கத்து இறை உறை தில்லை அன்னீர்
பூ மெல் தழையும் அம் போதும் கொள்ளீர் தமியேன் புலம்ப
ஆம் என்று அரும் கொடும்பாடுகள் செய்து நும் கண் மலர் ஆம்
காமன் கணை கொண்டு அலைகொள்ளவோ முற்ற கற்றதுவே
மேல்
*12.2. சந்தனத் தழை தகாதென்று மறுத்தல்

#91
ஆர தழை அரா பூண்டு அம்பலத்து அனல் ஆடி அன்பர்க்கு
ஆர தழை அன்பு அருளி நின்றோன் சென்ற மா மலயத்து
ஆர தழை அண்ணல் தந்தால் இவை அவள் அல்குல் கண்டால்
ஆர் அ தழை கொடு வந்தார் என வரும் ஐயுறவே
மேல்
*12.3. நிலத்தின்மை கூறிமறுத்தல்

#92
முன் தகர்த்து எல்லா இமையோரையும் பின்னை தக்கன் முத்தீ
சென்று அகத்து இல்லாவகை சிதைத்தோன் திருந்து அம்பலவன்
குன்றகத்து இல்லா தழை அண்ணல் தந்தால் கொடிச்சியருக்கு
இன்று அகத்து இல்லா பழி வந்து மூடும் என்று எள்குதுமே
மேல்
*12.4. நினைவறிவு கூறி மறுத்தல்

#93
யாழ் ஆர் மொழி மங்கை பங்கத்து இறைவன் எறி திரை நீர்
ஏழாய் எழு பொழிலாய் இருந்தோன் நின்ற தில்லை அன்ன
சூழ் ஆர் குழல் எழில் தொண்டை செ வாய் நவ்வி சொல் அறிந்தால்
தாழாது எதிர்வந்து கோடும் சிலம்ப தரும் தழையே
மேல்
*12.5. படைத்து மொழியான் மறுத்தல்

#94
எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம்
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி
பொழில் வாய் தட வரை-வாய் அல்லது இல்லை இ பூம் தழையே
மேல்
*12.6. நாணுரைத்து மறுத்தல்

#95
உறும் கள் நிவந்த கணை உரவோன் பொடியாய் ஒடுங்க
தெறும் கண் நிவந்த சிற்றம்பலவன் மலை சிற்றிலின்-வாய்
நறும் கண்ணி சூட்டினும் நாணும் என் வாள்_நுதல் நாகத்து ஒண் பூம்
குறும் கண்ணி வேய்ந்து இள மந்திகள் நாணும் இ குன்றிடத்தே
மேல்
*12.7. இசையாமை கூறி மறுத்தல்

#96
நற மனை வேங்கையின் பூ பயில் பாறையை நாகம் நண்ணி
மற மனை வேங்கை என நனி அஞ்சும் மஞ்சு ஆர் சிலம்பா
குற மனை வேங்கை சுணங்கொடு அணங்கு அலர் கூட்டுபவோ
நிறம் மனை வேங்கை அதள் அம்பலவன் நெடு வரையே
மேல்
*12.8. செவ்வியிலள் என்று மறுத்தல்

#97
கற்றில கண்டு அன்னம் மெல் நடை கண் மலர் நோக்கு அருள
பெற்றில மென் பிணை பேச்சு பெறா கிள்ளை பிள்ளை இன்று ஒன்று
உற்றிலள் உற்றது அறிந்திலள் ஆகத்து ஒளி மிளிரும்
புற்றில வாள் அரவன் புலியூர் அன்ன பூம்_கொடியே
மேல்
*12.9. காப்புடைத்தென்று மறுத்தல்

#98
முனிதரும் அன்னையும் என் ஐயர் சாலவும் மூர்க்கர் இன்னே
தனி தரும் இ நிலத்து அன்று ஐய குன்றமும் தாழ் சடை மேல்
பனி தரு திங்கள் அணி அம்பலவர் பகை செகுக்கும்
குனிதரு திண் சிலை கோடு சென்றான் சுடர் கொற்றவனே
மேல்
*12.10. நீயே கூறென்று மறுத்தல்

#99
அந்தியின்-வாய் எழில் அம்பலத்து எம்பரன் அம் பொன் வெற்பில்
பந்தியின்-வாய் பலவின் சுளை பைம் தேனொடும் கடுவன்
மந்தியின் வாய் கொடுத்து ஓம்பும் சிலம்ப மனம் கனிய
முந்தி இன் வாய்மொழி நீயே மொழி சென்று அம் மொய்_குழற்கே
மேல்
*12.11. குலமுறை கூறி மறுத்தல்

#100
தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று
கொங்கம் பழனத்து ஒளிர் குளிர் நாட்டினை நீ உமை கூர்
பங்கு அம்பலவன் பரங்குன்றில் குன்று அன்ன மா பதைப்ப
சிங்கம் திரிதரு சீறூர் சிறுமி எம் தே_மொழியே
மேல்
*12.12. நகையாடி மறுத்தல்

#101
சிலை ஒன்று வாள்_நுதல் பங்கன் சிற்றம்பலவன் கயிலை
மலை ஒன்று மா முகத்து எம் ஐயர் எய் கணை மண் குளிக்கும்
கலை ஒன்று வெம் கணையோடு கடுகிட்டது என்னில் கெட்டேன்
கொலை ஒன்று திண்ணியவாறு ஐயர் கையில் கொடும் சிலையே
மேல்
*12.13. இரக்கத்தோடு மறுத்தல்

#102
மை தழையாநின்ற மா மிடற்று அம்பலவன் கழற்கே
மெய் தழையாநின்ற அன்பினர் போல விதிர்விதிர்த்து
கை தழை ஏந்தி கடமா வினாய் கையில் வில் இன்றியே
பித்து அழையாநிற்பரால் என்ன பாவம் பெரியவரே
மேல்
*12.14. சிறப்பின்மை கூறி மறுத்தல்

#103
அக்கும் அரவும் அணி மணி கூத்தன் சிற்றம்பலமே
ஒக்கும் இவளது ஒளிர் உரு அஞ்சி மஞ்சு ஆர் சிலம்பா
கொக்கும் சுனையும் குளிர் தளிரும் கொழும் போதுகளும்
இ குன்றில் என்றும் மலர்ந்து அறியாத இயல்பினவே
மேல்
*12.15. இளமை கூறி மறுத்தல்

#104
உருகுதலை சென்ற உள்ளத்தும் அம்பலத்தும் ஒளியே
பெருகுதலை சென்று நின்றோன் பெருந்துறை பிள்ளை கள் ஆர்
முருகு தலைச்சென்ற கூழை முடியா முலை பொடியா
ஒரு குதலை சின் மழலைக்கு என்னோ ஐய ஓதுவதே
மேல்
*12.16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல்

#105
பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து
தொண்டால் இயலும் சுடர் கழலோன் தொல்லை தில்லையின்-வாய்
வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை
கண்டால் இயலும் கடன் இல்லை-கொல்லோ கருதியதே
மேல்
*12.17. நகை கண்டு மகிழ்தல்

#106
மத்தகம் சேர் தனி நோக்கினன் வாக்கு இறந்து ஊறு அமுதே
ஒத்து அகம் சேர்ந்து என்னை உய்ய நின்றோன் தில்லை ஒத்து இலங்கு
முத்து அகம் சேர் மெல் நகை பெருந்தோளி முக மதியின்
வித்தகம் சேர் மெல் என் நோக்கம் அன்றோ என் விழு துணையே
மேல்
*12.18. அறியாள் போன்று நினைவு கேட்டல்

#107
விண் இறந்தார் நிலம் விண்டலர் என்று மிக்கார் இருவர்
கண் இறந்தார் தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில்-நின்று
தண் நறும் தாது இவர் சந்தன சோலை பந்து ஆடுகின்றார்
எண்ணிறந்தார்அவர் யார் கண்ணதோ மன்ன நின் அருளே
மேல்
*12.19. அவயவம் கூறல்

#108
குவவின கொங்கை குரும்பை குழல் கொன்றை கொவ்வை செ வாய்
கவவின வாள் நகை வெண் முத்தம் கண் மலர் செங்கழுநீர்
தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு
உவவின நாள் மதி போன்று ஒளிர்கின்றது ஒளி முகமே
மேல்
*12.20. கண் நயந்து உரைத்தல்

#109
ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என்
பாசத்தின் கார் என்று அவன் தில்லையின் ஒளி போன்று அவன் தோள்
பூசு அ திருநீறு என வெளுத்து ஆங்கு அவன் பூம் கழல் யாம்
பேசு அ திரு வார்த்தையின் பெரு நீளம் பெரும் கண்களே
மேல்
*12.21. தழையெதிர்தல்

#110
தோலா கரி வென்றதற்கும் துவள்விற்கும் இல்லின் தொன்மைக்கு
ஏலா பரிசு உளவே அன்றி ஏலேம் இரும் சிலம்ப
மாலார்க்கு அரிய மலர் கழல் அம்பலவன் மலையில்
கோலா பிரசம் அன்னாட்கு ஐய நீ தந்த கொய் தழையே
மேல்
*12.22. குறிப்பறிதல்

#111
கழை காண்டலும் சுளியும் களி யானை அன்னான் கரத்தில்
தழை காண்டலும் பொய் தழைப்ப முன் காண்பன் இன்று அம்பலத்தான்
உழை காண்டலும் நினைப்பு ஆகும் மெல்நோக்கி மன் நோக்கம் கண்டால்
இழை காண் பணைமுலையாய் அறியேன் சொல்லும் ஈடு அவற்கே
மேல்
*12.23. குறிப்பறிந்து கூறல்

#112
தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபா
லவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் அன்று உரித்தது அன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும்
துவள தகுவனவோ சுரும்பு ஆர் குழல் தூ_மொழியே
மேல்
*12.24. வகுத்துறைத்தல்

#113
ஏறும் பழி தழை ஏற்பின் மற்று ஏலாவிடின் மடல் மா
ஏறும் அவன் இடபம் கொடி ஏற்றி வந்து அம்பலத்துள்
ஏறும் அரன் மன்னும் ஈங்கோய் மலை நம் இரும் புனம் காய்ந்து
ஏறும் மலை தொலைத்தாற்கு என்னை யாம் செய்வது ஏந்து_இழையே
மேல்
*12.25. தழையேற்பித்தல்

#114
தெவ்வரை மெய் எரி காய் சிலை ஆண்டு என்னை ஆண்டுகொண்ட
செ வரை மேனியன் சிற்றம்பலவன் செழும் கயிலை
அ வரை மேல் அன்றி இல்லை கண்டாய் உள்ளவாறு அருளான்
இ வரை மேல் சிலம்பன் எளிதில் தந்த ஈர்ம் தழையே
மேல்
*12.26. தழை விருப்புரைத்தல்

#115
பாச தளை அறுத்து ஆண்டுகொண்டோன் தில்லை அம்பலம் சூழ்
தேசத்தன செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன்
பேசில் பெருகும் சுருங்கு_மருங்குல் பெயர்ந்து அரைத்து
பூசிற்றிலள் அன்றி செய்யாதன இல்லை பூம் தழையே
மேல்

* பதின்மூன்றாம் அதிகாரம்

*13 பகற்குறி
*13.1. குறியிடங் கூறல்

#116
வான் உழை வாள் அம்பலத்து அரன் குன்று என்று வட்கி வெய்யோன்
தான் நுழையா இருளாய் புறம் நாப்பண் வண் தாரகை போல்
தேன் நுழை நாகம் மலர்ந்து திகழ் பளிங்கான் மதியோன்
கான் உழை வாழ்வு பெற்று ஆங்கு எழில் காட்டும் ஒர் கார் பொழிலே
மேல்
*13.2. ஆடிடம் படர்தல்

#117
புயல் வளர் ஊசல் முன் ஆடி பொன்னே பின்னை போய் பொலியும்
அயல் வளர் குன்றில் நின்று ஏற்றும் அருவி திரு உருவின்
கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும்
தயல் வளர் மேனியன் அம்பலத்தான் வரை தண் புனத்தே
மேல்
*13.3. குறியிடத்துக் கொண்டு சேறல்

#118
தினை வளம் காத்து சிலம்பு எதிர் கூஉய் சிற்றில் முற்று இழைத்து
சுனை வளம் பாய்ந்து துணை மலர் கொய்து தொழுது எழுவார்
வினை வளம் நீறு எழ நீறு அணி அம்பலவன்-தன் வெற்பில்
புனை வளர் கொம்பர் அன்னாய் அன்ன காண்டும் புன மயிலே
மேல்
*13.4. இடத்துய்த்து நீங்கல்

#119
நரல் வேய் இன நின தோட்கு உடைந்து உக்க நல் முத்தம் சிந்தி
பரல் வேய் அறை உறைக்கும் பஞ்சு அடி பரன் தில்லை அன்னாய்
வரல் வேய்தருவன் இங்கே நில் உங்கே சென்று உன் வார் குழற்கு ஈர்ம்
குரல் வேய் அளி முரல் கொங்கு ஆர் தட மலர் கொண்டுவந்தே
மேல்
*13.5. உவந்துரைத்தல்

#120
பட மாசுண பள்ளி இ குவடு ஆக்கி அ பங்கய கண்
நெடுமால் என என்னை நீ நினைந்தோ நெஞ்ச தாமரையே
இடம் ஆ இருக்கலுற்றோ தில்லை நின்றவன் ஈர்ம் கயிலை
வடம் ஆர் முலை மடவாய் வந்து வைகிற்று இ வார் பொழிற்கே
மேல்
*13.6. மருங்கணைதல்

#121
தொத்து ஈன் மலர் பொழில் தில்லை தொல்லோன் அருள் என்ன முன்னி
முத்து ஈன் குவளை மென் காந்தளின் மூடி தன் ஏர் அளப்பாள்
ஒத்து ஈர்ம் கொடியின் ஒதுங்குகின்றாள் மருங்குல் நெருங்க
பித்தீர் பணை முலைகாள் என்னுக்கு இன்னும் பெருக்கின்றதே
மேல்
*13.7. பாங்கியறிவுரைத்தல்

#122
அளி நீடு அளகத்தின் அட்டிய தாதும் அணி அணியும்
ஒளி நீள் கரி குழல் சூழ்ந்த ஒண் மாலையும் தண் நறவு உண்
களி நீ என செய்தவன் கடல் தில்லை அன்னாய் கலங்கல்
தெளி நீ அனைய பொன்னே பன்னு கோலம் திரு_நுதலே
மேல்
*13.8. உண்மகிழ்ந்துரைத்தல்

#123
செழு நீர் மதி கண்ணி சிற்றம்பலவன் திரு கழலே
கெழு நீர்மையின் சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள் அகத்த
கழுநீர் மலர் இவள் யார் அதன்-கண் மருவி பிரியா
கொழு நீர் நற பருகும் பெரு நீர்மை அளி குலமே
மேல்
*13.9. ஆயத்து உய்த்தல்

#124
கொழும் தாரகை முகை கொண்டல் அம் பாசடை விண் மடுவில்
எழுந்து ஆர் மதி கமலம் எழில் தந்து என இ பிறப்பில்
அழுந்தாவகை எனை ஆண்டவன் சிற்றம்பலம் அனையாய்
செழும் தாது அவிழ் பொழில் ஆயத்து சேர்க திரு தகவே
மேல்
*13.10. தோழி வந்து கூடல்

#125
பொன் அனையான் தில்லை பொங்கு அரவம் புன் சடை மிடைந்த
மின் அனையான் அருள் மேவலர் போல் மெல் விரல் வருந்த
மெல் நனை ஆய் மறியே பறியேல் வெறி ஆர் மலர்கள்
இன்னன யான் கொணர்ந்தேன் மணம் தாழ் குழற்கு ஏய்வனவே
மேல்
*13.11. ஆடிடம் புகுதல்

#126
அறுகால் நிறை மலர் ஐம்பால் நிறை அணிந்தேன் அணி ஆர்
துறு கான் மலர் தொத்து தோகை தொல் ஆயம் மெல்ல புகுக
சிறு கால் மருங்குல் வருந்தாவகை மிக என் சிரத்தின்
உறு-கால் பிறர்க்கு அரியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே
மேல்
*13.12. தனிகண்டு உரைத்தல்

#127
தழங்கும் அருவி எம் சீறூர் பெரும இது மதுவும்
கிழங்கும் அருந்தி இருந்து எம்மோடு இன்று கிளர்ந்து குன்றர்
முழங்கும் குரவை இரவில் கண்டு ஏகுக முத்தன் முத்தி
வழங்கும் பிரான் எரியாடி தென் தில்லை மணி நகர்க்கே
மேல்
*13.13. பருவங் கூறி வரவு விலக்கல்

#128
தள்ளி மணி சந்தம் உந்தி தறுகண் கரி மருப்பு
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலை சிலம்பா
வெள்ளி மலை அன்ன மால் விடையோன் புலியூர் விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வன முலையே
மேல்
*13.14. வரைவு உடம்படாது மிகுத்துக் கூறல்

#129
மாடம் செய் பொன் நகரும் நிகர் இல்லை இ மாதர்க்கு என்ன
பீடம் செய் தாமரையோன் பெற்ற பிள்ளையை உள்ளலரை
கீடம் செய்து என் பிறப்பு கெட தில்லை நின்றோன் கயிலை
கூடம் செய் சாரல் கொடிச்சி என்றோ நின்று கூறுவதே
மேல்
*13.15. உண்மை கூறி வரைவு கடாதல்

#130
வேய் தந்த வெண் முத்தம் சிந்து பைம் கார் வரை மீன் பரப்பி
சேய் தந்த வானகம் மானும் சிலம்ப தன் சேவடிக்கே
ஆய் தந்த அன்பு தந்து ஆட்கொண்ட அம்பலவன் மலையில்
தாய் தந்தை கானவர் ஏனல் எம் காவல் இ தாழ்வரையே
மேல்
*13.16. வருத்தங் கூறி வரைவு கடாதல்

#131
மன்னும் திரு வருந்தும் வரையாவிடின் நீர் வரைவு என்று
உன்னும் அதற்கு தளர்ந்து ஒளி வாடுதிர் உம்பர் எலாம்
பன்னும் புகழ் பரமன் பரஞ்சோதி சிற்றம்பலத்தான்
பொன் அம் கழல் வழுத்தார் புலன் என்ன புலம்புவனே
மேல்
*13.17. தாய் அச்சங்கூறி வரைவு கடாதல்

#132
பனி துண்டம் சூடும் படர் சடை அம்பலவன் உலகம்
தனித்து உண்டவன் தொழும் தாளோன் கயிலை பயில் சிலம்பா
கனி தொண்டை வாய்ச்சி கதிர் முலை பாரிப்பு கண்டு அழிவுற்று
இனி கண்டிலம் பற்று சிற்றிடைக்கு என்று அஞ்சும் எம் அனையே
மேல்
*13.18. இற்செறி அறிவித்து வரைவு கடாதல்

#133
ஈ விளையாட நற விளைவு ஓர்ந்து எமர் மால்பு இயற்றும்
வேய் விளையாடும் வெற்பா உற்று நோக்கி எம் மெல்_இயலை
போய் விளையாடல் என்றாள் அன்னை அம்பலத்தான் புரத்தில்
தீ விளையாட நின்று ஏ விளையாடி திருமலைக்கே
மேல்
*13.19. தமர் நினைவு உரைத்து வரைவு கடாதல்

#134
சுற்றும் சடை கற்றை சிற்றம்பலவன் தொழாது தொல் சீர்
கற்றும் அறியலரின் சிலம்பா இடை நைவது கண்டு
எற்றும் திரையின் அமிர்தை இனி தமர் இற்செறிப்பார்
மற்றும் சிலபல சீறூர் பகர் பெருவார்த்தைகளே
மேல்
*13.20. எதிர்கோள் கூறி வரைவு கடாதல்

#135
வழியும் அது அன்னை என்னின் மகிழும் வந்து எந்தையும் நின்
மொழியின் வழிநிற்கும் சுற்றம் முன்னே வயம் அம்பலத்து
குழி உம்பர் ஏத்தும் எம் கூத்தன் குற்றாலம் முற்றும் அறிய
கெழி உம்மவே பணை தோள் பல என்னோ கிளக்கின்றதே
மேல்
*13.21. ஏறுகோள் கூறி வரைவு கடாதல்

#136
படை ஆர் கரும்_கண்ணி வண்ண பயோதர பாரமும் நுண்
இடையார் மெலிவும் கண்டு அண்டர்கள் ஈர் முல்லை வேலி எம் ஊர்
விடை ஆர் மருப்பு திருத்திவிட்டார் வியன் தென் புலியூர்
உடையார் கடவி வருவது போலும் உருவினதே
மேல்
*13.22. அயல் உரை உரைத்து வரைவு கடாதல்

