பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் 13 சருக்கங்கள், 72 புராணங்கள், 4272 பாடல்கள் திரு தெய்வச் சேக்கிழார் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐💐🌹🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻 |
---|
மேல்
காண்டம் 1 பாயிரம் @1 கடவுள் வாழ்த்து #1 உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர் மலி வேணியன் அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் #2 ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியை சாரும்-ஆல் தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள் மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ #3 எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி கட களிற்றை கருத்து உள் இருத்துவாம் #4 மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன் துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர் பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே #5 அளவு_இலாத பெருமையர் ஆகி அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன் #6 தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம் பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் #7 செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல் இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும் மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல் #8 மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம் சேயவன் திரு பேரம்பலம் செய்யா தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் ஆய சீர் அநபாயன் அரசு அவை #9 அருளின் நீர்மை திருத்தொண்டு அறிவரும் தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே #10 இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள் தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம் மேல்1.திருமலைச் சருக்கம் @1 திருமலைச் சிறப்பு #1 பொன்னின் வெண் திருநீறு புனைந்து என பன்னும் நீள் பனி மால் வரை பால் அது தன்னை யார்க்கும் அறிவு அரியான் என்றும் மன்னி வாழ் கயிலை திரு மா மலை #2 அண்ணல் வீற்றிருக்க பெற்றது ஆதலின் நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் எண்_இல் மா தவம் செய்ய வந்து எய்திய புண்ணியம் திரண்டு உள்ளது போல்வது #3 நிலவும் எண்_இல் தலங்களும் நீடு ஒளி இலகு தண் தளிர் ஆக எழுந்தது ஓர் உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் மலரும் வெண் மலர் போல்வது அ மால் வரை #4 மேன்மை நான்_மறை நாதமும் விஞ்சையர் கான வீணையின் ஓசையும் கார் எதிர் தான மாக்கள் முழக்கமும் தா_இல் சீர் வான துந்துபி ஆர்ப்பும் மருங்கு எலாம் #5 பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ் அனித கோடி அணி முடி மாலையும் புனித கற்பக பொன் அரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம் #6 நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம் பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறள் சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம் #7 நாயகன் கழல் சேவிக்க நான்_முகன் மேய காலம் அலாமையின் மீண்டு அவன் தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று ஆய அன்னமும் காணாது அயர்க்கும்-ஆல் #8 காதில் வெண்_குழையோன் கழல் தொழ நெடியோன் காலம் பார்த்திருந்ததும் அறியான் சோதி வெண் கயிலை தாழ்வரை முழையில் துதிக்கையோன் ஊர்தியை கண்டு மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் ஆதி ஏனம்-அதாய் இடக்கலுற்றான் என்று அதனை வந்து அணைதரும் கலுழன் #9 அரம்பையர் ஆடல் முழவுடன் மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடு உயர் வழியினால் ஏறி புரந்தரன் முதலாம் கடவுளர் போற்ற பொலிவது அ திருமலை புறம்பு #10 வேத நான்_முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்_இலார் மற்றும் காதலால் மிடைந்த முதல் பெரும் தடையாம் கதிர் மணி கோபுரத்து உள்ளான் பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிட பொதுவில் நின்று ஆடும் நாதனார் ஆதி தேவனார் கோயில் நாயகன் நந்தி எம்பெருமான் #11 நெற்றியின் கண்ணர் நால் பெருந்தோளர் நீறு அணி மேனியர் அநேகர் பெற்றம் மேல் கொண்ட தம்பிரான் அடியார் பிஞ்ஞகன்-தன் அருள் பெறுவார் மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் கற்றை வார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அ கயிலை மால் வரை-தான் #12 கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி ஐயர் வீற்றிருக்கும் தன்மையினாலும் அளப்பு_அரும் பெருமையினாலும் மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் செய்ய கோல் அபயன் திரு மனத்து ஓங்கும் திரு கயிலாய நீள் சிலம்பு #13 அன்னதன் திரு தாழ் வரையின் இடத்து இன்ன தன்மையன் என்று அறியா சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் உன்ன_அரும் சீர் உப மன்னிய முனி #14 யாதவன் துவரைக்கு இறை ஆகிய மாதவன் முடி மேல் அடி வைத்தவன் பூதநாதன் பொருவு_அரும் தொண்டினுக்கு ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் #15 அத்தர் தந்த அருள் பால்_கடல் உண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் பத்தர் ஆய முனிவர் பல் ஆயிரவர் சுத்த யோகிகள் சூழ இருந்துழி #16 அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம் இங்கு இது என்-கொல் அதிசயம் என்றலும் #17 அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை வந்த நாவலர் கோன் புகழ் வன் தொண்டன் எந்தையார் அருளால் அணைவான் என #18 கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிட செய்ய நீள் சடை மா முனி செல்வுழி ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் #19 சம்புவின் அடி தாமரை போதுஅலால் எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் என தம்பிரானை தன் உள்ளம் தழீஇயவன் நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் #20 என்று கூற இறைஞ்சி இயம்புவார் வென்ற பேர் ஒளியார் செய் விழு தவம் நன்று கேட்க விரும்பும் நசையினோம் இன்று எமக்கு உரைசெய்து அருள் என்றலும் #21 உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான் வெள்ள நீர் சடை மெய்ப்பொருள் ஆகிய வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் அள்ளும் நீறும் எடுத்து அணைவான் உளன் #22 அன்னவன் பெயர் ஆலாலசுந்தரன் முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன்-தனக்கு இன்ன ஆம் எனும் நாண் மலர் கொய்திட துன்னினான் நந்தனவன சூழலில் #23 அங்கு முன் எமை ஆளுடை நாயகி கொங்கு சேர் குழற்கு ஆம் மலர் கொய்திட திங்கள் வாள் முக சேடியர் எய்தினார் பொங்குகின்ற கவின் உடை பூவைமார் #24 அந்தம்_இல் சீர் அனிந்திதை ஆய் குழல் கந்தம் மாலை கமலினி என்பவர் கொந்து கொண்ட திரு மலர் கொய்வுழி வந்து வானவர் ஈசர் அருள் என #25 மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட தீது_இலா திருத்தொண்ட தொகை தர போதுவான் அவர் மேல் மனம் போக்கிட காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் #26 முன்னம் ஆங்கு அவன் மொய்ம் முகை நாள் மலர் என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன பன் மலர் கொய்து செல்ல பனி மலர் அன்னம் அன்னவரும் கொண்டு அகன்ற பின் #27 ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி மீது தோன்றி அ மெல்லியலார் உடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என #28 கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான் செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் மையல் மானுடமாய் மயங்கும் வழி ஐயனே தடுத்தாண்டு அருள்செய் என #29 அங்கணாளன் அதற்கு அருள்செய்த பின் நங்கைமாருடன் நம்பி மற்று அ திசை தங்கு தோற்றத்தில் இன்புற்று சாரும் என்று அங்கு அவன் செயல் எல்லாம் அறைந்தனன் #30 அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர் பந்த மானுட பால்படு தென் திசை இந்த வான் திசை எட்டினும் மேல் பட வந்த புண்ணியம் யாது என மாதவன் #31 பொருவு_அரும் தவத்தான் புலி காலனாம் அரு முனி எந்தை அர்ச்சித்தும் உள்ளது பெருமை சேர் பெரும்பற்றப்புலியூர் என்று ஒருமையாளர் வைப்பு ஆம் பதி ஓங்கும்-ஆல் #32 அ திருப்பதியில் நமை ஆளுடை மெய் தவ_கொடி காண விருப்புடன் அத்தன் நீடிய அம்பலத்து ஆடும் மற்று இ திறம் பெறலாம் திசை எ திசை #33 பூதம் யாவையின் உள் அலர் போது என வேத மூலம் வெளிப்படும் மேதினி காதல் மங்கை இதய கமலம் ஆம் மாது_ஒர்_பாகனார் ஆரூர் மலர்ந்தது-ஆல் #34 எம் பிராட்டி இ ஏழ்_உலகு ஈன்றவள் தம் பிரானை தனி தவத்தால் எய்தி கம்பை ஆற்றில் வழிபடு காஞ்சி என்று உம்பர் போற்றும் பதியும் உடையது #35 நங்கள் நாதனாம் நந்தி தவம் செய்து பொங்கு நீடு அருள் எய்திய பொற்பது கங்கை வேணி மலர கனல் மலர் செங்கையாளர் ஐயாறும் திகழ்வது #36 தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை ஈசர் தோணிபுரத்துடன் எங்கணும் பூசனைக்கு பொருந்தும் இடம் பல பேசில் அ திசை ஒவ்வா பிற திசை #37 என்று மா முனி வன் தொண்டர் செய்கையை அன்று சொன்னபடியால் அடியவர் தொன்று சீர் திருத்தொண்டத்தொகை விரி இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன் #38 மற்று இதற்கு பதிகம் வன் தொண்டர்-தாம் புற்று இடத்து எம் புராணர் அருளினால் சொற்ற மெய் திருத்தொண்டத்தொகை என பெற்ற நற்பதிகம் தொழப்பெற்றதாம் #39 அந்த மெய் பதிகத்து அடியார்களை நம்-தம் நாதனாம் நம்பியாண்டார்நம்பி புந்தி ஆர புகன்ற வகையினால் வந்தவாறு வழாமல் இயம்புவாம் #40 உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் அலகு_இல் சீர் நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்-தம் கூட்டம் நிறைந்து உறை குலவு தண் புனல் நாட்டு அணி கூறுவாம் மேல் @2 திருநாட்டுச் சிறப்பு #1 பாட்டு_இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள் கோட்டு உயர் பனி_வரை குன்றின் உச்சியில் சூட்டிய வளர் புலி சோழர் காவிரி நாட்டு இயல்பு அதனை யான் நவிலல் உற்றனன் #2 ஆதி மா தவ முனி அகத்தியன் தரு பூத நீர் கமண்டலம் பொழிந்த காவிரி மாதர் மண் மடந்தை பொன் மார்பில் தாழ்ந்தது ஓர் ஓத நீர் நித்தில தாமம் ஒக்கும்-ஆல் #3 சைய மால் வரை பயில் தலைமை சான்றது செய்ய பூ_மகட்கு நல் செவிலி போன்றது வையகம் பல் உயிர் வளர்த்து நாள்-தொறும் உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது #4 மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும் சால்பினால் பல் உயிர் தருதல் மாண்பினால் கோல நல் குண்டிகை தாங்கும் கொள்கையால் போலும் நான்_முகனையும் பொன்னி மா நதி #5 திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில் பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால் எங்கள் நாயகன் முடி மிசை நின்றே இழி கங்கை ஆம் பொன்னி ஆம் கன்னி நீத்தமே #6 வண்ணம் நீள் வரை தர வந்த மேன்மையால் எண்_இல் பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால் அண்ணல் பாகத்தை ஆளுடையநாயகி உள் நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது #7 வம்பு உலாம் மலர் நீரால் வழிபட்டு செம்பொன் வார் கரை எண்_இல் சிவ ஆலயத்து எம்பிரானை இறைஞ்சலின் ஈர்ம் பொன்னி உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்கும்-ஆல் #8 வாச நீர் குடை மங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர் தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே #9 மா இரைத்து எழுந்து ஆர்ப்ப வரை தரு பூ விரித்த புது மது பொங்கிட வாவியின் பொலி நாடு வளம் தர காவிரி புனல் கால் பரந்து ஓங்கும்-ஆல் #10 ஒண் துறை தலை மா மத கூடு போய் மண்டு நீர் வயல் உள் புக வந்து எதிர்கொண்ட மள்ளர் குரைத்த கை ஓசை போய் அண்டர் வானத்தின் அ புறம் சாரும்-ஆல் #11 மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும் சீத நீர் முடி சேர்ப்பவர் செய்கையும் ஓதையார் செய் உழுநர் ஒழுக்கமும் காதல் செய்வது ஓர் காட்சி மலிந்தவே #12 உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு இழுது செய்யினுள் இந்திர தெய்வதம் தொழுது நாறு நடுவார் தொகுதியே பழுது_இல் காவிரி நாட்டின் பரப்பு எலாம் #13 மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய கண்டு உழவர் பதம் காட்ட களை களையும் கடைசியர்கள் தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார் வண்டு அலையும் குழல் அலைய மட நடையின் வரம்பு அணைவார் #14 செங்குவளை பறித்து அணிவார் கரும் குழல் மேல் சிறை வண்டை அங்கை மலர்களை கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப பொங்கு மலர் கமலத்தின் புது மது வாய் மடுத்து அயர்வார் #15 கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் அரும்பு அல்ல முலை என்ன அமுது அல்ல மொழி என்ன வரும் பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள் வயல் எல்லாம் #16 கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி வியல் வாய் வெள் வளை தரள மலர் வேரி உலை பெய்து அங்கு அயல் ஆமை அடுப்பு ஏற்றி அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும் வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரம்பு எல்லாம் #17 காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு மாடு எல்லாம் கருங்குவளை வயல் எல்லாம் நெருங்கு வளை கோடு எல்லாம் மட அன்னம் குளம் எல்லாம் கடல் அன்ன நாடு எல்லாம் நீர் நாடு-தனை ஒவ்வா நலம் எல்லாம் #18 ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்_மறை ஓதையும் வேலை ஓசையின் மிக்கு விரவும்-ஆல் #19 அன்னம் ஆடும் அகன் துறை பொய்கையில் துன்னும் மேதி படிய துதைந்து எழும் கன்னி வாளை கமுகின் மேல் பாய்வன மன்னு வான் மிசை வானவில் போலும்-ஆல் #20 காவினில் பயிலும் களி வண்டு இனம் வாவியில் படிந்து உண்ணும் மலர் மது மேவி அ தடம் மீது எழ பாய் கயல் தாவி அ பொழிலின் கனி சாடும்-ஆல் #21 சாலி நீள் வயலின் ஓங்கி தந்நிகர் இன்றி மிக்கு வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் #22 பத்தியின்-பாலர் ஆகி பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தம் இல் கூடினார்கள் தலையினால் வணங்கு மா போல் மொய்த்த நீள் பத்தியின்-பால் முதிர் தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் #23 அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் விரி மலர் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார் #24 சாலியின் கற்றை துற்ற தட வரை முகடு சாய்த்து கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம் ஆலிய முகிலின் கூட்டம் அரு_வரை சிமய சாரல் மேல் வலம்கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே #25 வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு #26 அரசு கொள் கடன்கள் ஆற்றி மிகுதி கொண்டு அறங்கள் பேணி பரவு_அரும் கடவுள் போற்றி குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி விளங்கிய குடிகள் ஓங்கி வரை புரை மாடம் நீடி மலர்ந்து உள பதிகள் எங்கும் #27 கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி பெரும் பெயர் சாலை-தோறும் பிறங்கிய புகையோ வானின் வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் #28 நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் கோளிசாலம் தமாலம் குளிர் மலர் குரவம் எங்கும் தாள் இரும் போந்து சந்து தண் மலர் நாகம் எங்கும் நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் #29 சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் சாதி மாலதிகள் எங்கும் தண் தளிர் நறவம் எங்கும் மாதவி சரளம் எங்கும் வகுள சண்பகங்கள் எங்கும் போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் #30 மங்கல வினைகள் எங்கும் மணம் செய் கம்பலைகள் எங்கும் பங்கய வதனம் எங்கும் பண்களின் மழலை எங்கும் பொங்கு ஒளி கலன்கள் எங்கும் புது மலர் பந்தர் எங்கும் செம் கயல் பழனம் எங்கும் திருமகள் உறையுள் எங்கும் #31 மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும் யாகமும் சடங்கும் எங்கும் இன்பமும் மகிழ்வும் எங்கும் யோகமும் தவமும் எங்கும் ஊசலும் மறுகும் எங்கும் போகமும் பொலிவும் எங்கும் புண்ணிய முனிவர் எங்கும் #32 பண் தரு விபஞ்சி எங்கும் பாத செம் பஞ்சி எங்கும் வண்டு அறை குழல்கள் எங்கும் வளர் இசை குழல்கள் எங்கும் தொண்டர்-தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும் தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் #33 மாடு போதகங்கள் எங்கும் வண்டு போது அகங்கள் எங்கும் பாடும் அம் மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும் நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் #34 வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா தனயரும் மனையில் தப்பா நீதிய புள்ளும் மாவும் நிலத்து இருப்பு உள்ளும் ஆவும் ஓதிய எழுத்து ஆம் அஞ்சும் உறுபிணி வர தாம் அஞ்சும் #35 நற்றமிழ் வரைப்பின் ஓங்கும் நாம் புகழ் திருநாடு என்றும் பொன் தடம் தோளால் வையம் பொது கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அநபாயன் பொன் குடை நிழல் குளிர்வது என்றால் மற்று அதன் பெருமை நம்மால் வரம்பு உற விளம்பல் ஆமோ மேல் @3 திருநகரச் சிறப்பு #1 சொன்ன நாட்டிடை தொன்மையில் மிக்கது மன்னும் மா மலராள் வழிபட்டது வன்னி ஆறு மதி பொதி செம் சடை சென்னியார் திருவாரூர் திருநகர் #2 வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் மணி முழவு ஓசையும் கீத ஓசையுமாய் கிளர்வுஉற்றவே #3 பல்லியங்கள் பரந்த ஒலியுடன் செல்வ வீதி செழு மணி தேர் ஒலி மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி எல்லை இன்றி எழுந்து உள எங்கணும் #4 மாட மாளிகை சூளிகை மண்டபம் கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன #5 அங்கு உரைக்கு என் அளவு அ பதி இலார் தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின் பங்கினாள் திரு சேடி பரவை ஆம் மங்கையார் அவதாரம் செய் மாளிகை #6 படர்ந்த பேர் ஒளி பல் மணி வீதி பார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் நடந்த செந்தாமரை அடி நாறும்-ஆல் #7 செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் குங்குமத்தின் குழம்பை அவர் குழல் பொங்கு கோதையின் பூம் துகள் வீழ்ந்து உடன் அங்கண் மேவி அளறு புலர்த்தும்-ஆல் #8 உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் #9 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் அளக்கர் போன்றன ஆவண வீதிகள் #10 ஆரணங்களே அல்ல மறுகிடை வாரணங்களும் மாறி முழங்கும்-ஆல் சீர் அணங்கிய தேவர்களே அலால் தோரணங்களில் தாமமும் சூழும்-ஆல் #11 தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர் வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர் வீழ்ந்த இன்ப துறையுள் விரவுவார் சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் #12 நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி மலர்_மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து அலகு_இல் சீர் திருவாரூர் விளங்கும்-ஆல் #13 அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான் துன்னு செங்கதிரோன் வழி தோன்றினான் மன்னு சீர் அநபாயன் வழி முதல் மின்னும் மா மணி பூண் மனு வேந்தனே #14 மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம் கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான் விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள் எண்_இலாதன மாண இயற்றினான் #15 கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான் #16 பொங்கு மா மறை புற்று இடம் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான் துங்க ஆகமம் சொன்ன முறைமை-ஆல் #17 அறம் பொருள் இன்பம் ஆன அற_நெறி வழாமல் புல்லி மறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில் சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன் உலகம் போற்ற பேர் அரி குருளை அன்னான் #18 தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளம் குமரன் நாளும் சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி கவன வாம் புரவி யானை தேர் படை தொழில்கள் கற்று பவ முயன்று அதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான் #19 அளவு_இல் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன் #20 திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில்-நின்று மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் பொங்கிய தானை சூழ தேர் மிசை பொலிந்து போந்தான் #21 பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் விரை நறும் குழலார் சிந்தும் வெள் வளை ஒரு-பால் மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒரு-பால் வென்றி அரசு இளம் குமரன் போதும் அணி மணி மாட வீதி #22 தனிப்பெரும் தருமம் தான் ஓர் தயா இன்றி தானை மன்னன் பனிப்பு இல் சிந்தையினில் உண்மை பான்மை சோதித்தால் என்ன மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் புனிற்று இளம் கன்று துள்ளி போந்தது அ மறுகின் ஊடே #23 அம் புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே உம்பரின் அடைய கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடி வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுக்குற்று வீழும் #24 மற்று அது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாள செற்ற என் செய்கேன் என்று தேரில்-நின்று இழிந்து வீழ்ந்தான் #25 அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்து சோரும் நில மிசை கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும் மலர் தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு உலகில் இ பழி வந்து எய்த பிறந்தவா ஒருவன் என்பான் #26 வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில் எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன் சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான் #27 தன் உயிர் கன்று வீய தளர்ந்த ஆ தரியாது ஆகி முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன் உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில் பொன் அணி மணியை சென்று கோட்டினால் புடைத்தது அன்றே #28 பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் வழி திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்தி கழுத்து அணி மணியின் ஆர்ப்போ என்ன தன் கடை முன் கோளா தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது #29 ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து பூம் கொடி வாயில் நண்ண காவலர் எதிரே போற்றி ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி இறைவ நின் கொற்ற வாயில் தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் #30 மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் #31 வளவ நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடும் தேர் மேல் ஏறி அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்காலிடை புகுந்து இறந்தது ஆக தளர்வுறும் இ தாய் வந்து விளைத்தது இ தன்மை என்றான் #32 அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் வெவ் விடம் தலை கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்கு இ வினை விளைந்தவாறு என்று இடர்உறும் இரங்கும் ஏங்கும் செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் #33 மன் உயிர் புரந்து வையம் பொது கடிந்து அறத்தில் நீடும் என் நெறி நன்று-ஆல் என்னும் என் செய்தால் தீரும் என்னும் தன் இளம் கன்று காணா தாய் முகம் கண்டு சோரும் அ நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று-ஆல் #34 மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கி சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்கு தீர்வு அன்று-ஆல் கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம் என்றார் #35 வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டு குழ கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்து ஆமோ இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இ சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ #36 மா நில காவலன் ஆவான் மன் உயிர் காக்கும்-காலை தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனம் மிகு பகை திறத்தால் கள்வரால் உயிர் தம்மால் ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன்ஓ #37 என் மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனை கொல்வேன் ஆனால் தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும் வார்த்தை மன் உலகில் பெற மொழிந்தீர் மந்திரிகள் வழக்கு என்றான் #38 என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது-ஆல் பொன்றுவித்தல் மரபு அன்று மறை மொழிந்த அறம் புரிதல் தொன்று தொடு நெறி அன்றோ தொல் நிலம் காவல என்றார் #39 அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியினிடை தோய்ந்த செவ் வண்ண கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான் #40 அ உரையில் வரும் நெறிகள் அவை நிற்க அற_நெறியின் செவ்விய உண்மை திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர் எ உலகில் எ பெற்றம் இ பெற்றி தாம் இடரால் வெவ் உயிர்த்து கதறி மணி எறிந்து விழுந்தது விளம்பீர் #41 போற்றி இசைத்து புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர் தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணி பொருள்தான் ஆற்றவும் மற்று அவன் கொல்லும் அதுவேயாம் என நினை-மின் #42 என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இ ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம் என அனகன் அரும்_பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார் #43 மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி-தன்னை முன் இவனை அ வீதி முரண் தேர்க்கால் ஊர்க என அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்ப தன்னுடைய குல மகனை தான் கொண்டு மறுகு அணைந்தான் #44 ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான் தருமம் தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன் மருமம் தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் #45 தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது மண்ணவர் கண்_மழை பொழிந்தார் வானவர் பூ_மழை சொரிந்தார் அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல் விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப்பெருமான் #46 சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் இடம் மருங்கில் உமையாளும் எ மருங்கும் பூத கணம் புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான் #47 அ நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அ அரசன் மன் உரிமை தனி கன்றும் மந்திரியும் உடன் எழலும் இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ #48 அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன் மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே #49 பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் வென்றி மனுவேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்து சென்று அருளும் பெரும் கருணை திறம் கண்டு தன் அடியார்க்கு என்றும் எளிவரும் பெருமை ஏழ்_உலகும் எடுத்து ஏத்தும் #50 இனைய வகை அற_நெறியில் எண்_இறந்தோர்க்கு அருள்புரிந்து முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ அனைய அதனுக்கு அக மலராம் அறவனார் பூங்கோயில் மேல் @4 திருக்கூட்டச் சிறப்பு #1 பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்த பூங்கோயிலில் சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் மூது எயில் திரு வாயில் முன் ஆயது #2 பூவார் திசை_முகன் இந்திரன் பூ மிசை மா வாழ் அகலத்து மால் முதல் வானவர் ஓவாது எவரும் நிறைந்து உறைந்து உள்ளது தேவாசிரியன் எனும் திருக்காவணம் #3 அரந்தை தீர்க்கும் அடியவர் மேனி மேல் நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால் புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் பரந்த ஆயிரம் பால்_கடல் போல்வது #4 அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் அகிலலோகமும் ஆளற்கு உரியர் என்று அகிலலோகத்து உளார்கள் அடைதலின் அகிலலோகமும் போல்வது அதனிடை #5 அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால் மெய் தழைந்து விதிர்ப்புஉறு சிந்தையார் கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார் இ திறத்தவர் அன்றியும் எண்_இலார் #6 மாசு_இலாத மணி திகழ் மேனி மேல் பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள் தேசினால் எ திசையும் விளக்கினார் பேச ஒண்ணா பெருமை பிறங்கினார் #7 பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாது_ஓர்_பாகர் மலர் தாள் மறப்பு இலார் ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார் கோது_இலாத குண பெரும் குன்று ஆனார் #8 கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் #9 ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார் ஈர அன்பினர் யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ #10 வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர் தாண்டவ பெருமான் தனி தொண்டர்கள் நீண்ட தொல் புகழார்-தம் நிலைமையை ஈண்டு வாழ்த்துகேன் என்ன அறிந்து ஏத்துகேன் #11 இந்த மா தவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம் இல் புகழ் ஆலாலசுந்தரன் சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம் மேல் @5 தடுத்தாட்கொண்ட புராணம் #1 கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு மங்கையர் வதன சீத மதி இரு மருங்கும் ஓடி செம் கயல் குழைகள் நாடும் திருமுனைப்பாடி நாடு #2 பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில் அரு_மறை சைவம் ஓங்க அருளினால் அவதரித்த மருவிய தவத்தால் மிக்க வளம் பதி வாய்மை குன்றா திருமறையவர்கள் நீடும் திருநாவலூர் ஆம் அன்றே #3 மாது_ஒரு_பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால் தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் #4 தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பிஆரூரர் என்றே நாமமும் சாற்றி மிக்க ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில் #5 நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு பரவு_அரும் காதல் கூர பயந்தவர்-தம்-பால் சென்று விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்று தங்கள் அரசிளம்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார் #6 பெருமை சால் காதல் பிள்ளையாய் பின்னும் தங்கள் வருமுறை மரபில் வைகி வளர்ந்து மங்கலம் செய் கோலத்து அரு_மறை முந்நூல் சாத்தி அளவு_இல் தொல் கலைகள் ஆய்ந்து திரு மலி சிறப்பின் ஓங்கி சீர் மண பருவம் சேர்ந்தார் #7 தந்தையார் சடையனார்-தம் தனி திரு மகற்கு சைவ அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப வந்த தொல் சிறப்பின் புத்தூர் சடங்கவி மறையோன்-தன்-பால் செம் திரு அனைய கன்னி மண திறம் செப்பி விட்டார் #8 குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார் நலம் மிகு முதியோர் சொல்ல சடங்கவி நன்மை ஏற்று மலர் தரு முகத்தன் ஆகி மணம் புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான் #9 மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை பெற்றவர்-தம்-பால் சென்று சொன்ன பின் பெருகு சிந்தை உற்றது ஓர் மகிழ்ச்சி எய்தி மண_வினை உவந்து சாற்றி கொற்றவர் திருவுக்கு ஏற்ப குறித்து நாள் ஓலை விட்டார் #10 மங்கலம் பொலிய செய்த மண_வினை ஓலை ஏந்தி அம் கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டி கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து பங்கய_வதனிமாரும் மைந்தரும் பணிந்து கொண்டார் #11 மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சியால் பொலிந்து தோன்ற போற்றிய தொழிலர் ஆகி இகழ்ச்சி ஒன்றானும் இன்றி ஏந்து பூ மாலை பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி நீள் முளை சாத்தினார்கள் #12 மண_வினைக்கு அமைந்த செய்கை மாதினை பயந்தோர் செய்ய துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை புணர் மண திருநாள் முன்னால் பொருந்திய விதியினாலே பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் #13 மா மறை விதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றி தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப தே மரு தொடையல் மார்பன் திருமண_கோலம் காண காமுறு மனத்தான் போல கதிரவன் உதயம் செய்தான் #14 காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன வேலை வந்து அணையும் முன்னர் விதி மண_கோலம் கொள்வான் நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையும் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான் #15 வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் ஆசனத்து அணி நீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள் #16 அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் #17 தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் ஆன தண் பனி நீர் கூட்டி அமைந்த சந்தன சேறு ஆட்டி மான் மத சாந்து தோய்ந்த மங்கல கலவை சாத்தி பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் #18 தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமைய சாத்தி மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் நாம நீள் கலன்கள் சாத்தி நன் மண_கோலம் கொண்டார் #19 மன்னவர் திருவும் தங்கள் வைதிக திருவும் பொங்க நல் நகர் விழவு கொள்ள நம்பிஆரூரர் நாதன் தன் அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்தி பொன் அணி மணி ஆர் யோக புரவி மேல் கொண்டு போந்தார் #20 இயம் பல துவைப்ப எங்கும் ஏத்து ஒலி எடுப்ப மாதர் நயந்து பல்லாண்டு போற்ற நான்_மறை ஒலியின் ஓங்க வியந்து பார் விரும்ப வந்து விரவினர்க்கு இன்பம் செய்தே உயர்ந்த வாகன யானங்கள் மிசை கொண்டார் உழையர் ஆனார் #21 மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி #22 அரும் கடி எழுந்த போழ்து இன் ஆர்த்த வெள் வளைகளாலும் இரும் குழை மகரத்தாலும் இலங்கு ஒளி மணிகளாலும் நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் கரும் கடல் கிளர்ந்தது என்ன காட்சியில் பொலிந்தது அன்றே #23 நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க பெரும் குடை மிடைந்து செல்ல பிணங்கு பூம் கொடிகள் ஆட அரும் கடி மணம் வந்து எய்த அன்று-தொட்டு என்றும் அன்பில் வரும் குல மறையோர் புத்தூர் மணம் வந்த புத்தூர் ஆம்-ஆல் #24 நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார் #25 கண்கள் எண்_இலாத வேண்டும் காளையை காண என்பார் பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார் மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் #26 ஆண் தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார் தாண்டிய பரியும் நம்-பால் தகுதியின் நடந்தது என்பர் பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப சென்றார் #27 வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச திருமண பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் பெரு மழை குலத்தின் ஆர்ப்ப பரி மிசை இழிந்து பேணும் ஒரு மண திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன் #28 ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த சாலும் மொழியால் வழி தடுத்து அடிமை கொள்வான் மேல் உற எழுந்து மிகு கீழ் உற அகழ்ந்து மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார் #29 கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ் புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க #30 காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழ சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க #31 பண்டி சரி கோவண உடை பழமை கூர கொண்டது ஓர் சழங்கல் உடை ஆர்ந்து அழகு கொள்ள வெண் துகிலுடன் குசை முடிந்துவிடு வேணு தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள #32 மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி #33 வந்து திரு மா மறை மண_தொழில் தொடங்கும் பந்தரிடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான் #34 என்று உரை செய் அந்தணனை எண்_இல் மறையோரும் மன்றல் வினை மங்கல மடங்கல் அனையானும் நன்று உமது நல்வரவு நங்கள் தவம் என்றே நின்றது இவண் நீர் மொழி-மின் நீர் மொழிவது என்றார் #35 பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் முன் உடையது ஓர் பெரு வழக்கினை முடித்தே நின் உடைய வேள்வியினை நீ முயல்தி என்றான் #36 நெற்றி_விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான் உற்றது ஓர் வழக்கு என்னிடை நீ உடையது உண்டேல் மற்ற அது முடித்தல் அலது யான் வதுவை செய்யேன் முற்ற இது சொல்லுக என எல்லை முடிவு இல்லான் #37 ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது என்றான் தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான் #38 என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் நின்றார் இருந்தார் இவன் என் நினைந்தான்-கொல் என்று சென்றார் வெகுண்டார் சிரித்தார் திரு நாவல் ஊரர் நன்று-ஆல் மறையோன் மொழி என்று எதிர் நோக்கி நக்கார் #39 நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான் மிசை உத்தரிய துகில் தாங்கி மேல் சென்று அ காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால் இ காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏடா என்ன #40 மாசு_இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி ஆசு_இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் #41 பித்தனும் ஆக பின்னும் பேயனும் ஆக நீ இன்று எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன் அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும் என்றார் #42 கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும் உண்டு ஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை #43 ஓலை காட்டு என்று நம்பி உரைக்க நீ ஓலை காணல் பாலையோ அவை முன் காட்ட பணி செயல் பாலை என்ற வேலை இல் நாவல் ஊரர் வெகுண்டு மேல் விரைந்து சென்று மால் அயன் தொடராதானை வலிந்து பின்தொடரல்உற்றார் #44 ஆவணம் பறிக்க சென்ற அளவினில் அந்தணாளன் காவணத்திடையே ஓட கடிது பின்தொடர்ந்து நம்பி பூவணத்தவரை உற்றார் அவர் அலால் புரங்கள் செற்ற ஏவண சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார் #45 மறைகள் ஆயின முன் போற்றி மலர் பதம் பற்றி நின்ற இறைவனை தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை என கீறி இட்டார் முறை இட்டான் முடிவு இலாதான் #46 அரு_மறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அறியான் பற்றி ஒரு முறை முறையோ என்ன உழை நின்றார் விலக்கி இந்த பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திருமறை முனிவரே நீர் எங்கு உளீர் செப்பும் என்றார் #47 என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது அன்று இந்த வெண்ணெய்நல்லூர் அது நிற்க அறத்து ஆறு இன்றி வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி நின்று இவன் கிழித்து தானே நிரப்பினான் அடிமை என்றான் #48 குழை மறை காதினானை கோது_இல் ஆரூரர் நோக்கி பழைய மன்று ஆடி போலும் இவன் என்று பண்பின் மிக்க விழைவுஉறு மனமும் பொங்க வெண்ணெய் நல் ஊராயேல் உன் பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார் #49 வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ போதினும் நன்று மற்ற புனித நான்_மறையோர் முன்னர் ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் சாதிப்பன் என்று முன்னே தண்டு முன் தாங்கி சென்றான் #50 செல்லும் மா மறையோன்-தன் பின் திரி முக காந்தம் சேர்ந்த வல் இரும்பு அணையும் மா போல் வள்ளலும் கடிது சென்றார் எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல் ஊரை நண்ணி #51 வேதபாரகரின் மிக்கார் விளங்கு பேரவை முன் சென்று நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான் காதல் என் அடியான் என்ன காட்டிய ஓலை கீறி மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் #52 அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் இந்த மா நிலத்தில் இல்லை என் சொன்னாய் ஐயா என்றார் வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தை-தன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான் #53 இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று விசையினால் வலிய வாங்கி கிழிப்பது வெற்றி ஆமோ தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் அசைவு இல் ஆரூரர் எண்ணம் என் என்றார் அவையில் மிக்கார் #54 அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை தனக்கு வேறு அடிமை என்று இ அந்தணன் சாதித்தானேல் மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை என் சொல்லுகேன் யான் எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் #55 அ உரை அவையின் முன்பு நம்பிஆரூரர் சொல்ல செவ்விய மறையோர் நின்ற திரு_மறை முனியை நோக்கி இ உலகின் கண் நீர் இன்று இவரை உன் அடிமை என்ற வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் #56 ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான் #57 வல்லையேல் காட்டு இங்கு என்ன மறையவன் வலிசெய்யாமல் சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்ல செல்வ நான்கு_மறையோய் நாங்கள் தீங்கு உற ஒட்டோம் என்றார் அல்லல் தீர்த்து ஆள நின்றான் ஆவணம் கொண்டு சென்றார் #58 இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ அருள் பெறு கரணத்தானும் ஆவணம் தொழுது வாங்கி சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் #59 அரு_மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை பெரு முனி வெண்ணெய் நல்லூர் பித்தனுக்கு யானும் என்-பால் வரு முறை மரபு உளோரும் வழி தொண்டு செய்தற்கு ஓலை இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து #60 வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் ஆசு_இலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் மாசு_இலா மறையோர் ஐயா மற்று உங்கள் பேரனார்-தம் தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் #61 அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி வந்தது மொழி-மின் என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல் #62 திரண்ட மா மறையோர்-தாமும் திருநாவலூரர் கோ முன் மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை அரண் தரு காப்பில் வேறு ஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனி செயல் இல்லை என்றார் #63 நான்_மறை முனிவனார்க்கு நம்பிஆரூரர் தோற்றீர் பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பில் மிக்க மேன்மையோர் விளம்ப நம்பி விதி முறை இதுவே ஆகில் யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார் #64 திரு மிகு மறையோர் நின்ற செழு மறை முனியை நோக்கி அரு முனி நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமை சேர் பதியே ஆக பேசியது உமக்கு இ ஊரில் வரு முறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார் #65 பொருவு_அரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல திருவருள் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார் #66 எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி தம் பெரு விருப்பினோடு தனி தொடர்ந்து அழைப்ப மாதோடு உம்பரின் விடை மேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார் #67 முன்பு நீ நமக்கு தொண்டன் முன்னிய வேட்கை கூர பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார் #68 என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக மன்று உளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது என்றார் #69 எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும் விண்ணவர் பொழி பூ_மாரி மேதினி நிறைந்து விம்ம மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளி செய்வார் #70 மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மை சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் #71 தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும் பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன நாடிய மனத்தர் ஆகி நம்பிஆரூரர் மன்றுள் ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று #72 வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்ய கொண்ட கோது_இலா அமுதே இன்று உன் குண பெரும் கடலை நாயேன் யாதினை அறிந்து என் சொல்லி பாடுகேன் என மொழிந்தார் #73 அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளி செய்வார் முன்பு எனை பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற வன் பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலை பாடல்உற்றார் #74 கொத்து_ஆர்_மலர்_குழலாள் ஒரு கூறாய் அடியவர்-பால் மெய் தாயினும் இனியானை அ வியன் நாவலர் பெருமான் பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் இ தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார் #75 முறையால் வரு மதுரத்துடன் மொழி இ தளம் முதலில் குறையா நிலை மும்மை படி கூடும் கிழமையினால் நிறை பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால் இறையான் மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான் #76 சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன்-தனை இன்னும் பல் ஆறு உலகினில் நம் புகழ் பாடு என்று உறு பரிவில் நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன் எல்லா உலகு உய்ய புரம் எய்தான் அருள்செய்தான் #77 அயல் ஓர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் #78 நாவலர் கோன் ஆரூரன்-தனை வெண்ணெய் நல் ஊரில் மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டு அதன் பின் பூ அலரும் தடம் பொய்கை திருநாவலூர் புகுந்து தேவர் பிரான்-தனை பணிந்து திருப்பதிகம் பாடினார் #79 சிவன் உறையும் திரு துறையூர் சென்று அணைந்து தீ_வினையால் அவ நெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்கு தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் நின்று பவ நெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார் #80 புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்து அருள அலர் கொண்ட நறும் சோலை திரு துறையூர் அமர்ந்து அருளும் நிலவும் தண் புனலும் ஒளிர் நீள் சடையோன் திரு பாதம் மலர் கொண்டு போற்றி இசைத்து வந்தித்தார் வன் தொண்டர் #81 திரு துறையூர்-தனை பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும் பொருத்தம் ஆம் இடம் பலவும் புக்கு இறைஞ்சி பொன்புலியூர் நிருத்தனார் திரு கூத்து தொழுவதற்கு நினைவுற்று வருத்தம் மிகு காதலினால் வழி கொள்வான் மனம் கொண்டார் #82 மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் நிலவு பசும் புரவி நெடும் தேர் இரவி மேல் கடலில் செல அணையும் பொழுது அணைய திருவதிகை புறத்து அணைந்தார் #83 உடைய அரசு உலகு ஏத்தும் உழவார படை ஆளி விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அ நகரில் புகுதாதே மடை வளர் தண் புறம் பணையில் சித்தவட மடம் புகுந்தார் #84 வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் விரி திரை நீர் கெடில வட வீரட்டானத்து இறை தாள் பரிவு உடைய மனத்தினராய் புடை எங்கும் மிடைகின்ற பரிசனமும் துயில் கொள்ள பள்ளி அமர்ந்து அருளினார் #85 அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும் முது வடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே பொது மடத்தின் உள் புகுந்து பூம் தாரான் திரு முடி மேல் பதும மலர் தாள் வைத்து பள்ளிகொள்வார் போல் பயின்றார் #86 அ நிலை ஆரூரன் உணர்ந்து அரு_மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை என்ன திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் #87 அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட செம் கயல் பாய் தடம் புடைசூழ் திருநாவலூர் ஆளி இங்கு என்னை பலகாலும் மிதித்தனை நீ யார் என்ன கங்கை சடை கரந்த பிரான் அறிந்திலையோ என கரந்தான் #88 செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து தம்மானை அறியாத சாதியார் உளரே என்று அம்மானை திருவதிகை வீரட்டானத்து அமர்ந்த கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் #89 பொன் திரளும் மணி திரளும் பொரு கரி வெண் கோடுகளும் மின் திரண்ட வெண் முத்தும் விரை மலரும் நறும் குறடும் வன் திரைகளால் கொணர்ந்து திருவதிகை வழிபடலால் தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி #90 அங்கணரை அடி போற்றி அங்கு அகன்று மற்று அந்த பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன் மங்கல வேள்வியில் பண்டு வாமனனாய் மண் இரந்த செம் கண்அவன் வழி பட்ட திரு மாணி குழி அணைந்தார் #91 பரம்பொருளை பணிந்து தாள் பரவி போய் பணிந்தவர்க்கு வரம் தருவான் தினை நகரை வணங்கினர் வண் தமிழ் பாடி நரம்பு உடை யாழ் ஒலி முழவின் நாத ஒலி வேத ஒலி அரம்பையர்-தம் கீத ஒலி அறா தில்லை மருங்கு அணைந்தார் #92 தேம அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அம் கயல்கள் செங்கமல தண் பூ மலங்க எதிர் பாய்வன மாடே புள் அலம்பு திரை வெள் வளை வாவி தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி #93 நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம் புறம்பணை கடந்து புகுந்தார் #94 வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப்பலாசொடு செருந்தி மந்தாரம் கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்தி கரம் வீரம் மிடைந்த பல் மலர் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ #95 இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து நவின்று அருள் சிலம்பு ஒலி போற்றும் நான்_மறை பதியை நாளும் வணங்க வலம்கொள்வது போல் புடை குழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும் தடம் மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சி தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் #96 மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன சென்று சென்று முரல்கின்றது கண்டு சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார் #97 பார் விளங்க வளர் நான்_மறை நாதம் பயின்ற பண்பு மிக வெண் கொடி ஆடும் சீர் விளங்கு மணி நா ஒலியாலும் திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் தார் விளங்கு வரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தர திரு வாயில் முன் எய #98 அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர்வணங்கி மகிழ்ந்து பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொருவு இறந்த திரு வீதி புகு #99 அம் கண் மா மறை முழங்கும் மருங்கே ஆடல் அரம்பையர் அரங்கு முழங்கும் மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் வாச மாலைகளில் வண்டு முழங்கும் பொங்கும் அன்பு அருவி கண் பொழி தொண்டர் போற்றி இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும் திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் #100 போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு_இல ஓங்கி மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகை குலம் மிடைந்த பதாகை யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் #101 ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் மாடு தாமம் மணி வாயில்கள்-தோறும் மங்கல கலசம் வேதிகை-தோறும் சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் நீடு தண் புனல்கள் பந்தர்கள்-தோறும் நிறைந்த தேவர் கணம் நீளிடை-தோறும் #102 எண்_இல் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லை_இல் அழகு சொல்லிய எல்லாம் மண்ணில் இ பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகி புண்ணிய புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி #103 மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி சீல மா முனிவர் சென்று முன் துன்னி திரு பிரம்பின் அடி கொண்டு திளைத்து காலம் நேர்படுதல் பார்த்து அயல் நிற்ப காதல் அன்பர் கண நாதர் புகும் பொன் கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் #104 பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் அரு_மறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்-தம் சிந்தையில் அலர்ந்த திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் #105 வையகம் பொலிய மறை சிலம்பு ஆர்ப்ப மன்று உளே மால் அயன் தேட ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த செய் தவ பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திரு களிற்றுப்படி மருங்கு #106 ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு_அரும் காரணங்கள் நான்கும் சிந்தையே ஆக குணம் ஒருமூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக இந்து வாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லை_இல் தனி பெரும் கூத்தின் வந்த பேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறு_இலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் #107 தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலி-தாம் இன்பம் ஆம் என்று கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து பண்ணினால் நீடி அறிவு_அரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் #108 தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனி பெரும் தாண்டவம் புரிய எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறி புனல் மறி திரை பொன்னி மடுத்த நீள் வண்ண பண்ணை ஆரூரில் வருக நம்-பால் என வானில் அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் #109 ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அ பணி சென்னி மேல் கொண்டு சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு மாடு பேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து நீடு வான் பணிய உயர்ந்த பொன் வரை போல் நிலை எழு கோபுரம் கடந்து #110 நின்று கோபுரத்தை நிலமுற பணிந்து நெடும் திரு வீதியை வணங்கி மன்றல் ஆர் செல்வ மறுகின் ஊடு ஏகி மன்னிய திருப்பதி-அதனில் தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி கொன்றை வார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிட திரு நதி கடந்தார் #111 புறம் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணி மார்பர் அறம் பயந்தாள் திரு முலை பால் அமுது உண்டு வளர்ந்தவர் தாம் பிறந்து அருளும் பெரும் பேறு பெற்றது என முற்று உலகில் சிறந்த புகழ் கழுமலமாம் திருப்பதியை சென்று அணைந்தார் #112 பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லை புறம் வணங்கி வள்ளலார் வலமாக வரும் பொழுது மங்கை இடம் கொள்ளும் மால் விடையானும் எதிர் காட்சி கொடுத்து அருள #113 மண்டிய பேர் அன்பினால் வன் தொண்டர் நின்று இறைஞ்சி தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி என்று பண் தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார் #114 இருக்கு ஓலம்இடும் பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள வெரு கோள் உற்றது நீங்க ஆரூர் மேல் செல விரும்பி பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் திருக்கோலக்கா இறைஞ்சி செந்தமிழ்_மாலைகள் பாடி #115 தேன் ஆர்க்கும் மலர் சோலை திரு புன்கூர் நம்பர்-பால் ஆனா பேர் அன்பு மிக அடி பணிந்து தமிழ் பாடி மான் ஆர்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த இடம் பல வணங்கி கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் #116 வம்பு உலா மலர் அலைய மணி கொழித்து வந்து இழியும் பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி தம்பிரான் மயிலாடுதுறை வணங்கி தாவு_இல் சீர் அம்பர் மாகாளத்தின் அமர்ந்த பிரான் அடி பணிந்தார் #117 மின் ஆர் செம் சடை அண்ணல் விரும்பு திரு புகலூரை முன் ஆக பணிந்து ஏத்தி முதல்வன்-தன் அருள் நினைந்து பொன் ஆரும் உத்தரியம் புரி முந்நூல் அணி மார்பர் தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார் #118 தேர் ஆரும் நெடு வீதி திருவாரூர் வாழ்வார்க்கு ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வாரா நின்றான் அவனை மகிழ்ந்து எதிர்கொள்வீர் என்று நீர் ஆரும் சடை முடி மேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார் #119 தம்பிரான் அருள்செய்ய திருத்தொண்டர் அது சாற்றி எம்பிரானார் அருள் தான் இருந்த பரிசு இதுஆனால் நம் பிரானார் ஆவார் அவர் அன்றே எனும் நலத்தால் உம்பர் நாடு இழிந்தது என எதிர்கொள்ள உடன் எழுந்தார் #120 மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெரும் கொடி நெருங்க தாளின் நெடும் தோரணமும் தழை கமுகும் குழை தொடையும் நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் ஓளி நெடு மணி விளக்கும் உயர் வாயில்-தொறும் நிரைத்தார் #121 சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி தாது அவிழ் பூம் தொடை மாலை தண் பந்தர்களும் சமைத்து வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் #122 மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில நங்கள் பிரான் திருவாரூர் நகர் வாழ்வார் நம்பியை முன் பொங்கு எயில் நீள் திருவாயில் புறம்உற வந்து எதிர்கொண்டார் #123 வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் வன் தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர்-தம்மை நோக்கி எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் சந்த இசை பதிகங்கள் பாடி தம் பெருமான் திரு வாயில் சார்ந்தார் #124 வான்உற நீள் திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கி தேன் உறை கற்பக வாச மாலை தேவாசிரியன் தொழுது இறைஞ்சி ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும் தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் #125 புற்று இடம் கொண்ட புராதனனை பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் பற்று இடம் ஆய பரம்பொருளை பார்ப்பதி_பாகனை பங்கயத்தாள் அர்ச்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண் மிசை வீழ்ந்து இறைஞ்சி நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார் #126 அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக முன்பு முறைமையினால் வணங்கி முடிவு_இலா காதல் முதிர ஓங்கி நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப்பெற்ற இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட #127 வாழிய மா மறை புற்று இடம் கொள் மன்னவன் ஆர் அருளால் ஓர் வாக்கு தோழமை ஆக உனக்கு நம்மை தந்தனம் நாம் முன்பு தொண்டு கொண்ட வேள்வியில் அன்று நீ கொண்ட கோலம் என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே #128 கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே ஆட்கொள வந்த மறையவனே ஆரூர் அமர்ந்த அரு_மணியே வாள் கயல் கொண்ட கண் மங்கை_பங்கா மற்று உன் பெரிய கருணை அன்றே நாள் கமல பதம் தந்தது இன்று நாயினேனை பொருளாக என்றார் #129 என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ள களிப்பினோடும் வென்றி அடல் விடை போல் நடந்து வீதிவிடங்கப்பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திரு மாளிகை வலம் செய்து போந்தார் அன்று முதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார் #130 மை வளர் கண்டர் அருளினாலே வண் தமிழ் நாவலர்-தம் பெருமான் சைவ விடங்கின் அணி புனைந்து சாந்தமும் மாலையும் தாரும் ஆகி மெய் வளர் கோலம் எல்லாம் பொலிய மிக்க விழு தவ வேந்தர் என்ன தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் #131 இதற்கு முன் எல்லை_இல்லா திரு நகர் இதனுள் வந்து முதல் பெரும் கயிலை ஆதி முதல்வர்-தம் பங்கினாட்கு பொது கடிந்து உரிமை செய்யும் பூம் குழல் சேடிமாரில் கதிர்த்த பூண் ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள் #132 கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகைமாராம் பதியிலார் குலத்துள் தோன்றி பரவையார் என்னும் நாமம் விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற மதி அணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி #133 பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள் விரவிய பருவம்-தோறும் விழா அணி எடுப்ப மிக்கோர் வர மலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை தர வரு மகிழ்ச்சி பொங்க தளர் நடை பருவம் சேர்ந்தார் #134 மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச தேன் இளம் பதமோ வேலை திரை இளம் பவள வல்லி கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இளம் கொழுந்தோ காமன் தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன #135 நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க ஆடும் மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன பாடும் இன் இசையும் தங்கள் பனி_மலை_வல்லி பாதம் கூடும் அன்பு உருக பாடும் கொள்கையோர் குறிப்பு தோன்ற #136 பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய் தனங்கள் ஈட்டம் கொள்ள மிக்கு உயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப உள்ள மெய் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார் #137 பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ ஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும் பூம் கழல் வணங்க என்றும் போதுவார் ஒரு நாள் போந்தார் #138 அணி சிலம்பு அடிகள் பார் வென்று அடி படுத்தனம் என்று ஆர்ப்ப மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அரவு உலகை வென்ற துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் பணியும் என்று இன வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில் #139 புற்று இடம் விரும்பினாரை போற்றினர் தொழுது செல்வார் சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி நல் பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலங்கு செம் வாய் வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் #140 கற்பகத்தின் பூம் கொம்போ காமன்-தன் பெரு வாழ்வோ பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ அற்புதமோ சிவன் அருளோ அறியேன் என்று அதிசயித்தார் #141 ஓவிய நான்_முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால் மேவிய தன் வருத்தம் உற விதித்தது ஒரு மணி விளக்கோ மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து நாவலர் காவலர் நின்றார் நடு நின்றார் படை மதனார் #142 தண் தரள மணி தோடும் தகைத்தோடும் கடை பிறழும் கெண்டை நெடும் கண் வியப்ப கிளர் ஒளி பூண் உரவோனை அண்டர் பிரான் திருவருளால் அயல் அறியா மனம் விரும்ப பண்டை விதி கடை கூட்ட பரவையாரும் கண்டார் #143 கண் கொள்ளா கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப விண் கொள்ளா பேர் ஒளியான் எதிர் நோக்கும் மெல்லியலுக்கு எண்_கொள்ளா காதலின் முன்பு எய்தாதது ஒரு வேட்கை மண் கொள்ளா நாண் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து எழலும் #144 முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகு ஒளியால் தன்_நேர்_இல் மாரனோ தார் மார்பின் விஞ்சையனோ மின் நேர் செம் சடை அண்ணல் மெய் அருள் பெற்று உடையவனோ என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார் #145 அண்ணல் அவன்-தன் மருங்கே அளவு இறந்த காதலினால் உள் நிறையும் குணம் நான்கும் ஒரு புடை சாய்ந்தன எனினும் வண்ண மலர் கரும் கூந்தல் மட_கொடியை வலிது ஆக்கி கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப #146 பாங்கு ஓடி சிலை வளைத்து படை அநங்கன் விடு பாணம் தாம் கோலி எம்மருங்கும் தடை செய்ய மடவரலும் தேன் கோதை மலர் குழல் மேல் சிறை வண்டு கலந்து ஆர்ப்ப பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன் கோயில் போய் புகுந்தார் #147 வன் தொண்டர் அது கண்டு என் மனம் கொண்ட மயில் இயலின் இன் தொண்டை செம் கனி வாய் இளம்_கொடி-தான் யார் என்ன அன்று அங்கு முன் நின்றார் அவர் நங்கை பரவையார் சென்று உம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் என செப்ப #148 பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பு அல்குல் ஆர் பரவை அணி திகழும் மணி முறுவல் அரும் பரவை சீர் பரவை ஆயினாள் திரு உருவின் மென் சாயல் ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை #149 என்று இனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால் முன் தொடர்ந்து வரும் காதல் முறைமையினால் தொடக்கு உண்டு நன்று எனை ஆட்கொண்டவர்-பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்று உடைய நம்பியும் போய் தேவர் பிரான் கோயில் புக #150 பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே புரவலனார் கோயிலில்-நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் விரவு பெரும் காதலினால் மெல் இயலார்-தமை வேண்டி அரவின் ஆரம் புனைந்தார் அடி பணிந்தார் ஆரூரர் #151 அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணி புற்றின் மை வாழும் திரு மிடற்று வானவர்-பால் நின்றும் போந்து எவ்வாறு சென்றாள் என் இன் உயிராம் அன்னம் என செம் வாய் வெண் நகை கொடியை தேடுவார் ஆயினார் #152 பாசம் ஆம் வினை பற்று அறுப்பான் மிகும் ஆசை மேலும் ஓர் ஆசை அளிப்பது ஓர் தேசு மன்ன என் சிந்தை மயக்குற ஈசனார் அருள் எ நெறி சென்றதே #153 உம்பர் நாயகர்-தம் கழல் அல்லது நம்புமாறு அறியேனை நடுக்குஉற வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கி இன்று எம்பிரான் அருள் எ நெறி சென்றதே #154 பந்தம் வீடு தரும் பரமன் கழல் சிந்தை ஆரவும் உன்னும் என் சிந்தையை வந்து மால் செய்து மான் எனவே விழித்து எந்தையார் அருள் எ நெறி சென்றதே #155 என்று சாலவும் ஆற்றலர் என் உயிர் நின்றது எங்கு என நித்தில பூண் முலை மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் சென்று தேவ ஆசிரியனை சேர்ந்த பின் #156 காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான் யாவரோடும் உரை இயம்பாது இருந்து ஆவி நல்குவார் ஆரூரை ஆண்டவர் பூவின் மங்கையை தந்து எனும் போழ்தினில் #157 நாட்டு நல் இசை நாவலூரன் சிந்தை வேட்ட மின்னிடை இன் அமுதத்தினை காட்டுவன் கடலை கடைந்து என்ப போல் பூட்டும் ஏழ் பரி தேரோன் கடல் புக #158 எய்து மென் பெடையோடு இரை தேர்ந்து உண்டு பொய்கையில் பகல் போக்கிய புள் இனம் வைகு சேக்கை கண் மேல்செல வந்தது பையுள் மாலை தமியோர் புனிப்பு உற #159 பஞ்சின் மெல் அடி பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள்-தம் வல் வினையும் பரன் அஞ்சு_எழுத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான் #160 மறு_இல் சிந்தை வன் தொண்டர் வருந்தினால் இறு மருங்குலார்க்கு யார் பிழைப்பார் என்று நறு மலர் கங்குல் நங்கை முன் கொண்ட புன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண் நிலா #161 அரந்தை செய்வார்க்கு அழுங்கி தம் ஆருயிர் வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் பரந்த வெம் பகற்கு ஒல்கி பனி மதி கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம் #162 தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் நீற்றின் பேர் ஒளி போன்றது நீள் நிலா #163 வாவி புள் ஒலி மாறிய மாலையில் நாவலூரரும் நங்கை பரவையாம் பாவை தந்த படர் பெரும் காதலும் ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் #164 தம் திரு கண் எரி தழலில் பட்டு வெந்த காமன் வெளியே உரு செய்து வந்து என் முன் நின்று வாளி தொடுப்பதே எந்தையார் அருள் இ வண்ணமோ என்பார் #165 ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர் தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் நீர் தரங்க நெடும் கங்கை நீள் முடி சாத்தும் வெண் மதி போன்று இலை தண் மதி #166 அடுத்து மேல்மேல் அலைத்து எழும் ஆழியே தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உண கடுத்த நஞ்சு உன் தரங்க கரங்களால் எடுத்து நீட்டு நீ என்னை இன்று என் செயாய் #167 பிறந்தது எங்கள் பிரான் மலயத்திடை சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் புறம் பணை தடம் பொங்கு அழல் வீசிட மறம் பயின்றது எங்கோ தமிழ் மாருதம் #168 இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் தன் அரும்_பெறல் நெஞ்சு தயங்க போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம் #169 கனம் கொண்ட மணிகண்டர் கழல் வணங்கி கணவனை முன் பெறுவாள் போல இனம் கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்து பெரும் காதலோடும் தனம் கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்-பால் தனித்து சென்ற மனம் கொண்டு வரும் பெரிய மயல் கொண்டு தன் மணி மாளிகையை சார்ந்தாள் #170 சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் வேறு ஒருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் மாறு_இல் மலர் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து #171 அவ்வளவில் அருகு இருந்த சேடி நேர் முகம் நோக்கி ஆரூர் ஆண்ட மை விரவு கண்டரை நாம் வணங்க போம் மறுகு எதிர் வந்தவர் ஆர் என்ன இ உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றாள் #172 என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் வன் தொண்டர்-பால் வைத்த மன காதல் அளவு இன்றி வளர்ந்து பொங்க நின்ற நிறை நாண் முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது #173 ஆர நறும் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறும் திவலை அருகு வீசி ஈர இளம் தளிர் குளிரி படுத்து மடவார் செய்த இவையும் எல்லாம் பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன மாரனும் தன் பெரும் சிலையின் வலி காட்டி மலர் வாளி சொரிந்தான் வந்து #174 மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் நிலவு உமிழும் தழல் ஆற்றாள் நிறை ஆற்றும் பொறை ஆற்றா நீர்மையோடும் கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி இலவ இதழ் செம் துவர் வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள் #175 கந்தம் கமழ் மென் குழலீர் இது என் கலை வாள் மதியம் கனல்வான் எனை இ சந்தின் தழலை பனி நீர் அளவி தடவும் கொடியீர் தவிரீர் தவிரீர் வந்து இங்கு உலவும் நிலவும் விரையார் மலையா நிலமும் எரியாய் வரும்-ஆல் அம் தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடைய #176 புலரும்படி அன்று இரவு என்ன அளவும் பொறையும் நிறையும் இறையும் தரியா உலரும் தனமும் மனமும் வினையேன் ஒருவேன் அளவோ பெரு வாழ்வு உரையீர் பலரும் புரியும் துயர்தான் இதுவோ படை மன்மதனார் புடை-நின்று அகலார் அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் #177 தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர் நீரே அல்லால் ஆர் என் துயரம் அறிவார் அடிகேள் அடியேன் அயரும்படியோ இது-தான் நீரும் பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே ஊரும் சடையீர் விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன் #178 என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் வன் தொண்டரையும் படிமேல் வர முன்பு அருள்வான் அருளும் வகையார் நினைவார் சென்று உம்பர்களும் பணியும் செல்வ திருவாரூர் வாழ் பெருமான் அடிகள் அன்று அங்கு அவர் மன் தலை நீர் செயும் என்று அடியார் அறியும்படியால் அருளி #179 மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ மங்கை பரவை-தன்னை தந்தோம் இன் அ வகை நம் அடியார் அறியும்படியே உரை செய்தனம் என்று அருளி பொன்னின் புரி புன் சடையன் விடையன் பொரு மா கரியின் உரிவை புனைவான் அன்னம் நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன் பால் மணம் என்று அருளது #180 காம துயரில் கவல்வார் நெஞ்சில் கரை_இல் இருளும் கங்குல் கழி போம் யாமத்து இருளும் புலர கதிரோன் எழு காலையில் வந்து அடியார் கூடி சேம துணையாம் அவர் பேர் அருளை தொழுதே திரு நாவலர் கோன் மகிழ தாம குழலாள் பரவை வதுவை தகு நீர்மையினால் நிகழ செய்தார் #181 தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் மின் ஆரும் கொடி மருங்குல் பரவை எனும் மெல்லியல்-தன் பொன் ஆரும் முலை ஓங்கல் புணர் குவடே சார்வு ஆக பன் நாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார் #182 தன்னை ஆள் உடைய பிரான் சரண் ஆர விந்த மலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்து திருப்பதிகம் பன்னு தமிழ்_தொடை மாலை பல சாத்தி பரவை எனும் மின் இடையாள் உடன் கூடி விளையாடி செல்கின்றார் #183 மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் நாதர் பூங்கோயில் நண்ணி கும்பிடும் விருப்பால் நம்பி #184 அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்தி சந்தனத்து அளறு தோய்ந்த குங்கும கலவை சாத்தி சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி இந்திர திருவின் மேலாம் எழில் மிக விளங்கி தோன்ற #185 கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற சைவ மெய் திருவின் கோலம் தழைப்ப வீதியினை சார்ந்தார் #186 நாவலூர் வந்த சைவ நல் தவ களிறே என்றும் மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க்கு அன்ப என்றும் தாவு_இல் சீர் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற #187 கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றி செல்ல மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் #188 பொலம் கல புரவி பண்ணி போதுவார் பின்பு போத இலங்கு ஒளி வலய பொன் தோள் இடைஇடை மிடைந்து தொங்கல் நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் அலங்கல் அம் தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில் #189 கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து விண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடி எண்_இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆக பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவி சென்றார் #190 அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூர கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் கடி கொள் பூம் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காண காட்டும் படி எதிர் தோன்றி நிற்க பாதங்கள் பணிந்து பூண்டு #191 மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை நன் பெரும் பரம ஆனந்த நன் மது என் தரத்தும் அளித்து எதிர்நின்றன #192 ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின காலன் ஆர் உயிர் மாள கறுத்தன மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை சீலம் ஆக வருட சிவந்தன #193 நீதி மா தவர் நெஞ்சில் பொலிந்தன வேதி யாதவர் தம்மை வேதிப்பன சோதி ஆய் எழும் சோதி உள் சோதிய ஆதி மால் அயன் காணா அளவின #194 வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன பூத நாத நின் புண்டரீக பதம் #195 இன்னவாறு ஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் அ நிலை அவர்-தாம் வேண்டும் அதனையே அருள வேண்டி மன்னு சீர் அடியார் தங்கள் வழி தொண்டை உணர நல்கி பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளி செய்வார் #196 பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மை பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் அருமை ஆம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று #197 நாதனார் அருளி செய்ய நம்பிஆரூரர் நான் இங்கு ஏதம் தீர் நெறியை பெற்றேன் என்று எதிர்வணங்கி போற்ற நீதியால் அவர்கள் தம்மை பணிந்து நீ நிறை சொல்_மாலை கோது_இலா வாய்மையாலே பாடு என அண்ணல் கூற #198 தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர் இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் அதற்கு யான் யார் பன்னு பா_மாலை பாடும் பரிசு எனக்கு அருள்செய் என்ன #199 தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் அல்லல் தீர்ந்து உலகு உய்ய மறை அளித்த திரு வாக்கால் தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் என்று எல்லை_இல் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார் #200 மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் சென்னி உற அடி வணங்கி திருவருள் மேல் கொள் பொழுதில் முன்னம் மால் அயன் அறியா முதல்வர் தாம் எழுந்தருள அ நிலை கண்டு அடியவர்-பால் சார்வதனுக்கு அணைகின்றார் #201 தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு சேர தாழ்ந்து எழுந்து அருகு சென்று எய்தி நின்று அழியா வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனி வேறு அடியேன் என்று ஆர்வத்தால் திருத்தொண்டத்தொகை பதிகம் அருள்செய்வார் #202 தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆக தமிழ்_மாலை செம்பொருளால் திருத்தொண்டத்தொகை ஆன திருப்பதிகம் உம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த எம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார் #203 உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த நம்பிஆரூரர் திரு கூட்டத்தின் நடுவு அணைந்தார் தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே எம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன் மேல் 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம் @1 தில்லைவாழ் அந்தணர் புராணம் #1 ஆதியாய் நடுவும் ஆகி அளவு_இலா அளவும் ஆகி சோதியாய் உணர்வும் ஆகி தோன்றிய பொருளும் ஆகி பேதியா ஏகம் ஆகி பெண்ணுமாய் ஆணும் ஆகி போதியா நிற்கும் தில்லை பொது நடம் போற்றி போற்றி #2 கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி அற்புத கோலம் நீடி அரு_மறை சிரத்தின் மேலாம் சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூம் கழல் போற்றி போற்றி #3 போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் ஆற்றினார் பெருகும் அன்பால் அடி தவம் புரிந்து வாழ்வார் #4 பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடை பணிகள் ஏந்தி மங்கல தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணி தலைநின்று உய்த்தே அங்கணர் கோயில் உள்ளா அகம் படி தொண்டு செய்வார் #5 வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க தருமமே பொருளா கொண்டு தத்துவ நெறியில் செல்லும் அரு_மறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார் #6 மறு இலா மரபின் வந்து மாறு_இலா ஒழுக்கம் பூண்டார் அறு_தொழில் ஆட்சியாலே அரும் கலி நீக்கி உள்ளார் உறுவது நீற்றின் செல்வம் என கொளும் உள்ளம் மிக்கார் பெறுவது சிவன்-பால் அன்பாம் பேறு என பெருகி வாழ்வார் #7 ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகு எலாம் புகழ்ந்து போற்றும் மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார் #8 செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார் இனி பெறும் பேறு ஒன்று இல்லார் தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார் #9 இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட அன்று வன் தொண்டர்-தம்மை அருளிய ஆரூர் அண்ணல் முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார் #10 அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ நிகழ் திருநீலகண்ட குயவனார் நீடு வாய்மை திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம் மேல் @2 திருநீலகண்ட நாயனார் புராணம் #1 வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் மாது_ஒரு_பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே ஆதியும் முடிவும் இல்லா அற்புத தனி கூத்து ஆடும் நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார் #2 பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனல் சடை முடியார்க்கு அன்பர் மெய் அடியார்கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார் வையகம் போற்றும் செய்கை மனை_அறம் புரிந்து வாழ்வார் சைவ மெய் திருவின் சார்வே பொருள் என சாரும் நீரார் #3 அளவு_இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் #4 அவர்-தம்-கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார் புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய் தவம் நின்று தடுத்தது என்ன தகைந்து தான் தரித்தது என்று சிவன் எந்தை கண்டம்-தன்னை திருநீலகண்டம் என்பார் #5 ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் தேன் அலர் கமல போதில் திருவினும் உருவம் மிக்கார் #6 மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று பூண் தயங்கு இள மென் சாயல் பொன் கொடி அனையார்-தம்மை வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் தீண்டுவீர் ஆயின் எம்மை திருநீலகண்டம் என்றார் #7 ஆதியார் நீலகண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை மாதரார்-தமையும் என்-தன் மனத்தினும் தீண்டேன் என்றார் #8 கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றி செய்ய இல் புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி அன்புறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார் #9 இளமையின் மிக்கு உளார்கள் இருவரும் அறிய நின்ற அளவு_இல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து தளரொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்து சாயார் #10 இ நெறி ஒழுகும் நாளில் எரி தளிர்த்து என்ன நீண்ட மின் ஒளிர் சடையோன்-தானும் தொண்டரை விளக்கம் காண நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் அ நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி #11 கீளொடு கோவணம் சாத்தி கேடு இலா வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மேல் தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன் நீள் ஒளி வளர் திரு முண்ட நெற்றியும் #12 நெடும் சடை கரந்திட நெறித்த பம்பையும் விடும் கதிர் முறுவல் வெண் நிலவும் மேம்பட இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய் நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் #13 நண்ணிய தவ சிவ யோக நாதரை கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் புண்ணிய தொண்டர் ஆம் என்று போற்றி செய்து எண்ணிய வகையினால் எதிர்கொண்டு ஏத்தினார் #14 பிறை வளர் சடை முடி பிரானை தொண்டர் என்று உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் நிறை பெரு விருப்போடு செய்து நின்ற பின் #15 எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் வம்பு உலா மலர் சடை வள்ளல் தொண்டனார் உம்பர் நாயகனும் இ ஓடு உன்-பால் வைத்து நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று #16 தன்னை ஒப்பு அரியது தலத்து தன்உழை துன்னிய யாவையும் தூய்மை செய்வது பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது இன்ன தன்மையது இது வாங்கு நீ என #17 தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய மல்கு சீர் தொண்டனார் வணங்கி வாங்கிக்கொண்டு ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் #18 வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர் அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் #19 சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த கோலம் ஆர் ஓடு-தன்னை குறி இடத்து அகல போக்கி சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர்-தம்-பால் வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் #20 வந்த பின் தொண்டனாரும் எதிர் வழிபாடு செய்து சிந்தை செய்து அருளிற்று எங்கள் செய் தவம் என்று நிற்ப முந்தை நாள் உன்-பால் வைத்த மெய் ஒளி விளங்கும் ஓடு தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் #21 என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் #22 மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார் #23 இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன விழை தரும் ஓடு வைத்த வேறு இடம் தேடி காணேன் பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இ பிழையினை பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் #24 சென்னியால் வணங்கி நின்ற தொண்டரை செயிர்த்து நோக்கி என் இது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றி பொன்னினால் அமைத்து தந்தாய் ஆயினும் கொள்ளேன் போற்ற முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் #25 கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது ஊடி நின்று உரைத்தது என்-தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன #26 ஆவது என் உன்-பால் வைத்த அடைக்கல பொருளை வௌவி பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றி போவதும் செய்யேன் என்றான் புண்ணிய பொருளாய் நின்றான் #27 வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனை பற்றி குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் #28 ஐயா நீர் அருளி செய்த வண்ணம் யான் செய்வதற்கு பொய் இல் சீர் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன மை_அறு சிறப்பின் மிக்க மனையவள்-தன்னை பற்றி மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் #29 கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர்நின்ற வெம் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என #30 தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த பேரவையில் மன்னுவன் யான் என சென்றார் #31 நல் ஒழுக்கம் தலை நின்றார் நான்_மறையின் துறை போனார் தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்து அவையில் எல்லை_இலான் முன் செல்ல இரும் தொண்டர் அவர்-தாமும் மல்கு பெரும் காதலினால் வழக்கு மேல் இட்டு அணைந்தார் #32 அந்தணனாம் எந்தை பிரான் அரு_மறையோர் முன் பகர்வான் இந்த வேட்கோவன்-பால் யான் வைத்த பாத்திரத்தை தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் #33 நறை கமழும் சடை முடியும் நால் தோளும் முக்கண்ணும் கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரைசெய்வார் நிறை உடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என #34 நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று சேணிடையும் தீங்கு அடையா திருத்தொண்டர் உரைசெய்தார் #35 திரு உடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் உரு உடை இவர் தாம் வைத்த ஓட்டினை கெடுத்தீர் ஆனால் தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் #36 அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார் பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று பெரும் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையை சார்ந்தார் #37 மனைவியார்-தம்மை கொண்டு மறை சிவ யோகியார் முன் சின விடை பாகர் மேவும் திருப்புலீச்சுரத்து முன்னர் நனை மலர் சோலை வாவி நண்ணி தம் உண்மை காப்பார் புனை மணி வேணு தண்டின் இரு தலை பிடித்து புக்கார் #38 தண்டு இரு தலையும் பற்றி புகும் அவர்-தம்மை நோக்கி வெண் திருநீற்று முண்ட வேதியர் மாதை தீண்டி கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் #39 வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும் மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற #40 அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் முன்நிலை நின்ற வேத முதல் வரை கண்டார் இல்ல இ நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கண்டார் #41 கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல் அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்-தம் பெருமை நோக்கி விண்டு அரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார்-தம்மை தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் #42 மன்று உளே திரு கூத்து ஆடி அடியவர் மனைகள்-தோறும் சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர்-தாமும் வென்ற ஐம்_புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்-பால் என்றும் இ இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே #43 விறல் உடை தொண்டனாரும் வெண் நகை செவ்வாய் மென் தோள் இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த திறல் உடை செய்கை செய்து சிவலோகம் அதனை எய்தி பெறல் அரும் இளமை பெற்று பேர் இன்பம் உற்றார் அன்றே #44 அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த மயல்_இல் சீர் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்தி புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய் இல் செயல் இயல் பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் மேல் @3 இயற்பகை நாயனார் புராணம் #1 சென்னி வெண்குடை நீடு அநபாயன் திரு குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி-தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் நல் நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புக #2 அ குல பதி குடி முதல் வணிகர் அளவு_இல் செல்வத்து வளமையின் அமைந்தார் செக்கர் வெண் பிறை சடையவர் அடிமை திறத்தின் மிக்கவர் மறை சிலம்பு அடியார் மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இ கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற்பகையார் #3 ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் நீறு சேர் திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து மாறு_இலாத நல் நெறியினில் விளங்கும் மனை_அறம் புரி மகிழ்ச்சியின் வந்த பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே என பேணி வாழ் நாளில் #4 ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கை-தான் அறியாமையோ அறியோம் தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார் #5 வந்து தண் புகார் வணிகர்-தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால் சிந்தை அன்பொடு சென்று எதிர்வணங்கி சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து முந்தை எம் பெரும் தவத்தினால் எங்கே முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார் #6 என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் என கொண்டே ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார் #7 என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள்செயும் என்ன மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் #8 இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு எனக்கு என்னா கதும்என சென்று தம் மனை வாழ்க்கை கற்பின் மேம்படு காதலியாரை விதி மண குல மடந்தை இன்று உனை இ மெய் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் #9 இன்று நீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று தன் தனி பெரும் கணவரை வணங்க தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர்வணங்க சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் #10 மாது-தன்னை முன் கொடுத்த மா தவர்-தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே யாது நான் இனி செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர்-தம் எதிர் நோக்கி சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல்-தன்னை யான் தனி கொடு போக காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் #11 என்று அவர் அருளி செய்ய யானே முன் செய் குற்றேவல் ஒன்று இது-தன்னை என்னை உடையவர் அருளி செய்ய நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்து புக்கு பொன் திகழ் அறுவை சாத்தி பூம் கச்சு பொலிய வீக்கி #12 வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர்வணங்கி மிக்க ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே தோள் இணை துணையே ஆக போயினார் துன்னினாரை நீளிடை பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார் #13 மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் புனை_இழை-தன்னை கொண்டு போவதாம் ஒருவன் என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் #14 வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க கால் என விசையில் சென்று கடி நகர் புறத்து போகி பால் இரு மருங்கும் ஈண்டி பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர்வளைத்து கொண்டார் #15 வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார் கழி பெரும் காதல் காட்டி காரிகை உடன் போம் போதில் அழிதகன் போகேல் ஈண்டு அ அரும் குல_கொடியை விட்டு பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார் #16 மறை முனி அஞ்சினான் போல் மாதினை பார்க்க மாதும் இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா தறையிடை படுத்துகின்றேன் தளர்ந்து அருள்செய்யேல் என்று #17 பெரு விறல் ஆளி என்ன பிறங்கு எரி சிதற நோக்கி பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல் எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் #18 ஏட நீ என் செய்தாய்-ஆல் இ திறம் இயம்புகின்றாய் நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று பாடவம் உரைப்பது உன்-தன் மனைவியை பனவற்கு ஈந்தோ கூடவே மடிவது அன்றி கொடுக்க யாம் ஓட்டோம் என்றார் #19 மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த செற்றம் முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு நற்றவர்-தம்மை போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர் #20 நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும் சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் ஊர்ந்தவர் படிமேல் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி ஆர்ந்த வெம் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர்தடுத்தார் அன்றே #21 சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி வன் துணை வாளே ஆக சாரிகை மாறி வந்து துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்று அடு புலி ஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார் #22 மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் வேண்டிய திசைகள்-தோறும் வேறுவேறு அமர் செய் போழ்தில் ஆண் தகை வீரர்-தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகி காண் தகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார் #23 சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும் விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும் எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றி திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர் #24 மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் ஆடு உறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார்-தம்மில் ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார் நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார் #25 திரு உடை மனைவியாரை கொடுத்து இடை செறுத்து முன்பு வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி அரு_மறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம் பொருவு_அரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார் #26 இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில் அரு_மறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவி திரு மலி தோளினானை மீள் என செப்பினானே #27 தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் #28 செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கி பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் #29 இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம் அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம் செயற்கு_அரும் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான் மயக்கு_அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான் #30 அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்த குழை பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான் #31 சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் பொன் திகழ் குன்று வெள்ளி பொருப்பின் மேல் பொலிந்தது என்ன தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார் நின்று இலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தின்-நின்று எழுந்தார் நேர்ந்தார் #32 சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லை_இல் இன்ப வெள்ளம் எனக்கு அருள்செய்தாய் போற்றி தில்லை அம்பலத்து உள் ஆடும் சேவடி போற்றி என்ன #33 விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை எண்ணிய உலகு-தன்னில் இப்படி நம்-பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய் நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று #34 திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தோற்றம் மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்த பொரு விடை பாகர் மன்னும் பொன் பொது அதனுள் புக்கார் #35 வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில் ஊனம்_இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார் ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் #36 இன்புறு தாரம்-தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்புறாது உதவும் தொண்டர் பெருமையை தொழுது வாழ்த்தி அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு மன் புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல்உற்றேன் மேல் @4 இளையான்குடி மாற நாயனார் புராணம் #1 அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் #2 ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஒர் செல்வமும் நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்தது ஓர் சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார் #3 ஆரம் என்பு புனைந்த ஐயர்-தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து ஈரம் மென் மதுர பதம் பரிவு எய்த முன்னுரை செய்த பின் #4 கொண்டு வந்து மனை புகுந்து குலாவு பாதம் விளக்கியே மண்டு காதலின் ஆதனத்திடைவைத்து அருச்சனை செய்த பின் உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துஉளார் #5 ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு_இலார் உளம் மகிழவே நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண் தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள் #6 செல்வம் மேவிய நாளில் இ செயல் செய்வது அன்றியும் மெய்யினால் அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள்-தொறும் மாறி வந்து ஒல்லையில் வறுமை பதம் புக உன்னினார் தில்லை மன்னினார் #7 இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின் முன்னை மாறு_இல் திருப்பணி கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார் #8 மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயன் ஆன அ கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள்உடன் இன்றி ஓர் நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் #9 மாரி காலத்து இரவினில் வைகி ஓர் தாரிப்பு இன்றி பசி தலை கொள்வது பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற வேரி தாரான் விருந்து எதிர்கொண்டனன் #10 ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் தார மாதரை நோக்கி தபோதனர் தீரவே பசித்தார் செய்வது என் என்று #11 நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் இம_குல_கொடி_பாகர்க்கு இனியவர் தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என #12 மாது கூறுவள் மற்று ஒன்றும் காண்கிலேன் ஏதிலாரும் இனி தருவார் இல்லை போதும் வைகிற்று போம் இடம் வேறு இலை தீது செய்வினையேற்கு என் செயல் என்று #13 செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வு உற #14 மற்று அ மாற்றம் மனைவியார் கூற முன் பெற்ற செல்வம் என பெரிது உள் மகிழ்ந்து உற்ற காதலினால் ஒருப்பட்டனர் சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் #15 பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்-தான் கருகு மை இருளின் கணம் கட்டுவிட்டு உருகுகின்றது போன்றது உலகு எலாம் #16 எண்ணும் இ உலகத்தவர் யாவரும் துண்எனும்படி தோன்ற முன் தோன்றிடில் வண்ணம் நீடிய மை குழம்பு ஆம் என்று நண்ணல் செய்யா நடு இருள் யாமத்து #17 உள்ளம் அன்பு கொண்டு ஊக்க ஓர் பேர் இடா கொள்ள முன் கவித்து குறியின் வழி புள் உறங்கும் வயல் புக போயினார் வள்ளலார் இளையான்குடி மாறனார் #18 காலினால் தடவி சென்று கைகளால் சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன கோலி வாரி இடா நிறைய கொண்டு மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் #19 வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் அந்தம் இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார் #20 முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்து பதம் முன் கொள்ள வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து வெறுப்பு இல் இன் அடிசில் ஆக்கி மேம்படு கற்பின் மிக்கார் கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினர் கணவனாரை #21 வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று குழி நிரம்பாத புன்செய் குறும்பயிர் தடவி பாச பழி முதல் பறிப்பார் போல பறித்து அவை கறிக்கு நல்க #22 மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை நினைவினால் குறையை நொந்து திருவமுது அமைத்து நின்று #23 கணவனார்-தம்மை நோக்கி கறி அமுது ஆன காட்டி இணை_இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார் #24 அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்-பால் எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்ற செழும் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார் #25 மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆக சாலவே மயங்குவார்க்கு சங்கரன் தான் மகிழ்ந்தே ஏல வார் குழலாள்-தன்னோடு இடப_வாகனனாய் தோன்றி சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர்-தம்மை நோக்கி #26 அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் என் பெரும் உலகம் எய்தி இருநிதி_கிழவன் தானே முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் #27 இ பரிசு இவர்க்கு தக்க வகையினால் இன்பம் நல்கி முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்தருளி போனார் அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல்உற்றேன் மேல் @5 மெய்ப்பொருள் நாயனார் புராணம் #1 சேதி நல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி மாது_ஒரு_பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான் வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார் #2 அரசியல் நெறியின் வந்த அற_நெறி வழாமல் காத்து வரை நெடும் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார் திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார் #3 மங்கையை பாகமாக உடையவர் மன்னும் கோயில் எங்கணும் பூசை நீடி ஏழ் இசை பாடல் ஆடல் பொங்கிய சிறப்பின் மல்க போற்றுதல் புரிந்து வாழ்வார் தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார் #4 தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்க குறைவு_அற கொடுத்து வந்தார் #5 இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன் அன்னவர்-தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு பொன் அணி ஓடை யானை பொரு பரி காலாள் மற்றும் பன் முறை இழந்து தோற்று பரிபவப்பட்டு போனான் #6 இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும் அ பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆக செப்ப_அரும் நிலைமை எண்ணி திருக்கோவலூரில் சேர்வான் #7 மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்து கட்டி கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்தநாதன் #8 மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம்-தோறும் கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி சேதியர் பெருமான் கோயில் திரு மணி வாயில் சேர்ந்தான் #9 கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே உடையவர் தாமே வந்தார் உள் எழுந்தருளும் என்ன தடை பல புக்க பின்பு தனி தடை நின்ற தத்தன் இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் #10 என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கி புக்கு பொன் திகழ் பள்ளி கட்டில் புரவலன் துயில மாடே மன்றல் அம் குழல் மென் சாயல் மா தேவி இருப்ப கண்டான் #11 கண்டு சென்று அணையும் போது கதும்என இழிந்து தேவி வண்டு அலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன் அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று #12 மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் எங்கும் இல்லாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான் #13 பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள்செய்த இந்த மாறு_இல் ஆகமத்தை வாசித்து அருள்செயவேண்டும் என்ன நாறு பூம் கோதை மாது தவிரவே நானும் நீயும் வேறு இடத்து இருத்தல் வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன் #14 திரு_மகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கி புரிவுடன் விரைய அந்த புரத்திடை போக ஏவி தரு தவ வேடத்தானை தவிசின் மேல் இருத்தி தாமும் இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள்செய்யும் என்றார் #15 கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்து அவர் வணங்கும் போதில் பத்திரம் வாங்கி தான் முன் நினைந்த அ பரிசே செய்ய மெய் தவ வேடமே மெய்ப்பொருள் என தொழுது வென்றார் #16 மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் இறை பொழுதின் கண் கூடி வாளினால் எறியல்உற்றான் நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் #17 வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப்பட்ட தாதன் ஆம் தத்தன்-தானும் தலையினால் வணங்கி தாங்கி யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் #18 அ திறம் அறிந்தார் எல்லாம் அரசனை தீங்கு செய்த பொய் தவன்-தன்னை கொல்வோம் என புடைசூழ்ந்தபோது தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் இ தவன் போக பெற்றது இறைவனது ஆணை என்றான் #19 அ வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்க செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் #20 மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல் செற்றவர்-தம்மை நீக்கி தீது_இலா நெறியில் விட்ட சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான் #21 சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்ய வல்லார் என்று நின்றவன்-தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார் #22 அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் விரவிய செய்கை எல்லாம் விளம்புவார் விதியினாலே பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று புரவலர் மன்றுள் ஆடும் பூம் கழல் சிந்தை செய்தார் #23 தொண்டனார்க்கு இமய பாவை துணைவனார் அவர் முன் தம்மை கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்து அருளி மிக்க அண்டர் வானவர்கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேர கொண்டவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார் #24 இன் உயிர் செகுக்க கண்டும் எம்பிரான் அன்பர் என்றே நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை-தன்னில் என் உரை செய்தேன் ஆக இகல் விறன்மிண்டர் பொன் தாள் சென்னி வைத்து அவர் முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் மேல் @6 விறன்மிண்ட நாயனார் புராணம் #1 விரை செய் நறும் பூம் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவி பரசு பெறு மா தவ முனிவன் பரசுராமன் பெறு நாடு திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலை நாடு #2 வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும் மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் #3 என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையது-தான் அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் #4 அ பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார் செப்பற்கு அரிய பெரும் சீர்த்தி சிவனார் செய்ய கழல் பற்றி எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் மெய் பத்தர்கள்-பால் பரிவுடையார் எம்பிரானார் விறன்மிண்டர் #5 நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த பதிகள் எங்கும் கும்பிட்டு படரும் காதல் வழி செல்வார் முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திரு கூட்டத்து எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார் #6 பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் சென்று ஆளுடையார் அடியவர்-தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி வன் தாள் மேரு சிலை வளைத்து புரங்கள் செற்று வைதிக தேர் நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார் #7 திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால் பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார் #8 சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம் பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் #9 ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் சீலம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பாட செழு மறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியார் உடன்ஆம் உளது என்றால் ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர் #10 ஒக்க நெடு நாள் இ உலகில் உயர்ந்த சைவ பெருந்தன்மை தொக்க நிலைமை நெறி போற்றி தொண்டு பெற்ற விறன்மிண்டர் தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார் #11 வேறு பிரிது என் திருத்தொண்டத்தொகையால் உலகு விளங்க வரும் பேறு தனக்கு காரணர் ஆம் பிரானார் விறன்மிண்டரின் பெருமை கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேல் கொண்டே ஆறை வணிகர் அமர்நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம் மேல் @7 அமர்நீதி நாயனார் புராணம் #1 சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டு காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை #2 மன்னும் அ பதி வணிகர்-தம் குலத்தினில் வந்தார் பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூம் துகில் முதலா எ நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் அ நிலை-கண் மிக்கவர் அமர்நீதியார் என்பார் #3 சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்து கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார் #4 முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கி தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார் தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் #5 மருவும் அன்பொடு வணங்கினர் மணிகண்டர் நல்லூர் திருவிழா அணி சேவித்து திருமடத்து அடியார் பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாளிடை ஒருநாள் #6 பிறை தளிர் சடை பெருந்தகை பெரும் திரு நல்லூர் கறை களத்து இறை கோவண பெருமை முன் காட்டி நிறைத்த அன்பு உடை தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் மறை குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி #7 செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடி சிகையும் சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் #8 முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில் தஞ்ச மா மறை கோவண ஆடையின் அசைவும் வஞ்ச வல் வினை கறுப்பு அறும் மனத்து அடியார்கள் நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய #9 கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருக தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய் தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை கொண்டு வந்து அமர்நீதியார் திரு மடம் குறுக #10 வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து கடிது வந்து எதிர்வணங்கி இ மடத்தினில் காணும் படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர் #11 பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு ஊணும் மேன்மையில் ஊட்டி நல் கந்தை கீள் உடைகள் யாணர் வெண் கிழி கோவணம் ஈவது கேட்டு காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் #12 என்று தம்பிரான் அருள்செய இ திரு மடத்தே நன்று நான்_மறை பெரும் தவர் அமுது செய்து அருள துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச #13 வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே அணங்கு நீர் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண் குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார் #14 ஓங்கு கோவண பெருமையை உள்ளவாறு உமக்கே ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை நீர் இதனை வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் #15 கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர் கடுப்பில் இங்கு எழுந்தருளும் நீர் குளித்து என கங்கை மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அ மறையோர் அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் #16 தந்த கோவணம் வாங்கிய தனி பெரும் தொண்டர் முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்பு சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார் #17 போன வேதியர் வைத்த கோவணத்தினை போக்கி பானல் அம் துறை பொன்னி நீர் படிந்து வந்தாரோ தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார் #18 கதிர் இளம் பிறை கண்ணியர் நண்ணிய பொழுதில் முதிரும் அன்பு உடை தொண்டர் தாம் முறைமையின் முன்னே அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் #19 தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற தண்டின் மேல் அதும் ஈரம் நான் தந்த கோவணத்தை கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவண கள்வர் #20 ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி எய்தி நோக்கு உற கோவணம் இருந்த வேறு இடத்தில் மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன் செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார் #21 பொங்கு வெண் கிழி கோவணம் போயின நெறி மேல் சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில் எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார் அம் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப்பட்டார் #22 மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார் புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார் #23 அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை வைத்த இடத்து நான் கண்டிலன் மற்றும் ஓர் இடத்தில் உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன் இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று #24 வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் கீறு கோவணம் அன்று நெய்து அமைத்தது கிளர் கொள் நீறு சாத்திய நெற்றியீர் மற்று அது களைந்து மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க #25 நின்ற வேதியர் வெகுண்டு அமர்நீதியார் நிலைமை நன்று சாலவும் நாளிடை கழிந்ததும் அன்று-ஆல் இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா #26 நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும் சொல்லுவித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான் #27 மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுள பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள்செய்வீர் அடியேன் அறிய வந்தது ஒன்று அன்று என அடி பணிந்து அயர்வார் #28 செயத்தகும் பணி செய்வன் இ கோவணம் அன்றி நய தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள் உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்கா பயத்தொடும் குலைந்து அடி மிசை பல முறை பணிந்தார் #29 பணியும் அன்பரை நோக்கி அ பரம்பொருள் ஆனார் தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய அணியும் கோவணம் நேர் தர அமையும் என்று அருள #30 மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் அலர்ந்த வெண் நிற கோவணம் அதற்கு நேர் ஆக இலங்கும் துகில் கொள்வதற்கு இசைந்து அருள்செய்யீர் நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர் #31 உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் கெடுத்தது ஆக முன் சொல்லும் அ கிழிந்த கோவணம் நீர் அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா எடுத்து மற்று இதன் எடை இடும் கோவணம் என்றார் #32 நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்ட குன்ற_வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார் நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார் #33 நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த நீடு கோவணம் அடைய நேராக ஒன்றா கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி #34 உலகில் இல்லது ஓர் மாயை இ கோவணம் ஒன்றுக்கு அலகு_இல் கோவணம் ஒத்தில என்று அதிசயத்து பலவும் மென் துகில் பட்டுடன் இடஇட உயர இலகு பூம் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார் #35 முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வுஉறும் வழக்கால் பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் தட்டு மேல் பட தாழ்ந்தது கோவண தட்டு #36 ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச #37 மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என்-கொல் அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார் #38 நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணி திரளும் பல் வகை திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் #39 தவம் நிறைந்த நான்_மறை பொருள் நூல்களால் சமைந்த சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு அவனி மேல் அமர்நீதியார் தனம் எலாம் அன்றி புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ #40 நிலைமை மற்று அது நோக்கிய நிகர்_இலார் நேர் நின்று உலைவு_இல் பல் தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன் தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையில் ஏறிட பெறுவது உன் அருள் என தொழுதார் #41 பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர்நின்று அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் நிச்சயித்தவர் நிலையினை துலை எனும் சலத்தால் இ சழக்கின் நின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார் #42 மனம் மகிழ்ந்து அவர் மலர் கழல் சென்னியால் வணங்கி புனை மலர் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் தனை இட கொடு தனி துலை வலம்கொண்டு தகவால் இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து #43 இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை பிழைத்திலோம் எனில் பெரும் துலை நேர் நிற்க என்று மழை தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கி தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார் ஏறினார் தட்டில் #44 மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற அண்டர் தம்பிரான் திரு அரை கோவணம் அதுவும் கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமை தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அ துலைதான் #45 மதி விளங்கிய தொண்டர்-தம் பெருமையை மண்ணோர் துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர்தொழுதார் கதிர் விசும்பிடை கரந்திட நிரைந்த கற்பகத்தின் புதிய பூ_மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார் #46 அண்டர் பூ_மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர் பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் கொண்ட பேதையும் தாமும் ஆய் காட்சி முன் கொடுத்தார் #47 தொழுது போற்றி அ துலை மிசை நின்று நேர் துதிக்கும் வழு_இல் அன்பரும் மைந்தரும் மனைவியார்-தாமும் முழுதும் இன் அருள் பெற்று தம் முன் தொழுது இருக்கும் அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர் #48 நாதர்-தம் திருவருளினால் நல் பெரும் துலையே மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல கோது_இல் அன்பரும் குடும்பமும் குறைவு அற கொடுத்த ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் #49 மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவண பழமை காட்டி உலகு உய்ய ஆண்டு கொள்ள பெற்றவர் பாதம் உன்னி தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும் மேல்3.இலைமலிந்த சருக்கம் @1 எறிபத்த நாயனார் புராணம் #1 மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார் எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால் சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல்உற்றாம் #2 பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும் அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும் தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் #3 மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ #4 கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும் அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும் படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால் #5 மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும் பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில் #6 பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில் மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார் #7 மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் #8 அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும் புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல் #9 வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து #10 கோல பூம் கூடை-தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில் வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும் காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார் #11 மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும் கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம் பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள் #12 மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார் எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே #13 வென்றி மால் யானை-தன்னை மேல் கொண்ட பாகரோடும் சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த #14 மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார் #15 அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார் #16 களி யானையின் ஈர் உரியாய் சிவதா எளியார் வலியாம் இறைவா சிவதா அளியார் அடியார் அறிவே சிவதா தெளிவார் அமுதே சிவதா சிவதா #17 ஆறும் மதியும் அணியும் சடை மேல் ஏறும் மலரை கரி சிந்துவதே வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய சீறும் சிலையாய் சிவதா சிவதா #18 தஞ்சே சரணம் புகுதும் தமியோர் நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும் மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள் செம் சேவடியாய் சிவதா சிவதா #19 நெடியோன் அறியா நெறியார் அறியும் படியால் அடிமை பணி செய்து ஒழுகும் அடியார்களில் யான் ஆரா அணைவாய் முடியா முதலாய் எனவே மொழிய #20 என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார் #21 வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் #22 இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும் அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார் #23 கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும் அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார் #24 பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம் தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் #25 கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார் #26 வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார் #27 மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார் #28 வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான் இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க #29 தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி #30 வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும் #31 சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின் மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க #32 தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும் வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே #33 பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம் மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர் அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான் #34 கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான் #35 பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான் வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான் #36 அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர் விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும் திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார் பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார் #37 குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன் #38 மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர் இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி #39 செறிந்தவர்-தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான் அருள்செய்யும் என்று நின்றார் #40 மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர் சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம் தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன் #41 மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர்-தாமும் மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன் #42 அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் #43 வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார் #44 வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி #45 வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார்-தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி #46 புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்-தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் #47 வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப #48 தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள் கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே #49 ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும் போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் #50 இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில் மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார் #51 மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும் பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார் #52 ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல் யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார் #53 அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள் சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான் #54 தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார் #55 மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல் உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும் நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில் கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார் #56 ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும் நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார் #57 தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில் ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன் மேல் @2 ஏனாதிநாத நாயனார் புராணம் #1 புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும் தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில் வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் #2 வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் தாழ கதிர் சாலி தான் ஓங்கும் தன்மையதாய் வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில் ஈழ குல சான்றார் ஏனாதிநாதனார் #3 தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின் நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார் மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும் தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார் #4 வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில் தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார் #5 நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின்-கண் எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள் தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின் உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான் #6 மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள் கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும் பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான் #7 தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின் ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம் மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால் ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான் # கதிரோன் எழ மழுங்கி கால் சாயும்-காலை மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான் #9 தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான் #10 வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும் பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா #11 ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார் #12 புறப்பட்ட போதின்-கண் போர் தொழில்கள் கற்கும் விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார் மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள் #13 வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன் நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால் இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என #14 என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் #15 மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர் #16 கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர் ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன #17 வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர் செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன #18 வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில் #19 குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை #20 நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர் தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன் வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும் #21 கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன் நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர் ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர் #22 பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர் #23 அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன #24 திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர் புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர் விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர் #25 இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர் வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் #26 வெம் சின வாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண் எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார் #27 தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில் கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார் #28 இ நிலைய வெம் களத்தில் ஏற்று அழிந்த மானத்தால் தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான் #29 மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான் #30 போன அதிசூரன் போரில் அவர் கழிந்த மான மிக மீதூர மண் படுவான் கண் படான் ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான் #31 கேட்டாரும் கங்குல் புலர் காலை தீயோனும் நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என தோட்டார் பூம் தாரார்க்கு சொல்லி செலவிட்டான் #32 இவ்வாறு கேட்டலுமே ஏனாதிநாதனார் அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார் #33 சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார் #34 தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும் ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய் பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான் #35 வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான் #36 வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து நின்றால் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் #37 அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும் இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர் புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார் #38 கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என் அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம் கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று #39 கை வாளுடன் பலகை நீக்க கருதி அது செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார் #40 அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார் முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான் இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள மின் நின்ற செம் சடையார் தாமே வெளி நின்றார் #41 மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார் #42 தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும் நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் மேல் @3 கண்ணப்ப நாயனார் புராணம் #1 மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு #2 இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில் நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் #3 குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும் #4 வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும் புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் #5 வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும் #6 ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் #7 மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால் அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார் பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும் நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான் #8 பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான் வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான் மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள் #9 அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள் இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் #10 பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார் #11 வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை #12 பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே #13 கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும் ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது #14 கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த #15 அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம் பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான் #16 கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும் இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற #17 அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார் புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே #18 வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள் புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில் #19 வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார் #20 ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க #21 பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன மாசு_அறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில் #22 தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில் உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல் வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார் #23 பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி #24 துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும் குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து #25 அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின் வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும் சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி #26 கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத #27 அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல் புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார் #28 தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால் சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான் #29 வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் #30 மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும் கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும் தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார் #31 மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர் எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும் பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன் #32 பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும் கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார் #33 சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர் குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள் #34 ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர் #35 செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள் #36 அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார் இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம் உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார் #37 பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் #38 தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும் எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும் திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள் #39 குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம் அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர் #40 வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும் மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால் பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள் #41 பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும் அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம் #42 வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல் எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார் #43 இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம் கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் #44 அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் #45 சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள் #46 இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும் அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் #47 சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் #48 கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள் #49 நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம் அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள் #50 கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும் வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் #51 மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் #52 தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான் #53 முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய் மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும் உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே #54 தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான் #55 நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான் #56 செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும் மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் #57 நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து #58 முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின் மன்னி புடை நின்றன மா மதி போல வைக #59 கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க #60 மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி #61 அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ் விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி #62 வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம் சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன் சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி #63 அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் #64 பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில் சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் #65 மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில் பானல் குல மா மலரில் படர் சோதியார் முன் தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள் #66 நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள் #67 அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார் #68 தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர் வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார் மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே #69 வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய் ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம் #70 போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள் வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் #71 நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன் எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார் #72 கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம் மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும் சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே #73 நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும் கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே #74 தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம் துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் #75 ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம் நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர் கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின் செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் #76 வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன் மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர் #77 வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர் எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் #78 ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம் கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன் சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் #79 தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான் வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே #80 வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய் செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள் #81 பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய் முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள் #82 கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர் குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால் வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே #83 நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான் தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம் வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே #84 கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால் மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி #85 பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய் நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே #86 துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார் வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார் அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார் கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர் #87 இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில் #88 போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில் தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல் ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார் #89 நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில் காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில் கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் #90 குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள் பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் #91 அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர் #92 வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன் காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம் ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார் #93 மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார் #94 என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன் நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான் #95 பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும் அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார் செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை #96 நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான் #97 ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம் போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல் மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும் தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம் #98 உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும் வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும் திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார் #99 ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார் #100 அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார் #101 கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் #102 முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும் #103 நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும் பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர் நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில் #104 திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார் #105 மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின் வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும் மோகமாய் ஓடி சென்றார் தழுவினார் மோந்து நின்றார் #106 நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும் வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற #107 வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல் கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன் இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார் #108 கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான் #109 வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான் #110 உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில் திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட #111 இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று #112 போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர் காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர் நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் #113 ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன் நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் #114 முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன் பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின் பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார் #115 காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன் கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம் மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன் #116 அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான் இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான் நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான் #117 என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள் முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார் வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு #118 கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார் #119 மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான் பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான் #120 தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல் ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில் ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார் #121 கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண் ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் #122 தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம் #123 இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின் முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில் வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார் #124 தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து #125 கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில் பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார் #126 அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர் மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன் இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான் #127 அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும் வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார் #128 சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும் கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார் #129 கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில் குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும் #130 விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும் இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும் #131 செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும் மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும் ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும் எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை #132 வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி #133 ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும் வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார் #134 மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் #135 எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார் மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார் #136 வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார் #137 மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார் தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம் ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார் #138 பொருப்பில் எழும் சுடர் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும் செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின் விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் #139 பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார் #140 பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால் துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார் #141 இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால் மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார் கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன் #142 திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல் பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி #143 பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும் அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள் துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார் #144 பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல் இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால் வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார் #145 இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள் கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து #146 வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின் ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு காய நெடும் கோல் கோத்து கனலின்-கண் உற காய்ச்சி தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் #147 எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும் வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது #148 நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார் #149 வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர் தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின் முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார் #150 ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல் ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில் ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார் #151 இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார் எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார் #152 மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர் தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால் ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல் #153 நாணனொடு காடனும் போய் நாகனுக்கு சொல்லிய பின் ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் #154 முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால் இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ #155 அ நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன் உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என #156 அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல் நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று #157 அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும் அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார் #158 பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல் அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால் விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல் #159 உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும் பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம் #160 இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால் செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா #161 வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால் நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால் செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய #162 மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல #163 உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால் எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய் மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார் #164 கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார் மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற #165 முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல் பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார் #166 கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம் வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி #167 மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார் #168 இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன் மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும் அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் #169 அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார் #170 வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர் சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் #171 விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும் #172 வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார் #173 வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும் நாடியும் காணார் மீண்டும் நாயனார்-தம்-பால் வந்து நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார #174 பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும் #175 என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும் மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார் #176 நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும் இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார் #177 மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும் இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார் உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார் #178 இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண் அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண் முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப #179 நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார் குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார் #180 வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம் நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில் உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர் குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார் #181 கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று #182 கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர் #183 செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற #184 கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும் ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும் ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப #185 பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார் #186 மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர் தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம் பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல்உற்றேன் மேல் @4 குங்கிலியக்கலய நாயனார் புராணம் #1 வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின் ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும் #2 வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம் அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல் செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும் #3 குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல் #4 துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும் மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும் அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும் #5 மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார் அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார் பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார் #6 பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால் மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம் சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் #7 கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும் தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார் #8 இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும் பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில் மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் #9 யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் #10 அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான் இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் #11 ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார் #12 பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும் என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார் அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழும் களிப்பினோடும் #13 விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில் அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார் #14 அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட #15 மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில் நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் #16 கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும் அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார் #17 காலனை காய்ந்த செய்ய காலனார் கலயனாராம் ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால் சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார் #18 கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார் #19 இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார் #20 மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம் மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன் தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் #21 பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் #22 ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால் ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் #23 செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும் அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம் பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல #24 மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க நல் நெறி கலயனார்-தாம் நாதனை நேரே காணும் அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும் மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார் #25 மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார் #26 காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும் தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி #27 சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார் #28 நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க ஒண்ணுமோ கலயனார்-தம் ஒருப்பாடு கண்ட போதே அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார் #29 பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம் கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து #30 விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர் மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார் #31 என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர் மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி #32 சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரர் ஆகும் அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு #33 மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால் ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார் #34 கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார் #35 தேன் நக்க கோதை மாதர் திரு நெடும் தாலி மாறி கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன் மேல் @5 மானக்கஞ்சாறத் தொண்ட நாயனார் புராணம் #1 மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும் கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் #2 கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும் தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும் மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள் #3 புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின் இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள் முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் #4 சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய் வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர் தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள் #5 பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் ஓங்கு நிலை தோரணமும் பூரணகும்பமும் உளவால் பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு #6 மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும் வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம் கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியது-ஆல் #7 அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம் செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார் மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை வைப்பு அனைய மேன்மையினார் மானக்கஞ்சாறனார் #8 பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின் அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார் #9 மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம் ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம் ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர் கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார் #10 விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால் அரி அறியா மலர் கழல்கள் அறியாமை அறியாதார் வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார் #11 குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால் இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் #12 பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார் #13 காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின் பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன் கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி #14 புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண் மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம் #15 உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும் நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய #16 திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும் ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய் கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர் #17 வந்த மூது அறிவோரை மானக்கஞ்சாறனார் முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார் #18 சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார் #19 மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார் தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் #20 கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும் தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய #21 வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண் ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார் #22 முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில் கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும் #23 அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும் பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும் #24 ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும் திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க #25 பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய் கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார் #26 வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார் எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார் #27 நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும் மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார் #28 ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் #29 தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன் மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார் #30 அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன் இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட #31 வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் #32 விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார் எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார் #33 மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள் நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம் ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர் பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார் #34 தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார் வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார் #35 வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு #36 மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால் புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் #37 ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் மேல் @6 அரிவாள்தாய நாயனார் புராணம் #1 வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள் கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் #2 செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் மன்னு பங்கய மா நிதி போன்று உள்ளார் #3 வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும் களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல் குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள் #4 அ குல பதி-தன்னில் அற_நெறி தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார் தொக்க மா நிதி தொன்மையில் ஓங்கிய மிக்க செல்வத்து வேளாண் தலைமையார் #5 தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார் சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா மாயனார் மண் கிளைத்து அறியாத அ தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் #6 மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல் #7 இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும் சிந்தை நீங்கா செயலின் உவந்திட முந்தை வேத முதல்வர் அவர் வழி வந்த செல்வம் அறியாமை மாற்றினார் #8 மேவு செல்வம் களிறு உண் விளங்கனி ஆவது ஆகி அழியவும் அன்பினால் பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார் #9 அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால் நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார் #10 சாலி தேடி அறுத்து அவை தாம் பெறும் கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள் மால் அயற்கு அரியார் அது மாற்றுவார் #11 நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார் #12 வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள் செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில் #13 மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன் #14 முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும் அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார் #15 போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால் காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று #16 நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார் #17 ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார் #18 மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும் ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே #19 திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று #20 அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி #21 என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார் #22 பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின் வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் #23 முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன் மேல் @7 ஆனாய நாயனார் புராணம் #1 மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு #2 நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல் மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின் காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி #3 வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால் அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை #4 பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என #5 அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும் ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும் மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால் #6 கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின் வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம் #7 பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம் அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர் மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் #8 ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும் செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும் அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர் #9 ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார் தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில் பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார் #10 ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும் தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார் #11 கன்றொடு பால் மறை நாகு கறப்பன பால் ஆவும் புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும் வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் #12 ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும் காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின் மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார் #13 முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம் வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து #14 எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும் தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள் #15 வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி #16 வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர் கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து #17 நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய #18 சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும் மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும் காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ பூ அலர் தார் கோவலனார் நிரை காக்க புறம் போந்தார் #19 நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள் ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் #20 எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர் தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர் அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் #21 சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார் #22 அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால் வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம் முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும் என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில் #23 ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத #24 முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம் அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார் #25 மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம் ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி #26 ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின் சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும் தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் #27 மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால் தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும் அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண #28 எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில் நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார் #29 வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின் உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன் தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க #30 ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும் மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய #31 ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும் மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும் கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார் #32 பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார் மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார் தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர் அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார் #33 சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன் விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார் #34 நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால் மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும் புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும் #35 மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா கரு வரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா #36 இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய் மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால் மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர் செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க #37 மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை வையம்-தன்னையும் நிறைத்து வானம் தன்வயமாக்கி பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும் ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல் #38 ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன் கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ #39 திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும் இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார் #40 முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும் செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார் #41 விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார் #42 தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் மேல்மும்மையால் உலகாண்ட சருக்கம் @1 மூர்த்தி நாயனார் புராணம் #1 சீர் மன்னு செல்வ_குடி மல்கு சிறப்பின் ஓங்கும் கார் மன்னு சென்னி கதிர் மா மணி மாட வைப்பு நார் மன்னு சிந்தை பல நல் துறை மாந்தர் போற்றும் பார் மன்னு தொன்மை புகழ் பூண்டது பாண்டிநாடு #2 சாயும் தளிர் வல்லி மருங்குல் நெடும் தடம் கண் வேயும் படு தோளியர் பண்படும் இன் சொல் செய்ய வாயும் படும் நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் பாயும் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் #3 மொய் வைத்த வண்டின் செறி குழல் முரன்ற சந்தின் மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் #4 சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள் தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அ தையல் ஒப்பார் யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் #5 சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய பால் பாய் முலை தோய் மது பங்கயம் பாய எங்கும் சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் #6 மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் சந்து ஆர் முலை மேலன தாழ் குழை வாள் முக பொன் செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை #7 மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர் மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை செம்மை பொருளும் தருவார் திரு ஆலவாயில் எம்மை பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் #8 அ பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மை செப்ப தகு சீர் குடி செய் தவம் செய்ய வந்தார் எ பற்றினையும் அறுத்து ஏறு உகைத்து ஏறுவார் தாள் மெய் பற்று என பற்றி விடாத விருப்பின் மிக்கார் #9 நாளும் பெரும் காதல் நயப்புறும் வேட்கையாலே கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் ஆளும் பெருமான் அடி தாமரை அல்லது இல்லார் மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் #10 அந்தி பிறை செம் சடை மேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தன காப்பிடை என்றும் முட்டா அந்த செயலின் நிலை நின்று அடியார் உவப்ப சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில் #11 கான கடி சூழ் வடுக கருநாடர் காவல் மான படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய் யானை குதிரை கருவி படை வீரர் திண் தேர் சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் #12 வந்துற்ற பெரும் படை மண் புதைய பரப்பி சந்த பொதியில் தமிழ்நாடு உடை மன்னன் வீரம் சிந்த செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் #13 வல்லாண்மையின் வண் தமிழ்நாடு வளம் படுத்து நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமை திறம் மேவிய நீற்றின் சார்பு செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் #14 தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னை சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் #15 செக்கர் சடையார் விடையார் திரு ஆலவாயுள் முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் எக்கர்க்கு உடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி #16 அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம் முந்தை தம் முறைமை பணி முட்டலர் செய்து வந்தார் தம்தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எம்-தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் #17 எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்ய தள்ளும் செயல் இல்லார் சந்தன காப்பு தேடி கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான் தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து #18 புன்மை செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் வன்மை கொடும் பாதகன் மாய்ந்திட வாய்மை வேத நன்மை திருநீற்று உயர் நல் நெறி தாங்கு மேன்மை தன்மை புவி மன்னரை சார்வது என்று சார்வார் #19 காய்வுஉற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும் சென்று ஆய்வுஉற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி ஏய்வுஉற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய்உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில்-தன்னில் #20 நட்டம் புரிவார் அணி நல் திரு மெய் பூச்சு இன்று முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய #21 கல்லின் புறம் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார் அல்லின் கண் எழுந்தது உவந்து அருள்செய்த வாக்கு #22 அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்-பால் வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்து காத்து பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன #23 இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு செய் வண்ணம் ஒழிந்திட தேய்ந்த புண் ஊறு தீர்ந்து கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் #24 அந்நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் மன் ஆகிய போர் வடுக கருநாடர் மன்னன் தன் நாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு மின் ஆம் என நீடிய மெய் நிலையாமை வெல்ல #25 இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல் அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் வெம் வாய் நிரயத்துஇடை விரைந்து வீந்தான் #26 முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத #27 அ வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடி தங்கள் கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி வை வேலவன்-தன் குல மைந்தரும் இன்மையாலே செய் வேறு வினை திறம் சிந்தனை செய்து தேர்வார் #28 தாழும் செயல் இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும் கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார் #29 பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன் நெடும் குடை கீழ் தம்தம் நெறிகளில் சரிந்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணும் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் #30 இவ்வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்ற கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று #31 செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் இ மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றி கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் #32 கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர் மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி #33 நீங்கும் இரவின்-கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் ஈங்கு எம்பெருமான் அருளாம் எனில் இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கி பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப #34 வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று வாழ்வுற்று உலகம் செய் தவத்தினின் வள்ளலாரை சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே #35 மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மை காணா ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அ ஊர் #36 சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரியோடும் எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை_இல்ல அங்குஅங்கு மலிந்தன வாழ்த்து ஒலி அம் பொன் கொம்பின் பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் #37 வெம் கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரி தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை அங்கண் கொடு புக்கு அரியாசனத்து ஏற்றி ஒற்றை திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் #38 மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதி-கண் துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் #39 வந்துற்று எழு மங்கல மாந்தர்கள்-தம்மை நோக்கி சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் முந்தை செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் இந்த புவி தாங்கி இ விண்ணரசு ஆள்வான் என்றார் #40 அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் எவ்வாறு அருள்செய்தனை மற்று அவை அன்றி யாவர் செய்வார் பெரியோய் என சேவடி தாழ்ந்து செப்ப #41 வையம் முறை செய்குவனாகில் வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக செழும் கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும் மொய் புன் சடை மா முடியே முடி ஆவது என்றார் #42 என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் வன் திண் மதிநூல் வளர் வாய்மை அமைச்சர்-தாமும் நன்று இங்கு அருள்-தான் என நல் தவ வேந்தர் சிந்தை ஒன்றும் அரசாள் உரிமை செயல் ஆன உய்த்தார் #43 மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்க சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் தேடும் கழலார் திரு ஆலவாய் சென்று தாழ்ந்து நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார் #44 மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் பொன்னின் அரி மெல் அணை சாமரை காமர் பூம் கால் மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி #45 குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைக கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி நிலவும் திருநீற்று நெறி துறை நீடு வாழ உலகு எங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன #46 நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் #47 ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து #48 பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம் பிணியா வகை இ உலகு ஆண்டு தொண்டின் பேதம் புரியா அருள் பேர் அரசாள பெற்று நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே #49 அகல் பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம் முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி புகலூர் வரும் அந்தணர்-தம் திறம் போற்றல் உற்றாம் மேல் @2 முருகநாயனார் புராணம் #1 தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர் #2 நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மை திருந்து ஒளியால் யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல் காமர் மது உண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்கும்-ஆல் #3 நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கு அலைய வண்ண மதுர தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மட மென் சாரிகையின் பண்ணின் கிளவி மணி வாயும் பதிக செழும் தேன் பொழியும்-ஆல் #4 வண்டு பாட புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல அண்டர் பெருமான் திரு பாட்டின் அமுதம் பெருக செவி மடுக்கும் தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்பும்-ஆல் #5 ஆன பெருமை வளம் சிறந்த அம் தண் புகலூர் அது-தன்னில் மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை மறை முதல்வர் ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் #6 அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங்கமல வயல் கயல்கள் மடை மேல் உகளும் திரு புகலூர் மன்னி வாழும் தன்மையராய் விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றை சடை மேல் அணிய திருப்பள்ளி தாமம் பறித்து சாத்துவார் #7 புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் மலரும் செவ்வி தம் பெருமான் முடி மேல் வான்_நீர்_ஆறு மதி உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த அலகு_இல் மலர்கள் வெவ்வேறு திரு பூம் கூடைகளில் அமைப்பார் #8 கோட்டு மலரும் நில மலரும் குளிர் நீர் மலரும் கொழும் கொடியின் தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் காட்டு முறுவல் நிலவு அலர கனக வரையின் பன்னக நாண் பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து #9 கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும் இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும் நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் #10 ஆங்கு அ பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்து தாங்கி கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிக பற்றான ஓங்கி சிறந்த அஞ்சு_எழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் #11 தள்ளும் முறைமை ஒழிந்திட இ தகுதி ஒழுகும் மறையவர்-தாம் தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலை பால் உடன் உண்ட பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் #12 அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல் மன்னும் புகலூர் உறைவாரை வர்த்தமான ஈச்சுரத்து நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே பன்னும் பெருமை அஞ்சு_எழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் #13 அங்கண் அமரும் திரு முருகர் அழகு ஆர் புகலி பிள்ளையார் பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கு அருளி செம் கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்க தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் #14 அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ் விரவு புகலூர் முருகனார் மெய்மை தொண்டின் திறம் போற்றி கரவு_இல்லவர்-பால் வருவாரை கருத்தில் உருத்திரம் கொண்டு பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்உற்றேன் மேல் @3 உருத்திர பசுபதி நாயனார் புராணம் #1 நிலத்தின் ஓங்கிய நிவந்து எழும் பெரும் புனல் நீத்தம் மலர் தடம் பணை வயல் புகு பொன்னி நல் நாட்டு குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமி தலத்தின் மேம்படு நலத்தது பெரும் திரு தலையூர் #2 வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ தேன் அளிப்பன நறு மலர் செறி செழும் சோலை ஆன் அளிப்பன அஞ்சு உகந்து ஆடுவார்க்கு அ ஊர் தான் அளிப்பன தருமமும் நீதியும் சால்பும் #3 அங்கண் மா நகர் அதனிடை அரு_மறை வாய்மை துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி பங்கனார் அடிமை திறம் புரி பசுபதியார் #4 