திரு(முறை)மந்திரம் 10

திருமூலர் இயற்றிய திருமந்திரம் (பாடல்கள் 1 - 3047)
திருமூலர் திருவடிகளில் சமர்ப்பணம்
🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺
10-பத்தாம் திருமுறை
திருமந்திரம்
0.பாயிரம்
1 - 112
1.முதல் தந்திரம்
113 - 336
2.இரண்டாம் தந்திரம்
337 - 548
3.மூன்றாம் தந்திரம்
549 - 883
4.நான்காம் தந்திரம்
884 - 1418
5.ஐந்தாம் தந்திரம்
1419 - 1572
6.ஆறாம் தந்திரம்
1573 - 1703
7.ஏழாம் தந்திரம்
1704 - 2121
8.எட்டாம் தந்திரம்
2122 - 2648
9.ஒன்பதாம் தந்திரம்
2649 - 3047

0 பாயிரம் 
#1
ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள்
நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே

மேல்

#2
போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே

மேல்

#3
ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும்
பக்க நின்றார் அறியாத பரமனை
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே

மேல்

#4
அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை
புகலிடத்து என்றனை போதவிட்டானை
பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே

மேல்

#5
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவன சடைமுடி தாமரையானே

மேல்

#6
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே

மேல்

#7
முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே

மேல்

#8
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ் சடையோனே

மேல்

#9
பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்ன
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே

மேல்

#10
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தட வரை தண் கடம் ஆமே

மேல்

#11
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே

மேல்

#12
கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண்_இலி தேவர் இறந்தார் என பலர்
மண்ணுறுவார்களும் வானுறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே

மேல்

#13
மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே

மேல்

#14
கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி
கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன்
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே

மேல்

#15
ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே

மேல்

#16
கோது குலாவிய கொன்றை குழல் சடை
மாது குலாவிய வாள்_நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவி குணம் பயில்வாரே

மேல்

#17
காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே

மேல்

#18
அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி
அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இது பதி கொள் என்ற எம் பெருமானே

மேல்

#19
இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முது பதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதி ஆக அமருகின்றானே

மேல்

#20
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடி மலர் குன்ற மலையது தானே

மேல்

#21
வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை
கான களிறு கதற பிளந்த எம்
கோனை புகழு-மின் கூடலும் ஆமே

மேல்

#22
மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே

மேல்

#23
வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே

மேல்

#24
போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி
தேற்று-மின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே

மேல்

#25
பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு_இலி-தன்னை தொழு-மின் தொழுதால்
மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே

மேல்

#26
தொடர்ந்து நின்றானை தொழு-மின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமலம் மலர் மேலே
உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே

மேல்

#27
சந்தி என தக்க தாமரை வாள் முகத்து
அந்தம்_இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே

மேல்

#28
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே

மேல்

#29
காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே

மேல்

#30
வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார்
ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே

மேல்

#31
மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித்தேனே

மேல்

#32
தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே

மேல்

#33
பதி பல ஆயது பண்டு இ உலகம்
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார்
துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே

மேல்

#34
சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே

மேல்

#35
ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை
போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில்
மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே

மேல்

#36
அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை
எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால்
அ பரிசு ஈசன் அருள் பெறலாமே

மேல்

#37
நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே

மேல்

#38
பிதற்று ஒழியேன் பெரியான் அரியானை
பிதற்று ஒழியேன் பிறவா உருவானை
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே

மேல்

#39
வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

மேல்

#40
குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே

மேல்

#41
சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானை
புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு
கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே

மேல்

#42
போய் அரன்-தன்னை புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே

மேல்

#43
அரன் அடி சொல்லி அரற்றி அழுது
பரன் அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே

மேல்

#44
போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே

மேல்

#45
விதி வழி அல்லது இ வேலை உலகம்
விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை
துதி வழி நித்தலும் சோதி பிரானும்
பதி வழி காட்டும் பகலவன் ஆமே

மேல்

#46
அந்தி_வண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்தி வண்ணா முதல்வா பரனே என்று
வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே

மேல்

#47
மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து அது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே

மேல்

#48
அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னி
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே

மேல்

#49
பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு
திரை பசு பாவ செழும் கடல் நீந்தி
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே

மேல்

#50
சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் யான் இன்று அறிவது தானே

மேல்

#51
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே

மேல்

#52
வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே

மேல்

#53
இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே

மேல்

#54
திருநெறி ஆவது சித்த சித்து அன்றி
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே

மேல்

#55
ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை
கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆக பெருக்குகின்றாரே

மேல்

#56
பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே

மேல்

#57
அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்தறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே

மேல்

#58
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே

மேல்

#59
பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்
கண்டவர் கூறும் கருத்து அறிவார் என்க
பண்டிதர்-தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்னவாறே

மேல்

#60
அண்ணல் அருளால் அருளும் திவ்யாகமம்
விண்ணில் அமரர்-தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே

மேல்

#61
பரனாய் பராபரம் காட்டி உலகில்
அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே

மேல்

#62
சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே

மேல்

#63
பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்
உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்
மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து
உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே

மேல்

#64
அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்_இலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே

மேல்

#65
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லி
காரிகையார்க்கு கருணைசெய்தானே

மேல்

#66
அவிழ்கின்ற ஆறும் அது கட்டு மாறும்
சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே

மேல்

#67
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மா முனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே

மேல்

#68
நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே

மேல்

#69
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என் வழி ஆமே

மேல்

#70
நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள்
நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே

மேல்

#71
மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையை காட்டகிலானே

மேல்

#72
எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழும் தண் நியமங்கள் செய்யு-மின் என்று அண்ணல்
கொழும் தண் பவள குளிர் சடையோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந்தானே

மேல்

#73
நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு
புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து
அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே

மேல்

#74
செப்பும் சிவாகமம் என்னும் அ பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று
தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின்
ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே

மேல்

#75
இருந்த அ காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வ புவனா பதி ஆம்
அருந்தவ செல்வியை சேவித்து அடியேன்
பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே

மேல்

#76
சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம்
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால்

மேல்

#77
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு
மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே

மேல்

#78
நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த
பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை
சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே

மேல்

#79
சேர்ந்து இருந்தேன் சிவமங்கை-தன் பங்கனை
சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை
சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

மேல்

#80
இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி
இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே

மேல்

#81
பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ்செய்யுமாறே

மேல்

#82
ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு
ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே

மேல்

#83
செல்கின்ற ஆறு அறி சிவன் முனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்-தம்பால்
ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே

மேல்

#84
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமமாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே

மேல்

#85
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம்
தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே

மேல்

#86
பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை
சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி
மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே

மேல்

#87
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே

மேல்

#88
அடி முடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே

மேல்

#89
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே

மேல்

#90
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை
மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை
ஆயத்தை அ சிவம்-தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே

மேல்

#91
விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி
அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்க_அறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து
வளப்பின் கயிலை வழியில் வந்தேனே

மேல்

#92
நந்தி அருளாலே மூலனை நாடி பின்
நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான் இருந்தேனே

மேல்

#93
இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே

மேல்

#94
பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி-தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை
இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே

மேல்

#95
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
வேர் அறியாமை விளம்புகின்றேனே

மேல்

#96
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்
ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாட வல்லார் நெறி நாட அறிகிலேன்
தேட வல்லார் நெறி தேடகில்லேனே

மேல்

#97
மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே

மேல்

#98
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இ பயன் அறியாரே

மேல்

#99
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்
ஞால தலைவனை நண்ணுவர் அன்றே

மேல்

#100
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்பு தரும் இவை தானே

மேல்

#101
வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை
தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகம சொல் மொழிந்தானே

மேல்

#102
கலந்து அருள் காலாங்கர்-தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகை தேவர் நாதாந்தர்
புலம் கொள் பரமானம் தர்போக தேவர்
நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே

மேல்

#103
அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு_இல் பெருமை அரி அயற்கு ஆமே

மேல்

#104
ஆதி பிரானும் அணி மணிவண்ணனும்
ஆதி கமலத்து அலர்மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே

மேல்

#105
ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே

மேல்

#106
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே

மேல்

#107
பயன் அறிந்து அ வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அ வானவராலே

மேல்

#108
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள்
பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே

மேல்

#109
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேன் அமர் கொன்றை சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே

மேல்

#110
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற
ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரை பிதற்றுகின்றாரே

மேல்

#111
பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே

மேல்

#112
தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை
வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான்
கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற
தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே

மேல் 

@1 முதல் தந்திரம்
#113
விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த
கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே

மேல்
#114
களிம்பு அறுத்தான் எங்கள் கண்_நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண்விழிப்பித்து
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே

மேல்
#115
பதி பசு பாசம் என பகர் மூன்றில்
பதியினை போல் பசு பாசம் அனாதி
பதியினை சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

மேல்
#116
வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும்
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும்
தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே

மேல்
#117
சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே

மேல்
#118
மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி
தலங்கள் ஐந்தால் நற்சதா சிவம் ஆன
புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே

மேல்
#119
அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறிவு உள்ளே அழிந்தது போல
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே

மேல்
#120
ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே

மேல்
#121
வித்தை கெடுத்து வியாக்கிரத்தே மிக
சுத்த துரியம் பிறந்து துடக்கு அற
ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே

மேல்
#122
சிவயோகம் ஆவது சித்து அசித்து என்று
தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே

மேல்
#123
அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே

மேல்
#124
வெளியில் வெளி போய் விரவியவாறும்
அளியில் அளி போய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே

மேல்
#125
சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர்-தம் முத்தி முதல் முப்பத்தாறே

மேல்
#126
முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு
செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே

மேல்
#127
இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே

மேல்
#128
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம்
சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே

மேல்
#129
தூங்கி கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே

மேல்
#130
எவ்வாறு காண்பான் அறிவு-தனக்கு எல்லை
அவ்வாறு அருள்செய்வான் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும்
செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்

மேல்
#131
மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை
பேணி தொழுது என்ன பேறு பெற்றாரே

மேல்
#132
பெற்றார் உலகில் பிரியா பெருநெறி
பெற்றார் உலகில் பிறவா பெரும் பயன்
பெற்றார் அ மன்றில் பிரியா பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசா பெருமையே

மேல்
#133
பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே

மேல்
#134
புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே

மேல்
#135
சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில்
சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே

மேல்
#136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே

மேல்
#137
அடங்கும் பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ
கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே

மேல்
#138
திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே

மேல்
#139
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே

மேல்
#140
தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே

மேல்
#141
சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே

மேல்
#142
போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை
போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திட போய் அடைந்தார் விண்ணே

மேல்
#143
மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது
விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல்
எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே

மேல்
#144
பண்டம் பெய் கூரை பழகி விழுந்த-கால்
உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநடவாதே

மேல்
#145
ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு
சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

மேல்
#146
காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள
பாலுள் பரும் கழி முப்பத்திரண்டு உள
மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன்
போல் உயிர் மீள புக அறியாதே

மேல்
#147
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற
ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது
மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய்
காக்கைக்கு பலி காட்டியவாறே

மேல்
#148
அட பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இட பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே

மேல்
#149
மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்று அத்தா என்ன திரிந்திலன் தானே

மேல்
#150
வாசந்தி பேசி மணம்புணர்ந்த அ பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு
பாசம் தீ சுட்டு பலி அட்டினார்களே

மேல்
#151
கைவிட்டு நாடி கருத்து அழிந்து அச்சற
நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே

மேல்
#152
பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலம் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே

மேல்
#153
நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைமகன்
காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே

மேல்
#154
முப்பதும் முப்பதும் முப்பத்துஅறுவரும்
செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின்
ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே

மேல்
#155
மது ஊர் குழலியும் மாடும் மனையும்
இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி
பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி
மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே

மேல்
#156
வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாது என நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர்
எச்ச அகலா நின்று இளைக்கின்றவாறே

மேல்
#157
ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின்
வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே

மேல்
#158
வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே

மேல்
#159
ஐந்து தலை பறி ஆறு சடை உள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டு
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே

மேல்
#160
அத்தி பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்தி பழத்தை அறைக்கீரை வித்து உண்ண
கத்தி எடுத்தவர் காடு புக்காரே

மேல்
#161
மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை
காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு
ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே

மேல்
#162
கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை
ஆடும் இலையமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டு
தேடிய தீயினில் தீய வைத்தார்களே

மேல்
#163
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில் கேடு அறியீரே

மேல்
#164
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருளாவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்தது பதைக்கின்றவாறே

மேல்
#165
மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர்
குடர் பட வெம் தமர் கூப்பிடுமாறே

மேல்
#166
குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அ காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே

மேல்
#167
காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என்
பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என்
தோல் பையுள் நின்று தொழில் அற செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே

மேல்
#168
அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனை சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே

மேல்
#169
இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை
பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே

மேல்
#170
தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது
கண் அது கண் ஒளி கண்டுகொளீரே

மேல்
#171
ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும்
கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள
காட்டி கொடுத்தது கைவிட்டவாறே

மேல்
#172
தேற்ற தெளி-மின் தெளிந்தீர் கலங்கன்-மின்
ஆற்று பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை
கூற்றன் வரும்-கால் குதிக்கலும் ஆமே

மேல்
#173
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே

மேல்
#174
வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண் பொருள்
மேவும் அதனை விரவு செய்வார்கட்கு
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே

மேல்
#175
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின்
காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே

மேல்
#176
உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர்
சுடும் பரிசு அத்தையும் சூழ்கிலாரே

மேல்
#177
கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழ கன்று மூத்து எருதாய் சில நாளில்
விழ கண்டும் தேறார் வியன் உலகோரே

மேல்
#178
ஆண்டு பலவும் கழிந்தன அப்பனை
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே

மேல்
#179
தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கை படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே

மேல்
#180
விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர்
கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல்
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு
கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே

மேல்
#181
பாலன் இளையன் விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்து விரும்புவன் யானே

மேல்
#182
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே

மேல்
#183
பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும்
பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம்
பரு ஊசி ஐந்தும் பனி-தலை பட்டால்
பரு ஊசி பையும் பறக்கின்றவாறே

மேல்
#184
கண்ணதும் காய் கதிரோனும் உலகினை
உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறுவாரையும் வினையுறுவாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே

மேல்
#185
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே

மேல்
#186
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே

மேல்
#187
தழைக்கின்ற செந்தளிர் தண் மலர் கொம்பில்
இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற-போது அறியார் அவர் தாமே

மேல்
#188
ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அ செய்யை காவல் விட்டாரே

மேல்
#189
மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன்
அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கியவாறே

மேல்
#190
வேங்கடநாதனை வேதாந்தக்கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே

மேல்
#191
சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள்
பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே

மேல்
#192
மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை
கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே

மேல்
#193
துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்து எரியாமல் கொடு-மின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே

மேல்
#194
இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே

மேல்
#195
ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம்
போம் விதி நாடி புனிதனை போற்று-மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே

மேல்
#196
அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்-மின்
வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின்
செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு
தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே

மேல்
#197
பற்று ஆய நல் குரு பூசைக்கும் பல் மலர்
மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர்
நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே

மேல்
#198
கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை
வல்லடிக்காரர் வலி கயிற்றால் கட்டி
செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே

மேல்
#199
பொல்லா புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர்
செல்லாக பற்றி தீவாய் நரகத்தில்
மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே

மேல்
#200
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே

மேல்
#201
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளை காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே

மேல்
#202
திருத்தி வளர்த்தது ஓர் தேமாம் கனியை
அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து
பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி
கருத்து அறியாதவர் கால் அற்றவாறே

மேல்
#203
பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும்
இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும்
மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள்
மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே

மேல்
#204
இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே

மேல்
#205
மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போல கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே

மேல்
#206
இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார இது என்பார்
அயலுற பேசி அகன்று ஒழிந்தாரே

மேல்
#207
வையகத்தே மடவாரொடும் கூடி என்
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே

மேல்
#208
கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறுவார்களை
தாழ துடக்கி தடுக்க இல்லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்றவாறே

மேல்
#209
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார்
கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை
நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே

மேல்
#210
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று
அ குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர்
எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின்
அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே

மேல்
#211
கற்குழி தூர கனகமும் தேடுவர்
அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அ குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின்
அ குழி தூரும் அழுக்கற்றவாறே

மேல்
#212
தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய
கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி
தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே

மேல்
#213
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி
அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே

மேல்
#214
வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசை பெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேத முதல் ஆம்
அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே

மேல்
#215
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர்
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே

மேல்
#216
அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது
துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே

மேல்
#217
போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு
மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே

மேல்
#218
நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று
மை நின்று எரியும் வகை அறிவார்கட்கு
மை நின்று அவிழ்தரும் அ தினமாம் என்றும்
செய் நின்ற செல்வம் தீ அது ஆமே

மேல்
#219
பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும்
வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே

மேல்
#220
பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த
வரும் செல்வம் தந்த தலைவனை நாடும்
வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே

மேல்
#221
ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை
ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ
தண் சுடர் ஓம தலைவனும் ஆமே

மேல்
#222
ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்
வேமத்துள் அங்கி விளைவு வினை கடல்
கோமத்துள் அங்கி குரை கடல் தானே

மேல்
#223
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரத்து
அங்கி இருக்கும் வகை அருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே

மேல்
#224
அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு
சந்தியும் ஓதி சடங்கு அறுப்போர்களே

மேல்
#225
வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பத
போதாந்த மான பிரணவத்துள் புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே

மேல்
#226
காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே

மேல்
#227
பெருநெறியான பிரணவம் ஓர்ந்து
குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து
இரு நெறி ஆன கிரியை இருந்து
சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே

மேல்
#228
சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும்
எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே

மேல்
#229
வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே

மேல்
#230
நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம்
நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே

மேல்
#231
சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி
ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி
பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி
பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே

மேல்
#232
திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றி
குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து
கரும நியம் ஆதி கைவிட்டு காணும்
துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே

மேல்
#233
மறையோர் அவரே மறைவர் ஆனால்
மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று
அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே

மேல்
#234
அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்து
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும் புவி
நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே

மேல்
#235
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே

மேல்
#236
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம் பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கும் திரு உடையோரே

மேல்
#237
தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
நானே விடப்படும் ஏதொன்றை நாடாது
பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே

மேல்
#238
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரை காலன் நணுக நில்லானே

மேல்
#239
நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி
நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல்
நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால்
நாள்-தோறும் செல்வம் நரபதி குன்றுமே

மேல்
#240
வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே
வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன்
வேட நெறி செய்தால் வீடு அது ஆமே

மேல்
#241
மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில்
வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும்
பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து
ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே

மேல்
#242
ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர்-தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே

மேல்
#243
ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும்
தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும்
காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே

மேல்
#244
திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும்
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே

மேல்
#245
வேந்தன் உலகை மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர்
பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே

மேல்
#246
கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி
பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர்
மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே

மேல்
#247
தத்தம் சமய தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி
எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே
மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே

மேல்
#248
அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே
அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும்
கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை
அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே

மேல்
#249
வரையிடை நின்று இழி வான் நீர் அருவி
உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு
நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர்
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே

மேல்
#250
ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின்
பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே

மேல்
#251
தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே

மேல்
#252
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

மேல்
#253
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே

மேல்
#254
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழ கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே

மேல்
#255
தன்னை அறியாது தான் நலன் என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே

மேல்
#256
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே

மேல்
#257
தான் தவம் செய்வதாம் செய் தவத்து அ வழி
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே

மேல்
#258
திளைக்கும் வினை கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே

மேல்
#259
பற்று அதுவாய் நின்ற பற்றினை பார் மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே

மேல்
#260
எட்டி பழுத்த இரும் கனி வீழ்ந்தன
ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம்
வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டி பதகர் பயன் அறியாரே

மேல்
#261
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளும் குறுகி
பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே

மேல்
#262
அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார் சிவலோக நகர்க்கு
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே

மேல்
#263
இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர்-தம்-பாலது ஆகும்
உரும் இடி நாகம் உரோணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே

மேல்
#264
பரவப்படுவான் பரமனை ஏத்தார்
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்
கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார்
நரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சினீரே

மேல்
#265
வழிநடப்பார் இன்றி வானோர் உலகம்
கழி நடப்பார் நடந்தார் கரும் பாரும்
மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட
வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே

மேல்
#266
கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே

மேல்
#267
இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலா பேதைகள்
அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே

மேல்
#268
கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன்
நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம்
படுவது செய்யில் பசு அது ஆமே

மேல்
#269
செல்வம் கருதி சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரை போற்றி புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின்
வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே

மேல்
#270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

மேல்
#271
பொன்னை கடந்து இலங்கும் புலித்தோலினன்
மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு
பின்னி கிடந்தது என் பேரன்பு தானே

மேல்
#272
என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டு
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே

மேல்
#273
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை
கோர நெறி கொடு கொங்கு புக்காரே

மேல்
#274
என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின்
பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலைநின்றவாறே

மேல்
#275
தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும்
தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன்
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே

மேல்
#276
முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே

மேல்
#277
கருத்துறு செம்பொன் செய் காய் கதிர் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே

மேல்
#278
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடுகிலாரே

மேல்
#279
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பின் உள் ஆகி அமரும் அரும்பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே

மேல்
#280
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள்கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே

மேல்
#281
இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்ப பிறவி தொழில் பல என்னினும்
அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த
முன்பு இ பிறவி முடிவது தானே

மேல்
#282
அன்புறு சிந்தையின் மேல் எழும் அ ஒளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்புறு சிந்தையை நாடு-மின் நீரே

மேல்
#283
புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே

மேல்
#284
உற்று நின்றாரொடு அத்தகு சோதியை
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே

மேல்
#285
கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே

மேல்
#286
நம்பனை நானாவித பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே

மேல்
#287
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே

மேல்
#288
ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
தேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே

மேல்
#289
விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை
தொட்டு தொடர்வன் தொலையா பெருமையை
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே

மேல்
#290
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடி
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே

மேல்
#291
கற்றறிவாளர் கருதிய காலத்து
கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்றறிவாளர் கருதி உரைசெய்யும்
கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே

மேல்
#292
நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்-மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றி தொழு-மின் தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே

மேல்
#293
கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே

மேல்
#294
துணையதுவாய் வரும் தூய நல் சோதி
துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணையதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணையதுவாய் வரும் தூய நல் கல்வியே

மேல்
#295
நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே

மேல்
#296
ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே

மேல்
#297
வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே

மேல்
#298
பற்று அது பற்றில் பரமனை பற்று-மின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே

மேல்
#299
கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழி-தொறு ஊழி
அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே

மேல்
#300
அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே

மேல்
#301
தேவர் பிரான்-தனை திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின்
ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே

மேல்
#302
மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின்
அயன் பணி கேட்பது அரன் பணியாலே
சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன் பணி கேட்பது பற்று அதுவாமே

மேல்
#303
பெருமான் இவன் என்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னை தேவரும் ஆவர்
வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும்
அருமாதவத்து எங்கள் ஆதி பிரானே

மேல்
#304
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர் கந்தம் மன்னி நின்றானே

மேல்
#305
விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது
வழுக்கிவிடாவிடில் வானவர் கோனும்
இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே

மேல்
#306
சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றை குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே

மேல்
#307
உறுதுணை ஆவது உயிரும் உடம்பும்
உறுதுணை ஆவது உலகுறு கேள்வி
செறி துணை ஆவது சிவன் அடி சிந்தை
பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே

மேல்
#308
புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழ நின்று ஆதியை ஓதி உணரா
கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே

மேல்
#309
வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி
ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே

மேல்
#310
கல்லாதவரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகிலாரே

மேல்
#311
வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்
அல்லாதவர்கள் அறிவு பல என்பார்
எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே

மேல்
#312
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே

மேல்
#313
கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன்
கல்லேன் அரன்நெறி அறியா தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே

மேல்
#314
நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தத்துவத்துளும் ஆயினோர்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினை துயர் போகம் செய்வாரே

மேல்
#315
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது
மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று
எண்ணி எழுதி இளைத்து விட்டாரே

மேல்
#316
கணக்கு அறிந்தார்க்கு அன்றி காண ஒண்ணாது
கணக்கு அறிந்தார்க்கு அன்றி கைகூடா காட்சி
கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே

மேல்
#317
கல்லாத மூடரை காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்து அறியாரே

மேல்
#318
கற்றும் சிவஞானம் இல்லா கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பல திசை காணார் மதி இலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே

மேல்
#319
ஆதி பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற
சோதி நடத்தும் தொடர் அறியாரே

மேல்
#320
நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே

மேல்
#321
நடுவுநின்றான் நல்ல கார் முகில் வண்ணன்
நடுவுநின்றான் நல்ல நால்மறை ஓதி
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே

மேல்
#322
நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே

மேல்
#323
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி
மூன்று நின்றார் முதல்வன் திருநாமத்தை
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே

மேல்
#324
கழுநீர் பசு பெறில் கயம்-தொறும் தேரா
கழுநீர் விடாய்த்து தம் காயம் சுருக்கும்
முழுநீர் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழு நீர் சிவன்-தன் சிவானந்த தேறலே

மேல்
#325
சித்தம் உருக்கி சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலை
சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே

மேல்
#326
காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயலுறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே

மேல்
#327
வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே

மேல்
#328
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே

மேல்
#329
மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்குறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே

மேல்
#330
மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே

மேல்
#331
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்த தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே

மேல்
#332
சத்தியை வேண்டி சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டு
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே

மேல்
#333
சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க
சத்தியம் எண் சித்தி தன்மையும் ஆமே

மேல்
#334
தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி
பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த
சித்தி அது ஆக்கும் சிவானந்த தேறலே

மேல்
#335
யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த
போத அமுதை பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகமுற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே

மேல்
#336
உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து
எண்ணீர் குரவன் இணை அடி தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே

மேல்

@2 இரண்டாம் தந்திரம்
#337
நடுவு நில்லாது இ உலகம் சரிந்து
கெடுகின்றது எம் பெருமான் என்ன ஈசன்
நடு உள அங்கி அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிர் என்றானே

மேல்

#338
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்-பால் அவனொடு
மங்கி உதயம்செய் வட-பால் தவ முனி
எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே

மேல்

#339
கருத்து உறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்ட
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே

மேல்

#340
கொலையில் பிழைத்த பிரசாபதியை
தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி
தலையை அரிந்திட்டு சந்திசெய்தானே

மேல்

#341
எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே

மேல்

#342
எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன் அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழிசெய்தானே

மேல்

#343
அ பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம்
அ புரம் எய்தமை ஆர் அறிவாரே

மேல்

#344
முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதியது ஆம் பல தேவரும்
அ தீயின் உள் எழுந்தன்று கொலையே

மேல்

#345
மூல துவாரத்து மூளும் ஒருவனை
மேலை துவாரத்து மேலுற நோக்கி முன்
காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய்
ஞால கடவூர் நலமாய் இருந்ததே

மேல்

#346
இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருந்தி இலிங்க வழியது போக்கி
திருந்திய காமன் செயல் அழித்து அம் கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே

மேல்

#347
அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடி சேர் மலை மகனார் மகள் ஆகி
திடமார் தவம்செய்து தேவர் அறிய
படியார அர்ச்சித்து பத்திசெய்தாளே

மேல்

#348
திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசு அறிவானே

மேல்

#349
ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே

மேல்

#350
தாங்கி இருபது தோளும் தட வரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

மேல்

#351
உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி
அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை
செறு வகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே

மேல்

#352
ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்து தாம் சென்று
நாடி இறைவா நம என்று கும்பிட
ஈடு இல் புகழோன் எழுக என்றானே

மேல்

#353
தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டு
சிந்தினர் அண்ணல் சினம்செய்த-போதே

மேல்

#354
சந்தி செய கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவன் அல்ல யாமே உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம்செய்ய
அந்தம்_இலானும் அருள் புரிந்தானே

மேல்

#355
அ பரிசே அயனார் பதி வேள்வியுள்
அ பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அ பரிசே அது நீர்மையை உள் கலந்து
அ பரிசே சிவன் ஆலிகின்றானே

மேல்

#356
அ பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அ பரிசே அவர் ஆகிய காரணம்
அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு
அ பரிசு ஆகி அலர்ந்திருந்தானே

மேல்

#357
அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்ப
குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெரு வழி ஓடி வந்தானே

மேல்

#358
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வரு மதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே

மேல்

#359
செவி மந்திரம் சொல்லும் செய் தவ தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலி
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே

மேல்

#360
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற
பல்லார் அமரர் பரிந்து அருள்செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும்படிக்கே

மேல்

#361
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய
சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே

மேல்

#362
கருவரை மூடி கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ என்று இகல இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே

மேல்

#363
அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே

மேல்

#364
தண் கடல் விட்டது அமரரும் தேவரும்
எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்து அறியாரே

மேல்

#365
சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே
திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே

மேல்

#366
பண்பு அழி செய் வழிபாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண் பழியாளனை நாடி சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்திகொண்டானே

மேல்

#367
மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போதம் கையினோடு அந்தர சக்கரம்
மேல் போக வெள்ளி மலை அமரர் பதி
பார் போகம் ஏழும் படைத்து உடையானே

மேல்

#368
சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னை தரிக்க ஒண்ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க
தக்க நல் சத்தியை தான் கூறு செய்ததே

மேல்

#369
கூறது ஆக குறித்து நல் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு
கூறது செய்து தரித்தனன் கோலமே

மேல்

#370
தக்கன்-தன் வேள்வி தகர்த்த நல் வீரர்-பால்
தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம்-தன்னை சசி முடி மேல் விட
அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே

மேல்

#371
எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே

மேல்

#372
பிரமனும் மாலும் பிரானே நான் என்ன
பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே
பரமன் அனலாய் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்றுகின்றாரே

மேல்

#373
ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும்
தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும்
வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே

மேல்

#374
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட
தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து
தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே

மேல்

#375
நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே

மேல்

#376
சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர்
மூவடி தா என்றானும் முனிவரும்
பாவடியாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டு தலைப்பெய்துமாறே

மேல்

#377
தான கமலத்து இருந்த சதுமுகன்
தான கரும் கடல் ஊழி தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தான பெரும் பொருள் தன்மையது ஆமே

மேல்

#378
ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்
கோலிங்கம் ஐஞ்சு அருள் கூடலும் ஆமே

மேல்

#379
வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர்
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக
தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே

மேல்

#380
ஊழி வலம்செய்து அங்கு ஓரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழி தலை நீர் விதித்தது தா என
ஊழி கதிரோன் ஒளியை வென்றானே

மேல்

#381
ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம் அது ஆக புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்ற தோன்றுமாம்
தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே

மேல்

#382
நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே

மேல்

#383
இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி
கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அ பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதிதூரமே

மேல்

#384
தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பார சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே

மேல்

#385
மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும்
கானின்-கண் நீரும் கலந்து கடினமாய்
தேனின்-கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்
பூவின்-கண் நின்று பொருந்தும் புவனமே

மேல்

#386
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே

மேல்

#387
புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண் இயல்பாக கலவி முழுதும் ஆய்
மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே

மேல்

#388
நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை
ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே

மேல்

#389
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்ட சதுமுக காரணன்-தன்னொடும்
பண்டு இ உலகம் படைக்கும் பொருளே

மேல்

#390
ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கர் கயிலை பராபரன்-தானும்
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே

மேல்

#391
காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே

மேல்

#392
பயன் எளிதாம் பரு மா மணி செய்ய
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே

மேல்

#393
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே

மேல்

#394
நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற
முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே

மேல்

#395
ஆகின்ற தன்மையில் அக்கு அணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே

மேல்

#396
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள்-தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே

மேல்

#397
புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே

மேல்

#398
ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐம் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே

மேல்

#399
உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே

மேல்

#400
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே

மேல்

#401
அளியார் முக்கோணம் வயிந்தவம்-தன்னில்
அளியார் திரிபுரையாம் அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே

மேல்

#402
வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆக கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே

மேல்

#403
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே

மேல்

#404
ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே

மேல்

#405
செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே

மேல்

#406
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே

மேல்

#407
ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும்
ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும்
ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும்
ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே

மேல்

#408
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டி குழைத்தனர்
ஏது பணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே

மேல்

#409
அ பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு
இ பரிசே இருள் மூடி நின்றானே

மேல்

#410
ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே

மேல்

#411
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி
புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே

மேல்

#412
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

மேல்

#413
உடலாய் உயிராய் உலகம் அது ஆகி
கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெரு வழி அண்ணல் நின்றானே

மேல்

#414
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி
ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே

மேல்

#415
தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும்
தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே

மேல்

#416
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே

மேல்

#417
உற்று வனைவான் அவனே உலகினை
பெற்று வனைவான் அவனே பிறவியை
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே

மேல்

#418
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே

மேல்

#419
தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி
தாங்கி நின்றானும் அ தாரணி தானே

மேல்

#420
அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே

மேல்

#421
அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது
அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே

மேல்

#422
இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம்
நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால்
உலை தந்த மெல் அரி போலும் உலகம்
மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே

மேல்

#423
பதம் செய்யும் பாரும் பனி வரை எட்டும்
உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே

மேல்

#424
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி
ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற
குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே

மேல்

#425
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்
வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே

மேல்

#426
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல்
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே

மேல்

#427
நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே

மேல்

#428
நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயா பரன் அருள்
உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே

மேல்

#429
பாழே முதலா எழும் பயிர் அ பயிர்
பாழாய் அடங்கினும் பண்டை பாழ் பாழ் ஆகா
வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம்
பாழாம் பயிராய் அடங்கும் அ பாழிலே

மேல்

#430
தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை
மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே

மேல்

#431
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே

மேல்

#432
இன்ப பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாச துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்துறு தோல் தசை
முன்பில் கொளுவி முடிகுவது ஆமே

மேல்

#433
இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே

மேல்

#434
காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு
சேண் படு பொய்கை செயல் அணையாரே

மேல்

#435
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதி பிரானும்
சுருளும் சுடருறு தூ வெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே

மேல்

#436
அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்
கரக்கின்றவை செய்த காண்தகையானே

மேல்

#437
ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே

மேல்

#438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே

மேல்

#439
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி
வரும் கரை ஓரா வகையினில் கங்கை
அரும் கரை பேணில் அழுக்கு அறலாமே

மேல்

#440
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே

மேல்

#441
எட்டு திசையும் எறிகின்ற காற்றொடு
வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே

மேல்

#442
உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு
தச்சும் அவனே சமைக்க வல்லானே

மேல்

#443
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவு இல் உலகம் அது இது ஆமே

மேல்

#444
விடை உடையான் விகிர்தன் மிகு பூத
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே

மேல்

#445
உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே

மேல்

#446
படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே

மேல்

#447
ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்_இலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே

மேல்

#448
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

மேல்

#449
உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே

மேல்

#450
ஆரும் அறியாத அண்ட திருவுரு
பார் முதலாக பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே

மேல்

#451
ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே

மேல்

#452
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு
செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி
பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே

மேல்

#453
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன்
பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே

மேல்

#454
கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடி புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே

மேல்

#455
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே

மேல்

#456
பூவின் மணத்தை பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட-போதே

மேல்

#457
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடான் எனில் பன்றியும் ஆமே

மேல்

#458
ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே

மேல்

#459
ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து
பாயும் கருவும் உருவாம் என பல
காயம் கலந்தது காண பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே

மேல்

#460
கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே

மேல்

#461
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டி
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே

மேல்

#462
பதம் செய்யும் பால் வண்ணன் மேனி பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே

மேல்

#463
ஒழி பல செய்யும் வினையுற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி
பழி பல செய்கின்ற பாச கருவை
சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே

மேல்

#464
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அ யோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே

மேல்

#465
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே

மேல்

#466
பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே

மேல்

#467
இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி
உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே

மேல்

#468
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்ப கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே

மேல்

#469
அறியீர் உடம்பினில் ஆகியவாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே

மேல்

#470
உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து
திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி
கடை வைத்த ஈசனை கைகலந்தேனே

மேல்

#471
கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே

மேல்

#472
பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின்
காவுடை தீபம் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே

மேல்

#473
எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே

மேல்

#474
கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே

மேல்

#475
அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை
தருகின்ற-போது இரு கைத்தாயர்-தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே

மேல்

#476
வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே

மேல்

#477
மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே

மேல்

#478
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

மேல்

#479
பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயு பகுத்து அறிந்து இ வகை
பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே

மேல்

#480
பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே

மேல்

#481
மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

மேல்

#482
குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே

மேல்

#483
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே

மேல்

#484
கோல்_வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே

மேல்

#485
உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே

மேல்

#486
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே

மேல்

#487
இன்புற நாடி இருவரும் சந்தித்து
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே

மேல்

#488
குயில் குஞ்சு முட்டையை காக்கை கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே

மேல்

#489
முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே

மேல்

#490
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே

மேல்

#491
பரத்தில் கரைந்தது பதிந்த நல் காயம்
உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி
திரை கடல் உப்பு திரண்டது போல
திரித்து பிறக்கும் திருவருளாலே

மேல்

#492
சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து
சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே

மேல்

#493
விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே

மேல்

#494
விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர்
தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர்
எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே

மேல்

#495
இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர்
முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே

மேல்

#496
பெத்தத்த சித்தொடு பேண்முத்த சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே

மேல்

#497
சிவம் ஆகி ஐ வகை திண்மலம் செற்றோர்
அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார்
பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடி கண்டோரே

மேல்

#498
விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அ சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே

மேல்

#499
விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய்
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே

மேல்

#500
ஆணவம் துற்ற அவித்தாம் நனவு அற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே

மேல்

#501
திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பரபோகமும் குன்றுமே

மேல்

#502
கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை
கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள்செய்திடும் நாதனை
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே

மேல்

#503
கைவிட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே

மேல்

#504
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளையோனே

மேல்

#505
கோல வறட்டை குனிந்து குளகு இட்டு
பாலை கறந்து பருகுவதே ஒக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே

மேல்

#506
ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி
ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொளீரே

மேல்

#507
ஆமாறு அறியான் அதி பஞ்சபாதகன்
தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே

மேல்

#508
மண் மலையத்தனை மா தனம் ஈயினும்
அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரக குழியிலே

மேல்

#509
உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடை கல்வி இலோரே

மேல்

#510
தளி அறிவாளர்க்கு தண்ணிதாய் தோன்றும்
குளி அறிவாளர்க்கு கூடவும் ஒண்ணான்
வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே

மேல்

#511
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே

மேல்

#512
அறிவார் அமரர்கள் ஆதி பிரானை
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளை கை வரு புனல் கங்கை
பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே

மேல்

#513
கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல்
உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே

மேல்

#514
கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே

மேல்

#515
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே

மேல்

#516
கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே

மேல்

#517
ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி
போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே

மேல்

#518
முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே

மேல்

#519
பேர் கொண்ட பார்ப்பான் பிரான்-தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே

மேல்

#520
எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே

மேல்

#521
அண்டமொடு எண் திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடையோற்கே

மேல்

#522
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து
பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே

மேல்

#523
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்தி கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே

மேல்

#524
அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோமுகம்-தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும்
அதோமுகன் ஊழி தலைவனும் ஆமே

மேல்

#525
அதோமுகம் மா மலர் ஆயது கேளும்
அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தம்_இல் சத்தி
அதோமுகம் ஆகி அமர்ந்து இருந்தானே

மேல்

#526
தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே
அளிவுறுவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழில்
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே

மேல்

#527
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே

மேல்

#528
அ பகையாலே அசுரரும் தேவரும்
நல் பகைசெய்து நடுவே முடிந்தனர்
எ பகையாகிலும் எய்தார் இறைவனை
பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே

மேல்

#529
போகமும் மாதர் புலவி அது நினைந்து
ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால்
வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே

மேல்

#530
பெற்றிருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவர்
பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே

மேல்

#531
ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய
சீர் எழுத்தாளரை சிதைய செப்பினோர்
ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே

மேல்

#532
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்க சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

மேல்

#533
மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

மேல்

#534
ஈசன் அடியார் இதயம் கலங்கிட
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே

மேல்

#535
சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே

மேல்

#536
கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே

மேல்

#537
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே

மேல்

#538
ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப்பவனுமே நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவபோகமே

மேல்

#539
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு
முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே

மேல்

#540
ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள்
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே

மேல்

#541
ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசை-தொறும் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்-தம் ஆதியை
ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே

மேல்

#542
வல்வகையாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகையாலும் பயிற்றி பதம் செய்யும்
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இல்லாத இலயம் உண்டாமே

மேல்

#543
ஓட வல்லார் தமரோடு நடாவுவன்
பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே

மேல்

#544
தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும்
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே

மேல்

#545
அறிவார் அமரர் தலைவனை நாடி
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே

மேல்

#546
தார் சடையான்-தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும்
கோ அடைந்து அ நெறி கூடலும் ஆமே

மேல்

#547
உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருக என ஓலம் என்றாரே

மேல்

#548
அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே

மேல்

 @3 மூன்றாம் தந்திரம்
 #549
 உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
 நிரைத்த இராசி நிரை முறை எண்ணி
 பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
 நிரைத்த இயமம் நியமம் செய்தானே
 
மேல்

 #550
 செய்த இயம நியமம் சமாதி சென்று
 உய்ய பராசத்தி உத்தர பூருவம்
 எய்த கவச நியாசங்கள் முத்திரை
 எய்த உரைசெய்வன் இ நிலை தானே
 
மேல்

 #551
 அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க
 தன் நெறி சென்று சமாதியிலே நின்-மின்
 நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
 புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே
 
மேல்

 #552
 இயம நியமமே எண்_இலா ஆதனம்
 நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம்
 சய மிகு தாரணை தியானம் சமாதி
 அயமுறும் அட்டாங்கம் ஆவது ஆமே
 
மேல்

 #553
 எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
 செழும் தண் நியமங்கள் செய்-மின் என்று அண்ணல்
 கொழும் தண் பவள குளிர் சடையோடே
 அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே
 
மேல்

 #554
 கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன்
 நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
 வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
 இல்லான் நியமத்து இடையில் நின்றானே
 
மேல்

 #555
 ஆதியை வேதத்தின் அ பொருளானை
 சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
 பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன்
 நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே
 
மேல்

 #556
 தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை
 வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை
 காமம் களவு கொலை என காண்பவை
 நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே
 
மேல்

 #557
 தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
 சிவன் தன் விரதமே சித்தாந்த கேள்வி
 மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து
 நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே
 
மேல்

 #558
 பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
 அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள்
 சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக
 தங்க இருப்ப தலைவனும் ஆமே
 
மேல்

 #559
 ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
 ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற
 சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க
 பார் திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே
 
மேல்

 #560
 துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து
 அரிய முழந்தாளில் அம் கையை நீட்டி
 உருசியொடும் உடல் செவ்வே இருத்தி
 பரிசு பெறும் அது பத்திராசனமே
 
மேல்

 #561
 ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
 முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி
 தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
 குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே
 
மேல்

 #562
 பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
 ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற
 கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற
 சீர் திகழ் சிங்காதனம் என செப்புமே
 
மேல்

 #563
 பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
 சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
 உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு
 பத்தொடு நூறு பல ஆசனமே
 
மேல்

 #564
 ஐவர்க்கு நாயகன் அ ஊர் தலைமகன்
 உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
 மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய்
 பொய்யரை துள்ளி விழுத்திடும் தானே
 
மேல்

 #565
 ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள
 வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
 கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
 வாரி பிடிக்க வசப்படும் தானே
 
மேல்

 #566
 புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
 கள் உண்ண வேண்டாம் தானே களி தரும்
 துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
 உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே
 
மேல்

 #567
 பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி
 பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
 பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து
 பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே
 
மேல்

 #568
 ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
 ஆறுதல் கும்பம் அறுபத்துநாலு அதில்
 ஊறுதல் முப்பத்திரண்டு அதி இரேசகம்
 மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே
 
மேல்

 #569
 வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
 பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம்
 தெளிய குருவின் திருவருள் பெற்றால்
 வளியினும் வேட்டு வளியனும் ஆமே
 
மேல்

 #570
 எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
 அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
 அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல
 சங்கே குறிக்க தலைவனும் ஆமே
 
மேல்

 #571
 ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
 காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
 காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு
 கூற்றை உதைக்கும் குறி அது ஆமே
 
மேல்

 #572
 மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து
 பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து
 மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
 ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே
 
மேல்

 #573
 வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
 ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து
 காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு
 ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே
 
மேல்

 #574
 இட்டது அ வீடு இளகாது இரேசித்து
 புட்டி பட தச நாடியும் பூரித்து
 கொட்டி பிராணன் அபானனும் கும்பித்து
 நட்டம் இருக்க நமன் இல்லை தானே
 
மேல்

 #575
 புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை
 நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
 உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்
 புறப்பட்டு போகான் புரிசடையோனே
 
மேல்

 #576
 கூடம் எடுத்து குடி புக்க மங்கையர்
 ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
 நீடுவர் எண் விரல் கண்டிப்பர் நால் விரல்
 கூடி கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே
 
மேல்

 #577
 பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது
 பன்னிரண்டு ஆனையை பாகன் அறிகிலன்
 பன்னிரண்டு ஆனையை பாகன் அறிந்த பின்
 பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே
 
மேல்

 #578
 கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
 கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம்
 பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
 இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே
 
மேல்

 #579
 நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம்
 தாபிக்கு மந்திரம்-தன்னை அறிகிலர்
 தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின்
 கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே
 
மேல்

 #580
 மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற
 பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற
 கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர்
 ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே
 
மேல்

 #581
 நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம்
 நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
 மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
 தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே
 
மேல்

 #582
 சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில்
 கோது இல் பரானந்தம் என்றே குறி கொண்-மின்
 நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால்
 ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே
 
மேல்

 #583
 மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
 மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
 வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
 காலத்தை வெல்லும் கருத்து இது தானே
 
மேல்

 #584
 எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே
 கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே
 உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு
 கரு இடும் சோதி கலந்து நின்றானே
 
மேல்

 #585
 ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை
 பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை
 கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
 பிரத்தியாகார பெருமை அது ஆமே
 
மேல்

 #586
 புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம்
 திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
 உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
 புறப்பட்டு போகான் பெருந்தகையானே
 
மேல்

 #587
 குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
 வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும்
 சிறப்புறு சிந்தையை சிக்கென்று உணரில்
 அறிப்புறு காட்சி அமரரும் ஆமே
 
மேல்

 #588
 கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ் கட்டி
 வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி
 காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு
 வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே
 
மேல்

 #589
 மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி
 நிலையார பாயும் நெடுநாடி ஊடே
 சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும்
 தொலையாத ஆனந்த சோதி கண்டேனே
 
மேல்

 #590
 மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை
 மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
 ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க
 பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே
 
மேல்

 #591
 கடை வாசலை கட்டி காலை எழுப்பி
 இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி
 மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு
 உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே
 
மேல்

 #592
 கலந்த உயிருடன் காலம் அறியில்
 கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
 கலந்த உயிர் அது கால் அது கட்டில்
 கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே
 
மேல்

 #593
 வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
 வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர்
 வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
 கோய் திறவாவிடில் கோழையும் ஆமே
 
மேல்

 #594
 வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை
 போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில்
 ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
 பாழி பெரியது ஓர் பள்ளி அறையே
 
மேல்

 #595
 நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால்
 இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய்
 வரம்பினை கோலி வழி செய்குவார்க்கு
 குரங்கினை கொட்டை பொதியலும் ஆமே
 
மேல்

 #596
 முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
 பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
 முன்னுறு கோடி உறு கதி பேசிடில்
 என்ன மாயம் இடி கரை நிற்குமே
 
மேல்

 #597
 அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து
 பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
 தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல
 தரித்தது தாரணை தற்பரத்தோடே
 
மேல்

 #598
 வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
 பொருவாத புந்தி புலன் போகம் ஏவல்
 உரு ஆய சத்தி பர தியான முன்னும்
 குருவார் சிவதியானம் யோகத்தின் கூறே
 
மேல்

 #599
 கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள்
 பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு
 அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி
 புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே
 
மேல்

 #600
 ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை
 கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில்
 விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடி
 பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே
 
மேல்

 #601
 ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை
 ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
 ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை
 ஒருபொழுது உன்னார் சந்திர பூவே
 
மேல்

 #602
 மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி
 சினத்து விளக்கினை செல்ல நெருக்கி
 அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட
 மனத்து விளக்கது மாயா விளக்கே
 
மேல்

 #603
 எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
 கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை
 உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால்
 கண்ணாடி போல கலந்து நின்றானே
 
மேல்

 #604
 நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில்
 வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
 ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை
 தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே
 
மேல்

 #605
 நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு
 உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி
 துயர் அற நாடியே தூங்க வல்லார்க்கு
 பயன் இது காயம் பயம் இல்லை தானே
 
மேல்

 #606
 மணி கடல் யானை வார் குழல் மேகம்
 அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
 தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும்
 பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே
 
மேல்

 #607
 கடலொடு மேகம் களிறொடும் ஓசை
 அட எழும் வீணை அண்டர் அண்டத்து
 சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
 திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே
 
மேல்

 #608
 ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
 பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும்
 ஓசை அதன் மணம் போல விடுவது ஓர்
 ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே
 
மேல்

 #609
 நாத முடிவிலே நல்லாள் இருப்பது
 நாத முடிவிலே நல் யோகம் இருப்பது
 நாத முடிவிலே நாட்டம் இருப்பது
 நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே
 
மேல்

 #610
 உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும்
 துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி
 அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க
 கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே
 
மேல்

 #611
 பள்ளி அறையில் பகலே இருள் இல்லை
 கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
 ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது
 வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே
 
மேல்

 #612
 கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி
 தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு
 மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின்
 பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே
 
மேல்

 #613
 அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு
 அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
 அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில்
 அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே
 
மேல்

 #614
 இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
 முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி
 துளை பெரும் பாசம் துருவிடுமாகில்
 இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே
 
மேல்

 #615
 முக்குண மூடு அற வாயுவை மூலத்தே
 சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு
 தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க
 வைக்கும் உயர் நிலை வானவர் கோனே
 
மேல்

 #616
 நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே
 மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே
 கடலித்து இருந்து கருத வல்லார்கள்
 சடல தலைவனை தாம் அறிந்தாரே
 
மேல்

 #617
 அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று
 செறிவான மாயை சிதைத்து அருளாலே
 பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி
 நெறியான அன்பர் நிலை அறிந்தாரே
 
மேல்

 #618
 சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும்
 சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி
 சமாது இயம் ஆதியில் தங்கினோர்க்கு அன்றே
 சமாது இயம் ஆதி தலைப்படும் தானே
 
மேல்

 #619
 விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
 சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
 அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
 சுந்தர சோதியும் தோன்றிடும் தானே
 
மேல்

 #620
 மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு
 மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை
 மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு
 மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே
 
மேல்

 #621
 விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
 கண்டு உணர்வாக கருதி இருப்பார்கள்
 செண்டு வெளியில் செழும் கிரியத்திடை
 கொண்டு குதிரை குசை செறுத்தாரே
 
மேல்

 #622
 மூல நாடி முகட்டலகு உச்சியுள்
 நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
 மேலை வாசல் வெளியுற கண்ட பின்
 காலன் வார்த்தை கனவிலும் இல்லையே
 
மேல்

 #623
 மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
 கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர்
 கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக
 உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே
 
மேல்

 #624
 பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை
 தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து
 நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு
 தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே
 
மேல்

 #625
 உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர்
 கரு வரை பற்றி கடைந்து அமுது உண்டார்
 அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார்
 திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே
 
மேல்

 #626
 நம்பனை ஆதியை நால்மறை ஓதியை
 செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
 அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய்
 கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே
 
மேல்

 #627
 மூலத்து மேல் அது முச்சதுரத்து
 கால திசையில் கலக்கின்ற சந்தினில்
 மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற
 கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே
 
மேல்

 #628
 கற்பனை அற்று கனல் வழியே சென்று
 சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளி
 பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று
 தற்பரம் ஆக தகும் தண் சமாதியே
 
மேல்

 #629
 தலைப்பட்டு இருந்திட தத்துவம் கூடும்
 வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
 குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
 துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே
 
மேல்

 #630
 சோதி தனிச்சுடராய் நின்ற தேவனும்
 ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால்
 ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும்
 ஆதி அடிபணிந்து அன்புறுவாரே
 
மேல்

 #631
 சமாதி செய்வார்க்கு தகும் பல யோகம்
 சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
 சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில்
 சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே
 
மேல்

 #632
 போது உகந்து ஏறும் புரிசடையான் அடி
 யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர்
 ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும்
 மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே
 
மேல்

 #633
 பற்றி பதத்து அன்பு வைத்து பரன் புகழ்
 கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
 முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வர
 தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே
 
மேல்

 #634
 வருந்தி தவம் செய்து வானவர் கோவாய்
 திருந்து அமராபதி செல்வன் இவன் என
 தரும் தண் முழவம் குழலும் இயம்ப
 இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே
 
மேல்

 #635
 செம்பொன் சிவகதி சென்று எய்தும் காலத்து
 கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
 எம் பொன் தலைவன் இவனாம் என சொல்ல
 இன்ப கலவி இருக்கலும் ஆமே
 
மேல்

 #636
 சேருறு காலம் திசை நின்ற தேவர்கள்
 ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன
 ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள
 கார் உரு கண்டனை மெய் கண்டவாறே
 
மேல்

 #637
 நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
 சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை
 இல்வழியாளர் இமையவர் எண் திசை
 பல்வழி எய்தினும் பார் வழி ஆகுமே
 
மேல்

 #638
 தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
 வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
 தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
 தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே
 
மேல்

 #639
 காரியம் ஆன உபாதியை தான் கடந்து
 ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற
 ஆரிய காரணம் ஆய தவத்து இடை
 தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே
 
மேல்

 #640
 பணிந்து எண் திசையும் பரமனை நாடி
 துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை
 அணிந்து எண் திசையினும் அட்டமாசித்தி
 தணிந்து எண் திசை சென்று தாபித்தவாறே
 
மேல்

 #641
 பரிசு அறி வானவர் பண்பன் அடி என
 துரிசு அற நாடியே தூவெளி கண்டேன்
 அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி
 பெரியது அருள்செய்து பிறப்பு அறுத்தானே
 
மேல்

 #642
 குரவன் அருளில் குறிவழி மூலன்
 பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து
 தெரிதரு சாம்பவி கேசரி சேர
 பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே
 
மேல்

 #643
 காயாதி பூதம் கலை கால மாயையில்
 ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே
 ஓயா பதி அதன் உண்மையை கூடினால்
 வீயா பரகாயம் மேவலும் ஆமே
 
மேல்

 #644
 இருபதினாயிரத்து எண்ணூறு பேதம்
 மருவிய கன்மமாம் அந்த யோகம்
 தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே
 அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே
 
மேல்

 #645
 மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின்
 உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு
 பதியும் ஈராறு ஆண்டு பற்று அற பார்க்கில்
 திதமான ஈராறு சித்திகள் ஆமே
 
மேல்

 #646
 நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால்
 நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம்
 பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின்
 நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே
 
மேல்

 #647
 ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம்
 தாழா நடை பல யோசனை சார்ந்திடும்
 சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை
 தாழான ஒன்பதிற்றான் பர காயமே
 
மேல்

 #648
 ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன்
 ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி
 சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று
 ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே
 
மேல்

 #649
 தானே அணுவும் சகத்து தன் நொய்ம்மையும்
 மானா கனமும் பரகாயத்தேகமும்
 தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும்
 ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே
 
மேல்

 #650
 தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர்
 வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை
 ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு
 ஓங்கி வர முத்தி முந்தியவாறே
 
மேல்

 #651
 முந்திய முந்நூற்றறுபது காலமும்
 வந்தது நாழிகை வான் முதலாய் இட
 சிந்தைசெயச்செய மண் முதல் தேர்ந்து அறிந்து
 உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே
 
மேல்

 #652
 சித்தம் திரிந்து சிவமயம் ஆகிய
 முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
 சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர்
 சித்தம் பரத்தில் திரு நடத்தோரே
 
மேல்

 #653
 ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன
 ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன்
 ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட
 ஒத்த உடலும் உயிரும் இருந்ததே
 
மேல்

 #654
 இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
 இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய்
 இருக்கும் உடலில் இருந்திலவாகில்
 இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே
 
மேல்

 #655
 வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
 வீங்கும் வியாதிகள் சோகை பல அதாய்
 வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய்
 வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே
 
மேல்

 #656
 கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன்
 கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன்
 கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
 கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே
 
மேல்

 #657
 நாடியின் ஓசை நயனம் இருதயம்
 தூடி அளவும் சுடர் விடு சோதியை
 தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
 ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே
 
மேல்

 #658
 ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள்
 ஒன்பது நாடி உடையது ஓர் இடம்
 ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு
 ஒன்பது காட்சி இலை பல ஆமே
 
மேல்

 #659
 ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல
 வாங்கி இரவி மதி வழி ஓடிட
 தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட
 ஆங்கு அது சொன்னோம் அருவழியோர்க்கே
 
மேல்

 #660
 தலைப்பட்டவாறு அண்ணல் தையலை நாடி
 வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல்
 துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால்
 விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே
 
மேல்

 #661
 ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர்
 நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர்
 தேடிச்சென்று அங்கே தேனை முகந்து உண்டு
 பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே
 
மேல்

 #662
 கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
 மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
 கட்டிட்டு நின்று களம் கனி ஊடுபோய்
 பொட்டிட்டு நின்று பூரணம் ஆனதே
 
மேல்

 #663
 பூரண சத்தி எழுமூன்று அறை ஆக
 ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார்
 நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
 காரணம் ஆகி கலந்து விரிந்ததே
 
மேல்

 #664
 விரிந்து குவிந்து விளைந்த இ மங்கை
 கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில்
 பரந்து குவிந்தது பார் முதல் பூதம்
 இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே
 
மேல்

 #665
 இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
 மடை படு வாயுவும் மாறியே நிற்கும்
 தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே
 மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே
 
மேல்

 #666
 ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில்
 மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
 மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே
 நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே
 
மேல்

 #667
 நாடியின் உள்ளே நாத தொனியுடன்
 தேடி உடன் சென்று அ திருவினை கைக்கொண்டு
 பாடி உள் நின்ற பகைவரை கட்டிட்டு
 மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே
 
மேல்

 #668
 அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில்
 அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
 இணுகாத வேகார் பாகாயம் ஏவல்
 அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே
 
மேல்

 #669
 எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால்
 கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும்
 ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு
 விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே
 
மேல்

 #670
 சித்திகள் எட்டு அன்றி சேர் எட்டியோகத்தால்
 புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
 சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை
 சத்தி அருள் தர தான் உள ஆகுமே
 
மேல்

 #671
 எட்டு இவை தன்னோடு எழில் பரம் கைகூட
 பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
 இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி
 எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே
 
மேல்

 #672
 மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி
 கந்தாய் குழியில் கசடு அற வல்லார்க்கு
 தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும்
 அந்த உலகம் அணிமாதி ஆமே
 
மேல்

 #673
 முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில்
 அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும்
 தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி
 மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே
 
மேல்

 #674
 ஆகின்ற அ தனிநாயகி தன்னுடன்
 போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்
 சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
 மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே
 
மேல்

 #675
 மாலகு ஆகிய மாயனை கண்ட பின்
 தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும்
 பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது
 மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே
 
மேல்

 #676
 மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன்
 தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிட
 கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின்
 மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே
 
மேல்

 #677
 ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின்
 போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம்
 மேல் நின்ற காலம் வெளியுற நின்றன
 தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே
 
மேல்

 #678
 தன்வழி ஆக தழைத்திடும் ஞானமும்
 தன் வழி ஆக தழைத்திடும் வையகம்
 தன் வழி ஆக தழைத்த பொருள் எல்லாம்
 தன் வழி தன் அருள் ஆகி நின்றானே
 
மேல்

 #679
 நின்றன தத்துவநாயகி தன்னுடன்
 கண்டன பூத படை அவை எல்லாம்
 கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில்
 விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே
 
மேல்

 #680
 ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின்
 பாகின்ற பூவில் பரப்பவை காணலாம்
 ஏகின்ற காலம் வெளியுற நின்றது
 போகின்ற காலங்கள் போவதும் இல்லையே
 
மேல்

 #681
 போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை
 சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை
 தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி
 யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே
 
மேல்

 #682
 அறிந்த பராசத்தி உள்ளே அமரில்
 பறிந்தது பூத படை அவை எல்லாம்
 குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில்
 விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே
 
மேல்

 #683
 ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர்
 மூல விளக்கு ஒளி முன்னே உடையவர்
 கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு
 மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே
 
மேல்

 #684
 நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
 கண்டன பூத படை அவை எல்லாம்
 கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில்
 பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே
 
மேல்

 #685
 ஆகின்ற சந்திரன் தன் ஒளியாய் அவன்
 ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
 ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில்
 ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே
 
மேல்

 #686
 தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
 தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
 தானே சங்கார தலைவனும் ஆயிடும்
 தானே இவன் எனும் தன்மையன் ஆமே
 
மேல்

 #687
 தன்மை அது ஆக தழைத்த கலையின் உள்
 பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை
 வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின்
 மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே
 
மேல்

 #688
 மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின்
 நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம்
 கைப்பொருள் ஆக கலந்த உயிர்க்கு எல்லாம்
 தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே
 
மேல்

 #689
 தன்மை அது ஆக தழைத்த பகலவன்
 மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின்
 பொன்மை அது ஆக புலன்களும் போயிட
 நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே
 
மேல்

 #690
 நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன்
 அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு
 பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும்
 கல் கொடி ஆகிய காமுகன் ஆமே
 
மேல்

 #691
 காமரு தத்துவம் ஆனது வந்த பின்
 பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும்
 மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய்
 நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே
 
மேல்

 #692
 நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின்
 தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும்
 போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின்
 பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே
 
மேல்

 #693
 பேரொளி ஆகிய பெரிய அ வேட்டையும்
 பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன்
 தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம்
 ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே
 
மேல்

 #694
 காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில்
 கால் அது அ கொடி நாயகி தன்னுடன்
 கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும்
 கால் அது வேண்டி கொண்ட இ ஆறே
 
மேல்

 #695
 ஆறது ஆகும் அமிர்த தலையினுள்
 ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள
 ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
 ஆறது ஆக வளர்ப்பது இரண்டே
 
மேல்

 #696
 இரண்டின் மேலே சதாசிவ நாயகி
 இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில்
 இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்
 திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
 
மேல்

 #697
 அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
 அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது
 அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம்
 அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே
 
மேல்

 #698
 ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி
 ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில்
 ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம்
 ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே
 
மேல்

 #699
 முன் எழும் அ கலைநாயகி-தன்னுடன்
 முன்னுறு வாயு முடி வகை சொல்லிடின்
 முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய்
 முன்னுறு வாயு முடி வகை ஆமே
 
மேல்

 #700
 ஆய் வரும் அ தனிநாயகி-தன்னுடன்
 ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில்
 ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது
 மாய் வரு வாயு வளப்புள் இருந்தே
 
மேல்

 #701
 இருநிதி ஆகிய எந்தை இடத்து
 இருநிதி வாயு இயங்கு நெறியில்
 இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் அஞ்சாய்
 இருநிதி வாயு இயங்கும் எழுத்தே
 
மேல்

 #702
 எழுகின்ற சோதியுள் நாயகி-தன்-பால்
 எழுகின்ற வாயு இடம் அது சொல்லில்
 எழுநூற்றிருபத்தொன்பான் அது நாலாய்
 எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே
 
மேல்

 #703
 ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும்
 ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட
 எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின்
 ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே
 
மேல்

 #704
 சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
 சந்திரன் தானும் தலைப்படும் தன்மையை
 சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து
 உந்தி சமாதி உடை ஒளியோகியே
 
மேல்

 #705
 அணங்கு அற்றம் ஆதல் அருஞ்சன நீவல்
 வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல்
 சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல்
 நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே
 
மேல்

 #706
 மரணம் சரை விடல் வண் பர காயம்
 இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல்
 அரணன் திருவுறவு ஆதல் மூவேழாம்
 கரனுறு கேள்வி கணக்கு அறிந்தேனே
 
மேல்

 #707
 ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
 பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை
 காதலில் அண்ணலை காண இனியவர்
 நாதன் இருந்த நகர் அறிவாரே
 
மேல்

 #708
 மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க
 கோலிய ஐம்முகன் கூற பரவிந்து
 சால பரநாதம் விந்து தனிநாதம்
 பாலித்த சத்தி பரைபரன் பாதமே
 
மேல்

 #709
 ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று
 மீதான தற்பரை மேவும் பரனொடு
 மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி
 ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே
 
மேல்

 #710
 மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி
 துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்
 விதி அது செய்கின்ற மெய்யடியார்க்கு
 பதி அது காட்டும் பரமன் நின்றானே
 
மேல்

 #711
 கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர்
 மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து
 பொட்டு எழ குத்தி பொறி எழ தண்டு இட்டு
 நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே
 
மேல்

 #712
 காதல் வழிசெய்த கண் நுதல் அண்ணலை
 காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில்
 காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
 காதல் வழிசெய்து காக்கலும் ஆமே
 
மேல்

 #713
 காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
 காக்கலும் ஆகும் கலை பதினாறையும்
 காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
 காக்கலும் ஆகும் கருத்துற நில்லே
 
மேல்

 #714
 நிலைபெற நின்றது நேர்தரு வாயு
 சிலைபெற நின்றது தீபமும் ஒத்து
 கலை வழி நின்ற கலப்பை அறியில்
 அலைவு அற ஆகும் வழி இது ஆமே
 
மேல்

 #715
 புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை
 மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும்
 சடை ஒன்றி நின்ற அ சங்கரநாதன்
 விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே
 
மேல்

 #716
 இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
 பெருக்கின்ற கால பெருமையை நோக்கி
 ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க
 தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே
 
மேல்

 #717
 சாதகமான அ தன்மையை நோக்கியே
 மாதவம் ஆன வழிபாடு செய்திடும்
 போதகம் ஆக புகலுற பாய்ச்சினால்
 வேதகம் ஆக விளைந்து கிடக்குமே
 
மேல்

 #718
 கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
 நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி
 படர்ந்தது தானே பங்கயம் ஆக
 தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே
 
மேல்

 #719
 தானே எழுந்த அ தத்துவநாயகி
 ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும்
 வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட
 தேனே பருகி சிவாலயம் ஆகுமே
 
மேல்

 #720
 திகழும் படியே செறிதரு வாயு
 அழியும் படியை அறிகிலர் ஆரும்
 அழியும் படியை அறிந்த பின் நந்தி
 திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே
 
மேல்

 #721
 சோதனை-தன்னில் துரிசு அற காணலாம்
 நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள்
 சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
 மாதனம் ஆக மதித்து கொள்ளீரே
 
மேல்

 #722
 ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
 பேராமல் கட்டி பெரிது உண்ண வல்லீரேல்
 நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
 பேராது காயம் பிரான் நந்தி ஆணையே
 
மேல்

 #723
 ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும்
 நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
 தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
 மாசு அறு சோதி வகுத்து வைத்தானே
 
மேல்

 #724
 உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
 திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
 உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
 உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
 
மேல்

 #725
 உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
 உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
 உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
 உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே
 