#137
உரு பனை அன்ன கை குன்று ஒன்று உரித்து உரவு ஊர் எரித்த
நெருப்பனை அம்பலத்து ஆதியை உம்பர் சென்று ஏத்தி நிற்கும்
திரு பனையூர் அனையாளை பொன் நாளை புனைதல் செப்பி
பொருப்பனை முன் நின்று என்னோ வினையேன் யான் புகல்வதுவே
மேல்
*13.23. தினை முதிர்வு வரைவு கடாதல்

#138
மாது இடம் கொண்டு அம்பலத்து நின்றோன் வட வான் கயிலை
போது இடங்கொண்ட பொன் வேங்கை தினை புனம் கொய்க என்று
தாதிடம் கொண்டு பொன் வீசி தன் கள் வாய் சொரிய நின்று
சோதிடம் கொண்டு இது எம்மை கெடுவித்தது தூ_மொழியே
மேல்
*13.24. பகல் வரல் விலக்கி வரைவு கடாதல்

#139
வடிவு ஆர் வயல் தில்லையோன் மலயத்து-நின்றும் வரு தேன்
கடிவார் களி வண்டு நின்று அலர் தூற்ற பெருங்கணியார்
நொடிவார் நமக்கு இனி நோதக யான் உமக்கு என் உரைக்கேன்
தடிவார் தினை எமர் காவேம் பெரும இ தண் புனமே
மேல்
*13.25. தினையடு வெறுத்து வரைவு கடாதல்

#140
நினைவித்து தன்னை என் நெஞ்சத்து இருந்து அம்பலத்து நின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலை பொருப்பன் விருப்பின்
தினை வித்தி காத்து சிறந்து நின்றேமுக்கு சென்றுசென்று
வினை வித்தி காத்து விளைவு உண்டதாகி விளைந்ததுவே
மேல்
*13.26. வேங்கையடு வெறுத்து வரைவு கடாதல்

#141
கனை கடல் செய்த நஞ்சு உண்டு கண்டார்க்கு அம்பலத்து அமிழ்தாய்
வினை கெட செய்தவன் விண் தோய் கயிலை மயில் அனையாய்
நனை கெட செய்தனம் ஆயின் நமை கெட செய்திடுவான்
தினை கெட செய்திடுமாறும் உண்டோ இ திரு கணியே
மேல்
*13.27. இரக்கமுற்று வரைவு கடாதல்

#142
வழுவா இயல் எம் மலையர் விதைப்ப மற்று யாம் வளர்த்த
கொழு வார் தினையின் குழாங்கள் எல்லாம் எம் குழாம் வணங்கும்
செழு வார் கழல் தில்லை சிற்றம்பலவரை சென்று நின்று
தொழுவார் வினை நிற்கிலே நிற்பதாவது இ தொல் புனத்தே
மேல்
*13.28. கொய்தமை கூறி வரைவு கடாதல்

#143
பொருப்பர்க்கு யாம் ஒன்று மாட்டோம் புகல புகல் எமக்கு ஆம்
விருப்பர்க்கு யாவர்க்கும் மேலவர்க்கு மேல் வரும் ஊர் எரித்த
நெருப்பர்க்கு நீடு அம்பலவருக்கு அன்பர் குலம் நிலத்து
கரு பற்று விட்டு என கொய்தற்றது இன்று இ கடி புனமே
மேல்
*13.29. பிரிவு அருமை கூறி வரைவு கடாதல்

#144
பரிவு செய்து ஆண்டு அம்பலத்து பயில்வோன் பரங்குன்றின்-வாய்
அருவி செய் தாழ் புனத்து ஐவனம் கொய்யவும் இ வனத்தே
பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்றும் பெற்றி
இருவி செய் தாளின் இருந்து இன்று காட்டும் இளம் கிளியே
மேல்
*13.30. மயிலொடு கூறி வரைவு கடாதல்

#145
கணியார் கருத்து இன்று முற்றிற்று யாம் சென்றும் கார் புனமே
மணி ஆர் பொழில்காள் மறத்திர் கண்டீர் மன்னும் அம்பலத்தோன்
அணி ஆர் கயிலை மயில்காள் அயில் வேல் ஒருவர் வந்தால்
துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லு-மினே
மேல்
*13.31. வறும்புனம் கண்டு வருந்தல்

#146
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே
இது எனில் என் இன்று இருக்கின்றவாறு எம் இரும் பொழிலே
எது நுமக்கு எய்தியது என் உற்றனிர் அறை ஈண்டு அருவி
மதுவினில் கைப்பு வைத்தால் ஒத்தவா மற்று இ வான் புனமே
மேல்
*13.32. பதி நோக்கி வருந்தல்

#147
ஆனந்த மா கடல் ஆடு சிற்றம்பலம் அன்ன பொன்னின்
தேன் உந்து மா மலை சீறூர் இது செய்யலாவது இல்லை
வான் உந்தும் மா மதி வேண்டி அழும் மழ போலும் மன்னோ
நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நல் நெஞ்சமே
மேல்

* பதினான்காம் அதிகாரம்

*14 இரவுக் குறி
*14.1. இரவுக் குறி வேண்டல்

#148
மருந்து நம் அல்லல் பிறவி பிணிக்கு அம்பலத்து அமிர்தாய்
இருந்தனர் குன்றின்-நின்று ஏங்கும் அருவி சென்று ஏர் திகழ
பொருந்தின மேகம் புதைந்து இருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தினன் யான் உங்கள் சீறூர் அதனுக்கு வெள்_வளையே
மேல்
*14.2. வழியருமை கூறி மறுத்தல்

#149
விசும்பினுக்கு ஏணி நெறி அன்ன சில் நெறி மேல் மழை தூங்கு
அசும்பினில் துன்னி அளை நுழைந்தால் ஒக்கும் ஐய மெய்யே
இசும்பினில் சிந்தைக்கும் ஏறற்கு அரிது எழில் அம்பலத்து
பசும் பனி கோடு மிலைந்தான் மலயத்து எம் வாழ்பதியே
மேல்
*14.3. நின்று நெஞ்சுடைதல்

#150
மாற்றேன் என வந்த காலனை ஓலமிட அடர்த்த
கோல் தேன் குளிர் தில்லை கூத்தன் கொடும் குன்றின் நீள் குடுமி
மேல் தேன் விரும்பும் முடவனை போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீ வைத்த அன்பினுக்கே
மேல்
*14.4. இரவுக்குறி நேர்தல்

#151
கூளி நிரைக்க நின்று அம்பலத்து ஆடி குறை கழல் கீழ்
தூளி நிறைத்த சுடர் முடியோய் இவள் தோள் நசையால்
ஆளி நிரைத்து அடல் ஆனைகள் தேரும் இரவில் வந்து
மீளி உரைத்தி வினையேன் உரைப்பது என் மெல்_இயற்கே
மேல்
*14.5. உட்கோள் வினாதல்

#152
வரை அன்று ஒருகால் இரு கால் வளைய நிமிர்த்து வட்கார்
நிரை அன்று அழல் எழ எய்து நின்றோன் தில்லை அன்ன நின் ஊர்
விரை என்ன மெல் நிழல் என்ன வெறியுறு தாது இவர் போது
உரை என்னவோ சிலம்பா நலம் பாவி ஒளிர்வனவே
மேல்
*14.6. உட்கொண்டு வினாதல்

#153
செம் மலர் ஆயிரம் தூய் கரு மால் திரு கண் அணியும்
மொய் மலர் ஈர்ம் கழல் அம்பலத்தோன் மன்னு தென் மலயத்து
எ மலர் சூடி நின்று எ சாந்து அணிந்து என்ன நல் நிழல்-வாய்
அம் மலர் வாள் கண் நல்லாய் எல்லி-வாய் நுமர் ஆடுவதே
மேல்
*14.7. குறியிடங்கூறல்

#154
பனை வளர் கை மா படாத்து அம்பலத்து அரன் பாதம் விண்ணோர்
புனை வளர் சாரல் பொதியின் மலை பொலி சந்து அணிந்து
சுனை வளர் காவிகள் சூடி பைம் தோகை துயில் பயிலும்
சினை வளர் வேங்கைகள் யாங்கள் நின்று ஆடும் செழும் பொழிலே
மேல்
*14.8. இரவுக் குறி ஏற்பித்தல்

#155
மல வன் குரம்பையை மாற்றி அ மால் முதல் வானர்க்கு அப்பால்
செலவு அன்பர்க்கு ஒக்கும் சிவன் தில்லை கானலில் சீர் பெடையோடு
அலவன் பயில்வது கண்டு அஞர் கூர்ந்து அயில் வேல் உரவோன்
செல அந்தி-வாய் கண்டனன் என்னதாம்-கொல் மன் சேர் துயிலே
மேல்
*14.9. இரவரவு உரைத்தல்

#156
மோட்டு அம் கதிர் முலை பங்கு உடை தில்லை முன்னோன் கழற்கே
கோட்டம் தரும் நம் குரு முடி வெற்பன் மழை குழுமி
நாட்டம் புதைத்து அன்ன நள்ளிருள் நாகம் நடுங்க சிங்கம்
வேட்டம் திரி சரிவாய் வருவான் சொல்லு மெல்_இயலே
மேல்
*14.10. ஏதங்கூறி மறுத்தல்

#157
செழும் கார் முழவு அதிர் சிற்றம்பலத்து பெரும் திருமால்
கொழும் கான் மலர் இட கூத்து அயர்வோன் கழல் ஏத்தலர் போல்
முழங்கு ஆர் அரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள்-வாய்
வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலையே
மேல்
*14.11. குறை நேர்தல்

#158
ஓங்கும் ஒரு விடம் உண்டு அம்பலத்து உம்பர் உய்ய அன்று
தாங்கும் ஒருவன் தட வரை-வாய் தழங்கும் அருவி
வீங்கும் சுனை புனல் வீழ்ந்து அன்று அழுங்க பிடித்து எடுத்து
வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே
மேல்
*14.12. குறை நேர்ந்தமை கூறல்

#159
ஏனல் பசும் கதிர் என்றூழ்க்கு அழிய எழிலி உன்னி
கான குறவர்கள் கம்பலை செய்யும் வம்பு ஆர் சிலம்பா
யான் இற்றை யாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்று சென்றேன்
தேன் நக்க கொன்றையன் தில்லை உறார் செல்லும் செல்லல்களே
மேல்
*14.13. வரவுணர்ந்து உரைத்தல்

#160
முன்னும் ஒருவர் இரும் பொழில் மூன்றற்கு முற்றும் இற்றால்
பின்னும் ஒருவர் சிற்றம்பலத்தார் தரும் பேர் அருள் போல்
துன்னும் ஒர் இன்பம் என்று ஓகை தம் தோகைக்கு சொல்லுவ போல்
மன்னும் அரவத்தவாய் துயில் பேரும் மயில் இனமே
மேல்
*14.14. தாய் துயில் அறிதல்

#161
கூடார் அரண் எரி கூட கொடும் சிலை கொண்ட அண்டன்
சேடு ஆர் மதில் மல்லல் தில்லை அன்னாய் சிறு கண் பெரு வெண்
கோடு ஆர் கரி குரு மா மணி ஊசலை கோப்பு அழித்து
தோடு ஆர் மது மலர் நாகத்தை நூக்கும் நம் சூழ் பொழிற்கே
மேல்
*14.15. துயிலெடுத்துச் சேறல்

#162
விண்ணுக்கு மேல் வியன் பாதல கீழ் விரி நீர் உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்து தென் தில்லை நின்றோன் மிடற்றின்
வண்ண குவளை மலர்கின்றன சின வாள் மிளிர் நின்
கண் ஒக்குமேல் கண்டு காண் வண்டு வாழும் கரும்_குழலே
மேல்
*14.16. இடத்துய்த்து நீங்கல்

#163
நந்தீ வரம் என்னும் நாரணன் நாள்_மலர் கண்ணிற்கு எஃகம்
தந்து ஈ வரன் புலியூர் அனையாய் தடம் கண் கடந்த
இந்தீவரம் இவை காண் நின் இருள் சேர் குழற்கு எழில் சேர்
சந்து ஈ வர முறியும் வெறி வீயும் தருகுவனே
மேல்
*14.17. தளர்வகன்று உரைத்தல்

#164
காமரை வென்ற கண்ணோன் தில்லை பல் கதிரோன் அடைத்த
தாமரை இல்லின் இதழ் கதவம் திறந்தோ தமியே
பாம் அரை மேகலை பற்றி சிலம்பு ஒதுக்கி பையவே
நாம் அரையாமத்து என்னோ வந்து வைகி நயந்ததுவே
மேல்
*14.18. மருங்கணைதல்

#165
அகிலின் புகை விம்மி ஆய் மலர் வேய்ந்து அஞ்சனம் எழுத
தகிலும் தனி வடம் பூட்ட தகாள் சங்கரன் புலியூர்
இகலும் அவரின் தளரும் இ தேம்பல் இடை ஞெமிய
புகிலும் மிக இங்ஙனே இறுமாக்கும் புணர் முலையே
மேல்
*14.19. முகங்கொண்டு மகிழ்தல்

#166
அழுந்தேன் நரகத்து யான் என்று இருப்ப வந்து ஆண்டுகொண்ட
செழும் தேன் திகழ் பொழில் தில்லை புறவில் செறு அகத்த
கொழும் தேன் மலர் வாய் குமுதம் இவள் யான் குரூஉ சுடர் கொண்டு
எழுந்து ஆங்கு அது மலர்த்தும் உயர் வானத்து இள மதியே
மேல்
*14.20. பள்ளியிடத்து உய்த்தல்

#167
சுரும்பு உறு நீலம் கொய்யல் தமி நின்று துயில் பயின்மோ
அரும்பெறல் தோழியொடு ஆயத்து நாப்பண் அமரர் ஒன்னார்
இரும்பு உறு மா மதில் பொன் இஞ்சி வெள்ளி புரிசை அன்று ஓர்
துரும்பு உற செற்ற கொற்றத்து எம்பிரான் தில்லை சூழ் பொழிற்கே
மேல்
*14.21. வரவு விலக்கல்

#168
நல் பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லை அன்ன
வில் பகைத்து ஓங்கும் புருவத்து இவளின் மெய்யே எளிதே
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற
கற்பகச்சோலை கதுவும் கல் நாட இ கல் அதரே
மேல்
*14.22. ஆற்றாது உரைத்தல்

#169
பை வாய் அரவு அரை அம்பலத்து எம்பரன் பைம் கயிலை
செ வாய் கரும் கண் பெரும் பணை தோள் சிற்றிடை கொடியை
மொய் வார் கமலத்து முற்றிழை இன்று என் முன்னை தவத்தால்
இவ்வாறு இருக்கும் என்றே நிற்பது என்றும் என் இன் உயிரே
மேல்
*14.23. இரக்கங்கூறி வரைவு கடாதல்

#170
பை வாய் அரவும் மறியும் மழுவும் பயில் மலர் கை
மொய் வார் சடை முடி முன்னவன் தில்லையின் முன்னின-கால்
செ வாய் கரு வயிர் சேர்த்து இ சிறியாள் பெரு மலர் கண்
மை வார் குவளை விடும் மன்ன நீள் முத்த மாலைகளே
மேல்
*14.24. நிலவு வெளிப்பட வருந்தல்

#171
நாகம் தொழ எழில் அம்பலம் நண்ணி நடம் நவில்வோன்
நாகம் இது மதியே மதியே நவில் வேல் கை எங்கள்
நாகம் வர எதிர் நாம் கொள்ளும் நள்ளிருள்-வாய் நற ஆர்
நாகம் மலி பொழில்-வாய் எழில் வாய்த்த நின் நாயகமே
மேல்
*14.25. அல்லகுறி அறிவித்தல்

#172
மின் அங்கு அலரும் சடைமுடியோன் வியன் தில்லை அன்னாய்
என் அங்கு அலமரல் எய்தியதோ எழில் முத்தம் தொத்தி
பொன் அங்கு அலர் புன்னை சேக்கையின்-வாய் புலம்புற்று முற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலாது அழுங்கினவே
மேல்
*14.26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்

#173
சோத்து உன் அடியம் என்றோரை குழுமி தொல் வானவர் சூழ்ந்து
ஏத்தும்படி நிற்பவன் தில்லை அன்னாள் இவள் துவள
ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து அவம் நீ
பேர்த்தும் இரைப்பு ஒழியாய் பழி நோக்காய் பெரும் கடலே
மேல்
*14.27. காமம் மிக்க கழிபடர் கிளவி

#174
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ்
போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள்
ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர்ந்துறைவர்க்கு இவளோ
தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே
மேல்
*14.28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி

#175
இன் நறவு ஆர் பொழில் தில்லை நகர் இறை சீர் விழவில்
பல் நிற மாலை தொகை பகலாம் பல் விளக்கு இருளின்
துன் அற உய்க்கும் இல்லோரும் துயிலின் துறைவர் மிக்க
கொன் நிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே
மேல்
*14.29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி

#176
தார் உறு கொன்றையன் தில்லை சடைமுடியோன் கயிலை
நீர் உறு கான்யாறு அளவில நீந்தி வந்தால் நினது
போர் உறு வேல் வய பொங்கு உரும் அஞ்சுக மஞ்சு இவரும்
சூர் உறு சோலையின்-வாய் வரற்பாற்றன்று தூங்கு இருளே
மேல்
*14.30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி

#177
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல்லம் கழி சூழ்
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர்
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும்
மண்டலமே பணியாய் தமியேற்கு ஒரு வாசகமே
மேல்
*14.31. நிலைகண்டு உரைத்தல்

#178
பற்று ஒன்று இலார் பற்றும் தில்லை பரன் பரங்குன்றில் நின்ற
புற்று ஒன்று அரவன் புதல்வன் என நீ புகுந்து நின்றால்
மல் துன்று மா மலர் இட்டு உன்னை வாழ்த்தி வந்தித்தல் அன்றி
மற்றொன்று சிந்திப்பரேல் வல்லளோ மங்கை வாழ் வகையே
மேல்
*14.32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்

#179
பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர்
ஓங்கு அணை மேவி புரண்டு விழுந்து எழுந்து ஓலமிட்டு
தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே
ஆங்கு அணைந்தார் நின்னையும் உளரோ சென்று அகன்றவரே
மேல்
*14.33. அலர் அறிவுறுத்தல்

#180
அலர் ஆயிரம் தந்து வந்தித்து மால் ஆயிரம் கரத்தால்
அலர் ஆர் கழல் வழிபாடுசெய்தாற்கு அளவில் ஒளிகள்
அலராவிருக்கும் படை கொடுத்தோன் தில்லையான் அருள் போன்று
அலராய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு ஐய மெய் அருளே
மேல்

* பதினைந்தாம் அதிகாரம்

*15 ஒருவழித் தணத்தல்
*15.1. அகன்று அணைவு கூறல்

#181
புகழும் பழியும் பெருக்கின் பெருகும் பெருகி நின்று
நிகழும் நிகழா நிகழ்த்தின் அல்லால் இது நீ நினைப்பின்
அகழும் மதிலும் அணி தில்லையோன் அடி போது சென்னி
திகழும் அவர் செல்லல் போல் இல்லையாம் பழி சில்_மொழிக்கே
மேல்
*15.2. கடலொடு வரவு கேட்டல்

#182
ஆரம் பரந்து திரை பொரு நீர் முகில் மீன் பரப்பி
சீர் அம்பரத்தின் திகழ்ந்து ஒளி தோன்றும் துறைவர் சென்றார்
போரும் பரிசு புகன்றனரோ புலியூர் புனிதன்
சீர் அம்பர் சுற்றி எற்றி சிறந்து ஆர்க்கும் செறி கடலே
மேல்
*15.3. கடலொடு புலத்தல்

#183
பாண் நிகர் வண்டினம் பாட பைம்பொன் தரு வெண் கிழி தம்
சேண் நிகர் காவின் வழங்கும் புன்னை துறை சேர்ப்பர் திங்கள்
வாள் நிகர் வெள் வளை கொண்டு அகன்றார் திறம் வாய்திறவாய்
பூண் நிகர் வாள் அரவன் புலியூர் சுற்றும் போர் கடலே
மேல்
*15.4. அன்னமோடு ஆய்தல்

#184
பகன் தாமரை கண் கெட கடந்தோன் புலியூர் பழனத்து
அகன் தாமரை அன்னமே வண்டு நீல மணி அணிந்து
முகன் தாழ் குழை செம்பொன் முத்து அணி புன்னை இன்னும் உரையாது
அகன்றார் அகன்றே ஒழிவர்-கொல்லோ நம் அகன் துறையே
மேல்
*15.5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்