ஆய அந்தணர் அரு_மறை உருத்திரம் கொண்டு மாயனார் அறியா மலர் சேவடி வழுத்தும் தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் #5 கரை_இல் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் நிரை நெடும் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய விரை நெகிழ்ந்த செங்கமலம் என் பொய்கையுள் மேவி #6 தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து தள்ளு வெண் திரை கங்கை நீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் #7 அரு_மறை பயன் ஆகிய உருத்திரம்-அதனை வரு முறை பெரும் பகலும் எல்லியும் வழுவாமே திரு மலர் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள் ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் #8 காதல் அன்பர்-தம் அரும் தவ பெருமையும் கலந்த வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்து அருள்செய்ய மற்று அவர்-தாம் தீது_இலா நிலை சிவபுரி எல்லையில் சேர்ந்தார் #9 நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் ஆடு சேவடி அருகுஉற அணைந்தனர் அவர்க்கு பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார்-ஆம் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற #10 அயில் கொள் மு_குடுமி_படையார் மருங்கு அருளால் பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி எயில் உடை தில்லை எல்லையில் நாளைப்போவாராம் செயல் உடைப்புற திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் மேல் @4 திருநாளைப்போவார் புராணம் #1 பகர்ந்து உலகு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும் திகழ்ந்த புனல் கொள்ளிடம் பொன் செழு மணிகள் திரை கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும் அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் #2 நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின் சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் ஆற்று அலவன் கொழு கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறி சேற்று அலவன் கரு உயிர்க்க முருகு உயிர்க்கும் செழும் கமலம் #3 நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் தினகர மண்டலம் வருடும் செழும் தருவின் குலம் பெருகி கனம் மருவி அசைந்து அலைய களி வண்டு புடைசூழ புனல் மழையோ மது மழையோ பொழிவு ஒழியா பூம் சோலை #4 பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த வாளை புதைய சொரிந்த பழம் மிதப்ப வண் பலவின் நீளம் முதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்து உகளும் #5 வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் வியல் இடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவின ஆம் புயல் அடையும் மாடங்கள் பொலிவு எய்த மலிவு உடைத்தாய் அயலிடை வேறு அடி நெருங்க குடி நெருங்கி உளது அ ஊர் #6 மற்று அ ஊர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில் சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை புல் குரம்பை சிற்றில் பல நிறைந்து உளது ஓர் புலைப்பாடி #7 கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும் வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் கார் இரும்பின் சரி செறிகை கரும் சிறார் கவர்ந்து ஓட ஆர் சிறு மென் குரைப்பு அடக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி #8 வன் சிறு தோல் மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும் தன் சினை மென் பெடை ஒடுங்கும் தடம் குழிசி புதை நீழல் மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் புன் தலை நாய் புனிற்று முழை புடைத்து எங்கும் உடைத்து எங்கும் #9 செறி வலி திண் கடைஞர் வினை செயல் புரிவை கறை யாம குறி அளக்க உளைக்கும் செம் குடுமி வாரண சேக்கை வெறி மலர் தண் சினை காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம் நெறி குழல் புன் புலை மகளிர் நெல் குறு பாட்டு ஒலி பரக்கும் #10 புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கை உடை புடை எங்கும் தள்ளும் தாள் நடை அசைய தளை அவிழ் பூம் குவளை மது விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும் #11 இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார் மெய் பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார் அ பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார் ஒப்பு_இலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் #12 பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறை கண்ணி பெருந்தகைபால் சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய் மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் #13 ஊரில் விடும் பறை துடைவை உணவு உரிமையா கொண்டு சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால் கூர் இலைய மு_குடுமி_படை_அண்ணல் கோயில்-தொறும் பேரிகையே முதலாய முக கருவி பிறவினுக்கும் #14 போர்வை தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனைகட்கு ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் #15 இ வகையால் தம் தொழிலின் இயன்ற எலாம் எவ்விடத்தும் செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று மெய் விரவு பேர் அன்பு மிகுதியினால் ஆடுதலும் அ இயல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் #16 திரு புன்கூர் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து விருப்பினொடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும் வருத்தமுறும் காதலினால் வந்து அ ஊர் மருங்கு அணைந்தார் #17 சீர் ஏறும் இசை பாடி திருத்தொண்டர் திரு வாயில் நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார் கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு போர் ஏற்றை விலங்க அருள்புரிந்து அருளி புலப்படுத்தார் #18 சிவலோகம் உடையவர்-தம் திரு வாயில் முன் நின்று பவலோகம் கடப்பவர்-தம் பணிவிட்டு பணிந்து எழுந்து சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் #19 வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திருவருளால் தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதன் பின் தம் பெருமான் இடம் கொண்ட கோயில் புறம் வலம்கொண்டு பணிந்து எழுந்து நடம் கொண்டு விடைகொண்டு தம் பதியில் நண்ணினார் #20 இ தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி மெய் திருத்தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த சித்தமொடும் திரு தில்லை திரு மன்று சென்று இறைஞ்ச உய்த்த பெரும் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப #21 அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதன் பின் அங்கு எய்த ஒன்றி அணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை என்று இதுவும் எம்பெருமான் ஏவல் என போக்கு ஒழிவார் நன்று எழும் காதல் மிக நாளை போவேன் என்பார் #22 நாளை போவேன் என்று நாள்கள் செல தரியாது பூளை பூவாம் பிறவி பிணிப்பு ஒழிய போவாராய் பாளை பூம் கமுகு உடுத்த பழம் பதியின்-நின்றும் போய் வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் #23 செல்கின்ற போழ்து அந்த திரு எல்லை பணிந்து எழுந்து பல்கும் செம் தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும் மல்கு பெரும் இடை ஓதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் #24 நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன் சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் குன்று அனைய மாளிகைகள்-தொறும் குலவும் வேதிகைகள் ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் #25 இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி அ பதியின் மதில் புறத்தின் ஆராத பெரும் காதல் ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் #26 இவ்வண்ணம் இரவு_பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய அவ்வண்ணம் நினைந்து அழிந்த அடி தொண்டர் அயர்வு எய்தி மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது எவ்வண்ணம் என நினைந்தே ஏசறவினொடும் துயில்வார் #27 இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார் அ நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி மன்னு திருத்தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு முன் அணைந்து கனவின்-கண் முறுவலோடும் அருள்செய்வார் #28 இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து அ பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க மெய்ப்பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் #29 தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி எம்பெருமான் அருள்செய்த பணி செய்வோம் என்று ஏத்தி தம் பரிவு பெருக வரும் திருத்தொண்டர்-பால் சார்ந்தார் #30 ஐயரே அம்பலவர் அருளால் இ பொழுது அணைந்தோம் வெய்ய அழல் அமைத்து உமக்கு தர வேண்டி என விளம்ப நையும் மன திருத்தொண்டர் நான் உய்ந்தேன் என தொழுதார் தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் #31 மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம் நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் #32 கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் எய்திய அ பொழுதின் கண் எரியின் கண் இ மாய பொய் தகையும் உருவு ஒழித்து புண்ணிய மா முனி வடிவாய் மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் #33 செம் தீ மேல் எழும் பொழுது செம் மலர் மேல் வந்து எழுந்த அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம் வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்து பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் #34 திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார் பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க வருகின்றார் திருநாளைப்போவாராம் மறை முனிவர் #35 தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்ல சென்று எய்தி கொல்லை மான் மறி கரத்தார் கோபுரத்தை தொழுது இறைஞ்சி ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும் எல்லையினை தலைப்பட்டார் யாவர்களும் கண்டிலரால் #36 அந்தணர்கள் அதிசயத்தார் அரு முனிவர் துதி செய்தார் வந்து அணைந்த திருத்தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க அந்தம் இலா ஆனந்த பெரும் கூத்தர் அருள்புரிந்தார் #37 மாசு உடம்பு விட தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து ஆசு_இல் மறை முனி ஆகி அம்பலவர் தாள் அடைந்தார் தேசு உடைய கழல் வாழ்த்தி திருக்குறிப்புத்தொண்டர் வினை பாசம் அற முயன்றவர்-தம் திருத்தொண்டின் பரிசு உரைப்பாம் மேல் @5 திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் #1 ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லை_இல் கருணை தாய் அனாள் தனி ஆயின தலைவரை தழுவ ஆயும் நான்_மறை போற்ற நின்று அரும் தவம் புரிய தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு #2 நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேவிய தலைமை சால் பெரும் குடி தழைப்ப வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு #3 நல் திறம் புரி பழையனூர் சிறுத்தொண்டர் நவை வந்து உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு-கால் சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டைநாடு #4 ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும் சேண் உலாவு சீர் சேரனார் திருமலைநாட்டு வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு #5 கறை விளங்கிய கண்டர்-பால் காதல் செய் முறைமை நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டைநாட்டு முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்து-ஆல் #6 தா_இல் செம் மணி அருவி ஆறு இழிவன சாரல் பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம் வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் #7 குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம் சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் #8 கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரை-பால் தண் துணர் கொன்றை பொன் சொரி தளவு அயல்-பால் வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயல்-பால் கண்டல் முன் துறை கரி சொரிவன கலம் கடல்-பால் #9 தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலை சீறூர் பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் #10 குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம் நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் #11 மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் பல் பெரும் புனம் பயில்வன படர் சிறை தோகை சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை #12 அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும் மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் #13 பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து மாறு_இல் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும் ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி #14 அம் பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அரமகளிர் வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் உடைத்து-ஆல் கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ #15 கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து கால வேனிலில் கடும் பகல் பொழுதினை பற்றி பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு #16 சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும் பல் பெரும் புனல் கான்யாறிடை இடை பரந்து கொல்லை மெல் இணர் குருந்தின் மேல் படர்ந்த பூம் பந்தர் முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை #17 பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும் அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று #18 மங்கையர்க்கு வாள் விழி இணை தோற்ற மான் குலங்கள் எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர் கொடி எங்கும் அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் செம் கண் மால் தொழும் சிவன் மகிழ் திருமுல்லைவாயில் #19 நீறு சேர் திரு மேனியர் நிலா திகழ் முடி மேல் மாறு_இல் கங்கை தான் அவர்க்கு மஞ்சனம் தர அணைந்தே ஊறு நீர் தரும் ஒளி மலர் கலிகை மா நகரை வேறு தன் பெரு வைப்பு என விளங்கும் மா முல்லை #20 வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி பாசடை தடம் தாமரை பழனங்கள் மருங்கும் பூசல் வன் கரை குளங்களும் ஏரியும் புகுவ #21 துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால் பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசை போந்தே அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள் பங்கய தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி #22 பிள்ளை தைவர பெருகு பால் சொரி முலை தாய் போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறி பள்ள நீள் வயல் பரு மடை உடைப்பது பாலி #23 அனைய ஆகிய நதி பரந்து அகன் பணை மருங்கில் கனை நெடும் புனல் நிறைந்து திண் கரை பெரும் குளங்கள் புனை இரும் கடி மதகு வாய் திறந்திட புறம் போய் வினைஞர் ஆர்ப்பு ஒலி எடுப்ப நீர் வழங்குவ வியன் கால் #24 மாறு_இல் வண் பகட்டு ஏர் பல நெருங்கிட வயல்கள் சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன வேறு பல் வினை உடை பெரும் கம்பலை மிகும்-ஆல் #25 வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை பெரும் குலைப்பட விலங்குவ பிறங்கு நீர் பழனம் நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி #26 தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரை தவிசின் இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்பிடை ஊர் கோள் வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு #27 ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை #28 நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின் கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர்கொள்ளும் பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் #29 தொல்லை நான்_மறை முதல் பெரும் கலை ஒலி துவன்றி இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும் செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் #30 தீது நீங்கிட தீ கலியாம் அவுணற்கு நாதர் தாம் அருள்புரிந்தது நல்_வினை பயன் செய் மாதர் தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும் #31 அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும் பருவி ஓடைகள் நிறைந்து இழி பாலியின் கரையின் மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மால் பேறாம் பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் #32 விரும்பு மேன்மை என் பகர்வது விரி திரை நதிகள் அரும் கரை பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் #33 பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர் தாம் அரும் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் காமர் தண் பணை புறத்தது கரும் கழி நெய்தல் #34 தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள் சேய நீள் விழி பரத்தியர் தொடுப்பன செருந்தி ஆய பேர் அள தளவர்கள் அளப்பன உப்பு சாயன் மெல் இடை அளத்தியர் அளப்பன தரளம் #35 கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர்-தம் வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி #36 கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய வழி கரை பொதி பொன் அவிழ்ப்பன மலர் புன்னை விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை #37 காயல் வண் கரை புரை நெறி அடைப்பன கனி முள் சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள் ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது #38 வாம் பெரும் திரை வளாக முன் குடி பயில் வரைப்பில் தாம் பரப்பிய கயல்களின் விழி கயல் தவிர காம்பின் நேர் வரும் தோளியர் கழி கயல் விலை செய் தேம் பொதிந்த சில் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் #39 மருள் கொடும் தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும் ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு #40 மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ் மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் நெய்தல் எய்த முன் செய்த அ நிறை தவம் சிறிதோ #41 கோடு கொண்டு எழும் திரை கடல் பவள மென் கொழுந்து மாடு மொய் வரை சந்தன சினை மிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய #42 மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை தலை உகைப்பவும் தளை செறு விடை நெடும் கருமான் கலை குதிப்பன கரும் பகட்டு ஏர் நிகர்ப்பவுமாய் அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் #43 புணர்ந்த ஆன் நிரை புற விடை குறு முயல் பொருப்பின் அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து மணம் கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரை கார் இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் #44 கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள் அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் உவரி நெய்தலும் கானமும் கலந்து உள ஒழுக்கம் #45 அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும் வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி இயலும் அன்னமும் தோகையும் எதிர்எதிர் பயில வயலும் முல்லையும் இயைவன பல உள மருங்கு #46 மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென் தோளும் உழத்தியர் மகளிர் மாறு ஆடி முன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் #47 ஆய நால் நிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கி தீய என்பன கனவிலும் நினைவு இலா சிந்தை தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ #48 இ வளம் தரு பெரும் திரு நாட்டிடை என்றும் மெய் வளம் தரு சிறப்பினால் உலகு எலாம் வியப்ப எ உகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும் கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் #49 ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை மான அர்ச்சனையால் ஒரு காலத்து வழிபட்டு ஊனம்_இல் அறம் அனேகமும் உலகு உய்ய வைத்த மேன்மை பூண்ட அ பெருமையை அறிந்தவா விளம்பில் #50 வெள்ளி மால் வரை கயிலையில் வீற்றிருந்து அருளி துள்ளு வார் புனல் வேணியர் அருள்செய தொழுது தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் #51 எண்_இல் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும் உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள அண்ணலார்-தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணின் நல்லவள் ஆயின பெரும் தவ கொழுந்து #52 நங்கை உள் நிறை காதலை நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது என்-கொல் நின்-பால் என வினவ இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி போகம் ஆர்த்த பூண் முலையினாள் போற்ற #53 தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் யாவரும் தனை அடைவது மண் மேல் என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள் மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு கொண்டு எழுந்தருளுதற்கு இசைந்தாள் #54 ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த பேதமும் புரந்து அருளும் அ கருணை பிரான் மொழிந்த ஆகம வழி பேணி போது நீர்மையில் தொழுதனள் போத பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் #55 துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி தாள் தலை மிசை வைத்தே அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன மலை_மடந்தை மற்று அதற்கு அருள்புரிந்து #56 அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப அளவு_இல் இன்பத்தின் அருள் கரு விருத்தி திங்கள் தங்கிய புரி சடையார்க்கு திருந்து பூசனை விரும்பினள் செய்ய எங்கும் நாடவும் திருவிளையாட்டால் ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழிய பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே புரிவு செய்தனள் பொன்_மலை_வல்லி #57 நெஞ்சம் ஈசனை காண்பதே விரும்பி நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி தஞ்சம் ஆகிய அரும் தவம் புரிய தரிப்பரே அவள் தனி பெரும் கணவர் வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண #58 கண்ட போதில் அ பெரும் தவ பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை வண்டு உலாம் குழல் கற்றை முன் தாழ வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்க கொண்ட காதலின் விருப்பளவு இன்றி குறித்த பூசனை கொள்கை மேல் கொண்டு தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் #59 உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம் உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு இயல்பில் வாழ் திரு சேடியரான கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணைய குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் #60 கொய்த பன் மலர் கம்பை மா நதியில் குலவு மஞ்சனம் நிலவு மெய் பூச நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும் போதினில் உதவ மெய் பூச எய்த ஆகம விதி எலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி #61 கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகர்-பால் நிரந்த காதல் செய் உள்ளத்தள் ஆகி நீடு நன்மைகள் யாவையும் பெருக வரம் தரும் பொருளாம் மலை_வல்லி மாறு_இலா வகை மலர்ந்த பேர் அன்பால் சிரம் பணிந்து எழு பூசை நாள்-தோறும் திரு உளம் கொள பெருகியது அன்றே #62 நாதரும் பெரு விருப்பொடு நயந்து நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில் காதல் மிக்கவோர் திருவிளையாட்டில் கனம்_குழைக்கு அருள்புரிந்திட வேண்டி ஓதம் ஆர் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி வானமும் உட்பட பரந்து மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் #63 அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல் விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை தண் நிலா மலர் வேணியினாரை தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் #64 மலை_குல_கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே கொலை களிற்று உரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் #65 கம்பர் காதலி தழுவ மெய் குழைய கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன உம்பரே முதல் யோனிகள் எல்லாம் உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த வம்பு உலா மலர் நிறைய விண் பொழிய கம்பை ஆறு முன் வணங்கியது அன்றே #66 பூதி ஆகிய புனித நீர் ஆடி பொங்கு கங்கை தோய் முடி சடை புனைந்து காதில் வெண் குழை கண்டிகை தாழ கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் #67 கோது_இலா அமுது அனையவள் முலை குழைந்த தம் மணவாள நல் கோலம் மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள வேத காரணர் ஆய ஏகம்பர் விரை மலர் செய்ய தாமரை கழல் கீழ் ஏதம் நீங்கிய பூசனை முடிந்ததின்மை-தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி #68 அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பி கொண்ட இற்றை என் பூசனை இன்னும் குறை நிரம்பிட கொள்க என்று அருள வண்டு வார் குழல் மலை_மகள் கமல வதனம் நோக்கி அம் மலர் கண் நெற்றியின் மேல் முண்ட நீற்றர் நின் பூசனை என்றும் முடிவது இல்லை நம்-பால் என மொழிய #69 மாறு_இலாத இ பூசனை என்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி ஈறு_இலாத இ பதியின் உள் எல்லா அறமும் யான் செய அருள்செய வேண்டும் வேறு செய் வினை திருவடி பிழைத்தல் ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும் பேறு மா தவ பயன் கொடுத்து அருளப்பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் #70 விடையின் மேலவர் மலை_மகள் வேண்ட விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக பர திரு நாழி நெல் அளித்து கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும் காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீ_வினையும் தடைபடாது மெய் நெறி அடைவதற்காம் தவங்களாகவும் உவந்து அருள்செய்தார் #71 எண்_அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி மனை அறம் பெருக்கும் கருணையினால் நண்ணும் மன் உயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கை புண்ணிய திரு காமகோட்டத்து பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் #72 அலகு_இல் நீள் தவத்து அற பெரும் செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம் உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்த பேர் உலகம் மலர் பெரும் திரு காமகோட்டத்து வைத்த நல் அறம் மன்னவே மன்னும் #73 தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும் சிறப்பினால் திரு காமகோட்டத்தின் பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும் உள்ளது ஒன்று உலகாணி என்று உளது-ஆல் #74 அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும் அன்னை-தன் திரு காமகோட்டத்தில் வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் சந்த மாதிரம் மயங்கி எம்மருங்கும் சாயை மாறிய தன் திசை மயக்கும் இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும் உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளது-ஆல் #75 கன்னி நல் நெடும் காப்பு உடை வரைப்பில் காஞ்சியாம் திரு நதி கரை மருங்கு சென்னியில் பிறை அணிந்தவர் விரும்பும் திரு பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் தன் நிழல் பிரியாத வண் காஞ்சி தானம் மேவிய மேன்மையும் உடைத்து-ஆல் #76 மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து மாறு_இலா நியமம் தலை நின்று முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம் நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு ஆகமங்கள் அவரவர்க்கு அருளி இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள் எண்_இறந்த அ திரு நகர் எல்லை #77 மன்னுகின்ற அ திருநகர் வரை பின் மண்ணில் மிக்கது ஓர் நன்மையினாலே துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் தன் நிலத்து-நின்று அகற்றுதல் செய்யும் தானம் அன்றியும் தனு எழும் தரணி எ நிலைத்தினும் காண்பு_அரும் இறவா தானம் என்று இவை இயல்பினில் உடைத்து-ஆல் #78 ஈண்டு தீ_வினை யாவையும் நீக்கி இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம் வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம் நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா ஆண்டு நீடிய தீர்த்தம் எண்_இலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார் #79 தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் நீள வார் புனல் குட திசை ஓடி நீர் கரக்கு மா நதியுடன் நீடு நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில் கண் படாத காயா புளி உளது-ஆல் #80 சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று மாயை இன்றி வந்து உள் அடைந்தார்கள் வானரத்து உருவாம் பிலம் ஒன்று மேய அ உரு நீங்கிட குளிக்கும் விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு அனைய ஆகிய அதிசயம் பலவால் #81 அஞ்சு வான் கரத்து ஆறு இழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரை இருள் திரியும் மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும் #82 சத்தி தற்பரசித்தி யோகிகளும் சாதக தனி தலைவரும் முதலா நித்தம் எய்திய ஆயுள் மெய் தவர்கள் நீடு வாழ் திரு பாடியும் அனேகம் சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி வித்தக கரி மேல் கொளும் காரி மேவும் செண்டு அணை வெளியும் ஒன்று உளது-ஆல் #83 வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று உளாரை தாம் காண்பிடம் உளது சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் #84 தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும் மெய் நெறி-கண் நின்றார்கள் தாம் விரும்பி தீண்டில் யாவையும் செம்பொன் ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிது-ஆல் ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில யோனியும் அளிக்கும் அ நகரம் #85 என்றும் உள்ள இ நகர் கலியுகத்தில் இலங்கு வேல் கரிகால் பெருவளத்தோன் வன் திறல் புலி இமய மால் வரை மேல் வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை சென்று வேடன் முன் கண்டு உரை செய்ய திருந்து காதம் நான்கு உட்பட வகுத்து குன்று போலும் மா மதில் புடை போக்கி குடி இருத்தின கொள்கையின் விளங்கும் #86 தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் #87 கொந்து அலர் பூம் குழல் இமய கொம்பு கம்பர் கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த வாய்மை ஆகம விதியின் வகுப்பு போலும் அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ #88 ஆங்கு வளர் எயிலின் உடன் விளங்கும் வாயில் அ பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல ஓங்கு நிலை தன்மையவாய் அகிலம் உய்ய உமை_பாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால் தீங்கு நெறி அடையாத தடையும் ஆகி செம் நெறி-கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம் தாம் குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட நெடு வான் அளப்பனவாம் தகைய ஆகும் #89 மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த நகர் அணி வரைகள் நடுவு போக்கி கூறுபடு நவ கண்டம் அன்றி மல்க கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன விளங்கிய மாலோக நிலை மேவிற்று அன்றே #90 பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல் தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி மாகம் இடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு தாரகை அலைய வரம்பு_இல் வண்ண மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் #91 கிளர் ஒளி செம் கனக மயம்-தான் ஆய் மாடு கீழ் நிலையோர் நீல சோபனம் பூண கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு மாளிகையும் உள மற்று மறுகு-தோறும் #92 மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் வன் புலியின் உரி ஆடை திரு ஏகம்பர் வளர் சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு அன்பு உருகி மெய் பொழிய கண்ணீர் வாரும் அடியவரும் அனைய உள அலகு_இலாத #93 முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும் நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் அகில யோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் #94 பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று பூம் கழங்கு மணி பந்தும் போற்றி ஆடும் வில் புருவ கொடி மடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர் அன்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும் அணி மணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி நல் கனக மழை அன்றி காஞ்சி எல்லை நவ மணி மாரியும் பொழியும் நாளும்நாளும் #95 பூ_மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன பொன் மாட தரமியங்கள் பொலிய நின்று மா மகர குழை மகளிர் மைந்தர் அங்கண் வந்து ஏறு முன் நறு நீர் வண்டல் ஆட தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும் கரு முகில்கள் செம் முகில்கள் ஆகி காட்டும் #96 இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தமர்களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்-தங்களையும் விசும்பிடை-நின்று இழியா நிற்கும் அமரரையும் அரமகளிர்-தமையும் வெவ்வேறு அறிவ_அரிதாம் தகைமையன அனேகம் அங்கண் #97 அரவ நெடும் தேர் வீதி அருகு மாடத்து அணி மணி கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கி தோன்றும் பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர் #98 வெம்பு சின களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியன் நெடும் தேர் கால் இசைப்பும் விழவு அறாத அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் #99 அரு_மறை அந்தணர் மன்னும் இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாட பெரு மறுகு-தொறும் வேள்வி சாலைஎங்கும் பெறும் அவி பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர் வரு முறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில் திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லா தேவரையும் அணித்து ஆக கொண்டு செல்லும் #100 அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் புரசை மத கரிகளொடு புரவி ஏறும் பொற்பு உடைய வீதிகளும் பொலிய எங்கும் விரை செய் நறும் தொடை அலங்கல் குமரர் செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர் நிரை செறியும் விமான_ஊர்திகளின் மேலும் நிலம் மிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் #101 வெயில் உமிழும் பன் மணி பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க வயின் நிலவு மணி கடை மா நகர்கள் எல்லாம் வனப்பு உடைய பொருள் குலங்கள் மலிதலாலே கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும் கம்பமும் மேவிய தன்மை கண்டு போற்ற பயிலும் உரு பல கொண்டு நிதி கோன் தங்க பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் #102 விழவு மலி திரு காஞ்சி வரைப்பின் வேளாண் விழு குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம் தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை உழவு தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம் ஓங்க வரும் தரும வினைக்கு உளர்-ஆல் என்றும் #103 ஓங்கிய நால் குலத்து ஒவ்வா புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி தாம் குழுமி பிறந்த குல பேதம் எல்லாம் தம் தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த வினை தொழிலின் முறைமை வழாமை நீடு பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம் பண்பு நீடிய உரிமை-பால அன்றே #104 ஆதி மூதெயில் அ நகர் மன்னிய சோதி நீள் மணி தூபமும் தீபமும் கோது_இல் பல்லியமும் கொடியும் பயில் வீதி நாளும் ஒழியா விழா அணி #105 வாயில் எங்கணும் தோரணம் மா மதில் ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ் கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் #106 வேத வேதியர் வேள்வியே தீயன மாதர் ஓதி மலரே பிணியன காதல் வீதி விலக்கே கவலைய சூத மாதவியே புறம் சூழ்வன #107 சாயலார்கள் நுசுப்பே தளர்வன ஆய மாட கொடியே அசைவன சேய ஓடை களிறே திகைப்பன பாய சோலை தருவே பயத்தன #108 அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன தண் நறும் செழும் தாதே துகள்வன வண்ண நீள் மணி மாலையே தாழ்வன எண்_இல் குங்கும சேறே இழுக்கின #109 வென்றி வானவர் தாம் விளையாடலும் என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது #110 புரம் கடந்தவர் காஞ்சிபுரம் புகழ் பரம்பு நீள் புவனம் பதி நான்கினும் வரம்பு_இல் போக வனப்பின் வளம் எல்லாம் நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால் #111 அவ்வகைய திரு நகரம் அதன் கண் ஒரு மருங்கு உறைவார் இ உலகில் பிறப்பினால் ஏகாலி குலத்து உள்ளார் செவ்விய அன்பு உடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார் மை விரவு கண்டர் அடி வழி தொண்டர் உளர் ஆனார் #112 மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும் அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் புண்ணிய மெய் தொண்டர் திரு குறிப்பு அறிந்து போற்று நிலை திண்மையினால் திருக்குறிப்புத்தொண்டர் எனும் சிறப்பினார் #113 தேர் ஒலிக்க மா ஒலிக்க திசை ஒலிக்கும் புகழ் காஞ்சி ஊர் ஒலிக்கும் பெரு வண்ணார் என ஒண்ணா உண்மையினார் நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் பேர் ஒலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பினொடும் #114 தேசு உடைய மலர் கமல சேவடியார் அடியார்-தம் தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி மாசு-தனை விட கழித்து வரும் நாளில் அங்கு ஒருநாள் #115 பொன் இமய பொருப்பு அரையன் பயந்து அருளும் பூம்_கொடி-தன் நல் நிலைமை அன்று அளக்க எழுந்தருளும் நம் பெருமான் தன்னுடைய அடியவர்-தம் தனி தொண்டர் தம்முடைய அ நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்புரிவான் வந்து அணைவார் #116 சீதம் மலி காலத்து திருக்குறிப்புத்தொண்டர்-பால் ஆதுலர் ஆய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன் மா தவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள் கோது அடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொள குறுகி #117 திருமேனி வெண் நீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்து கரு மேகம் என அழுக்கு கந்தையுடன் எழுந்தருளி வரும் மேனி அரும் தவரை கண்டு மனம் மகிழ்ந்து எதிர்கொண்டு உரு மேவும் மயிர் புளகம் உளவாக பணிந்து எழுந்தார் #118 எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என மை திகழ் கண்டம் கரந்த மா தவத்தோர் அருள்செய்வார் #119 இ கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான் மெய் கொண்ட குளிர் குடைந்து விட மாட்டேன் மேல் கடல்-பால் அ குன்றம் வெம் கதிரோன் அணைவதன் முன் தருவீரேல் கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் #120 தந்து அருளும் இ கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும் கந்தை இது ஒலித்து உணக்கி கடிது இன்றே தாரீரேல் இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் #121 குறித்த பொழுதே ஒலித்து கொடுப்பதற்கு கொடு போந்து வெறி தட நீர் துறையின் கண் மா செறிந்து மிக புழுக்கி பிறித்து ஒலிக்க புகும் அளவில் பெரும் பகல் போய் பின்பகலாய் மறி கரத்தார் திருவருளால் மழை எழுந்து பொழிந்திடுமால் #122 திசை மயங்க வெளி அடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய அசைவு உடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அரும் தவர் பால் இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் #123 ஓவாதே பொழியும் மழை ஒருக்கால் விட்டு ஒழியும் என காவாலி திருத்தொண்டர் தனி நின்றார் விட காணார் மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால் ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவா என விழுந்தார் #124 விழுந்த மழை ஒழியாது மெய் தவர் சொல்லிய எல்லை கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன் செழும் தவர் தம் திருமேனி குளிர் காணும் தீங்கு இழைத்த தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் #125 கந்தை புடைத்திட எற்றும் கல் பாறை மிசை தலையை சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசை தன் தலையை புடைத்து எற்ற அ பாறை-தன் மருங்கு வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை #126 வான் நிறைந்த புனல் மழை போய் மலர்_மழை ஆயிட மருங்கு தேன் நிறைந்த மலர் இதழி திருமுடியார் பொரு விடையின் மேல் நிறைந்த துணைவியொடும் வெளி நின்றார் மெய் தொண்டர் தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார் #127 முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம் மன் உலகு பிரியாது வைகுவாய் என அருளி அ நிலையே எழுந்தருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் #128 சீர் நிலவு திருக்குறிப்புத்தொண்டர் திரு தொழில் போற்றி பார் குலவ தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன் பேர் அருளின் மெய் தொண்டர் பித்தன் என பிதற்றுதலால் ஆர் உலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் மேல் @6 சண்டேசுர நாயனார் புராணம் #1 பூம் தண் பொன்னி எந்நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும் சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் #2 செம்மை வெண் நீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மை தழல் ஓம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறு_தொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது #3 கோது_இல் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழை குடுமி ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்கும் தாரகையும் மதியும் போல புணர் மாடங்கள் மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன #4 யாகம் நிலவும் சாலை-தொறும் மறையோர் ஈந்த அவி உணவின் பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன் நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டம் உள #5 தீம்_பால் ஒழுக பொழுது-தொறும் ஓம தேனு செல்வனவும் தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அணைவனவும் பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவும் உள #6 வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணி திரைகள் வயல் வரம்பின் தாழ்வு_இல் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாக தடம் சாலை சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் வேள்வி தலைவர் பெரும் தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் #7 மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை அடையில் பயிலும் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி நடையில் படர் மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினை காஞ்சி #8 சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லை திரு எல்லை பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும் மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும் தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் #9 பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும் கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் விண்ணின் பயனாம் பொழி மழையும் வேத பயனாம் சைவமும் போல் மண்ணின் பயனாம் அ பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ #10 பெருமை பிறங்கும் அ பதியின் மறையோர்-தம்முள் பெருமனை வாழ் தருமம் நிலவு காசிப கோத்திரத்து தலைமை சால் மரபில் அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல் இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்சதத்தன் உளன் ஆனான் #11 மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள் சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லை பயன் பெறுவாள் பற்றை எறியும் பற்று வர சார்பாய் உள்ள பவித்திரையாம் #12 நன்றி புரியும் அவர்-தம்-பால் நன்மை மறையின் துறை விளங்க என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர் வென்றி விளங்க வந்து உதயம் செய்தார் விசாரசருமனார் #13 ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் #14 நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்த புகழும் பெருமை உபநயன பொருவு_இல் சடங்கு முடித்து அறிவின் இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த எனினும் தம் திகழும் மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் #15 குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் அலகு_இல் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே என கொண்ட செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் #16 நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின் கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின் திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒருநாள் #17 ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க போது மற்று அங்கு ஒரு புனிற்று ஆ போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து #18 பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால் மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள்செய்வார் #19 தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமை தகைமையன பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத அங்கம் அனைத்தும் தாம் உடைய அல்லவோ நல் ஆன் இனங்கள் #20 ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும் நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண் தலை தொடையும் மேய வேணி திரு முடி மேல் விரும்பி ஆடி அருளுதற்கு தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் #21 சீலம் உடைய கோ குலங்கள் சிறக்கும் தகைமை தேவருடன் காலம் முழுதும் உலகு அனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும் நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்தும் நீறு தரும் மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ #22 உள்ளும் தகைமை இனி பிற வேறு உளவே உழை மான் மறி கன்று துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் #23 என்று இன்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்த கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று நின்ற ஆயன்-தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் #24 யானே இனி இ நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை_மகனும் தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் #25 கோலும் கயிறும் கொண்டு குழை குடுமி அலைய குலவு மான் தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் சாலும் புல்லின் அவை வேண்டும் தனையும் மிசையும் தலை சென்று #26 பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி இதம் உண் துறையுள் நல் தண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி அதர் நல்லன முன் செல நீழல் அமர்வித்து அமுத மதுர பால் உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம்-தொறும் உய்த்தார் #27 மண்ணி கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் எண்_இல் பெருகு நிரை மேய்த்து சமிதை உடன் மேல் எரி கொண்டு நண்ணி கங்குல் முன் புகுந்தும் நல் நாள் பலவாம் அ நாளில் #28 ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிக பல்கி மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் ஏய மனம் கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நன் பகலும் தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் #29 பூணும் தொழில் வேள்வி சடங்கு புரிய ஓம தேனுக்கள் காணும் பொலிவின் முன்னையினும் அநேக மடங்கு கறப்பனவாய் பேணும் தகுதி அன்பால் இ பிரமசாரி மேய்த்ததன் பின் மாணும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் #30 அனைத்து திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி மனை-கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறை கன்று தனை கண்டு அருகு சார்ந்து உருகி தாயாம் தன்மை நிலைமையவாய் கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் #31 தம்மை அணைந்த ஆன் முலை பால் தாமே பொழிய கண்டு உவந்து செம்மை நெறியே உறு மனத்தில் திருமஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் மெய்மை சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் #32 அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டா பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளின குறையில் ஆத்தியின் கீழ் செம் கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கி சிவ ஆலயமும் துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் #33 ஆத்தி மலரும் செழும் தளிரும் முதலா அருகு வளர் புறவில் பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் சாத்தல் ஆகும் திருப்பள்ளி தாமம் பலவும் தாம் கொய்து கோத்த இலை பூம் கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் #34 நல்ல நவ கும்பங்கள் பெற நாடி கொண்டு நாணல் பூம் கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவும் கோக்கள் உடன் கூட ஒல்லை அணைந்து பால் ஆக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர் செல்ல அவையும் கனைத்து முலை தீண்ட செழும் பால் பொழிந்தன-ஆல் #35 கொண்ட மடுத்த குட நிறைய கொணர்ந்து விரும்பும் கொள்கையினால் அண்டர் பெருமான் வெண் மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து வண்டு மருவும் திருப்பள்ளி தாமம் கொண்டு வரன் முறையே பண்டை பரிவால் அருச்சித்து பாலின் திருமஞ்சனம் ஆட்டி #36 மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆளஉடையார் தம்முடைய அன்பர் அன்பின்-பால் உளதாய் மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் #37 பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார்-தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பு ஆன திருமஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி வரும் அ நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் #38 இறையோன் அடி கீழ் மறையவனார் எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் நிறை பூசனைக்கு குடங்கள் பால் நிரம்ப சொரிந்து நிரை குலங்கள் குறைபாடு இன்றி மடி பெருக குவிந்த முலை பால் குறைவு இன்றி மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகும்-ஆல் #39 செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற்று அதுவே திருவிளையாட்டு ஆக முந்நூல் அணி மார்பர் இயல்பில் புரியும் மற்று இதனை கண்டு இ திறத்தை அறியாத அயல் மற்று ஒருவன் அ பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் #40 அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள்-தமை கறந்து பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை எச்சதத்தன்-தனை அழை-மின் என்றார் அவையில் இருந்தார்கள் #41 ஆங்கு மருங்கு நின்றார்கள் அ அந்தணன்-தன் திருமனையின் பாங்கு சென்று மற்றவனை அழைத்து கொண்டு வர பரந்த ஓங்கு சபையோர் அவனை பார்த்து ஊர் ஆன் நிரை மேய்த்து உன் மகன் செய் தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் #42 அம் தண் மறையோர் ஆகுதிக்கு கறக்கும் பசுக்களான எலாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரள கொடுபோய் மேய்ப்பான் போல் கந்தம் மலி பூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் #43 மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் என குறை கொண்டு இறைஞ்சி இனி புகுதின் குற்றம் எனதேயாம் என்றான் #44 அந்தணாளர்-தமை விடைகொண்டு அந்தி தொழுது மனை புகுந்து வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார்-தமக்கு வாய் நேரான் இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் #45 சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய் மன்றல் மருவும் புறவின்-கண் மேய்ப்பார் மண்ணி மணல் குறையில் அன்று திரள கொடு சென்ற அதனை அறிந்து மறைந்து அப்பால் நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் #46 அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து பின்பு வரும் ஆன் முலை பொழி பால் பெருகும் குடங்கள் பேணும் இடம் தன்-பால் கொணர்ந்து தாபித்து பிறவும் வேண்டுவன சமைத்தார் #47 நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடி மேல் மன்றல் விரவும் திருப்பள்ளி தாமம் சாத்தி மஞ்சனமா நன்று நிறை தீம்பால் குடங்கள் எடுத்து நயப்புற்று ஆட்டுதலும் #48 பரவ மேல்மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும் விரவும் மேதக்கவர்-தம்-பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து குரவ மேவு முதுமறையோன் கோப மேவும்படி கண்டான் #49 கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்து கொடிதாம் மொழி கூற தொண்டு புரியும் சிறிய பெரும் தோன்றலார் தம் பெருமான் மேல் மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர்-ஆல் #50 மேலாம் பெரியோர் பல-காலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார் பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு மாலா மறையோன் மிக செயிர்த்து வைத்த திருமஞ்சன குட பால் காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் #51 சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறை இல் தீயோனை தந்தை எனவே அறிந்தவன்-தன் தாள்கள் சிந்தும் தகுதியினால் முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமையினால் வந்து மழு ஆயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் #52 எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக மறிந்த தாதை இரு தாளும் துணித்த மைந்தர் பூசனையில் அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திட புகலும் செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி #53 பூத கணங்கள் புடைசூழ புராண முனிவர் புத்தேளிர் வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனம் களித்து பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் #54 தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள்செய்து அணைத்து அருளி மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள #55 செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவு இன்று உயர்ந்த சிவமயமாய் பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் #56 அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்கு துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் #57 எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர்_மாரிகள் பொழிய பல் ஆயிரவர் கண நாதர் பாடி ஆடி களி பயில சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ நல் ஆறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் #58 ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில் கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் #59 வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறை சிறுவர் அந்த உடம்பு-தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் இந்த நிலைமை அறிந்தார் ஆர் ஈறு_இலாதார் தமக்கு அன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும்-கால் #60 நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்து தேசம் உய்ய திருத்தொண்டத்தொகை முன் பணித்த திருவாளன் வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் மேல்5.