மேல்

 #726
 சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும்
 கழற்றி மலத்தை கமலத்தை பூரித்து
 உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
 அழற்றி தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே
 
மேல்

 #727
 அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில்
 வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
 செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும்
 நஞ்சு அற சொன்னோம் நரைதிரை நாசமே
 
மேல்

 #728
 மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள
 ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
 நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு
 ஊன்றி இருக்க உடம்பு அழியாதே
 
மேல்

 #729
 நூறும் அறுபதும் ஆறும் வலம் வர
 நூறும் அறுபதும் ஆறும் இடம் வர
 நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட
 நூறும் அறுபதும் ஆறும் புகுவரே
 
மேல்

 #730
 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான்
 மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம்
 தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
 சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே
 
மேல்

 #731
 திறத்திறம் விந்து திகழும் அகாரம்
 உற பெறவே நினைந்து ஓதும் சகாரம்
 மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
 அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே
 
மேல்

 #732
 உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை
 சிந்தித்து எழுப்பி சிவமந்திரத்தினால்
 முந்தி முகட்டின் நிறுத்தி அபானனை
 சிந்தித்து எழுப்ப சிவன் அவன் ஆமே
 
மேல்

 #733
 மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல்
 கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்-மின்
 ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன்
 கூறா உபதேசம் கொண்டது காணுமே
 
மேல்

 #734
 நீல நிறன் உடை நேரிழையாளொடும்
 சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு
 ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
 பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே
 
மேல்

 #735
 அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை
 பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
 உண்டி சுருங்கில் உபாயம் பல உள
 கண்டம் கறுத்த கபாலியும் ஆமே
 
மேல்

 #736
 பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
 அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில்
 வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார்
 கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே
 
மேல்

 #737
 சுழலும் பெருங்கூற்று தொல்லை முன் சீறி
 சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன்
 கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே
 நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே
 
மேல்

 #738
 நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
 தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும்
 ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
 மான் கன்று நின்று வளர்கின்றவாறே
 
மேல்

 #739
 ஆகும் சன வேத சத்தியை அன்புற
 நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை
 பாகுபடுத்தி பல் கோடி களத்தினால்
 ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே
 
மேல்

 #740
 மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி
 இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
 பதிவட்டத்து உள் நின்று பாலிக்குமாறு
 மது விட்டு போமாறு மாயல் உற்றேனே
 
மேல்

 #741
 உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
 கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
 பற்றிய பத்தும் பலவகை நாழிகை
 அற்றது அறியாது அழிகின்றவாறே
 
மேல்

 #742
 அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று
 மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும்
 கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப
 எழுகின்ற ஈரைம்பத்தெண் அற்று இருந்ததே
 
மேல்

 #743
 திருந்து தினம் அ தினத்தினொடு நின்று
 இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
 பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
 வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே
 
மேல்

 #744
 மனை புகுவீரும் மகத்து இடை நாடி
 என இருபத்தஞ்சும் ஈராறு அதனால்
 தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு
 வினை அறி ஆறு விளங்கிய நாலே
 
மேல்

 #745
 நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து
 பாலம் கடந்தது பத்து பதினைந்து
 கோலம் கடந்த குணத்து ஆண்டு மூவிரண்டு
 ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே
 
மேல்

 #746
 ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும்
 தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
 கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு
 வேறு பதியங்கள் நாள் விதித்தானே
 
மேல்

 #747
 விதித்த இருபத்தெட்டொடு மூன்று அறையாக
 தொகுத்து அறி முப்பத்துமூன்று தொகு-மின்
 பகுத்து அறி பத்து எட்டும் பாராதிகள் நால்
 உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே
 
மேல்

 #748
 முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
 இறைஇறை யார்க்கும் இருக்க அரிது
 மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
 பறை அறையாது பணிந்து முடியே
 
மேல்

 #749
 முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
 இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
 கடிந்தனன் மூள கதுவ வல்லார்க்கு
 நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே
 
மேல்

 #750
 நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
 பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும்
 சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
 உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே
 
மேல்

 #751
 ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள்
 பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
 தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
 பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே
 
மேல்

 #752
 தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு
 மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
 கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
 பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே
 
மேல்

 #753
 பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
 அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
 வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து
 சுணங்கனுக்காக சுழல்கின்றவாறே
 
மேல்

 #754
 சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான்
 தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல்
 கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு
 குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே
 
மேல்

 #755
 கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்
 சாத்திரம்-தன்னை தலைப்பெய்து நிற்பர்கள்
 பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
 ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே
 
மேல்

 #756
 ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி
 நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
 சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
 குன்றிடை பொன் திகழ் கூத்தனும் ஆமே
 
மேல்

 #757
 கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
 ஏத்துவர் பத்தினில் எண் திசை தோன்றிட
 பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
 சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே
 
மேல்

 #758
 சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர்
 காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள்
 சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
 மூத்துடன் கோடி உகம் அது ஆமே
 
மேல்

 #759
 உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று
 அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள்
 சிவம் கோடி விட்டு செறிய இருந்து அங்கு
 உகம் கோடி கண்டு அங்கு உயருறுவாரே
 
மேல்

 #760
 உயருறுவார் உலகத்தொடும் கூடி
 பயனுறுவார் பலர் தாம் அறியாமல்
 செயலுறுவார் சிலர் சிந்தை இலாமல்
 கயலுறு கண்ணியை காணகிலாரே
 
மேல்

 #761
 காணகிலாதார் கழிந்து ஓடிப்போவர்கள்
 காணகிலாதார் நயம் பேசிவிடுவார்கள்
 காணகிலாதார் கழிந்த பொருள் எலாம்
 காணகிலாமல் கழிகின்றவாறே
 
மேல்

 #762
 கழிகின்ற அ பொருள் காணகிலாதார்
 கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும்
 கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
 கழியாத அ பொருள் காணலும் ஆமே
 
மேல்

 #763
 கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே
 எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
 திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
 நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே
 
மேல்

 #764
 நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
 நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
 தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
 கூட வல்லார்கட்கு கூறலும் ஆமே
 
மேல்

 #765
 கூறும் பொருளில் தகார உகாரங்கள்
 தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட
 கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
 ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே
 
மேல்

 #766
 அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
 அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
 அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
 அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே
 
மேல்

 #767
 அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
 அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
 அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
 அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே
 
மேல்

 #768
 வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
 சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
 ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட
 கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே
 
மேல்

 #769
 காணலும் ஆகும் பிரமன் அரி என்று
 காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை
 காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
 காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே
 
மேல்

 #770
 வைத்த கை சென்னியில் நேரிதாய் தோன்றிடில்
 உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம்
 அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில்
 நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே
 
மேல்

 #771
 ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண்
 ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
 ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
 ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே
 
மேல்

 #772
 ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
 நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
 பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும்
 தாமே உலகில் தலைவனும் ஆமே
 
மேல்

 #773
 தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
 தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
 தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
 தலைவன் இடம்வலம் தன்வழி நூறே
 
மேல்

 #774
 ஏறிய வானில் எண்பது சென்றிடும்
 தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்
 ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
 தேறியே நின்று தெளி இ வகையே
 
மேல்

 #775
 இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
 அ வகை ஐம்பதே என்ன அறியலாம்
 செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
 முவ்வகை ஆம் அது முப்பத்துமூன்றே
 
மேல்

 #776
 மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
 எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும்
 ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில்
 பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே
 
மேல்

 #777
 பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில்
 ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு
 போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில்
 தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே
 
மேல்

 #778
 ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில்
 பாய் இரு நாளும் பகை அற நின்றிடும்
 தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
 ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே
 
மேல்

 #779
 அளக்கும் வகை நாலும் அ வழியே ஓடில்
 விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும்
 துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில்
 களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே
 
மேல்

 #780
 காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில்
 காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
 காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல்
 காணலும் ஆகும் கருத்துற ஒன்றே
 
மேல்

 #781
 கருதும் இருபதில் காண ஆறு ஆகும்
 கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம்
 கருதும் இருபதுடன் ஆறு காணில்
 கருதும் இரண்டு என காட்டலும் ஆமே
 
மேல்

 #782
 காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில்
 காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என
 காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில்
 காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே
 
மேல்

 #783
 ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும்
 பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும்
 வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில்
 ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே
 
மேல்

 #784
 ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில்
 கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும்
 சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
 மன்று இயல்பாகும் மனையில் இரண்டே
 
மேல்

 #785
 மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
 சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி
 வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால்
 தனையுற நின்ற தலைவனும் ஆமே
 
மேல்

 #786
 ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
 ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
 ஆரும் அறியார் அழிகின்ற அ பொருள்
 ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே
 
மேல்

 #787
 அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய
 அறிவாவது தான் உலகு உயிர் அத்தின்
 பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில்
 செறிவது நின்று திகழும் அதுவே
 
மேல்

 #788
 அது அருளும் மருள் ஆன உலகம்
 பொது அருளும் புகழாளர்க்கு நாளும்
 மது அருளும் மலர் மங்கையர் செல்வி
 இது அருள்செய்யும் இறையவன் ஆமே
 
மேல்

 #789
 பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
 குறிப்பது கூடிய கோல குரம்பை
 பழப்பதி ஆவது பற்று அறும் பாசம்
 அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே
 
மேல்

 #790
 வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
 ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
 வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
 தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே
 
மேல்

 #791
 வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
 தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
 ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று
 வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே
 
மேல்

 #792
 செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
 இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
 ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு
 அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே
 
மேல்

 #793
 மாறி வரும் இருபான் மதி வெய்யவன்
 ஏறி இழியும் இடைபிங்கலை இடை
 ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம்
 தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே
 
மேல்

 #794
 உதித்து வலத்து இடம் போகின்ற-போது
 அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும்
 உதித்தது வே மிக ஓடிடுமாகில்
 உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே
 
மேல்

 #795
 நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி
 அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
 இடுகின்றவாறு சென்றின் பணி சேர
 முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே
 
மேல்

 #796
 ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது
 வாயு விதமும் பதினாறு உள வலி
 போய மனத்தை பொருகின்ற ஆதாரம்
 ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே
 
மேல்

 #797
 வாரத்தில் சூலம் வரும் வழி கூறும்-கால்
 நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்
 பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்
 நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே
 
மேல்

 #798
 தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை
 அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில்
 துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின்
 மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே
 
மேல்

 #799
 கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல்
 அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி
 விட்டத்தை பூட்டி மேல் பையை தாள் கோத்து
 நட்டம் இருக்க நரன் இல்லை தானே
 
மேல்

 #800
 வண்ணான் ஒலிக்கும் சதுர பலகை மேல்
 கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி
 விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால்
 அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்றவாறே
 
மேல்

 #801
 இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி
 துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம்
 உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
 இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே
 
மேல்

 #802
 ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும்
 வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து
 நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய்
 பாய்ந்து உரைசெய்தது பாலிக்குமாறே
 
மேல்

 #803
 நாவின் நுனியை நடுவே சிவிறிடில்
 சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
 மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர்
 சாவதும் இல்லை சத கோடி ஊனே
 
மேல்

 #804
 ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல்
 வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை
 வான் ஊறல் வகை அறிவாளர்க்கு
 தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே
 
மேல்

 #805
 மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில்
 காலனும் இல்லை கதவும் திறந்திடும்
 ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
 பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே
 
மேல்

 #806
 நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு
 சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
 பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாக
 சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே
 
மேல்

 #807
 தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர்
 நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
 பாவினை நாடி பயன் அற கண்டவர்
 தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே
 
மேல்

 #808
 தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர்
 ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு
 கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
 ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே
 
மேல்

 #809
 ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு
 தேன் நீர் பருகி சிவாய நம என்று
 கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
 வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே
 
மேல்

 #810
 வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்
 காய்ந்து அறிவு ஆக கருணை பொழிந்திடும்
 பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு
 கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே
 
மேல்

 #811
 கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர்
 தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
 காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
 தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே
 
மேல்

 #812
 தீவினையாளர்-தம் சென்னியில் உள்ளவன்
 பூவினையாளர்-தம் பொன் பதி ஆனவன்
 பாவினையாளர்-தம் பாகவத்து உள்ளவன்
 மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே
 
மேல்

 #813
 மதியின் எழும் கதிர் போல பதினாறாய்
 பதிமனை நூறு நூற்றிருபத்துநாலாய்
 கதி மனை உள்ளே கணைகள் பரப்பி
 எதிர் மலையாமல் இருந்தனன் தானே
 
மேல்

 #814
 இருந்தனள் சத்தியும் அ கலை சூழ
 இருந்தனள் கன்னியும் அ நடு ஆக
 இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர
 இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே
 
மேல்

 #815
 பொழிந்த இரு வெள்ளி பொன் மண் அடையில்
 வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு
 கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு
 கொழுந்து அது ஆகும் குணம் அது தானே
 
மேல்

 #816
 குணம் அது ஆகிய கோமளவல்லி
 மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்
 தனம் அது ஆகிய தத்துவ ஞானம்
 இனம் அது ஆக இருந்தனன் தானே
 
மேல்

 #817
 இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
 பரிந்த இ தண்டுடன் அண்டம் பரிய
 விரிந்த அ பூவுடன் மேல் எழ வைக்கின்
 மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே
 
மேல்

 #818
 மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை
 கண்டகத்து அங்கே கருதியே கீழ் கட்டி
 பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக
 குண்டலகாதனும் கூத்து ஒழிந்தானே
 
மேல்

 #819
 ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
 கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
 வழிகின்ற காலத்து வட்ட கழலை
 பழிகின்ற காலத்து பை அகற்றீரே
 
மேல்

 #820
 பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின்
 மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம்
 கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின்
 மை அணி கோயில் மணி விளக்கு ஆமே
 
மேல்

 #821
 விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
 நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே
 வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி
 சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே
 
மேல்

 #822
 சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும்
 சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும்
 சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில்
 சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே
 
மேல்

 #823
 தூர தரிசனம் சொல்லுவான் காணலாம்
 கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு
 ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில்
 பாரார் உலகம் பகல் முன்னது ஆமே
 
மேல்

 #824
 முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே
 பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும்
 நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட
 தன் எழு கோயில் தலைவனும் ஆமே
 
மேல்

 #825
 பூசுவன எல்லாம் பூசி புலர்த்திய
 வாச நறும் குழல் மாலையும் சாத்தி
 காய குழலி கலவியொடும் கலந்து
 ஊசித்துளையுற தூங்காது போகமே
 
மேல்

 #826
 போகத்தை உன்னவே போகாது வாயுவும்
 மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
 சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும்
 தாதில் குழைந்து தலைகண்டவாறே
 
மேல்

 #827
 கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
 மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்
 வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட
 தண்டு ஒருகாலும் தளராது அங்கமே
 
மேல்

 #828
 அங்க புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
 அங்கத்தில் விந்து வருகின்ற போகத்து
 பங்க படாமல் பரிகரித்து தம்மை
 தங்கி கொடுக்க தலைவனும் ஆமே
 
மேல்

 #829
 தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
 தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
 தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
 தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே
 
மேல்

 #830
 அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்
 துஞ்சுவது ஒன்ற துணைவி துணைவன்-பால்
 நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது
 பஞ்ச கடிகை பரியங்க யோகமே
 
மேல்

 #831
 பரியங்க யோகத்து பஞ்ச கடிகை
 அரிய இ வியோகம் அடைந்தவர்க்கு அல்லது
 சரி வளை முன்கைச்சி சந்தன கொங்கை
 உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே
 
மேல்

 #832
 ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்
 விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
 பண்ணார் அமுதினை பஞ்ச கடிகையில்
 எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே
 
மேல்

 #833
 ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
 வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
 வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட
 சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே
 
மேல்

 #834
 வெள்ளி உருகி பொன் வழி ஓடாமே
 கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார்
 கொள்ளி பறிய குழல் வழியே சென்று
 வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே
 
மேல்

 #835
 வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
 சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
 பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
 வித்தகனாய் நிற்கும் வெம் கதிரோனே
 
மேல்

 #836
 வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
 நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
 தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம்
 திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே
 
மேல்

 #837
 திருத்தி புதனை திருத்தல் செய்வார்க்கு
 கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
 வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும்
 துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே
 
மேல்

 #838
 எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
 மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
 உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின்
 விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே
 
மேல்

 #839
 வெளியை அறிந்து வெளியின் நடுவே
 ஒளியை அறியின் உளி முறி ஆமே
 தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
 வெளியை அறிந்தனன் மேல் அறியேனே
 
மேல்

 #840
 மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின்
 மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர்
 நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள்
 மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே
 
மேல்

 #841
 மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து
 பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து
 தன்னொடு தன் ஐ தலைப்பெய்ய வல்லாரேன்
 மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே
 
மேல்

 #842
 வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
 வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
 வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
 ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே
 
மேல்

 #843
 உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால்
 கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
 இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
 பதம் அறிந்து உம்முளே பார் கடிந்தாளே
 
மேல்

 #844
 பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று
 தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது
 ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
 கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே
 
மேல்

 #845
 உடலில் கிடந்த உறுதி குடிநீர்
 கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும்
 உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
 நடலை படாது உயிர் நாடலும் ஆமே
 
மேல்

 #846
 தெளி தரும் இந்த சிவநீர் பருகில்
 ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை
 வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
 களி தரும் காயம் கனகம் அது ஆமே
 
மேல்

 #847
 நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர்
 மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள்
 தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின்
 மாறும் இதற்கு மறு மயிர் ஆமே
 
மேல்

 #848
 கரை அருகே நின்ற கானல் உவரி
 வரைவரை என்பவர் மதி இலா மாந்தர்
 நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு
 நரைதிரை மாறும் நமனும் அங்கு இல்லையே
 
மேல்

 #849
 அளக நல் நுதலாய் ஓர் அதிசயம்
 களவு காயம் கலந்த இ நீரிலே
 மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில்
 இளகும் மேனி இருளும் கபாலமே
 
மேல்

 #850
 வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும்
 நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான்
 ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம்
 சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே
 
மேல்

 #851
 எய்து மதி கலை சூக்கத்தில் ஏறியே
 எய்துவ தூலம் இருவகை பக்கத்துள்
 எய்தும் கலை போல ஏறி இறங்குமாம்
 துய்யது சூக்கத்து தூலத்த காயமே
 
மேல்

 #852
 ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
 ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள்
 ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி
 ஆகின்ற யோகி அறிந்த அறிவே
 
மேல்

 #853
 ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்
 நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள
 பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும்
 மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே
 
மேல்

 #854
 பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை
 பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
 ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை
 அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே
 
மேல்

 #855
 எட்டெட்டு அனலின் கலை ஆகும் ஈராறுள்
 சுட்டப்படும் கதிரோனுக்கும் சூழ் கலை
 கட்டப்படும் ஈரெட்டாம் மதி கலை
 ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே
 
மேல்

 #856
 எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர்
 சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என
 கட்டப்படும் தாரகை கதிர் நால் உள
 கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே
 
மேல்

 #857
 எல்லா கலையும் இடை பிங்கலை நடு
 சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
 செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால்
 நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே
 
மேல்

 #858
 அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்து
 தங்கிய தாரகை ஆகும் சசி பானு
 வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
 தங்கு நவசக்கரம் ஆகும் தரணிக்கே
 
மேல்

 #859
 தரணி சலம் கனல் கால் தக்க வானம்
 அரணிய பானு அரும் திங்கள் அங்கி
 முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
 பிரணவம் ஆகும் பெருநெறி தானே
 
மேல்

 #860
 தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்து
 தாரகை மின்னா சசி வளர் பக்கத்து
 தாரகை பூவில் சகலத்து யோனிகள்
 தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே
 
மேல்

 #861
 முன் பதினைந்தின் முளைத்து பெருத்திடும்
 பின் பதினைந்தில் பெருத்து சிறுத்திடும்
 அ பதினைஞ்சும் அறிவல்லார்கட்கு
 செப்ப_அரியான் கழல் சேர்தலும் ஆமே
 
மேல்

 #862
 அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்து
 தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி
 பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற
 திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே
 
மேல்

 #863
 ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
 நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள்
 கன்றிய காலன் கருக்குழி வைத்த பின்
 சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே
 
மேல்

 #864
 அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
 அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
 அங்கி சசி கதிர் கூட அ தாரகை
 தங்கிய அதுவே சகலமும் ஆமே
 
மேல்

 #865
 ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
 பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து
 நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில்
 ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே
 
மேல்

 #866
 காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
 மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
 பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
 ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே
 
மேல்

 #867
 பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்
 ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
 மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும்
 காலைக்கு சங்கு கதிரவன் தானே
 
மேல்

 #868
 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
 பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
 அதிரவன் அண்ட புறம் சென்று அடர்ப்ப
 எதிரவன் ஈசன் இடம் அது தானே
 
மேல்

 #869
 உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை
 அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர்
 அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின்
 தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே
 
மேல்

 #870
 ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
 ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
 ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
 வேதியன் அங்கே வெளிப்படும் தானே
 
மேல்

 #871
 பாம்பு மதியை தினலுறும் பாம்பினை
 தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும்
 பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
 நீங்கல் கொடானே நெடுந்தகையானே
 
மேல்

 #872
 அயின்றது வீழ் அளவும் துயில் இன்றி
 பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று
 நயம் தரு பூரணை உள்ள நடத்தி
 வியம் தரு பூரணை மேவும் சசியே
 
மேல்

 #873
 சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி
 சசி உதித்தானேல் தனது ஊண் அருந்தி
 சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
 சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே
 
மேல்

 #874
 ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
 நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
 ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
 தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே
 
மேல்

 #875
 தண் மதி பானு சரி பூமியே சென்று
 மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு
 வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின்
 தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே
 
மேல்

 #876
 வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
 தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
 மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
 அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே
 
மேல்

 #877
 ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து
 போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு
 காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில்
 ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே
 
மேல்

 #878
 வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
 சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும்
 ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து
 ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே
 
மேல்

 #879
 உணர் விந்து சோணி உறவினன் வீசும்
 புணர் விந்து வீசும் கதிரில் குறையில்
 உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
 உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே
 
மேல்

 #880
 விடாத மனம் பவனத்தொடு மேவி
 நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி
 கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
 படாதன இன்பம் பருகார் அமுதமே
 
மேல்

 #881
 அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல்
 குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி
 சமைய தண் தோட்டி தரிக்க வல்லார்க்கு
 நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே
 
மேல்

 #882
 உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து
 தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல
 தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம்
 கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே
 
மேல்

 #883
 மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி
 தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
 ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
 பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே
 
மேல்
 

@4 நான்காம் தந்திரம்

#884
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே

மேல்

#885
ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதே

மேல்

#886
தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே

மேல்

#887
ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம்
ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே

மேல்

#888
தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து
தாண்டவம் ஆனது அனுகிரக தொழில்
தாண்டவ கூத்து தனிநின்ற தற்பரம்
தாண்டவ கூத்து தமனியம் தானே

மேல்

#889
தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு
தானே தனக்கு தராதலம் தானே

மேல்

#890
தராதல மூலைக்கு தற்பர மா பரன்
தராதலம் வெப்பு நமசிவாய ஆம்
தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும்
தராதல யோகம் தயாவாசி ஆமே

மேல்

#891
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே

மேல்

#892
ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை
ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு
ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே

மேல்

#893
படுவது இரண்டும் பல கலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக்கரங்கள்
படுவது சங்கார தாண்டவ பத்தி
படுவது கோணம் பரந்திடும்வாறே

மேல்

#894
வாறே சதாசிவ மாறு இலா ஆகமம்
வாறே சிவகதி வண்டு உறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொது ஆகும் மன்றின் அமலமே

மேல்

#895
அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்
அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே

மேல்

#896
தானே தனக்கு தலைவியுமாய் நிற்கும்
தானே தனக்கு தன் மலையாய் நிற்கும்
தானே தனக்கு தன் மயமாய் நிற்கும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

மேல்

#897
தலைவனுமாய் நின்ற தற்பரக்கூத்தனை
தலைவனுமாய் நின்ற சற்பாத்திரத்தை
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே

மேல்

#898
இணையார் திருவடி எட்டெழுத்து ஆகும்
இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும்
இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும்
இணையார் கழல் இணை ஏழாயிரமே

மேல்

#899
ஏழாயிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி
ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம்
ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே

மேல்

#900
இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி
இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே

மேல்

#901
தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும்
தானே அகார உகாரம் அதாய் நிற்கும்
தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு
தானே உலகில் தனிநடம் தானே

மேல்

#902
நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும்
நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து
நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம்
நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே

மேல்

#903
செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில்
செம்பு பொன் ஆக திரண்டது சிற்பரம்
செம்பு பொன் ஆகும் சிரீயும் கிரீயும் என
செம்பு பொன் ஆன திரு அம்பலமே

மேல்

#904
திரு அம்பலம் ஆக சீர் சக்கரத்தை
திரு அம்பலம் ஆக ஈராறு கீறி
திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி
திரு அம்பலம் ஆக செபிக்கின்றவாறே

மேல்

#905
வாறே சிவாய நமச்சிவாய நம
வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை
வாறே அருளால் வளர் கூத்து காணலாம்
வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே

மேல்

#906
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும்
பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில்
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே

மேல்

#907
பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும்
பொன் பாதம் காண திருமேனி ஆயிடும்
பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே

மேல்

#908
சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துடனே வரும்
சொல்லினும் பாச சுடர் பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே

மேல்

#909
சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல்
சூக்குமம் ஆன வழி இடை காணலாம்
சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம்
சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே

மேல்

#910
ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே

மேல்

#911
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம்
மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும்
மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே

மேல்

#912
கூத்தே சிவாயநம மசி ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும்
கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே

மேல்

#913
ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட
ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே

மேல்

#914
இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே

மேல்

#915
தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே

மேல்

#916
அரகர என்ன அரியது ஒன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே

மேல்

#917
எட்டுநிலை உள எம் கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட
பட்டது மந்திரம் பான்மொழி பாலே

மேல்

#918
மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே

மேல்

#919
ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய்
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே

மேல்

#920
இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக
இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே

மேல்

#921
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரமாய்
நகார வகார நல் காலது நாடுமே

மேல்

#922
நாடும் பிரணவ நடு இரு பக்கமும்
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது
நாடு நடுவுள் முக நமசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே

மேல்

#923
ஆயும் சிவாயநம மசிவாயந
ஆயும் நமசிவாய யநமசிவா
ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

மேல்

#924
அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்ததே

மேல்

#925
அமர்ந்த அரகர ஆம் புறவட்டம்
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே

மேல்

#926
சூல தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூல தலையினில் சூழும் ஓங்காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆல பதிக்கும் அடைவது ஆமே

மேல்

#927
அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம்
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம்
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே

மேல்

#928
பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம்
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே

மேல்

#929
இயலும் இ மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறிய தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே

மேல்

#930
ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாயநம என்ன
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டு போமே

மேல்

#931
அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே
பெண்ணின் நல்லாளும் பிரான் அ கரத்துளே
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட
புண்ணியவாளர் பொருள் அறிவார்களே

மேல்

#932
அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து
இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே

மேல்

#933
அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு
சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே

மேல்

#934
அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத்துள்ளே அமர்ந்து இருந்தானே

மேல்

#935
கூத்தனை காணும் குறி பல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர்
கூத்தனை காணும் குறி அது ஆமே

மேல்

#936
அ திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே
அ திசைக்கு உள்நின்ற நவ் எழுத்து ஓதினால்
அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை
அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே

மேல்

#937
தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிட
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே

மேல்

#938
கல் ஒளியே என நின்ற வடதிசை
கல் ஒளியே என நின்றனன் இந்திரன்
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை
கல் ஒளியே என காட்டி நின்றானே

மேல்

#939
தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே

மேல்

#940
மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திட காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற
மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே

மேல்

#941
ஆகின்ற பாதமும் அ ந-வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின்
ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே

மேல்

#942
அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும்
செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும்
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே

மேல்

#943
பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம்
வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி
துரந்திடு மந்திரம் சூழ் பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே

மேல்

#944
ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே

மேல்

#945
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே

மேல்

#946
பரமாய அஞ்சு எழுத்துள் நடு ஆக
பரமாய நவசிம பார்க்கில் மவயநசி
பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில்
பரம் ஆய வாசிமயநமாய் நின்றே

மேல்

#947
நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே

மேல்

#948
நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை
கன்றது ஆக கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே

மேல்

#949
கொண்ட இ சக்கரத்துள்ளே குணம் பல
கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும்
கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும்
கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே

மேல்

#950
வெளியில் இரேகை இரேகையில் அ தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந்திரமே

மேல்

#951
அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடி
சிகாரமுடனே சிவன் சிந்தைசெய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே

மேல்

#952
அற்ற இடத்தே அகாரம் அது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே

மேல்

#953
அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால்
உவ் என்ற முத்தி உருகி கலந்திடும்
மவ் என்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே

மேல்

#954
நீரில் எழுத்து இ உலகர் அறிவது
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே

மேல்

#955
காலை நடுவுற காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்தி தானே

மேல்

#956
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று
பாவிகள் அத்தின் பயன் அறிவார் இல்லை
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே

மேல்

#957
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே

மேல்

#958
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும்
சந்தி செய்யாநிற்பர் தாம் அறிகிலர்
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே

மேல்

#959
சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே

மேல்

#960
அருவினில் அம்பரம் அங்கு எழும் நாதம்
பெருகு துடி இடை பேணிய விந்து
மருவி அகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு மந்திரமே

மேல்

#961
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி
சந்திரனோடே தலைப்படுமாயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே

மேல்

#962
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலார்
ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள்
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர் பெறலாமே

மேல்

#963
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள
நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே

மேல்

#964
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திட
பந்த தலைவி பதினாறு கலை அதாம்
கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே

மேல்

#965
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே

மேல்

#966
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன்
அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே

மேல்

#967
வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தை
சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு
சார்ந்த வினை துயர் போக தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடையோனே

மேல்

#968
உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும்
விண்-நின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்-நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே

மேல்

#969
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெய பாலனும் ஆமே

மேல்

#970
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே

மேல்

#971
நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு
நாலாம் எழுத்து அது நல் நெறி தானே

மேல்

#972
இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயம்-தனை ஓரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே

மேல்

#973
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன்
நாம நமசிவ என்று இருப்பாருக்கு
நேம தலைவி நிலவி நின்றாளே

மேல்

#974
பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர
நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு
அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே

மேல்

#975
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே

மேல்

#976
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்து அகத்தானே

மேல்

#977
அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத்து அடக்க வல்லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம் புகலாமே

மேல்

#978
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடி பரையொடும்
சந்திசெய்வார்க்கு சடங்கு இல்லை தானே

மேல்

#979
மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே

மேல்

#980
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்த பின்
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே

மேல்

#981
சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே

மேல்

#982
சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே

மேல்

#983
ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அ முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சி-முதல் உள்ளே தெளிய வல்லார்கட்கு
தம் முதல் ஆகும் சதாசிவம் தானே

மேல்

#984
நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும்
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ
சிவம் என்பது ஆனாம் எனும் தெளிவுற்றதே

மேல்

#985
கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள்
தேடி அதனை தெளிந்து அறியீரே

மேல்

#986
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே

மேல்

#987
எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்
வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு
சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே

மேல்

#988
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய் சிவசக்கரத்தானே

மேல்

#989
பட்டன மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே

மேல்

#990
சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும்
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே

மேல்

#991
வித்தாம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும்
பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே

மேல்

#992
கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து
பண்டு அழியாத பதி வழியே சென்று
நண்பு அழியாமே நம எனல் ஆமே

மேல்

#993
புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தை
கண் என உன்னி கலந்து நின்றாரே

மேல்

#994
ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே

மேல்

#995
எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே
கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு
சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே

மேல்

#996
ந-முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு
உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல்
உ-முதல் ஆயவன் உற்று நின்றானே

மேல்

#997
நின்ற அரசு அம் பலகை மேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசி சுடரிடை
தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே

மேல்

#998
கரண இரளி பலகை யமன் திசை
மரணமிட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே

மேல்

#999
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாச பலகையில்
காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே

மேல்

#1000
உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்சகாயத்தை பாரித்து
முச்சதுரத்தின் முதுகாட்டில் வைத்திட
வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே

மேல்

#1001
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதினாயிரம் வேண்டிலே

மேல்

#1002
எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு
எண்ணா பொன் ஒளி எழு வெள்ளி பூசிடா
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே

மேல்

#1003
அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல்
வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே

மேல்

#1004
சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம்
தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில்
பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து
ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே

மேல்

#1005
அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே
பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும்
துன்பம் அகற்றி தொழுவோர் நினையும்-கால்
இன்புடனே வந்து எய்திடும் முத்தியே

மேல்

#1006
எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வம் முன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே

மேல்

#1007
நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத்தியம் அனுசந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம் என்னும்
மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே

மேல்

#1008
வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகு சிவயோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே

மேல்

#1009
அறிவரும் ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடி புலம்புகின்றார்கள்
நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில்
எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே

மேல்

#1010
இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம்
மருள் அறியாமையும் மன்னும் அறிவு
மருள் இவை விட்டு அறியாமை மயக்கும்
மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே

மேல்

#1011
தான் அவன் ஆக அவனே தான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக
போனவன் அன்பு இது நாலாம் மரபுற
தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே

மேல்

#1012
ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும்
வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே

மேல்

#1013
நம அது ஆசனம் ஆன பசுவே
சிவம் அது சித்தி சிவமாம் பதியே
நம அற ஆதி நாடுவது அன்றாம்
சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே

மேல்

#1014
தெளிவரும் நாளில் சிவ அமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே

மேல்

#1015
நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின்
நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும்
நவகுண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே

மேல்

#1016
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்து எழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடும் முப்புரம் பார் அங்கியோடே
மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே

மேல்

#1017
மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அ பொருள்
கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது
நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே

மேல்

#1018
கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பு எல்லாம்
இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே

மேல்

#1019
எடுத்த அ குண்டத்து இடம் பதினாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே
கொதித்து எழும் வல்வினை கூடகிலாவே

மேல்

#1020
கூட முக்கூடத்தின் உள் எழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ
நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே

மேல்

#1021
நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம்
கைச்சுடர் ஆகும் கருத்துற்ற கைகளில்
பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நல் சுடராய் எழும் நல்லது என்றாளே

மேல்

#1022
நல்லது என்றாளே நமக்குற்ற நாயகம்
சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம்
மெல்ல நின்றாளை வினவகில்லாதவர்
கல் அதன் தாளையும் கற்றும் வின்னாளே

மேல்

#1023
வின்னா இளம்பிறை மேவிய குண்டத்து
சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே

மேல்

#1024
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக
நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு
சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப
முகம் கொண்ட செஞ்சுடர் முக்கணனார்க்கே

மேல்

#1025
முக்கணன் தானே முழு சுடர் ஆயவன்
அ கணன் தானே அகிலமும் உண்டவன்
தி கணன் ஆகி திகை எட்டும் கண்டவன்
எ கணன் தானுக்கும் எந்தை பிரானே

மேல்

#1026
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்
தந்தை-தன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான்
மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே

மேல்

#1027
மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள்
ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ
நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே

மேல்

#1028
நல் ஒளியாக நடந்து உலகு எங்கும்
கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும்
சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம்
கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே

மேல்

#1029
நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய்
பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும்
கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ
விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே

மேல்

#1030
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தை
கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாக
படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும்
அடுத்து எழு கண்ணானது அந்தம் இலாற்கே

மேல்

#1031
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை
அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை
அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை
அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே

மேல்

#1032
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி-பாலே

மேல்

#1033
பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
கால் பதி பத்து முகம் பார்த்து கண்களும்
பூ பதி பாதம் இரண்டு சுடர் முடி
நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே

மேல்

#1034
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியை கூடுதல் முத்தியே

மேல்

#1035
முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன்
கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய்
செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே

மேல்

#1036
சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும்
ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியை
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே

மேல்

#1037
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும்
உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய் கண்டம் இல்லா பொருள் கலந்தாரே

மேல்

#1038
கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும்
மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு
மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி
உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே

மேல்

#1039
உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய்
மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும்
பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன
சத்திமான் ஆக தழைத்த கொடியே

மேல்

#1040
கொடி ஆறு சென்று குலாவிய குண்டம்
அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படி ஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதனம் ஆமே

மேல்

#1041
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியை
சாதனம் ஆக சமைந்த குரு என்று
போதனம் ஆக பொருந்த உலகு ஆளும்
பாதனம் ஆக பரிந்தது பார்த்தே

மேல்

#1042
பார்த்திடம் எங்கும் பரந்து எழு சோதியை
ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை
காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே

மேல்

#1043
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும்
பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப
சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே

மேல்

#1044
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை
போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே

மேல்

#1045
மா மாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில்
தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள்
ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே

மேல்

#1046
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர
பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி
இருள் புரை ஈசி மனோன்மணி என்ன
வரு பலவாய் நிற்கும் மா மாது தானே

மேல்

#1047
தானா அமைந்த அ முப்புரம் தன்னிடை
தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள்
தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி
தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே

மேல்

#1048
நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே

மேல்

#1049
தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை
வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில்
ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி
கார் அணி மா மணி குண்டலகாதிக்கே

மேல்

#1050
குண்டலகாதி கொலை வில் புருவத்தாள்
கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி
சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே

மேல்

#1051
நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை
நன்று அறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே

மேல்

#1052
சுத்த அம் பார தனத்தி சுகோதயள்
வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை
அத்தகை யாவும் அணோரணி தானுமாய்
வைத்த அ கோல மதி அவள் ஆகுமே

மேல்

#1053
அவளை அறியா அமரரும் இல்லை
அவள் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை
அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே

மேல்

#1054
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அரு உருவாம் அவள் என்பர்
அறிவார் கருமம் அவள் இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத்தானே

மேல்

#1055
தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி
ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன்
வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம்
கோன் எங்கும் நின்ற குறி பல பாரே

மேல்

#1056
பராசத்தி மா சத்தி பல வகையாலும்
தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய்
உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே
புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே

மேல்

#1057
போகம் செய் சத்தி புரி குழலாளொடும்
பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும்
ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும்
பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே

மேல்

#1058
கொம்பு அனையாளை குவி முலை மங்கையை
வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை
செம்பவள திருமேனி சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே

மேல்

#1059
வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரை
சித்த கரண செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தை தலை அவள் ஆமே

மேல்

#1060
தலைவி தட முலை மேல் நின்ற தையல்
தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை
கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம்
நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே

மேல்

#1061
நின்றவள் நேரிழை நீள் கலையோடுற
என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ
மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி
ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே

மேல்

#1062
ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி
சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே

மேல்

#1063
உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி
மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும்
புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை
கணிந்து எழுவார்க்கு கதி அளிப்பாளே

மேல்

#1064
அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி
தெளியுறு வித்து சிவகதி காட்டி
ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே

மேல்

#1065
உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது
வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே

மேல்

#1066
நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே

மேல்

#1067
ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடு-மின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே

மேல்

#1068
தோத்திரம் செய்து தொழுது துணை அடி
வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு
ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே

மேல்

#1069
ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை
நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை
பாதியில் வைத்து பல்-கால் பயில்விரேல்
சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே

மேல்

#1070
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை
ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்ல அருளாலே

மேல்

#1071
அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள் பெற்ற சிந்தை புவனாபதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே

மேல்

#1072
ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை
ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே

மேல்

#1073
ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே

மேல்

#1074
தானே தலைவி என நின்ற தற்பரை
தானே உயிர் வித்து தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும் நல் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

மேல்

#1075
பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்து
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே

மேல்

#1076
அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாக
சிந்தை கமலத்து எழுகின்ற மா சத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே

மேல்

#1077
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற
போகும் திரிபுரை புண்ணியத்தோரே

மேல்

#1078
புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே

மேல்

#1079
தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங்கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரி பிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே

மேல்

#1080
ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்தெழு நாள் புணர் மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே

மேல்

#1081
சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம்
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே

மேல்

#1082
மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை
கல் இயல் ஒப்பது காணும் திருமேனி
பல் இயல் ஆடையும் பல் மணி தானே

மேல்

#1083
பல் மணி சந்திர கோடி திருமுடி
சொல் மணி குண்டல காதி உழை கண்ணி
நல் மணி சூரிய சோம நயனத்தாள்
பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே

மேல்

#1084
பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்
ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்துநால்வரும்
சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே

மேல்

#1085
கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம்
எண் திசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொடு எண் திசை தாங்கும் அருட்செல்வி
புண்டரிகத்தினுள் பூசனையாளே

மேல்

#1086
பூசனை கந்தம் புனை மலர் மா கோடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணி மந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே

மேல்

#1087
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன் போல தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நல் காரணி காணே

மேல்

#1088
காரணி மந்திரம் ஓதும் கமலத்து
பூரணகும்ப இரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே

மேல்

#1089
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே

மேல்

#1090
உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடு முறை எண்ணி
பிரை சதம் எட்டும் முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே

மேல்

#1091
தாம குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே

மேல்

#1092
காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணு நம என்று பேசும் தலை மேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணு நடு என்ற அந்தம் சிகையே

மேல்

#1093
சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி
பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம்
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே

மேல்

#1094
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறி
பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே

மேல்

#1095
பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு
வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு
கூசிய விந்து உடன் கொண்டு கூவே

மேல்

#1096
கூவிய சீவன் பிராணன் முதலாக
பாவிய ச-உடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்து நின்றாளே

மேல்

#1097
நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே

மேல்

#1098
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை
ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே

மேல்

#1099
ஆதி வயிரவி கன்னி துறை மன்னி
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம்
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே

மேல்

#1100
கோல குழலி குலாய புருவத்தள்
நீல குவளை மலர் அன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி
மேலை சிவத்தை வெளிப்படுத்தாளே

மேல்

#1101
வெளிப்படு வித்து விளை அறிவித்து
தெளி படுவித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்து கதிர்ப்படு சோதி
ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே

மேல்

#1102
கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள்
கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே

மேல்

#1103
தையல் நல்லாளை தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை
பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின்
வெய்ய பவம் இனி மேவகிலாவே

மேல்

#1104
வேய் அன தோளி விரை உறு மெல் மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய சடை முடி சூலினி சுந்தரி
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே

மேல்

#1105
இனியது என் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி தானே தலைவி
தனி படுவித்தனள் சார்வு படுத்து
நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே

மேல்

#1106
நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து
கூடி இருந்த குமரி குலக்கன்னி
பாடக சீறடி பைம்பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்குகின்றாளே

மேல்

#1107
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கை கழுத்து ஆர புல்லி
பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே

மேல்

#1108
உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே

மேல்

#1109
அம் சொல் மொழியாள் அருந்தவ பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை
தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே

மேல்

#1110
ஆருயிராயும் அருந்தவ பெண்பிள்ளை
கார் இயல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே

மேல்

#1111
குலாவிய கோல குமரி என் உள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலை தலையாளே

மேல்

#1112
கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள்
முலை தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலை தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே

மேல்

#1113
இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே

மேல்

#1114
ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே

மேல்

#1115
இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே

மேல்

#1116
பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலை செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே

மேல்

#1117
உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்
பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே

மேல்

#1118
கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள
என்னே இ மாயை இருள் அது தானே

மேல்

#1119
இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல்
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில்
அருள் அது செய்யும் எம் ஆதி பிரானே

மேல்

#1120
ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே

மேல்

#1121
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே

மேல்

#1122
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே

மேல்

#1123
வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனை காண அனாதியும் ஆமே

மேல்

#1124
ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே

மேல்

#1125
அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை
அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே

மேல்

#1126
உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர்-தங்கள்
கணங்களை தன் அருள்செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே

மேல்

#1127
கும்ப களிறு ஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணி முடி வண்ணனும்
இன்ப கலவி இனிது உறை தையலும்
அன்பில் கலவியுள்ளாய் ஒழிந்தாரே

மேல்

#1128
இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர்
அன்பில் புக வல்லனாம் எங்கள் அப்பனும்
துன்ப குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பில் பராசத்தி என் அம்மை தானே

மேல்

#1129
என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழி தலைவனும் அங்கு உளன்
மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும்
பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே

மேல்

#1130
தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன்
பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள
பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே

மேல்

#1131
ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர்
மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின்
பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின்
தாள் நயம் ஆய அனாதனன் தானே

மேல்

#1132
தானே எழுந்த இ தத்துவநாயகி
வான் நேர் எழுந்து மதியை விளக்கினள்
தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே

மேல்

#1133
அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து
அறிவான மங்கை அருள் அது சேரில்
பிறியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே

மேல்

#1134
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்க
பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே

மேல்

#1135
பாலனும் ஆகும் பராசத்தி தன்னொடு
மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட
மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட
சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே

மேல்

#1136
நின்ற பராசத்தி நீள் பரன்-தன்னொடு
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்
நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே
மன்றன் அவற்றுள் மருவிடும் தானே

மேல்

#1137
மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்
கரு ஒத்து நின்று கலங்கின-போது
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே

மேல்

#1138
சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதி அதாம் வண்ணத்தாளே

மேல்

#1139
ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே

மேல்

#1140
உடையவன் அங்கி உருத்திர சோதி
விடை அவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடை அது ஆகிய சாதகர் தாமே

மேல்

#1141
தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது
பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள
பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார் மேல் உறைகின்ற பைந்தொடியாளே

மேல்

#1142
பைங்கொடியாளும் பரமன் இருந்திட
திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம்
விண் கொடி ஆகி விளங்கி வருதலால்
பெண் கொடி ஆக நடந்தது உலகே

மேல்

#1143
நடந்தது அ மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்
படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே
தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே

மேல்

#1144
அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகத்தே செல
முடுக்கும் தாமரை முச்சதுரத்தே

மேல்

#1145
முச்சதுரத்தே எழுந்த முளை சுடர்
எ சதுரத்தும் இடம் பெற ஓடிட
கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற
எ சதுரத்தும் இருந்தனள் தானே

மேல்

#1146
இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய்
பரந்தன வாயு திசைதிசை-தோறும்
குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி
நடந்தது தேறல் அதோ முகம் அம்பே

மேல்

#1147
அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே

மேல்

#1148
நவிலும் பெரும் தெய்வம் நால்மறை சத்தி
துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம்
அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து
புகலும் முச்சோதி புனைய நிற்பாளே

மேல்

#1149
புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே

மேல்

#1150
போற்றி என்பேன் புவனாபதி அம்மை என்
ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கோள் பைந்தொடியே

மேல்

#1151
தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி
வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை
செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே

மேல்

#1152
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி
பல் இசை பாவை பயன் தரு பைங்கொடி
புல் இசை பாவையை போக துரந்திட்டு
வல் இசை பாவை மனம் புகுந்தாளே

மேல்

#1153
தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து
ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே

மேல்

#1154
அது இது என்பார் அவனை அறியார்
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை
திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே

மேல்

#1155
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள
பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்
தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே

மேல்

#1156
தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி
விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை
குறித்திருந்தாள் அவள் கூறிய ஐந்து
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே

மேல்

#1157
மாது நல்லாளும் மணாளன் இருந்திட
பாதி நல்லாளும் பகவனும் ஆனது
சோதி நல்லாளை துணைப்பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே

மேல்

#1158
வெள்ளடையான் இரு மா மிகு மா மலர்
கள் அடையார் அ கமழ் குழலார் மனம்
அள் அடையானும் வகை திறமாய் நின்ற
பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே

மேல்

#1159
பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற
பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே

மேல்

#1160
பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெருந்தகை
மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம்
காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து
ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே

மேல்

#1161
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும்
வேலை தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே

மேல்

#1162
உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு
உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி
உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம்
உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே

மேல்

#1163
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி
புத்தக சீறடி பாவை புணர்வினை
தொத்த கருத்து அது சொல்லகிலேனே

மேல்

#1164
சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம்
சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள்
வெல்ல ஒண்ணாத வினை தனிநாயகி
மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே

மேல்

#1165
தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரை தண் கடல் கண்ணே

மேல்

#1166
கண் உடையாளை கலந்து அங்கு இருந்தவர்
மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா
பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர்
விண் உடையார்களை மேலுற கண்டே

மேல்

#1167
கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி
பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும்
விண்டு எண் திசையும் விரை மலர் கைக்கொண்டு
தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே

மேல்

#1168
கன்னி ஒளி என நின்ற இ சந்திரன்
மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி இருப்பிடம் சேர் பதினாறுடன்
பன்னி இருப்ப பராசத்தி ஆமே

மேல்

#1169
பராசத்தி என்றென்று பல் வகையாலும்
தரா சத்தி ஆன தலை பிரமாணி
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும்
குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே

மேல்

#1170
உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி
இணைந்து பரம் என்று இசைந்து இது தானே

மேல்

#1171
இது அ பெருந்தகை எம்பெருமானும்
பொது அ கல்வியும் போகமும் ஆகி
மதுவ குழலி மனோன்மணி மங்கை
அது அ கல்வியுள் ஆயுழி யோகமே

மேல்

#1172
யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும்
யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும்
யோக நல் சத்தி உதரநடு ஆகும்
யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே

மேல்

#1173
தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற
வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும்
ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்து எழுகின்றனள் கோல்வளைதானே

மேல்

#1174
தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை
தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை
தான் ஆன விந்து சகமே பரம் எனும்
தான் ஆம் பரவாதனை என தக்கதே

மேல்

#1175
தக்க பராவித்தை தான் இருபானேழில்
தக்கு எழு ஓரும் திரம் சொல்ல சொல்லவே
மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொல் முத்திரையாளே

மேல்

#1176
முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள்
தத்துவமாய் அல்லவாய சகலத்தள்
வைத்த பராபரனாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே

மேல்

#1177
கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி
பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும் அகிலம் கனி
தங்கும் அவள் மனை தான் அறிவாயே

மேல்

#1178
வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடை பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்கு
தாயும் மகளும் தாரமும் ஆமே

மேல்

#1179
தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள்
காரண காரியம் ஆகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பார் அளவாம் திசை பத்து உடையாளே

மேல்

#1180
பத்து முகம் உடையாள் நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே

மேல்

#1181
கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயிராளி பிறிவு அறுத்தாளே

மேல்

#1182
பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை
குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு
பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே
அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே

மேல்

#1183
உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம்
கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி
கொள்ள தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே

மேல்

#1184
புரிந்து அருள்செய்கின்ற போகமா சத்தி
இருந்து அருள்செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிது இருந்தாளே

மேல்

#1185
இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி
திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி
நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு
பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே

மேல்

#1186
அது இது என்னும் அவாவினை நீக்கி
துதி அது செய்து சுழியுற நோக்கில்
விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும்
மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே

மேல்

#1187
மூன்று மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே

மேல்

#1188
இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல்
வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே

மேல்

#1189
ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவசமாய் எழில்
தூறு அது செய்யும் சுகந்த சுழி அது
பேறு அது செய்து பிறந்திருந்தாளே

மேல்

#1190
இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணி
பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே

மேல்

#1191
மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவி சடங்கு செய்தாரே

மேல்

#1192
சடங்கு அது செய்து தவம்புரிவார்கள்
கடம்-தனில் உள்ளே கருதுவராகில்
தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை-பாலே

மேல்

#1193
பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி
சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம்
மூலத்து மேல் அது முத்து அது ஆமே

மேல்

#1194
முத்து வதனத்தி முகம்-தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக்கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே

மேல்

#1195
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி
தாவிய நல் பத தண் மதியம் கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே

மேல்

#1196
உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும்
கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும்
கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே

மேல்

#1197
கொடியது இரேகை குரு உள்ளிருப்ப
படியது வாருனை பைங்கழல் ஈசன்
வடிவு அது ஆனந்தம் வந்து முறையே
இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே

மேல்

#1198
ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே

மேல்

#1199
சத்தி என்பாள் ஒரு சாதக பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியை பாழில் உகுத்த அப்பாவிகள்
கத்திய நாய் போல் கதறுகின்றாரே

மேல்

#1200
ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு
கார் ஏர் குழலி கமல மலர் அன்ன
சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே

மேல்

#1201
சிந்தையில்வைத்து சிராதியிலே வைத்து
முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து
சந்தையில் வைத்து சமாதி செய்வீரே

மேல்

#1202
சமாதி செய்வார்கட்கு தான் முதல் ஆகி
சிவாதியில் ஆரும் சிலைநுதலாளை
நவாதியில் ஆக நயந்து அது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே

மேல்

#1203
உறைபதி-தோறும் முறைமுறை மேவி
நறை கமழ் கோதையை நாள்-தொறும் நண்ணி
மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும்
இறை தினை போதினில் எய்திடல் ஆமே

மேல்

#1204
எய்திடல் ஆகும் இருவினையின் பயன்
கொய் தளிர் மேனி குமரி குலாம் கன்னி
மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு
கை தவம் இன்றி கருத்துறும்வாறே

மேல்

#1205
கருத்துறும் காலம் கருதும் மனமும்
திருத்தி இருந்தவை சேரும் நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே

மேல்

#1206
ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என
ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும்
தாம நறும் குழல் தையலை கண்ட பின்
சோம நறு மலர் சூடி நின்றாளே

மேல்

#1207
சூடிடும் அங்குச பாச துளை வழி
கூடும் இரு வளை கோலக்கை குண்டிகை
நாடும் இருபத நல் நெடு ருத்திரம்
ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே

மேல்

#1208
ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன்
தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம்
காமனும் சாமன் இரவி கனல் உடன்
சோமனும் வந்து அடி சூட நின்றாளே

மேல்

#1209
சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை
நாடி நடு இடை ஞானம் உருவ நின்று
ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே

மேல்

#1210
அண்டம் முதலாய் அவனி பரியந்தம்
கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது
கண்டனும் கண்டியும் ஆகிய காரணம்
குண்டிகை கோளிகை கண்ட அதனாலே

மேல்

#1211
ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம்
சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும்
கோலி வந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே

மேல்

#1212
மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த
காலால் வருந்தி கழிவர் கணத்திடை
நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தினாளே

மேல்

#1213
ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள்
ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம நமசிவ என்று இருப்பார்க்கு
நேம துணைவி நிலாவி நின்றாளே

மேல்

#1214
நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின்
சிலாமயம் ஆகும் செழும் தரளத்தின்
சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை
கலாமயம் ஆக கலந்து நின்றாளே

மேல்

#1215
கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்
கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம்
கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்
கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே

மேல்

#1216
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் அது ஆமே

மேல்

#1217
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம்
மோக முகம் ஐந்து முக்கண் முகம்-தொறும்
நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே

மேல்

#1218
நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை
வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று
ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே

மேல்

#1219
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள்
ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே

மேல்

#1220
ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம்
ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள
ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில்
ஏய வார் குழலி இனிது நின்றாளே

மேல்

#1221
நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட
இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும்
துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழலுள்
ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே

மேல்

#1222
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே

மேல்

#1223
ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும்
மா மது மண்டலம் மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட
கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே

மேல்

#1224
ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி
ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும்
ஆகும் பராபரையோடு அ பரையவள்
ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே

மேல்

#1225
தான் நிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயம் உடையார் அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து
ஆனாம் பரசிவம் மேலது தானே

மேல்

#1226
தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே

மேல்

#1227
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியவள் ஆகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே

மேல்

#1228
நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு
பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம்
செந்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்கு
தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே

மேல்

#1229
சன்மார்க்கம் ஆக சமைதரு மார்க்கமும்
துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்க தேவரும் நல்நெறி ஆவதும்
சன்மார்க்க தேவியும் சத்தி என்பாளே

மேல்

#1230
சத்தியும் நானும் சயம்புவும் அல்லது
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை
அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால்
மத்தில் ஏற வழி அதுவாமே

மேல்

#1231
அது இது என்ற அவமே கழியாதே
மது விரி பூங்குழல் மங்கை நல்லாளை
பதி மது மேவி பணிய வல்லார்க்கு
விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே

மேல்

#1232
வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினை பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழை புலன்-தன்னையும்
வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே

மேல்

#1233
ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம்பரியத்து வந்த பரம் இது
மாரன் குழலாளும் அ பதி தானும் முன்
சாரும் பதம் இது சத்தியம் ஆமே

மேல்

#1234
சத்தியினோடு சயம்புவும் நேர்படில்
வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும்
சித்தது மேவி திருந்திடுவாரே

மேல்

#1235
திருந்து சிவனும் சிலைநுதலாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அ இடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே

மேல்

#1236
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு
மன் தரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதி நின்றாளே

மேல்

#1237
நின்றனள் நேரிழையாளொடு நேர்பட
ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே

மேல்

#1238
தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி
ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை
மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர்
சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே

மேல்

#1239
ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி
மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம் அதா நெறி ஆகி நின்றாளே

மேல்

#1240
நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை
பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும்
குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே

மேல்

#1241
ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி
ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட
தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும்
மா மயம் ஆனது வந்து எய்தலாமே

மேல்

#1242
வந்து அடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்திசையோர்களும்
கொந்து அணியும் குழலாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழி நவில்வீரே

மேல்

#1243
நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்து எரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே

மேல்

#1244
தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி
பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று
பாங்குடன் ஏற்ப பராசத்தி போற்றே

மேல்

#1245
பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர்
அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள்
நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை
வில் கொடி மாதை விரும்பி விளங்கே

மேல்

#1246
விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க
களம் கொள் மணியுடன் காம வினோதம்
உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே

மேல்

#1247
தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை
விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே

மேல்

#1248
உருவம் பல உயிராய் வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே

மேல்

#1249
மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடி
தாயம் புணர்க்கும் சலநதி அமலனை
காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி
ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே

மேல்

#1250
உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை
புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை
அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம்
பிணைந்து ஒழிந்தேன் தன் அருள்பெற்றவாறே

மேல்

#1251
பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்து அறிவார்கட்கு
பொன் தாள் உலகம் புகல் தனியாமே

மேல்

#1252
தனிநாயகன்-தனோடு என் நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர்
பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி
கனியாய் நினைவது என் காரணம் அம்மையே

மேல்

#1253
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இ மனை செய்த இ நில மங்கையும்
அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே

மேல்

#1254
அம்மையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து
அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே

மேல்

#1255
ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ்
ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம்
ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின்
ஏரொளி சக்கரம் அ நடு வன்னியே

மேல்

#1256
வன்னி எழுத்து அவை மா பலம் உள்ளன
வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின
வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம்
வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே

மேல்

#1257
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அ பதி அ எழுத்து ஆவன
சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு
சொல்லிடும் சக்கரமாய் வரும் மேல் அதே

மேல்

#1258
மேல் வரும் விந்துவும் அ எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல் வரும் அ பதி அ எழுத்தே வரின்
மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே

மேல்

#1259
ஞாலம் அதுவாக விரிந்தது சக்கரம்
ஞாலம் அதுவாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை
ஞாலம் அதுவாக விரிந்தது எழுத்தே

மேல்

#1260
விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்து அது சக்கரமாக
விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே

மேல்

#1261
அப்பு அதுவாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அ அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ
அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே

மேல்

#1262
ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை
ஆகாச அ எழுத்து ஆகி சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறி-மினே

மேல்

#1263
அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அ எழுத்து அ பதியோர்க்கும்
அறிந்திடும் அ பகலோன் நிலையாமே

மேல்

#1264
அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும்
அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும்
இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே
இ முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம்

மேல்

#1265
எழுத்து அவை நூறொடு நாற்பத்துநாலும்
எழுத்து அவை ஆறு அது அ நடு வன்னி
எழுத்து அவை அ நடு அ சுடர் ஆகி
எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே

மேல்

#1266
அந்தமும் ஈறு முதலா நவை அற
அந்தமும் அ பதினெட்டுடன் ஆதலால்
அந்தமும் அ பதின்மூன்றில் அமர்ந்த பின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே

மேல்

#1267
ஆவினம் ஆனவை முந்நூற்றறுபது
ஆவினம் அ பதினைந்து இனமாயுறும்
ஆவினம் அ பதினெட்டுடனாயுறும்
அவினம் அ கதிரோன் வர வந்தே

மேல்

#1268
வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பது இராசியும்
வந்திடும் நாள் அது முந்நூற்றறுபதும்
வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே

மேல்

#1269
அவ்வினம் மூன்றும் அ ஆடு அதுவாய் வரும்
எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம்
சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம்

மேல்

#1270
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின்
இராசியுள் சக்கரம் என்று அறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின்
இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே

மேல்

#1271
நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அ பதி அ எழுத்தே வரில்
நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே

மேல்

#1272
தாரகை ஆக சமைந்தது சக்கரம்
தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நல் பகலோன் வர
தாரகை தாரகை தாரகை கண்டதே

மேல்

#1273
கண்டிடும் சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திட
கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின்
கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே

மேல்

#1274
கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும்
பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி
வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின்
நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே

மேல்

#1275
நின்றது அண்டமும் நீளும் புவி எலாம்
நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட
நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும்
நின்ற இ அண்டம் பலமது விந்துவே

மேல்

#1276
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம்
விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே

மேல்

#1277
வீசம் இரண்டு உள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற
வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே

மேல்

#1278
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில்
விரிந்தது உள் கட்டம் எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது ஆமே

மேல்

#1279
விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்த இ ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தாளே

மேல்

#1280
விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும்
விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே

மேல்

#1281
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம்
கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை
பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே

மேல்

#1282
உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை
தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே

மேல்

#1283
பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே

மேல்

#1284
அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே

மேல்

#1285
கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம்
மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம்
ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே

மேல்

#1286
மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும்
மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில்
கொதித்து அங்கு எழுந்தவை கூடகிலாவே

மேல்

#1287
கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும்
பாடி உள் ஆக பகைவரும் வந்துறார்
தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே

மேல்

#1288
தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அ நடு ஆக்கி
குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய-காலே

மேல்

#1289
கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம்
ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய்
பாலித்து எழுந்து பகை அற நின்ற பின்
மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே

மேல்

#1290
கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய்
பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின்
மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நம எனே

மேல்

#1291
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம்
அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக
அறிந்து வலம் அது ஆக நடவே

மேல்

#1292
நடந்து வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனை கண் அது போக்கி
தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது
படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே

மேல்

#1293
ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டு அங்கு
ஆமே தமருகம் பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே

மேல்

#1294
கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும்
மெய் அது செம்மை விளங்கு வயிரவன்
துய்யர் உளத்தில் துளங்கு மெய்யுற்றதாய்
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே

மேல்

#1295
பூசனை செய்ய பொருந்தி ஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகு நெய்
பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே

மேல்

#1296
வேண்டியவாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின்
வேண்டியவாறு வரும் வழி நீ நட
வேண்டியவாறு அதுவாகும் கருத்தே

மேல்

#1297
சாம்பவி மண்டல சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும்
நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே

மேல்

#1298
நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து
கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி
ஏடு அற நாலைந்து இடவகை ஆமே

மேல்

#1299
நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே

மேல்

#1300
ஆறிருபத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறு உருவாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாயநம என்று
கூறு-மின் கூறில் குறைகளும் இல்லையே

மேல்

#1301
குறைவதும் இல்லை குரை கழல் கூடும்
அறைவதும் ஆரணம் அ எழுத்து ஆகி
திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே

மேல்

#1302
காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக
காணும் கனகமும் காரிகை ஆமே

மேல்

#1303
ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே

மேல்

#1304
பகை இல்லை என்றும் பணிந்தவர்-தம்பால்
நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே

மேல்

#1305
ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே

மேல்

#1306
உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே
மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும்
குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி
கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே

மேல்

#1307
ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும்
சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே

மேல்

#1308
ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள்
வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே

மேல்

#1309
ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தியாக சிவகுரு
யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே

மேல்

#1310
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே

மேல்

#1311
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி
ஓதி குருவின் உபதேசம் கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி
சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே

மேல்

#1312
சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு
எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின்
மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே

மேல்

#1313
இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம்
இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே

மேல்

#1314
மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டு
தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவை புவனாபதியை பின் பூசியே

மேல்

#1315
பூசிக்கும் போது புவனாபதி-தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி
பேசிய பிராண பிரதிட்டை அது செய்து
தேசுற்றிடவே தியானம் அது செய்யே

மேல்

#1316
செய்ய திருமேனி செம்பட்டு உடை தானும்
கையில் படை அங்குச பாசத்தோடு அபய
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே

மேல்

#1317
தோல் போர்வை நீக்கி துதித்து அடைவில் பூசித்து
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதாய சுவாகா என்று
சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே

மேல்

#1318
சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு
யாவருக்கும் எட்டா இயந்திரராசனை
நீ வைத்து சேமி நினைந்தது தருமே

மேல்

#1319
நவாக்கரி சக்கரம் நான் உரைசெய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக
நவாக்கரி எண்பத்தொரு வகை ஆக
நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே

மேல்

#1320
சௌ முதல் ஔவொடு ஹௌவுடனாம் கிரீம்
கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று
ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே

மேல்

#1321
நவாக்கரியாவது நான் அறி வித்தை
நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலம் தரும் தானே

மேல்

#1322
நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி
சிரம்தரு தீவினை செய்வது அகற்றி
வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே

மேல்

#1323
கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே

மேல்

#1324
நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும்
நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே

மேல்

#1325
நேர்தரும் அ திருநாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே

மேல்

#1326
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே

மேல்

#1327
அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே

மேல்

#1328
அறிந்திடுவார்கள் அமரர்களாக
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி
முரிந்திடுவானை முயன்றிடு நீரே

மேல்

#1329
நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பார் அணியும் ஹிரீம் முன் ஸ்ரீம் ஈறாம்
தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை
கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே

மேல்

#1330
கண்டும் கொள்ளும் தனிநாயகி-தன்னையும்
மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும்
பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர்
நின்று கொளும் நிலை பேறுடையாளே

மேல்

#1331
பேறுடையாள்-தன் பெருமையை எண்ணிடில்
நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர்
மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை
கூறு உடையாளையும் கூறு-மின் நீரே

மேல்

#1332
கூறு-மின் எட்டு திசைக்கும் தலைவியை
ஆறு-மின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என
மாறு-மின் வையம் வரும் வழி தன்னையும்
தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே

மேல்

#1333
சேவடி சேர செறிய இருந்தவர்
நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர்
பூ அடி இட்டு பொலிய இருந்தவர்
மா அடி காணும் வகை அறிவாரே

மேல்

#1334
ஐ முதலாக வளர்ந்து எழு சக்கரம்
ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும்
அ முதலாகி அவர்க்கு உடையாள்-தனை
மை முதலாக வழுத்திடு நீயே

மேல்

#1335
வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னை
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
முகத்துளும் முன் எழ கண்டு கொள்ளீரே

மேல்

#1336
கண்ட இ சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே

மேல்

#1337
மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல
நல் இயல்பாலே நடந்திடும் தானே

மேல்

#1338
நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே

மேல்

#1339
பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா
நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே

மேல்

#1340
வணங்கிடும் தத்துவநாயகி-தன்னை
நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினைதானே

மேல்

#1341
தானே கழறி தணியவும் வல்லனாய்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்
தானே தனிநடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கி தலைவனும் ஆமே

மேல்

#1342
ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்ற அ தையலும்
ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே

மேல்

#1343
புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும்
கண்ணியன் ஆகி கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகி தரணி முழுதுக்கும்
அண்ணியன் ஆகி அமர்ந்திருந்தானே

மேல்

#1344
தான் அது கம்இரீம் கௌ அது ஈறாம்
நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம்
கானது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே

மேல்

#1345
ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்
களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள்வார்க்கே

மேல்

#1346
அறிந்திடும் சக்கரம் அருச்சனையோடே
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே

மேல்

#1347
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம்
குகை இல்லை கொல்வது இலாமையினாலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே

மேல்

#1348
சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர்
பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே

மேல்

#1349
ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்கு
தெளிவது ஞானமும் சிந்தையும் தேற
பணிவது பஞ்சாக்கரம் அது ஆமே

மேல்

#1350
ஆமே சதாசிவநாயகி ஆனவள்
ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள்
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள்
ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே

மேல்

#1351
தன்னுளும் ஆகி தரணி முழுதும் கொண்டு
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே

மேல்

#1352
காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில்
காணலும் ஆகும் கலந்து வழி செய
காணலும் ஆகும் கருத்துற நில்லே

மேல்

#1353
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே

மேல்

#1354
மெய்ப்பொருள் ஔ முதல் ஹௌ அது ஈறா
கைப்பொருள் ஆக கலந்து எழு சக்கரம்
தற்பொருள் ஆக சமைந்த அமுதேஸ்வரி
நல்பொருள் ஆக நடு இருந்தாளே

மேல்

#1355
தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி
கால் அது கொண்டு கலந்துற வீசிடின்
நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின்
கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே

மேல்

#1356
கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின்
நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின்
மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின்
காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே

மேல்

#1357
உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி
கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது
மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை
சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே

மேல்

#1358
நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட
நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே

மேல்

#1359
விளக்கு ஒளி ஸௌ முதல் ஔ அது ஈறா
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே

மேல்

#1360
விளங்கிடும் மேல் வரும் மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும்
விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே

மேல்

#1361
தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே

மேல்

#1362
அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே

மேல்

#1363
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
சிலப்பு அறியார் சில தேவரை நாடி
தலைப்பறி ஆக சமைந்தவர் தானே

மேல்

#1364
தானே எழுந்த அ சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த வரை எண்பத்தொன்றுமே

மேல்

#1365
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே

மேல்

#1366
ஏய்ந்த மரவுரி-தன்னில் எழுதிய
வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின்
காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே

மேல்

#1367
பண்ணிய பொன்னை பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே

மேல்

#1368
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே

மேல்

#1369
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை
தச்சிது ஆக சமைந்த இ மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே

மேல்

#1370
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு
முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே

மேல்

#1371
இருந்தனர் சத்திகள் அறுபத்துநால்வர்
இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே

மேல்

#1372
கொண்ட கனகம் குழை முடி ஆடையாய்
கண்ட இ முத்தம் கனல் திருமேனியாய்
பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே

மேல்

#1373
உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தணந்து எழு சக்கரம் தான் தருவாளே

மேல்

#1374
தருவழி ஆகிய தத்துவ ஞானம்
குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று
கருவழி ஆகும் கணக்கை அறுத்து
பெருவழி ஆக்கும் பேரொளி தானே

மேல்

#1375
பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர்
சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி
கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம்
பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே

மேல்

#1376
பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி
குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி
பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம்
இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே

மேல்

#1377
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே

மேல்

#1378
பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படி சூழ
மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த
சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே

மேல்

#1379
தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்று கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்தி அது ஆமே

மேல்

#1380
ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர்
போகின்ற பேரொளியாய மலரதாய்
போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே

மேல்

#1381
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே

மேல்

#1382
சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே

மேல்

#1383
பாசம் அது ஆகிய வேரை அறுத்திட்டு
நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே
நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில்
காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே

மேல்

#1384
கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி
பண்ணுறு நாதம் பகை அற நின்றிடில்
விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே

மேல்

#1385
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை
கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும்
விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே

மேல்

#1386
தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே

மேல்

#1387
நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம்
பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம்
பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே

மேல்

#1388
அன்று இரு கையில் அளந்த பொருள் முறை
இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை
மன்று அது காணும் வழி அது ஆகவே
கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே

மேல்

#1389
காரணி சத்திகள் ஐம்பத்திரண்டு என
காரணி கன்னிகள் ஐம்பத்திருவராய்
காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும்
காரணி தன் அருள் ஆகி நின்றாளே

மேல்

#1390
நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில்
கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில்
கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணி அது காணுமே

மேல்

#1391
கண்ட இ சத்தி இருதய பங்கயம்
கொண்ட இ தத்துவநாயகி ஆனவள்
பண்டை அ வாயு பகையை அறுத்திட
இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே

மேல்

#1392
இருந்த இ சத்தி இருநாலு கையில்
பரந்த இ பூங்கிளி பாசம் மழுவாள்
கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே

மேல்

#1393
உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக
பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி
மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து
தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே

மேல்

#1394
பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே

மேல்

#1395
தாளதின் உள்ளே தாங்கிய சோதியை
கால் அது ஆக கலந்து கொள் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போல பரந்து எழு விண்ணிலே

மேல்

#1396
விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை
கண் அமர் கூபம் கலந்து வருதலால்
பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது
தண் அமர் கூபம் தழைத்தது காணுமே

மேல்

#1397
கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள
தாபத்து சத்தி தயங்கி வருதலால்
ஆபத்து கைகள் அடைந்தன நாலைந்து
பாசம் அறுக்க பரந்தன சூலமே

மேல்

#1398
சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய்
வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு
கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு
கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே

மேல்

#1399
எண் அமர் சத்திகள் நாற்பத்துநாலுடன்
எண் அமர் சத்திகள் நாற்பத்துநால்வராம்
எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே

மேல்

#1400
கடந்தவள் பொன் முடி மாணிக்க தோடு
தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக
படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே

மேல்

#1401
நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே
கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே

மேல்

#1402
உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது
கண்ட இ சத்தி சதாசிவநாயகி
கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும்
ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே

மேல்

#1403
நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே

மேல்

#1404
பூசனை சத்திகள் எண்ணைவர் சூழவே
நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய்
காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள்
மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே

மேல்

#1405
தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம்
கார் அது போல கலந்து எழு மண்ணிலே

மேல்

#1406
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாயநம என்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று-கொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே

மேல்

#1407
என்று அங்கு இருந்த அமுத கலையிடை
சென்று அங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே

மேல்

#1408
அமுதம் அது ஆக அழகிய மேனி
படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே
குமுதம் அது ஆக குளிர்ந்து எழு முத்து
கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே

மேல்

#1409
கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும்
நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும்
பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர்
நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே

மேல்

#1410
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திட
கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே

மேல்

#1411
விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து
சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே

மேல்

#1412
ஆமே அதோ முகம் மேலே அமுதமாய்
தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும்
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது
பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே

மேல்

#1413
பொன் கொடியாளுடை பூசனை செய்திட
அ களி ஆகிய ஆங்காரம் போயிடும்
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே
பிற்கொடி ஆகிய பேதையை காணுமே

மேல்

#1414
பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும்
தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும்
மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழ குவிந்திட காணுமே

மேல்

#1415
குவிந்தனர் சத்திகள் முப்பத்திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழ
பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே
இருந்தனள் காணும் இடம் பல கொண்டே

மேல்

#1416
கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை
கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே

மேல்

#1417
இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே

மேல்

#1418
ஆனை மயக்கும் அறுபத்துநால் தறி
ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி
ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை
ஆனையும் கோடும் அறுபத்துநாலிலே 

மேல்

@5 ஐந்தாம் தந்திரம்

#1419
ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற
பேரறிவாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும்
தாரணி நால் வகை சைவமும் ஆமே

மேல்

#1420
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு
சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று
நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே

மேல்

#1421
கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே

மேல்

#1422
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய
நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே

மேல்

#1423
இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியையினார்க்கே

மேல்

#1424
காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து
ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே

மேல்

#1425
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே

மேல்

#1426
ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன்
மோன திசையும் முழு எண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறை ஈறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே

மேல்

#1427
பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே

மேல்

#1428
கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே

மேல்

#1429
ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று
ஆக முடிந்த அரும் சுத்த சைவமே

மேல்

#1430
சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே

மேல்

#1431
சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே

மேல்

#1432
தன்னை பரனை சதாசிவன் என்கின்ற
மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை
உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே

மேல்

#1433
பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈராறு நீதி நெடும் போகம்
காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே

மேல்

#1434
மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி
பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே

மேல்

#1435
வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர்
நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே

மேல்

#1436
விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள்
எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலை சென்று அணுகா பசு பாசமே

மேல்

#1437
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தை பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே

மேல்

#1438
வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட
சாடும் சிவபோதகர் சுத்த சைவரே

மேல்

#1439
உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடலான மா மாயை மற்று உள்ள நீவ
படலான கேவல பாசம் துடைத்து
திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே

மேல்

#1440
சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே

மேல்

#1441
நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே

மேல்

#1442
சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே

மேல்

#1443
நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே

மேல்

#1444
உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறு ஆவாகனம் புற பூசை
செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே

மேல்

#1445
நாடு நகரமும் நல் திருக்கோயிலும்
தேடி திரிந்து சிவபெருமான் என்று
பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே

மேல்

#1446
பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே

மேல்

#1447
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர்
சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே

மேல்

#1448
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே

மேல்

#1449
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே

மேல்

#1450
சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே

மேல்

#1451
பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு
ஒத்து திருவடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே

மேல்

#1452
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

மேல்

#1453
கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின்
ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும்
வான கன்று ஆகிய வானவர் கைதொழு
மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே

மேல்

#1454
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன்
இது பணி மானுடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே

மேல்

#1455
பத்தன் கிரியை சரியை பயில்வுற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே

மேல்

#1456
அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன்
செம்பொன் செய் மேனி கமல திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பினுள் சோதி இலங்குகின்றானே

மேல்

#1457
நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி
தறி இருந்தால் போல் தம்மை இருத்தி
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா
குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே

மேல்

#1458
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

மேல்

#1459
பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடு தறி ஆமே

மேல்

#1460
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே

மேல்

#1461
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலை பாச பிறவியும் நீங்கா
அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே

மேல்

#1462
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே

மேல்

#1463
பேணில் பிறவா உலகு அருள்செய்திடும்
காணில் தனது கலவியுளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே

மேல்

#1464
ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே

மேல்

#1465
யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர்
ஆக தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே

மேல்

#1466
யோக சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே

மேல்

#1467
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே

மேல்

#1468
சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே

மேல்

#1469
தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே

மேல்

#1470
இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே

மேல்

#1471
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேரருளாளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே

மேல்

#1472
ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே

மேல்

#1473
ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும்
தான் இ குலத்தோர் சரியை கிரியையே

மேல்

#1474
ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி
ஞான கிரியையே நல் முத்தி நாடலே

மேல்

#1475
நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன்
கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே

மேல்

#1476
ஞான சமயமே நாடும் தனை காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே

மேல்

#1477
சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம்
தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்
கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே

மேல்

#1478
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

மேல்

#1479
தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட
குருபத்தி செய்யும் குவலயத்தோர்க்கு
தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே

மேல்

#1480
தெளிவு அறியாதார் சிவனை அறியார்
தெளிவு அறியாதார் சீவனும் ஆகார்
தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார்
தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே

மேல்

#1481
தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று
மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும்
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும்
தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே

மேல்

#1482
சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும்
சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம்
எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ

மேல்

#1483
சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார்
சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே

மேல்

#1484
சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு
பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால்
நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே

மேல்

#1485
அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூல பகுதியும்
பின்னிய ஞானமும் போதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே

மேல்

#1486
பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி
கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து
ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று
அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே

மேல்

#1487
மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே

மேல்

#1488
சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது
மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து
உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே

மேல்

#1489
மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே

மேல்

#1490
யோக சமாதியின் உள்ளே அகல் இடம்
யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோக சமாதியின் உள்ளே உள சத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே

மேல்

#1491
யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே

மேல்

#1492
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

மேல்

#1493
பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே

மேல்

#1494
வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே

மேல்

#1495
மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில்
தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க
தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே

மேல்

#1496
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே

மேல்

#1497
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறுகா நரை அன்னம் தாமரை நீலம்
குறுகா நறு மலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி சேரகிலாரே

மேல்

#1498
அரும் கரை ஆவது அ அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே

மேல்

#1499
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடிக்கே முறை செய்-மின்
பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும்
பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே

மேல்

#1500
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை
என்றும் தொழுவன் எழில் பரஞ்சோதியை
துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே

மேல்

#1501
திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை
உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின்
கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது
இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே

மேல்

#1502
எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி
அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே

மேல்

#1503
அது இது ஆதி பரம் என்று அகல்வர்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே

மேல்

#1504
அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே

மேல்

#1505
அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே

மேல்

#1506
வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்
பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருந்த நினைவு அறியாரே

மேல்

#1507
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆமே

மேல்

#1508
சமயம் கிரியையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே

மேல்

#1509
பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம்
பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம்
பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம்
பாசம் கரை பதி சாயுச்சியமே

மேல்

#1510
தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா
அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர்
இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே

மேல்

#1511
சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே
சயிலம் அது ஆகும் சராசரம் போல
பயிலும் குருவின் பதி புக்க-போதே
கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே

மேல்

#1512
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே

மேல்

#1513
சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல்
சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே

மேல்

#1514
இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டு கிழவனை கூடல் குறித்து
குருட்டினை நீங்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே

மேல்

#1515
தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில்
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே

மேல்

#1516
இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே

மேல்

#1517
இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே

மேல்

#1518
மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே

மேல்

#1519
கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர்
கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னை பிறவி பிறிது இல்லை தானே

மேல்

#1520
செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே

மேல்

#1521
எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனிநாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு
கையில் கருமம் செய் காட்டது ஆமே

மேல்

#1522
கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே

மேல்

#1523
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை
கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே

மேல்

#1524
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குற பெண் குவி முலை கோமளவல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே

மேல்

#1525
தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன்
பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும்
ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே

மேல்

#1526
நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல் மலர் தூவி பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே

மேல்

#1527
இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

மேல்

#1528
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை உன்னி
அரவம்செய்யாமல் அவளுடன் சேர
பரிவொன்றில் ஆளும் பராபரை தானே

மேல்

#1529
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே

மேல்

#1530
ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே

மேல்

#1531
உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே

மேல்

#1532
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே

மேல்

#1533
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமய பொருளும் அவன் அலன்
தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகலாமே

மேல்

#1534
சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்
தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே

மேல்

#1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம்
உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே

மேல்

#1536
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம்
பவகதி பாச பிறவி ஒன்று உண்டு
தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில்
அவகதி மூவரும் அ வகை ஆமே

மேல்

#1537
நூறு சமயம் உளவா நுவலும்-கால்
ஆறு சமயம் அ ஆறு உட்படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா
வீறு பரநெறி இல்லா நெறி அன்றே

மேல்

#1538
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே

மேல்

#1539
மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும்
முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி
இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில்
பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே

மேல்

#1540
சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானுடராம் அவர்
காயம் விளைக்கும் கருத்து அறியார்களே

மேல்

#1541
வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று
அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே

மேல்

#1542
மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அ நெறி ஆகி நின்றானே

மேல்

#1543
அரன்நெறி அப்பனை ஆதி பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியாவிடில் பல் வகை தூரமே

மேல்

#1544
பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன்
பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும்
துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன்
அரிது அவன் வைத்த அறநெறி தானே

மேல்

#1545
ஆன சமயம் அது இது நன்று எனும்
மாய மனிதர் மயக்கம் அது ஒழி
கானம் கடந்த கடவுளை நாடு-மின்
ஊனம் கடந்த உரு அது ஆமே

மேல்

#1546
அ நெறி நாடி அமரர் முனிவரும்
செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின்
முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார்
செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே

மேல்

#1547
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி
பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை
அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே
இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே

மேல்

#1548
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம்
கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர்
சுழி நடக்கும் துயரம் அது நீக்கி
பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே

மேல்

#1549
வழி சென்ற மாதவம் வைகின்ற-போது
பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே
வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு
உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே

மேல்

#1550
இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே

மேல்

#1551
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே

மேல்

#1552
இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே

மேல்

#1553
தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே

மேல்

#1554
அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடுவினையாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே

மேல்

#1555
மன்னும் ஒருவன் மருவும் மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள்
துன்னி மனமே தொழு-மின் துணை_இலி
தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே

மேல்

#1556
ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே

மேல்

#1557
இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே

மேல்

#1558
ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச்சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே

மேல்

#1559
சைவ பெருமை தனிநாயகன்-தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய்
வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே

மேல்

#1560
சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே

மேல்

#1561
ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு
போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும்
போமாறு அ ஆதார பூங்கொடியாளே

மேல்

#1562
அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடி திரிந்த அந்நாளும்
உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச்சுடர் தானே

மேல்

#1563
தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே

மேல்

#1564
ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின்
ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே

மேல்

#1565
மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை
நினை குறியாளனை ஞான கொழுந்தின்
நய குறி காணில் அரன்நெறி ஆமே

மேல்

#1566
ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே

மேல்

#1567
சைவ பெருமை தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே

மேல்

#1568
இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும்
பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே

மேல்

#1569
ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே

மேல்

#1570
ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே

மேல்

#1571
ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே

மேல்

#1572
அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே

மேல்


@6 ஆறாம் தந்திரம்


#1573
பத்தி பணித்து பரவும் அடி நல்கி
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு ஆமே

மேல்

#1574
பாசத்தை கூட்டியே கட்டி பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டத்தது
ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே

மேல்

#1575
சித்திகள் எட்டொடும் திண்சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே

மேல்

#1576
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால்
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால்
சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே

மேல்

#1577
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே
மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே

மேல்

#1578
சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர்
பொய் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடிபணிவாரே

மேல்

#1579
உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார்
திண்மையும் ஒண்மை சிவம் ஆய அ அரன்
வண்மையும் எட்டெட்டு சித்தி மயக்கமும்
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே

மேல்

#1580
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே

மேல்

#1581
குருவே சிவம் என கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே

மேல்

#1582
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால்
அத்தனும் அ இடத்தே அமர்ந்தானே

மேல்

#1583
தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு
தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே

மேல்

#1584
திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே

மேல்

#1585
பத்தியும் ஞான வைராக்கியமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அ முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே

மேல்

#1586
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே

மேல்

#1587
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக
சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே

மேல்

#1588
அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதி திருவருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே

மேல்

#1589
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனை கண்டுகொண்டேனே

மேல்

#1590
இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே
பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே

மேல்

#1591
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை
வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள்
பாடின் முடி வைத்து பார் வந்து தந்ததே

மேல்

#1592
தான் அவன் ஆகி சொரூபத்து வந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி
தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே

மேல்

#1593
உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து
கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே

மேல்

#1594
குரவன் உயிர் முச்சொரூபமும் கைக்கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆக கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே

மேல்

#1595
பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே
மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே

மேல்

#1596
இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும்
பதிவித்த பாத பராபரன் நந்தி
கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும்
விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே

மேல்

#1597
திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி
பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவை
கரு வழி ஆற்றிட கண்டுகொண்டேனே

மேல்

#1598
திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

மேல்

#1599
மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன்
தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே

மேல்

#1600
கழல் ஆர் கமல திருவடி என்னும்
நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும்
குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே

மேல்

#1601
முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே

மேல்

#1602
வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே

மேல்

#1603
அடி சாரலாம் அண்ணல் பாதம் இரண்டும்
முடி சார வைத்தனர் முன்னை முனிவர்
படி சார்ந்த இன்ப பழவடி வெள்ள
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே

மேல்

#1604
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்-தன் இணை அடி தானே

மேல்

#1605
நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே

மேல்

#1606
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே

மேல்

#1607
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே

மேல்

#1608
வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே

மேல்

#1609
முன்னை அறிவு அறியாத அ மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான்
தன்னை அறிய பரன் ஆக்கி தன்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே

மேல்

#1610
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே

மேல்

#1611
மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனம் கைவந்தோர்க்கு சித்தியும் முன் நிற்கும்
மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே

மேல்

#1612
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே

மேல்

#1613
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே

மேல்

#1614
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு
அறப்பதி காட்டும் அமரர் பிரானே

மேல்

#1615
பிறந்தும் இறந்தும் பல் பேதைமையாலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே

மேல்

#1616
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான்
உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே

மேல்

#1617
நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே

மேல்

#1618
கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும்
நாடி வளைந்தது நான் கடவேன் அலேன்
ஆடல் விடை உடை அண்ணல் திருவடி
கூடும் தவம் செய்த கொள்கையான் தானே

மேல்

#1619
உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே

மேல்

#1620
மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா_இலி
கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே

மேல்

#1621
நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது
போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே

மேல்

#1622
அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தாள் பலபல சீவனும் ஆகும்
நயன்றான் வரும் வழி நாம் அறியோமே

மேல்

#1623
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது
வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில்
கூம்பு ஏறி கோயிலில் பூக்கின்றவாறே

மேல்

#1624
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே

மேல்

#1625
எம் ஆருயிரும் இருநில தோற்றமும்
செம் மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர் அல்லால்
இ மாதவத்தின் இயல்பு அறியாரே

மேல்

#1626
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே

மேல்

#1627
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்
பெரும் தன்மையாளரை பேதிக்க என்றே
இருந்து இந்திரன் எவரே வரினும்
திருந்து நும்தம் சிந்தை சிவன் அவன்-பாலே

மேல்

#1628
கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்
விரைந்து தொழப்படும் வெண்மதியானே

மேல்

#1629
இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே

மேல்

#1630
அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்
பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே
அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே

மேல்

#1631
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின்
பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல்
ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே

மேல்

#1632
தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில்
தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில்
தவம் வேண்டா அ சகமார்க்கத்தோர்க்கு
தவம் வேண்டா மாற்றம்-தனை அறியாரே

மேல்

#1633
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே

மேல்

#1634
கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே

மேல்

#1635
விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய்யுரை செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய்யறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே

மேல்

#1636
கூடி தவம்செய்து கண்டேன் குரை கழல்
தேடி தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடி தவம்செய்வதே தவம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத்தவரே

மேல்

#1637
மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி
தவத்திடையாளர் தம் சார்வத்து வந்தார்
பவத்திடையாளர் அவர் பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே

மேல்

#1638
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே

மேல்

#1639
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்தான செய்வது தான் தவம் தானே

மேல்

#1640
இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம்
தலை தொட்டு கண்டேன் தவம் கண்டவாறே

மேல்

#1641
படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே

மேல்

#1642
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே

மேல்

#1643
பழுக்கின்றவாறும் பழம் உண்ணும் ஆறும்
குழ கன்று துள்ளிய கோணியை பல்-கால்
குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே

மேல்

#1644
சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டாவால்
சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே

மேல்

#1645
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே

மேல்

#1646
தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே

மேல்

#1647
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே

மேல்

#1648
முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே

மேல்

#1649
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேரகிலாமை
சிவன் அருள் கூடின் அ சிவலோகம் ஆமே

மேல்

#1650
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற-போதே

மேல்

#1651
காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட
மாய தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே

மேல்

#1652
அ-உலகத்தே பிறக்கில் உடலொடும்
அ உலகத்தே அருந்தவர் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர்
அ உலகத்தே அருள் பெறுவாரே

மேல்

#1653
கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே

மேல்

#1654
நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை
தேடுவன் தேடி சிவபெருமான் என்று
கூடுவன் கூடி குறை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்றிலேனே

மேல்

#1655
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே

மேல்

#1656
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே

மேல்

#1657
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே

மேல்

#1658
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழிகுலத்தோர் வேடம் பூண்பர் தே ஆக
பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழிகுலத்தோர்கள் களையப்பட்டோரே

மேல்

#1659
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து
பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே

மேல்

#1660
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர்
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும்
உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே

மேல்

#1661
தவம் மிக்கவரே தலையான வேடர்
அவம் மிக்கவரே அதி கொலை வேடர்
அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம்
தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே

மேல்

#1662
பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே

மேல்

#1663
யோகிக்கு இடும் அதுவுள் கட்டு கஞ்சுளி
தோகைக்கு பாசத்து சுற்றும் சடை அது ஒன்று
ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம்
சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே

மேல்

#1664
காது அணி குண்டலம் கண்டிகை நாதமும்
ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை
ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம்
ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே

மேல்

#1665
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர்
ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே

மேல்

#1666
கங்காளன் பூசும் கவச திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே

மேல்

#1667
அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம்
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே

மேல்

#1668
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர்
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே

மேல்

#1669
புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி
துன்ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர்
பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே

மேல்

#1670
சிவஞானிகட்கும் சிவயோகிகட்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில்
அவமாம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே

மேல்

#1671
கத்தி திரிவர் கழுவடி நாய் போல்
கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவஞானியோர்களே

மேல்

#1672
அடியார் அவரே அடியார் அலாதார்
அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார்
அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே

மேல்

#1673
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம்
தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே
ஆன அ வேடம் அருள் ஞான சாதனம்
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே

மேல்

#1674
ஞானத்தினால் பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே

மேல்

#1675
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அ சிவம் ஆன இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே

மேல்

#1676
அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருளாம் அடிமை சிவவேடத்தோரே

மேல்

#1677
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே

மேல்

#1678
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயலுற்ற கண்ணியர் கை இணக்கு அற்று
தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி
செயலற்று இருப்பார் சிவவேடத்தாரே

மேல்

#1679
ஓடும் குதிரை குசை திண்ணம் பற்று-மின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை
தேடும் இன்ப பொருள் சென்று எய்தலாமே

மேல்

#1680
குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழுமாறே

மேல்

#1681
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி
நினைப்பின் அதனினில் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புற கடை இச்சித்து போகின்றவாறே

மேல்

#1682
ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும்
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே

மேல்

#1683
வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே

மேல்

#1684
பஞ்ச துரோகத்து இ பாதகர் தம்மை
அஞ்ச சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில்
பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே

மேல்

#1685
தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே

மேல்

#1686
கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே

மேல்

#1687
விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே

மேல்

#1688
வைத்த பசு பாச மாற்று நெறி வைகி
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு
பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே

மேல்

#1689
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே

மேல்

#1690
தொழில் அறிவாளர் சுருதி கண் ஆக
பழுது அறியாத பரமகுருவை
வழி அறிவார் நல் வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே

மேல்

#1691
பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன்
சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர
உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே

மேல்

#1692
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி
சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே

மேல்

#1693
கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக
எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று
தெள்ளி அறிய சிவபதம் தானே

மேல்

#1694
சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது
ஆதியும் ஏதும் அறியகிலானே

மேல்

#1695
தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே
விழலார் விறலாம் வினை அது போக
கழல் ஆர் திருவடி கண்டருளாமே

மேல்

#1696
சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்த வல்லான் அவன் சற்சீடன் ஆமே

மேல்

#1697
சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உறுக்கி சிவனருள் கைகாட்ட
பத்தியின் ஞானம் பெற பணிந்தான் அந்த
சத்தியில் இச்சை தகுவோன் சற்சீடனே

மேல்

#1698
அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா
அடிவைத்த மா முடி மாய பிறவி
அடிவைத்த காய அருள் சத்தியாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்றுளோனே

மேல்

#1699
சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன்-பால் ஆக
சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன்
ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே

மேல்

#1700
உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி
இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு
குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு
உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே

மேல்

#1701
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறி குணம் கொண்டு போற்ற
சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே

மேல்

#1702
வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால்
வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து
வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீடன் ஆமே

மேல்

#1703
சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற்சீடனே

மேல்


@7 ஏழாம் தந்திரம்

#1704
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே

மேல்

#1705
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போதாலயத்து அவிகாரம்-தனில் போத
மேதாதி ஆதாரம் மீதான உண்மையே

மேல்

#1706
மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே

மேல்

#1707
ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி
போதாலயத்து புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே

மேல்

#1708
மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால்
ஆதாரம் செய்போகம் ஆவது காயமே

மேல்

#1709
ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே

மேல்

#1710
ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல்
போகும் உடம்பும் பொருந்தியவாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே

மேல்

#1711
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே

மேல்

#1712
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே

மேல்

#1713
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே

மேல்

#1714
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம்
ஆகமது அத்துவா ஆறும் சிவமே

மேல்

#1715
ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று
காத்தனர் என்னும் கருத்து அறியாரே

மேல்

#1716
ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே

மேல்

#1717
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை
மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே

மேல்

#1718
தூய விமானமும் தூலம் அது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

மேல்

#1719
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே

மேல்

#1720
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம்
வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன்
தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே

மேல்

#1721
மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான்
இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும்
குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும்
துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே

மேல்

#1722
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வான புவனங்கள் எட்டும்
இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே

மேல்

#1723
அகல் இடமாய் அறியாமல் அடங்கும்
உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே
பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன்
புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே

மேல்

#1724
போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும்
ஆதியுற நின்றது அ பரிசு ஆமே

மேல்

#1725
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரை பொரு நீர் அது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை
கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே

மேல்

#1726
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

மேல்

#1727
உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய
புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம்தரு தேவரை வந்தி செய்யீரே

மேல்

#1728
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே

மேல்

#1729
கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே

மேல்

#1730
கூடிய பாதம் இரண்டும் படி மிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து
தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே

மேல்

#1731
வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன்
மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்த சிவனொடும்
சாதாரணம் ஆம் சதாசிவம் தானே

மேல்

#1732
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே

மேல்

#1733
அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு
அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே

மேல்

#1734
சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈராறு உள
சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள
சமயத்து எழுந்த சதாசிவம் தானே

மேல்

#1735
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே

மேல்

#1736
அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள
அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள
அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே

மேல்

#1737
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவதத்துவம் முப்பத்தாறே

மேல்

#1738
தத்துவமாவது அருவம் சராசரம்
தத்துவமாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவன் தானே

மேல்

#1739
கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை
வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும்
ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே

மேல்

#1740
இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே

மேல்

#1741
சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும்
தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம்
அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே

மேல்

#1742
நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே

மேல்

#1743
நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும்
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே

மேல்

#1744
எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம்
விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே

மேல்

#1745
சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் தானே

மேல்

#1746
மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே

மேல்

#1747
ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது
தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே

மேல்

#1748
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை
கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே

மேல்

#1749
ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில்
ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே

மேல்

#1750
தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும்
தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும்
தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம்
தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே

மேல்

#1751
ஆரும் அறியார் அகாரம் அவன் என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே

மேல்

#1752
இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம்
இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம்
இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே

மேல்

#1753
அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம் அது ஆமே

மேல்

#1754
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே

மேல்

#1755
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே

மேல்

#1756
தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம்
வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம்
பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன்
தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே

மேல்

#1757
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்து அதே பீட நாத இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே

மேல்

#1758
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே

மேல்

#1759
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது
நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும்
இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே

மேல்

#1760
பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மன கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்து உறைந்தானே

மேல்

#1761
பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம்
குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன்
அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே

மேல்

#1762
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள்
என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே

மேல்

#1763
உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதாசிவன் தானே

மேல்

#1764
நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தானே

மேல்

#1765
தேவர் பிரானை திசைமுகநாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே

மேல்

#1766
வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே

மேல்

#1767
ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே

மேல்

#1768
சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே
சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்
ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே

மேல்

#1769
கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும்
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே

மேல்

#1770
எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே

மேல்

#1771
சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே

மேல்

#1772
சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே

மேல்

#1773
குரைக்கின்ற வாரி குவலய நீரும்
பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே

மேல்

#1774
வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே

மேல்

#1775
ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனை தொழ
வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற
அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே

மேல்

#1776
மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி
பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே

மேல்

#1777
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடலுற
மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே

மேல்

#1778
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து
நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி
கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே

மேல்

#1779
உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன
வியவார் பரமும் பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே
உயலார் குருபரன் உய்ய கொண்டானே

மேல்

#1780
பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள்
உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது
வைச்ச பதம் இது வாய் திறவாதே

மேல்

#1781
பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை
ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின்
தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே

மேல்

#1782
தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம்
கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே

மேல்

#1783
கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்று அற நீக்கியே
கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே

மேல்

#1784
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை
கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே

மேல்

#1785
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே

மேல்

#1786
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

மேல்

#1787
காய பரப்பில் அலைந்து துரியத்து
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே

மேல்

#1788
நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்றவாறே

மேல்

#1789
அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே

மேல்

#1790
நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே

மேல்

#1791
பெருந்தன்மை தான் என யான் என வேறாய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே

மேல்

#1792
இரு பதம் ஆவது இரவும் பகலும்
உரு அது ஆவது உயிரும் உடலும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே

மேல்

#1793
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே

மேல்

#1794
குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே

மேல்

#1795
தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே

மேல்

#1796
தானே அறியும் வினைகள் அழிந்த பின்
நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின்
தேனே அனைய நம் தேவர் பிரானே

மேல்

#1797
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான் பின்னை யார் அறிவாரே

மேல்

#1798
அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகர அமுதானதும் தேரார்
அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே

மேல்

#1799
அறிவில் அணுக அறிவது நல்கி
பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும்
செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே

மேல்

#1800
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

மேல்

#1801
அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந்தானே

மேல்

#1802
பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின்
நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே

மேல்

#1803
பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே

மேல்

#1804
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே

மேல்

#1805
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும்
மாய பல இந்திரியம் அவற்றுடன்
ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே

மேல்

#1806
அருளே சகலமுமாய பவுதிகம்
அருளே சராசரமாய அகிலம்
இருளே வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே

மேல்

#1807
சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து
தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம் அவை ஆகி நடிப்பவன் தானே

மேல்

#1808
அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா
தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே

மேல்

#1809
தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபி தலைவனும் ஆமே

மேல்

#1810
தலை ஆன நான்கும் தனது அருவாகும்
அலையா அருவுரு ஆகும் சதாசிவம்
நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும்
துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே

மேல்

#1811
ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி
நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே

மேல்

#1812
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு
ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு
போய கலை பல ஆக புணர்ந்திட்டு
வீய தகா விந்து ஆக விளையுமே

மேல்

#1813
விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனி மாயை மிக்க மா மாயை
கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம்
அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே

மேல்

#1814
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார்
அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே

மேல்

#1815
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே

மேல்

#1816
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை
கூடியவாறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே

மேல்

#1817
உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே

மேல்

#1818
விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

மேல்

#1819
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே

மேல்

#1820
புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே

மேல்

#1821
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருளுறும் பின்னை சிவகதி ஆமே

மேல்

#1822
கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே

மேல்

#1823
உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே

மேல்

#1824
வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே

மேல்

#1825
பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும்
மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே

மேல்

#1826
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்குற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே

மேல்

#1827
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும்
அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே

மேல்

#1828
புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும்
எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே

மேல்

#1829
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள்
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை
சுத்தமதாக விளக்கி தெளிக்கவே
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

மேல்

#1830
மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே

மேல்

#1831
ஆராதனையும் அமரர் குழாங்களும்
தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும்
பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும்
ஆரா வழி எங்கள் ஆதி பிரானே

மேல்

#1832
ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ
தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது
தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர்
பார் ஐங்குணமும் படைத்து நின்றானே

மேல்

#1833
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே

மேல்

#1834
வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு
உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார்
அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே

மேல்

#1835
கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து
வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள்
பழிப்படுவார் பலரும் பழி வீழ
வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே

மேல்

#1836
பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடி சேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே

மேல்

#1837
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே

மேல்

#1838
தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும்
பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே

மேல்

#1839
உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே

மேல்

#1840
வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர்பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே

மேல்

#1841
சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால்
மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே

மேல்

#1842
ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற
மேவி திரியும் விரிசடை நந்தியை
கூவி கருதி கொடுபோய் சிவத்திடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே

மேல்

#1843
சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை
பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே

மேல்

#1844
பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி
இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள
வரும் தன்மையாளனை வானவர் தேவர்
தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே

மேல்

#1845
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி
சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும்
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே

மேல்

#1846
ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே

மேல்

#1847
ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே

மேல்

#1848
கானுறு கோடி கடி கமழ் சந்தனம்
வானுறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே

மேல்

#1849
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே

மேல்

#1850
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே

மேல்

#1851
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம்
எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே

மேல்

#1852
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே

மேல்

#1853
இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே
சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு
நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே

மேல்

#1854
மன பவனங்களை மூலத்தால் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி
புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே

மேல்

#1855
பகலும் இரவும் பயில்கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே

மேல்

#1856
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்த தேறல் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே

மேல்

#1857
பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாட கோயில் பகவற்கு அது ஆமே

மேல்

#1858
தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே

மேல்

#1859
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே

மேல்

#1860
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகர் இலை என்பது நிச்சயம் தானே

மேல்

#1861
ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்
கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே

மேல்

#1862
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

மேல்

#1863
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே

மேல்

#1864
அழிதகவு இல்லா அரன் அடியாரை
தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும்
பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே

மேல்

#1865
பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே

மேல்

#1866
வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண்
அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே

மேல்

#1867
தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும்
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே

மேல்

#1868
திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அக குறை கேடு இல்லை அ உலகுக்கே

மேல்

#1869
அ உலகத்தே பிறந்த அ உடலொடும்
அ உலகத்தே அருந்தவம் நாடுவர்
அ உலகத்தே அரன் அடி கூடுவர்
அ உலகத்தே அருள்பெறுவாரே

மேல்

#1870
கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே

மேல்

#1871
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே

மேல்

#1872
பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே

மேல்

#1873
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண் திசை போது பாதாள
மயங்கா பகிரண்ட மா முடி தானே

மேல்

#1874
அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே

மேல்

#1875
கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே

மேல்

#1876
என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே

மேல்

#1877
துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதி பிரானை
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே

மேல்

#1878
தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர்சடையோனே

மேல்

#1879
அறியா பருவத்து அரன் அடியாரை
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே

மேல்

#1880
அவன்-பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன்-பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன்-பால் அணுகியே நாடும் அடியார்
இவன்-பால் பெருமை இலயம் அதாமே

மேல்

#1881
முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள்
எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து
எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க
பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே

மேல்

#1882
சிவயோகி ஞானி செறிந்த அ தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல் இயல் காணும்
பவயோகம் இன்றி பரலோகம் ஆமே

மேல்

#1883
மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே

மேல்

#1884
எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுது என்று எதிர்கொள்வர்
ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம்
விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே

மேல்

#1885
அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர்
உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு
பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து
இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே

மேல்

#1886
விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே

மேல்

#1887
பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே

மேல்

#1888
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே

மேல்

#1889
வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே

மேல்

#1890
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடியார் சரீரத்திடை
பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும்
தங்கார் சிவனை தலைப்படுவாரே

மேல்

#1891
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வர இருந்தாரே

மேல்

#1892
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பால் ஆன மோன மொழியில் பதிவித்து
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய
கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே

மேல்

#1893
துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே

மேல்

#1894
சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம்
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே

மேல்

#1895
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே

மேல்

#1896
வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்
வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே

மேல்

#1897
யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால்
ஆக தகு வேத கேசரி சாம்பவி
யோகத்து கேசரி யோக முத்திரையே

மேல்

#1898
யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே

மேல்

#1899
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம்
அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை
நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே

மேல்

#1900
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே

மேல்

#1901
தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே

மேல்

#1902
வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி
தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே

மேல்

#1903
தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது
போன வியோகி புகலிடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே

மேல்

#1904
தான் இ வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து
தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே

மேல்

#1905
சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்
தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி
சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே

மேல்

#1906
ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோன சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே

மேல்

#1907
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில்
செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே

மேல்

#1908
உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்ன பரனே அருட்குலம் பாலிப்பன்
என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே

மேல்

#1909
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம்
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே

மேல்

#1910
அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில்
நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு
வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே

மேல்

#1911
எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில்
அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும்
மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்_அரு மன்னர் இழப்பார் அரசே

மேல்

#1912
புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே

மேல்

#1913
அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால்
அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில்
சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும்
அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே

மேல்

#1914
நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து
குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி
தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி
பவம் அறு நல்குகை பத்மாசனமே

மேல்

#1915
தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை
நல் மலர் சோலை நகரின் நல் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே

மேல்

#1916
நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி
நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே

மேல்

#1917
பஞ்சலோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு
முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே
பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே

மேல்

#1918
நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார
கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும்
தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே

மேல்

#1919
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து
போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடுவீரே

மேல்

#1920
விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறி போனகம் இளநீரும்
குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை
தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே

மேல்

#1921
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார்
மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே

மேல்

#1922
ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து
மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம்
காதலில் சோடசம் காண் உபசாரமே

மேல்

#1923
உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும்
உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியில் பிரமாதிகள் மிகு சத்தி
கதியில் கரணம் கலைவை கரியே

மேல்

#1924
செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும்
செய்திடும் நாத பேத திறனால் ஆறும்
செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம்
செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே

மேல்

#1925
வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல்
தந்திடு மா மாயை வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி
விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே

மேல்

#1926
விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி
வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து
களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி
உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே

மேல்

#1927
அந்தமும் ஆதியும் ஆகி பராபரன்
வந்த வியாபி எனலாய அ நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே

மேல்

#1928
வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே

மேல்

#1929
புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து
நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை
உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே

மேல்

#1930
கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற
நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில்
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே

மேல்

#1931
அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி
இது வித்திலே உள ஆற்றை உணரார்
மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி
பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே

மேல்

#1932
வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை
வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை
வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல
அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே

மேல்

#1933
அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம்
பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே

மேல்

#1934
இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒரு புல் பனி போல்
அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளரும் காயத்திலே

மேல்

#1935
காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு
காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே

மேல்

#1936
அழிகின்ற விந்து அளவை அறியார்
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர்
அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே

மேல்

#1937
பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி
பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே

மேல்

#1938
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானே அ காமாதி தங்குவோனும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும்
ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே

மேல்

#1939
மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள்
ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே

மேல்

#1940
ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு
ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும்
ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே

மேல்

#1941
செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே
எய்யும் கலை காலம் இந்து பருதி கால்
நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி
செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே

மேல்

#1942
விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல்
நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படும் காதல் மாதின்-பால் பற்று அற விட்டு
கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே

மேல்

#1943
கொண்ட குணனே நலனே நல் கோமளம்
பண்டை உருவே பகர் வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே

மேல்

#1944
விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய
கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே

மேல்

#1945
பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று
வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே

மேல்

#1946
வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அற உணர்வரேல்
மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே

மேல்

#1947
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும்
கருத்தது வித்தாய் காரண காரியம்
கருத்து உறுமாறு இவை கற்பனை தானே

மேல்

#1948
ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும்
அழியா பிராணன் அதி பலம் சத்தி
ஒழியாத புத்தி தபம் செபம் மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே

மேல்

#1949
வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி
உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்று உண்பவரே சிவயோகியாரே

மேல்

#1950
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே

மேல்

#1951
அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடை கட்டி கலந்து எரித்து
உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே

மேல்

#1952
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரிய
செறிவாய் இருந்து சேரவே மாயுமே

மேல்

#1953
மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன
காதல் அது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே

மேல்

#1954
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன்
காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை
காலின்-கண் வந்த கலப்பு அறியாரே

மேல்

#1955
கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல்
நல தக வேண்டில் அ நாரி உதர
கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை
விலக்குவன செய்து மேல் அணைவீரே

மேல்

#1956
மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்தி குறிவழியே சென்று
பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால்
மால் ஆனது மாள மாளும் அ விந்துவே

மேல்

#1957
விந்து விளையும் விளைவின் பயன் முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே

மேல்

#1958
விந்து என் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயம் தெரித்து
அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி
சந்திரன் சார்புற தண் அமுது ஆமே

மேல்

#1959
அமுத சசி விந்து ஆம் விந்து மாள
அமுத புனல் ஓடி அங்கியின் மாள
அமுத சிவ போகம் ஆதலால் சித்தி
அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே

மேல்

#1960
யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா
போகம் சிவபோகம் போகி நல் போகமா
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே

மேல்

#1961
மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து
காதலினால் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே

மேல்

#1962
சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால்
ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி
நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே

மேல்

#1963
விந்துவும் நாதமும் மேவ கனல் மூல
வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட
சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே

மேல்

#1964
வித்து குற்று உண்பான் விலை அறியாதவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன்
வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன்
வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே

மேல்

#1965
அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு
மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
வன்ன திரு விந்து மாயும் காயத்திலே

மேல்

#1966
அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து
தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு
சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே

மேல்

#1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று பராசத்தி விந்து சயம் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே

மேல்

#1968
தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை
வானே உயர் விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே

மேல்

#1969
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே

மேல்

#1970
வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி
நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி
பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே

மேல்

#1971
விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி
சந்திரனோடே தலைப்படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே

மேல்

#1972
மனத்தொடு சத்து மனம் செவி அன்ன
இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அ காமத்தை நாடிலே

மேல்

#1973
சத்தமும் சத்த மனமும் மன கருத்து
ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அ இடம் தானே

மேல்

#1974
உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி
கரு முலை மீமிசை கை கீழில் காலாம்
விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே

மேல்

#1975
செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம்
எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி
அம் சுடர் ஆக வணங்கும் தவமே

மேல்

#1976
பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம்
புகலவனாய் நின்ற புண்ணிய நாதன்
இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும்
பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே

மேல்

#1977
ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும்
சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே

மேல்

#1978
தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும்
தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே

மேல்

#1979
வலைய முக்கோணம் வட்டம் அறுகோணம்
துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே

மேல்

#1980
ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில்
சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம்
கேதமுறும் கேணி சூரியன் எட்டில்
சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே

மேல்

#1981
ஆதித்தனோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது
சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற
வேதப்பொருளை விளங்குகிலீரே

மேல்

#1982
பாருக்கு கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே

மேல்

#1983
மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும்
கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே

மேல்

#1984
பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் அரும் கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே

மேல்

#1985
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே

மேல்

#1986
ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடே அடங்குகின்றாரே

மேல்

#1987
உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை
சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு
உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே

மேல்

#1988
எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும்
எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப
விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே

மேல்

#1989
சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே

மேல்

#1990
ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி
ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார்
ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற
ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே

மேல்

#1991
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது
பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது
ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே

மேல்

#1992
ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே

மேல்

#1993
விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரம் நாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து
உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே

மேல்

#1994
உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால்
வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே

மேல்

#1995
தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும்
மூவர் பிரான் என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே

மேல்

#1996
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை
மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று
கை இருள் நீங்க கலந்து எழுந்தானே

மேல்

#1997
தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க
அனித்திடும் மேலை அரும் கனி ஊறல்
கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன்
நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே

மேல்

#1998
நேர் அறிவாக நிரம்பிய பேரொளி
போர் அறியாது புவனங்கள் போய் வரும்
தேர் அறியாத திசை ஒளியாய் இடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே

மேல்

#1999
மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும்
சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும்
நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே

மேல்

#2000
நாபி கண் நாசி நயன நடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே

மேல்

#2001
அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால்
ஒன்றும் இரு சுடராம் அருணோதயம்
துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே

மேல்

#2002
கடம்கடம்-தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே

மேல்

#2003
தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே

மேல்

#2004
தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும்
வையம் புனல் அனல் மாருதம் வானகம்
சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர்
ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே

மேல்

#2005
உன்னும் அளவில் உணரும் ஒருவனை
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே

மேல்

#2006
அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால்
பின்ன மட அன்னம் பேறு அணுகாதே

மேல்

#2007
வைகரி ஆதியும் மாயா மலாதியும்
பொய் கரி ஆன புருடாதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே

மேல்

#2008
அணுவில் அணுவினை ஆதி பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே

மேல்

#2009
படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல
சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே

மேல்

#2010
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி
தணிவு அற நின்றான் சராசரம் தானே

மேல்

#2011
மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே

மேல்

#2012
ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே

மேல்

#2013
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை
கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே

மேல்

#2014
மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே

மேல்

#2015
கற்ற பசுக்கள் கதறி திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றை பசுக்கள் வறள் பசு தானே

மேல்

#2016
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

மேல்

#2017
சீவன் என சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே

மேல்

#2018
குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே

மேல்

#2019
அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே

மேல்

#2020
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே

மேல்

#2021
சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார்
தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாடகிலாரே

மேல்

#2022
நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால்
நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே

மேல்

#2023
ஆக மதத்தன ஐந்து களிறு உள
ஆக மத தறியோடு அணைகின்றில
பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே

மேல்

#2024
கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன்
திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழி நடவாதே

மேல்

#2025
புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும்
நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம் வழி ஒன்பது தானே

மேல்

#2026
அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே

மேல்

#2027
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள்
ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில்
ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே

மேல்

#2028
சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும்
சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள
வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே

மேல்

#2029
எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை
எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும்
எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே

மேல்

#2030
விதியின் பெரு வலி வேலை சூழ் வையம்
துதியின் பெரு வலி தொல்வான் உலகம்
மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெரு வலி நீர் வலி தானே

மேல்

#2031
குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

மேல்

#2032
கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம்
அடக்கலுமுறும் அவன் தானே அமரன்
விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே

மேல்

#2033
அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

மேல்

#2034
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி
கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே

மேல்

#2035
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே

மேல்

#2036
பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என்
விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம்
பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2037
இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன்
தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க
துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே

மேல்

#2038
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு
ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே

மேல்

#2039
நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே

மேல்

#2040
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள்
குன்று விழ அதில் தாங்கலும் ஆமே

மேல்

#2041
போற்றி இசைத்து புனிதன் திருமேனியை
போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால்
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே

மேல்

#2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்றவாறு சிலபல பேசில்
வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே

மேல்

#2043
கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்து-மின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வருடைய புலன்களும் ஐந்தே

மேல்

#2044
உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேதாகம நெறி காணான்
பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே

மேல்

#2045
மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர்
சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு
அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே

மேல்

#2046
ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காமாதி நீங்கா கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன்
கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே

மேல்

#2047
கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே

மேல்

#2048
குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின்
குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

மேல்

#2049
தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன்
தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன்
தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே

மேல்

#2050
தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள்
தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம்
தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம்
தவிர வைத்தான் பிறவி துயர் தானே

மேல்

#2051
கறுத்த இரும்பே கனகம் அது ஆனால்
மறித்து இரும்பு ஆகா வகை அது போல
குறித்த அப்போதே குரு அருள் பெற்றால்
மறித்து பிறவியில் வந்து அணுகானே

மேல்

#2052
பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம் அற நீக்குவோர்
ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று
பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே

மேல்

#2053
நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற
நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

மேல்

#2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே

மேல்

#2055
தானே என நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படில்
தானே தனை பெற வேண்டும் சதுர் பெற
ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே

மேல்

#2056
வரும் வழி போம் வழி மாயா வழியை
கருவழி கண்டவர் காணா வழியை
பெரும் வழியா நந்தி பேசும் வழியை
குரு வழியே சென்று கூடலும் ஆமே

மேல்

#2057
குரு என்பவனே வேதாகமம் கூறும்
பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து
ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி
வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே

மேல்

#2058
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல்
அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே

மேல்

#2059
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்று அறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே

மேல்

#2060
எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்
வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி
சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே
செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே

மேல்

#2061
ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி
தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே

மேல்

#2062
அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை
சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை
சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே

மேல்

#2063
ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம்
பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை
நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை
தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே

மேல்

#2064
மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம்
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது
பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே

மேல்

#2065
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க
இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே
அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே

மேல்

#2066
ஏறு நெறியே மலத்தை எரித்தலால்
ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால்
மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயம்பிலே

மேல்

#2067
கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால்
கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே

மேல்

#2068
செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே

மேல்

#2069
பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது
வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே

மேல்

#2070
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே

மேல்

#2071
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே

மேல்

#2072
கண்காணியாகவே கை அகத்தே எழும்
கண்காணியாக கருத்துள் இருந்திடும்
கண்காணியாக கலந்து வழி செய்யும்
கண்காணி ஆகிய காதலன் தானே

மேல்

#2073
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே

மேல்

#2074
காணாத கண்ணில் படலமே கண் ஒளி
காணாதவர்கட்கும் காணாத அ ஒளி
காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை
காணாது கண்டார் களவு ஒழிந்தாரே

மேல்

#2075
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி
அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர
சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே

மேல்

#2076
பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும்
பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார்
சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர்
நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே

மேல்

#2077
ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம்
ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே

மேல்

#2078
உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும்
அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும்
பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே

மேல்

#2079
உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும்
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே

மேல்

#2080
உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும்
சில ஆணி ஆகிய தேவர் பிரானை
தலைவாணி செய்வது தன்னை அறிவதே

மேல்

#2081
தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர்
ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர்
தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி
கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே

மேல்

#2082
உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும்
கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே

மேல்

#2083
இந்தியம் அந்த கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது
தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும்
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே

மேல்

#2084
வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள்
உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார்
முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே

மேல்

#2085
போது சடக்கென போகின்றது கண்டும்
வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது
நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து
ஆதியை அன்பில் அறியகில்லார்களே

மேல்

#2086
கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிரா திரிவர்
தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி
இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே

மேல்

#2087
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன
பரம் தன்னை ஓரா பழிமொழியாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே

மேல்

#2088
நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும்
என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவென்று
குன்று கையாலே குறைப்பட்டவாறே

மேல்

#2089
இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து
துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே

மேல்

#2090
பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும்
பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே

மேல்

#2091
ஆர்வ மனமும் அளவு இல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து
தீர வருவது ஓர் காம தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே

மேல்

#2092
இ பரிசே இளஞாயிறு போல் உரு
அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இ பரிசே கமலத்து உறை ஈசனை
மெய் பரிசே வினவாது இருந்தோமே

மேல்

#2093
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள்
பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே

மேல்

#2094
நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர்
நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும்
துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில்
அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே

மேல்

#2095
மிருகம் மனிதர் மிக்கோர் பறவை
ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை
பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர்
திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே

மேல்

#2096
நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை
ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று
நாதியே வைத்து அது நாடுகின்றேனே

மேல்

#2097
இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு
பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும் தேன் நுகராது வாய் புகு தேனை
அரும் தேனை யாரும் அறியகிலாரே

மேல்

#2098
கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமராபதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே

மேல்

#2099
குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே

மேல்

#2100
கரை அருகு ஆறா கழனி விளைந்த
திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின்
நரை உருவா செல்லும் நாள் இலவாமே

மேல்

#2101
வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து
இரவு அறிவானை எழும் சுடர் சோதியை
அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல் வைத்தவாறே

மேல்

#2102
மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி
இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே

மேல்

#2103
செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை
வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை
நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே

மேல்

#2104
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே

மேல்

#2105
போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை
நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை
காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு
கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே

மேல்

#2106
இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில்
புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின்
எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என்
அ காலம் உன்ன அருள் பெறலாமே

மேல்

#2107
போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள்
ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடு-மின்
ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே

மேல்

#2108
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை
பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே

மேல்

#2109
கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை
பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள்
ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்று பசு அது ஆமே

மேல்

#2110
விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது
நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம்
கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவரோடே

மேல்

#2111
ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே

மேல்

#2112
இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை
அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று
துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே

மேல்

#2113
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு
மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே

மேல்

#2114
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன்
பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே

மேல்

#2115
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன்
அத்தகு சோதி அது விரும்பாரே

மேல்

#2116
நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த
உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார்
பவமத்திலே வந்து பாய்கின்றதல்லால்
சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே

மேல்

#2117
இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும்
துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை
விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை
நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே

மேல்

#2118
பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை
அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும்
செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே

மேல்

#2119
சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர்
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை
அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே

மேல்

#2120
நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி
கருமங்களாலே கழிதலில் கண்டு
குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால்
பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே

மேல்

#2121
ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற
மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே

மேல்


@8 எட்டாம் தந்திரம்

#2122
காய பை ஒன்று சரக்கு பல உள
மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு
காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாய பை மண்ணா மயங்கியவாறே

மேல்

#2123
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே

மேல்

#2124
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆயிடும்
ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே
கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே

மேல்

#2125
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே

மேல்

#2126
ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை
யாரே அறிவார் அடி காவல் ஆனதே

மேல்

#2127
எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள்
கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே

மேல்

#2128
உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம்
கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி
அடங்கியே அற்றது ஆர் அறிவாரே

மேல்

#2129
ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே

மேல்

#2130
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே

மேல்

#2131
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு
ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே

மேல்

#2132
நாகம் உடலுரி போலும் நல் அண்டசம்
ஆக நனாவில் கனா மறந்து அல்லது
போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே

மேல்

#2133
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரணமா செல
பண்டு தொடர பரகாய யோகி போல்
பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே

மேல்

#2134
தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன்
ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும்
ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே

மேல்

#2135
ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும்
மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே

மேல்

#2136
விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு
எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப
அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனு ஆகும்
மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே

மேல்

#2137
மலம் என்று உடம்பை மதியாத ஊமர்
தலம் என்று வேறு தரித்தமை கண்டீர்
நலம் என்று இதனையே நாடி இருக்கில்
பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே

மேல்

#2138
நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே

மேல்

#2139
பண் ஆகும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

மேல்

#2140
அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண்
கழிகின்ற கால் அ விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே

மேல்

#2141
இலை ஆம் இடையில் எழுகின்ற காம
முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து
தலையாய மின் உடல் தாங்கி திரியும்
சிலையாய சித்தம் சிவ முன் இடைக்கே

மேல்

#2142
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர்
பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே

மேல்

#2143
முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக
செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அ பதி ஆகும் நியதி முதலாக
செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே

மேல்

#2144
இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை
மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அ சக்கர பால் அது ஆகுமே

மேல்

#2145
பாரது பொன்மை பசுமை உடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே

மேல்

#2146
பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே

மேல்

#2147
இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே

மேல்

#2148
உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே

மேல்

#2149
இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து
உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே

மேல்

#2150
ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை
அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளின் நாலறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே

மேல்

#2151
மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே

மேல்

#2152
முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியை கன்னியே காதலித்தாளே

மேல்

#2153
கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின்
பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே

மேல்

#2154
நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே

மேல்

#2155
தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அ வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே

மேல்

#2156
சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி
ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து
விழும பொருளுடன் மேவி நின்றானே

மேல்

#2157
தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை விட்டு ஊமன் நின்றானே

மேல்

#2158
ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாமயம் அற்றது நாம் அறியோமே

மேல்

#2159
துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன
பரிய புரவியும் பாறி பறந்தது
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே

மேல்

#2160
மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே

மேல்

#2161
உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே

மேல்

#2162
அதி மூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி
திதம் ஆன கேவலம் இ திறம் சென்று
பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே

மேல்

#2163
ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை
ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே

மேல்

#2164
மஞ்சொடு மந்தாகினி குடமாம் என
விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி
எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல்
அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே

மேல்

#2165
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடியுடை மாநகர் தான் வரும்-போது
அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும்
துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே

மேல்

#2166
நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்
நேரானவாறு உன்னி நீடு நனவினில்
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே

மேல்

#2167
சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே

மேல்

#2168
மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின்
நேய இராகாதி ஏய்ந்த துரியத்து
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்த சகலத்து உளானே

மேல்

#2169
மேவிய அந்தகன் விழி கண் குருடனாம்
ஆவயின் முன் அடி காணும் அது கண்டு
மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே

மேல்

#2170
மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல்
அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே

மேல்

#2171
வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன்
பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று
நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே

மேல்

#2172
நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன்
வேறான ஐயைந்து மெய் புருடன் பரம்
கூறா வியோமம் பரம் என கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்துவமே

மேல்

#2173
ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும்
காலம் கொண்டான் அடி காணலுமாமே

மேல்

#2174
நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே

மேல்

#2175
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளையோனே

மேல்

#2176
பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலை துரியமும்
தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே

மேல்

#2177
விளங்கிடும் முந்நூற்றுமுப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அ வழி தத்துவம் நின்றே

மேல்

#2178
நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம்
மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால் அவை தொண்ணூறோடு ஆறுள் படும் அவை
கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே

மேல்

#2179
ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர்
ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே

மேல்

#2180
தத்துவமானது தன்வழி நின்றிடில்
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம்
பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி
தத்துவமாவது அகார எழுத்தே

மேல்

#2181
அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே

மேல்

#2182
சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும்
ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே

மேல்

#2183
ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு
ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப
ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே

மேல்

#2184
தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி
மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி
ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே

மேல்

#2185
நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து
ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும்
கூடுவர் கூடி குறிவழியே சென்று
தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே

மேல்

#2186
சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே

மேல்

#2187
நனவாதி தூலமே சூக்க பகுதி
அனதான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் விந்து தான்-நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ்வாறே

மேல்

#2188
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோட நல் செய்தி ஆனதே

மேல்

#2189
செறியும் கிரியை சிவதத்துவமாம்
பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம் பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத்து அளவே

மேல்

#2190
ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம்
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம்
போதம் கலை காலம் நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே

மேல்

#2191
தேசு திகழ் சிவம் சத்தி சதாசிவம்
ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம்
மாசு அகல் வித்தை நியதி மகா மாயை
ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே

மேல்

#2192
ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம்
காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே

மேல்

#2193
பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

மேல்

#2194
உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம்
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி
கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே

மேல்

#2195
தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம்
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால்
மற்று அது உண்டி கன நனவு ஆதலே

மேல்

#2196
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில்
கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியது அதீதம் தலைவந்தே

மேல்

#2197
ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா
ஆறாம் அவை விட ஆகும் நனா கனா
வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில்
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே

மேல்

#2198
மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி
சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே

மேல்

#2199
அதீத துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீத துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே

மேல்

#2200
ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர்
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே

மேல்

#2201
புரியட்டகமே பொருந்தல் நனவு
புரியட்டகம் தன்னின் மூன்று கனவு
புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே

மேல்

#2202
நனவின் நனவு புலன் இல் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே

மேல்

#2203
கனவின் நனவு போல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே

மேல்

#2204
சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை
சுழுத்தி துரியமாம் சொல் அறும் பாழே

மேல்

#2205
துரிய நனவாம் இதம் உணர் போதம்
துரிய கனவாம் அகம் உணர் போதம்
துரிய சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரம் என தோன்றிடும் தானே

மேல்

#2206
அறிவு அறிகின்ற அறிவு நனவாம்
அறிவு அறியாமை அடைய கனவாம்
அறிவு அறி அ அறியாமை சுழுத்தி
அறிவு அறிவாகும் ஆன துரியமே

மேல்

#2207
தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு
ஞானம் தனது உரு ஆகி நயந்த பின்
தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு
மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே

மேல்

#2208
ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை
ஐயமும் தான் அவன் அ துரியத்தனே

மேல்

#2209
ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின்
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே

மேல்

#2210
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய்
அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே

மேல்

#2211
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி
ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு
தத்துவ பேதம் சமைத்து கருவியும்
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே

மேல்

#2212
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே

மேல்

#2213
மல கலப்பாலே மறைந்தது சத்தி
மல கலப்பாலே மறைந்தது ஞானம்
மல கலப்பாலே மறைந்தனன் தாணு
மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே

மேல்

#2214
திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே

மேல்

#2215
கதறு பதினெட்டு கண்களும் போக
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே

மேல்

#2216
நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட
கனவகத்தே உள் கரணங்களோடு
முனவகத்தே நின்று உதறி உள் புக்கு
நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே

மேல்

#2217
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய்
ஒன்றி உலகின் நியமாதிகளுற்று
சென்று துரியாதீதத்தே சில காலம்
நின்று பரனாய் நின்மலன் ஆமே

மேல்

#2218
ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி
மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே

மேல்

#2219
மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை
கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே

மேல்

#2220
போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின
வேது அறியாவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே

மேல்

#2221
கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே

மேல்

#2222
ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன
தான விளக்கொளியாம் மூல சாதனத்து
ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே

மேல்

#2223
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்தது என்றானே

மேல்

#2224
அறியாதவற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான்
அறியாது அவத்தை அறிவானை கூட்டி
அறியாது அறிவானை யார் அறிவாரே

மேல்

#2225
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அ நனவு ஆதி
பெரியன கால பரம்பின் துரியம்
அரிய அதீதம் அதீதத்தம் ஆமே

மேல்

#2226
மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம்
கேவலம் ஆகும் சகல மா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே

மேல்

#2227
தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும்
மன்னிய சத்து அசத்து சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே

மேல்

#2228
தானே தனக்கு பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்கு தலைவனும் ஆமே

மேல்

#2229
ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று
காமியம் மாயேயமும் கலவா நிற்ப
தாமுறு பாசம் சகலத்தது ஆமே

மேல்

#2230
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள்
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே

மேல்

#2231
தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே

மேல்

#2232
ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர்
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே

மேல்

#2233
ஆம் அவரில் சிவனார் அருள் பெற்றுளோர்
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு
ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம்
தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே

மேல்

#2234
ஓரினும் மூ வகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப்பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே

மேல்

#2235
பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி
மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே

மேல்

#2236
அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே

மேல்

#2237
அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்
தின்-பால் துரியத்து இடையே அறிவுற
தன்-பால் தனை அறி தத்துவம் தானே

மேல்

#2238
ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி
ஐய சிவம் சித்தியாம் தோற்றம் அவ்வாறே

மேல்

#2239
ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத்தே காண
எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே

மேல்

#2240
ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே

மேல்

#2241
ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு
பேணிய மாயை பிரளயாகலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்கு காட்டு மலங்களே

மேல்

#2242
கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர்
கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால்
ஆவயின் கேவலத்து அ சகலத்தையும்
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே

மேல்

#2243
மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்து காமிய மா மாயை
ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே

மேல்

#2244
மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து
அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே

மேல்

#2245
சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல
சத்து அசத்து ஓட தனித்தனி பாசமும்
மத்த இருள் சிவனான கதிராலே
தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே

மேல்

#2246
தற்கேவலம் முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே

மேல்

#2247
அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன்
கிறியன் மலவியாபி கேவலம் தானே

மேல்

#2248
விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனு சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே

மேல்

#2249
கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே

மேல்

#2250
கேவலத்தில் கேவலம் அதீதாதீதம்
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம்
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே

மேல்

#2251
சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை
சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே

மேல்

#2252
சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே

மேல்

#2253
சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே

மேல்

#2254
சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிராதீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை
நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே

மேல்

#2255
பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே

மேல்

#2256
எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே
எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே

மேல்

#2257
ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர்
ஐம்மலத்தாரும் அருவினை பாசத்தார்
ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே

மேல்

#2258
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனா தூலாம் அ நனவு ஆமே

மேல்

#2259
ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி
காணும் நனவில் மல கலப்பு ஆகுமே

மேல்

#2260
அரன் முதலாக அறிவோன் அதீதத்தன்
அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர்
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே

மேல்

#2261
உருவுற்று போகமே போக்கியம் துற்று
மருவுற்று பூதம் அனாதியான் மன்னி
வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி
கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே

மேல்

#2262
இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி
குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி
பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே

மேல்

#2263
ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு
ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே

மேல்

#2264
தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம்-தனை கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே

மேல்

#2265
சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே

மேல்

#2266
அப்பும் அனலும் அகலத்துளே வரும்
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில்
அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே

மேல்

#2267
அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே

மேல்

#2268
மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே

மேல்

#2269
அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி
விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே

மேல்

#2270
சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே

மேல்

#2271
ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே

மேல்

#2272
அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே

மேல்

#2273
உரிய நனா துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரனாம்
திரிய வரும் துரியத்தில் சிவமே

மேல்

#2274
பரமாம் அதீதமே பற்று அற பற்ற
பரமாம் அதீதம் பயிலப்பயில
பரமாம் அதீதம் பயிலா தபோதனர்
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே

மேல்

#2275
ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின்
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே

மேல்

#2276
துரிய பரியில் இருந்த அ சீவனை
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே

மேல்

#2277
நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே

மேல்

#2278
விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும்
தெரிந்த துரியத்தே தீது அகலாதே

மேல்

#2279
உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே

மேல்

#2280
கரு வரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே

மேல்

#2281
அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணு அசைவின்-கண் ஆன கனவும்
அணு அசைவில் பராதீதம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே

மேல்

#2282
பர துரியத்து நனவும் பரந்து
விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவ துரியத்தனும் ஆமே

மேல்

#2283
பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவ துரியத்தனும் ஆமே

மேல்

#2284
சீவன் துரியம் முதலாக சீரான
ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து
ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்து நின்றானே

மேல்

#2285
பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில்
பரம்பரன் மேலாம் பர நனவு ஆக
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை
உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே

மேல்

#2286
சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி
பாலாய் பிரமன் அரி அமராபதி
தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே

மேல்

#2287
கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும்
உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை
அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார்
குறிப்பது கோலம் அடலது ஆமே

மேல்

#2288
பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியலுற்று இன்புற்றவாறே

மேல்

#2289
பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தது தன் கரணங்களாம்
தன்னின் மறைந்தது தன் கரணங்களே

மேல்

#2290
மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மா மத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே

மேல்

#2291
ஆறாறு அகன்று நம விட்டு அறிவாகி
வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே

மேல்

#2292
துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி
விரிய பரையின் மிகுநாதம் அந்தம்
புரிய பரையின் பராவத்தா போதம்
திரிய பரமம் துரியம் தெரியவே

மேல்

#2293
ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று
பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில்
நந்தி பராவத்தை நாட சுடர் முனம்
அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே

மேல்

#2294
ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே

மேல்

#2295
நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாத பிரானே

மேல்

#2296
சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே

மேல்

#2297
பெறு பகிரண்டம் பேதித்த அண்டம்
எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி
செறியும் அண்டாசன தேவர் பிரானே

மேல்

#2298
ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய்
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே

மேல்

#2299
அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம்
கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே

மேல்

#2300
புருடனுடனே பொருந்திய சித்தம்
அருவமொடு ஆறும் அதீத துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும்
அரிய பதினொன்றுமாம் அ அவத்தையே

மேல்

#2301
காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல்
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை
ஆட்டம் செய்யாத அது விதியே நினை
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே

மேல்

#2302
கேவலம் தன்னின் கலவ சகலத்தின்
மேவும் செலவு விட வரு நீக்கத்து
பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற
தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே

மேல்

#2303
வெல்லும் அளவில் விடு-மின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே

மேல்

#2304
ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே

மேல்

#2305
கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம்
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு
காலனும் இல்லை கருத்து இல்லை தானே

மேல்

#2306
ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது
தான் மா மறை அறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல்
ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே

மேல்

#2307
உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து
அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே

மேல்

#2308
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதமாய்
செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே

மேல்

#2309
காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து
தோய்ந்த கரும துரிசு அகலாதே

மேல்

#2310
ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து
ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலாதீதம் அ பரம் தானே

மேல்

#2311
சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக
சித்த சுகத்தை தீண்டா சமாதி செய்
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே

மேல்

#2312
வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே

மேல்

#2313
கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை
நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே

மேல்

#2314
தானே சிவம் ஆன தன்மை தலைப்பட
ஆன மலமும் அ பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதி போல் படராவே

மேல்

#2315
நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திரு தக்க மாலும் திசைமுகன்-தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே

மேல்

#2316
ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்
ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே

மேல்

#2317
ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேதாகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்டவாறே

மேல்

#2318
முன்னை அறிவினில் செய்த முது தவம்
பின்னை அறிவினை பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றி
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே

மேல்

#2319
செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும்
செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார்
செயலற்று இருப்பார் செகத்தொடும் கூடார்
செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே

மேல்

#2320
தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால்
ஆன மலம் அறும் அ பசு தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே

மேல்

#2321
தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும்
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணி
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே

மேல்

#2322
தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை
தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே

மேல்

#2323
அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே

மேல்

#2324
தான் அவன் ஆகிய ஞான தலைவனை
வானவர் ஆதியை மா மணி சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை
ஊனமிலாள்-தன்னை ஊனிடை கண்டதே

மேல்

#2325
ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்தம் ஆமே

மேல்

#2326
ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்
தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய்
ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே

மேல்

#2327
அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்க தம் அறிவார் அறிவோரே

மேல்

#2328
சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கூடி
சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து
சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே

மேல்

#2329
தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே

மேல்

#2330
தத்துவ ஞானம் தலைப்பட்டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே

மேல்

#2331
தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும்
பின்னது சன்முத்தி சன்மார்க்க பேரொளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே

மேல்

#2332
ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம்
தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன்
மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே

மேல்

#2333
உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம்
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே

மேல்

#2334
தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு
அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே

மேல்

#2335
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை
சொல்லது சொல்லிடில் தூராதிதூரம் என்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே

மேல்

#2336
உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி
உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே

மேல்

#2337
சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர்
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே

மேல்

#2338
எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறை அருள் தானே

மேல்

#2339
திருந்தனர் விட்டார் திருவில் நரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே

மேல்

#2340
அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே

மேல்

#2341
அருளான சத்தி அனல் வெம்மை போல
பொருள் அவனாகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும்
திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே

மேல்

#2342
ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள்
பேதித்த அ வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப
பேதித்து பேதியாவாறு அருட்பேதமே

மேல்

#2343
பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே

மேல்

#2344
மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என
பாவிய பூதம் கொண்டாட்டி படைப்பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே

மேல்

#2345
ஆறாது அகன்று தனையறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள்
தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே

மேல்

#2346
தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று
தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி
தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே

மேல்

#2347
சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே

மேல்

#2348
தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே

மேல்

#2349
தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறிய தலைப்படும்
தன்னினில் தன்னை சார்கிலனாகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே

மேல்

#2350
அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே

மேல்

#2351
மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா
அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே

மேல்

#2352
ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்புகின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே

மேல்

#2353
குறி அறியார்கள் குறிகாணமாட்டார்
குறி அறியார்கள் தம் கூடல் பெரிது
குறி அறியா வகை கூடு-மின் கூடி
அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே

மேல்

#2354
ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம்
வானோர் தலைவி மயக்கத்துற நிற்க
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே

மேல்

#2355
தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே

மேல்

#2356
அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழ
சிங்காசனத்தே சிவன் இருந்தான் என்று
சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென
பொங்கார் குழலியும் போற்றி என்றாளே

மேல்

#2357
அறிவு வடிவு என்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி
அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே
அறிவு வடிவு என்று அறிந்திருந்தேனே

மேல்

#2358
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை
அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு
அறைகின்றன மறையீறுகள் தாமே

மேல்

#2359
ஆயும் மலரின் அணி மலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகி போய்
மேய அறிவாய் விளைந்தது தானே

மேல்

#2360
மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து
முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை
பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே

மேல்

#2361
அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்-மின்
அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம்
அறிவு அறிவு ஆக அணிமாதி சித்தி
அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே

மேல்

#2362
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகியவாறே

மேல்

#2363
அறிவு அறியாமையை நீவி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்
செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே

மேல்

#2364
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது
அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது
அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும்
அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே

மேல்

#2365
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்
காய நல் நாட்டு கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே

மேல்

#2366
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது
என்னையிட்டு என்னை உசாவுகின்றானே

மேல்

#2367
மாய விளக்கு அது நின்று மறைந்திடும்
தூய விளக்கு அது நின்று சுடர் விடும்
காய விளக்கு அது நின்று கனன்றிடும்
சேய விளக்கினை தேடுகின்றேனே

மேல்

#2368
தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்
நாடுகின்றேன் நலமே உடையான் அடி
பாடுகின்றேன் பரமே துணையாம் என
கூடுகின்றேன் குறையா மனத்தாலே

மேல்

#2369
முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர்
பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு
தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள்
மன்னி சிவமாக வாரா பிறப்பே

மேல்

#2370
வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும்
ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும்
ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே

மேல்

#2371
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு
அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே

மேல்

#2372
தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம்
ஆனா துரியத்து அணுவன்-தனை கண்டு
தேனார் பராபரம் சேர் சிவயோகமாய்
ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே

மேல்

#2373
நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம்
சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி
சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து
அத்தன் பரன்-பால் அடைதல் சித்தாந்தமே

மேல்

#2374
மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால்
மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு
ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே

மேல்

#2375
உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை
தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல்
உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல்
எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே

மேல்

#2376
தேடும் இயம நியமாதி சென்று அகன்று
ஊடும் சமாதியில் உற்று படர் சிவன்
பாடுற சீவன் பரமாக பற்று அற
கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே

மேல்

#2377
கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு
உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனை தெளிதலும் ஆமே

மேல்

#2378
தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு
ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு
அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே

மேல்

#2379
ஆகும் அனாதி கலை ஆகம வேதம்
ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல்
ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம்
ஆகும் சிவபோதகம் உபதேசமே

மேல்

#2380
தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்து
பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை
வாசா மகோசர மா நந்தி தானே

மேல்

#2381
தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது
ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே

மேல்

#2382
ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே
ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு
கூறிய ஞான குறியுடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே

மேல்

#2383
உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும்
உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம்
உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து
உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே

மேல்

#2384
ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின்
தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து
வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை
கூவி அருளிய கோனை கருதுமே

மேல்

#2385
கருதும் அவர்-தம் கருத்தினுக்கு ஒப்ப
அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில்
வரு சமய புற மாயை மா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே

மேல்

#2386
வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை
போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய
நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே

மேல்

#2387
வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட
நாதாந்த பாசம் விடு நல்ல தொம்பதம்
மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே

மேல்

#2388
அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும்
உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி
பண்டுறு நின்ற பராசத்தி என்னவே
கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே

மேல்

#2389
கோ உணர்த்தும் சத்தியாலே குறிவைத்து
தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே
பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப
ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே

மேல்

#2390
ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி
அருவனும் ஆகிய ஆதரத்தானே

மேல்

#2391
அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து
வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு
உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரனுறு தோயா சிவாநந்தி ஆமே

மேல்

#2392
வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப
நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி
போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம்
சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே

மேல்

#2393
சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும்
அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும்
சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால்
நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே

மேல்

#2394
சித்தாந்த தேசீவன் முத்தி சித்தித்தலால்
சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர்
சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே

மேல்

#2395
சிவனை பரமனுள் சீவனுள் காட்டும்
அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான்
நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே

மேல்

#2396
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம்
தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம்
தத்துவம் ஆம் சிவசாயுச்சியமே

மேல்

#2397
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன
நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம்
பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே

மேல்

#2398
பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம்
விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே

மேல்

#2399
ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன
ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே

மேல்

#2400
அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை
ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு
நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே

மேல்

#2401
அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய்
அனாதி அடக்கி தனை கண்டு அரனாய்
தனாதி மலம் கெட தத்துவாதீதம்
வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே

மேல்

#2402
உயிரை பரனை உயர் சிவன்-தன்னை
அயர்வு அற்று அறி தொந்த தசி அதனால்
செயலற்று அறிவாகியும் சென்று அடங்கி
அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே

மேல்

#2403
மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம்
சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன
அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள்
துன்னிய ஆகம நூல் என தோன்றுமே

மேல்

#2404
முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ
பதியான ஈசன் பகர்ந்த இரண்டு
முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து
அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே

மேல்

#2405
அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினை கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பு அறும் தானே

மேல்

#2406
பசு பல கோடி பிரமன் முதலாய்
பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு
பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனை பற்றி விடாவே

மேல்

#2407
கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி
தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால்
குட குன்றில் இட்ட விளக்கு அதுவாமே

மேல்

#2408
பாசம் செய்தானை படர் சடை நந்தியை
நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும்
கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே

மேல்

#2409
விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தை
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே

மேல்

#2410
நாடும் பதியுடன் நல் பசு பாசமும்
நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை
நீடிய நித்தம் பசு பாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே

மேல்

#2411
ஆய பதிதான் அருள் சிவலிங்கமாம்
ஆய பசுவும் அடலேறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே

மேல்

#2412
பதி பசு பாசம் பயில்வியா நித்தம்
பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி
பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும்
பதி பசு பாசம் பயில நிலாவே

மேல்

#2413
பதியும் பசுவொடு பாசமும் மேலை
கதியும் பசு பாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே

மேல்

#2414
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும்
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே

மேல்

#2415
படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல்
படைப்பாதி சூக்கத்தை தற்பரம் செய்ய
படைப்பாதி தூய மலம் அ பரத்திலே

மேல்

#2416
ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூய ஈசானனும் ஆமே

மேல்

#2417
மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும்
மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும்படி படைப்போன் அரன் ஆமே

மேல்

#2418
படைப்பும் அளிப்பும் பயில் இளைப்பாற்றும்
துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்து
அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே

மேல்

#2419
ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே

மேல்

#2420
வீட்கும் பதி பசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து
ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே

மேல்

#2421
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே

மேல்

#2422
ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று
மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே

மேல்

#2423
பாசம் பயில் உயிர் தானே பர முதல்
பாசம் பயில் உயிர் தானே பசு என்ப
பாசம் பயில பதி பரம் ஆதலால்
பாசம் பயில பதி பசு ஆகுமே

மேல்

#2424
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி
அத்தத்தினாலே அணைய பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே

மேல்

#2425
காலும் தலையும் அறியார் கலதிகள்
கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம்
பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர்
கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே

மேல்

#2426
தலை அடி ஆவது அறியார் காயத்தில்
தலை அடி உச்சியில் உள்ளது மூலம்
தலை அடி ஆன அறிவை அறிந்தோர்
தலை அடி ஆகவே தான் இருந்தாரே

மேல்

#2427
நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற
வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட
பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி
தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே

மேல்

#2428
சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடி கீழ் அது
எந்தையும் என்னை அறியகிலான் ஆகில்
எந்தையை யானும் அறியகிலேனே

மேல்

#2429
பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால்
என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம்
உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம்
சொன்னான் கழலிணை சூடி நின்றேனே

மேல்

#2430
பதியது தோற்றும் பதமது வைம்-மின்
மதியது செய்து மலர் பதம் ஓதும்
நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன்
கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே

மேல்

#2431
தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில்
தரித்து நின்றான் அமராபதி நாதன்
கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை
பரித்து நின்றான் அ பரிபாகத்தானே

மேல்

#2432
ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள
தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள்
நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு
இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே

மேல்

#2433
கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற
மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற
பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான்
மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே

மேல்

#2434
பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர்
பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு
செற்றம் இலா செய்கைக்கு எய்தின செய்யுமே

மேல்

#2435
மூன்று உள குற்றம் முழுது நலிவன
மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே

மேல்

#2436
காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து
ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி
ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர்
தாமம் அதனை தலைப்பட்டவாறே

மேல்

#2437
தோன்றியது தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே

மேல்

#2438
போதம்-தனை உன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு
பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு
வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே

மேல்

#2439
தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும்
நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம்
சொல் பதத்தாலும் தொடர ஒண்ணா சிவன்
கற்பனை இன்றி கலந்து நின்றானே

மேல்

#2440
அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து
கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால்
இணை அறு பால் தேன் அமுது என இன்ப
துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே

மேல்

#2441
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும்
அம்பத மேலை சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே

மேல்

#2442
ஐம்பது அறியாதவரும் அவர் சிலர்
உம்பனை நாடி உரை முப்பதத்து இடை
செம்பரம் ஆகிய வாசி செலுத்திட
தம் பர யோகமாய் தானவன் ஆகுமே

மேல்

#2443
நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்
இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும்
நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும்
நந்தி நனவாதி மூட்டும் அனாதியே

மேல்

#2444
பர துரியத்து நனவு படி உண்ட
விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து
உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால்
அரிய துரியம் அசி பதம் ஆமே

மேல்

#2445
தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர்
மூன்று படி மண்டலத்து முதல்வனை
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி
நான்று நலம் செய் நலம் தருமாறே

மேல்

#2446
மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்த பின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே

மேல்

#2447
ஆறாறு தத்துவத்து அப்புறத்து அ பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

மேல்

#2448
பற்று அற பற்றில் பரம்பதி ஆவது
பற்று அற பற்றில் பரன் அறிவே பரம்
பற்று அற பற்றினில் பற்ற வல்லார்க்கே
பற்று அற பற்றில் பரம்பரம் ஆமே

மேல்

#2449
பரம்பரம் ஆன பதி பாசம் பற்றா
பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ
பரம்பரம் ஆன பரசிவானந்தம்
பரம்பரம் ஆக படைப்பது அறிவே

மேல்

#2450
நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று
தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம்
தனை உற்றிட தானே தற்பரம் ஆமே

மேல்

#2451
தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று
தற்பரன் கால பரமும் கலந்து அற்ற
நற்பராதீதமும் நாடு அகராதியே

மேல்

#2452
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே

மேல்

#2453
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி
சோதி பரஞ்சுடர் தோன்ற தோன்றாமையின்
நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே

மேல்

#2454
துரியம் கடந்து துரியா தீதத்தே
அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும்
பெரிய பிரானை பிரணவ கூபத்தே
துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே

மேல்

#2455
செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல்
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட
பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில்
செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே

மேல்

#2456
வைச்ச கலாதி வரு தத்துவம் கெட
வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து
உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே

மேல்

#2457
என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே

மேல்

#2458
பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள்
அரந்த அரன்நெறி ஆயது ஆகி
தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே

மேல்

#2459
சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும்
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய்
நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே

மேல்

#2460
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாக
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து
சீலம் இலா அணு செய்தி அது ஆமே

மேல்

#2461
வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம்
பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய்
ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே

மேல்

#2462
தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி
சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும்
தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு
அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே

மேல்

#2463
பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீதம் தன்னை
கண்டு பரனும் அ காரணோபாதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே

மேல்

#2464
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே

மேல்

#2465
மேருவினோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்கு
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே

மேல்

#2466
நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றினில் பர துரியம் தான்
நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம்
இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே

மேல்

#2467
தானா நனவில் துரியம் தன் தொம்பதம்
தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில்
ஆனா பரபதம் மற்றது அருநனா
வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே

மேல்

#2468
அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகி சார் மு துரிய
கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே

மேல்

#2469
ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள்
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று
பார் அந்தமான பராபரத்து அயிக்கியத்து
ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே

மேல்

#2470
தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை
பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே

மேல்

#2471
அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று
செறிவான மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே

மேல்

#2472
நனவின் நனவாதி நாலாம் துரியம்
தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவாதி ஆகத்து
அனைய பர துரியம் தற்பதமே

மேல்

#2473
தொம்பதம் தற்பதம் சொல் மு துரியம் போல்
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம்
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே

மேல்

#2474
சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய்
ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே

மேல்

#2475
ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும்
ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும்
ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று
ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே

மேல்

#2476
சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்று
தவம் ஆன மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்
துவமாகிய நெறி சோகம் என்போர்க்கு
சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே

மேல்

#2477
சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய
சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும்
பெத்தம் அறுத்த பெரும் பெருமானே

மேல்

#2478
ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து
ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு
வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு
ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே

மேல்

#2479
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள
மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை
காண்டலும் காய கணக்கு அற்றவாறே

மேல்

#2480
உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன
நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய
பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர் அறிவாரே

மேல்

#2481
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து
அருவாய் உருவாய் அருவுரு ஆகி
குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை
உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே

மேல்

#2482
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து
மணி எனலாய் நின்றவாறு அது போல
தணி முச்சொருபாதி சத்தியாதி சார
பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே

மேல்

#2483
கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட
நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம்
சொல் அறு முப்பாழில் சொல் அறு பேருரைத்து
அல் அறு முத்திராந்தத்து அனுபூதியே

மேல்

#2484
உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி
நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்து அ
இடம் தரு வாசலை மேல் திறவீரே

மேல்

#2485
இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடனுறும் அ உரு வேறு என காணும்
திடம் அது போல சிவபர சீவர்
உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே

மேல்

#2486
ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து
தெளிய தெளியும் சிவபதம் தானே

மேல்

#2487
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ
கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி
மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக
ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே

மேல்

#2488
தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்து தோற்றவே
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின்
சொல் பதம் ஆகும் தொந்த தசியே

மேல்

#2489
தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி
தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி
வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின்
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே

மேல்

#2490
தொந்த தசியை அ வாசியில் தோற்றியே
அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு
அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து
உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே

மேல்

#2491
வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து
உய்த்து பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே

மேல்

#2492
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம்
உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே

மேல்

#2493
ஆகிய அச்சோயம் தேவதத்தன்-இடத்து
ஆகியவை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே

மேல்

#2494
தாமதம் காமியம் ஆகி தகுகுணம்
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில்
தாமாம் துரியமும் தொந்த தசியதே

மேல்

#2495
காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட
காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட
காரிய காரண வாதனை கண்டு அறும்
சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே

மேல்

#2496
மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன்
சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன்
ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே

மேல்

#2497
எதிர் அற நாளும் எருது வந்து ஏறும்
பதி எனும் நந்தி பதம் அது கூட
கதி என பாழை கடந்த அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே

மேல்

#2498
துரியம் அடங்கிய சொல் அறும் பாழை
அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் என்றே துதிக்கும்
அரு நிலம் என்பதை யார் அறிவாரே

மேல்

#2499
ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு
வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ
தேறா சிவாயநம என தேறிலே

மேல்

#2500
உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும்
உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை
உள்ளமும் இல்லை உரு இல்லை தானே

மேல்

#2501
செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரண தோடு அற
அற்றிட அ சிவம் ஆகும் அணுவனே

மேல்

#2502
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நனவு மிகுத்த கனா நனா
ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா
பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே

மேல்

#2503
அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வரும் முப்பதத்து
சிகாரம் சிவமே வகாரம் பரமே
யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே

மேல்

#2504
உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று
அயிர்ப்பு அறு காரணோபாதி விதிரேகத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே

மேல்

#2505
காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொல் பதம்
பார் அறும் பாழில் பராபரத்தானே

மேல்

#2506
முத்திக்கு வித்து முதல்வன்-தன் ஞானமே
பத்திக்கு வித்து பணிந்துற்று பற்றலே
சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல்
சத்திக்கு வித்து தனது உபசாந்தமே

மேல்

#2507
காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனை பற்று அற
பாரணவும் உபசாந்த பரிசு இதே

மேல்

#2508
அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி
மன்னு பரங்காட்சியாவது உடனுற்று
தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே

மேல்

#2509
ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிராதீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே

மேல்

#2510
வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து
தோய்ந்து அறல் மோன சுகானுபவத்தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே

மேல்

#2511
பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்
திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன்
கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே

மேல்

#2512
பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறை மணி வாள் கொண்டவர்-தமை போல
கறை மணிகண்டனை காண்குற மாட்டார்
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே

மேல்

#2513
கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப
கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க
பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே

மேல்

#2514
கருதலர் மாள கருவாயில் நின்ற
பொருதலை செய்வது புல்லறிவாண்மை
மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால்
தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே

மேல்

#2515
பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும்
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில்
கணம் பதினெட்டும் கழல் அடி காண
வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே

மேல்

#2516
என்னிலும் என் உயிராய இறைவனை
பொன்னிலும் மா மணியாய புனிதனை
மின்னிய எ உயிராய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறுவகையாலே

மேல்

#2517
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும்
வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே

மேல்

#2518
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை
பண் அறிவாளனை பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே

மேல்

#2519
விண்ணவராலும் அறிவறியான்-தன்னை
கண்ணுற உள்ளே கருதிடில் காலையில்
எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ
பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே

மேல்

#2520
ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன்
பின் தான் அருள்செய்த பேரருளாளவன்
கன்றா மனத்தார்-தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத-போது புனை புகழானே

மேல்

#2521
போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக
காற்றின் விளக்கு அது காய மயக்குறும்
ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே

மேல்

#2522
நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை
கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண்
மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே

மேல்

#2523
ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும்
தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு
ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே

மேல்

#2524
மா மதியாம் மதியாய் நின்ற மாதவர்
தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம்
தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு
ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே

மேல்

#2525
பதமுத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு
இதமுற்ற பாச இருளை துரந்து
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே
திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே

மேல்

#2526
சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன்
சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து
சத்தர் சதாசிவ தன்மையர் தாமே

மேல்

#2527
உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வட திசை ஈசன்
நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே

மேல்

#2528
ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும்
மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே

மேல்

#2529
மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும்
விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர்
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில்
பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே

மேல்

#2530
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

மேல்

#2531
திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும்
வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே

மேல்

#2532
ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில்
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில்
ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே

மேல்

#2533
பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள்
செல் ஊழி அண்டத்து சென்ற அ ஊழியுள்
அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே

மேல்

#2534
புரியம் உலகினில் பூண்ட எட்டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே

மேல்

#2535
ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு
சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை
பூ இன்றி சூடான் புரிசடையோனே

மேல்

#2536
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே

மேல்

#2537
தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன்
பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன்
பொன் புவி சாந்தன் பொருதபிமானியே

மேல்

#2538
நவமாம் அவத்தை நனவு ஆதி பற்றில்
பவமாம் மலம் குணம் பற்று அற்று பற்றா
தவமான சத்திய ஞான பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே

மேல்

#2539
சிவமான சிந்தையில் சீவன் சிதைய
பவமான மும்மலம் பாறி பறிய
நவமான அந்தத்தின் நல் சிவபோதம்
தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே

மேல்

#2540
முன் சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள
பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு
தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே

மேல்

#2541
உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும்
இகந்தன வல்வினையோடு அறுத்தானே

மேல்

#2542
நலம் பல காலம் தொகுத்தன நீளம்
குலம் பல வண்ணம் குறிப்பொடும் கூடும்
பலம் பல பன்னிரு கால நினையும்
நிலம் பலவாறு இன நீர்மையன் தானே

மேல்

#2543
ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி
நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே

மேல்

#2544
தேறாத சிந்தை தெளிய தெளிவித்து
வேறா நரக சுவர்க்கமும் மேதினி
ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான்
வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே

மேல்

#2545
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற
செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே

மேல்

#2546
நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி இருக்கும் பெரு மறை அ மறை
கூசி இருக்கும் குணம் அது ஆமே

மேல்

#2547
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து
உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு
அருவினை ஆவது கண்டு அகன்ற பின்
புரிவன கன்ம கயத்துள் புகுமே

மேல்

#2548
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அ பொருள்
மாயை மறைய மறைய வல்லார்கட்கு
காயமும் இல்லை கருத்து இல்லை தானே

மேல்

#2549
மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு
கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில்
ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து
தாழ அடைப்பது தன் வலி ஆமே

மேல்

#2550
காய குழப்பனை காய நல் நாடனை
காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை
தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்து அறியாரே

மேல்

#2551
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே

மேல்

#2552
ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே

மேல்

#2553
வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்கு
சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே

மேல்

#2554
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும்
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை
தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு
தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே

மேல்

#2555
தூயது வாளா வைத்தது தூ நெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமாசித்தியும்
தூயது வாளா தூய் அடி சொல்லே

மேல்

#2556
பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றி
சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின்
மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே

மேல்

#2557
வினையாம் அசத்து விளைவது உணரார்
வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவு அறியாரே

மேல்

#2558
பரகதி உண்டு என இல்லை என்போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடுவார் கடை-தோறும்
துரகதி உண்ண தொடங்குவர் தாமே

மேல்

#2559
கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு
நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள்
பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து
ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே

மேல்

#2560
புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி
அறப்பட்ட மற்ற பதி என்று அழைத்தேன்
இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே

மேல்

#2561
திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டி
கடலிடை நில்லா கலம் சேருமா போல்
அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே

மேல்

#2562
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும்
போம் வழி வேண்டி புறமே உழிதர்வர்
காண் வழி காட்ட கண் காணா கலதிகள்
தீ நெறி செல்வான் திரிகின்றவாறே

மேல்

#2563
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி அவனை குறித்து உடன்
காடும் மலையும் கழனி கடம்-தோறும்
ஊடும் உருவினை உன்னகிலாரே

மேல்

#2564
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறி வழி
நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி
வேவது செய்து விளங்கிடுவீரே

மேல்

#2565
மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார்
தமக்குற பேசின தாரணை கொள்ளார்
சிணக்குற பேசின தீவினையாளர்
தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே

மேல்

#2566
விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து
தொட்டு விடாதது உபசாந்தத்தே தொகும்
விட்டு விடாதது மேவும் சத்தாதியில்
சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே

மேல்

#2567
வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின்
கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன
இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு
கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே

மேல்

#2568
சீவ துரியத்து தொம்பதம் சீவனார்
தாவு பர துரியத்தினில் தற்பதம்
மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே

மேல்

#2569
ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து
பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து
வீறான தொந்த தசி தத்துவ மசியே

மேல்

#2570
ஆகிய அச்சோயம் தேவக தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்த தசி என்ப
ஆகிய சீவன் பரன் சிவனாமே

மேல்

#2571
துவந்த தசியே தொந்த தசியும்
அவை மன்னா வந்து வய தேகம் ஆன
தவமுறு தத்துவ மசி வேதாந்த
சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே

மேல்

#2572
துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார்
உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறிவாரே

மேல்

#2573
தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய மு துரியத்து மேல் நாடவே
உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன்
செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே

மேல்

#2574
வைத்த துரியம் அதில் சொருபானந்தத்து
உய்த்த பிரணவமாம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்
வைத்தபடியே அடைந்து நின்றானே

மேல்

#2575
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து
பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாசகம் கெட்ட மன்னனை நாடே

மேல்

#2576
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின்
பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில்
ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே

மேல்

#2577
நீ அது ஆனாய் என நின்ற பேருரை
ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற
சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள்
ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே

மேல்

#2578
உயிர் பரம் ஆக உயர் பர சீவன்
அரிய சிவமாக அ சிவ வேத
திரியிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே

மேல்

#2579
வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில்
ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும்
தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி
சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே

மேல்

#2580
அறிவு அறியாமை இருண்டும் அகற்றி
செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனை
பிறிவு அறியாது பிரான் என்று பேணும்
குறி அறியாதவர் கொள் அறியாரே

மேல்

#2581
அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால்
அறிவான் அறிந்த அறிவு அறியோமே

மேல்

#2582
அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா
மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம்
பதியில் பதியும் பரவுயிர் தானே

மேல்

#2583
அடிதொழ முன் நின்று அமரர்கள் அத்தன்
முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி
படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம்
கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே

மேல்

#2584
நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி
என் உளம் வந்து இவன் என் அடியான் என்று
பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே

மேல்

#2585
துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு
பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்து அறியா என்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே

மேல்

#2586
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து
அவ்வாய அந்த கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால்
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே

மேல்

#2587
அழிகின்ற சாயா புருடனை போல
கழிகின்ற நீரில் குமிழியை காணில்
எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க
பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே

மேல்

#2588
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில்
படரும் சிவசத்தி தாமே பரமாம்
உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே

மேல்

#2589
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம்
அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும்
குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து
தவிர் ஒன்று இலாத சராசரம் தானே

மேல்

#2590
பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும்
திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும்
உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும்
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே

மேல்

#2591
அளந்து துரியத்து அறிவினை வாங்கி
உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து
கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே

மேல்

#2592
இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி
பரம்பரம் ஆன பரம் அது விட்டே
உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
இருந்த என் நந்தி இதயத்து உளானே

மேல்

#2593
கரி உண் விளவின் கனி போல் உயிரும்
உரிய பரமும் முன் ஓதும் சிவமும்
அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெருமானே

மேல்

#2594
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே
நந்தி இருந்தனன் நாம் அறியோமே

மேல்

#2595
அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள்
குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை
அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே

மேல்

#2596
எல்லாம் அறியும் அறிவு-தனை விட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை
எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்
எல்லாம் அறிந்த இறை எனலாமே

மேல்

#2597
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே

மேல்

#2598
தானே உலகில் தலைவன் என தகும்
தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும்
வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே

மேல்

#2599
அருள் பெற்ற காரணம் என்-கொல் அமரில்
இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே

மேல்

#2600
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை
பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே

மேல்

#2601
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக
பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை
கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை
கைகலந்தார்க்கே கருத்துறல் ஆமே

மேல்

#2602
எய்திய காலத்து இருபொழுதும் சிவன்
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும்
பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில்
ஐயனும் அ வழி ஆகி நின்றானே

மேல்

#2603
எய்துவது எய்தாது ஒழிவது இது அருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி
பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின்
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே

மேல்

#2604
கைகலந்தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை
பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை
பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே

மேல்

#2605
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை
கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை
பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு
அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே

மேல்

#2606
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின்
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என
பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு
ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே

மேல்

#2607
வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு
தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது
அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில்
செம்பொன் சிவகதி சென்று எய்தலாமே

மேல்

#2608
மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து
துயக்கு அறுத்தானை தொடர்-மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான்
உயப்போ என மனம் ஒன்றுவித்தானே

மேல்

#2609
மனம் அது தானே நினைய வல்லார்க்கு
இனம் என கூறும் இரும் காயம் ஏவல்
தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில்
புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே

மேல்

#2610
முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே

மேல்

#2611
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே

மேல்

#2612
மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும்
மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே

மேல்

#2613
வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை
ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே

மேல்

#2614
மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே

மேல்

#2615
ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே

மேல்

#2616
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படு வழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே

மேல்

#2617
உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர்
அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவா கடல் ஈசன் தரித்து நின்றானே

மேல்

#2618
நின்ற வினையும் பிணியும் நெடும் செயல்
துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும்
பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே

மேல்

#2619
உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம்
பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே

மேல்

#2620
அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இ பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட-போதே

மேல்

#2621
கொதிக்கின்றவாறும் குளிர்கின்றவாறும்
பதிக்கின்றவாறு இந்த பார் அகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே

மேல்

#2622
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியை
சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே

மேல்

#2623
முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை
சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே

மேல்

#2624
அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே

மேல்

#2625
நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர்
பாரில் பயனாரை பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே

மேல்

#2626
ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல
பத்தர்-தம் பத்தியில் பால் படில் அல்லது
முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே

மேல்

#2627
ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே

மேல்

#2628
பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே

மேல்

#2629
பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக
குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால்
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே

மேல்

#2630
உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின்
செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து
உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே

மேல்

#2631
வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனை
கானவன் என்றும் கருவரையான் என்றும்
ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே

மேல்

#2632
நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த
தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம்
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே

மேல்

#2633
முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்று
தத்துவ சுத்தி தலைப்பட்டு தன் பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை
பத்தியில் உற்றோர் பரானந்த போதரே

மேல்

#2634
வளம் கனி தேடிய வன் தாள் பறவை
உளம் கனி தேடி அழிதரும்-போது
களம் கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி
நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே

மேல்

#2635
பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேரின்பத்து
அம்மான் அடி தந்து அருட்கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மை கரந்திட்டு
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே

மேல்

#2636
அறிவு உடையான் அரு மா மறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன்
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த
குறி உடையானொடும் கூடுவன் நானே

மேல்

#2637
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகியவாறே

மேல்

#2638
குறியா குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும்
செறியா செறிவே சிவம் எனலாமே

மேல்

#2639
காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே

மேல்

#2640
விருப்பொடு கூடி விகிர்தனை நாடி
பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே

மேல்

#2641
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே

மேல்

#2642
தன்மை வல்லோனை தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை
புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின்
பன்மையில் உம்மை பரிசு செய்வானே

மேல்

#2643
தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது
தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை
கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே

மேல்

#2644
அ வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இ வழி நந்தி இயல்பு அது தானே

மேல்

#2645
எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அ ஆண் தகையானை
செறிவது தேவர்க்கு தேவர் பிரானை
பறிவது பல் கண பற்று விட்டாரே

மேல்

#2646
ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே

மேல்

#2647
அந்த கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை
சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே

மேல்

#2648
உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு
கரையற்று எழுந்த கலை வேட்டு அறுத்து
திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி
புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே

மேல்


@9 ஒன்பதாம் தந்திரம்

#2649
பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி
குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்
தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே

மேல்

#2650
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை
அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும்
அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே

மேல்

#2651
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின்
கூடும் சிவனது கொய் மலர் சேவடி
தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை
ஓடும் உலகு உயிராகி நின்றானே

மேல்

#2652
இயம்புவன் ஆசனத்தோடு மலையும்
இயம்புவன் சித்த குகையும் இடமும்
இயம்புவன் ஆதாரத்தோடு வனமும்
இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே

மேல்

#2653
முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம்
அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி
அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே

மேல்

#2654
அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும்
சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும்
செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும்
அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே

மேல்

#2655
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்
காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே
தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள்
ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே

மேல்

#2656
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில்
கூற குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலாய் அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

மேல்

#2657
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய பரசிவம் யாவையும் ஆகி
விரிவு குவிவு அற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேச ஒண்ணாதே

மேல்

#2658
ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன்
காயன நந்தியை காண என் கண் பெற்றேன்
சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே

மேல்

#2659
கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

மேல்

#2660
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு
அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே

மேல்

#2661
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும்
ஆன்ற அறிவும் அறி நனவாதிகள்
மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற
ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே

மேல்

#2662
சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை
கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும்
பந்தம் இலாத பளிங்கின் உருவினள்
பந்தம் அறுத்த பரம் குரு பற்றே

மேல்

#2663
மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ
நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி
சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க
வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே

மேல்

#2664
தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும்
தான் ஆம் பறவை வனம் என தக்கன
தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில்
தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே

மேல்

#2665
மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி
உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும்
கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு
அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே

மேல்

#2666
தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை
பல படு பாசம் அறுத்து அறுத்திட்டு
நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில்
தலைப்படல் ஆகும் தருமமும் தானே

மேல்

#2667
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை
சுனைக்குள் விளை மலர் சோதியினானை
தினை பிளந்து அன்ன சிறுமையரேனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே

மேல்

#2668
தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை
விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க
அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை
நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே

மேல்

#2669
நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி
நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி
திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே
புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே

மேல்

#2670
வந்த மரகத மாணிக்க ரேகை போல்
சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தர சோதியுள் சோதியும் ஆமே

மேல்

#2671
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்
கண்ணும் மா யோக கடவுள் இருப்பது
மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய்
விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே

மேல்

#2672
பரசு பதி என்று பார் முழுது எல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும் பாதியால்
பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு
உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே

மேல்

#2673
அம்பர நாதன் அகல் இட நீள் பொழில்
தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே

மேல்

#2674
கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின்
நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான்
தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம்
போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே

மேல்

#2675
தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை
பாலித்த சூக்கும மேலை சொரூப பெண்
ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம்
மேலை பிரணவம் வேதாந்த வீதியே

மேல்

#2676
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம்
ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே

மேல்

#2677
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே

மேல்

#2678
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்
அருக்கம் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி
சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே

மேல்

#2679
மலையும் மனோபவம் அருள்வன ஆவன
நிலையில் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும்
நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே

மேல்

#2680
சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து
ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே

மேல்

#2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன் இருந்தானே

மேல்

#2682
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும்
அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும்
பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே
இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே

மேல்

#2683
விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன்
துளங்கு ஒளி பெற்றன சோதி அருள
வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு
களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே

மேல்

#2684
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி
துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே

மேல்

#2685
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம்
பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம்
நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும்
மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே

மேல்

#2686
மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி
பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி
துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும்
உன்னியவாறு ஒளி ஒத்தது தானே

மேல்

#2687
விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து
துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே

மேல்

#2688
விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும்
துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான்
அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும்
களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே

மேல்

#2689
இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன்
துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி
விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே

மேல்

#2690
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன்
வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி
விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே

மேல்

#2691
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த
துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா
களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட
விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே

மேல்

#2692
போது கரும் குழல் போனவர் தூது இடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி
நீதியின் நல் இருள் நீக்கியவாறே

மேல்

#2693
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது
பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல்
கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில்
விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே

மேல்

#2694
சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே
படருறு காட்சி பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞான துறவியன் ஆமே

மேல்

#2695
ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன்
அளி பவள செம்பொன் ஆதி பிரானும்
களி பவளத்தினன் கார் இருள் நீங்கி
ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே

மேல்

#2696
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற
தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார்
பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற
வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே

மேல்

#2697
தானே இருக்கும் அவற்றில் தலைவனும்
தானே இருக்கும் அவன் என நண்ணிடும்
வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து
பானாய் இருக்க பரவலும் ஆமே

மேல்

#2698
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே

மேல்

#2699
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி
உகார முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
நகார முதலாகும் நந்தி-தன் நாமமே

மேல்

#2700
அகராதி ஈரெண் கலந்த பரையும்
உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன்
சிகராதி தான் சிவவேதமே கோண
நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே

மேல்

#2701
வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி
ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய்
தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல்
ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே

மேல்

#2702
கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி
கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது
மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும்
அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2703
ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே

மேல்

#2704
தெள்ளமுது ஊற சிவாயநம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே

மேல்

#2705
குருவழி ஆய குணங்களின் நின்று
கருவழி ஆய கணக்கை அறுக்க
வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2706
வெறிக்க வினை துயர் வந்திடும்-போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும்
குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே

மேல்

#2707
நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று
துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று
மஞ்சு தவழும் வடவரை மீது உறை
அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே

மேல்

#2708
பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது
இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர்
பரா முற்றும் கீழொடு பல்வகையாலும்
அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே

மேல்

#2709
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தராய்
தெளிய ஓதி சிவாயநம என்னும்
குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே

மேல்

#2710
சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே

மேல்

#2711
சிவனருள் ஆய சிவன் திருநாமம்
சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன் முதலாக சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே

மேல்

#2712
ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ
வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால்
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே

மேல்

#2713
நமாதி நனாதி திரோதாயி ஆகி
தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று
சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே

மேல்

#2714
அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே

மேல்

#2715
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க
சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருளாமே

மேல்

#2716
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே

மேல்

#2717
நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

மேல்

#2718
சிவாயநம என சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

மேல்

#2719
செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம்
அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு
துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே

மேல்

#2720
அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும்
எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே

மேல்

#2721
பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே
விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை
எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே

மேல்

#2722
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள்-தன் விளையாட்டு அதே

மேல்

#2723
சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை
சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை
பொன் பதி கூத்தனை பொன் தில்லை கூத்தனை
அற்புத கூத்தனை யார் அறிவாரே

மேல்

#2724
தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல்
தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர்
ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே

மேல்

#2725
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே

மேல்

#2726
ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி ஆகும் சமய
களியார் பரமும் கருத்துறை அந்த
தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே

மேல்

#2727
ஆன நடம் ஐந்து அகள சகளத்தர்
ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே

மேல்

#2728
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து
ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே

மேல்

#2729
வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட
கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட
பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே

மேல்

#2730
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே

மேல்

#2731
தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள்
தாபதர் சத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே

மேல்

#2732
அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திருவுரு
கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே

மேல்

#2733
கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும்
திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை
வடமுற்ற மா வனம் மன்னவன் தானே

மேல்

#2734
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே

மேல்

#2735
அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே

மேல்

#2736
ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி
கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி
மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே

மேல்

#2737
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே

மேல்

#2738
மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே

மேல்

#2739
தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில்
அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே

மேல்

#2740
அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர்
அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே

மேல்

#2741
அடங்காத என்னை அடக்கி அடி வைத்து
இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு
நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன்
படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே

மேல்

#2742
உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை
செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை
சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை
இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே

மேல்

#2743
மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை
பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை
சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே

மேல்

#2744
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும்
தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும்
செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள்
அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே

மேல்

#2745
தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள்
வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன்
ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த
நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே

மேல்

#2746
காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி
நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே

மேல்

#2747
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை
கூரும் இ வானின் இலங்கை குறியுறும்
சாரும் திலை வன தண் மா மலையத்தூடு
ஏறும் சுழுனை இவை சிவபூமியே

மேல்

#2748
பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம்
ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில் திரு அம்பலம்
ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே

மேல்

#2749
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக
பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக
தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

மேல்

#2750
குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து
புரானந்த போகனாய் பூவையும் தானும்
நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே

மேல்

#2751
ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட
ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட
பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட
நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே

மேல்

#2752
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே

மேல்

#2753
மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு
சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமோடு அந்த நடானந்த நாற்பத
பாதியோடு ஆடி பரன் இரு பாதமே

மேல்

#2754
இடை பிங்கலை இம வானோடு இலங்கை
நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலை வனம் கைகண்ட மூலம்
படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே

மேல்

#2755
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள்
பேறு ஆன வேதாகமமே பிறத்தலான்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே

மேல்

#2756
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி
வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி
போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும்
தீது அற்ற தேவாதி தேவர் பிரானே

மேல்

#2757
தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி
மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி
பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி
கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே

மேல்

#2758
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமய குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே

மேல்

#2759
அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே
எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி
உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள்
தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே

மேல்

#2760
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பல ஆன நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட
தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே

மேல்

#2761
இருதயம்-தன்னில் எழுந்த பிராணன்
கரசரணாதி கலக்கும் படியே
அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே

மேல்

#2762
குரு உரு அன்றி குனிக்கும் உருவம்
அருவுரு ஆவதும் அந்த அருவே
திரிபுரை ஆகி திகழ் தருவாளும்
உரு அருவு ஆகும் உமை அவள் தானே

மேல்

#2763
திரு வழி ஆவது சிற்றம்பலத்தே
குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே
உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு
அருள் வழி ஆவதும் அ வழி தானே

மேல்

#2764
நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே

மேல்

#2765
வளி மேக மின் வில்லு வானக ஓசை
தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல்
களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய்
ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே

மேல்

#2766
தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும்
ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம்
மாயை மா மாயை கடந்து நின்றார் காண
நாயகன் நின்று நடம் செய்யுமாறே

மேல்

#2767
கூத்தன் கலந்திடும் கோல்வளையாளொடும்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து
கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே

மேல்

#2768
இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம்
அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே

மேல்

#2769
சத்தி வடிவு சகல ஆனந்தமும்
ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு
ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே

மேல்

#2770
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே

மேல்

#2771
அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே
கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே

மேல்

#2772
மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர்
நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை
சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள
நின்றது தான் நெடு மண்டலம் ஆமே

மேல்

#2773
அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி
தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி
எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி
அண்ட நடம் செயும் ஆலயம் தானே

மேல்

#2774
ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன்
ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக
மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே

மேல்

#2775
அம்பலம் ஆவது அகில சராசரம்
அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி
அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம்
அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே

மேல்

#2776
கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று
ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன
நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள்
பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே

மேல்

#2777
அண்டத்தில் தேவர்கள் அப்பாலை தேவர்கள்
தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள்
புண்டரிக பத பொன்னம்பல கூத்து
கண்டு சேவித்து கதி பெறுவார்களே

மேல்

#2778
புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே

மேல்

#2779
திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது
உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து
கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே

மேல்

#2780
அங்கி தமருகம் அக்கு மாலை பாசம்
அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம்
தங்கு பயம் தரு நீலமும் உடன்
மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே

மேல்

#2781
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக
கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி
நீடிய நாதம் பராற்பர நேயத்தே
ஆடிய நந்தி புறம் அகத்தானே

மேல்

#2782
ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட
இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட
அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே

மேல்

#2783
ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே

மேல்

#2784
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே
மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே

மேல்

#2785
தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை
மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை
வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும்
காமணி ஞாலம் கடந்து நின்றானே

மேல்

#2786
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை
புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே

மேல்

#2787
ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின்
ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே

மேல்

#2788
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட
துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே
அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே

மேல்

#2789
தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட
சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட
வைத்த சராசரம் ஆட மறை ஆட
அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே

மேல்

#2790
இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு உருபர ரூபமாய்
திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே

மேல்

#2791
சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில்
அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட
நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட
சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே

மேல்

#2792
நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும்
தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து
நாத பிரமம் சிவநடம் ஆமே

மேல்

#2793
சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர
தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து
தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும்
தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே

மேல்

#2794
கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே

மேல்

#2795
நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி
பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர்
நேதத்துவமும் அவற்றொடு நேதியும்
பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே

மேல்

#2796
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே

மேல்

#2797
திருந்து நல் சீ என்று உதறிய கையும்
அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும்
பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும்
திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே

மேல்

#2798
மருவம் துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமல பதமும்
உருவில் சிவாயநம என ஓதே

மேல்

#2799
அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி-தன்னில் அறையில் சங்காரம்
அரனுற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே

மேல்

#2800
தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி
கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே

மேல்

#2801
நந்தியை எந்தையை ஞான தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அ பர
சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே

மேல்

#2802
சீய குரு நந்தி திரு அம்பலத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை
ஆயுறு மேனி அணை புகலாமே

மேல்

#2803
தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை
ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள்
ஆனால் அரன் அடி நேயத்ததாமே

மேல்

#2804
உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை
உள்ளத்துளே அங்கியாய ஒருவனை
உள்ளத்துளே நீதியாய ஒருவனை
உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே

மேல்

#2805
பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால்
குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன்
பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன்
அருநிலையாய் நின்ற ஆதி பிரானே

மேல்

#2806
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியை குலைத்தது தானே

மேல்

#2807
பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி
அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு
உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே

மேல்

#2808
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே

மேல்

#2809
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம்
ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே

மேல்

#2810
உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது
குயில் கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே

மேல்

#2811
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி
நணுகிய மின் ஒளி சோதி வெளியை
பணியின் அமுதம் பருகலும் ஆமே

மேல்

#2812
புறத்துள் ஆகாசம் புவனம் உலகம்
அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு
சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி
சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே

மேல்

#2813
மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே

மேல்

#2814
கரி அட்ட கையன் கபாலம் கையேந்தி
எரியும் இளம்பிறை சூடும் எம்மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே

மேல்

#2815
மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை
நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே

மேல்

#2816
விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே

மேல்

#2817
தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு
தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின்
தத்துவன் அங்கே தலைப்படும் தானே

மேல்

#2818
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும்
பசும்பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே

மேல்

#2819
முத்தின் வயிரத்தின் முந்நீர் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம்
ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை
எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே

மேல்

#2820
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும்
நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது
நான் என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே

மேல்

#2821
ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி
ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல்
ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல்
ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே

மேல்

#2822
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே
உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே
உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே

மேல்

#2823
காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும்
காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும்
பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி
ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே

மேல்

#2824
ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல்
மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி
ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே

மேல்

#2825
எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே
இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து
தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே

மேல்

#2826
தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை
செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே

மேல்

#2827
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை
அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே

மேல்

#2828
சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால்
உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வரு குரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே

மேல்

#2829
உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை
தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில்
மருவ சிவம் என்ற மா முப்பதத்தின்
சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே

மேல்

#2830
நினையும் அளவின் நெகிழ வணங்கி
புனையில் அவனை பொதியலும் ஆகும்
எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித்தனனே

மேல்

#2831
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமுதாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புக
சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே

மேல்

#2832
அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனி மொழி மாதர்
துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே

மேல்

#2833
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி
சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று
பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே

மேல்

#2834
சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர
பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற
தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே
துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே

மேல்

#2835
பரம குரவன் பரம் எங்கும் ஆகி
திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்து நின்றானே

மேல்

#2836
குலைக்கின்ற நீரில் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச
நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை
வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே

மேல்

#2837
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள்
எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை
பொங்கி நின்றான் புவனாபதி தானே

மேல்

#2838
சமைய சுவடும் தனையறியாமல்
கமை அற்ற காமாதி காரணம் எட்டும்
திமிர செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே

மேல்

#2839
மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு
வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன்
சேய சிவம் மு துரியத்து சீர் பெற
ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே

மேல்

#2840
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும்
கரு அன்றியே நின்று தான் கரு ஆகும்
அரு அன்றியே நின்ற மாய பிரானை
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே

மேல்

#2841
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே

மேல்

#2842
பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா
பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை
பரஞ்சோதி உண்ணான் படியப்படிய
பரஞ்சோதி-தன்னை பறைய கண்டேனே

மேல்

#2843
சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கு மதித்த
சொரூப குரவன் சுகோதயம் தானே

மேல்

#2844
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரை அற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரமது ஆக
உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே

மேல்

#2845
தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லா பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே

மேல்

#2846
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே
ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை
நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே

மேல்

#2847
செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என்
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என்
வித்தகன் நந்தி விதிவழி அல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே

மேல்

#2848
தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே

மேல்

#2849
ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை
பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே

மேல்

#2850
வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என்
கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என்
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே

மேல்

#2851
ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே

மேல்

#2852
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே

மேல்

#2853
சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே

மேல்

#2854
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது
போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2855
பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்
தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே

மேல்

#2856
ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே

மேல்

#2857
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

மேல்

#2858
துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே

மேல்

#2859
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி
பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும்
என்னுற்று அறிவான் என் விழித்தானே

மேல்

#2860
சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி
சுத்த பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறு பேரொளியே

மேல்

#2861
பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே

மேல்

#2862
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே

மேல்

#2863
துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே

மேல்

#2864
ஓதிய முத்தி அடைவே உயிர் பரம்
பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு
ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே
ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே

மேல்

#2865
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள்
கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல்
சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை
பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே

மேல்

#2866
காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய்
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாய கவற்றின் மறைப்பு அறியேனே

மேல்

#2867
தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே

மேல்

#2868
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை
ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே

மேல்

#2869
வழுதலை வித்திட பாகல் முளைத்தது
புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள்
முழுதும் பழுத்தது வாழை கனியே

மேல்

#2870
ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம்
பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே

மேல்

#2871
பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள
கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு
வெள்ள செய் ஆகி விளைந்தது தானே

மேல்

#2872
மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலி களர் உழுவாரே

மேல்

#2873
ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே

மேல்

#2874
பட்டி பசுக்கள் இருபத்துநால் உள
குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டி பசுக்கள் குட பால் சொரியினும்
பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே

மேல்

#2875
ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள
ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்று பசுக்கள் வரவு அறியோமே

மேல்

#2876
தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு
தட்டான் அதனை தகைந்துகொண்டானே

மேல்

#2877
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையை பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே

மேல்

#2878
இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி
கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே

மேல்

#2879
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது
விளைந்து கிடந்தது மேலைக்கு காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக்காதமே

மேல்

#2880
களர் உழுவார்கள் கருத்தை அறியோம்
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே

மேல்

#2881
கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே

மேல்

#2882
மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே

மேல்

#2883
பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே

மேல்

#2884
ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும்
தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவா கடா விடின் மூட்டுகின்றாரே

மேல்

#2885
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவை
பிறவாத வண்டு மணம் உண்டவாறே

மேல்

#2886
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்
கூகின்ற நாவலின் கூழை தரும் கனி
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே

மேல்

#2887
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே

மேல்

#2888
பத்து பரும் புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே

மேல்

#2889
இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே

மேல்

#2890
ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே

மேல்

#2891
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையை கூகை நணுகல் உறுதலும்
கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே

மேல்

#2892
குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்கு பிறந்தவை போகின்றவாறே

மேல்

#2893
காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி
கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே

மேல்

#2894
கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறை குழியில் அழுந்துகின்றாரே

மேல்

#2895
துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல்
விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும்
வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான்
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே

மேல்

#2896
பருந்தும் கிளியும் படு பறை கொட்ட
திருந்திய மாதர் திருமணப்பட்டார்
பெருந்தவ பூதம் பெறலுருவாகும்
இருந்திய பேற்றினில் இன்புறுவாரே

மேல்

#2897
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன்
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற
பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே

மேல்

#2898
இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின்
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும்
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே

மேல்

#2899
அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே

மேல்

#2900
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே

மேல்

#2901
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே

மேல்

#2902
பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண
குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே

மேல்

#2903
கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே

மேல்

#2904
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே

மேல்

#2905
ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனி கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே

மேல்

#2906
கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டன பூமி மருவி வந்து ஊறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே

மேல்

#2907
ஏழு வளைகடல் எட்டு குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே

மேல்

#2908
ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து
சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர்
கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள்
மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே

மேல்

#2909
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே

மேல்

#2910
கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே

மேல்

#2911
கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்க படிகின்றவாறே

மேல்

#2912
கொல்லை முக்காதமும் காடு அரை காதமும்
எல்லை மயங்கி கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே

மேல்

#2913
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இருநில செவ்வி
தழுவி வினை சென்று தான் பயவாது
வழுவாது போவன் வளர்சடையோனே

மேல்

#2914
பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களி ஆரமுது ஊற
பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே

மேல்

#2915
தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து
ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே

மேல்

#2916
முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே

மேல்

#2917
அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே

மேல்

#2918
பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து
குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையை குறைகின்றவாறே

மேல்

#2919
மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே

மேல்

#2920
நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே

மேல்

#2921
கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே

மேல்

#2922
வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்கு சூரை வலிது வலிது என்பர்
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு
வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே

மேல்

#2923
நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி
புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே

மேல்

#2924
தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி
களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே

மேல்

#2925
குடைவிட்டு போந்தது கோயில் எருமை
படை கண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே

மேல்

#2926
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

மேல்

#2927
பாசி படர்ந்து கிடந்த குளத்திடை
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திட
பாசம் கிடந்து பதைக்கின்றவாறே

மேல்

#2928
கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள்
வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே

மேல்

#2929
வீணையும் தண்டும் விரவி இசை முரல்
தாணுவும் மேவி தகுதலை பெய்தது
வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம்
காணியும் அங்கே கலக்கின்றவாறே

மேல்

#2930
கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர்
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே

மேல்

#2931
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே

மேல்

#2932
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும்
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே

மேல்

#2933
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால்
நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும்
மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு
காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே

மேல்

#2934
புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே

மேல்

#2935
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அது இது ஆமே

மேல்

#2936
நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம்
மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே

மேல்

#2937
காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன்
கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே

மேல்

#2938
உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே

மேல்

#2939
மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேரருளாளன்
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே

மேல்

#2940
துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே

மேல்

#2941
உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி
திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன்
பொரு_இலி பூத படை உடையாளி
மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே

மேல்

#2942
கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை
எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த
தொண்டர் முகந்த துறை அறியோமே

மேல்

#2943
தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல
அற்புதம் ஆகி அநுபோக காமம் போல்
கற்பனை இன்றி கலந்து நின்றானே

மேல்

#2944
முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே

மேல்

#2945
அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு
செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு
கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே

மேல்

#2946
கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்
தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை
பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே

மேல்

#2947
நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே

மேல்

#2948
விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்து
கதறிய பாழை கடந்து அந்த கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே

மேல்

#2949
வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற
சேடார் கமல செழும் சுடருள் சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே

மேல்

#2950
அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கென காமம் புலப்படுமா போல்
சதுக்கென்று வேறே சமைந்தாரை காண
மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே

மேல்

#2951
தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே

மேல்

#2952
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி
பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல் மனம் உற்று நின்றேனே

மேல்

#2953
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே

மேல்

#2954
தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது
தான் அவன் ஆன பின் ஆரை நினைவது
காமனை வென்ற கண்ணாரை உகப்பது
தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே

மேல்

#2955
உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ
திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு
புரை அற்று இருந்தான் புரிசடையோனே

மேல்

#2956
மன மாயை மாயை இ மாயை மயக்க
மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை
பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே

மேல்

#2957
மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம்
குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே
பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே

மேல்

#2958
ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன்
அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன்
செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே

மேல்

#2959
ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும்
சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை
பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு
கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே

மேல்

#2960
ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி
சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவது அல்லால் இனி
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே

மேல்

#2961
பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில் மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே

மேல்

#2962
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது
நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம்
தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே

மேல்

#2963
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே

மேல்

#2964
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை
கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை
விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே

மேல்

#2965
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே

மேல்

#2966
கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும்
எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே

மேல்

#2967
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே

மேல்

#2968
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே

மேல்

#2969
சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர்
சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே

மேல்

#2970
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினை பற்று அறுக்கும் விமலனை தேடி
நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே

மேல்

#2971
சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானை பணிந்து நின்றேனே

மேல்

#2972
பணிந்து நின்றேன் பரமாதி பதியை
துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன்
அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை
தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே

மேல்

#2973
என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து
முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும்
தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி
பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே

மேல்

#2974
பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும்
கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை
பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம்
வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே

மேல்

#2975
சிவன் வந்து தேவர் குழாமுடன் கூட
பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு
அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான்
அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே

மேல்

#2976
கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே

மேல்

#2977
உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி
செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால்
கைவளம் இன்றி கரு கடந்தேனே

மேல்

#2978
மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று
தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன் கைவந்தது தானே

மேல்

#2979
ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலை கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப்பொருள் தானே

மேல்

#2980
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே

மேல்

#2981
மனம் விரிந்து குவிந்தது மா தவம்
மனம் விரிந்து குவிந்தது வாயுவும்
மனம் விரிந்து குவிந்தது மன் உயிர்
மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

மேல்

#2982
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை
காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே

மேல்

#2983
மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தை
பன்னினர் என்றே பாடு அறிவீரே

மேல்

#2984
முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசுகின்றாரே

மேல்

#2985
புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன்
புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே

மேல்

#2986
பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு
நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே

மேல்

#2987
நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர்
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே

மேல்

#2988
போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை
தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை
போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே

மேல்

#2989
நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்ட பின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே

மேல்

#2990
வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே

மேல்

#2991
மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே

மேல்

#2992
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு
கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்
சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே

மேல்

#2993
அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே

மேல்

#2994
வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ள புனல் சடை வேத முதல்வனை
கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே

மேல்

#2995
ஆளும் மலர் பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே

மேல்

#2996
விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம்
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே

மேல்

#2997
வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில்
தானகம் இல்லா தனி ஆகும் போதகன்
கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும்
பானக சோதியை பற்றி நின்றேனே

மேல்

#2998
விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும்
பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே

மேல்

#2999
மேலது வானவர் கீழது மாதவர்
தான் இடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ் சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே

மேல்

#3000
சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே

மேல்

#3001
உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட
செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே

மேல்

#3002
பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான
பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே

மேல்

#3003
அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள்
தந்த உலகு எங்கும் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே

மேல்

#3004
முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும்
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே

மேல்

#3005
ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட
சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன்
ஆதி பிரான் நடு ஆகி நின்றானே

மேல்

#3006
அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவி சிறுமையன்
தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே

மேல்

#3007
உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே

மேல்

#3008
பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும்
பராபரனாய் இ அகல் இடம் தாங்கி
தரா பரனாய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே

மேல்

#3009
போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே

மேல்

#3010
திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு
முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே

மேல்

#3011
அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி
இவன்தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன்தான் பலபல சீவனுமாகி
நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே

மேல்

#3012
கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடு-மின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே

மேல்

#3013
படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே

மேல்

#3014
ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின
ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே

மேல்

#3015
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே

மேல்

#3016
உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும்
கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம்
அள்ளல் கடலை அறுத்து நின்றானே

மேல்

#3017
மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே

மேல்

#3018
விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன்
எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே

மேல்

#3019
உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்
நித்தில சோதியன் நீல கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே

மேல்

#3020
நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன்
அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம்
மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம்
புறம் பல காணினும் போற்றகிலாரே

மேல்

#3021
இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே

மேல்

#3022
உணர்வதுவாயுமே உத்தமமாயும்
உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை
புணர்வதுவாயும் புல்லியதாயும்
உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே

மேல்

#3023
தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே

மேல்

#3024
ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தினின் உள்ளே

மேல்

#3025
பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை
குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே

மேல்

#3026
ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனது எய்தும்
சாயும் தனது வியாபகம் தானே

மேல்

#3027
நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை
வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே

மேல்

#3028
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை
கடலின் மலி திரை காணலும் ஆமே

மேல்

#3029
பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி
தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும்
இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம்
பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே

மேல்

#3030
உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே

மேல்

#3031
பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவனாய் நின்ற மாதவன் தானே

மேல்

#3032
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும்
ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின்றானே

மேல்

#3033
நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும்
காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன்
நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி
போக்கும் வரவும் புணர வல்லானே

மேல்

#3034
செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி
ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே

மேல்

#3035
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே

மேல்

#3036
புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்து நின்றானே

மேல்

#3037
விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன்
மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும்
தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர்
கண்ணவன் ஆகி கலந்து நின்றானே

மேல்

#3038
நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி
நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என
நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல்
நின்றனன் தானே வளம் கனி ஆயே

மேல்

#3039
புவனாபதி மிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர் பெரும் பாகன்
அவனே அரும் பல சீவனும் ஆகும்
அவனே இறை என மாலுற்றவாறே

மேல்

#3040
உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும்
விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும்
மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும்
கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே

மேல்

#3041
எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி
பண்ணும் திறனும் படைத்த பரமனை
கண்ணில் கவரும் கருத்தில் அது இது
உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே

மேல்

#3042
இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம்
உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே
திரு கொன்றை வைத்த செழும் சடையானே

மேல்

#3043
பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன்
செலவு அறிவார் இல்லை சேயன் அணியன்
அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி
பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே

மேல்

#3044
அது அறிவு ஆனவன் ஆதி புராணன்
எது அறியா வகை நின்றவன் ஈசன்
பொது அது ஆன புவனங்கள் எட்டும்
இது அறிவான் நந்தி எங்கள் பிரானே

மேல்

#3045
நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை
ஊரும் சகலன் உலப்பு_இலி தானே

மேல்

#3046
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே

மேல்

#3047
வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம்
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள்
வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே

மேல்

No comments:

Post a Comment

தொடர்பு படிவம்

Name

Email *

Message *