#185
உள்ளும் உருகி உரோமம் சிலிர்ப்ப உடையவன் ஆட்
கொள்ளுமவரில் ஓர் கூட்டம் தந்தான் குனிக்கும் புலியூர்
விள்ளும் பரிசு சென்றார் வியன் தேர் வழி தூரல் கண்டாய்
புள்ளும் திரையும் பொர சங்கம் ஆர்க்கும் பொரு கடலே
மேல்
*15.6. கூடல் இழைத்தல்

#186
ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார் வருக என்று
ஆழி திருத்தி சுழி கணக்கு ஓதி நையாமல் ஐய
வாழி திருத்தி தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையே
மேல்
*15.7. சுடரொடு புலம்பல்

#187
கார் தரங்கம் திரை தோணி சுறா கடல் மீனெறிவோர்
போர் தரு அங்கம் துறை மானும் துறைவர்-தம் போக்கும் மிக்க
தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும்
ஆர்த்தர் அங்கம் செய்யுமால் உய்யுமாறு என்-கொல் ஆழ் சுடரே
மேல்
*15.8. பொழுது கண்டு மயங்கல்

#188
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர் பற்று அற்றவர்க்கு
புகலோன் புகுநர்க்கு போக்கு அரியோன் எவரும் புகல
தகலோன் பயில் தில்லை பைம் பொழில் சேக்கைகள் நோக்கினவால்
அகல் ஓங்கு இரும் கழி-வாய் கொழு மீன் உண்ட அன்னங்களே
மேல்
*15.9. பறவையடு வருந்தல்

#189
பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்து இலங்கி
மின்னும் சடையோன் புலியூர் விரவாதவரின் உள்நோய்
இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இரும் கழி-வாய்
மன்னும் பகலே மகிழ்ந்து இரை தேரும் வண்டானங்களே
மேல்
*15.10. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்

#190
கரும் கழி காதல் பைம் கானலில் தில்லை எம் கண்டர் விண்டார்
ஒருங்கு அழி காதர மூவெயில் செற்ற ஒற்றை சிலை சூழ்ந்து
அரும் கழி காதம் அகலும் என்றூழ் என்று அலந்து கண்ணீர்
வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர் கைகளே
மேல்
*15.11 அன்னமோடு அழிதல்

#191
மூவல் தழீஇய அருள் முதலோன் தில்லை செல்வன் முந்நீர்
நாவல் தழீஇய இ நானிலம் துஞ்சும் நயந்த இன்ப
சேவல் தழீஇ சென்று தான் துஞ்சும் யான் துயிலா செயிர் எம்
காவல் தழீஇயவர்க்கு ஓதாது அளிய களி அன்னமே
மேல்
*15.12. வரவு உணர்ந்து உரைத்தல்

#192
நில்லா வளை நெஞ்சம் நெக்குருகும் நெடும் கண் துயில
கல்லா கதிர் முத்தம் காற்றும் என கட்டுரைக்க தில்லை
தொல்லோன் அருள்கள் இல்லாரின் சென்றார் சென்ற செல்லல் கண்டாய்
எல் ஆர் மதியே இது நின்னை யான் இன்று இரக்கின்றதே
மேல்
*15.13. வருத்தமிகுதி கூறல்

#193
வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய்
தளரும் தட வரை தண் சிலம்பா தனது அங்கம் எங்கும்
விளரும் விழும் எழும் விம்மும் மெலியும் வெண் மா மதி நின்று
ஒளிரும் சடைமுடியோன் புலியூர் அன்ன ஒள்_நுதலே
மேல்

* பதினாறாம் அதிகாரம் 

*16 உடன் போக்கு
*16.1. பருவங் கூறல்

#194
ஒரு ஆகம் இரண்டு எழிலாய் ஒளிர்வோன் தில்லை ஒள்_நுதல் அங்
கராகம் பயின்று அமிழ்தம் பொதிந்து ஈர்ம் சுணங்கு ஆடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இ பரிசே பணைத்த
இராகம் கண்டால் வள்ளலே இல்லையே எமர் எண்ணுவதே
மேல்
*16.2. மகட் பேச்சுரைத்தல்

#195
மணி அக்கு அணியும் அரன் நஞ்சம் அஞ்சி மறுகி விண்ணோர்
பணிய கருணை தரும் பரன் தில்லை அன்னாள் திறத்து
துணிய கருதுவது இன்றே துணி துறைவா நிறை பொன்
அணிய கருதுகின்றார் பலர் மேன்மேல் அயலவரே
மேல்
*16.3. பொன்னணி உரைத்தல்

#196
பாப்பணியோன் தில்லை பல் பூ மருவு சில்_ஓதியை நல்
காப்பு அணிந்தார் பொன் அணிவார் இனி கமழ் பூம் துறைவ
கோப்பு அணி வான் தோய் கொடி முன்றில் நின்று இவை ஏர் குழுமி
மா பணிலங்கள் முழுங்க தழங்கும் மண முரசே
மேல்
*16.4. அருவிலை உரைத்தல்

#197
எலும்பால் அணி இறை அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர்
நலம் பாவிய முற்றும் நல்கினும் கல் வரை நாடர் அம்ம
சிலம்பா வடி_கண்ணி சிற்றிடைக்கே விலை செப்பல் ஒட்டார்
கலம் பாவிய முலையின் விலை என் நீ கருதுவதே
மேல்
*16.5. அருமை கேட்டழிதல்

#198
விசும்பு உற்ற திங்கட்கு அழும் மழ போன்று இனி விம்மிவிம்மி
அசும்பு உற்ற கண்ணோடு அலறாய் கிடந்து அரன் தில்லை அன்னாள்
குயம் புற்று அரவு இடை கூர் எயிற்று ஊறல் குழல் மொழியின்
நயம் பற்றி நின்று நடுங்கி தளர்கின்ற நல் நெஞ்சமே
மேல்
*16.6. தளர்வறிந்துரைத்தல்

#199
மை தயங்கும் திரை வாரியை நோக்கி மடல் அவிழ் பூம்
கைதை அம் கானலை நோக்கி கண்ணீர் கொண்டு எம் கண்டர் தில்லை
பொய் தயங்கும் நுண் மருங்குல் நல்லாரை எல்லாம் புல்லினாள்
பை தயங்கும் அரவம் புரையும் அல்குல் பைம்_தொடியே
மேல்
*16.7. குறிப்புரைத்தல்

#200
மாவை வந்து ஆண்ட மெல்நோக்கி-தன் பங்கர் வண் தில்லை மல்லல்
கோவை வந்து ஆண்ட செ வாய் கரும்_கண்ணி குறிப்பு அறியேன்
பூவை தந்தாள் பொன் அம் பந்து தந்தாள் என்னை புல்லிக்கொண்டு
பாவை தந்தாள் பைம் கிளி அளித்தாள் இன்று என் பைம்_தொடியே
மேல்
*16.8. அருமை உரைத்தல்

#201
மெல்_இயல் கொங்கை பெரிய மின் நேர் இடை மெல் அடி பூ
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம்
சொல்லிய சீர் சுடர் திங்கள் அம் கண்ணி தொல்லோன் புலியூர்
அல்லி அம் கோதை நல்லாய் எல்லை சேய்த்து எம் அகல் நகரே
மேல்
*16.9. ஆதரங் கூறல்

#202
பிணையும் கலையும் வன் பேய்த்தேரினை பெரு நீர் நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லை தண் பூம்
பணையும் தடமும் அன்றே நின்னொடு ஏகின் எம் பைம்_தொடிக்கே
மேல்
*16.10. இறந்துபாடு உரைத்தல்

#203
இங்கு அயல் என் நீ பணிக்கின்றது ஏந்தல் இணைப்பது இல்லா
கங்கை அம் செம் சடை கண் நுதல் அண்ணல் கடி கொள் தில்லை
பங்கய பாசடை பாய் தடம் நீ அ படர் தடத்து
செங்கயல் அன்றே கருங்கயல் கண் இ திரு நுதலே
மேல்
*16.11. கற்பு நலன் உரைத்தல்

#204
தாயின் சிறந்தன்று நாண் தையலாருக்கு அ நாண் தகை சால்
வேயின் சிறந்த மென் தோளி திண் கற்பின் விழுமிதன்று ஈங்
கோயில் சிறந்து சிற்றம்பலத்து ஆடும் எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதி_நுதலே
மேல்
*16.12. துணிந்தமை கூறல்

#205
குற பாவை நின் குழல் வேங்கை அம் போதொடு கோங்கம் விராய்
நற பாடலம் புனைவார் நினைவார் தம்பிரான் புலியூர்
மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும் துன்ன தகும் பெற்றியரே
மேல்
*16.13. துணிவொடு வினாவல்

#206
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும்
அழல் தலை வெம் பரற்று என்பர் என்னோ தில்லை அம்பலத்தான்
கழல் தலை வைத்து கை போதுகள் கூப்ப கல்லாதவர் போல்
குழல் தலை சொல்லி செல்ல குறிப்பு ஆகும் நம் கொற்றவர்க்கே
மேல்
*16.14. போக்கு அறிவித்தல்

#207
காயமும் ஆவியும் நீங்கள் சிற்றம்பலவன் கயிலை
சீயமும் மாவும் வெரீஇ வரல் என்பல் செறி திரை நீர்
தேயமும் யாவும் பெறினும் கொடார் நமர் இன்ன செப்பில்
தோயமும் நாடும் இல்லா சுரம் போக்கு துணிவித்தவே
மேல்
*16.15. நாணிழந்து வருந்தல்

#208
மல் பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னொடும் வளர்ந்த
பொற்பு ஆர் திரு நாண் பொருப்பர் விருப்பு புகுந்து நுந்த
கற்பு ஆர் கடும் கால் கலக்கி பறித்து எறிய கழிக
இல்-பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே
மேல்
*16.16. துணிவெடுத்து உரைத்தல்

#209
கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை
நம்பன் சிவநகர் நல் தளிர் கல் சுரம் ஆகும் நம்பா
அம்பு அஞ்சி ஆவம் புக மிக நீண்டு அரி சிந்து கண்ணாள்
செம்பஞ்சியின் மிதிக்கின் பதைக்கும் மலர் சீறடிக்கே
மேல்
*16.17. குறியிடங் கூறல்

#210
முன்னோன் மணிகண்டம் ஒத்து அவன் அம்பலம் தம் முடி தாழ்த்து
உன்னாதவர் வினை போல் பரந்து ஓங்கும் எனது உயிரே
அன்னாள் அரும்பெறல் ஆவி அன்னாய் அருள் ஆசையினால்
பொன் ஆர் மணி மகிழ் பூ விழ யாம் விழை பொங்கு இருளே
மேல்
*16.18. அடியடு வழிநினைந்(து) அவன் உளம் வாடல்

#211
பனி சந்திரனொடு பாய் புனல் சூடும் பரன் புலியூர்
அனிச்சம் திகழும் அம் சீறடி ஆவ அழல் பழுத்த
கனி செம் திரள் அன்ன கல் கடம் போந்து கடக்கும் என்றால்
இனி சந்த மேகலையாட்கு என்-கொலாம் புகுந்து எய்துவதே
மேல்
*16.19. கொண்டு சென்று உய்த்தல்

#212
வைவந்த வேலவர் சூழ்வர தேர் வரும் வள்ளல் உள்ளம்
தெய்வம் தரும் இருள் தூங்கும் முழுதும் செழு மிடற்றின்
மை வந்த கோன் தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர் போல்
மொய் வந்த வாவி தெளியும் துயிலும் இ மூதெயிலே
மேல்
*16.20. ஒம்படுத் துரைத்தல்

#213
பறந்து இருந்து உம்பர் பதைப்ப படரும் புரம் கரப்ப
சிறந்து எரியாடி தென் தில்லை அன்னாள் திறத்து சிலம்பா
அறம் திருந்து உன் அருளும் பிறிதாயின் அரு மறையின்
திறம் திரிந்து ஆர்கலியும் முற்றும் வற்றும் இ சேண் நிலத்தே
மேல்
*16.21. வழிப்படுத்துரைத்தல்

#214
ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று
ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு
சேண் தில்லை மா நகர்-வாய் சென்று சேர்க திரு தகவே
மேல்
*16.22 மெல்லக் கொண்டேகல்

#215
பேண திருத்திய சீறடி மெல்ல செல் பேர் அரவம்
பூண திருத்திய பொங்கு ஒளியோன் புலியூர் புரையும்
மாண திருத்திய வான் பதி சேரும் இருமருங்கும்
காண திருத்திய போலும் முன்னா மன்னு கானங்களே
மேல்
*16.23. அடலெடுத்துரைத்தல்

#216
கொடி தேர் மறவர் சூழாம் வெம் கரி நிரை கூடின் என் கை
வடித்து ஏர் இலங்கு எஃகின் வாய்க்கு உதவா மன்னும் அம்பலத்தோன்
அடி தேரலர் என்ன அஞ்சுவன் நின் ஐயர் என்னின் மன்னும்
கடி தேர் குழல் மங்கை கண்டிடு இ விண் தோய் கன வரையே
மேல்
*16.24. அயர்வு அகற்றல்

#217
முன்னோன் அருள் முன்னும் உன்னா வினையின் முனகர் துன்னும்
இன்னா கடறு இது இ போழ்தே கடந்து இன்று காண்டும் சென்று
பொன் ஆர் அணி மணி மாளிகை தென் புலியூர் புகழ்வார்
தென்னா என உடையான் நடம் ஆடு சிற்றம்பலமே
மேல்
*16.25. நெறி விலக்கிக் கூறல்

#218
விடலை உற்றார் இல்லை வெம் முனை வேடர் தமியை மென் பூ
மடலை உற்று ஆர்_குழல் வாடினள் மன்னு சிற்றம்பலவர்க்கு
அடலை உற்றாரின் எறிப்பு ஒழிந்து ஆங்கு அருக்கன் சுருக்கி
கடலை உற்றான் கடப்பார் இல்லை இன்று இ கடும் சுரமே
மேல்
*16.26. கண்டவர் மகிழ்தல்

#219
அன்பு அணைத்து அம் சொல்லி பின் செல்லும் ஆடவன் நீடு அவன்-தன்
பின் பணைத்தோளி வரும் இ பெரும் சுரம் செல்வது அன்று
பொன் பணைத்து அன்ன இறை உறை தில்லை பொலி மலர் மேல்
நன் பணை தண் நறவு உண் அளி போன்று ஒளிர் நாடகமே
மேல்
*16.27. வழிவிளையாடல்

#220
கண்கள் தம்மால் பயன் கொண்டனம் கண்டு இனி காரிகை நின்
பண் கட மென் மொழி ஆர பருக வருக இன்னே
விண்கள்-தம் நாயகன் தில்லையில் மெல்_இயல் பங்கன் எம் கோன்
தண் கடம்பை தடம் போல் கடும் கானகம் தண்ணெனவே
மேல்
*16.28. நகரணிமை கூறல்

#221
மின் தங்கு இடையொடு நீ வியன் தில்லை சிற்றம்பலவர்
குன்றம் கடந்து சென்றால் நின்று தோன்றும் குரூஉ கமலம்
துன்று அம் கிடங்கும் துறைதுறை வள்ளை வெள்ளை நகையார்
சென்று அங்கு அடை தடமும் புடை சூழ்தரு சேண் நகரே
மேல்
*16.29. நகர் காட்டல்

#222
மின் போல் கொடி நெடு வான கடலுள் திரை விரிப்ப
பொன் போல் புரிசை வட வரை காட்ட பொலி புலியூர்
மன் போல் பிறை அணி மாளிகை சூலத்தவாய் மடவாய்
நின் போல் நடை அன்னம் துன்னி முன் தோன்றும் நல் நீள் நகரே
மேல்
*16.30. பதிபரிசுரைத்தல்

#223
செய் குன்று உவை இவை சீர் மலர் வாவி விசும்பு இயங்கி
நைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் அவை ஞாங்கர் எங்கும்
பொய் குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
எய் குன்ற வார் சிலை அம்பலவற்கு இடம் ஏந்து_இழையே
மேல்
*16.31. செவிலி தேடல்

#224
மயில் என பேர்ந்து இள வல்லியின் ஒல்கி மெல் மான் விழித்து
குயில் என பேசும் எம் குட்டன் எங்கு உற்றது என் நெஞ்சகத்தே
பயில் என பேர்ந்து அறியாதவன் தில்லை பல் பூம் குழலாய்
அயில் என பேரும் கண்ணாய் என்-கொலாம் இன்று அயர்கின்றதே
மேல்
*16.32. அறத்தொடு நிற்றல்

#225
ஆள் அரிக்கும் அரிதாய் தில்லை யாவருக்கும் எளிதாம்
தாளர் இ குன்றில் தன் பாவைக்கு மேவி தழல் திகழ் வேல்
கோள் அரிக்கு நிகர் அன்னார் ஒருவர் குரூஉ மலர் தார்
வாள் அரி_கண்ணி கொண்டாள் வண்டல் ஆயத்து எம் வாள்_நுதலே
மேல்
*16.33. கற்பு நிலைக்கு இரங்கல்

#226
வடுத்தான் வகிர் மலர்_கண்ணிக்கு தக்கின்று தக்கன் முத்தீ
கெடுத்தான் கெடல் இல் தொல்லோன் தில்லை பல் மலர் கேழ் கிளர
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கி தழீஇ மகிழ்வுற்று
எடுத்தாற்கு இனியனவே இனி யாவன எம் அனைக்கே
மேல்
*16.34. கவன்றுரைத்தல்

#227
முறுவல் அக்கால் தந்து வந்து என் முலை முழுவி தழுவி
சிறு வலக்காரங்கள் செய்த எல்லாம் முழுதும் சிதைய
தெறு வல காலனை செற்றவன் சிற்றம்பலம் சிந்தியார்
உறு வல கானகம் தான் படர்வான் ஆம் ஒளி_இழையே
மேல்
*16.35. அடிநினைந்திரங்கல்

#228
தாமே தமக்கு ஒப்பு மற்று இல்லவர் தில்லை தண் அனிச்ச
பூ மேல் மிதிக்கின் பதைத்து அடி பொங்கும் நங்காய் எரியும்
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய்
ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம் அனைக்கே
மேல்
*16.36. நற்றாய்க்கு உரைத்தல்

#229
தழுவின கை இறை சோரின் தமியம் என்றே தளர்வுற்று
அழுவினை செய்யும் நையா அம் சொல் பேதை அறிவு விண்ணோர்
குழுவினை உய்ய நஞ்சு உண்டு அம்பலத்து குனிக்கும் பிரான்
செழுவின தாள் பணியார் பிணியால் உற்று தேய்வித்ததே
மேல்
*16.37. நற்றாய் வருந்தல்

#230
யாழ் இயல் மென் மொழி வல் மன பேதை ஒர் ஏதிலன் பின்
தோழியை நீத்து என்னை முன்னே துறந்து துன்னார்கள் முன்னே
வாழி இ மூதூர் மறுக சென்றாள் அன்று மால் வணங்க
ஆழி தந்தான் அம்பலம் பணியாரின் அரும் சுரமே
மேல்
*16.38. கிளி மொழிக்கு இரங்கல்

#231
கொல் நுனை வேல் அம்பலவன் தொழாரின் குன்றம் கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா
என் அனை போயினள் யாண்டையள் என்னை பருந்து அடும் என்று
என் அனை போக்கு அன்றி கிள்ளை என் உள்ளத்தை ஈர்கின்றதே
மேல்
*16.39. சுடரோடு இரத்தல்

#232
பெற்றேனொடும் கிள்ளை வாட முதுக்குறை பெற்றி மிக்கு
நல் தேன்_மொழி அழல் கான் நடந்தாள் முகம் நான் அணுக
பெற்றேன் பிறவி பெறாமல் செய்தோன் தில்லை தேன் பிறங்கு
மல் தேன் மலரின் மலர்த்து இரந்தேன் சுடர் வானவனே
மேல்
*16.40. பருவம் நினைந்து கவறல்

#233
வை மலர் வாள் படை ஊரற்கு செய்யும் குற்றேவல் மற்று என்
மை மலர் வாள்_கண்ணி வல்லள்-கொல் ஆம் தில்லையான் மலை-வாய்
மொய் மலர் காந்தளை பாந்தள் என்று எண்ணி துண்ணென்று ஒளித்து
கை மலரால் கண்புதைத்து பதைக்கும் எம் கார்_மயிலே
மேல்
*16.41. நாடத் துணிதல்

#234
வேயின தோளி மெலியல் விண்ணோர் தக்கன் வேள்வியின்-வாய்
பாயின சீர்த்தியன் அம்பலத்தானை பழித்து மும்மை
தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம்
போயின எல்லை எல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே
மேல்
*16.42. கொடிக்குறி பார்த்தல்