திருநின்ற சருக்கம் @1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் #1 திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில் ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் #2 தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள் மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு #3 புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின் கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும் வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் #4 கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர் மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை #5 கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன் புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் #6 கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் #7 நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல் பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல் #8 மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும் உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல் வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும் கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி #9 மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை #10 எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல் பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும் வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும் #11 மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும் பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில் சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு #12 இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும் மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் #13 ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம் நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் #14 மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும் அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும் புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும் கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள் #15 தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண் விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும் #16 அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார் மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார் ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார் திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் #17 புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண் மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில் நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில் திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார் #18 திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின் அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின் மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் #19 மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார் காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள் மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார் #20 மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும் தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் #21 தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால் சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம் முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார் #22 அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின் முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர் மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார் பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார் #23 ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார் காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார் பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார் #24 அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார் பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் #25 கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார் முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன் மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல் அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார் #26 வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில் காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார் #27 ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் #28 மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார் சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் #29 தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன் பின் மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால் பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் #30 ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார் மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார் பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார் #31 வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய் அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் #32 எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள் அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால் இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார் #33 அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் #34 தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் #35 மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய் காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால் ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார் #36 கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும் நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர் யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார் #37 நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் #38 பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன் கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார் #39 அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார் #40 அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் சித்த நிலை அறியாதாரையும் வாதின்-கண் உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார் #41 அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும் தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் #42 பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால் ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார் நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும் சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் #43 சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம் அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால் துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் #44 புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் #45 நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில் கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து #46 தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் #47 தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும் அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் #48 மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார் உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான் முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான் அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி #49 பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும் தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் #50 அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம் கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார் #51 அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும் விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம் நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார் #52 அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார் #53 புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார் #54 தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய் ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய் போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று #55 குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த #56 ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார் பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் #57 கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் #58 என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம் சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் #59 அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால் ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என #60 எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் #61 பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண் செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் #62 சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில் திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார் #63 வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர் இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து #64 தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் #65 மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும் உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர் கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர் பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார் #66 என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார் #67 திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் #68 நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய் சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார் #69 திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால் உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் #70 நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான் கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம் போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால் #71 மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர் முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே #72 அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின் தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார் #73 பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம் அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன் மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும் இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் #74 மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால் பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால் நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே #75 இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள் சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன் மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே #76 பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான் முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன் நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே #77 மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன் மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும் கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே #78 மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில் தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார் பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே #79 இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில் புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் #80 தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார் மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் #81 மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால் நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர் தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் #82 இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம் செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் #83 தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம் பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும் தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார் #84 சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர் முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் #85 உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர் கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள் அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் #86 அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால் கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான் #87 கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால் நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய் சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் #88 விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான் #89 தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் #90 அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான் #91 அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி பரசமய பற்று அறுத்த பான்மையினார்-பால் சென்றார் #92 சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் #93 நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின் கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை தே மாலை செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார் #94 ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர் ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார் மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் #95 பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார் #96 அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார் #97 ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் #98 வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம் தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே #99 மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் #100 ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும் கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர் தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள் #101 ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர் தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் #102 அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால் இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் #103 ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார் #104 நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் #105 பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள் முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால் படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ #106 அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் #107 நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர் தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான் எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும் துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் #108 மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின் கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார் #109 மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம் கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல் கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான் #110 கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் #111 பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல் #112 இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில் படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில் கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின் முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே #113 மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே #114 பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர் நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல் ஏவி செறு பொருகை கரியினை உய்த்திட வெருளார் சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர் #115 அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் #116 வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார் #117 தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் #118 ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே #119 ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே #120 யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான் #121 நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால் எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர் பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் #122 அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான் தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார் #123 ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில் வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான் #124 அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த வெம் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர் செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார் பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர் #125 அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர் ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும் எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார் #126 சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் #127 பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால் அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே #128 அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர் மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார் #129 இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ #130 அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ கருணை நாவரசினை திரை கரங்களால் தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட வருணனும் செய்தனன் முன்பு மா தவம் #131 வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன் பூம் திருப்பாதிரிப்புலியூர் பாங்கரில் #132 அ திரு பதியினில் அணைந்த அன்பரை மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ எ திசையினும் அர என்னும் ஓசை போல் தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே #133 தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன் செழும் திருப்பாதிரிப்புலியூர் திங்கள் வெண் கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார் #134 ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும் சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே #135 மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி வெற்றி மழ விடை வீரட்டர் பாதம் மிக நினைவால் உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள் செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார் #136 தேவர் பிரான் திருமாணிக்குழியும் தினைநகரும் மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின் காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார் #137 வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம் தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் #138 மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும் தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் #139 மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார் இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே #140 தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல் மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே #141 கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும் தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே #142 இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே #143 உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் #144 அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள் #145 புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும் பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான் #146 வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும் கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் #147 இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல் பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் #148 திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும் அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார் #149 கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும் சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார் #150 புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன் தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார் #151 பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும் #152 நீடு திரு தூங்கானை மாடத்து நிலவுகின்ற ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம் மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில் சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த #153 ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் #154 தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள் பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும் தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து #155 வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம் கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல் புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார் #156 ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார் #157 நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால் மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும் காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ் வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் #158 முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும் அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும் #159 அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார் பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம் பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார் #160 அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும் தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம் இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை #161 அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும் நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால் மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் #162 அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும் மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார் கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும் செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி #163 நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள் #164 மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார் #165 வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும் புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன் களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார் #166 நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார் #167 கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும் மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் #168 இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும் அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம் மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும் சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார் #169 பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால் அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் #170 நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும் ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார் #171 அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட #172 மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி காவியம் கண்டர் மன்னும் திருக்கழி பாலை-தன்னில் நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ #173 சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் #174 மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார் #175 அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல் புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார் #176 செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில் #177 கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண் விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும் அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் #178 ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த #179 அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார் #180 தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் #181 நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் #182 தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார் #183 அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம் #184 பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும் வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் #185 அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே #186 பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி #187 பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் #188 அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில் மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் #189 ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும் காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் #190 மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார் #191 ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும் பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் #192 எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார் #193 சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும் என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார் #194 கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன் பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன்-தானும் நல்லூரில் வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் #195 நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின் மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில் உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம் சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான் #196 நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள் நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார் #197 நாவுக்கு மன்னர் திருநல்லூரில் நம்பர்-பால் மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள் #198 கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர் ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார் #199 ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார் #200 அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார் மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார் செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர் #201 அந்தணரின் மேம்பட்ட அப்பூதிஅடிகளார் தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர் பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண #202 மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும் சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார் #203 காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார் பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால் ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து #204 திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம் பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் #205 ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம் தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் #206 தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம் மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம் தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் #207 தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம் நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் #208 அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய் கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் #209 அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் #210 திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் #211 புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ் அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின் தொடை மாலை திருப்பதிக சொல்_மாலை பாடினார் #212 எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும் தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார் #213 சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார் #214 அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள் தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார் #215 நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி #216 நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் #217 பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும் திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர் மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் #218 ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம் நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார் காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும் சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார் #219 வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில் கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால் எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார் #220 பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால் உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார் #221 சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் #222 கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம் கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள் தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து #223 காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலை பதிகம் தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார் #224 செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே #225 மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில் சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார் #226 நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் #227 நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில் #228 நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி கார் ஆரும் கறை_கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே #229 மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்பெருமாள் பவனி-தன்னில் தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே #230 திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் #231 அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும் பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார் புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை #232 ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும் நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார் #233 கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில் இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே #234 திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார் #235 சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும் மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார் முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை #236 அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும் கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் #237 மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம் தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார் பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் #238 அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம் மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் #239 தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் #240 சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல் ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் #241 அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும் துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் #242 பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர் உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண் வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார் #243 ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம் ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் #244 திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில் விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் #245 அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும் முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார் #246 திருநீலநக்கஅடிகள் சிறுத்தொண்டர் முருகனார் பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும் வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார் #247 செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் #248 சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார் #249 சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன் சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை #250 வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கரசினையும் காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால் ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன் வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார் #251 மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் #252 சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் #253 கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க #254 முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய் அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள் #255 சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின் மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் #256 வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற நையும் நாளில் பிள்ளையார்-தமக்கும் நாவுக்கரசருக்கும் கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார் #257 கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும் ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும் ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் #258 விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில் எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் #259 அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள் எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் #260 ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால் தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால் காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர் #261 ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால் ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள் சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில் #262 காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் #263 வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய் சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார் #264 மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு #265 பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில் அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள் வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் #266 தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் #267 ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர் ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர் #268 உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான் தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் #269 வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம் காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் #270 அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும் இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் #271 புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம் திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில் கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என #272 சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர் பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில் #273 அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின் பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார் எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல் #274 அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் #275 அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் #276 மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண் உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம் பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும் துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார் #277 போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள #278 சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர் ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல் நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர் பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல் #279 அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல் பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் #280 அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என #281 மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார் #282 பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார் #283 ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் #284 ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள் சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார் போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண #285 வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் #286 சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும் பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் #287 ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய் மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் #288 என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர் நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார் #289 போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர் தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் #290 வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் #291 சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய் வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார் #292 வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார் #293 பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போய் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார் #294 செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில் மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி #295 அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் #296 வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார் #297 அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான் நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி #298 கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும் தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் #299 ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின் மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின் ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் #300 தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் #301 பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு விடையார் தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய் எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார் #302 சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின் மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும் நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார் #303 மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார் #304 வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும் அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் #305 காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால் மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல் தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம் #306 அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர் இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார் #307 நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல் உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் #308 எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார் அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார் #309 கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம் ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார் #310 பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் #311 நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும் காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர் ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார் #312 செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும் அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் #313 அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம் கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன் பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார் #314 பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள் மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும் தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார் அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் #315 காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்ஆறும் சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் #316 செக்கர் சடையார் திருவோத்தூர் தேவர் பிரானார்-தம் கோயில் புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார் #317 செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம் உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் #318 ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம் சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார் #319 மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள் நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம் தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும் ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார் #320 தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால் கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும் அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார் #321 எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் #322 திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார் #323 வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம் ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் #324 கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின் விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார் #325 கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள் #326 சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம் நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள் ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால் சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார் #327 அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண் மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால் #328 ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின் ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் #329 திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார் நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார் வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார் #330 நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும் சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் #331 திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும் பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர் மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் #332 வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும் தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார் #333 ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர் #334 திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார் #335 எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் #336 வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார் விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் #337 விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள் களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் #338 அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள் எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால் பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள் பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார் #339 திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும் விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார் #340 முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும் சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர் #341 அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின் மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார் #342 திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின் ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ் பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும் மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார் #343 பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார் செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம் மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார் #344 பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில் முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில் சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர் மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார் #345 காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய் நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் #346 மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும் சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் #347 சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால் பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம் காணும் அது காதலித்தார் கலை வாய்மை காவலனார் #348 அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார் துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின் செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார் #349 மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள் கான கின்னரர் பன்னகாதிபர் காமசாரிகளே முதல் ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் #350 அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால் எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர் கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் #351 கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும் திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும் பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால் வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் #352 அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய் மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் #353 அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும் மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன் பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய் மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் #354 மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார் #355 ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன் தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால் வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால் தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் #356 வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார் #357 இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும் மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் #358 கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் #359 மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் #360 அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால் மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும் தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார் #361 அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார் மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார் பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால் #362 வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார் சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார் #363 மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும் தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர் #364 வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன் கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன் கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற #365 கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல் வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி #366 மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் #367 ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால் ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் #368 அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம் நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார் #369 தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில் எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார் #370 ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் #371 ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார் போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப #372 வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார் எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண் பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் #373 மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார் அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் #374 பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில் தன்மை ஆம்படி சத்தியும் சிவமுமாம் சரிதை பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் #375 காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய் பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர் பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க #376 தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும் தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப #377 கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள் மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற #378 அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர் சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக #379 வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும் தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் #380 கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார் தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் #381 முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க பொன் பிறங்கிய சடையாரை போற்று தாண்டகங்கள் இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர் #382 ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ #383 ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர் மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து #384 மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார் #385 கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர் #386 நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியை சேர்ந்தார் #387 சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர் சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் #388 திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி #389 அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் #390 பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும் அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத்தாண்டகமும் செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் #391 பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் #392 தீம் தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளி செழும் பொன்னி வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் #393 சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால் எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார் #394 காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார் சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார் #395 வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின் சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் #396 திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார் #397 பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் #398 கழுமலக்கோன் திருநாவுக்கரசருடன் கலந்து அருளி செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின் மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள் தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார் #399 வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால் புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில் எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர் சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் #400 பண்பு உடைய பாண்டிமாதேவியார்-தம் பரிவும் நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர் மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் #401 பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில் அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் #402 ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும் பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய் காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார் #403 சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் #404 எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார் கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் #405 சீர் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின் சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் #406 திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல் தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் #407 கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள் நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய் பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார் #408 தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர் #409 தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால் பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார் #410 அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம் எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் #411 தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும் ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள் தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் #412 தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார் #413 பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில் கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார் #414 நின்ற திருத்தாண்டகமும் நீடு தனி தாண்டகமும் மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும் கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும் துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார் #415 ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும் பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும் நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார் #416 அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர் நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில் தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார் #417 செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும் உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார் #418 புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும் சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால் வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் #419 வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் #420 கற்பக பூம் தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் #421 ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார் கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் #422 இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும் மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம் சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் #423 இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார் #424 மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் #425 இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர் மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும் அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் #426 மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால் தன்னுடைய சரணான தமியேனை புகலூரன் என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் #427 மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் #428 வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின் மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல் யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் #429 அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன் கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் மேல் @2 குலச்சிறை நாயனார் புராணம் #1 பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது மன்னு வண்மையினார் மணமேற்குடி #2 அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம் ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் #3 காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் #4 குறியின் நான்கு குலத்தினர் ஆயினும் நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார் #5 உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி இலகு செம் சடையார்க்கு அடியார் எனில் தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார் #6 பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும் உண்ப வேண்டி ஒருவர் அணையினும் எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் #7 பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை ஓது நா வணக்கத்தால் உரைப்பவர் பாதம் நாளும் பரவிய பண்பினார் #8 இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர் தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ் மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார் ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார் #9 ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி நாயனார் திரு பாதம் நவின்று உளார் பாய சீர் புனை பாண்டிமாதேவியார் மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார் #10 புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும் தென்னர் நாடு திருநீறு போற்றவும் மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் #11 வாதில் தோற்ற அமணரை வன் கழு தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன் வேத நீதி மிழலைக்குறும்பர் தாள் மேல் @3 பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் #1 சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை #2 அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார் சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் #3 தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார் வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார் #4 இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின் மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார் #5 மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள் கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ் உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் #6 நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின் மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் #7 இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம் பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார் #8 அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார் செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் #9 மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர் நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் #10 நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் #11 பயிலை செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுற கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம் மேல் @4 காரைக்காலம்மையார் புராணம் #1 மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால் #2 வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர் தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால் அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார் #3 வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின் அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் #4 பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம் செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் #5 வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள் கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் #6 நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார் #7 நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண் பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் #8 வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் #9 மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும் சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் #10 மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார் #11 அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள் #12 மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள் தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன் பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன் அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் #13 மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின் நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும் தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான் #14 ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் #15 நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும் உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் #16 பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் #17 கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின் பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர் உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார் #18 வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் #19 கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் #20 இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார் #21 மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர் வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் #22 மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன் உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார் #23 இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின் மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார் #24 மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் #25 அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார் மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று #26 மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல் பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் #27 அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார் #28 செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார் #29 ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் #30 பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் #31 வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில் #32 விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும் வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் #33 கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும் நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான் #34 கடல் மிசை வங்கம் ஓட்டி கருதிய தேயம்-தன்னில் அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் #35 அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும் ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான் #36 பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் #37 முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி-தன்-பால் பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான் #38 மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் #39 இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும் மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக #40 விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே #41 அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் #42 மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும் தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் #43 சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார் #44 வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும் சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான் #45 தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும் மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும் பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் #46 கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும் அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார் #47 மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான் #48 என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் #49 ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் #50 ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் #51 மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும் குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் #52 உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார் பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும் நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி #53 ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார் #54 கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார் #55 வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும் படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் #56 தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே #57 அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும் எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான் #58 வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார் #59 அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால் இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார் #60 இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் #61 கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் #62 அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம் நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே #63 ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் #64 மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம் கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார் #65 மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர் எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா #66 ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன் மேல் @5 அப்பூதி அடிகள் புராணம் #1 தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர் ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார் ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார் #2 களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார் வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும் உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார் #3 வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர் அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் #4 பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின் திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர் ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும் விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் #5 அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார் உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார் #6 வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார் #7 இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால் செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார் தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் #8 என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் #9 அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார் தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார் நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் #10 கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம் அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார் முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் #11 ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம் தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் #12 ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல் கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார் #13 நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன் ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் #14 நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி #15 பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர் எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார் #16 திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர் பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் #17 அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம் கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய தரையின் மிசை வீழ்ந்து அவர்-தம் சரண கமலம் பூண்டார் #18 மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர் முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் #19 மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும் ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் #20 மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர் அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன் முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும் புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் #21 ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன் வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும் நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் #22 செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் #23 தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள் சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார் #24 நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே #25 கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும் வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் #26 பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும் அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான் #27 எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான் பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான் #28 தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும் உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் #29 பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார் #30 கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம் குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு #31 அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர் திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர் இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும் பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் #32 ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் #33 அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால் மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி #34 பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே #35 நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம் பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார் #36 தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும் மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே #37 பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின் நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள் அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் #38 ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும் தாங்கிய மகிழ்ச்சியோடும் தகுவன சமைத்து சார்வார் #39 புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால் மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார் #40 திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் #41 மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும் அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே #42 மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர் நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் #43 அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும் செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் #44 இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும் அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும் செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும் நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே #45 மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன் மேல் @6 திருநீலநக்க நாயனார் புராணம் #1 பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும் காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு #2 நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை #3 ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில் ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் #4 சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர் ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார் ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் நீலநக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் #5 வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் #6 மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார் #7 ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் மேய பூசனை நியதியை விதியினால் முடித்து தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் #8 உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர் #9 அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் #10 நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் #11 தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி #12 விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக #13 பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம் சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண் புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் #14 மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார் #15 மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய் உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார் #16 மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான் உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார் #17 அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார் #18 பள்ளிகொள் பொழுது தயவந்தி பரமர்-தாம் கனவில் வெள்ள நீர் சடையொடு நின்று மேனியை காட்டி உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள #19 கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார் #20 போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம் பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் #21 பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார் #22 அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில் மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் #23 பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள் விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார் சண்பை மன்னரும் சாத்தமங்கையில் வந்து சார்ந்தார் #24 நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர் தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர் கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் #25 கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் #26 சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம் ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார் #27 பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார் #28 அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில் இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும் தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார் #29 சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் #30 நின்ற அன்பரை நீலகண்ட பெரும்பாணர்க்கு இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர் சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் #31 ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர் பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார் #32 கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார் #33 பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும் புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார் #34 பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் #35 மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும் தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர் பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் #36 சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும் நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர் #37 பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் #38 தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில் வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால் ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம் மேல் @7 நமிநந்தி அடிகள் புராணம் #1 வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய் பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால் #2 மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள் சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய் #3 பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல் #4 பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார் இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார் #5 வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் #6 அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல் வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும் தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் #7 செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம் தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின் நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார் #8 நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன் அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால் பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார் எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் #9 எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும் செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும் அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் #10 கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும் நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார் #11 அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில் #12 வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் #13 சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார் நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள் முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் #14 சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன் நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய #15 நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார் #16 இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல் விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் #17 வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள் முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார் அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் #18 பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண் குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால் அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் #19 நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம் நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின் மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க #20 வென்றி விடையார் மதி சடையார் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும் நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் #21 இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும் மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார் அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய #22 தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும் மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம் காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் #23 பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார் #24 திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால் அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று #25 ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் #26 ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில் ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண் #27 மேன்மை விளங்கும் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமாள்-தாம் மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார் #28 ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார் #29 தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால் மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் #30 படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால் அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால் குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார் #31 நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால் ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார் #32 இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர் மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் #33 நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின் பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர் தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும் மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவேமேல் காண்டம் 2 6.வம்பறா வரிவண்டு சருக்கம் @1 திருஞானசம்பந்த நாயனார் புராணம் #1 வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவ துறை விளங்க பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலி திருஞானசம்பந்தர் பாத மலர் தலை கொண்டு திருத்தொண்டு பரவுவாம் #2 சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார்-தம் மன்னிய சைவ துறையின் வழிவந்த குடி வளவர் பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் #3 அ பதி தான் அந்தணர்-தம் கிடைகள் அரு_மறை முறையே செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளது-ஆல் #4 அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் #5 வளம் பயிலும் புறம் பணை-பால் வாச பாசடை மிடைந்த தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால் களம் பயில் நீர் கடல் மலர்வது ஒரு பரிதி என கருதி இளம் பரிதி பல மலர்ந்தால் போல்ப உள இலஞ்சி பல #6 உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் கிளர்ந்த திருநீற்று ஒளியில் கெழுமிய நண்பகலும் அலர்ந்து அளந்து அறியா பல் ஊழி ஆற்றுதலால் அகல் இடத்து விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை #7 பரந்த விளை வயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில் வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் நிரந்தரம் நீள் இலை கடையால் ஒழுகுதலால் நெடிது அ ஊர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது-ஆல் #8 வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண் மதியம் சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் பால் அணைந்து மது தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி மாலை எழும் செவ் ஒளிய மதியம் போல் வதியும்-ஆல் #9 காமர் திரு பதி-அதன்-கண் வேதியர் போல் கடி கமழும் தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் #10 புனைவார் பொன் குழை அசைய பூம் தானை பின் போக்கி வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் மனை வாழ்க்கை குல மகளிர் வளம் பொலிவ மாடங்கள் #11 வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டு பண்ணை-தொறும் பூழியுற வகுத்து அமைத்து பொன் புனை கிண்கிணி ஒலிப்ப ஆழி மணி சிறு தேர் ஊர்ந்த அ இரத பொடி ஆடும் வாழி வளர் மறை சிறார் நெருங்கி உள மணி மறுகு #12 விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் உடு எனும் நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் நெடு விசும்பு தளிப்பது என நெருங்கி உள மருங்கு எல்லாம் #13 மடை எங்கும் மணி குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் புடை எங்கும் மலர் பிறங்கல் புறம் எங்கும் மக பொலிவு கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி #14 பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர் பொருவு_இல் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன் வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம் பரவு திரு கழுமலமாம் பன்னிரண்டு திரு பெயர்த்து-ஆல் #15 அ பதியின் அந்தணர்-தம் குடி முதல்வர் ஆசு_இல் மறை கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க செப்பும் நெறி வழிவந்தார் சிவபாதஇருதயர் என்று இ புவி வாழ தவம் செய் இயல்பினார் உளர் ஆனார் #16 மற்று அவர்-தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு பெற்றியினார் எ உலகும் பெறற்கு அரிய பெருமையினார் பொற்பு உடைய பகவதியார் என போற்றும் பெயர் உடையார் கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார் #17 மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள் #18 மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்-தம் பொய் மிகுந்த ஆதி அரு_மறை வழக்கம் அருகி அரன் அடியார்-பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழிய கண்டு ஏதம்_இல் சீர் சிவபாதஇருதயர்-தாம் இடர் உழந்தார் #19 மனை_அறத்தில் இன்பமுறு மக பெறுவான் விரும்புவார் அனைய நிலை தலை நின்றே ஆய சேவடி கமலம் நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீர் ஆக்கும் புனை மணி பூண் காதலனை பெற போற்றும் தவம் புரிந்தார் #20 பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலி திருத்தோணி வீற்றிருந்தார் சேவடி கீழ் வழிபட்டு கருத்து முடிந்திட பரவும் காதலியார் மணி வயிற்றில் உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக #21 ஆள் உடையாள் உடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு நாள் உடைய ஈர்_ஐந்து திங்களினும் நலம் சிறப்ப கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் #22 அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்க பேணிய நல் ஓரை எழ திரு கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க பரசமய தருக்கு ஒழிய சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க #23 தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக வண் தமிழ் செய் தவம் நிரம்ப மா தவத்தோர் செயல் வாய்ப்ப #24 திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனி வெல்ல அசைவு_இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக #25 தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க வாள் உடைய மணி வீதி வளர் காழி பதி வாழ ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக #26 அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமய பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி-தொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தாவு_இல் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார் #27 அப்பொழுது பொற்புறு திருக்கழுமலத்தோர் எ பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி மெய்ப்படு மயிர் புளகம் மேவி அறியாமே ஒப்பு_இல் களிகூர்வது ஓர் உவப்புற உரைப்பார் #28 சிவன் அருள் என பெருகும் சித்தம் மகிழ் தன்மை இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் அவன் வரும் நிமித்தம் இது என்று அதிசயித்தார் #29 பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் தேன் மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே #30 மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பு_இல் சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார் #31 பூத கண நாதர் புவி வாழ அருள்செய்த நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும் #32 பயன் தருவ பல் தருவும் வல்லிகளும் மல்கி தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம் #33 அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர் சங்கம் படகம் கருவி தாரை முதலான எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம் #34 இரும் புவனம் இத்தகைமை எய்த அவர்-தம்மை தரும் குல மறை தலைவர் தம் பவன முன்றில் பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே அரும் திரு மக பெற அணைந்த அணி செய்வார் #35 காதல் புரி சிந்தை மகிழ களி சிறப்பார் மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க சாதக முறை பல சடங்கு வினை செய்வார் #36 மா மறை விழு குல மடந்தையர்கள்-தம்மில் தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்ன தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார் #37 சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி உள் நிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் வெண் முளைய பாலிகைகள் வேதி-தொறும் வைப்பார் புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார் #38 செம்பொன் முதலான பல தான வினை செய்வார் நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார் #39 ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும் வெய்ய தழல் ஆகுதி விழு புகையினாலும் தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் #40 ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் #41 நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்தி சேம உதய பரிதியில் திகழ் பிரானை தாமரை மிசை தனி முதல் குழவி என்ன தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் #42 பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் அரு_மறை குழைத்த அமுது செய்து அருளுவாரை தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் #43 ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார் #44 தாயர் திரு மடி தலத்தும் தயங்கு மணி தவிசினிலும் தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் சேய பொருள் திரு மறையும் தீம் தமிழும் சிறக்க வரு நாயகனை தாலாட்டும் நலம் பல பாராட்டினார் #45 வரும் முறைமை பருவத்தில் வளர் புகலி பிள்ளையார் அரு_மறைகள் தலை எடுப்ப ஆண்ட திரு முடி எடுத்து பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் திரு முக மண்டலம் அசைய செங்கீரை ஆடினார் #46 நாம் அறியோம் பரசமயம் உலகிர் எதிர் நாடாது போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன்-பால் காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார் #47 விதி தவறுபடும் வேற்று சமயங்களிடை விழுந்து கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் மதி தவழ் மாளிகை முன்றில் மருங்கு தவழ்ந்து அருளினார் #48 சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும் காழியர்-தம் சீராட்டே கவுணியர் கற்பகமே என்று ஏழ் இசையும் பல கலையும் எ உலகும் தனித்தனியே வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப #49 திரு நகையால் அழைத்து அவர்-தம் செழு முகங்கள் மலர்வித்தும் வரும் மகிழ்வு தலை சிறப்ப மற்று அவர் மேல் செல உகைத்தும் உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலி பிள்ளையார் #50 வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரி வண்டு உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று கிளர் ஒலி கிண்கிணி எடுப்ப கீழ்மை நெறி சமயங்கள் தளர் நடை இட்டு அற தாமும் தளர் நடை இட்டு அருளினார் #51 தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து சோதி அணி மணி சதங்கை தொடுத்த வடம் புடைசூழ்ந்த பாத மலர் நிலம் பொருந்த பருவ முறை ஆண்டு ஒன்றின் மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் #52 சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் குறு வியர்ப்பு துளி அரும்ப கொழும் பொடி ஆடிய கோல மறுகிடை பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார் #53 மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்றிருந்த திங்கள் சேர் சடையார் தம் திருவருட்கு செய் தவத்தின் அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு_மறையோடு உலகு உய்ய எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்துதலும் #54 நா ஆண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்ப பூ ஆண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் #55 பண்டு திருவடி மறவா பான்மையோர்-தமை பரமர் மண்டு தவ மறை குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருள தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் கொண்டு எழலும் வெரு கொண்டால் போல் அழுவார் குறிப்பு அயலாய் #56 மேதகைய இ நாளில் வேறு ஒரு நாள் வேத விதி நீதி முறை சடங்கு நெறி முடிப்பதற்கு நீராட தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூட சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார் #57 பின் சென்ற பிள்ளையார்-தமை நோக்கி பெரும் தவத்தோர் முன் செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் #58 கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் இடையறா பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பிடமாய் விடை உயர்த்தார் திருத்தோணி பற்று விடா மேன்மை அதாம் தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார் #59 பிள்ளையார்-தமை கரையில் வைத்து தாம் பிரிவு அஞ்சி தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி வள்ளலார் இருந்தாரை எதிர்வணங்கி மணி வாவி உள் இழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மக பெற்றார் #60 நீராடி தரு பிடித்து நியமங்கள் பல செய்வார் சீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன் பின் ஆராத விருப்பினால் அகமருடம் படிய நீர் பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் #61 மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் நிறை புனல் வாவி கரையில் நின்று அருளும் பிள்ளையார் #62 கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து வண்ண மலர் செம் கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப எண்_இல் மறை ஒலி பெருக எ உயிரும் குதுகலிப்ப புண்ணிய கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார் #63 மெய் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் தம் மேலை சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமை-தானோ செம் மேனி வெண் நீற்றார் திருத்தோணி சிகரம் பார்த்து அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள #64 அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால் முன் நிலைமை திருத்தொண்டு முன்னி அவர்க்கு அருள்புரிவான் பொன்_மலை_வல்லியும் தாமும் பொரு விடை மேல் எழுந்தருளி சென்னி இளம் பிறை திகழ செழும் பொய்கை மருங்கு அணைந்தார் #65 திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த அரு_மறையாள் உடையவளை அளித்து அருள அருள்செய்வார் #66 அழுகின்ற பிள்ளையார்-தமை நோக்கி அருள் கருணை எழுகின்ற திரு உள்ளத்து இறையவர்-தாம் எ உலகும் தொழுகின்ற மலை_கொடியை பார்த்து அருளி துணை முலைகள் பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன #67 ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து வார் இணங்கு திரு முலை பால் வள்ளத்து கறந்து அருளி #68 எண்_அரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர்நோக்கும் கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள்புரிந்தார் #69 யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் ஆவதனால் ஆளுடையபிள்ளையாராய் அகில தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் #70 சிவன் அடியே சிந்திக்கும் திரு பெருகு சிவஞானம் பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் #71 எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் அப்பொருள்-தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் இப்படியால் இது அன்றி தம் இசைவு கொண்டு இயலும் துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் #72 சீர் மறையோர் சிவபாதஇருதயரும் சிறு பொழுதில் நீர் மருவி தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா #73 எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரை காட்டு என்று கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே அ சிறிய பெருந்தகையார் ஆனந்த கண் துளி பெய்து உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி #74 விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடை மேலே பண் நிறைந்த அரு_மறைகள் பணிந்து ஏத்த பாவை உடன் எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் #75 எல்லை_இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை மல்லல் நெடும் தமிழால் இ மாநிலத்தோர்க்கு உரை சிறப்ப பல் உயிரும் களிகூர தம் பாடல் பரமர்-பால் செல்லு முறை பெறுவதற்கு திரு செவியை சிறப்பித்து #76 செம்மை பெற எடுத்த திரு தோடுடைய செவியன் எனும் மெய்ம்மை மொழி திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் தம்மை அடையாளங்களுடன் சாற்றி தாதையார்க்கு எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார் #77 மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசை பாட அண்ணல் அவற்கு அருள்புரிந்த ஆக்கப்பாடு அருள்செய்தார் #78 தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் என தொழார் வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவார்கள் அஞ்சு_எழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார் #79 வேத காரணர் ஆய வெண் பிறை சேர் செய்ய சடை நாதன் நெறி அறிந்து உய்யார்-தம்மிலே நலம் கொள்ளும் போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர் #80 திருப்பதிகம் நிறைவித்து திருக்கடைக்காப்பு சாத்தி இருக்கு மொழி பிள்ளையார் எதிர்தொழுது நின்று அருள அருள் கருணை திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் பெருக்க விசும்பினில் ஆர்த்து பிரச மலர்_மழை பொழிந்தார் #81 வந்து எழும் மங்கலமான வானக துந்துபி முழக்கும் கந்தருவர் கின்னரர்கள் கான ஒலி கடல் முழக்கும் இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசை முழக்கும் அந்தம்_இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க #82 மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர்-தம் நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவா மெய் பொறை பெருகும் தவ முனிவர் எனும் கடல் புடைசூழ #83 அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார்-பால் இணை_இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் புணை அருள் அங்கணர் பொரு விடை தங்கிய புணர் பாகத்து துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி #84 அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே மண் மிசை நின்ற மறை சிறு போதகம் அன்னாரும் கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார் #85 ஈறு_இல் பெரும் தவம் முன் செய்து தாதை என பெற்றார் மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறும் அரும் தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார் #86 தாணு வினை தனி கண்டு தொடர்ந்தவர்-தம்மை போல் காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் தோணிபுரத்து இறை-தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார் #87 அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டு அவர் அல்லாதார் முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி இப்படி ஒப்பது ஓர் அற்புதம் எங்கு உளது என்று என்றே துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ #88 பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் #89 இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே சொல் முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் பொன் மணி வாயினர் கோயிலின்-நின்று புறப்பட்டார் #90 பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் தோணி புரத்தவர் தாம் எதிர்கொண்டு துதிக்கின்றார் #91 காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் வாழிய வந்து இ மண் மிசை வானோர் தனி நாதன் ஏழ் இசை மொழியாள்-தன் திருவருள் பெற்றனை என்பார் #92 மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார் #93 புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார் #94 என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் நின்று துதி செய்து அவர் தாள் நீள் முடி-கண் மேல் ஏந்தி நிரந்த போது சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல #95 மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக #96 நீடு திரு கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாச தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்து ஆக #97 மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி பொங்கு மணி விளக்கு எடுத்து பூரணகும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெரு விருப்பும் அன்பும் பொங்க தங்கு திரு மலி வீதி சண்பை நகர் வலம் செய்து சாரும்-காலை #98 தம் திரு மாளிகையின்-கண் எழுந்தருளி புகும் பொழுது சங்க நாதம் அந்தர துந்துபி முதலா அளவு_இல் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் #99 தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத மா மறைகள் திரண்ட பெரும் திருத்தோணி மன்னி வீற்றிருந்தார் செய்ய கா மரு சேவடி கமலம் கருத்தில்உற இடையறா காதல் கொண்டு நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத்தோணி நம்பர் கோயில் #100 காதல் உடன் அணைந்து திரு கழுமலத்து கலந்து வீற்றிருந்த தங்கள் தாதையாரையும் வெளியே தாங்க_அரிய மெய்ஞ்ஞானம் தம்-பால் வந்து போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி மே தகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார் #101 பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த வரி கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி திருக்கோலக்கா எய்தி தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று இருக்கு ஓலிட்டு அறிவு_அரிய திரு பாதம் ஏத்துவதற்கு எடுத்து கொள்வார் #102 மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை மை நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை #103 கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த செய்ய சடை வானவர்-தம் அஞ்சு_எழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே #104 காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு வாழிய தம் திரு முடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயால் ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன் இசை வண் தமிழ் பதிகம் எய்த பாடி தாழும் மணி குழையார் முன் தக்க திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார் #105 உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கி தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் #106 செங்கமல மலர் கரத்து திரு தாளத்துடன் நடந்து செல்லும் போது தங்கள் குல தாதையார் தரியாது தோளின் மேல் தரித்து கொள்ள அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் திங்கள் அணி மணி மாட திருத்தோணிபுர தோணி சிகர கோயில் #107 திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று விருப்புறு பொன் திருத்தோணி வீற்றிருந்தார்-தமை பாட மேவும் காதல் பொருத்தமுற அருள் பெற்று போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை #108 எடுத்த திருப்பதிகத்தின் இசை திரு தாளத்தினால் இசைய ஒத்தி அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி மடுத்த வயல் பூந்தராயவர் வாழ மழ இளம் கோலத்து காட்சி கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் #109 அ நிலையில் ஆளுடையபிள்ளையார்-தமை முன்னம் அளித்த தாயார் முன் உதிக்க முயன்ற தவ திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார் #110 மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே எங்கணும் நீள் பதி மருங்கில் இருபிறப்பாளரும் அல்லா ஏனையோரும் பொங்கு திருத்தொண்டர்களும் அதிசயித்து குழாம் கொண்டு புகலியார்-தம் சிங்க இள ஏற்றின்-பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார் #111 வந்த திருத்தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் #112 செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே எழுந்தருள வேண்டும் என இசைந்து அருளி தோணி வீற்றிருந்தார் பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்று பிற பதியும் தொழ முன் செல்வார் #113 தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை மா தவம் செய் தாதையார் வந்து எடுத்து தோளின் மேல் வைத்துக்கொள்ள நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் #114 தேன் அலரும் கொன்றையினார் திரு நன்னி பள்ளியினை சார செல்வார் வான் அணையும் மலர் சோலை தோன்றுவது எ பதி என்ன மகிழ்ச்சி எய்தி பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் #115 காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மை சீர் இயல் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு-தன்னில் நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார்-தம் பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார் #116 ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்று போதுவார்-தம்மை சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார்-தாம் #117 அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட நம் பெருந்தகையார் தம்மை எதிர்கொண்டு நண்ண வேண்டி உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவ தொண்டரோடு தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம் #118 காவணம் எங்கும் இட்டு கமுகொடு கதலி நாட்டி பூ அணை தாமம் தூக்கி பூரணகும்பம் ஏந்தி ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார் #119 திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க பெரு மறை ஓசை மல்க பெரும் திரு கோயில் எய்தி அரு_மறை பொருள் ஆனாரை பணிந்து அணி நல் சங்கத்தின் தரு முறை நெறி அ கோயில் சார்ந்தமை அருளி செய்தார் #120 கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் இறைவரை தொழுது பாடும் கொடியுடை ஏந்தி போந்து நிறை புனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார் #121 பன்னக பூணினாரை பல்லவனீச்சரத்து சென்னியால் வணங்கி ஏத்தி திருந்து இசை பதிகம் பாடி பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர்கொள்ள புக்கார் #122 வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம்கொண்டு புக்கு தேன் அலர் கொன்றையார்-தம் திரு முன்பு சென்று தாழ்ந்து மானிடம் தரித்தார் தம்மை போற்றுவார் மண் புகார் என்று ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை #123 சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக்கடைக்காப்பு போற்றி பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிட பயில்வார் பின்னும் ஏர் இசை பதிகம் பாடி ஏத்தி போந்து இறைவர் வெண்காடு ஆரும் மெய் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே #124 பொன் இதழ் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு சென்னியர் திருவெண்காட்டு திருத்தொண்டர் எதிரே சென்று இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க மன்னு சீர் சண்பை ஆளும் மன்னரை கொண்டு புக்கார் #125 முத்தமிழ் விரகர்-தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர் சித்த நீடு உவகையோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்கு பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து நித்தனார்-தம் முன்பு எய்தி நிலமுற தொழுது வீழ்ந்தார் #126 மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரை செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் #127 அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் திருமுல்லைவாயில் எய்தி செந்தமிழ்_மாலை சாத்தி மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்த திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் #128 தோணி வீற்றிருந்தார்-தம்மை தொழுது முன் நின்று தூய ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர சேண் உயர் மாடம் ஓங்கும் திரு பதி அதனில் செய்ய வேணியார்-தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார் #129 வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திர பள்ளி வாசம் செய் பொழில் குருகாவூரும் திருமுல்லைவாயில் உள்ளிட்டு எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தி தையலாள் பாகர்-தம்மை பாடினார் தமிழ் சொல்_மாலை #130 அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி உய் வகை மண்ணுளோருக்கு உதவிய பதிகம் பாடி எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில் #131 திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின் வரு நீர்மை இசை பாட்டு மதங்கசூளாமணியார் ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்க தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார் #132 பெரும்பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய் மொழிகளால் துதித்து வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார் #133 அளவு_இலா மகிழ்ச்சியினார்-தமை நோக்கி ஐயா நீர் உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு கள நிலவு நஞ்சு அணிந்தார்-பால் அணையும் கவுணியனார் #134 கோயிலினில் புற முன்றில் கொடு புக்கு கும்பிடுவித்து ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என ஆய புகழ் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி மேய தொடை தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார் #135 தான நிலை கோல் வடித்து படி முறைமை தகுதியினால் ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை மான முறை பாடினியார் உடன் பாடி வாசிக்க ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் #136 யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி வாழி திரு தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினை தாழும் இரு சிறை பறவை படிந்த தனி விசும்பிடை-நின்று ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் #137 எண்_அரும் சீர் திருத்தோணி எம்பெருமான் கழல் பரவி பண் அமை யாழ் இசை கூட பெரும்பாணர் பாடிய பின் கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப #138 பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த வெள்ள நீர் சடையாரை அவர் மொழிந்த மெய் பதிகம் உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் #139 காழியர் தவ பயனாம் கவுணியர்-தம் தோன்றலார் ஆழி விடம் உண்டவர்-தம் அடி போற்றும் பதிக இசை யாழின் முறைமையின் இட்டே எ உயிரும் மகிழ்வித்தார் ஏழ் இசையும் பணி கொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் #140 சிறிய மறை களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் நெறியில் இடும் பெரும்பாணர் பின்னும் நீர் அருள்செய்யும் அறிவு அரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் பிறிவு இன்றி சேவிக்கப்பெற வேண்டும் என தொழுதார் #141 மற்று அதற்கு பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள பெற்றவர்-தாம் தம்பிரான் அருள் இதுவே என பேணி சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார் #142 சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர் பரவு திரு தில்லை நடம் பயில்வாரை பணிந்து ஏத்த விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் தர இசையும் குறிப்பு அறிய தவ முனிவர்க்கு அருள்செய்தார் #143 பிள்ளையார் அருள்செய்ய பெரும் தவத்தால் பெற்றெடுத்த வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப வெள்ளி மால் வரை என்ன திருத்தோணி வீற்றிருந்த புள்ளி மான் உரியாரை தொழுது அருளால் புறப்பட்டார் #144 தாழ்வு_இல் யாழ்ப்பாணரொடும் தாதையார்-தம்மோடும் மேவிய சீர் அடியார்கள் புடைவர வெம் குரு வேந்தர் பூவின் மேல் அயன் போற்றும் புகலியினை கடந்து போய் தேவர்கள்-தம் பெரும் தேவர் திரு தில்லை வழி செல்வார் #145 நள்ளிருள்-கண்-நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து கொள்ளிட திரு நதி கரை அணைந்தார் கவுணியர் குல தீபர் #146 வண்டு இரைத்து எழு செழு மலர் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தி தண் தலை பல வளத்தொடும் வரு புனல் தாழ்ந்து சேவடி தாழ தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் கொண்டு இரட்டி வந்து ஓதம் அங்கு எதிர்கொள கொள்ளிடம் கடந்து ஏறி #147 பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் #148 செம் கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இ திருந்து உலகினிற்கு எல்லாம் மங்கலம் தரு மழ இளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் தங்கு புள் ஒலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாச பொங்கு செம் முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை #149 கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திட கடி மண குளிர் கால் வந்து உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப இலகு செம் தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர் சோலை #150 இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி #151 ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களிகூர்வ போல் அசைந்து இரு புடை மிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம் #152 பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் #153 கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக #154 பொங்கு கொங்கையில் கறந்த மெய்ஞ்ஞானம் ஆம் போனகம் பொன் குன்றம் மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று அங்கண் வாழ் பெரும் திரு தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி எங்கும் மங்கல அணி மிக அலங்கரித்து எதிர்கொள அணைவார்கள் #155 வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பிடை நிறைந்து ஓங்க சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆர சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லி கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார் #156 செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் #157 மலர்ந்த பேர் ஒளி குளிர் தர சிவ மணம் கமழ்ந்து வான் துகள் மாறி சிலம்பு அலம்பு சேவடியவர் பயிலுறும் செம்மையால் திருத்தொண்டு கலந்த அன்பர்-தம் சிந்தையில் திகழ் திரு வீதி கண் களி செய்ய பலன் கொள் மைந்தனார் எழு நிலை கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி #158 நீடு நீள் நிலை கோபுரத்து உள் புக்கு நிலவிய திரு முன்றின் மாடு செம்பொனின் மாளிகை வலம்கொண்டு வான்உற வளர் திங்கள் சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த ஆடுகின்றவர் முன்பு உற அணைந்தனர் அணி கிளர் மணி வாயில் #159 நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட அந்தம்_இல்லவர் அணுகி முன் தொழு திரு அணுக்கனாம் திரு வாயில் சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார் #160 அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலமும் தம் உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் கண்ணின் முன்புற கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழி புண்ணிய கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு #161 உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின்-கண் அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர அருளினை என போற்றி இணை_இல் வண் பெரும் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி #162 ஊழி முதல்வர்க்கு உரிமை தொழில் சிறப்பால் வாழி திரு தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் காழியர்-தம் காவலனார் கற்றாங்கெரியோம்பி #163 பண்ணார் பதிக திருக்கடைக்காப்பு பரவி உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் விண் நாயகன் கூத்து வெட்டவெளியே திளைத்து கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார் #164 முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று சொல்_மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற பொன் மாளிகையை வலம்கொண்டு புறம் போந்தார் #165 செல்வ திரு முன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் மல்கும் திரு வாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்தகையார் #166 செய்ய சடையார் திருவேட்களம் சென்று கைதொழுது சொல் பதிகம் பாடி கழுமலக்கோன் வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்று ஆடும் ஐயன் திரு கூத்து கும்பிட்டு அணைவுறும் நாள் #167 கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து மெய் மாலை சொல் பதிகம் பாடி விரை கொன்றை செம் மாலை வேணி திரு உச்சி மேவி உறை அம்மானை கும்பிட்டு அரும் தமிழும் பாடினார் #168 பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் நீடும் திரு தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார் #169 ஆங்கு அவர்-தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் தேன் கமழும் சோலை திருவேட்களம் கடந்து பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் #170 அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை முண்ட திருநீற்று மூவாயிரவர்களும் தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற கண்ட அ பரிசு பெரும்பாணர்க்கும் காட்டினார் #171 செல்வம் பிரிவு அறியா தில்லை வாழ் அந்தணரும் எல்லை_இல் சீர் சண்பை இள ஏறு எழுந்தருளி ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள் #172 பொங்கி எழும் காதல் புலன் ஆக பூசுரர்-தம் சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் #173 ஒன்றிய சிந்தை உருக உயர் மேரு குன்று அனைய பேரம்பலம் மருங்கு கும்பிட்டு மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்க கூத்தர் எதிர் சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப்படி கீழ் #174 ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் பாடினார் பின்னும் அ பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் நீடு வாழ் தில்லை நான்_மறையோர்-தமை கண்ட அ நிலை எல்லாம் கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் என கூறி #175 இன்ன தன்மையில் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு ஏத்தி மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் பின்னு வார் சடை கூத்தர் பேர் அருள் பெற பிரியாத விடைபெற்று பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் #176 அ புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணி திரு வாயில் பொற்புற தொழுது எழுந்து உடன் போதர போற்றிய புகழ் பாணர் நல் பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவா கரை மேய ஒப்பு_இல் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார் #177 பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்ல செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் #178 இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம்புலியூரின் மருங்கு சென்றுஉற நீலகண்ட பெரும்பாணர் வணங்கி கார் நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று அரும் கலை சிறு மழ இளம் களிறு அனார் அங்கு அணைந்து அருள்செய்வார் #179 ஐயர் நீர் அவதரித்திட இ பதி அளவு_இல் மா தவம் முன்பு செய்தவாறு என சிறப்பு உரைத்து அருளி அ செழும் பதி இடம் கொண்ட மை கொள் கண்டர்-தம் கோயில் உள் புக்கு வலம்கொண்டு வணங்கி பார் உய்ய வந்தவர் செழும் தமிழ் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார் #180 அங்கு-நின்று எழுந்தருளி மற்று அவருடன் அம் பொன் மா மலை_வல்லி பங்கர் தாம் இனிது உறையும் நல் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தி துங்க வண் தமிழ்_தொடை மலர் பாடி போய் தொல்லை வெங்குரு வேந்தர் செம் கண் ஏற்றவர் திரு முது குன்றினை தொழுது சென்று அணைகின்றார் #181 மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி செய் தவ திரு முனிவரும் தேவரும் திசை எலாம் நெருங்க புக்கு ஐயர் சேவடி பணியும் அ பொருப்பினில் ஆதரவுடன் சென்றார் #182 வான நாயகர் திரு முது குன்றினை வழிபட வலம்கொள்வார் தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார் #183 தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ்_தொடை சாத்தி வாழ்ந்து போந்து அங்கண் வளம் பதி அதனிடை வைகுவார் மணி வெற்பு சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள் #184 ஆங்கு நாதரை பணிந்து பெண்ணாகடம் அணைந்து அரு_மறை ஓசை ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி பாங்கு அணைந்து முன் வலம்கொண்டு பணிவுற்று பரவு சொல் தமிழ்_மாலை தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் #185 கருவரைப்பில் புகாதவர் கைதொழும் ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் பெருவரத்தினில் பெற்றவர்-தம்முடன் திருஅரத்துறை சேர்தும் என்று ஏகுவார் #186 முந்தை நாள்கள் ஒரோஒருகால் முது தந்தையார் பியல் மேல் இருப்பார் தவிர்ந்து அந்தணாளர் அவர் அருகே செல சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர் #187 ஆதியார்-தம் அரத்துறை நோக்கியே காதலால் அணைவார் கடிது ஏகிட தாதையாரும் பரிவுற சம்பந்தர் பாத தாமரை நொந்தன பைப்பய #188 மறை அனைத்தும் ஒரு வடிவாம் என நிறை மதி பிள்ளை நீள் நிலம் சேர்ந்து என துறை அலை கங்கை சூடும் அரத்துறை இறைவரை தொழுவான் விரைந்து ஏகினார் #189 பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை ஆசை சங்கரற்கு ஆயின தன்மையால் தேசு மிக்க திருவுரு ஆனவர் ஈசனை தொழுதே தொழுது ஏகினார் #190 இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி ஆனவர் சிந்தை ஆர் அமுது ஆகிய செம் சடை தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார் #191 மாறன்பாடி எனும் பதி வந்துற ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் வேறு செல்பவர் வெய்துற பிள்ளையார் ஏறும் அஞ்சு_எழுத்து ஓதி அங்கு எய்திட #192 உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போல கைகள் ஆயிரம் வாங்கி கரந்து போய் வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன் #193 அற்றை நாள் இரவு அ பதியினிடை சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் வெற்றி மா தவத்தோருடன் மேவினார் #194 இந்நிலை-கண் எழில் வளர் பூந்தராய் மன்னனார் தம் வழி வருத்த தினை அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறை சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர் #195 ஏறுதற்கு சிவிகை இட குடை கூறி ஊத குலவு பொன் சின்னங்கள் மாறு_இல் முத்தின் படியினால் மன்னிய நீறு வந்த நிமலர் அருளுவார் #196 நீடு வாழ் பதியாகும் நெல் வயலின் மாட மா மனை-தோறும் மறையோர்க்கு கூடு கங்குல் கனவில் குல மறை தேடு சேவடி தோன்ற முன் சென்று பின் #197 ஞானசம்பந்தன் நம்-பால் அணைகின்றான் மான முகத்தின் சிவிகை மணி குடை ஆன சின்னம் நம்-பால் கொண்டு அரும் கலை கோன்-அவன்-பால் அணைந்து கொடும் என #198 அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் சிந்தையோடும் செழு நீர் அரத்துறை இந்துசேகரர் கோயில் வந்து எய்தினர் #199 ஆங்கு மற்ற அருள் அடியாருடன் ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் தாங்கள் அ மறையோர்கள் முன் சாற்றினார் #200 சால மிக்க வியப்புறு தன்மையின் பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் காலம் எய்திட காதல் வழிப்படும் சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார் #201 திங்கள் நீர்மை செழும் திரள் முத்தினால் துங்க வெண்குடை தூய சிவிகையும் பொங்க ஊதும் பொருவு_அரும் சின்னமும் அங்கண் நாதர் அருளினால் கண்டனர் #202 கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து எண் திசைக்கும் விளக்கி இவையாம் என தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர் #203 சங்கு துந்துபி தாரை பேரி இ முதல் பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் பொங்கு காதல் எதிர்கொள போதுவார் #204 மாசு_இல் வாய்மை நெல் வாயில் மறையவர் ஆசு_இல் சீர் சண்பை ஆண்தகையார்க்கு எதிர் தேசு உடை சிவிகை முதலாயின ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார் #205 இத்தலை இவர் இன்னணம் ஏகினார் அத்தலை சண்பை நாதர்க்கும் அ இரா முத்த நல் சிவிகை முதல் ஆயின உய்த்து அளிக்கும்படி முன் உணர்த்துவார் #206 அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என உள்ளவாறு அருள்செய்ய உணர்ந்த பின் #207 சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் பண்பு தந்தையார் தம்முடன் பாங்கு அமர் தொண்டருக்கு அருள்செய்து தொழா முனம் விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும் #208 மாலை யாமம் புலர்வுறும் வைகறை வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து ஏல அஞ்சு_எழுத்து ஓதி எழுந்தனர் #209 போத ஞான புகலி புனிதரை சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிட காதல் செய்பவன் போல கரும் கடல் மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் #210 ஆய போழ்தின் அர எனும் ஆர்ப்புடன் தூய முத்தின் சிவிகை சுடர் குடை மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்பரோடு ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார் #211 வந்து தோன்றிய அந்தணர் மா தவர் கந்த வார் பொழில் காழி நல் நாடர் முன் அந்தம்_இல் சீர் அரத்துறை ஆதியார் தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர் #212 என்று தங்களுக்கு ஈசர் அருள்செய்தது ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் நின்று போற்றி தொழுதிட நேர்ந்தது மன்று உளரர் அருள் என்று வணங்கினார் #213 மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் செம்மை நித்தில ஆன சிறப்பு அருள் எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே #214 எந்தை ஈசன் என எடுத்து இ அருள் வந்தவாறு மற்று எவ்வணமோ என்று சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை புந்தி ஆர புகன்று எதிர் போற்றுவார் #215 பொடி அணிந்த புராணன் அரத்துறை அடிகள்-தம் அருளே இதுவாம் என படி இலாத சொல்_மாலைகள் பாடியே நெடிது போற்றி பதிகம் நிரப்பினார் #216 சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று ஆதியார் அருள் ஆதலின் அஞ்சு_எழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம் #217 தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்த கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி வண்டு அறா பொலி மலர்_மழை ஆர்த்தது வானம் #218 விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் களைகண் ஆர்த்தது ஓர் கருணையின் ஆர்த்தன முத்து விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே #219 பல்கு வெண் கதிர் பத்தி சேர் நித்தில சிவிகை புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரை தரங்கம் மல்கு பால் கடல் வளர் மதி உதித்தது என வந்தார் #220 நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே ஆடுகின்றனர் அயர்ந்தனர் அளவு_இல் ஆனந்தம் கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார் #221 செய்ய பொன் புனை வெண் தரளத்து அணி சிறக்க சைவ மா மறை தலைவர்-பால் பெறும் தனி காளம் வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத #222 சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட பெற்ற பால் அறா வாயன் வந்தான் என பிடிக்க #223 புணர்ந்த மெய் தவ குழாத்தொடும் போதுவார் முன்னே இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலம் கிளர் தாரை அணைந்த மா மறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத #224 தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை இருளும் நீங்கவும் எழுது சொல் மறை அளிப்பவர்-தாம் பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு அருளும் அங்கணர் திரு அரத்துறையை வந்து அணைந்தார் #225 வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆக சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல அந்தி நாள் மதி அணிந்தவர் கோயில் உள் அடைந்தார் #226 மன்னு கோயிலை வலம்கொண்டு திரு முன்பு வந்து சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் என்னையும் பொருளாக இன் அருள்புரிந்து அருளும் பொன் அடி தல தாமரை போற்றி என்று எழுந்தார் #227 சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி நீடினார் திருவருள் பெரும் கருணையே நிகழ பாடினார் திருப்பதிகம் ஏழ் இசையொடும் பயில #228 இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் அசைவு_இல் சீர் தொண்டர் தம் உடன் அ பதி அமர்ந்தார் #229 தேவர் தம்பிரான் திரு அரத்துறையினில் இறைஞ்சி மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலா தாவு_இல் அன்பர்கள் தம்முடன் தொழுது பின் சண்பை காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் #230 விளங்கு வேணுபுரத்து திருத்தோணி வீற்றிருந்த களம் கொள் கண்டர்-தம் காதலியார் உடன் கூட உளம் கொள புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி வளம் கொள் பூம் புனல் புகலி மேல் செல மனம் வைத்தார் #231 அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி நண்ணு பேர் அருளால் விடைகொண்டு போய் நடம் கொண்டு உள் நிறைந்த பூம் கழலினை உச்சி மேல் கொண்டே வெண் நிலா மலர் நித்தில சிவிகை மேல் கொண்டார் #232 சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்க