#235
பணங்கள் அஞ்சு ஆலும் பரு அரவு ஆர்த்தவன் தில்லை அன்ன
மணம் கொள் அம் சாயலும் மன்னனும் இன்னே வர கரைந்தால்
உணங்கல் அஞ்சாது உண்ணலாம் ஒள் நிண பலி ஒக்குவல் மா
குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டை குல_கொடியே
மேல்
*16.43. சோதிடங் கேட்டல்

#236
முன்னும் கடு விடம் உண்ட தென் தில்லை முன்னோன் அருளால்
இன்னும் கடி இ கடி மனைக்கே மற்று யாம் அயர
மன்னும் கடி மலர்_கூந்தலை தான் பெறுமாறும் உண்டேல்
உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே
மேல்
*16.44. சுவடு கண்டறிதல்

#237
தெள் வன் புனல் சென்னியோன் அம்பலம் சிந்தியார் இனம் சேர்
முள் வன் பரல் முரம்பத்தின் முன் செய் வினையேன் எடுத்த
ஒள்வன் படை_கண்ணி சீறடி இங்கிவை உங்குவை அ
கள்வன் பகட்டு உரவோன் அடி என்று கருதுவனே
மேல்
*16.45. சுவடு கண்டிரங்கல்

#238
பால் ஒத்த நீற்று அம்பலவன் கழல் பணியார் பிணி வாய்
கோல தவிசின் மிதிக்கின் பதைத்து அடி கொப்புள் கொள்ளும்
வேல் ஒத்த வெம் பரல் கானத்தின் இன்று ஓர் விடலை பின் போம்
கால் ஒத்தன வினையேன் பெற்ற மாண்_இழை கால் மலரே
மேல்
*16.46. வேட்ட மாதரைக் கேட்டல்

#239
பேதை பருவம் பின் சென்றது முன்றில் எனை பிரிந்தால்
ஊதைக்கு அலமரும் வல்லி ஒப்பாள் முத்தன் தில்லை அன்னாள்
ஏதில் சுரத்து அயலானொடு இன்று ஏகினள் கண்டனையே
போதில் பொலியும் தொழில் புலி பல் குரல் பொன்_தொடியே
மேல்
*16.47. புறவொடு புலத்தல்

#240
புயல் அன்று அலர் சடை ஏற்றவன் தில்லை பொருப்பு அரசி
பயலன்-தனை பணியாதவர் போல் மிகு பாவம் செய்தேற்கு
அயலன் தமியன் அம் சொல் துணை வெம் சுரம் மாதர் சென்றால்
இயல் அன்று எனக்கிற்றிலை மற்று வாழி எழில் புறவே
மேல்
*16.48. குரவொடு வருந்தல்

#241
பாயும் விடையோன் புலியூர் அனைய என் பாவை முன்னே
காயும் கடத்திடை ஆடி கடப்பவும் கண்டு நின்று
வாயும் திறவாய் குழை எழில் வீச வண்டு ஓலுறுத்த
நீயும் நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள் குரவே
மேல்
*16.49. விரதியரை வினாவல்

#242
சுத்திய பொக்கணத்து என்பு அணி கட்டங்கம் சூழ் சடை வெண்
பொத்திய கோலத்தினீர் புலியூர் அம்பலவர்க்கு உற்ற
பத்தியர் போல பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர்
பித்தி தன் பின் வர முன் வருமோ ஓர் பெருந்தகையே
மேல்
*16.50. வேதியரை வினாவல்

#243
வெதிர் ஏய் கரத்து மென் தோல் ஏய் சுவல் வெள்ளை நூலின் கொண்மூ
அதிர் ஏய் மறையின் இவ்வாறு செல்வீர் தில்லை அம்பலத்து
கதிர் ஏய் சடையோன் கர மான் என ஒரு மான் மயில் போல்
எதிரே வருமே சுரமே வெறுப்ப ஒர் ஏந்தலோடே
மேல்
*16.51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்

#244
மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இ மேதகவே
பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்று
ஆண்டான் அரு வரை ஆளி அன்னானை கண்டேன் அயலே
தூண்டா விளக்கு அனையாய் என்னையோ அன்னை சொல்லியதே
மேல்
*16.52. வியந்துரைத்தல்

#245
பூம் கயிலாய பொருப்பன் திரு புலியூரது என்ன
தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன் கை மடுத்து கிடந்து அலற
ஆங்கு அயிலால் பணிகொண்டது திண் திறல் ஆண்தகையே
மேல்
*16.53. இயைபு எடுத்துரைத்தல்

#246
மின் தொத்து இடு கழல் நூபுரம் வெள்ளை செம்பட்டு மின்ன
ஒன்று ஒத்திட உடையாளொடு ஒன்றாம் புலியூரன் என்றே
நன்று ஒத்து எழிலை தொழ உற்றனம் என்னது ஓர் நன்மைதான்
குன்றத்திடை கண்டனம் அன்னை நீ சொன்ன கொள்கையரே
மேல்
*16.54. மீள உரைத்தல்

#247
மீள்வது செல்வது அன்று அன்னை இ வெங்கடத்து அ கடமா
கீள்வது செய்த கிழவோனொடும் கிளர் கெண்டை அன்ன
நீள்வது செய்த கண்ணாள் இ நெடும் சுரம் நீந்தி எம்மை
ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே
மேல்
*16.55. உலகியல்பு உரைத்தல்

#248
சுரும்பு இவர் சந்தும் தொடு கடல் முத்தும் வெண் சங்கும் எங்கும்
விரும்பினர்-பால் சென்று மெய்க்கு அணியாம் வியன் கங்கை என்னும்
பெரும் புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலம் அனைய
கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே
மேல்
*16.56. அழுங்கு தாய்க்கு உரைத்தல்

#249
ஆண்டு இல் எடுத்தவர் ஆம் இவர் தாம் அவர் அல்குவர் போய்
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய்
தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து
பாண்டில் எடுத்த பல் தாமரை கீழும் பழனங்களே
மேல்

* பதினேழாம் அதிகாரம்

*17 வரைவு முடுக்கம்
*17.1. வருத்த மிகுதி கூறி வரைவு கடாதல்

#250
எழும் குலை வாழையின் இன் கனி தின்று இள மந்தி அம் தண்
செழும் குலை வாழை நிழலில் துயில் சிலம்பா முனை மேல்
உழும் கொலை வேல் திரு சிற்றம்பலவரை உன்னலர் போல்
அழுங்கு உலை வேல் அன்ன கண்ணிக்கு என்னோ நின் அருள் வகையே
மேல்
*17.2. பெரும்பான்மை கூறி மறுத்தல்

#251
பரம் பயன் தன் அடியேனுக்கு பார் விசும்பு ஊடுருவி
வரம்பு அயன் மால் அறியா தில்லை வானவன் வானகம் சேர்
அரம்பையர்-தம் இடமோ அன்றி வேழத்தின் என்பு நட்ட
குரம்பையர்-தம் இடமோ இடம் தோன்றும் இ குன்றிடத்தே
மேல்
*17.3. உள்ளது கூறி வரைவு கூடாதல்

#252
சிறார் கவண் வாய்த்த மணியின் சிதை பெரும் தேன் இழுமென்று
இறால் கழிவுற்று எம் சிறு குடில் உந்தும் இடம் இது எந்தை
உறாவரை உற்றார் குறவர் பெற்றாளும் கொடிச்சி உம்பர்
பெறா அருள் அம்பலவன் மலை காத்தும் பெரும் புனமே
மேல்
*17.4. ஏதங்கூறி இரவரவு விலக்கல்

#253
கடம்-தொறும் வாரண வல்சியின் நாடி பல் சீயம் கங்குல்
இடம்-தொறும் பார்க்கும் இயவு ஒரு நீ எழில் வேலின் வந்தால்
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை
தொடர்ந்து ஒறும் துன்பு என்பதே அன்ப நின் அருள் தோன்றுவதே
மேல்
*17.5. பழிவரவுரைத்ததுப் பகல்வரவு விலக்கல்

#254
களிறு உற்ற செல்லல் களை-வயின் பெண் மரம் கை ஞெமிர்த்து
பிளிறு உற்ற வான பெரு வரை நாட பெடை நடையோடு
ஒளிறு உற்ற மேனியின் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
வெளிறு உற்ற வான் பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே
மேல்
*17.6. தொழுதிரந்து கூறல்

#255
கழி கண் தலை மலைவோன் புலியூர் கருதாதவர் போல்
குழி கண் களிறு வெரீஇ அரி யாளி குழீஇ வழங்கா
கழி கட்டு இரவின் வரல் கழல் கை தொழுதே இரந்தேன்
பொழி கண் புயலின் மயிலின் துவளும் இவள் பொருட்டே
மேல்
*17.7. தாய் அறிவு கூறல்

#256
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின்
அண்ணல் மணி நெடும் தேர் வந்தது உண்டாம் என சிறிது
கண்ணும் சிவந்து அன்னை என்னையும் நோக்கினள் கார்_மயிலே
மேல்
*17.8. மந்தி மேல் வைத்து வரைவு கடாதல்

#257
வான் தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய் கடுவன்
தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் திரு நீள் முடி மேல்
மீன் தோய் புனல் பெண்ணை வைத்து உடையாளையும் மேனி வைத்தான்
வான் தோய் மதில் தில்லை மா நகர் போலும் வரி_வளையே
மேல்
*17.9. காவல் மேல் வைத்துக் கண் துயிலாமை கூறல்

#258
நறை கள் மலி கொன்றையோன் நின்று நாடகம் ஆடு தில்லை
சிறை-கண் மலி புனல் சீர் நகர் காக்கும் செ வேல் இளைஞர்
பறை கண் படும்படும்-தோறும் படா முலை பைம் தொடியாள்
கறை கண் மலி கதிர் வேல் கண் படாது கலங்கினவே
மேல்
*17.10. பகல் உடம்பட்டாள் போன்று இரவரவு விலக்கல்

#259
கலர் ஆயினர் நினையா தில்லை அம்பலத்தான் கழற்கு அன்பு
இலர் ஆயினர் வினை போல் இருள் தூங்கி முழங்கி மின்னி
புலரா இரவும் பொழியா மழையும் புண்ணில் நுழை வேல்
மலரா வரும் மருந்தும் இல்லையோ நும் வரையிடத்தே
மேல்
*17.11. இரவு உடம்பட்டாள் போன்று பகல் வரவு விலக்கல்

#260
இற வரை உம்பர் கடவுள் பராய் நின்று எழிலி உன்னி
குறவரை ஆர்க்கும் குளிர் வரை நாட கொழும் பவள
நிற வரை மேனியன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
உற அரை மேகலையாட்கு அலராம் பகல் உன் அருளே
மேல்
*17.12. இரவும் பகலும் வரவு விலக்கல்

#261
சுழியா வரு பெரு நீர் சென்னி வைத்து என்னை தன் தொழும்பின்
கழியா அருள் வைத்த சிற்றம்பலவன் கரம் தரும் மான்
விழியா வரும் புரி மென் குழலாள் திறத்து ஐய மெய்யே
பழியாம் பகல் வரின் நீ இரவு ஏதும் பயன் இல்லையே
மேல்
*17.13. காலங் கூறி வரைவு கடாதல்

#262
மை ஆர் கதலி வனத்து வருக்கை பழம் விழு தேன்
எய்யாது அயின்று இள மந்திகள் சோரும் இரும் சிலம்பா
மெய்யா அரியது என் அம்பலத்தான் மதி ஊர்கொள் வெற்பின்
மொய் ஆர் வளர் இள வேங்கை பொன் மாலையின் முன்னினவே
மேல்
*17.14. கூறுவிக் குற்றல்

#263
தே மாம் பொழில் தில்லை சிற்றம்பலத்து விண்ணோர் வணங்க
நாம் ஆதரிக்க நடம் பயில்வோனை நண்ணாதவரின்
வாம் மாண் கலை செல்ல நின்றார் கிடந்த நம் அல்லல் கண்டால்
தாமா அறிகிலராயின் என் நாம் சொல்லும் தன்மைகளே
மேல்
*17.15. செலவு நினைந்து உரைத்தல்

#264
வல்சியின் எண்கு வளர் புற்று அகழ மல்கும் இருள்-வாய்
செல்வு அரிதன்று-மன் சிற்றம்பலவரை சேரலர் போல்
கொல் கரி சீயம் குறுகாவகை பிடி தான் இடை செல்
கல் அதர் என் வந்தவாறு என்பவர் பெறின் கார்_மயிலே
மேல்
*17.16 பொலிவழிவு உரைத்து வரைவு கடாதல்

#265
வாரி களிற்றின் மருப்பு உகு முத்தம் வரை_மகளிர்
வேரிக்கு அளிக்கும் விழு மலை நாட விரி திரையின்
நாரிக்கு அளிக்க அமர் நல் மா சடை முடி நம்பர் தில்லை
ஏர் இ களி கரு மஞ்ஞை இ நீர்மை என் எய்துவதே
மேல்

* பதினெட்டாம் அதிகாரம்

*18 வரை பொருட் பிரிதல்
*18.1. முலை விலை கூறல்

#266
குறைவிற்கும் கல்விக்கும் செல்விற்கும் நின் குலத்திற்கும் வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும் ஏற்பின் அல்லால் நினையின்
இறை வில் குலா வரை ஏந்தி வண் தில்லையன் ஏழ் பொழிலும்
உறை வில் குலா நுதலாள் விலையோ மெய்ம்மை ஓதுநர்க்கே
மேல்
*18.2. வருமது கூறி வரைவுடம்படுத்தல்

#267
வடுத்தன நீள் வகிர்_கண்ணி வெண் நித்தில வாள் நகைக்கு
தொடுத்தன நீ விடுத்து எய்த துணி என்னை தன் தொழும்பில்
படுத்த நல் நீள் கழல் ஈசர் சிற்றம்பலம் தாம் பணியார்க்கு
அடுத்தன தாம் வரின் பொல்லாது இரவின் நின் ஆர் அருளே
மேல்
*18.3. வரைபொருட் பிரிவை உரையெனக் கூறல்

#268
குன்றம் கிடையும் கடந்து உமர் கூறும் நிதி கொணர்ந்து
மின் தங்கு இடை நும்மையும் வந்து மேவுவன் அம்பலம் சேர்
மன் தங்கு இடைமருது ஏகம்பம் வாஞ்சியம் அன்ன பொன்னை
சென்று அங்கு இடைகொண்டு வாடா வகை செப்பு தே_மொழியே
மேல்
*18.4. நீயே கூறு என்றல்

#269
கேழ் ஏவரையும் இல்லோன் புலியூர் பயில் கிள்ளை அன்ன
யாழ் ஏர் மொழியாள் இர வரினும் பகல் சேறி என்று
வாழேன் என இருக்கும் வரி_கண்ணியை நீ வருட்டி
தாழேன் என இடைக்கண் சொல்லி ஏகு தனி வள்ளலே
மேல்
*18.5. சொல்லாது ஏகல்

#270
வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளங்கும் மனம் மகிழ்ந்து
தெருட்டின் தெளியலள் செப்பும் வகை இல்லை சீர் அருக்கன்
குருட்டின் புக செற்ற கோன் புலியூர் குறுகார் மனம் போன்று
இருட்டின் புரி குழலாட்கு எங்ஙனே சொல்லி ஏகுவனே
மேல்
*18.6. பிரிந்தமை கூறல்

#271
நல்லாய் நமக்கு உற்றது என் என்று உரைக்கேன் நமர் தொடுத்த
எல்லா நிதியும் உடன் விடுப்பான் இமையோர் இறைஞ்சும்
மல் ஆர் கழல் அழல் வண்ணர் வண் தில்லை தொழார்கள் அல்லால்
சொல்லா அழல் கடம் இன்று சென்றார் நம் சிறந்தவரே
மேல்
*18.7. நெஞ்சொடு கூறல்

#272
அருந்தும் விடம் அணியாம் மணிகண்டன் மற்று அண்டர்க்கு எல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகும் முன்னோன் தில்லை வாழ்த்தும் வள்ளல்
திருந்தும் கடன் நெறி செல்லும் இவ்வாறு சிதைக்கும் என்றால்
வருந்தும் மட நெஞ்சமே என்ன யாம் இனி வாழ் வகையே
மேல்
*18.8. நெஞ்சொடு வருந்தல்

#273
ஏர் பின்னை தோள் முன் மணந்தவன் ஏத்த எழில் திகழும்
சீர் பொன்னை வென்ற செறி கழலோன் தில்லை சூழ் பொழில்-வாய்
கார் புன்னை பொன் அவிழ் முத்த மணலில் கலந்து அகன்றார்
தேர் பின்னை சென்ற என் நெஞ்சு என்-கொலாம் இன்று செய்கின்றதே
மேல்
*18.9. வருத்தம் கண்டு உரைத்தல்

#274
கான் அமர் குன்றர் செவியுற வாங்கு கணை துணையாம்
மான் அமர் நோக்கியர் நோக்கு என மான் நல் தொடை மடக்கும்
வான் அமர் வெற்பர் வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேன் அமர் சொல்லி செல்லார் செல்லல் செல்லல் திரு_நுதலே
மேல்
*18.10. வழியழுகி வற்புறுத்தல்

#275
மது மலர் சோலையும் வாய்மையும் அன்பும் மருவி வெம் கான்
கதுமென போக்கும் நிதியின் அருக்கும் முன்னி கலுழ்ந்தால்
நொதுமலர் நோக்கம் ஒர் மூன்று உடையோன் தில்லை நோக்கலர் போல்
இது மலர் பாவைக்கு என்னோ வந்தவாறு என்பர் ஏந்து_இழையே
மேல்
*18.11. வன்புறை எதிர் அழிந்து இரங்கல்

#276
வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி
பந்தாடு இரும் பொழில் பல் வரை நாடன் பண்போ இனிதே
கொந்து ஆர் நறும் கொன்றை கூத்தன் தென் தில்லை தொழார் குழு போல்
சிந்தாகுலம் உற்று பற்றின்றி நையும் திருவினர்க்கே
மேல்
*18.12. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்

#277
மொய் என்பதே இழை கொண்டவன் என்னை தன் மொய் கழற்கு ஆட்
செய் என்பதே செய்தவன் தில்லை சூழ் கடல் சேர்ப்பர் சொல்லும்
பொய் என்பதே கருத்தாயின் புரி குழல் பொன் தொடியாய்
மெய் என்பது ஏது மற்று இல்லை-கொலாம் இ வியல் இடத்தே
மேல்
*18.13. தேறாது புலம்பல்

#278
மன் செய்த முன் நாள் மொழி வழியே அன்ன வாய்மை கண்டும்
என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும்
பொன் செய்த மேனியன் தில்லை உறாரின் பொறை அரிதாம்
முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே
மேல்
*18.14. காலம் மறைத்துரைத்தல்

#279
கரும் தினை ஓம்ப கடவுள் பராவி நமர் கலிப்ப
சொரிந்தன கொண்மூ சுரந்த தன் பேர் அருளால் தொழும்பில்
பரிந்து எனை ஆண்ட சிற்றம்பலத்தான் பரங்குன்றில் துன்றி
விரிந்தன காந்தள் வெருவரல் கார் என வெள்_வளையே
மேல்
*18.15. தூது வர உரைத்தல்

#280
வென்றவர் முப்புரம் சிற்றம்பலத்தில் நின்று ஆடும் வெள்ளி
குன்றவர் குன்றா அருள் தர கூடினர் நம் அகன்று
சென்றவர் தூது-கொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா
நின்றவர் தூது-கொல்லோ வந்து தோன்றும் நிரை_வளையே
மேல்
*18.16. தூது கண்டழுங்கல்

#281
வருவன செல்வன தூதுகள் ஏதில வான் புலியூர்
ஒருவனது அன்பரின் இன்ப கலவிகள் உள் உருக
தருவன செய்து எனது ஆவி கொண்டு ஏகி என் நெஞ்சில் தம்மை
இருவின காதலர் ஏது செய்வான் இன்று இருக்கின்றதே
மேல்
*18.17. மெலிவு கண்டு செவிலி கூறல்

#282
வேய் இன மென் தோள் மெலிந்து ஒளி வாடி விழி பிறிதாய்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவள செவ்வி
ஆயின ஈசன் அமரர்க்கு அமரன் சிற்றம்பலத்தான்
சேயினது ஆட்சியில் பட்டனளாம் இ திருந்து_இழையே
மேல்
*18.18. கட்டு வைப்பித்தல்

#283
சுணங்கு உற்ற கொங்கைகள் சூது உற்றில சொல் தெளிவு உற்றில
குணம் குற்றம் கொள்ளும் பருவம் உறாள் குறுகா அசுரர்
நிணம் குற்ற வேல் சிவன் சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல்
அணங்கு உற்ற நோய் அறிவுற்று உரையாடு-மின் அன்னையரே
மேல்
*18.19. கலக்கமுற்று நிறுத்தல்

#284
மாட்டி அன்றே எம்-வயின் பெரு நாண் இனி மா குடி மாசு
ஊட்டி அன்றே நிற்பது ஓடியவாறு இவள் உள்ளம் எல்லாம்
காட்டி அன்றே நின்ற தில்லை தொல்லோனை கல்லாதவர் போல்
வாட்டி அன்று ஏர் குழலார் மொழியாதன வாய் திறந்தே
மேல்
*18.20. கட்டுவித்திக் கூறல்

#285
குயில் இது அன்றே என்னலாம் சொல்லி கூறன் சிற்றம்பலத்தான்
இயல் இது அன்றே என்னல் ஆகா இறை விறல் சேய் கடவும்
மயில் இது அன்றே கொடி வாரணம் காண்க வன் சூர் தடிந்த
அயில் இது அன்றே இது அன்றே நெல்லில் தோன்றும் அவன் வடிவே
மேல்
*18.21. வேலனை அழைத்தல்

#286
வேலன் புகுந்து வெறியாடுக வெண் மறி அறுக்க
காலன் புகுந்து அவிய கழல் வைத்து எழில் தில்லை நின்ற
மேலன் புகுந்து என்-கண் நின்றான் இருந்த வெண் காடு அனைய
பாலன் புகுந்து இ பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே
மேல்
*18.22. இன்னல் எய்தல்

#287
அயர்ந்தும் வெறி மறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார்
பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ பேர்ந்து இருவர்
உயர்ந்தும் பணிந்தும் உணரானது அம்பலம் உன்னலரின்
துயர்ந்தும் பிறிதின் ஒழியின் என் ஆதும் துறைவனுக்கே
மேல்
*18.23. வெறி விலக்குவிக்க நினைதல்

#288
சென்றார் திருத்திய செல்லல் நின்றார்கள் சிதைப்பர் என்றால்
நன்றா அழகிது அன்றே இறை தில்லை தொழாரின் நைந்தும்
ஒன்றாம் இவட்கும் மொழிதல் இல்லேன் மொழியாதும் உய்யேன்
குன்று ஆர் துறைவர்க்கு உறுவேன் உரைப்பன் இ கூர் மறையே
மேல்
*18.24. அறத்தொடு நிற்றலை உரைத்தல்

#289
யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல்
தூயன் நினக்கு கடும் சூள் தருவன் சுடர்_குழையே
மேல்
*18.25. அறத்தொடு நிற்றல்

#290
வண்டல் உற்றேம் எம்-கண் வந்து ஒரு தோன்றல் வரி வளையீர்
உண்டல் உற்றேம் என்று நின்றது ஓர் போழ்து உடையான் புலியூர்
கொண்டல் உற்று ஏறும் கடல் வர எம் உயிர் கொண்டு தந்து
கண்டல் உற்று ஏர் நின்ற சேரி சென்றான் ஓர் கழலவனே
மேல்
*18.26. ஐயந்தீரக் கூறல்

#291
குடிக்கு அலர் கூறினும் கூறா வியன் தில்லை கூத்தன தாள்
முடிக்கு அலர் ஆக்கும் மொய் பூம் துறைவற்கு முரி புருவ
வடிக்கு அலர் வேல்_கண்ணி வந்தன சென்று நம் யாய் அறியும்
படிக்கு அலர் ஆம் இவை என் நாம் மறைக்கும் பரிசுகளே
மேல்
*18.27. வெறி விலக்கல்

#292
விதியுடையார் உண்க வேரி விலக்கலம் அம்பலத்து
பதி உடையான் பரங்குன்றினில் பாய் புனல் யாம் ஒழுக
கதி உடையான் கதிர் தோள் நிற்க வேறு கருது நின்னின்
மதி உடையார் தெய்வமே இல்லை-கொல் இனி வையகத்தே
மேல்
*18.28. செவிலிக்குத் தோழி அறத்தொடு நிற்றல்

#293
மன களியாய் இன்று யான் மகிழ்தூங்க தன் வார் கழல்கள்
எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இரும் தண் கயிலை
சின களி யானை கடிந்தார் ஒருவர் செ வாய் பசிய
புன கிளி யாம் கடியும் வரை சாரல் பொருப்பிடத்தே
மேல்
*18.29. நற்றாய்க்குச் செவிலி அறத்தொடு நிற்றல்

#294
இளையாள் இவளை என் சொல்லி பரவுதும் ஈர் எயிறு
முளையா அளவின் முதுக்குறைந்தாள் முடி சாய்த்து இமையோர்
வளையா வழுத்தாவரு திருச்சிற்றம்பலத்து மன்னன்
திளையா வரும் அருவி கயிலை பயில் செல்வியையே
மேல்
*18.30. தேர் வரவு கூறல்

#295
கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லை கார் கடல்-வாய்
புள் இனம் ஆர்ப்ப பொரு திரை ஆர்ப்ப புலவர்கள்-தம்
வள் இனம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப வலம்புரியின்
வெள் இனம் ஆர்ப்ப வரும் பெரும் தேர் இன்று மெல்_இயலே
மேல்
*18.31. மணமுரசு கேட்டு மகிழ்ந்துரைத்தல்

#296
பூரண பொன் குடம் வைக்க மணி முத்தம் பொன் பொதிந்த
தோரணம் நீடுக தூரியம் ஆர்க்க தொல் மால் அயற்கும்
காரணன் ஏர் அணி கண்ணுதலோன் கடல் தில்லை அன்ன
வார் அணவும் முலை மன்றல் என்று ஏங்கும் மண முரசே
மேல்
*18.32. ஐயுற்றுக் கலங்கல்

#297
அடல் களி யாவர்க்கும் அன்பர்க்கு அளிப்பவன் துன்ப இன்பம்
பட களியா வண்டு அறை பொழில் தில்லை பரமன் வெற்பின்
கட களி யானை கடிந்தவர்க்கோ அன்றி நின்றவர்க்கோ
விட களி ஆம் நம் விழு நகர் ஆர்க்கும் வியன் முரசே
மேல்
*18.33. நிதி வரவு கூறா நிற்றல்

#298
என் கடை-கண்ணினும் யான் பிற ஏத்தா வகை இரங்கி
தன் கடைக்கண் வைத்த தண் தில்லை சங்கரன் தாழ் கயிலை
கொன் கடை-கண் தரும் யானை கடிந்தார் கொணர்ந்து இறுத்தார்
முன் கடை-கண் இது காண் வந்து தோன்றும் முழு நிதியே
மேல்

* கற்பியல் ( 19 - 25 அதிகாரங்கள்)

* பத்தொன்பதாம் அதிகாரம்

*19 மணம் சிறப்புரைத்தல்
*19.1. மணமுரசு கூறல்

#299
பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கும் முன்னாம்
அரசு அம்பலத்து நின்று ஆடும் பிரான் அருள் பெற்றவரின்
புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே
மேல்
*19.2. மகிழ்ந்துரைத்தல்

#300
இரும் துதி என்-வயின் கொண்டவன் யான் எப்பொழுதும் உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கு அரியோன் தில்லை வாழ்த்தினர் போல்
இருந்து திவண்டன வால் எரி முன் வலம் செய்து இட-பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அரும் தழையே
மேல்
*19.3. வழிபாடு கூறல்

#301
சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
கார் இயல் வாள்_கண்ணி எண் அகலார் கமலம் கலந்த
வேரியம் சந்தும் வியல் தந்து என கற்பின் நிற்பர் அன்னே
கார் இயல் கண்டர் வண் தில்லை வணங்கும் எம் காவலரே
மேல்
*19.4. வாழ்க்கை நலங்கூறல்

#302
தொண்டு இனம் மேவும் சுடர் கழலோன் தில்லை தொல் நகரில்
கண்டின மேவும் இல் நீ அவள் நின் கொழுநன் செழும் மெல்
தண்டு இனம் மேவும் திண் தோளவன் யான் அவள் தன் பணிவோள்
வண்டினம் மேவும் குழலாள் அயல் மன்னும் இ அயலே
மேல்
*19.5. காதல் கட்டுரைத்தல்

#303
பொட்டு அணியான் நுதல் போய் இறும் பொய் போல் இடை என பூண்
இட்டு அணியான் தவிசின் மலர் அன்றி மிதிப்ப கொடான்
மட்டு அணிவார் குழல் வையான் மலர் வண்டு உறுதல் அஞ்சி
கட்டு அணி வார் சடையோன் தில்லை போலி தன் காதலனே
மேல்
*19.6. கற்பறிவித்தல்

#304
தெய்வம் பணி கழலோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
தெய்வம் பணிந்து அறியாள் என்றும் நின்று திறை வழங்கா
தெவ்வம் பணிய சென்றாலும் மன் வந்து அன்றி சேர்ந்து அறியான்
பெளவம் பணி மணி அன்னார் பரிசு இன்ன பான்மைகளே
மேல்
*19.7. கற்புப் பயப்புரைத்தல்

#305
சிற்பம் திகழ்தரு திண் மதில் தில்லை சிற்றம்பலத்து
பொன் பந்தி அன்ன சடையவன் பூவணம் அன்ன பொன்னின்
கற்பு அந்தி வாய் வடமீனும் கடக்கும் படி கடந்தும்
இல் பந்தி வாய் அன்றி வைகல் செல்லாது அவன் ஈர்ம் களிறே
மேல்
*19.8. மருவுதல் உரைத்தல்

#306
மன்னவன் தெம் முனை மேல் செல்லுமாயினும் மால் அரி ஏறு
அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது வரகுணன் ஆம்
தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் மற்றை தேவர்க்கு எல்லாம்
முன்னவன் மூவல் அன்னாளும் மற்று ஓர் தெய்வம் முன்னலளே
மேல்
*19.9. கலவி இன்பம் கூறல்

#307
ஆனந்த வெள்ளத்து அழுந்தும் ஒர் ஆருயிர் ஈர் உரு கொண்டு
ஆனந்த வெள்ளத்திடை திளைத்தால் ஒக்கும் அம்பலம் சேர்
ஆனந்த வெள்ளத்து அறை கழலோன் அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இ அணி நலமே
மேல்

* இருபதாம் அதிகாரம்

*20 ஓதற் பிரிவு
*20.1. கல்வி நலங்கூறல்

#308
சீர் அளவு இல்லா திகழ்தரு கல்வி செம்பொன் வரையின்
ஆர் அளவு இல்லா அளவு சென்றார் அம்பலத்துள் நின்ற
ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர் போல்
ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர் ஏந்து_இழையே
மேல்
*20.2. பிரிவு நினைவுரைத்தல்

#309
வீதல் உற்றார் தலை மாலையன் தில்லை மிக்கோன் கழற்கே
காதல் உற்றார் நன்மை கல்வி செல்வீ தரும் என்பது கொண்டு
ஓதல் உற்றார் உற்று உணர்தல் உற்றார் செல்லல் மல் அழல் கான்
போதல் உற்றார் நின் புணர் முலை உற்ற புரவலரே
மேல்
*20.3. கலக்கம் கண்டுரைத்தல்

#310
கல் பா மதில் தில்லை சிற்றம்பலம்-அது காதல் செய்த
வில் பா விலங்கல் எம் கோனை விரும்பலர் போல அன்பர்
சொல் பா விரும்பினர் என்ன மெல்_ஓதி செவி புறத்து
கொல் பா இலங்கு இலை வேல் குளித்து ஆங்கு குறுகியதே
மேல்
*20.4. வாய்வழி கூறித் தலைமகள் வருந்தல்

#311
பிரியாமையும் உயிர் ஒன்றாவதும் பிரியின் பெரிதும்
தரியாமையும் ஒருங்கே நின்று சாற்றினர் தையல் மெய்யின்
பிரியாமை செய்து நின்றோன் தில்லை பேர் இயல் ஊரர் அன்ன
புரியாமையும் இதுவே இனி என்னாம் புகல்வதுவே
மேல்

* இருபத்தொன்றாம் அதிகாரம்

*21 காவற்பிரிவு
*21.1. பிரிவு அறிவித்தல்

#312
மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன் தில்லையான் அருளால் விரி நீர் உலகம்
காப்பான் பிரிய கருதுகின்றார் நமர் கார் கயல் கண்
பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ் குழல் பூம்_கொடியே
மேல்
*21.2. பிரிவு கேட்டு இரங்கல்

#313
சிறு கண் பெரும் கை திண் கோட்டு குழை செவி செ முக மா
தெறு கட்டு அழிய முன் உய்ய செய்தோர் கருப்பு சிலையோன்
உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின்
துறு கள் புரி குழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே
மேல்

* இருபத்திரண்டாம் அதிகாரம்

*22 பகை தணி வினைப் பிரிவு
*22.1. பிரிவு கூறல்

#314
மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம் போர் மிடைந்த
பகை தணித்தற்கு படர்தல் உற்றார் நமர் பல் பிறவி
தொகை தணித்தற்கு என்னை ஆண்டுகொண்டோன் தில்லை சூழ் பொழில்-வாய்
முகை தணித்தற்கு அரிதாம் புரி தாழ்தரு மொய்_குழலே
மேல்
*22.2. வருத்தம் தணித்தல்

#315
நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என இங்ஙனே
பொருப்பு உறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்கு மிக்க
விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழிய
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திரு_நுதலே
மேல்

* இருபத்திமூன்றாம் அதிகாரம்

*23 வேந்தற்கு உற்றுழிப் பிரிவு
*23.1. பிரிந்தமை கூறல்

#316
போது குலாய புனை முடி வேந்தர் தம் போர் முனை மேல்
மாது குலாய மெல் நோக்கி சென்றார் நமர் வண் புலியூர்
காது குலாய குழை எழிலோனை கருதலர் போல்
ஏது-கொலாய் விளைகின்றது இன்று ஒன்னார் இடும் மதிலே
மேல்
*23.2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்

#317
பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவி பொலி புலியூர்
வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல்
துன்னி வளைத்த நம் தோன்றற்கு பாசறை தோன்றும்-கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே
மேல்
*23.3. வான் நோக்கி வருந்தல்

#318
கோலி திகழ் சிறகு ஒன்றின் ஒடுக்கி பெடை குருகு
பாலித்து இரும் பனி பார்ப்பொடு சேவல் பயில் இரவின்
மால் இத்தனை அறியா மறையோன் உறை அம்பலமே
போலி திரு நுதலாட்கு என்னதாம்-கொல் என் போதரவே
மேல்
*23.4. கூதிர் கண்டு கவறல்

#319
கருப்பு இனம் மேவும் பொழில் தில்லை மன்னன்-கண் ஆர் அருளால்
விருப்பு இனம் மேவ சென்றார்க்கும் சென்று அல்கும்-கொல் வீழ் பனி-வாய்
நெருப்பு இனம் மேய் நெடு மால் எழில் தோன்ற சென்று ஆங்கு நின்ற
பொருப்பு இனம் ஏறி தமியரை பார்க்கும் புயல் இனமே
மேல்
*23.5. முன் பனிக்கு நொந்துரைத்தல்

#320
சுற்றின வீழ் பனி தூங்க துவண்டு துயர்க என்று
பெற்றவளே எனை பெற்றாள் பெடை சிறகான் ஒடுக்கி
புற்று இல வாள் அரவன் தில்லை புள்ளும் தம் பிள்ளை தழீஇ
மற்று இனம் சூழ்ந்து துயிலப்பெறும் இ மயங்கு இருளே
மேல்
*23.6. பின்பனி நினைந்து இரங்கல்

#321
புரம் அன்று அயர பொருப்பு வில் ஏந்தி புத்தேளிர் நாப்பண்
சிரம் அன்று அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் அனையாள்
பரம் அன்று இரும் பனி பாரித்தவா பரந்து எங்கும் வையம்
சரம் அன்றி வான் தருமேல் ஒக்கும் மிக்க தமியருக்கே
மேல்
*23.7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்

#322
வாழும் படி ஒன்றும் கண்டிலம் வாழி இ மாம் பொழில் தேன்
சூழும் முக சுற்றும் பற்றினவால் தொண்டை அம் கனி வாய்
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலம் ஆதரியா
கூழின் மலி மனம் போன்று இருளாநின்ற கோகிலமே
மேல்
*23.8. பருவங் காட்டி வற்புறுத்தல்

#323
பூண்பது என்றே கொண்ட பாம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பது என்றே என வானின் மலரும் மணந்தவர் தேர்
காண்பது அன்றே இன்று நாளை இங்கே வர கார் மலர் தேன்
பாண் பதன் தேர் குழலாய் எழில் வாய்த்த பனி முகிலே
மேல்
*23.9. பருவம் அன்று என்று கூறல்

#324
தெளிதரல் கார் என சீர் அனம் சிற்றம்பலத்து அடியேன்
களி தர கார் மிடற்றோன் நடம் ஆட கண் ஆர் முழவம்
துளி தரல் கார் என ஆர்த்தன ஆர்ப்ப தொக்கு உன் குழல் போன்று
அளிதர காந்தளும் பாந்தளை பாரித்து அலர்ந்தனவே
மேல்
*23.10. மறுத்துக் கூறல்

#325
தேன் திக்கு இலங்கு கழல் அழல் வண்ணன் சிற்றம்பலத்து எம்
கோன் திக்கு இலங்கு திண் தோள் கொண்டல் கண்டன் குழை எழில் நாண்
போன்று இ கடி மலர் காந்தளும் போந்து அவன் கை அனல் போல்
தோன்றி கடி மலரும் பொய்ம்மையோ மெய்யில் தோன்றுவதே
மேல்
*23.11. தேர் வரவு கூறல்

#326
திருமால் அறியா செறி கழல் தில்லை சிற்றம்பலத்து எம்
கரு மால் விடை உடையோன் கண்டம் போல் கொண்டல் எண் திசையும்
வருமால் உடல் மன் பொருந்தல் திருந்த மணந்தவர் தேர்
பொரும் மால் அயில் கண் நல்லாய் இன்று தோன்றும் நம் பொன் நகர்க்கே
மேல்
*23.12. வினை முற்றி நினைதல்

#327
புயல் ஓங்கு அலர் சடை ஏற்றவன் சிற்றம்பலம் புகழும்
மயல் ஓங்கு இரும் களி யானை வரகுணண் வெற்பின் வைத்த
கயல் ஓங்கு இரும் சிலை கொண்டு மன் கோபமும் காட்டி வரும்
செயல் ஓங்கு எயில் எரி செய்த பின் இன்று ஓர் திரு முகமே
மேல்
*23.13. நிலைலமை நினைந்து கூறல்

#328
சிறப்பின் திகழ் சிவன் சிற்றம்பலம் சென்று சேர்ந்தவர்-தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர் பிறங்கும் ஒளி ஆர்
நிற பொன் புரிசை மறுகினின் துன்னி மட நடை புள்
இறப்பின் துயின்று முற்றத்து இரை தேரும் எழில் நகர்க்கே
மேல்
*23.14. முகிலொடு கூறல்

#329
அருந்து ஏர் அழிந்தனம் ஆலம் என்று ஓலமிடும் இமையோர்
மருந்து ஏர் அணி அம்பலத்தோன் மலர் தாள் வணங்கலர் போல்
திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் செல்வி சீர் நகர்க்கு என்
வரும் தேர் இதன் முன் வழங்கேல் முழங்கேல் வள முகிலே
மேல்
*23.15. வரவெடுத்துரைத்தல்

#330
பணி வார் குழை எழிலோன் தில்லை சிற்றம்பலம் அனைய
மணி வார் குழல் மட மாதே பொலிக நம் மன்னர் முன்னா
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டு வண் தேர்
அணிவார் முரிசினொடு ஆலிக்கும் மாவோடு அணுகினரே
மேல்
*23.16. மறவாமை கூறல்

#331
கருங்குவளை கடி மா மலர் முத்தம் கலந்து இலங்க
நெருங்கு வளை கிள்ளை நீங்கிற்றிலள் நின்று நான்முகனோடு
ஒருங்கு வளை கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்
மருங்கு வளைத்து மன் பாசறை நீடிய வைகலுமே
மேல்

* இருபத்திநான்காம் அதிகாரம்

*24 பொருள் வயின் பிரிவு
*24.1. வாட்டங் கூறல்

#332
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என
பனி வரும் கண் பரமன் திருச்சிற்றம்பலம் அனையாய்
துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து அளிப்ப
நனி வரும் நாள் இதுவோ என்று வந்திக்கும் நல்_நுதலே
மேல்
*24.2. பிரிவு நினைவுரைத்தல்

#333
வறியார் இருமை அறியார் என மன்னும் மா நிதிக்கு
நெறி ஆர் அரும் சுரம் செல்லல் உற்றார் நமர் நீண்டு இருவர்
அறியா அளவு நின்றோன் தில்லை சிற்றம்பலம் அனைய
செறி வார் கரும் குழல் வெள் நகை செ வாய் திரு_நுதலே
மேல்
*24.3. ஆற்றாது புலம்பல்