கவிகை வெண் மதி குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்ப குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆட புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் #233 மறை முழங்கின தழங்கின வண் தமிழ் வயிரின் குறை நரன்றன முரன்றன வளை குலம் காளம் முறை இயம்பின இயம் பல ஒலித்தன முரச பொறை கறங்கின பிறங்கின போற்று இசை அரவம் #234 உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அ பதியோர் புடை இரண்டினும் கொடியொடு பூம் துகில் விதானம் நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார் #235 அனைய செய்கையால் எதிர்கொளும் பதிகள் ஆனவற்றின் வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவி புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் #236 அங்கு அணைந்து இளம் பிறை அணிந்த சென்னியர் பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் பங்கய சேவடி பணிந்து பாடுவார் #237 மண்ணினில் பொலி குல மாலையர் தாம் தொழுது எண்_இல் சீர் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் நண்ணிய வகை சிறப்பித்து நாதரை பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார் #238 பாவினது இசைவழி பாடி அங்கு அகன்றி யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் மேவிய பெரும் திரு விசயமங்கையில் #239 அந்தணர் விசயமங்கையினில் அங்கணர் தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் வந்தனை செய்து கோதனத்தை மன்னிய செந்தமிழ்_மாலையில் சிறப்பித்து ஏத்தினார் #240 விசயமங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் அசைவு_இல் வைகாவினில் அணைந்து பாடி போந்து இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார் திசை உடை ஆடையர் திருப்புறம் பயம் #241 புறம் பயத்து இறைவரை வணங்கி போற்றி செய் திறம் புரி நீர்மையில் பதிக செந்தமிழ் நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார் #242 அ திரு பதி பணிந்து அகன்று போய் அனல் கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும் முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார் செய் தலை பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர் #243 திரு மலி புகலி மன் சேர சேய்ஞலூர் அரு_மறையவர் பதி அலங்கரித்து முன் பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே வரு முறை எதிர்கொள வந்து முந்தினார் #244 ஞானசம்பந்தரும் நாயனார் சடை தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் பான்மையில் வரும் பதி என்று நித்தில யானம் முன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார் #245 மா மறையாளர் வண் புகலி பிள்ளையார் தாம் எழுந்தருளிட தங்கள் பிள்ளையார் காமரும் பதியில் வந்து அருள கண்டனர் ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர் #246 களித்தனர் புண்ணிய கரக வாச நீர் தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் அளித்தவர் கோயில் உள் அவர் முன்பு எய்தினார் #247 வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலை பொங்கிய விருப்பினால் புடை வலம்கொடு செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர் #248 வேதியர் சேய்ஞலூர் விமலர்-தம் கழல் காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் தாதை தாள் தடிந்த சண்டீச பிள்ளையார் பாதக பயன் பெறும் பரிசு பாடினார் #249 இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே நல் நெடும் பதி உளோர் நயக்க வைகிய பின்னர் வெண் பிறை அணி வேணி பிஞ்ஞகர் மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார் #250 ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அ பாங்கு பந்தணைநலூர் பணிந்து பாடி போய் தீங்கு தீர் மா மறை செம்மை அந்தணர் ஓங்கும் ஓமாம்புலியூர் வந்து உற்றனர் #251 மற்ற நல் பதி வட தளியின் மேவிய அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ் சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் பொன் பதி வாழ் கொளிபுத்தூர் புக்கனர் #252 சீர் வளர் கோயிலை அணைந்து தே மலர் கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர் #253 நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் கும்பிடும் விருப்பொடு குறுகி கூடிய வம்பலர் செந்தமிழ்_மாலை பாடி நின்று எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார் #254 அ பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் பை பணியவர் கருப்பறியலூரினில் #255 பரமர்-தம் திரு கருப்பறியலூரினை சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ் உரை இசை பாடி அ மருங்கின் உள்ளவாம் சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் #256 மண் உலகு செய்த தவ பயனாய் உள்ள வள்ளலார் அ பதிகள் வணங்கி ஏகி எண்_இல் முரசு இரங்கி எழ பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊத கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது #257 பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் உள்ளம் மகிழ் சிறந்து ஓங்க தோணி மேவும் உமை பாகர் கழல் வணங்கி உவகை கூர வெள்ள மறை ஒலி பெருகு மறுகு-தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் #258 ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாச பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் #259 கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி வண் தமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார் #260 திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் #261 பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணை திருவருளின் பரிசு போற்றி விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை சிரபுரத்து பிள்ளையார் செல்லும் போது திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் #262 மறையவர்கள் அடி போற்ற தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும் போதில் நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறை குல மகளிர் நெருங்கி ஏந்த இறைவர் திருநீற்று காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த முறைமை அவர்க்கு அருள்செய்து மடத்தில் புக்கார் முதல்வர்-பால் மணி முத்தின் சிவிகை பெற்றார் #263 செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரை சென்று தாழ்ந்து மல்கு திருப்பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகும் நாளில் ஒல்லை முறை உபநயன பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணர பெற்றார் தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற #264 ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்-தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமை ஆகும் இருபிறப்பின் நிலைமையினை சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்_இறந்த புனித வேதம் #265 சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்ன பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை கருதி ஆதரவோடும் வியப்புற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார்-தம்மை கண் முன் வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் #266 மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்து_அஞ்சு என்பார் அந்தியினுள் மந்திரம் அஞ்சு_எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளி செய்தார் #267 அத்தகைமை பிள்ளையார் அருளி செய்ய அந்தணர்கள் அருள் தலை மேல் கொண்டு தாழ்ந்து சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூட பரமர் தாள் பணிந்து ஏத்தி பயிலும் நாளில் #268 பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக அந்தணர் பூந்தராய்-தன்னில் அணைந்தனர் நாவுக்கரையர் #269 வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் ஆக்கிய நல் வினை பேறு என்று அன்பர் குழாத்தொடும் எய்தி ஏற்கும் பெரு விருப்போடும் எதிர்கொள எய்தும் பொழுதில் #270 சிந்தை இடையறா அன்பும் திரு மேனி-தன்னில் அசைவும் கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும் வந்து இழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திருநீறும் அந்தம்_இலா திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய #271 கண்ட கவுணியர் கன்றும் கருத்தில் பரவு மெய் காதல் தொண்டர் திரு வேடம் நேரே தோன்றியது என்று தொழுதே அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள்செய்தார் #272 பேர் இசை நாவுக்கரசை பிள்ளையார் கொண்டு உடன் போந்து போர் விடையார் திருத்தோணி பொன் கோயில் உள் புகும் போதில் ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் சீர் வளர் தொண்டரை கொண்டு திரு மாளிகையினில் சேர்ந்தார் #273 அணையும் திருத்தொண்டர்-தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் இணை_இல் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு உணரும் சொல்_மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார் #274 அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கரசர் மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவு இடம் கும்பிட வேண்டி பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலி பிரான் இசைவோடும் பின்னாக எய்த இறைஞ்சி பிரியாத நண்பொடும் போந்தார் #275 வாக்கின் தனி மன்னர் ஏக மாறா திரு உளத்தோடும் பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து தேக்கிய மா மறை வெள்ள திருத்தோணி வீற்றிருந்தாரை தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் #276 செந்தமிழ்_மாலை விகற்ப செய்யுள்களான் மொழி மாற்றும் வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்கு சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்கு குறள் சாத்தி எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு #277 நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர் #278 இன் இசை பாடின எல்லாம் யாழ்ப்பெரும்பாணனார்-தாமும் மன்னும் இசை வடிவான மதங்கசூளாமணியாரும் பன்னிய ஏழ் இசை பற்றி பாட பதிகங்கள் பாடி பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார் #279 அங்கண் அமர்கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் திங்கள் சடை அண்ணலார்-தம் திரு பதி யாவையும் கும்பிட்டு எங்கும் தமிழ்_மாலை பாடி இங்கு எய்துவன் என்று தம் குல தாதையாரோடும் தவ முனிவர்க்கு அருள்செய்தார் #280 பெருகு விருப்புடன் நோக்கி பெற்ற குல தாதையாரும் அருமையால் உம்மை பயந்ததனால் பிரிந்து உறைவு ஆற்றேன் இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார் #281 ஆண்தகையாரும் இசைந்து அங்கு அம் பொன் திருத்தோணி மேவும் நீண்ட சடையார் அடி கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே ஈண்டு புகழ் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் காண்தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார் #282 அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற #283 சின்னம் தனி காளம் தாரை சிரபுரத்து ஆண்தகை வந்தார் என்னும் தகைமை விளங்க ஏற்ற திரு பெயர் சாற்ற முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடை பல்லியம் ஆர்ப்ப மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர்கொண்டு வணங்க #284 சங்க நாதங்கள் ஒலிப்ப தழங்கு பொன் கோடு முழங்க மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்ப திங்களும் பாம்பும் அணிந்தார் திரு பதி எங்கும் முன் சென்று பொங்கிய காதலில் போற்ற புகலி கவுணியர் போந்தார் #285 திருமறை சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும் உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி வரு புனல் பொன்னி வட-பால் குட திசை நோக்கி வருவார் #286 போற்றிய காதல் பெருக புள் இருக்கும் திருவேளூர் நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி ஆற்றிய பூசனை சாற்றி அம் சொல் பதிகம் அணிந்தார் #287 நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்தி கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண் தமிழ் கூறி நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார் #288 அங்கு-நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான்_மடந்தை பங்கர் உறை பழ மண்ணி படிக்கரை கோயில் வணங்கி தங்கு தமிழ்_மாலை சாத்தி திருக்குறுக்கை பதி சார்ந்தார் #289 திருக்குறுக்கை பதி மன்னி திரு வீரட்டானத்து அமர்ந்த பொருப்பு வில்லாளரை ஏத்தி போந்து அன்னியூர் சென்று போற்றி பருக்கை வரை உரித்தார்-தம் பந்தணைநல்லூர் பணிந்து விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார் #290 அ பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி செப்ப_அரும் சீர் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள் பாடி பதி எய்தி ஒப்பு_இல் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்வி குடி உற்றார் #291 செழும் திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நல் கோலம் பொழிந்த புனல் பொன்னி மேவும் புனித துருத்தி இரவில் தழும்பிய தன்மையும் கூட தண் தமிழ்_மாலையில் பாடி கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார் #292 திருக்கோடிகாவில் அமர்ந்த தேவர் சிகாமணி-தன்னை எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள் ஏன பருக்கோடு பூண்ட பிரானை பணிந்து சொல்_மாலைகள் பாடி கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார் #293 கஞ்சனூர் ஆண்ட தம் கோவை கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி அம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாக செம் சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார் #294 வெம் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளை போற்றி தங்கிய இன் இசை கூடும் தமிழ் பதிக தொடை சாத்தி அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்ட தொழுது செம் கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன்குடி சேர்ந்தார் #295 திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்தி பொருந்திய காதலில் புக்கு போற்றி வணங்கி புரிவார் மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் #296 மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் மை திகழ் கண்டர்-தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில் #297 இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கு ஆன பன்னும் தமிழ்_தொடை மாலை பாடல் புனைந்து பரவி பொன் அம் கழல் இணை போற்றி புறம் போந்து அணைந்து புகுந்தார் மன்னும் தடம் கரை பொன்னி வட குரங்காடுதுறையில் #298 வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளி புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் #299 பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் உழை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார் #300 மாடம் நிரை மணி வீதி திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து நீடு மன களிப்பினொடும் எதிர்கொள்ள நித்தில யானத்து நீங்கி #301 வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் நந்தி திருவருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர் #302 மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவு_இல் காதல் தணியாத கருத்தின் ஓடும் தம் பெருமான் கோயில் வலம்கொண்டு தாழ்ந்து பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் #303 கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய #304 பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு நிலவு திரு பதி-அதன்-கண் நிகழும் நாள் நிகர் இலா நெடு நீர் கங்கை அலையும் மதி முடியார்-தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றி குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் #305 குட திசை மேல் போவதற்கு கும்பிட்டு அங்கு அருள் பெற்று குறிப்பினோடும் படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தான பதியில் நண்ணி அடையும் மனமுற வணங்கி அரும் தமிழ்_மாலைகள் பாடி அங்கு-நின்றும் புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் #306 செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் பொங்கு மா தவம் உடையார் என தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார் #307 மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி செழு வாச மலர் கமல சேவடி கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று தொழுது ஆடி பாடி நறும் சொல்_மாலை தொடை அணிந்து துதித்து போந்தே ஒழியாத நேசம் உடன் உடையவரை கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள் #308 அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ முதன் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனை தொழுது போற்றி பதம் நிறை செந்தமிழ் பாடி சடை முடியார் பயில் பதியும் பணிந்து பாடி மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் #309 சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார்-தம் முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள் புக்கு முன்பு தாழ்ந்து துன்று கதிர் பரிதி மதி மருத்துக்கள் தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல்_மாலை நிகழ பாடி #310 அங்கண் அகன்று அம்மருங்கில் அங்கணர்-தம் பதி பிறவும் அணைந்து போற்றி செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா பொங்கு ஒலி நீர் மழநாட்டு பொன்னி வட கரை மிசை போய் புகலி வேந்தர் நங்கள் பிரான் திருப்பாச்சில் ஆச்சிரமம் பணிய நண்ணும் போதில் #311 அ நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் கன்னி இள மட பிணையாம் காமரு கோமள கொழுந்தின் கதிர் செய் மேனி மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தி தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் #312 மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் பற்றியே வரும் குலத்து பான்மையினான் ஆதலினால் பரிவு தீர பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும் செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் #313 அவ்வளவில் ஆளுடையபிள்ளையார் எழுந்தருளி அணுக எய்த செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் திருஞானசம்பந்தன் வந்தான் என்றே எ உலகும் துயர் நீங்க பணி மாறும் தனி காளத்து எழுந்த ஓசை எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் #314 மா நகரம் அலங்கரி-மின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாச தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவி தானும் வானவர் நாயகர் மகனார் வரும் முன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான் #315 பிள்ளையார் எழுந்தருள பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் வெள்ளம் நீர் கண் பொழிய திரு முத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குல பதியின் மணி வீதி கொண்டு புக்கான் #316 மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணி வாயில் பணிந்து புக்கு தங்கள் பிரான் கோயில் வலம்கொண்டு திரு முன் வணங்க சாரும்-காலை #317 கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனை கண்டு நோக்கி என் இது என்று அருள்செய்ய மழவன்-தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற பொன் இவளை முயலகன் ஆம் பொருவு_இல் அரும் பிணி பொருந்த புனிதர் கோயில் முன் அணைய கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான் #318 அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே பணி வளர் செம் சடை பாச்சின் மேய பரம்பொருள் ஆயினாரை பணிந்து மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று தணிவு_இல் பிணி தவிர்க்கும் பதிக தண் தமிழ் பாடினார் சண்பை நாதர் #319 பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் கன்னி உறு பிணி விட்டு நீங்க கதும்என பார் மிசை நின்று எழுந்து பொன்னின் கொடி என ஒல்கி வந்து பெரு வலி தாதை புடை அணைந்தாள் #320 வன் பிணி நீங்கு மகளை கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்க தன்தனி பாவையும் தானும் கூட சண்பையர் காவலர் தாளில் வீழ நின்ற அரு_மறை பிள்ளையாரும் நீர் அணி வேணி நிமலர் பாதம் ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார் #321 நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே ஆடல் பயின்றார் பதி பிறவும் அணைந்து பணிந்து அடி போற்றி ஏகி சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலி சிவபெருமானை இறைஞ்ச சென்றார் #322 பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து மண் பரவும் தமிழ்_மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈங்கோய் மலையை சார்ந்தார் #323 செம் கண் குறவரை தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசை பதிகம் புனைந்து பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோது_இல் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார் #324 அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாட செங்குன்றூர் #325 அ நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து பல் நெடும் தோரணம் முதலா பயில் அணிகள் பல அமைத்து முன்னுற வந்து எதிர்கொண்டு பணிந்து ஏத்தி மொய் கரங்கள் சென்னியுற கொண்டு அணைந்தார் சின விடையார் செழும் கோயில் #326 தம் பெருமான் கோயிலின் உள் எழுந்தருளி தமிழ் விரகர் நம்பர்-அவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க இம்பரும் உம்பரும் ஏத்த இன் இசை வண் தமிழ் பாடி கும்பிடும் ஆதரவுடன் அ கோ நகரில் இனிது அமர்ந்தார் #327 அப்பாலை குட புலத்தில் ஆறு அணிந்தார் அமர் கோயில் எப்பாலும் சென்று ஏத்தி திருநணாவினை இறைஞ்சி பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார் #328 ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்-கண் தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வர பாங்கர் வரையும் குளிரும் பனி பருவம் எய்தியது-ஆல் #329 அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை என துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் குளிர் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும் #330 மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய் கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பினிடை ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகும்-ஆல் #331 நீடிய அ பதிகள் எலாம் நிறை மாட திறைகள்-தொறும் பேடையுடன் பவள கால் புறவு ஒடுங்க பித்திகையின் தோடு அலர் மென் குழல் மடவார் துணை கலச வெம் முலையுள் ஆடவர் தம் பணை தோளும் மணி மார்பும் அடங்குவன #332 அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் எரி உமிழ் பேழ் வாய் தோணி இரும்பு ஈர்ப்பாரிடை எல்லாம் விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் #333 அந்நாளில் கொடி மாட செங்குன்றூர் அமர்ந்து இருந்த மெய்ஞ்ஞான பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் பல் நாளும் அ நாட்டில் பயின்றதனால் பனித்த குளிர் முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் #334 அ நிலைமை ஆளுடையபிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே இ நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்த பெறு என்று சென்னி மதி அணிந்தாரை திருப்பதிகம் பாடுவார் #335 அ வினைக்கு இ வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே செய்வினை தீண்டா திருநீலகண்டம் என செப்பினார் #336 ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளி செய்து தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய மேய அ பொன் பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் தீய பனி பிணி அ நாடு அடங்கவும் தீர்ந்தது அன்றே #337 அ பதியின்-கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி முப்புரிநூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் செப்ப_அரும் சீர் திருப்பாண்டி கொடுமுடி சென்று அணைந்தார் #338 பருவம் அறா பொன்னி பாண்டி கொடு முடியார்-தம் பாதம் மருவி வணங்கி வள தமிழ்_மாலை மகிழ்ந்து சாத்தி விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம் பொருவு_இல் தானம் பல போற்றி குண திசை போதுகின்றார் #339 செல்வ கருவூர் திருவானிலை கோயில் சென்று இறைஞ்சி நல் இசை வண் தமிழ் சொல் தொடை பாடி அ நாடு அகன்று மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் #340 பல் நெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் அ நிலை தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் பொன் இயல் வேணி புனிதர் பராய்த்துறையுள் புகுந்தார் #341 நீடும் பராய்த்துறை நெற்றி தனி கண்ணர் கோயில் நண்ணி கூடும் கருத்தொடு கும்பிட்டு கோது_இல் தமிழ் சொல்_மாலை பாடும் கவுணியர் கண் பனி மாரி பரந்து இழிய சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் #342 தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா வழு_இல் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் செழு மலர் சோலை திரு கற்குடி மலை சேர வந்தார் #343 கற்குடி மா மலை மேல் எழுந்த கனக கொழுந்தினை கால் வளைய பொன் திரள் மேரு சிலை வளைத்த போர் விடையாளியை போற்றி இசைத்து நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் #344 செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து மெய் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ்_மாலை வேய்ந்து மை மலர் கண்டர்-தம் ஆனைக்காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார் #345 விண்ணவர் போற்றி செய் ஆனைக்காவில் வெண் நாவல் மேவிய மெய்ப்பொருளை நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் அண்ணல் கோ செம் கண் அரசன் செய்த அடிமையும் அம் சொல் தொடையில் வைத்து பண்ணுறு செந்தமிழ்_மாலை பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால் #346 நாரணன் நான்_முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் சீரணி நீடு திருக்கயிலை செல்வ திருவாரூர் மேய பண்பும் ஆரணத்து உட்பொருள் ஆயினாரை ஆனைக்காவின்-கண் புகழ்ந்து பாடி ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் #347 கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவ துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ்_மாலை கொண்டு ஏத்தி போந்து வைதிக மா மணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்தி செல்வார் #348 ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மா மலையே முதலா வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச நீறு அணி செம் பவள பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார் #349 நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்-பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் இடும்பைகள் தீர்த்து அருள்செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி அடும் பணி செம் சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றி கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் #350 சென்று திகழ் திருக்காட்டுப்பள்ளி செம் சடை நம்பர்-தம் கோயில் எய்தி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார் கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார் #351 அங்கு அ பதி-நின்று எழுந்தருளி அணி திருவாலம்பொழில் வணங்கி பொங்கு புனல் பொன்னி பூந்துருத்தி பொய்யிலியாரை பணிந்து போற்றி எங்கும் நிகழ் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள எ பதியும் தொழுது செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் #352 கண்டியூர் வீரட்டர் கோயில் எய்தி கலந்து அடியாருடன் காதல் பொங்க கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சி குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசை தமிழ்_மாலை-தன்னில் அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி #353 வினவி எடுத்த திருப்பதிகம் மேவு திருக்கடைக்காப்பு-தன்னில் அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலி கவுணியனார் துனை புனல் பொன்னி திரை வலம்கொள் சோற்றுத்துறை தொழ சென்று அடைவார் #354 அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோம் என்று ஒப்பு_இல் வண் தமிழ்_மாலை ஒருமையால் செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன் #355 தொல்லை நீள் திரு சோற்றுத்துறை உறை செல்வர் கோயில் வலம்கொண்டு தேவர்கள் அல்லல் தீர்க்க நஞ்சுண்டபிரான் அடி எல்லை_இல் அன்பு கூர இறைஞ்சினார் #356 இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் சிறந்த சீர் திரு வேதிக்குடியினில் #357 வேத வேதியர் வேதிக்குடியினில் நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் பாத பங்கயம் போற்றி பணிந்து எழுந்து ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை #358 எழுது மா மறையாம் பதிகத்து இசை முழுதும் பாடி முதல்வரை போற்றி முன் தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் #359 வெண்ணி மேய விடையவர் கோயிலை நண்ணி நாடிய காதலின் நாள் மதி கண்ணியார்-தம் கழல் இணை போற்றியே பண்ணில் நீடும் பதிக முன் பாடினார் #360 பாடி நின்று பரவி பணிந்து போய் ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் நீடு சண்பை நிறை புகழ் வேதியர் #361 மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் மெய் தரும் பரிவிலான் வேள்வியை பாழ்பட செய்த சங்கரர் திரு சக்கரப்பள்ளி முன்பு எய்த வந்து அருளினார் இயல் இசை தலைவனார் #362 சக்கரப்பள்ளியார்-தம் திரு கோயில் உள் புக்கு அருத்தியின் உடன் புனை மலர் தாள் பணிந்து அக்கரை பரமர்-பால் அன்புறும் பரிவு கூர் மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார் #363 தலைவர்-தம் சக்கரப்பள்ளி-தன்னிடை அகன்று அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கை பதி குலவும் ஆலந்துறை கோயிலை குறுகினார் #364 மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம் பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து இன் இசை தமிழ் புனைந்து இறைவர் சேலூருடன் பன்னு பாலைத்துறை பதி பணிந்து ஏகினார் #365 காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் பூவின் மேல் விழையுறும் புகலியார் தலைவனார் சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார் #366 மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் துன்று மங்கல வினை துழனியால் எதிர்கொள பொன் தயங்கு ஒளி மணி சிவிகையில் பொலிவுற சென்று அணைந்து அருளினார் சிரபுர செம்மலார் #367 நித்தில சிவிகை மேல்-நின்று இழிந்து அருளியே மொய்த்த அந்தணர் குழாம் முன் செல பின் செலும் பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே அத்தர்-தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார் #368 வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் துள்ளுவார் சடையரை தொழுது முன் பரவுவார் #369 பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவு-தான் வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து அரவு உடை சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் விரவும் அ பதி அமர்ந்து அருளியே மேவினார் #370 அன்ன தன்மையில் அ பதியினில் அமர்ந்து அருளி மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கி பன்னும் இன் இசை பதிகமும் பல முறை பாடி நல் நெடும் குல நான்_மறையவர் தொழ நயந்தார் #371 நீடும் அ பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் ஆடுவார் திருவருள் பெற அகன்று போந்து அங்கண் மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் தேடும் மால் அயற்கு அரியவர் திரு கருகாவூர் #372 வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர் சந்த மா மறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே அந்தம்_இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று சிந்தை இன்புற பாடினார் செழும் தமிழ் பதிகம் #373 பதிக இன் இசை பாடி போய் பிற பதி பலவும் நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் அதிர் சிலம்பு அடியார் மகிழ் அருள்இவள்நல்லூர் #374 மன்னும் அ பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசுடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சி பன்னு சீர் பதி பலவும் அப்பால் சென்று பணிவார் #375 பழுது_இல் சீர் திரு பரிதி நல் நியமும் பணிந்து அங்கு எழுது மா மறையாம் பதிகத்து இசை போற்றி முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை வழு_இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து #376 பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து பங்கய தடம் பணை பதி பலவும் முன் பணிந்தே எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் அங்கணர்க்கு இடம் ஆகிய பழம் பதி ஆவூர் #377 பணியும் அ பதி பசுபதீச்சரத்தின் இனிது இருந்த மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கி தணிவு_இல் காதலினால் தண் தமிழ்_மாலைகள் சாத்தி அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் #378 மறை விளங்கும் அ பதியினில் மணிகண்டர் பொன் தாள் நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் பிறை அணிந்தவர் அருள் பெற பிரச மென் மலர் வண்டு அறை நறும் பொழில் திரு வலஞ்சுழியில் வந்து அணைந்தார் #379 மதி புணைந்தவர் வலஞ்சுழி மருவு மா தவத்து முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்-தம் முன் வந்து எதிர்கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர்செல மதியை கதிர் செய் வெண் முகில் குழாம் புடைசூழ்ந்து என கலந்தார் #380 கலந்த அன்பர்கள் தொழுது எழ கவுணிய தலைவர் அலர்ந்த செங்கமல கரம் குவித்து உடன் அணைவார் வலஞ்சுழி பெருமான் மகிழ் கோயில் வந்து எய்தி பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் #381 மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம்கொண்டு உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய் திரு வலஞ்சுழி உடையவர் சேவடி தலத்தில் பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர் #382 ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் ஆன காதலில் அங்கணவர்-தமை வினவும் ஊனம்_இல் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் பானல் ஆர் மணிகண்டரை பாடினார் பரவி #383 புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து நலம் கொள் காதலின் நாதர் தாள் நாள்-தொறும் பரவி வலஞ்சுழி பெருமான் தொண்டர்-தம்முடன் மகிழ்ந்தார் #384 மகிழ்ந்ததன்-தலை வாழும் அ நாளிடை வானில் திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில் #385 தண் புனல் குளிர் கால் நறும் சந்தன தேய்வை பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் நண்பு உடை துணை நகை மணி முத்து அணி நாளும் உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப #386 அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையும் மான் பெறல்_அரிய புனல் என்று பேய்த்தேரின் பின் தொடரும் உறை உணவு கொள்ளும் புள் தேம்பி அயல் இரை தேரும் பறவை சிறை விரித்து ஒடுங்க பனி புறத்து வதியும்-ஆல் #387 நீள் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் வாள் நிழல் நல் சோலையிலும் மலர் வாவி கரை மாடும் பூண் நிலவு முத்து அணிந்த பூம் குழலார் முலை தடத்தும் காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவார்-ஆல் #388 மயில் ஒடுங்க வண்டு ஆட மலர் கமல முகை விரிய குயில் ஒடுங்கா சோலையின் மென் தளிர் கோதி கூவி எழ துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில் #389 சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ்சுழியை எண் பெருக தொழுது ஏத்தி பழையாறை எய்துதற்கு நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார் #390 திரு ஆறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செம் தீயின் உருவாளன் அடி வணங்கி உருகிய அன்பொடு போற்றி மரு ஆரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார் தம் திருச்சத்திமுற்றத்தின் புறம் சேர்ந்தார் #391 திருச்சத்திமுற்றத்தில் சென்று எய்தி திருமலையாள் அருச்சித்த சேவடிகள் ஆர்வமுற பணிந்து ஏத்தி கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி விருப்புற்று திருப்பட்டீச்சரம் பணிய மேவும்-கால் #392 வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் தம்மை அறியாதபடி தண் தரள பந்தர் எடுத்து எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப #393 அ உரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழ செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்து பிள்ளையார் இ வினை-தான் ஈசர் திருவருளால் ஆகில் இசைவது என மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசை தாழ்ந்தார் #394 அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்க கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் மதுர மொழி மறை தலைவர் மருங்கு இமையோர் பொழி வாச புது மலரால் அ பந்தர் பூம் பந்தரும் போலும் #395 தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்தருளும் பிள்ளையார் வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார் #396 பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணை திறம் போற்றி ஈர மனம் களி தழைப்ப எதிர்கொள்ள முகம் மலர்ந்து சேர வரும் தொண்டருடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார் #397 சென்று அணைந்து திரு வாயில் புறத்து இறைஞ்சி உள் புக்கு வென்றி விடையவர் கோயில் வலம்கொண்டு வெண் கோட்டு பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார் #398 அருள் வெள்ள திறம் பரவி அளப்பு_அரிய ஆனந்த பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் திரு உள்ள பரிவுடனே செம்பொன் மலை_வல்லியார் தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார் #399 அ பதியில் அமர்கின்ற ஆளுடையபிள்ளையார் செப்ப_அரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு எப்பொருளுமாய் நின்றார் இரும்பூளை எய்தினார் #400 தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்று எய்த காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்ப பூவண மாலைகள் நாற்றி பூரண பொன் குடம் நிரைத்து அங்கு யாவர்களும் போற்றி இசைப்ப திருத்தொண்டர் எதிர்கொண்டார் #401 வண் தமிழின் மொழி விரகர் மணி முத்தின் சிவிகையினை தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழ தாமும் தொழுதே அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று பண்டு அரும் இன் இசை பதிகம் பரம்பொருளை பாடுவார் #402 நிகர்_இலா மேரு வரை அணுவாக நீண்டானை நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை தகவு ஒன்ற அடியார்கள்-தமை வினவி தமிழ் விரகர் பகர்கின்ற அரு_மறையின் பொருள் விரிய பாடினார் #403 பாடும் அரதை பெரும் பாழியே முதல் ஆக சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில் நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி நீடு தமிழ்_தொடை புனைந்து அ நெடு நகரில் இனிது அமர்ந்தார் #404 அங்கண் இனிது அமரும் நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் செம் கண் நெடுமால் பணியும் சிவபுரத்து சென்று அடைந்து கங்கை சடை கரந்தவர்-தம் கழல் வணங்கி காதலினால் பொங்கும் இசை திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார் #405 போற்றி இசைத்து புனிதர் அருள் பெற்று போந்து எ உயிரும் தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அந்தணனார் ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர்-தமை ஏத்துதற்கு நாற்றிசையோர் பரவும் திரு குடமூக்கு நண்ணினார் #406 தே மருவு மலர் சோலை திரு குடமூக்கினில் செல்வ மா மறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருள தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க கோ முறைமை எதிர்கொண்டு தம்பதி உள் கொடு புக்கார் #407 திருஞானசம்பந்தர் திரு குடமூக்கினை சேர வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் உருகா நின்று உளம் மகிழ் குடமூக்கை உவந்து இருந்த பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார் #408 வந்து அணைந்து திரு கீழ்க்கோட்டத்து இருந்த வான் பொருளை சிந்தை மகிழ்வுற வணங்கி திருத்தொண்டருடன் செல்வார் அந்தணர்கள் புடைசூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் #409 பூ மருவும் கங்கை முதல் புனிதம் ஆம் பெரும் தீர்த்தம் மா மகம்-தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் #410 கண்ணாரும் அரு மணியை காரோணத்து ஆர் அமுதை நண்ணாதார் புரம் எரித்த நான்_மறையின் பொருளானை பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்தி பிற பதியும் எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்தருளி #411 திரு நாசேச்சரத்து அமர்ந்த செம் கனக தனி குன்றை கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் #412 மா நாகம் அர்ச்சித்த மலர் கமல தாள் வணங்கி நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடைமருதில் பூ நாறும் புனல் பொன்னி தடம் கரை போய் புகுகின்றார் #413 ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளி தாங்க_அரிய பெரு மகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் ஈங்கு எனை ஆளுடையபிரானிடை மருது ஈதோ என்று பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்தருளினார் #414 அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்தருளி அங்கு அணைந்து முடிவு_இல் பரம்பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சி படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய #415 பரவுறு செந்தமிழ் பதிகம் பாடி அமர்ந்த அ பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் மதியோடு அரவு சடைக்கு அணிந்தவர்-தம் தாள் போற்றி ஆர்வத்தால் உரவு திருத்தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள் #416 மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதி கரை போய் குரங்காடுதுறை அணைந்து குழகனார் குரை கழல்கள் பெரும் காதலினால் பணிந்து பேணிய இன் இசை பெருக அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் #417 அ மலர் தடம் பதி பணிந்து அகன்று போந்து அருகு கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார் #418 மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூல தேவர்-தம் திருவாவடுதுறை திருத்தொண்டர் பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணை புகலி காவலர்க்கு எதிர்கொள்ளும் ஆதரவுடன் கலந்தார் #419 வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ் சண்பை அந்தணர்க்கு எலாம் அரு_மறை பொருள் என வந்தார் சந்த நித்தில சிவிகை-நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே சிந்தை இன்புற இறைவர்-தம் கோயில் முன் சென்றார் #420 நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி ஆடும் ஆதியை ஆவடுதுறையுள் ஆர் அமுதை நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார் #421 அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் துன்பு போம் மன திருத்தொண்டர்-தம்முடன் தொழுதே இன்பம் மேவி அ பதியினில் இனிது அமர்ந்து இருந்தார் #422 மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு ஆவது ஆகிய காலம் வந்து அணையுற அணைந்து தா_இல் சண்பையர் தலைவர்க்கு தாதையார் தாமும் போவதற்கு அரும் பொருள் பெற எதிர்நின்று புகன்றார் #423 தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி அந்தம்_இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் எந்தையார் அடி தலங்கள் அன்றோ என எழுந்தார் #424 சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது ஒன்றும் மற்று இலேன் உன் அடி அல்லது ஒன்று அறியேன் என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார் #425 எடுத்த வண் தமிழ் பதிக நால் அடியின் மேல் இரு சீர் தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார் #426 நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர் இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று #427 வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் உய்ந்த இ கிழி பொன் உலவா கிழி உமக்கு நித்தனார் அருள்செய்தது என்று உரைக்க நேர் தொழுதே அத்தனார் திருவருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார் #428 பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் தணிந்த சிந்தை அ தாதையார்க்கு அளித்து உரைசெய்வார் #429 ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி தீது நீங்க நீர் செய்யவும் திரு கழுமலத்து வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகும்-ஆல் #430 என்று கூறி அங்கு அவர்-தமை விடுத்த பின் அவரும் நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி மன்றல் ஆவடுதுறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார் #431 அண்ணலார் திருவாவடுதுறை அமர்ந்தாரை உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடை மேல் தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் #432 கொன்றை வார் சடை முடியரை கோழம்பத்து இறைஞ்சி என்றும் நீடிய இன் இசை பதிகம் முன் இயம்பி மன்று உளார் மகிழ் வைகல் மாட கோயில் மருங்கு சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுர செல்வர் #433 வைகல் நீடு மாட கோயில் மன்னிய மருந்தை கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி செய்ய இன் இசை செந்தமிழ்_மாலைகள் மொழிந்து நையும் உள்ளத்தராய் திருநல்லத்தில் நண்ணி #434 நிலவு மாளிகை திருநல்லம் நீடு மா மணியை இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்து பலவும் ஈசர்-தம் திரு பதி பணிந்து செல்பவர்-தாம் அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் #435 மன்னு மாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கி பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவி பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து சொன்னவாறு அறிவார்-தமை துருத்தியில் தொழுதார் #436 திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் வரைத்தலை பசும்பொன் எனும் வண் தமிழ் பதிகம் உரைத்து மெய்யுற பணிந்து போந்து உலவும் அ நதியின் கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் #437 மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால் மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து பூ அலம்பு தண் புனல் பணை புகலியார் தலைவர் வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் #438 மல்கு தண்டலை மயிலாடுதுறையினில் மருவும் செல்வ வேதியர் தொண்டரொடு எதிர்கொள சென்று கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார் #439 உள்ளம் இன்புற உணர்வுறும் பரிவு கொண்டு உருகி வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிக தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார் #440 அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம் கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் பத்தர்-தம் உடன் பணிந்து இசை பதிகம் முன் பகர்ந்தார் #441 பாடும் அ பதி பணிந்து போய் பறியலூர் மேவும் தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் காடு கொண்ட செம் சடை முடி கடவுளர் கருது நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர் #442 பரமர்-தம் திருப்பறியலூர் வீரட்டம் பரவி விரவு காதலின் வேலையின் கரையினை மேவி அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கி சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர்கொள செல்வார் #443 அடியவர்கள் களி சிறப்ப திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய் போகி கடி கமழும் மலர் பழன கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கி கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை படி அறிய பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர் #444 தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு பெருமை உடை பெரும்பாணர் அவர்க்கு உரைப்பார் பிள்ளையார் அருளி செய்த அருமை உடை பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளி செய்தார் #445 கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை அளவு பெற கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் உளம் நடுங்கி பணிந்து திருநீலகண்ட பெரும்பாணர் உணர்த்துகின்றார் #446 அலகு_இல் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப்பெற்றால் பண்பு நீடி இலகும் இசை யாழின்-கண் அடங்காமையான் காட்டப்பெறுவன் என்றார் #447 வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் மாதர் மட பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த #448 வண் புகலி வேதியனார் மாதர் மட பிடி எடுத்து வனப்பில் பாடி பண் பயிலும் திருக்கடைக்காப்பு சாத்த அணைந்து பெரும்பாணர்-தாம் நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு எண் பெருகும் அ பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே #449 அப்பொழுது திருநீலகண்ட இசை பெரும்பாணர் அதனை விட்டு மெய் பயமும் பரிவும் உற பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி இ பெரியோர் அருள்செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்ன செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் #450 வீக்கு நரம்பு உடை யாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனை போக்க ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் ஆக்கிய இ கருவியினை தாரும் என வாங்கி கொண்டு அவனி செய்த பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார் #451 ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அது என் ஆளுடையாள் உடனே கூட செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் எய்திய இ கருவியினில் அளவு படுமோ நம்-தம் இயல்புக்கு ஏற்ப வையகத்தோர் அறிவுற இ கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார் #452 சிந்தையால் அளவு படா இசை பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் இந்த யாழினை கொண்டே இறைவர் திருப்பதிக இசை இதனில் எய்த வந்தவாறே பாடி வாசிப்பீர் என கொடுப்ப புகலி மன்னர் தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் #453 அணைவுறும் அ கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆளுடையபிள்ளையார்-தம் துணை மலர் சேவடி பணிந்து துதித்து அருள தோணிபுர தோன்றலாரும் இணை_இல் பெரும் சிறப்பு அருளி தொண்டருடன் அ பதியில் இனிது மேவி பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் #454 பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனை பலவும் வணங்கி போற்றி தங்கி இசை யாழ் பெரும்பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு #455 நள்ளாற்றில் எழுந்தருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் உள்ளாற்ற வலம்கொண்டு திரு முன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார் #456 உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல மருவு திரு மேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர் புளகம் வளர்க்கும் நீராய் அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று பொருவு_இல் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்து போற்றி #457 யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூட பாடியே எண்_இல் கற்ப சேண் அளவு பட ஓங்கும் திருக்கடைக்காப்பு சாத்தி செம் கண் நாக பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்து புறத்து அணைந்து புவனம் ஏத்தும் பாணனார் யாழில் இட-பால் அறா வாயர் அருள் பணித்த போது #458 பிள்ளையார் திரு தாளம் கொடு பாட பின்பு பெரும்பாணனார்-தாம் தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி கொள்ள இடும் பொழுதின்-கண் குவலத்தோர் களிகூர குலவு சண்பை வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத்தொண்டருடன் மருவும்-காலை #459 மன்னு திருநள்ளாற்று மருந்தை வணங்கி போந்து வாச நல் நீர் பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ #460 நிறை செல்வ திருச்சாத்தமங்கையினில் நீலநக்கர்-தாமும் சைவ மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி முறைமையில் வந்து எதிர்கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார் #461 அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர்-தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் உய வந்தித்து எழு முன்றில் புடை வலம்கொண்டு உள் புக்கு ஆறு ஒழுகும் செக்கர் மய அந்தி மதி சடையார் முன் தாழ்ந்து மா தவம் இ வையம் எல்லாம் செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் #462 போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம ஏற்றின் மிசை இருப்பவர்-தம் எதிர்நின்று துதித்து போந்து எல்லை இல்லா நீற்று நெறி மறையவனார் நீலநக்கர் மனையில் எழுந்தருளி அன்பால் ஆற்றும் விருந்து அவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார் #463 நீடு திருநீலநக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மை பாடும் யாழ் பெரும்பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி ஆடும் அவர் அயவந்தி பணிவு-அதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று நாடிய நண்பு உடை நீலநக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து #464 கோது_இலா ஆர் அமுதை கோமள கொம்புடன் கூட கும்பிட்டு ஏத்தி ஆதி ஆம் மறை பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளி செய்வார் நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்-தம் பெரும் சீர் நிகழ வைத்து பூதி சாதனர் பரவும் புனித இயல் இசை பதிகம் போற்றி செய்தார் #465 பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு விரவிய நண்பு உடை அடிகள் விருப்புறு காதலில் தங்கி மேவும் நாளில் அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் உரவு மன கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி #466 மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை சொல் தமிழ்_மாலைகள் பாடி சில நாள் வைகி தொழுது அகன்றார் தோணிபுர தோன்றலார்-தாம் #467 கழி கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கி கங்கை ஆற்று சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் விழி காவி மலர் பழன கீழ்வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் #468 அருகு அணையும் திருப்பதிகள் ஆன எலாம் அங்கணரை பணிந்து போற்றி பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு குருகு மனம் களி சிறப்ப எதிர்கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார் #469 சிறுத்தொண்டர் உடன் கூட செங்காட்டங்குடியில் எழுந்தருளி சீர்த்தி நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்-அவர் நண்பு அமர்ந்து நீலகண்டம் பொறுத்து அண்டர் உய கொண்டார் கணபதீச்சரத்தின்-கண் போகம் எல்லாம் வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் #470 அங்கு அணைந்து கோயில் வலம்கொண்டு அருளி அரவு அணிந்தார் அடி கீழ் வீழ்ந்து செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி தங்கள் பெருந்தகையாரை சிறுத்தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றி பொங்கி எழும் இசை பாடி போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார் #471 போந்து மாமாத்திரர்-தம் போர் ஏற்றின் திரு மனையில் புகுந்து சிந்தை வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் #472 திருமருகல் நகரின்-கண் எழுந்தருளி திங்களுடன் செம் கண் பாம்பு மருவு நெடும் சடை மவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கி போற்றி உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட பெருகு தமிழ்_தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலி பிள்ளையார்-தாம் #473 அ நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு பொன் ஆர் மேரு சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வாள் #474 வாள் அரவு தீண்டவும் தான் தீண்டகில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடுப்பார் இன்றி ஆள் அரி ஏறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர் கொடி போல்வாள் அரற்றும் போது கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லா கொள்கையினாலும் தீர்க்க குறையாது ஆக நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள் #475 அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவு ஆக உடன் போந்தேன் அரவால் வீடி என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இ இடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கி தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள் #476 அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் நெடியானும் நான்_முகனும் காணா கோல நீல விட அரவு அணிந்த நிமலா வெந்து பொடியான காமன் உயிர் இரதி வேண்ட புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாச கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் #477 வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெரும் கால வலயம் போலும் செம் தறுகண் வெள் எயிற்று கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்ய தாளா இந்த விட கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி-நின்றும் ஏறுமாறும் அந்தி மதி குழவி வளர் செய்ய வேணி அணி மருகன் பெருமானே அருளாய் என்றும் #478 இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் அ தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்தகையார் கும்பிட வந்து அணைகின்றார்-தம் மெய் தன்மை விளங்கு திரு செவியில் சார மேவுதலும் திரு உள்ள கருணை மேல்மேல் வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் #479 சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றி சிந்தை நைந்து பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன கர மலர் உச்சியின் மேல் குவித்து கொண்டு கண் அருவி சொரிந்து இழிய காழி வேத புரவலனார் சேவடி கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல்உற்றாள் #480 வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு குளம் பெருக தனம் பெற்று கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் #481 மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல் நின்றேன் சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்க பற்றிய வாள் அரவு விடம் தீருமாறு பணை மருகர் பெருமானை பாடல்உற்றார் #482 சடையானை எ உயிர்க்கும் தாய் ஆனானை சங்கரனை சசி கண்ட மவுலியானை விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற படையானை பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்_இழையார் உள் மெலிவு என்று எடுத்து பாட #483 பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப அங்கையினை உச்சியின் மேல் குவித்து கொண்டு அங்கு அருள் காழி பிள்ளையார் அடியில் வீழ்ந்த நங்கை அவள்-தனை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெரு வாழ்வு வகுத்து விட்டார் #484 மற்று அவர்க்கு விடைகொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலிய பாசம் சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி பற்றி எழும் காதல் மிக மேல்மேல் சென்று பரமனார் திறத்து உன்னி பாங்கர் எங்கும் சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் #485 புக்கு இறைஞ்சி எதிர்நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதி புனலும் பிறையும் சேர்ந்த செக்கர் முடி சடை மவுலி வெண்நீற்றார்-தம் திரு மேனி ஒரு பாகம் பசுமை ஆக மை குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் #486 மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங்குடியின் மன்னி பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட அருவி கண் வாருற பாடல்உற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து #487 கண்டு எதிர் போற்றி வினவி பாடி கணபதீச்சரம் காதலித்த அண்டர்பிரானை வணங்கி வைகும் அ பதியில் சில நாள் போற்றி தொண்டருடன் அருள் பெற்று மற்ற தொல்லை திரு பதி எல்லை நீங்கி புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் #488 சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர் பாங்கு அணைந்தார் #489 திரு புகலூர் திருத்தொண்டரோடும் செம்மை முருகனார் மெய் மகிழ்ந்த விருப்பொடு சென்று எதிர்கொள்ள வந்து வேத முதல்வர்-தம் கோயில் எய்தி பொருப்பு உறழ் கோபுரத்து உள் புகுந்து பூ மலி முன்றில் புடை வலம்கொண்டு ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் #490 புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை நெக்குருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய மிக்க தமிழ்_தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடி போந்து திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார் #491 ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அ பதி-தன்னில் அமரு நாளில் வாங்கு மலை சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி ஓங்கிய அன்பின் முருகனார்-தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் பாங்கு உடை வண் தமிழ் பாடி நாளும் பரமர்-தம் பாதம் பணிந்து இருந்தார் #492 மற்ற திரு பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார்-தாம் புற்று இடம் கொண்டாரை வந்து இறைஞ்சி பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றி சிற்று இடை பொன் தொடி பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழ சிந்தை செய்து கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அ ஊர் குறுக வந்தார் #493 நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞானசம்பந்தர் சிந்தை அன்பு மேவுற்ற காதல் மிக பெருக விரைந்து எதிர்கொள்ள மெய் அன்பரோடும் பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் #494 அங்கணர் ஆரூர் வணங்கி போந்த அரசும் எதிர் வந்து அணைய வாச பொங்கு புனல் தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தி தங்களின் அன்பின் முறைமையாலே தாழ்ந்து வணங்கி தனித்தனியே மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது #495 மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே அப்பரை இங்கு அணைய பெறும் பேர் அருள் உடையோம் அம் தண் ஆரூர் எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறு_இல் பெரும் தவத்தோர் செப்பிய வண் தமிழ்_மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார் #496 அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார் #497 சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் பொன் புகலூர் தொழ சென்று அணைந்தார் புகலி பிரானும் புரிந்த சிந்தை விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றி பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்_மறை பாடி போந்தார் #498 துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்க புணர் இசை செந்தமிழ் கொண்டு போற்றி பொன் மதில் ஆரூர் புறத்து அணைந்தார் #499 வான் உயர் செம் கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் தான் ஒரு பொன் உலகு என்ன தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த பால் நிற நீற்றர் பருக்கையானை பதிக தமிழ் இசை பாடி ஆடி தேனொடு வண்டு முரலும் சோலை திரு பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார் #500 பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவி மேல் பொலிவது என்ன எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளி செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர்-தனை பணிவுற்றார் தமிழ் விரகர் #501 படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு அடியர் சென்று எதிர்கொள எழுந்தருளும் அஞ்ஞான்று வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் கடி கொள் பேரணி பொலிவையார் முடிவுற காண்பார் #502 நான மான்_மத நளிர் பெரும் சேற்றிடை நறும் பொன் தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி #503 ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு காடு கொண்டன கதலி தோரணம் நிரை கமுகு மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம் #504 மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் பால வாயின பவன வேதிகை மலர் பந்தர் #505 தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள் #506 விரவு பேர் அணி வேறுவேறு இன்னன விளங்கும் பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது #507 வந்து இறைஞ்சும் மெய் தொண்டர்-தம் குழாத்து எதிர்வணங்கி சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே எந்தை தான் எனை என்று கொள்ளும்-கொல் என்று இசைத்தார் #508 ஆன அ திருப்பதிகம் முன் பாடி வந்து அணையும் ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார் #509 மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் தன் உள் எவ்வகை பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார் #510 மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து தேடு மால் அயர்க்கு அரியராய் செழு மணி புற்றில் நீடுவார் முன்பு நிலமுற பல முறை பணிந்தார் #511 பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் துணிந்த