#334
சிறு வாள் உகிர் உற்று உறா முன்னம் சின்னப்படும் குவளைக்கு
எறி வாள் கழித்தனள் தோழி எழுதில் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவது அஞ்சனம் அம்பலவர் பணியார்
குறி வாழ் நெறி செல்வர் அன்பர் என்று அம்ம கொடியவளே
மேல்
*24.4. ஆற்றாமை கூறல்

#335
வான கடி மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல்
கான கடம் செல்வர் காதலர் என்ன கதிர் முலைகள்
மான கனகம் தரும் மலர் கண்கள் முத்தம் வளர்க்கும்
தேன் நக்க தார் மன்னன் என்னோ இனி சென்று தேர் பொருளே
மேல்
*24.5. திணை பெயர்த்து உரைத்தல்

#336
சுருள் தரு செம் சடை வெண் சுடர் அம்பலவன் மலயத்து
இருள் தரு பூம் பொழில் இன் உயிர் போல கலந்து இசைத்த
அருள் தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தம் சென்றோ
பொருள் தரக்கிற்கின்றது வினையேற்கு புரவலரே
மேல்
*24.6. பொருத்தம் அறிந்து உரைத்தல்

#337
மூவர் நின்று ஏத்த முதலவன் ஆட முப்பத்துமும்மை
தேவர் சென்று ஏத்தும் சிவன் தில்லை அம்பலம் சீர் வழுத்தா
பாவர் சென்று அல்கும் நரகம் அனைய புனை அழல் கான்
போவர் நம் காதலர் என் நாம் உரைப்பது பூம்_கொடியே
மேல்
*24.7. பிரிந்தமை கூறல்

#338
தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள்
என் மா தலை கழல் வைத்து எரி ஆடும் இறை திகழும்
பொன் மா புரிசை பொழில் திருப்பூவணம் அன்ன பொன்னே
வன் மா களிற்றொடு சென்றனர் இன்று நம் மன்னவரே
மேல்
*24.8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்

#339
ஆழி ஒன்று ஈர் அடியும் இலன் பாகன் முக்கண் தில்லையோன்
ஊழி ஒன்றாதன நான்கும் ஐம்பூதமும் ஆறு ஒடுங்கும்
ஏழ் இயன்ற ஆழ் கடலும் எண் திசையும் திரிந்து இளைத்து
வாழி அன்றோ அருக்கன் பெரும் தேர் வந்து வைகுவதே
மேல்
*24.9. இகழ்ச்சி நினைந்து அழிதல்

#340
பிரியார் என இகழ்ந்தேன் முன்னம் யான் பின்னை என் பிரியின்
தரியாள் என இகழ்ந்தார் மன்னர் தாம் தக்கன் வேள்வி மிக்க
எரி ஆர் எழில் அழிக்கும் எழில் அம்பலத்தோன் எவர்க்கும்
அரியான் அருள் இலர் போல் அன்ன என்னை அழிவித்தவே
மேல்
*24.10. உறவு வெளிப்பட்டு நிற்றல்

#341
சேணும் திகழ் மதில் சிற்றம்பலவன் தெள் நீர் கடல் நஞ்சு
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின் எல்லாம்
காணும் திசை-தொறும் கார் கயலும் செம் கனியொடு பைம்
பூணும் புணர் முலையும் கொண்டு தோன்றும் ஒர் பூம்_கொடியே
மேல்
*24.11. நெஞ்சொடு நோதல்

#342
பொன் அணி ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் இ பொங்கு வெம் கா
னின் நணி நிற்கும் இது என் என்பதே இமையோர் இறைஞ்சும்
மன் அணி தில்லை வள நகர் அன்ன அன்னநடையாள்
மின் அணி நுண் இடைக்கோ பொருட்கோ நீ விரைகின்றதே
மேல்
*24.12. நெஞ்சொடு புலத்தல்

#343
நாய்-வயின் உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட
தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை
பேய்-வயினும் அரிது ஆகும் பிரிவு எளிது ஆக்குவித்து
சேய்-வயின் போந்த நெஞ்சே அஞ்சத்தக்கது உன் சிக்கனவே
மேல்
*24.13. நெஞ்சொடு மறுத்தல்

#344
தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய
பூ மேவிய பொன்னை விட்டு பொன் தேடி இ பொங்கு வெம் கான்
நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன
வாம் மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே
மேல்
*24.14. நாள் எண்ணி வருந்தல்

#345
தெள் நீர் அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்
பண் நீர் மொழி இவளை பையுள் எய்த பனி தடம் கண்
ணுள் நீர் உக ஒளி வாடிட நீடு சென்றார் சென்ற நாள்
எண் நீர்மையின் நிலனும் குழியும் விரல் இட்டு அறவே
மேல்
*24.15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்

#346
சுற்றம் பலம் இன்மை காட்டி தன் தொல் கழல் தந்த தொல்லோன்
சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று திண் கோட்டின் வண்ண
புற்று அங்கு உதர்ந்து நல் நாகொடும் பொன் ஆர் மணி புலம்ப
கொற்றம் மருவு கொல் ஏறு செல்லா நின்ற கூர்ம் செக்கரே
மேல்
*24.16. பருவங் கண்டு இரங்கல்

#347
கண் நுழையாது விண் மேகம் கலந்து கண மயில் தொக்கு
எண் நுழையா தழை கோலி நின்று ஆலும் இன மலர் வாய்
மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல்
பண் நுழையா மொழியாள் என்னள் ஆம்-கொல் மன் பாவியற்கே
மேல்
*24.17. முகிலொடு கூறல்

#348
அல் படு காட்டில் நின்று ஆடி சிற்றம்பலத்தான் மிடற்றின்
முற்படு நீள் முகில் என்னின் முன்னேல் முதுவோர் குழுமி
வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய்
நெல் படு வான் பலி செய்து அயரா நிற்கும் நீள் நகர்க்கே
மேல்
*24.18. தேர் வரவு கூறல்

#349
பாவியை வெல்லும் பரிசு இல்லையே முகில் பாவை அம் சீர்
ஆவியை வெல்ல கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்து
காவியை வெல்லும் மிடற்றோன் அருளின் கதுமென போய்
மேவிய மா நிதியோடு அன்பர் தேர் வந்து மேவினதே
மேல்
*24.19. இளையர் எதிர்கோடல்

#350
யாழின் மொழி மங்கை_பங்கன் சிற்றம்பலத்தான் அமைத்த
ஊழின் வலியது ஒன்று என்னை ஒளி மேகலை உகளும்
வீழும் வரி வளை மெல் இயல் ஆவி செல்லாத முன்னே
சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியதே
மேல்
*24.20. உள் மகிழ்ந்து உரைத்தல்

#351
மயில் மன்னு சாயல் இ மானை பிரிந்து பொருள் வளர்ப்பான்
வெயில் மன்னு வெம் சுரம் சென்றது எல்லாம் விடையோன் புலியூர்
குயில் மன்னு சொல்லி மென் கொங்கை என் அங்கத்திடை குளிப்ப
துயில் மன்னு பூ அணை மேல் அணையா முன் துவளுற்றதே
மேல்

* இருபத்தைந்தாம் அதிகாரம்

*25 பரத்தையிற் பிரிவு
*25.1. கண்டவர் கூறல்

#352
உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வர ஒருங்கே
எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப இள மயில் ஏர்
கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு
அடுத்து அணிவாள் இளையோர் சுற்றும் பற்றினர் மாதிரமே
மேல்
*25.2. பொறை உவந்து உரைத்தல்

#353
சுரும்பு உறு கொன்றையன் தொல் புலியூர் சுருங்கும் மருங்குல்
பெரும் பொறையாட்டியை என் இன்று பேசுவ பேர் ஒலி நீர்
கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும்
அரும் பொறை ஆகும் என் ஆவியும் தேய்வுற்று அழிகின்றதே
மேல்
*25.3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்

#354
அப்பு உற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர் உறு நோய்
ஒப்புற்று எழில் நலம் ஊரன் கவர உள்ளும் புறம்பும்
வெப்புற்று வெய்து உயிர்ப்புற்று தம் மெல் அணையே துணையா
செப்பு உற்ற கொங்கையர் யாவர்-கொல் ஆருயிர் தேய்பவரே
மேல்
*25.4. கன விழந்து உரைத்தல்

#355
தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல்
ஆவா கனவும் இழந்தேன் நனவு என்று அமளியின் மேல்
பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர புலம்பாய் நலம் பாய்
பாவாய் தழுவிற்றிலேன் விழித்தேன் அரும் பாவியனே
மேல்
*25.5. விளக்கொடு வெறுத்தல்

#356
செய் முக நீல மலர் தில்லை சிற்றம்பலத்து அரற்கு
கை முகம் கூம்ப கழல் பணியாரின் கலந்தவர்க்கு
பொய் முகம் காட்டி கரத்தல் பொருத்தம் அன்று என்றிலையே
நெய் முகம் மாந்தி இருள் முகம் கீழும் நெடும் சுடரே
மேல்
*25.6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்

#357
பூம் குவளை பொலி மாலையும் ஊரன் பொன் தோள் இணையும்
ஆங்கு வளைத்துவைத்து ஆரேனும் கொள்க நள்ளார் அரணம்
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய்
ஓங்கு வளை கரத்தார்க்கு அடுத்தோம் மன் உறாவரையே
மேல்
*25.7. பள்ளியிடத்து ஊடல்

#358
தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது
எவம் செய்து நின்று இனி இன்று உனை நோவது என் அத்தன் முத்தன்
சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லை ஊர நின் சே இழையார்
நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல் விடு நல் கலையே
மேல்
*25.8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்

#359
தணி உற பொங்கும் இ கொங்கைகள் தாங்கி தளர் மருங்குல்
பிணியுற பேதை சென்று இன்று எய்துமால் அரவும் பிறையும்
அணியுற கொண்டவன் தில்லை தொல் ஆய நல்லார்கள் முன்னே
பணி உற தோன்றும் நுடங்கு இடையார்கள் பயில் மனைக்கே
மேல்
*25.9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்

#360
இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி கோலம் செய்து
குரவு அணையும் குழல் இங்கு இவளால் இ குறி அறிவித்து
அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை ஆங்கு ஒருத்தி
தர அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகளே
மேல்
*25.10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்

#361
சிவந்த பொன் மேனி மணி திருச்சிற்றம்பலம் உடையான்
சிவந்த அம் தாள் அணி ஊரற்கு உலகியலாறு உரைப்பான்
சிவந்த பைம் போதும் அம் செம் மலர் பட்டும் கட்டு ஆர் முலை மேல்
சிவந்த அம் சாந்தமும் தோன்றின வந்து திரு மனைக்கே
மேல்
*25.11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்

#362
குரா பயில் கூழை இவளின் மிக்கு அம்பலத்தான் குழையாம்
அரா பயில் நுண் இடையார் அடங்கார் எவரே இனி பண்டு
இராப்பகல் நின்று உணங்கு ஈர்ம் கடை இத்துணை போழ்தின் சென்று
கரா பயில் பூம் புனல் ஊரன் புகும் இ கடி மனைக்கே
மேல்
*25.12. முகமலர்ச்சி கூறல்

#363
வந்தான் வயல் அணி ஊரன் என சினவாள் மலர் கண்
செந்தாமரை செவ்வி சென்ற சிற்றம்பலவன் அருளான்
முந்தாயின வியன் நோக்கு எதிர் நோக்க முக மடுவின்
பைம் தாள் குவளைகள் பூத்து இருள் சூழ்ந்து பயின்றனவே
மேல்
*25.13. கால நிகழ்வு உரைத்தல்

#364
வில்லி கை போதின் விரும்பா அரும் பாவியர்கள் அன்பில்
செல்லி கை போதின் எரி உடையோன் தில்லை அம்பலம் சூழ்
மல்லிகை போதின் வெண் சங்கம் வண்டு ஊத விண் தோய் பிறையோடு
எல்லி கை போது இயல் வேல் வயல் ஊரற்கு எதிர் கொண்டதே
மேல்
*25.14. எய்தல் எடுத்துரைத்தல்

#365
புலவி திரை பொர சீறடி பூம் கலம் சென்னி உய்ப்ப
கலவி கடலுள் கலிங்கம் சென்று எய்தி கதிர் கொள் முத்தம்
நிலவி நிறை மது ஆர்ந்து அம்பலத்து நின்றோன் அருள் போன்று
உலவு இயலாத்தனம் சென்று எய்தல் ஆயின ஊரனுக்கே
மேல்
*25.15. கலவி கருதிப் புலத்தல்

#366
செ வாய் துடிப்ப கரும் கண் பிறழ சிற்றம்பலத்து எம்
மொய் வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ் வாய் உயிர்ப்பொடு விம்மி கலுழ்ந்து புலந்து நைந்தாள்
இவ்வாறு அருள் பிறர்க்கு ஆகும் என நினைந்து இன்_நகையே
மேல்
*25.16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்

#367
மலரை பொறா அடி மானும் தமியள் மன்னன் ஒருவன்
பலரை பொறாது என்று இழிந்து நின்றாள் பள்ளி காமன் எய்த
அலரை பொறாது அன்று அழல் விழித்தோன் அம்பலம் வணங்கா
கலரை பொறா சிறியாள் என்னை-கொல்லோ கருதியதே
மேல்
*25.17. வாயிலவர் வாழ்த்தல்

#368
வில்லை பொலி நுதல் வேல் பொலி கண்ணி மெலிவு அறிந்து
வல்லை பொலிவொடு வந்தமையான் நின்று வான் வழுத்தும்
தில்லை பொலி சிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின்
மல்லை பொலி வயல் ஊரன் மெய்யே தக்க வாய்மையனே
மேல்
*25.18. புனல் வரவுரைத்தல்

#369
சூன் முதிர் துள்ளு நடை பெடைக்கு இல் துணை சேவல் செய்வான்
தேன் முதிர் வேழத்தின் மென் பூ குதர் செம்மல் ஊரன் திண் தோள்
மான் முதிர் நோக்கின் நல்லார் மகிழ தில்லையான் அருளே
போல் முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புது புனலே
மேல்
*25.19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

#370
சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள்
தோயீர் புணர் தவம் தொன்மை செய்தீர் சுடர்கின்ற கொலம்
தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வீயே என அடியீர் நெடும் தேர் வந்து மேவினதே
மேல்
*25.20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்

#371
அரமங்கையர் என வந்து விழா புகும் அவ்வவர் வான்_
அரமங்கையர் என வந்து அணுகும் அவள் அன்று உகிரால்
சிரம் அங்கு அயனை செற்றோன் தில்லை சிற்றம்பலம் வழுத்தா
புர மங்கையரின் நையாது ஐய காத்து நம் பொற்பரையே
மேல்
*25.21. தன்னை வியந்துரைத்தல்

#372
கனல் ஊர் கணை துணை ஊர் கெட செற்ற சிற்றம்பலத்து எம்
அனல் ஊர் சடையோன் அருள் பெற்றவரின் அமர புல்லும்
மினல் ஊர் நகையவர் தம்-பால் அருள் விலக்காவிடின் யான்
புனல் ஊரனை பிரியும் புனல் ஊர் கண் அ பூம்_கொடியே
மேல்
*25.22. நகைத்துரைத்தல்

#373
இறுமாப்பு ஒழியும் அன்றே தங்கை தோன்றின் என் எங்கை அம் கை
சிறு மான் தரித்த சிற்றம்பலத்தான் தில்லை ஊரன் திண் தோள்
பெறு மாத்தொடும் தன்ன பேர் அணுக்கு பெற்ற பெற்றியனோடு
இறுமாப்பு ஒழிய இறுமாப்பு ஒழிந்த இணை முலையே
மேல்
*25.23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்

#374
வேயாது செப்பின் அடைத்து தமி வைகும் வீயின் அன்ன
தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று
ஏயா பழி என நாணி என்-கண் இங்ஙனே மறைத்தாள்
யாய் ஆம் இயல்பு இவள் கற்பு நல் பால இயல்புகளே
மேல்
*25.24. பாணன் வரவுரைத்தல்

#375
விறலியும் பாணனும் வேந்தற்கு தில்லை இறை அமைத்த
திறல் இயல் யாழ் கொண்டுவந்து நின்றார் சென்று இரா திசை போம்
பறல் இயல் வாவல் பகல் உறை மா மரம் போலும்-மன்னோ
அறல் இயல் கூழை நல்லாய் தமியோமை அறிந்திலரே
மேல்
*25.25. தோழி இயற்பழித்தல்

#376
திக்கின் இலங்கு திண் தோள் இறை தில்லை சிற்றம்பலத்து
கொக்கின் இறகு-அது அணிந்து நின்று ஆடி தென் கூடல் அன்ன
அக்கு இன் நகை இவள் நைய அயல்-வயின் நல்குதலால்
தக்கு இன்று இருந்திலன் நின்ற செ வேல் எம் தனி வள்ளலே
மேல்
*25.26. உழையர் இயற்பழித்தல்

#377
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்து அடியார்
என்பிடை வந்து அமிழ்து ஊற நின்று ஆடி இரும் சுழியல்
தன் பெடை நைய தகவு அழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
வன் பெடை மேல் துயிலும் வயல் ஊரன் வரம்பு இலனே
மேல்
*25.27. இயற்பட மொழிதல்

#378
அஞ்சார் புரம் செற்ற சிற்றம்பலவர் அம் தண் கயிலை
மஞ்சு ஆர் புனத்து அன்று மாம் தழை ஏந்தி வந்தார் அவர் என்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும் உண்டேல்
பஞ்சு ஆர் அமளி பிரிதல் உண்டோ எம் பயோதரமே
மேல்
*25.28. நினைந்து வியந்துரைத்தல்

#379
தெள்ளம் புனல் கங்கை தங்கும் சடையன் சிற்றம்பலத்தான்
கள்ளம் புகு நெஞ்சர் காணா இறை உறை காழி அன்னாள்
உள்ளம் புகும் ஒருகால் பிரியாது உள்ளி உள்ளு-தொறும்
பள்ளம் புகும் புனல் போன்று அகத்தே வரும் பான்மையளே
மேல்
*25.29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்

#380
தேன் வண்டு உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான் வள் துறை தரு வாய்மையன் மன்னு குதலை இன் வா
யான் வள் துறை தரு மால் அமுது அன்னவன் வந்து அணையான்
நான் வண்டு உறைதரு கொங்கை எவ்வாறு-கொல் நண்ணுவதே
மேல்
*25.30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்

#381
கயல் வந்த கண்ணியர் கண் இணையால் மிகு காதரத்தான்
மயல் வந்த வாட்டம் அகற்றா விரதம் என் மா மதியின்
அயல் வந்த ஆடு அரவு ஆடவைத்தோன் அம்பலம் நிலவு
புயல் வந்த மா மதில் தில்லை நல் நாட்டு பொலிபவரே
மேல்
*25.31. வாயில் வேண்டத் தோழி கூறல்

#382
கூற்று ஆயின சின ஆளி எண்ணீர் கண்கள் கோள் இழித்தால்
போல் தான் செறி இருள் பொக்கம் எண்ணீர் கன்று அகன்ற புனிற்று
ஈற்றா என நீர் வருவது பண்டு இன்று எம் ஈசர் தில்லை
தேற்றார் கொடி நெடு வீதியில் போதிர் அ தேர் மிசையே
மேல்
*25.32. தோழி வாயில் வேண்டல்

#383
வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ்
வயம் தலை கூர்ந்து ஒன்றும் வாய்திறவார் வந்த வாள் அரக்கன்
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின்
கயம் தலை யானை கடிந்த விருந்தினர் கார்_மயிலே
மேல்
*25.33. மனையவர் மகிழ்தல்

#384
தேவி அங்கண் திகழ் மேனியன் சிற்றம்பலத்து எழுதும்
ஓவியம் கண்டு அன்ன ஒள் நுதலாள் தனக்கு ஓகை உய்ப்பான்
மேவு இயம் கண்டனையோ வந்தனன் என வெய்து உயிர்த்து
காவியம் கண் கழுநீர் செவ்வி வெளவுதல் கற்றனவே
மேல்
*25.34. வாயின் மறுத்துரைத்தல்

#385
உடை மணி கட்டி சிறுதேர் உருட்டி உலாத்தரும் இ
நடை மணியை தந்த பின்னர் முன் நான்முகன் மால் அறியா
விடை மணிகண்டர் வண் தில்லை மென் தோகை அன்னார்கள் முன் நம்
கடை மணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே
மேல்
*25.35. பாணனொடு வெகுளுதல்

#386
மை கொண்ட கண்டர் வயல் கொண்ட தில்லை மல்கு ஊரர் நின்-வாய்
மெய் கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர்
வை கொண்ட ஊசி கொல் சேரியில் விற்று எம் இல் வண்ணவண்ண
பொய் கொண்டு நிற்கல் உற்றோ புலை ஆத்தின்னி போந்ததுவே
மேல்
*25.36. பாணன் புலந்துரைத்தல்

#387
கொல் ஆண்டு இலங்கு மழு படையோன் குளிர் தில்லை அன்னாய்
வில் ஆண்டு இலங்கு புருவம் நெரிய செ வாய் துடிப்ப
கல் ஆண்டு எடேல் கரும் கண் சிவப்பு ஆற்று கறுப்பது அன்று
பல்லாண்டு அடியேன் அடி வலம்கொள்வன் பணி_மொழியே
மேல்
*25.37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்

#388
மத்த கரி உரியோன் தில்லை ஊரன் வரவு எனலும்
தத்தை கிளவி முக தாமரை தழல் வேல் மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடு என்னாத முன்னம்
கித்த கருங்குவளை செவ்வி ஓடி கெழுமினவே
மேல்
*25.38. ஊடல் தணிவித்தல்

#389
கவலம் கொள் பேய் தொகை பாய்தர காட்டிடை ஆட்டு உவந்த
தவல் அங்கு இலா சிவன் தில்லை அன்னாய் தழுவி முழுவி
சுவல் அங்கு இருந்த நம் தோன்றல் துணை என தோன்றுதலால்
அவலம் களைந்து பணி செயற்பாலை அரசனுக்கே
மேல்
*25.39. அணைந்த வழி யூடல்

#390
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய்
வேல் தான் திகழ் கண் இளையார் வெகுள்வர் மெய் பாலன் செய்த
பால் தான் திகழும் பரிசினம் மேவும் படிறு உவவேம்
கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே
மேல்
*25.40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

#391
செம் தார் நறும் கொன்றை சிற்றம்பலவர் தில்லை நகர் ஓர்
பந்து ஆர் விரலியை பாய் புனல் ஆட்டி மன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன்றாய் நிற்குமாறு என் வள மனையில்
கொந்து ஆர் தடம் தோள் விடம் கால் அயில் படை கொற்றவரே
மேல்
*25.41. கலவி கருதிப் புலத்தல்

#392
மின் துன்னிய செம் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்று உன்னிய கழல் சிற்றம்பலவன் தென்னம் பொதியில்
நன்றும் சிறியவர் இல் எமது இல்லம் நல் ஊர மன்னோ
இன்று உன் திருவருள் இத்துணை சாலும்-மன் எங்களுக்கே
மேல்
*25.42. மிகுத்துரைத்து ஊடல்

#393
செழுமிய மாளிகை சிற்றம்பலவர் சென்று அன்பர் சிந்தை
கழுமிய கூத்தர் கடி பொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழு குடியீர்
விழுமிய அல்ல-கொல்லோ இன்னவாறு விரும்புவதே
மேல்
*25.43. ஊடல் நீட வாடி உரைத்தல்

#394
திருந்தேன் உய நின்ற சிற்றம்பலவர் தென்னம் பொதியில்
இருந்தேன் உய வந்து இணை மலர் கண்ணின் இன் நோக்கு அருளி
பெரும் தேன் என நெஞ்சு உக பிடித்து ஆண்ட நம் பெண் அமிழ்தம்
வருந்தேல் அது அன்று இதுவோ வருவது ஒர் வஞ்சனையே
மேல்
*25.44. துனியழிந்து உரைத்தல்

#395
இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு என் நிலை இமையோர் இறைஞ்சும்
செயல் மன்னும் சீர் கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில்
புயல் மன்னு குன்றில் பொரு வேல் துணையா பொம்மென் இருள்-வாய்
அயல் மன்னும் யானை துரந்து அரி தேரும் அதரகத்தே
மேல்
*25.45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்

#396
கதிர்த்த நகை மன்னும் சிற்றவ்வைமார்களை கண் பிழைப்பித்து
எதிர்த்து எங்கு நின்று எ பரிசு அளித்தான் இமையோர் இறைஞ்சும்
மது தங்கிய கொன்றை வார் சடை ஈசர் வண் தில்லை நல்லார்
பொது தம்பலம் கொணர்ந்தோ புதல்வா எம்மை பூசிப்பதே
மேல்
*25.46. கலவி இடத்து ஊடல்

#397
சிலை மலி வாள் நுதல் எங்கையது ஆகம் என செழும் பூண்
மலை மலி மார்பின் உதைப்ப தந்தான் தலை மன்னர் தில்லை
உலை மலி வேல் படை ஊரனின் கள்வர் இல் என்ன உன்னி
கலை மலி காரிகை கண் முத்த மாலை கலுழ்ந்தனவே
மேல்
*25.47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்

#398
ஆறு ஊர் சடை முடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்
மாறு ஊர் மழ விடையாய் கண்டிலம் வண் கதிர் வெதுப்பு
நீறு ஊர் கொடு நெறி சென்று இ செறி மென் முலை நெருங்க
சீறூர் மரை அதளில் தங்கு கங்குல் சிறு துயிலே
மேல்
*25.48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்

#399
ஐயுறவாய் நம் அகன் கடை கண்டு வண் தேர் உருட்டும்
மை உறு வாள் கண் மழவை தழுவ மற்று உன் மகனே
மெய் உறவாம் இது உன் இல்லே வருக என வெள்கி சென்றாள்
கை உறு மான் மறியோன் புலியூர் அன்ன காரிகையே
மேல்
*25.49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்

#400
கார் அணி கற்பகம் கற்றவர் நல் துணை பாணர் ஒக்கல்
சீர் அணி சிந்தாமணி அணி தில்லை சிவனடிக்கு
தார் அணி கொன்றையன் தக்கோர்-தம் சங்கநிதி விதி சேர்
ஊருணி உற்றவர்க்கு ஊரன் மற்று யாவர்க்கும் ஊதியமே
மேல்
மேல்
மாணிக்கவாசகர் வரலாறு

 மாணிக்கவாசகர்





சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முந்தய மூவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் தேவாரம் பாடியிருக்க, இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும்.

இவர் 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, சிறந்த சிவபக்தரான, இரண்டாம் வரகுண வர்மன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம், தலையமைச்சராக பணியாற்றினார். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர் இல்லை. மேலும், சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில், இவர் இடம் பெறவில்லை. எனவே, இவர் சுந்தரர் காலத்திற்கு பின் பட்டவராக இருக்க வேண்டும். இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள்,

தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான ஜி.யூ.போப், இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல், சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே", "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.", எனும் அடிகளால், தமிழின் அருட் திறத்தையும், வாதவூராரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரை செய்" எனும், திருநாவுக்கரசர் பாடல் மூலம் மாணிக்கவாசகர், அப்பருக்கும் முந்திய காலத்தார் என கருதப்படுகிறது.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர், 32 ஆண்டுகளே வாழ்ந்து, ஆனி மகத்தில் சிதம்பரத்தில், சாயுச்சிய முக்தி யடைந்து, சிவனடி சேர்ந்தார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரம ராயன் என்ற பெயர்களும் உண்டு.

வரலாறு

செந்தமிழ் மணமும் சிவமணமும் ஒருங்கே கமழும் திருநாடு, தென்பாண்டி வளநாடு. இந்நாட்டை அணிசெய்வது, ``புனல்யாறு அன்று இது பூம்புனல்யாறு` எனப் புலவர்களால் போற்றப்படும், வையை யாறு ஆகும். இந்நதி, வரலாற்றுச் சிறப்பும், புராண இதிகாசச் சிறப்புகளும் உடையது.

திரு அவதாரம்:

வைகை யாற்றங்கரையில், மதுரை மாநகரத்திலிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில், திருவாதவூர் என்ற ஒரு தலமும் உள்ளது. இத்தலத்தில், இறைவன் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு, எழுந்தருளி யுள்ளார். இத்தலம், வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என்றும் வழங்கப் பெறுகிறது. இந்நகரில், அமாத்திய அந்தணர் குலத்தில், சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாத சிருதயர்.

அவர் மனைவியாரின் பெயர், சிவஞானவதி என்பதாகும். இவ்விருவரும், இல்லறம் வழுவாது ஒழுகிவரும் நாளில், தென்னாட்டில் புறச் சமயமாகிய, புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் இவ் விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும், திருமகனார் ஒருவர் திருஅவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து, அம்மகனார்க்கு ``திருவாதவூரார்`` என்னும் திருப்பெயர்ச் சூட்டினர்.

அமைச்சுரிமை யேற்றல்:

திருவாதவூரார்க்கு, வயது ஏற ஏறக், கலைஞானங்களும் நிரம்பின.

பதினாறு வயதளவில், வாதவூரார் கலைஞானங்கள் அனைத் தும் கைவரப்பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக் கத்தையும் உற்றது கொண்டு, மேல் வந்துறு பொருள் உணர்த்தும், அறிவின் திறனையும் கண்டு, அனைவரும் வியந்தனர். அக்காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன், அரிமர்த்தன பாண்டியன் என்பவனாவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக், கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன், அவரைத் தனது அவைக்கு அழைத்து, அள வளாவி அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து, ``தென்னவன் பிரம்மராயன்`` என்னும் பட்டம் சூட்டி,

தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும், இஃது இறைவனுடைய ஆணை யென்று எண்ணி, அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை, மிகக் கவனத்தோடு இயற்றிவந்தார். வாதவூரது அமைச்சுரிமையலால், குடிமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். வாதவூரரும், அரிமர்த்தன பாண்டியனுக்குக், கண்ணும் கவசமுமாக விளங்கி வந்தார்.

பதவியில் பற்றின்மை:

வாதவூரார், தமக்குக் கிடைத்த அமைச்சுரிமைத் தகுதியால், உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சி யடையவில்லை.

உலக வாழ் வும், வாழ்வில் காணும் பெரும் போகமும், நிலையற்றவை என்றறிந் தமையால், அப்பதவியில் அவர்க்கு உவர்ப்புத் தோன்றியது. ``கூத்தினர் தன்மை வேறு, கோலம் வேறு ஆகுமாறு போல``, இவர் மேற் கொண்டிருந்த அமைச்சுரிமைக்கும், இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை, இவருக்கு மிகுந்து வந்தது. பிறவிப் பெரும் பயனை, அடைதற்குரிய வழி என்ன, என்பதிலேயே இவருடைய சிந்தனை, சுழன்று கொண்டிருந்தது.

குதிரைகள் வாங்கச் செல்லல்:

ஒருநாள், வாதவூரார் அரசவையில், அமைச்சராய் வீற்றிருந்தார்.

அப்போது, அரசனுடைய குதிரைச் சேவகர்கள் அங்கு வந்து, `அரசரே! நமது குதிரைப் படைகள் குறைந்து விட்டன. வயது முதிர்ந்த குதிரைகளும், நோய் நிறைந்த குதிரைகளுமே, இப்போது உள்ளன. சிறந்த குதிரைகள் நம்மிடம் இல்லை. ஆதலின், குதிரைப் படைகளைப் பலப்படுத்த வேண்டும், என்று நினைவுறுத்துவது எங்கள் கடமை`, என்று வணங்கித் தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது, அரசவையிலிருந்த சில தூதர்கள், கீழைக் கடற்கரையில், நல்ல குதிரைகள்வந்து இறங்கியிருக்கின்ற செய்தியை, அரசனிடத்துத் தெரிவித்தார்கள்.

அரசன், அமைச்சர் பெருமானாகிய பிரமராயரைப் பார்த்து, ``நம்முடைய கருவூலத்திலிருந்து, வேண்டும் பொருள்களைப், பணியாளர் மூலம் எடுத்துச் சென்று, நல்ல குதிரைகளை வாங்கி வருக``, என்று ஆணையிட்டான். வாதவூரரும், அக்கட்டளையை ஏற்றுப் பொற்பண்டாரத்தைத் திறந்து, அளவிறந்த பொருள்களை, ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு, படைகளும் பரிசனங்களும், தன்னைச் சூழ்ந்துவர, மதுரைச் சொக்கேசன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி, மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல மாதங்களைக் கடந்து, திருப்பெருந் துறையென்னும், தலத்தை அடைந்தார்.

அவ்வூரை அணுக அணுக, அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை, குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே, இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.

குரு உபதேசம்:




அவ்வேளையில், சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது, அவர் செவிகளுக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில், கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில், சீடர்கள் சிலரோடு, சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார்.

வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும், கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள், அந்தக் குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பற்றறுக்கும் ஆசானாக, அந்தக் குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத்திருக்கை, சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம், ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள், திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு வீற்றிருந்த, குருநாதரைக் கண்ட வாதவூரார், தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர், இவரே யென்று எண்ணினார்.

காந்தம் கண்ட இரும்பு போல, மணிவாசகர் மனம், குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில், விரைந்து அருகிற் சென்ற வாதவூரார், அடியற்ற மரம் போல, அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்து, `அய்யனே ! , எளியேனை ஆட்கொண்டருளுக`, என வேண்டி நின்றார். வாதவூரரின், பரிபாக நிலையைக் கண்ட குருநாதர், திருக்கண் நோக்கம், ஸ்பரிசம் முதலிய தீட்சைகள் செய்து, திருவடிசூட்டி திருவைந்தெழுத்தை, அவருக்கு உபதேசம் செய்தருளினார். இவ்வாறு, தம்மை ஆட்கொண்டருளிய, பெருங்கருணைத் திறத்தை, வியந்து வாதவூரார்,

ஞானாசிரியரது திருவருள் நோக்கால், ஞானத்தின் திருவுருவாகவே வாதவூரார் மாறினார். தமது குருநாதரின் திருவடிகளுக்கு, தம்மை ஆட்கொண்ட கருணையை குறித்து, சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.

பெயர் சூட்டல்:

ஞானாசிரியர் திருமுன், வாதவூரார் பாடிய தோத்திரங்கள், இனிமையோடும், கேட்போர் மனத்தையுருக்கும், அருள் விளக்கத் தோடும் இருந்த காரணத்தால், ஞானாசிரியர், வாதவூரரை நோக்கி, ``உனக்கு, மாணிக்கவாசகன்` என்ற பெயர் தந்தோம்`` என்று கூறி, அவருக்கு அப்பெயரை தீட்சா நாமமாகச் சூட்டினார்.

அன்று முதல், வாதவூரார் என்ற திருப்பெயருடன், மாணிக்க வாசகர் என்ற பெயரும்; அவருக்கு வழங்குவதாயிற்று.

திருப்பெருந்துறைத் திருப்பணி:

மணிவாசகர்; குருநாதரை வணங்கி, `என்னை ஆட்கொண்ட போதே, என்னுயிரும் உடைமையும்; தங்கட்குரியவாயின. ஆதலால், அடியேன் கொண்டு வந்த, பொருள்கள் அனைத்தையும் தாங்கள், ஏற்றுக் கொண்டு அருளல் வேண்டும்` என்று குறையிரந்தார். குருநாதரும், `அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாணை யிட்டார். அக்கட்டளையின்படியே, மணிவாசகர்; அப்பொருள்களைக் கொண்டு,

திருப்பெருந்துறையில், மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு, மாகேசுவரபூசை நிகழ்த் தினார். இவ்வாறு, அரசன் குதிரை வாங்குவதற்கு, தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும், சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. மணிவாசகர், அருளாரமுதத்தை உண்டு கொண்டே, தெருளார் சிவானந்த போகத்துத் திளைத்திருந்தார். அமைச்சரின் வேறுபட்ட நிலையை, உடன் வந்தவர்கள் கண்டு மணிவாசகரிடம், `குதிரை கொண்டு மதுரை செல்லவேண்டுமே`,

என்று, தாங்கள் எண்ணிவந்த செயலை நினைவூட்டினர். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய், இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பணியாளர்கள், மதுரை மாநகருக்குச் சென்று, பாண்டியனிடம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் அழைப்பு:

இச் செய்தியையறிந்த பாண்டியன், சினந்து திருமுகம் ஒன்று எழுதி, அதனை வாதவூரரிடம் சேர்ப்பித்து, அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டு, சிலரை ஏவினான். பணியாளர்களும், திருப்பெருந் துறையை அடைந்து, அரசன் அளித்த திருமுகத்தை, அமைச்சர் பிரானிடம் கொடுத்து, அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர்.

அதனைக் கேட்ட வாதவூரார், தம் குருநாதரிடம் சென்று, நிகழ்ந்ததை விண்ணப் பித்து நின்றார். குருநாதர் புன்முருவல் பூத்து, ``அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும், என்று மன்னனிடம் அறிவித்து, விலை யுயர்ந்த மாணிக்கக்கல்லையும், கையுறையாகக் கொடுக்க`` எனக் கூறி, மாணிக்க மணியை அளித்து, விடை கொடுத்தனுப்பினார். வாதவூரரும், குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய், பிரியா விடைபெற்று ,மதுரைக்கு எழுந்தருளினார். அரசவைக்கு வந்த மணிவாசகர், இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து,

`வருகின்ற ஆவணிமூல நாளில், குதிரைகள் மதுரை வந்தடையும்` என்று கூறினார். அரசனும், சினம் மாறி மனம் மகிழ்ந்து, அமைச்சரை அன்போடு வரவேற்று, அருகிருந்து அவரை மகிழ்வித்தான்.

மணிவாசகரை மன்னன் ஒறுத்தல்:

ஆவணி மூலநாளை; அரிமர்த்தனன்; ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர்; அமைச்சருள் சிலர், `வாதவூரார் சொல்லியன அனைத்தும் பொய்யுரை; அவர், தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும், திருப்பெருந்துறையில் அரன் பணிக்காகச் செலவிட்டு விட்டார்,

அவர் கூறுவதை நம்ப வேண்டா`` என்று கூறினர். பாண்டியன் ஒற்றர்களை விடுத்து, அவர்கள் மூலம்; அமைச்சர்கள் கூறியன அனைத்தும், உண்மையென்பதை அறிந்தான். வாதவூரார் செய்கையை எண்ணிச் சினந்து, தண்டநாயகர் சிலரை அழைத்து, வாதவூரார் பால் சென்று, குதிரை வாங்கக்கொண்டுபோன, பொருள்கள் அனைத்தையும், வற்புறுத்தித் திரும்பப் பெற்று வருமாறு கட்டளை யிட்டான். அச் சேனைத் தலைவர்கள், வாதவூரரிடம் சென்று, மன்னன் கட்டளையை எடுத்துக்கூறி, அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். கொடுஞ்சிறையில் இட்டனர்.

சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர். வாதவூரார்; இறைவனைத் தியானித்து, ஐயனே! ஆவணி மூலத்தன்று; குதிரை வருவதாகக் கூறிய, உன் உரை பொய்யாகுமோ?. உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது தகுதியா?.  என்னைக் கைவிடில்; எனக்கு யார் துணை?. அடியான் ஒருவன் துன்புறுவது; உனக்குக் குறையல்லவா?. என்றெல்லாம் இறைவனிடம் முறையிட்டு வருந்தினார்.

நரிகள் பரிகளாயின:

வாதவூரார் தம் வருத்தத்தைத் தணிக்க, திருவுள்ளம் கொண்ட பெருமான், நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றித்

தேவர்களெல்லாம் குதிரைச் சேவகர்களாய்ப் புடைசூழத், தான் குதிரை வாணிகன் போல திருக்கோலம் கொண்டு, வேதமாகிய குதிரையில் அமர்ந்து, மதுரையை நோக்கிப் புறப்பட்டான். குதிரைப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. குதிரைப் படைகள் மதுரை நோக்கி வருவதை, ஒற்றர்கள் மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்து விட்டோமோ? என்று வருந்தி, அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று, முகமன் கூறி அருகிருத்தினான்.

பாண்டியன் பரிசு:

கடல் அலை போல்; வந்த படைகளின், விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம்; வானை மறைத்தது. குதிரைக்கூட்டம், மதுரை மாநகரை அடைந்தது. வாணிகத் தலைவனாக வந்த சிவபிரான், பாண்டியன் முன்னிலையில், குதிரைகளனைத்தையும், கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில்; நடத்திக் காட்டியும்; ஆடல்கள் புரியச் செய்தும், பாண்டியனை மகிழ்வுறுத்தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன், குதிரைத் தலைவனுக்கு, ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான், அப்பரிசை; புன்னகையோடு தன் செண்டினால் வாங்க,

தான் அளித்த பரிசை; மரியாதைக் குறைவாகக் குதிரைத் தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன்; வெகுண்டு எழ. அருகிலிருந்த வாதவூரார், `செண்டினால் பரிசு பெறுதல், அவர்கள் நாட்டு வழக்கு` என்றுகூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர், குதிரை இலக்கணமறிந்த புலவர்கள், குதிரைகளை யெல்லாம்; இவைகள் நல்ல நிறமும்; நடையும், சுழிகளும்; பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும்; தானளித்த பொருளைவிடப்; பல மடங்கு அதிகமான குதிரைகளைப்; பெற்றதாக மகிழ்ந்து; அவைகளைப் பந்தியில் சேர்க்குமாறு பணித்தனன்.

வணிகர் தலைவன்; குதிரைகளையெல்லாம்; கயிறுமாறி கொடுக்கும் படி,  தன்னுடன் வந்தவர்களிடம் கூறி, அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.

பரிகள் நரிகளாயின:



அன்று இரவு நடுநிசியில், குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின. பந்தியில் இருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்று; ஊர்மக்கள் அஞ்சும்படி, மூலை முடுக்குகளில் எல்லாம் ஓடி மறைந்தன. காலையில்; குதிரைச் சேவகர்கள் உள்ளம் பதறி  உடல் நடுங்கி, அரசனிடம் வந்து முறையிட்டனர். இச்செய்தியைக் கேட்ட மன்னன், சினம் பொங்கி அமைச்சர்களை அழைத்து,

திருவாதவூரார் செய்த வஞ்சனையைக் கூறிப் படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தி; தண்டனை அளித்து; அவரிடத்தில் கொடுத்த பொருள்களை யெல்லாம், திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு உத்தர விட்டான். படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று, சுடுவெயிலில் நிறுத்தித், தலையிலே கல்லேற்றி ஒறுத்தார்கள். வாதவூரார், இறைவன் திருவருளை நினைந்து, எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ?. என்று கூறி வருந்தி நின்றார்.

வைகையில் வெள்ளம்:

வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான்,

வைகையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வைகையில் தோன்றிய பெருவெள்ளம், மதுரைமாநகர் முழுவதும் விரைந்து பரவத்தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர்மக்கள், ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி, மன்னனிடம் சென்று முறையிட்டனர். பாண்டியனும், ஆற்று வெள்ளத்தைத் தணிக்க, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு, வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகியதேயல்லாமல், சிறிதும் குறையாதது கண்டு, அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்து, சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது

என்று நன்கு தெளிந்து, அவரை விடுவித்து; மதுரை மாநகரை; இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும்; என்று வேண்டிக் கொண்டார். வாதவூரரும்; திருவருளை எண்ணி வழுத் தினார். வெள்ளத்தின் வேகம்; ஒரு சிறிது குறைந்தது. இருப்பினும்; முற்றும் வெள்ளம் குறையவில்லை. அதனைக்கண்ட பாண்டியன்; மதுரை மக்களையெல்லாம் ஒருங்குகூட்டி; ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு; என்று அளந்து கொடுத்து; ஆற்றின் கரையை அடைக்கும்படி ஆணையிட்டான்.

மண் சுமந்தது:

அரசன் ஆணையை காவலர்கள்; ஊர் முழுவதும் முரசறைந்து அறிவித்தனர்.

அந்நகரில்; பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும், வந்தி என்னும் மூதாட்டி; தனக்கு அளவு செய்துவிட்ட; ஆற்றின் பங்கை அடைக்க; ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவனிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின்; துன்பத்தைத் தவிர்க்க; இறைவன் அவளிடம்; கூலி ஆள் போலத் தோன்றினான், `யாரேனும் கூலி கொடுத்து; என் வேலை கொள்வார் உண்டோ?`; என்று கூவிய வண்ணம்; தன்னை வந்தடைந்த; அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்து, `நீ எனக்குக் கூலியாளாக வரவேண்டும்;

அவ்வாறு வந்து, என் ஆற்றின் பங்கை, அடைத்துத் தருவாயானால், நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்` என்று கூறினாள். அதற்கு இசைந்த அந்தக் கூலியாள், அவள் கொடுத்த பிட்டை வாங்கி உண்டு, தாயே! என் பசி தீர்ந்தது; இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன், என்று அவன் பங்கை அறிந்து, அதனை அடைப்பதற்கு முற்பட்டான்.

பாண்டியன் பிரம்படி:

வேலையைத் தொடங்கிய, அவ் வந்தியின் ஆளாகிய சிவபெருமான், மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று,

கரையில் கொட்டிவிட்டுக், களைப்படைந்தவன் போல, ஓய்வு எடுத்துக் கொள்வதும், வந்தி அளித்த பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடுவதும் செய்து, பொழுது போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக், கூடையைத் தலையணையாக வைத்து, உறங்கவும் செய்தான். ஆற்றின் கரை அடைபட்டதா, என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும், தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும், கிழவி யின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடக்கிறது.

வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன்; சரிவரத் தன் பணியைச் செய்யாமல் பொழுதைக் கழிக்கிறான்; அதனால் அப்பகுதி; நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு ஊரார் பங்கையும் கரைக்கிறது; என்று கூறினர். உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன்; அந்தக் கூலியாளை அழைத்து வரச்செய்து; தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில் அடித்தான். அடித்த அளவில்; கூலியாளாக வந்த பெருமான்; ஒருகூடை மண்ணை; உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி; அரசன்,

அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அண்ட சராசரப் பொருள் அனைத்தின் மேலும் பட்டது. அப்போது வாதவூரார்; இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக; வந்த திருவருளை எண்ணி வியந்தார். பாண்டிய மன்னன்; வாதவூரார் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி, `நற்றவப் பெரியீர்! எனக்கு அமைச்சராய் இருந்து; எம் குலதெய்வத்தை என் கண்ணாரக்காட்டி; குதிரைச் சேவகனாக வும், கூலியாளாகவும் வரச்செய்து; என் பிறவி மாசை ஒழித்த பெரியவரே, என்னை மன்னித்தருள வேண்டும்.

தங்கள் பெருமையை, இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை, இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்`, என்று வேண்டினான். வாதவூரார் பாண்டியனிடம், `இறைவனுடைய திருவடித்தொண்டு செய்ய, என்னை உரிமையாக்குவதே, இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்` என்றார். மன்னனும், அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு, தம் அரண்மனைக்குச் சென்றான்.

அமைச்சியலைத் துறந்து, தவ வேடம் தாங்கிய வாதவூரடிகள், இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய், திருப் பெருந்துறையை அடைந்தார்.

குருநாதர் பிரிவு:

மீண்டும் தன் குருநாதரை அடைந்த வாதவூரடிகள், அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த பெருமான், தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதை சீடர்களுக்கு உணர்த்தி, அவர்களை இன்புற்றிருக்குமாறு பணித்தார். அடியவர்கள், தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல், பெரிதும் வருந்தினர். அதனைக் கண்ட குருநாதர், இக் குருந்த மரத்தின் நிழலில், ஒரு தெய்வப் பீடம் அமைத்து, அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி, வழிபாடு செய்து வருவீர்களானால், ஒருநாள்,

`இக்கோயில் திருக்குளத்தில், தீப் பிழம்பு ஒன்று தோன்றும்; அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்`, என்று திருவாய் மலர்ந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை, `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும், அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர், `நீ எம்மைப் பின் தொடர்ந்து வருதல் வேண்டா; உத்தர கோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று, அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக் கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர், தில்லை அடைவாயாக`

என்று கூறிச்சென்றார். மணிவாசகரும்; அவ்வாறே, திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின்கீழ், ஒரு தெய்வீகப் பீடம் அமைத்து, அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து, அடியார்களோடு தாமும் வழிபட்டு வரலாயினார்.

தல யாத்திரை:

மணிவாசகர், திருவருட் போகத்தில் திளைத்து வாழும் நாள்களில், நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல், அற்புதப் பத்து, அதிசயப்பத்து,  குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப் பத்து,  செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட் பத்து,

திருவார்த்தை, எண்ணப் பதிகம்,  திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி, அடியார் கூட்டத்துடன்; பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும், ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு அதில் மூழ்கினர். பெருமான், அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி, அருட் காட்சி வழங்கியருளினார்.

அடியார்கள் அனைவரும் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர், இவ்வேளையில் கொன்றை மர நிழலில், சிவயோகத்தில் அமர்ந் திருந்தார். இந்நிகழ்ச்சியை, யோகக் காட்சியில் அறிந்த அடிகள், அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த, குருநாதரின் திருவடிப் பீடத்தை, பற்றிக் கொண்டு அழுதார். திருச் சதகம் என்னும் பாமாலையால், இறைவன் திருவருளைத் தோத் திரித்தார். பின்னர், குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம், திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று, அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி,

நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் தோத்திரம் செய்தார். அப்போது, இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய; குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்குப் பல சித்திகளும் கைவரப் பெற்றார். பின்னர், பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு; பாண்டிய நாட்டைக் கடந்து; சோழவளநாட்டைச் சேர்ந்த; திருவிடை மருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந் தருளியுள்ள இறைவன்; அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூரை அடைந்து; புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி,

திருப் புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார். அதன் பின்னர், சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து, பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து, திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள், அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.

திருவண்ணாமலையில்:

அடிகள் அண்ணாமலையில் தங்கியிருந்தபோது, மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில், கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து, வீடுகள்தோறும் சென்று, ஒருவரை யொருவர் துயிலெழுப்பிக் கொண்டு, நீராடி வழிபாடு செய்வதைக் கண்டு, அவர்கள் வாய் மொழியாகவே வைத்து, திருவெம் பாவையையும், அவ்வூர்ப் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு, அவர்கள் பாடுவதாக வைத்து, திருவம்மானையையும் அருளினார்.

சிதம்பர தரிசனம்:

பின்னர், அண்ணாமலையை நீங்கிக் காஞ்சிபுரம் அடைந்து, அவ்வூர் இறைவனைத் தரிசித்துத்,

திருக்கழுக்குன்றம் அடைந்து, திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே, பெருமான் பெருந்துறை யில், அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, திருத்தில்லையின் எல்லையை அடைந்து, அத் திருத்தலத்தைத் தரிசித்தார். தில்லை, சிவ லோகம் போலக் காட்சியளித்தது. அந்நகரை யடைந்த மணிவாசகர், திருவீதிகளைக் கடந்து, வடக்குத் திருவாயில் வழியே, திருக் கோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி, வலமாகச் சிற்சபை யில் எழுந்தருளியிருக்கும், ஆனந்த நடராசப் பெருமானை,


ஆறா அன்பினில் கண்டு, கண்ணீர்வார உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளி வந்து, காட்சி கொடுத்த இறைவனை, தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து, பேரானந்தம் உற்று, ஆனந்தக் கண்ணீர் பெருக, கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர், தில்லையின் கீழ்த்திசையில், ஒரு தவச்சாலை அமைத்து, பலநாள்கள் தங்கியிருந்து, தினமும் அம்பலவாணனின், ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார். அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து, மீண்டும் தில்லை வந்தடைந்தார்.

தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை, குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து, என்பனவாம்.

புத்தரொடு சமய வாதம்:

மணிவாசகர், தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில், சிவனடி யார் ஒருவர், சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார்.

அவ்வடியார் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார்.

அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ்வடியார், அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து, `தீயவரும் உள்ளன் போடு இப்பெயரை ஒருமுறை கூறினால், 21,600 தடவை, திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்` என்று கூறித் தில்லைப் பெருமானின், சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன், சிவனடியார் கூறுவதைக் கேட்டுச் சினந்து, `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ?, இன்றே நான் தில்லைக்குச் சென்று, சைவத்தை வென்று, புத்தனே கடவுள், என்று நிலைநாட்டி வருவேன்`

என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்தரசனும், தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு, புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி, புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு, `யாம் உங்கள் சமயத்தை வென்று, எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம், என்று வாதிற்கு அறைகூவினான்.

அச்சூளுரை, தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது, அவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு, தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும், புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன், தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான், அவர்கள் கனவில் எழுந்தருளி, `தில்லையின் கீழ்பால், சிவயோகத்தில் அமர்ந்து, தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை, அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; ` என்று கூறி மறைந்தார்.

மறுநாள், தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும்; ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு; இறைவன் திருவருளை வியந்து; மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து; மணிவாசகரிடம் ``அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து; புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன்; ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து; அவர்களை வாதில் வென்று; நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்`` என்று அழைத்தார்கள்.

ஊமைப்பெண் பேசியது:

வாதவூரடிகளும், தில்லை மூவாயிரவருடன் சென்று, ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று,

புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி, அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து, தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும்; மறையோரும்; புலவர்களும்; அவ்வவை யில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, `புத்தர்களை வாதில் வென்று; நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்வது என் கடமை`, என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து; `வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார்.

வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும்; அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர்; கலை மகளை வேண்டி; சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை` என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர்.

இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன், வாதவூரரை வணங்கி; `அடிகளே; என் பெண் பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படிச் செய்தால்; நான் தங்களுக்கு அடிமையாவேன்` என்று கூறினான். வாதவூராரும் அதற்கிசைந்து; அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அப்பெண்ணும்; அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை; மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க; அப்பெண் அதற்கு விடையளித்தாள்.

அந்த வினாவிடைகள் தாம், திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்து; மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கி, சைவம் சார்ந்தான். அவையோர் அனைவரும்; மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன்; திருநீறும் கண்டிகையும் பூண்டு; அடிகளைப் பணிந்து; புத்தகுருவும் மற்றவர்களும்; மீண்டும் பேசும் திறம் பெற; அருள் செய்ய வேண்டுமென்று வேண்டினான். மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார்.

அவ்வளவில் அனைவரும்; ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று; மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை, மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும்; அவரைச் சூழ வந்த அனைவரும்; சைவர்களாக மாறினர். மணிவாசகரும் திருக்கோயிலுக்குட் சென்று; சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில்; மணிவாசகர்; திருப்படையாட்சி, திருப்படை யெழுச்சி, அச்சோப் பத்து, யாத்திரைப்பத்து என்ற பதிகங்களைப் பாடியருளினார்.

இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது:

இவ்வாறு; சிதம்பரத்தில்; மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள்களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர்; அவரிடம் வந்து, தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காக; செய்த அருட்செயல், உலகெங்கும் பரவியுள்ளது; என்றும் வியந்து கூறி, மணி வாசகர் பல சமயங்களிலும்; பாடிய பாடல்களை, முறையாகச் சொல்லும்படி; கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும், அந்தணரை அருகிலிருத்தி; தாம் பாடிய திருவாசகப் பாடல்கள்; அனைத்தையும் சொல்லியருளினார்.

அந்தணரும், தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து; `பாவைபாடிய தங்கள் திருவாயால்; ஒரு கோவை பாடுக` என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர்; இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட; இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார். கேட்ட அந்தணர்; அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர்; அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதனைக் கண்ட மணிவாசகர்; இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து; ஆனந்தக் கண்ணீர் பெருகி; திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாசக உட்பொருள்:

திருவாதவூரரின் திருவாசகத்தையும் திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன், அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி, நூலின் முடிவில், `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து`, எனத் திருச்சாத்திட்டு தில்லைச் சிற்றம்பலத்தின், வாயிற்படியிலே வைத்தருளினார்.

காலையில், இறைவனைப் பூசை செய்ய வந்த அர்ச்சகர், வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு அதனையெடுத்து, ஆண்டவனால் இது தரப்பட்டதாகும், என்ற அன்புணர்வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார்.

அவ்வேடுகளின் முடிவில், திருவாதவூரார் சொற்படி, திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து, என்றிருந்ததைக்கண்டு, உடல் சிலிர்த்து, இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில், இது தலையானது என்று புகழ்ந்து, இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல், இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரார் அதனைக் கேட்டு, திருவருளையெண்ணி வணங் கினார்.

முடிவில் அந்தணர் அனைவரும், இந்நூலின் பொருளை, தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மணிவாசகர், இதன் பொருளை, தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி; அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள்; இச்சபையில் எழுந்தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவான்`;  என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார். இவ்வற்புத நிகழ்ச்சியைக் கண்ட அனைவரும்; வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர்.

நடராசப்பெருமான், மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலேயே, இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து, அவரை ஆட் கொண்டருளினார்.

அடிகள் காலம்:

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பல்வேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும், அடிகளார்; கடைச் சங்க காலத்திற்குப் பின் தொடங்கி

11-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில், ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம், என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளை, தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம், கி பி மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து, தருமை ஆதீன திருவாசக நூல் வெளியீட்டு விழாவில் மகாவித்துவான், திரு. தண்டபாணி தேசிகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய கால ஆராய்ச்சித் தொகுப்புரையின், ஒரு பகுதியைச் சுருக்கித் தருகின்றோம்.

``திருமலைக் கொழுந்துப் பிள்ளை அவர்கள்; முதல் நூற்றாண்டாகவும்,

பொன்னம்பலப் பிள்ளை அவர்கள், இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள், மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர், ஏழாம் நூற்றாண்டு என்றும், ஜி யு போப் ஏழு, எட்டு அல்லது 9 - ஆம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை 9 - ஆம் நூற்றாண்டு என்றும், சி கே சுப்பிரமணிய முதலியார், மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர். மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது.

மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம்.

பன்னிரு திருமுறைகளில், மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. சோதனைகளைக் கடந்த, இறைவழி நின்ற மாணிக்க வாசகர், 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, ஒரு ஆனி மாதம், மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார். மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு: 1. திருவாசகம்; 2. திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது ஒரு பெரிய தொகுப்பு நூல்.

இதில் மொத்தம் 51 பாடல் நூல்கள் உள்ளன. அவற்றுள் பத்துப்பத்துப் பாடல்களாகப் பாடிய பதிகநூல்களே அதிகம். நீண்ட பாடல்களாக விளங்குபவை சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம் ஆகியவை. இவற்றில் பல பாடல்கள் புகழ்பெற்றவையாய் விளங்கிடினும், மிக அதிகமாக வழங்கப்படுபவை, சிவபுராணமும் திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியும் தான். திருவெம்பாவை, தொள்ளாயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது.

"தமிழ் மந்திரம்" என்ற பெயரில் அந்தக்காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும், சில திருவிழாக் காலத்திலும், சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர். ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் "ஏலோர் எம்பாவாய்!" என்ற சொற்றொடர் காணப்படும். அது மருவி வந்து இப்போது சயாமியரால், " லோரி பாவாய்" என்று அழைக்கப்படுகிறது.

அற்புதங்கள்

சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும்,
மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது.
பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.
தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது.
எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

ஜி யு போப் கருத்து

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.

சர்வலோக நாயகனான இறைவன் மண் சுமக்க வந்த காட்சியை திருவாதவூரடிகள் புராணம் (மண்சுமந்த சருக்கம் 29)

ஆடையும் துணிந்த சீரையாக்கியே, கூலியாளாய் கூடையும் தலைமேல் கொண்டு, கொட்டுடைத் தோளராகி பீடை கொண்டயர்வாள், காணப் பெரும்பசியுடையார் போல, வேடைகொண்டொல்லை வந்தார், வேண்டிய வடிவம் கொள்வார் என்று விவரிக்கிறது. "திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்", தொல்லை யிரும்பிறவி சூழும் தளை நீக்கி, அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே, எல்லை மருவா நெறியளிக்கும், வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

"வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" வள்ளலார் சுவாமிகள்


வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே. - வள்ளலார் சுவாமிகள்.

இவை அனைத்தும் மாணிக்க வாசக சுவாமிகள் தீந்தமிழால் சிவபெருமானை குறித்துப் பாடிய திருவாசகத்தை பற்றிய சில புகழாரங்கள்.

 

தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோவில்கள் உள்ள இடங்கள் 


திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோவில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோவில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்ததாக கூறுவர்.

மதுரை மாவட்டம் திருவாதவூர் தலம். இங்குதான் மாணிக்கவாசகர் அவதரித்ததாக கூறுவர்.

தேனி மாவட்டம் சின்னமனுார். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன் மற்றும் அம்பிகை பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில். இங்கு சிவபெருமானே மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில்மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவனே, திருவாசகத்தை எழுதிய தலம். மாணிக்கவாசகர் சிவனுடன் ஐக்கியமாகிய தலம். தில்லைக்காளி கோவில் அருகில் தனி சன்னதி உள்ளது.

ref : https://www.lkedu.lk/2020/07/blog-post_87.html

மேல்

No comments:

Post a Comment

தொடர்பு படிவம்

Name

Email *

Message *