மெய்ப்பொருள் ஆனவர்-தமை கண்டு துதிப்பார் தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார் #512 செம் சொல் வண் தமிழ் திருப்பதிகத்து இசை எடுத்து நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து அஞ்சு_எழுத்தின் மெய் உணர்ந்தவர் திரு மடத்து அணைந்தார் #513 அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த செம் கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்து பொங்கு பேர் ஒளி புற்று இடம் கொண்டவர் புனித பங்கய பதம் தொழுது காலம்-தொறும் பணிந்தார் #514 புற்று இடம் கொளும் புனிதரை போற்றி இசை பெருக பற்றும் அன்பொடு பணிந்து இசை பதிகங்கள் பாடி நல் தவ திருத்தொண்டர்களொடு நலம் சிறப்ப மற்ற வண் பதி-தன்னிடை வைகும் அ நாளில் #515 மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலா தொல்லை நான்_மறை முதல்வர்-தம் பதி பல தொழுதே எல்லை_இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் #516 ஊறு காதலில் ஒளி வளர் புற்று இடம் கொண்ட ஆறு உலாவிய சடை முடி ஐயரை பணிந்து நீறு வாழ்வு என நிகழ் திருத்தொண்டர்களோடும் ஈறு_இலா திருஞானசம்பந்தர் அங்கு இருந்தார் #517 அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல நங்கள்-தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து பொங்கு சீர் புகலூர் தொழ அருளினால் போவார் தங்கும் அ பதி புறம்பணை சார்ந்து அருள்செய்வார் #518 புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி பவனமாய் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே #519 காழியார் வாழ வந்து அருள்செயும் கவுணிய பிள்ளையார்-தாம் ஆழியான் அறி ஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் பாழி மால் யானையின் உரி புனைந்தார் பனையூர் பணிந்து வாழி மா மறை இசை பதிகமும் பாடி அ பதியினில் வைகி #520 அங்கு-நின்று அரிது எழுந்தருளுவார் அகில காரணமும் ஆனார் தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே எங்கும் மெய் தவர் குழாம் எதிர்கொள தொழுது எழுந்தருளி வந்தார் பொங்கு தண் பாசடை பங்கய புனல் வயல் புகலூர் சார #521 நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாம சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார் #522 தேவர்-தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்துஉற வணங்கி பா வரும் தமிழ் இசை பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே தா_இல் சீர் முருகனார் திரு மனைக்கு எய்தி அ தனி முதல் தொண்டர்-தாமே யாவையும் குறை அறுத்திட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில் #523 நீலநக்க அடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மை சீல மெய் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி காலம் உய்த்தவர்களோடு அளவளாவி கலந்து அருளினார் காழி நாடார் #524 கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய் காதல் கூர நம்பர்-தம் பதிகள் ஆயின ஏனை பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார் #525 புள்ளல் அம்பு தண் புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்று பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழ செல்வார் வள்ளலார் சிறுத்தொண்டரும் நீலநக்கரும் வளம் பதிக்கு ஏக உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார் #526 கண் அகல் புகலூரினை தொழுது போம் பொழுதினில் கடல் காழி அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே வண்ண நித்தில சிவிகையும் பின் வர வழி கொள உறும் காலை எண்_இல் சீர் திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார் #527 நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இ நலம் கிளர் ஒளி முத்தின் தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் போயது எங்கு நீர் அங்கு யான் பின் வர போவது என்று அருள்செய்தார் #528 என்று பிள்ளையார் மொழிந்து அருள்செய்திட இரும் தவத்து இறையோரும் நன்று நீர் அருள்செய்ததே செய்வன் என்று அருள்செய்து நயப்புற்ற அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அ இயல்பினில் செல்வார் சென்று முன் உற திருவம்பர் அணைந்தனர் செய் தவ குழாத்தோடும் #529 சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலை செல்வார் பண்பு மேம்படு பனி கதிர் நித்தில சிவிகையில் பணிந்து ஏறி வண் பெரும் புகலூரினை கடந்து போய் வரும் பரிசனத்தோடும் திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய் திருவம்பர் நகர் புக்கார் #530 அம்பர் மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற செம்பொன் மா மதில் கோயிலை வலம்கொண்டு திரு முன்பு பணிந்து ஏத்தி வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை உம்பர் வாழ நஞ்சு உண்டவர்-தமை பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார் #531 தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்தி சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர் #532 பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றி திருவின் ஆர்ந்த கோச்செங்கணான் அ நகர் செய்த கோயிலை சேர்ந்து மருவு வாய்மை வண் தமிழ்_மாலை அ வளவனை சிறப்பித்து பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும் #533 இன்னவாறு சொல்_மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் கன்னி மா மதில் திருக்கடவூர் தொழ காதல் செய்து அருளி போய் மன்னு கோயில்கள் பிற பதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் அ நெடும் பதி அணைவுற அயலரோடு அடியவர் எதிர்கொண்டார் #534 மற்ற வண் பதி அணைந்து வீரட்டத்து மழவிடையார் கோயில் சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய பொன் சிலம்பு அணி தாமரை வணங்கி முன் போற்றி உய்ந்து எதிர்நின்று பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி #535 பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு விரவு நண்பு உடை குங்கிலிய பெரும் கலயர்-தம் மனை மேவி கரை_இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி #536 சிறப்பு உடை திரு பதி அதனிடை சில நாள் அமர்ந்து அருளோடும் விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழ செல்வார் மறை பெரும் திரு கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் அற பெரும் பயன் அனைய அ தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர் #537 தக்க அந்தணர் மேவும் அ பதியினில் தான் தோன்றி மாடத்து செக்கர் வார் சடை அண்ணலை பணிந்து இசை செந்தமிழ்_தொடை பாடி மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார் #538 பாம்புரத்து உறை பரமரை பணிந்து நல் பதிக இன் இசை பாடி வாம் புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றி காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்குற செல்கிறார் #539 அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட மெய் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் எ பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர்கொண்டார் #540 நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப இறைவர் திரு மைந்தர்-தமை எதிர்கொள் வரவேற்றார் #541 வந்து திரு வீழிமிழலை மறை வல்ல அந்தணர்கள் போற்றி இசைப்ப தாமும் மணி முத்தின் சந்த மணி சிவிகை-நின்று இழிந்து தாழ்ந்து அருளி உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார் #542 அப்போது அரையார் விரி கோவண ஆடை ஒப்பு ஓத_அரும் பதிகத்து ஓங்கும் இசை பாடி மெய் போத போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார் #543 நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண மேவிய விண் இழிந்த கோயில் வலம்கொள்வார் பூவியலும் உந்தியான் போற்ற புவி கிழிந்த தே இயலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார் #544 வலம்கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் சலம் கொண்ட வேணி தனி முதலை தாழ்ந்து நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் #545 போற்றி சடையார் புனல் உடையான் என்று எடுத்து சாற்றி பதிக தமிழ்_மாலை சந்த இசை ஆற்ற மிக பாடி ஆனந்த வெள்ளத்தில் நீற்று அழகர் சேவடி கீழ் நின்று அலைந்து நீடினார் #546 நீடிய பேர் அன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று பாடி எதிர் ஆடி பரவி பணிந்து எழுந்தே ஆடிய சேவடிகள் ஆர்வமுற உட்கொண்டு மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார் #547 வந்து அணைந்து வாழ்ந்து மதில் புறத்து ஓர் மா மடத்து செந்தமிழ் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருள சந்த மணி கோபுரத்து சார்ந்த வட-பால் சண்பை அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் #548 அங்கண் அமர்வார் அரனார் அடி இணை கீழ் தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே பொங்கு புகழ் வாகீசரும் கூட போற்றி இசைத்தே எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார் #549 ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட பாங்கர் திலதை பதி முற்றமும் பணிந்து வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில் #550 சேண் உயர் மாட புகலி உள்ளார் திருஞானசம்பந்த பிள்ளையாரை காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப பூணும் மனத்தொடு தோணி மேவும் பொரு விடையார் மலர் பாதம் போற்றி வேணுபுரத்தை அகன்று போந்து வீழிமிழலையில் வந்து அணைந்தார் #551 ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் #552 சண்பை திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரை பணிந்து போந்து நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார் #553 என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு_இல் சிவஞான பிள்ளையாரும் நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே அன்று புகலி அரு_மறையோர்க்கு அருள்செய்து அவர்க்கு முகம் அளித்தார் #554 மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார்-தமை பரவும் சீர் பட்ட எல்லை இனிது செல்ல திரு தோணி மேவிய செல்வர்-தாமே கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் #555 தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் சேண் உயர் விண்ணின்-நின்று இழிந்த இந்த சீர் கொள் விமானத்து காட்டுகின்றோம் பேணும்படியால் அறிதி என்று பெயர்ந்து அருள்செய்ய பெரும் தவங்கள் வேணுபுரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார் #556 அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சி மேல் அங்கை கூப்பி வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார் #557 மைம் மரு பூம் குழல் என்று எடுத்து மாறு_இல் பெருந்திருத்தோணிதன் மேல் கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை-தன்னுள் செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என்-கொல் என்று மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர் #558 செம் சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக்கடைக்காப்பு சாத்தி அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்ப போந்து மஞ்சு இவர் சோலை புகலி மேவும் மா மறையோர்-தமை நோக்கி வாய்மை நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள்செய்கின்றார் #559 பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டியோடும் விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் #560 என்று கவுணிய பிள்ளையார் தாம் இயம்ப பணிந்து அருள் ஏற்று கொண்டே ஒன்றிய காதலின் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து மன்று உள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கி சென்று நின்ற புகழ் தோணி நீடுவாரை பணியும் நியதியராய் உறைந்தார் #561 சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னை திருவீழி மேவிய செல்வர் பாதம் பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் விரவி பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில் #562 மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் #563 வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் #564 உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறு பசி நோய் உமை அடையாது எனினும் உம்-பால் நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் அலகு_இல் புகழீர் தவிர்வதாகும் என்றே அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர் #565 தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்க சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி வம்பு உலா மலர் இதழி வீழிநாதர் மணி கோயில் வலம் செய்ய புகுந்த வேலி அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் #566 காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க நாதர் விரும்பு அடியார்கள் நாளும்நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று தீது_இல் பறை நிகழ்வித்து சென்ற தொண்டர் திரு அமுது கறி நெய் பால் தயிர் என்று இன்ன ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இரு திறத்து பெரும் தவரும் இருந்த நாளில் #567 நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாள் கூறு திரு அமுது செய்ய கண்டு சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி தீ_வினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் #568 திரு மறையோர் தலைவர் தாம் அருளி செய்ய திரு மடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்-பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு கருதிய எல்லாம் கொள்ள வேண்டி சென்றால் காசு-தனை வாசிபட வேண்டும் என்பார் பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார் #569 திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த ஒரு காசு வாசிபட மற்ற காசு நன்று ஆகி வாசிபடாது ஒழிவான் அந்த பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன்-தன்னை வரு நாள்கள் தரும் காசு வாசி தீர பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார் #570 மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் என பதிகம் பாடி பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல் தவத்தீர் இ காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க அற்றை நாள் தொடங்கி நாள் கூறு-தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார் #571 அரு விலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்ய தொண்டர் அளவு இறந்து பொங்கி வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கரசர் இவர் பெரும் சோற்று பிறங்கல் ஈந்தார் #572 அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பல நாள் போற்றி வைகி தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் #573 நீடு திருவாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அரு மணியை வணங்கி போற்றி பாடு ஒலி நீர் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி நாடு புகழ் தனி சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடி தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றி திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார் #574 நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கி போந்து நலம் கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்தி பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி செம்பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி திருமலிவெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார் #575 மற்று அ ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் பற்பலவும் சென்று பணிந்து ஏத்தி பாடி பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்த கற்றவர் வாழ் தண்டலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திரு களரும் கருதார் வேள்வி செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றி திருமறைக்காட்டு-அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே #576 கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் வார் முரசம் மங்கல நாதங்கள் மல்க எதிர்கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார் #577 முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை மன்னவரும் மணி முத்தின் சிவிகை-நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார் #578 சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண் மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே #579 அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் #580 அரு_மறைகள் திரு காப்பு செய்து வைத்த அ கதவம் திறந்திட அ மறைகள் ஓதும் பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்க பெருமையினால் அன்று முதலாக பின்னை ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை திரு மறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கரசருக்கு செப்புகின்றார் #581 அப்பரே வேத வனத்து ஐயர்-தம்மை அபிமுகத்து திரு வாயில் திறந்து புக்கே எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இ வாயில் திருக்காப்பு நீங்குமாறு மெய்ப்பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை இப்பரிசு நீர் அருளி செய்தீர் ஆகில் இது செய்வேன் என பதிகம் எடுத்து பாட #582 பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் சேடு உயர் பொன் கதவு திருக்காப்பு நீங்கா செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து நீடு திரு கடை காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்க திருக்காப்பு நீக்கம் காட்ட ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க #583 மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கி பொற்பு உறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி அற்புத நிலையினார்கள் அணி திருமறைக்காடு ஆளும் கொற்றவர் கோயில் வாயில் நேர் வழி குறுகி புக்கார் #584 கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும் தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார் பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் #585 அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி மின் புரை சடையார்-தம்மை பதிகங்கள் விளம்பி போந்தார் #586 புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி நிறம் கிளர் மணி கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க திறந்தவாறு அடைக்க பாடி அருளும் நீர் என்றார் தீய மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார் #587 அன்று அரசு அருளி செய்ய அரு_மறை பிள்ளையாரும் வென்றி வெள் விடையார்-தம்மை விருப்பினால் சதுரம் என்னும் இன் தமிழ் பதிக பாடல் இசைத்திட இரண்டு-பாலும் நின்ற அ கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே #588 அடைத்திட கண்டு சண்பை ஆண்தகையாரும் அம் சொல் தொடை தமிழாளி யாரும் தொழுது எழ தொண்டர் ஆர்த்தார் புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ_மழை புகலி வேந்தர் நடை தமிழ் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி #589 அ திரு வாயில்-தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே மெய் திரு மறைகள் போல மேதினி புக்கு போற்ற வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு_இலா பெருமையோரை கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் #590 அரு_மறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்து பெருமையின் முழங்க பஞ்சநாதமும் பிறங்கி ஓங்க இரு பெருந்தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சி போந்து திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள #591 வேதங்கள் எண்_இல் கோடி மிடைந்து செய் பணியை மிக்க ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார் #592 திரு மறை நம்பர் தாம் முன்பு அருள்செய்த அதனை செப்பும் ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார்-பால் ஒக்க வரும் அருள்செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் பெரு மறையுடன் மெய் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே #593 இ வகை திருமறைக்காட்டு இறையவர் அருளை உன்னி மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளி போக #594 கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் எண் திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா அண்டர் தம்பிரானார்-தம் பின் போயினார் ஆர்வத்தோடும் #595 அங்கு அவர் ஏக சண்பை ஆண்தகையாரும் அப்பர் எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் பொங்கிய காதலால் என்று உரைத்திட போன தன்மை சங்கை உற்று என்-கொல் என்று தாமும் அங்கு அணைய போந்தார் #596 அ நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட மன்னிய ஆடல் காட்ட தளிர் இள வளரும் பாடி சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு இன் இயல்புற முன் கூடி இருவரும் போற்றி செய்தார் #597 நீடு சீர் திருவாய்மூரில் நிலவிய சிவனார்-தம்மை பாடு சொல் பதிகம்-தன்னால் பரவி அ பதியில் வைகி கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் #598 சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழி தலைவரோடு மண் பயில் சீர்த்தி செல்வ மா மறை காட்டு வைகி கண் பயில் நெற்றியார்-தம் கழல் இணை பணிந்து போற்றி பண் பயில் பதிகம் பாடி பரவி அங்கு இருந்தார் அன்றே #599 இ வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்கு கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை #600 தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே அ நெறி சார்வு-தன்னை அறம் என நினைந்து நிற்ப மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் நல் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே #601 பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருவு_இல் சீர் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப #602 பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி செறியும் முக்குடையும் ஆகி திரிபவர் எங்கும் ஆகி அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும்-காலை #603 வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் திரு உயிர்த்து அருளும் செல்வ பாண்டிமாதேவியாரும் குரை கழல் அமைச்சனாராம் குலச்சிறையாரும் என்னும் இருவர்-தம் பாங்கும் அன்றி சைவம் அங்கு எய்தாது ஆக #604 ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும் பெறல் தமிழ்நாடு உற்ற தீங்கினுக்கு அளவு தேற்றா சிந்தையில் பரிவு கொண்டே ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை பூம் கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார் #605 இ நெறி ஒழுகுகின்றார் ஏழ்_உலகு உய்ய வந்த மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மை சைவ செந்நெறி விளக்குகின்றார் திருமறைக்காடு சேர்ந்த நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் #606 கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி வாள் படை அமைச்சனாரும் மங்கையர்க்கரசியாரும் சேண்படு புலத்தாரேனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார் #607 காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலே போது அவிழ் சோலை வேலி புகலி காவலனார் செய்ய பாதங்கள் பணி-மின் என்று பரிசன மாக்கள் தன்மை மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் #608 ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடை மாந்தர் அங்கண் நீங்கி வண் தமிழ்நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் #609 திருமறைக்காடு நண்ணி சிரபுர நகரில் வந்த அரு_மறை பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ பெரு மடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் வரு முறை தன்மை எல்லாம் வாயில் காவலர்க்கு சொன்னார் #610 மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ பொன் கழல் பணிய வந்தோம் என சிலர் புறத்து வந்து சொற்றனர் என்று போற்றி தொழுது விண்ணப்பம் செய்தார் #611 புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர அகம் மலர்ந்து அவர்கள்-தம்மை அழையும் என்று அருளி செய்ய நகை முக செவ்வி நோக்கி நல் தவ மாந்தர் கூவ தகவு உடை மாந்தர் புக்கு தலையினால் வணங்கி நின்றார் #612 நின்றவர்-தம்மை நோக்கி நிகர்_இல் சீர் சண்பை மன்னர் மன்றல் அம் குழலியாராம் மானியார்-தமக்கும் மான குன்று என நின்ற மெய்ம்மை குலச்சிறையார்-தமக்கும் நன்று தான் வினவ கூறி நல் பதம் போற்றுவார்கள் #613 கன்னிநாடு அமணர்-தம்-பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் கொன் நவில் அயில் வேல் வென்றி குலச்சிறையாரும் கூடி இ நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார் #614 என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்_இல் அமண் குண்டர்-தம்மை வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்நீறு வேந்தனையும் இடுவித்து அங்கு நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற #615 மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூட சென்று பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு உற்ற செயல் பாண்டிமாதேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை சொற்ற தனி மன்னவருக்கு புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்கு துணிந்த போது #616 அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்ன பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது என பகர்ந்து பரமர் செய்ய விரை செய் மலர் தாள் போற்றி புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே #617 சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்தருள அமைந்த போது புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்த புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று கர கமலம் குவித்து இறைஞ்சி தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார் #618 வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு பாதமுற பணிந்து எழுந்து பாடி போற்றி பரசி அருள் பெற்று விடைகொண்டு போந்து மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் காதலினால் அருமையுற கலந்து நீங்கி கதிர் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர் #619 திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞானசம்பந்தர் செழு நீர் முத்தின் பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து ஒரு நாமத்து அஞ்சு_எழுத்தும் ஓதி வெண்நீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் வரு நாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மா தவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே #620 பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப #621 மலர்_மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர்கொள்ள கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் #622 தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி அண்டர் பிரான் கழல் வணங்கி அரும் தமிழ் மா மறை பாடி கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுர தோன்றலார் #623 கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி எண் ஆர்ந்த திரு இடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கி பண் ஆர்ந்த தமிழ் பாடி பரவியே செல்கின்றார் #624 திரு உசாத்தானத்து தேவர் பிரான் கழல் பணிந்து மருவிய செந்தமிழ் பதிக மால் போற்றும்படி பாடி இருவினையும் பற்று அறுப்பார் எண்_இறந்த தொண்டருடன் பெருகு விருப்பினர் ஆகி பிற பதியும் பணிந்து அருள்வார் #625 கரும் கழி வேலை பாலை கழி நெய்தல் கடந்து அருளி திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் #626 சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும் கொங்கு எங்கும் நிறை கமல குளிர் வாச தடம் எங்கும் அங்கங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் எங்கும் எங்கும் மலர் படுகர் இவை கழிய எழுந்தருளி #627 தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனை வதுவை நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து #628 நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும் புதல்கள் கார் நாடு முகை முல்லை கடி நாறு நிலம் கடந்து போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கி சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் #629 மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல சென்று அணைந்து கடந்து ஏறி திரி மருப்பின் கலை புணர் மான் கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும்குன்றம் #630 கொடும்குன்றத்து இனிது அமர்ந்த கொழும் பவள செழும் குன்றை அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி தொடும் குன்ற மதில் மதுரை தொன் நகர் வந்து அணைகின்றார் #631 இ நிலை இவர் வந்து எய்த எண்_பெரும்_குன்றம் மேவும் அ நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்று பல் முறை வெரு கொண்டு உள்ளம் பதைப்ப தீ கனாக்களோடும் துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல்உற்றாம் #632 பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும் #633 பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ கால்களும் தடுமாறும் ஆடி கண்களும் இடமே ஆடி மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம் #634 கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டு சிந்தையில் செற்றம் முன்னா தீ குணம் தலை நின்றார்கள் #635 இப்படி அமணர் வைகும் எ பெயர் பதியும் எய்தும் ஒப்பு_இல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி மெய்ப்படு தீ கனாவும் வேறுவேறு ஆக கண்டு செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் #636 அ நகர்-தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகி துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார் #637 சீர் மலி அசோகு-தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே வேரொடு சாய்ந்து வீழ கண்டனம் அதன் பின் ஆக ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக ஊர் உளோர் ஓடி காண கண்டனம் என்று உரைப்பார் #638 குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட பண்டிதர் பாழி-நின்றும் கழுதை மேல் படர்வார்-தம் பின் ஒண் தொடி இயக்கியாரும் உளை இட்டு புலம்பி ஓட கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் #639 கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் கோன்-அவன்-தானும் வெய்ய கொடும் தழல் முழுக கண்டோம் ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார் #640 மழ விடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம்-தன்னை உழறிட சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி விழ ஒரு புகலும் இன்றி மேதினி-தன்னை விட்டு நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிட கண்டோம் என்பர் #641 ஆவது என் பாவிகாள் இ கனா திறம் அடிகள்மார்க்கு மேவிய தீங்கு-தன்னை விளைப்பது திடமே என்று நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள் #642 அவ்வகை அவர்கள் எல்லாம் அ நிலைமையர்கள் ஆக சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேல்மேல் #643 அளவு_இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த உள மகிழ் உணரும்-காலை உலகு எலாம் உய்ய வந்த வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் #644 அ மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார் #645 மங்கையர்க்கரசியார்-பால் வந்து அடி வணங்கி நின்ற கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார் #646 மன்றல் அம் குழலினாரை வணங்க போந்த அமைச்சனாரும் வென்றி வேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்து போகி இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும்-காலை #647 அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார்-தம்மை கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று நம்பரை வணங்கி தாமும் நல் வரவேற்று நின்றார் #648 திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண்குடை நிழற்ற பெருகு ஒளிய திருநீற்று தொண்டர் குழாம் பெருகிவர அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் #649 துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே அந்தணராம் மா தவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்க செந்தமிழ் மாருதம் எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப #650 பண்ணிய வஞ்சனை தவத்தால் பஞ்சவன் நாட்டிடை பரந்த எண்_இல் அமண் எனும் பாவ இரும் சேனை இரிந்து ஓட மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த #651 துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் அல்நெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம் கன்னிநாட்டிடை கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட #652 பானல் வயல் தமிழ்நாடு பழி நாடும்படி பரந்த மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டது ஒரு ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப #653 புரசை வய கட களிற்று பூழியர் வண் தமிழ்நாட்டு தரை செய் தவ பயன் விளங்க சைவ நெறி தழைத்து ஓங்க உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணி சின்னம் எலாம் பரசமய கோளரி வந்தான் என்று பணிமாற #654 இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் ஒப்பு_இல் நித்தில பொன் தனி பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை செப்ப_அரும் பெருமை குலச்சிறையார் தம் செவி நிறை அமுது என தேக்க அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு_அரும் களிப்பினர் ஆனார் #655 அஞ்சலி குவித்த கரங்களும் தலை மேல் அணைந்திட கடிது சென்று அணைவார் நஞ்சு அணி கண்டர்-தம் திருமகனார் உடன் வரும் நல் தவ கடலை நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்ல கண்டு நீள் நிலத்திடை தாழ்ந்து பஞ்சவர் பெருமான் மந்திரி தலைவர் பாங்குற அணைந்து முன் பணிந்தார் #656 நில மிசை பணிந்த குலச்சிறையாரை நீடிய பெரும் தவ தொண்டர் பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்-தாம் படியின்-நின்று எழா வகை கண்டு மலர் மிசை புத்தேள் வழிபடும் புகலி வைதிக சேகரர் பாதம் குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற #657 சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து விரவு ஒளி முத்தின் சிவிகை-நின்று இழிந்து விரைந்து சென்றவர்-தமை அணைந்து கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் #658 செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம் பெருமான்-தன் திருவருள் பெருகும் நன்மை-தான் வாலிதே என்ன வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண் மிசை தாழ்ந்து அடி வணங்கி தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்கு தன்மை ஆம் நிலை உரைக்கின்றார் #659 சென்ற காலத்தின் பழுது_இலா திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருள பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையோம் நன்றி_இல் நெறியில் அழுந்திய நாடும் நல் தமிழ் வேந்தனும் உய்ந்து வென்றி கொள் திருநீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார் #660 இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி மங்கையர்க்கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே அங்கு நீர் சென்று அடி பணிவீர் என்று அருள்செய்தார் என தொழுது ஆர்வம் பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் #661 ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு_இலா அருள்புரி கருணை தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ #662 அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திரு ஆலவாய் இது என்றார் #663 தொண்டர்-தாம் போற்றி காட்டிட கண்டு துணை மலர் கரம் குவித்து அருளி மண்டு பேர் அன்பால் மண் மிசை பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்-தம் பணியும் கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற #664 பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் தேடும் மால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த திரு ஆலவாய் மருங்கு அணைந்து நீடு உயர் செல்வ கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் #665 ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த கான கண்டரை கண்களின் பயன் பெற கண்டு நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் #666 அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு_இன்றி வணங்கி பொங்கு காதலின் மெய் மயிர் புளகமும் பொழியும் செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர் #667 நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து சீல மா தவ திருத்தொண்டர்-தம்மொடும் திளைத்தார் சாலும் மேன்மையில் தலைச்சங்க புலவனார்-தம் முன் #668 சேர்த்தும் இன் இசை பதிகமும் திருக்கடைக்காப்பு சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை பேர்த்தும் இன்புற பாடி வெண் பிறை அணி சென்னி மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய #669 பிள்ளையார் எழுந்தருளி முன் புகுதும் அப்பொழுது வெள்ள நீர் பொதி வேணியார்-தம்மை தொழும் விருப்பால் உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த #670 மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கி கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார் #671 தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய பொன் அடி கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் #672 ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து மானியார் மன கருத்து முற்றியது என மதித்தே பானல் அம் கண்கள் நீர் மல்க பவள வாய் குழறி யானும் என் பதியும் செய்த தவம் என்-கொல் என்றார் #673 யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்க காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு வாழும் நீர்மையீர் உமை காண வந்தனம் என்றார் #674 இன்னவாறு அருள்செய்திட தொழுது அடி வீழ்ந்தார் மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய அன்ன மென் நடையார்-தமக்கு அருள்செய்து போக்கி துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது #675 செல்வம் மல்கிய திரு ஆலவாயினில் பணி செய்து அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி மல்கு கார் அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள எல்லை_இல் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார் #676 அ திருத்தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவி சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்ட பத்தர் போற்றிட பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் #677 பரவு காதலில் பாண்டிமாதேவியார் அருளால் விரவு நண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்ப சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய #678 வழுதி மா நகர் அதனிடை மா மறை தலைவர் பழுது_இல் சீர் அடியாருடன் பகல் வர கண்ட கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு-பால் #679 அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த துங்க மா மடம்-தன்னிடை தொண்டர்-தம் குழாங்கள் எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த பொங்கு பேர் ஒலி செவி புலம் புக்கிட பொறாராய் #680 மற்று இ வான் பழி மன்னவன் மாறனை எய்தி சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் கொற்றவன் கடை காவலர் முன் சென்று குறுகி வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் #681 வாயில் காவலர் மன்னவன்-தனை எதிர்வணங்கி ஆயம் ஆகி வந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன ஏயினான் அணைவார் என அவரும் சென்று இசைத்தார் பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் #682 புக்க போது அவர் அழிவுறு மனத்திடை புலர்ச்சி மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்ன தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார் #683 ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் மேவலால் இன்று கண்டு முட்டு யாம் என்று விளம்ப #684 என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி நன்று நல் அறம் புரிந்த வா நான் என்று நகுவான் கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் இன்று இ மா நகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான் #685 மாலை வெண்குடை வளவர் சோணாட்டு வண் புகலி சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல #686 என்று கூறுவார் இ திறம் முன்பு தாம் அறிந்தது ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான் #687 மற்ற மா மறை மைந்தன் இ மருங்கு அணைந்தானேல் உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார் #688 வந்த அந்தணன்-தன்னை நாம் வலிது செய்து போக்கும் சிந்தை அன்றி அ சிறு மறையோன் உறை மடத்தில் வெம் தழல் பட விஞ்சை மந்திர தொழில் விளைத்தால் இந்த நல் நகர் இடத்து இரான் ஏகும் என்று இசைத்தார் #689 ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்ய போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான் யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் பூ அணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள் #690 மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்-தாம் என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார் #691 தேவியார்-தம்மை நோக்கி தென்னவன் கூறுகின்றான் காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் தா_இல் சீர் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு மேவினான் அடிகள்மாரை வாதினில் வெல்ல என்றான் #692 வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் வண்டு உண துதைந்த கோதை மானியே இங்கு வந்த பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை என்றான் #693 மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம் நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் #694 சிந்தையில் களிப்பு மிக்கு திரு கழுமலத்தார் வேந்தன் வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சியோடும் கொந்து அலர் குழலார் போத குலச்சிறையார் அங்கு எய்த இந்த நல் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர் #695 கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திட பெறும் பேறு என்பார் இற்றை நாள் ஈசன் அன்பர்-தம்மை நாம் இறைஞ்ச பெற்றோம் மற்று இனி சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார் #696 மானியார் தாமும் அஞ்சி வஞ்சக புலையர் தாங்கள் ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார் #697 இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன அவன் நிலை அதுவாம் அ நாள் அருகர்-தம் நிலை யாது என்னில் தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செம் தீ சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேர செய்தார் #698 ஆதி மந்திரம் அஞ்சு_எழுத்து ஓதுவார் நோக்கும் மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார் #699 தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீ தொழில் சரிய கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார் #700 மந்திர செயல் வாய்த்து இல மற்று இனி செய்யும் புந்தியாவது இங்கு இது என பொதி தழல் கொடு புக்கு அம் தண் மா தவர் திரு மடப்புறத்து அயல் இருள் போல் வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் #701 திரு மடப்புற சுற்றினில் தீய பாதகத்தோர் மருவுவித்த அ தொழில் வெளிப்படுதலும் மறுகி பரிசனத்தவர் பதை பொரும் சிதைத்து நீக்கி அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் #702 கழுமல பதி கவுணியர் கற்பக கன்றை தொழுது நின்ற அமண் குண்டர் செய் தீங்கினை சொன்ன பொழுது மா தவர் துயிலும் இ திரு மட புறம்பு பழுது செய்வதோ பாவிகாள் என பரிந்து அருளி #703 என் பொருட்டு அவர் செய்த தீங்காயினும் இறையோன் அன்பருக்கு எய்துமோ என்று பின்னையும் அச்சம் முன்புற பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் மன் புரக்கும் மெய் முறை வழு என மனம் கொண்டார் #704 வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் செய்யனே திரு ஆலவாய் எனும் திருப்பதிகம் சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீ தழல் போய் பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார் #705 பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் ஆண்தகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்-பால் அபராதம் உறுதலாலும் மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் #706 திருந்து இசை பதிகம் தொடை திரு ஆலவாயின் மருந்தினை சண்பை மன்னவர் புனைந்திட அருளால் விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி பெரும் தழல் பொதி வெதுப்பு என பெயர் பெற்றதன்றே #707 செய்ய மேனியர் திரு மகனார் உறை மடத்தில் நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது #708 இரவு பாதகர் செய்த தீங்கு இரவி தன் மரபில் குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு வரவழைத்த நாம் மாய்வதே என மனம் மயங்கி #709 பெருகும் அச்சமோடும் ஆருயிர் பதைப்பவர் பின்பு திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் வருவது எப்படியாம் என மனம் கொளும் பொழுது #710 அரசனுக்கு வெப்பு அடுத்தது என்று அருகு கஞ்சுகிகள் உரை செய பதைத்து ஒரு தனி தேவியார் புகுத விரைவும் அச்சமும் மேல் கொள குலச்சிறையாரும் வரை செய் பொன் புய மன்னவன் மருங்கு வந்து அணைந்தார் #711 வேந்தனுக்கு மெய் விதிர்ப்புற வெதுப்புறும் வெம்மை காந்து வெம் தழல் கதும்என மெய் எலாம் கவர்ந்து போந்து மாளிகை புறத்து நின்றார்களும் புலர்ந்து தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க #712 உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒரு புடை ஒதுங்க அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல புணர் இளம் கதலி குருத்தொடு தளிர் புடையே கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக #713 மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆக கருத்து ஒழிந்து உரை மறந்தனன் கௌரியர் தலைவன் #714 ஆனவன் பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து போன கங்குலில் புகுந்தது இன் விளைவு-கொல் என்பார் மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் #715 மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து மேல் எரியும் பொறி சிதறி வீழ கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார் #716 கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தால் போல ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரை பார்த்து உரைத்த அரசன் உணர்வு சோர்ந்தான் #717 பாண்டிமாதேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் பூண்டவர்-தம்மை நோக்கி புகலியில் வந்து நம்மை ஆண்டு கொண்டவர்-பால் கங்குல் அமணர்-தாம் செய்த தீங்கு மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற #718 கொற்றவன் அமைச்சராம் குலச்சிறையாரும் தாழ்ந்து மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் செற்றவர் அன்பர்-தம்-பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார் #719 இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து இந்த வெப்பு வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து பெருகியது இதற்கு தீர்வு பிள்ளையார் அருளே என்று #720 காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர் வெண் திங்கள் மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் தீய இ பிணியே அன்றி இ பிறவியும் தீரும் என்றார் #721 மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல ஆன போது அயர்வு-தன்னை அகன்றிட அமணர் ஆகும் மானம் இல்லவரை பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கல்உற்றான் #722 மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் இன்னவாறு எய்து நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி மன்னிய சைவ நீதி மா மறை சிறுவர் வந்தால் அன்னவர் அருளால் இ நோய் அகலுமேல் அறிவேன் என்றான் #723 என்று முன் கூறி பின்னும் யான் உற்ற பிணியை தீர்த்து வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் #724 பாய் உடை பாதகத்தோர் திரு மட பாங்கு செய்த தீ_வினை தொழிலை நோக்கி உள் அழி திரு உள்ளத்தான் மேய அ துயரம் நீங்க விருப்புறு விரைவினோடு நாயக பிள்ளையார் தம் நல் பதம் பணிவார் ஆகி #725 மன்னவன் இடும்பை தீர மற்று அவன் பணி மேல்கொண்டே அன்ன மெல் நடையினாரும் அணி மணி சிவிகை ஏறி மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் முன் அணைந்து ஏக சைவ முதல்வனார் மடத்தை சார்ந்தார் #726 திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் வரு பரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை சிரபுர பிள்ளையார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்ன பரிசனத்தவரும் புக்கு பதம் அறிந்து உணர்த்துகின்றார் #727 பாண்டிமாதேவியாரும் பரிவு உடை அமைச்சனாரும் ஈண்டும் வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்ய சண்பை ஆண்தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளி செய்ய மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் #728 ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதி கொழுந்தை தேன் நக்க மலர் கொன்றை செம் சடையார் சீர் தொடுக்கும் கானத்தின் எழு பிறப்பை கண் களிப்ப கண்டார்கள் #729 கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடும் தொழில் நினைந்தே மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலமுற விழுந்தார் கொண்ட குறிப்போடும் நெடிது உயிர்த்த கொள்கையராய் #730 உரை குழறி மெய் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகி தரையின் மிசை புரண்டு அயர்ந்து சரண கமலம் பற்றி கரை_இல் கவலை கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்று விரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார்-தமை கண்டு #731 அரு_மறை வாழ் பூம்புகலி அண்ணலார் அடி பூண்ட இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி திருவுடையீர் உங்கள்-பால் தீங்கு உளதோ என வினவ #732 வெம் சமணர் முன் செய்த வஞ்சனைக்கு மிக அழிந்தே அஞ்சினோம் திரு மேனிக்கு அடாது என்றே அது தீந்தோம் வஞ்சகர் மற்று அவர் செய்த தீ தொழில் போய் மன்னவன்-பால் எஞ்சல் இலா கொடு வெதுப்பாய் எழா நின்றது என தொழுது #733 வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பவர் தாம் செய்யும் மதி மாயைகளால் தீராமை தீ பிணியால் மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் உய்யும் எமது உயிரும் அவன் உயிரும் என உரைத்தார்கள் #734 என்று அவர் உரைத்த போதில் எழில் கொள் பூம் புகலி வேந்தர் ஒன்றும் நீர் அஞ்ச வேண்டா உணர்வு இலா அமணர்-தம்மை இன்று நீர் உவகை எய்த யாவரும் காண வாதில் வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் #735 மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் அழுந்தும் இடர் கடலிடை நின்று அடியோமை எடுத்து அருள செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் எழுந்தருள பேறு உடையேம் என் பெறோம் என தொழலும் #736 ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் பாவகாரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்ல சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார் #737 வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின்-நின்று மெய் அணி நீற்று தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட செய்யவார் சடையார் மன்னும் திரு ஆலவாயுள் புக்கார் #738 நோக்கிட விதி இலாரை நோக்கி யான் வாது செய்ய தீ கனல் மேனியானே திருவுளமே என்று எண்_இல் பாக்கிய பயனாய் உள்ள பால் அறா வாயர் மெய்மை நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் #739 கானிடை ஆடுவாரை காட்டு மா உரி முன் பாடி தேன் அலர் கொன்றையார்-தம் திருவுளம் நோக்கி பின்னும் ஊனம்_இல் வேத வேள்வி என்று எடுத்து துரையின் மாலை மானம் இல் அமணர்-தம்மை வாதில் வென்று அழிக்க பாடி #740 ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்து காலனை மார்க்கண்டர்க்கா காய்ந்தனை அடியேற்கு இன்று ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் சீலமே ஆலவாயில் சிவபெருமானே என்றார் #741 நாதர் தம் அருள் முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்க போதுவார் பணிந்து போற்றி விடைகொண்டு புனித நீற்று மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் #742 அ மலர் குழலினார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டி செம் மணி பலகை முத்தின் சிவிகை மேல் கொண்ட போதில் எம்மருங்கிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை_இன்றி மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே #743 பல்லிய நாதம் பொங்க படர் திருநீற்றின் சோதி நல் ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன வில் வளர் தரள கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு எல்லை_இல் முத்தின் தாளம் தாரை சங்கு எங்கும் ஓத #744 கண்ணினுக்கு அணியாய் உள்ளர் எழுச்சியில் காட்சி பெற்றார் நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு பண்ணிய தவங்கள் என்-கொல் பஞ்சவன் தஞ்சம் மேவி புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் #745 தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல பொன் அணி மாட வீதி ஊடு எழுந்தருளி புக்கார் கன்னிநாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை #746 கொற்றவன்-தன்-பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்தி பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம் மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் #747 மந்திரியாரை பின்னும் எதிர்செல மன்னன் ஏவ சிந்தை உள் மகிழ்ந்து போந்தார் செயலை யான் சமயத்து உள்ளோர் பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் நம் தனி சமயம்-தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும் #748 நின் அற_நெறியை நீயே காத்து அருள்செய்தி ஆகில் அன்னவர்-தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் முன் உற ஒக்க தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார் #749 பொய் தவம் ஆக கொண்ட புன் தலை சமணர் கூற செய் தவ பயன் வந்து எய்தும் செவ்வி முன்னுறுதலாலே எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் #750 என்று அவன் உரைப்ப குண்டர் எண்ணம் கெட்டு இருந்த எல்லை தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் வன் தனி பவன முன்னர் வாயிலுள் அணைந்து மாடு பொன் திகழ் தரள பத்தி சிவிகை-நின்று இழிந்து புக்கார் #751 குலச்சிறையார் முன்பு எய்த கொற்றவன் தேவியாரும் தலத்திடை இழிந்து சென்றார் தண் தமிழ்நாட்டு மன்னன் நிலத்திடை வானின்-நின்று நீள் இருள் நீங்க வந்த கலை செழும் திங்கள் போலும் கவுணியர்-தம்மை கண்டார் #752 கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட வண் தமிழ் விரகர் மேவி அதன் மிசை இருந்தார் மாயை கொண்ட வல் அமணர் எல்லாம் குறிப்பினுள் அச்சம் கொண்டார் #753 செழியனும் பிள்ளையார்-தம் திருமேனி காணப்பெற்று விழி உற நோக்கலாலே வெம்மை நோய் சிறிது நீங்கி அழிவுறு மன நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது #754 பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ் கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த பன்னிரண்டு பெயர் பற்றும் பரவிய சொல் திருப்பதிகம் தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் #755 பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது உள்ள நிறை பொறாமையினால் உழை இருந்த கார் அமணர் கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்து முகம் கோப தீ துள்ளி எழும் என கண்கள் சிவந்து பல சொல்லுவார் #756 காலை எழும் கதிரவனை புடைசூழும் கரு முகில் போல் பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார் ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம் கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் #757 பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை உள்ளவாறு என்று அருள ஊத்தை வாய் பறி தலையார் துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற ஒள்_இழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி #758 தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் இன் அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்_இலார்கள் மன்ன நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் #759 மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று வேறு ஆவது என்-கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் ஆறு அணி சடையினார்க்கு அன்பராம் இருவரும் நீங்கள் தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் #760 ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று நீ நனி அஞ்ச வேண்டாம் நிலை அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி #761 பெற்றியால் அருளி செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் இற்றை நாள் என்னை உற்ற பிணியை நீர் இகலி தீரும் தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப #762 மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் உன் உடம்பு அதனில் வெப்பை ஒரு-புடை வாம பாகம் முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் #763 யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணைய சென்று வாதினில் மன்னவன்-தன் வாம பாகத்தை தீர்ப்பார் மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு தீதுற பொறாது தென்னவன் சிரபுரத்தவரை பார்த்தான் #764 தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர் அன்னவன் வல-பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய் தீர்ப்பது என்று பன்னிய மறைகள் ஏத்தி பகர் திருப்பதிகம் பாடி #765 திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால் மருவிய இட-பால் மிக்க அழல் என மண்டு தீ போல் இரு-புடை வெப்பும் கூடி இடம் கொளாது என்ன பொங்க #766 உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை எறிய மாசு உடலும் கன்றி அருகு விட்டு ஏற நிற்பார் அறிவுடையாரை ஒத்தார் அறிவு இலா நெறியில் நின்றார் #767 பலர் தொழும் புகலி மன்னர் ஒரு-புடை வெப்பை பாற்ற மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே #768 மன்னவன் மொழிவான் என்னே மதித்த இ காலம் ஒன்றில் வெம் நரகு ஒரு-பால் ஆகும் வீட்டு இன்பம் ஒரு-பால் ஆகும் துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான் #769 வெம் தொழில் அருகர் தோற்றீர் என்னை விட்டு அகல நீங்கும் வந்து எனை உய்ய கொண்ட மறை குல வள்ளலாரே இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள்புரிவீர் என்று சிந்தையால் தொழுது சொன்னான் செல் கதிக்கு அணியன் ஆனான் #770 திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி பெரு மறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றி பின்னும் ஒரு முறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பு அகன்று பாகம் மருவு தீ பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான் #771 கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்து பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை உற்றனன் மன்னன் என்றே உளம் களித்து உவகை மிக்கார் #772 மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற ஆன பேர் இன்பம் எய்தி உச்சி மேல் அங்கை கூப்பி மானம் ஒன்று இல்லார் முன்பு வன் பிணி நீக்க வந்த ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் #773 கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் வந்து வாய்மை கூற மற்று மாசு மேனி நீசர் தாம் முந்த மந்திரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் #774 சைவ மைந்தர் சொல்லின் வென்றி சந்த இன் சொல்_மாலையால் கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு எய்து தீயின் நீரில் வெல்வது என்று தம்மில் எண்ணினார் #775 பிள்ளையாரும் உங்கள் வாய்மை பேசும்-மின்கள் என்றலும் தள்ளு நீர்மையார்கள் வேறு தர்க்கவாதின் உத்தரம் கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மை-தான் உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார் #776 என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் கன்றி என் உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது என்றும் அங்கு ஒழித்திலீர்கள் என்ன வாது உமக்கு என சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி_வாயர் சொல்லுவார் #777 என்ன வாது செய்வது என்று உரைத்தே வினா என சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் வெம் நெருப்பின் வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர் #778 என்ற போது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் நன்று நீர் உரைத்தவாறு நாடு தீயில் ஏடு-தான் வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் #779 அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்துறும் அளவில் ஒப்பு_இல் வண் புகழ் சண்பையர் காவலர் உரையால் செப்ப_அரும் திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் வெப்புறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான் #780 ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கி தீ அமைத்தலும் சிகை விடும் புகை ஒழிந்து எழுந்து காயும் வெவ் அழல் கடவுளும் படர் ஒளி காட்ட ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்து அருளி #781 செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி எங்கள் நாதனே பரம்பொருள் என தொழுது எடுத்தே அங்கையால் முடி மிசை கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார் #782 சாற்றும் மெய்ப்பொருள் தரும் திருமுறையினை தாமே நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் நால் தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும் அ பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் #783 அ திருப்பதிகத்தினை அமர்ந்து கொண்டு அருளி மைத்த வெம் கடு மிடற்று நள்ளாறரை வணங்கி மெய்த்த நல் திரு ஏட்டினை கழற்றி மெய்மகிழ்ந்து கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர் #784 நன்மை உய்க்கும் மெய் பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் என்னை ஆள் உடை ஈசன்-தன் நாமமே என்றும் மன்னும் மெய்ப்பொருளாம் என காட்டிட வன்னி தன்னில் ஆக என தளிர் இள வளர் ஒளி பாடி #785 செய்ய தாமரை அக இதழினும் மிக சிவந்த கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார் #786 இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ் பதிகம் மட்டு உலாம் குழல் வன முலை மலை_மகள் பாகத்து அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து பட்ட தீயிடை பச்சையாய் விளங்கியது அன்றே #787 மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார் #788 அஞ்சும் உள்ளத்தர் ஆகியும் அறிவு இலா அமணர் வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு பஞ்சு தீயிடை பட்டது பட கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் #789 மான மன்னவன் அவையின் முன் வளர்த்த செம் தீயின் ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் ஈனம் இன்மை கண்டு யாவரும் வியப்புற எடுத்தார் பான்மை முன்னையில் பசுமையும் புதுமையும் பயப்ப #790 எடுத்த ஏட்டினை அவையின் முன் காட்டி அம் முறையில் அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி அடுத்த நீர் இட்ட ஏட்டினை காட்டும்-மின் என்றான் #791 அருகர் தாம் இட்ட ஏடு வாங்க சென்று அணையும் போதில் பெருகு தீ கதுவ வெந்து போந்தமை கண்ட மன்னன் தரு புனல் கொண்டு செம் தீ தணிப்பித்தான் சமணர் அங்கு கருகிய சாம்பரோடும் கரி அலால் மற்று என் காண்பர் #792 செய்வது ஒன்று அறிகிலாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன் எய்திய நகையினோடும் ஏடு இன்னம் அரித்து காணும் பொய்யினால் மெய்யை ஆக்க புகுந்த நீர் போம்-மின் என்றான் #793 வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அதுவாறு ஆக இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் துப்புரவு உடையீர் நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான் #794 தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் சொன்னது பயனாக கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது முன்னுற இரு-கால் செய்தோம் மு-காலில் ஒரு-கால் வெற்றி என்னினும் உடையோம் மெய்ம்மை இனி ஒன்று காண்பது என்றார் #795 தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ மாற்றம் என் ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ் சண்பை மன்னர் வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார் #796 நீடு மெய்ப்பொருளின் உண்மை நிலை பெறும் தன்மை எல்லாம் ஏடுற எழுதி மற்று அ ஏட்டினை யாமும் நீரும் ஓடு நீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு நாடி முன் தங்கும் ஏடு நற்பொருள் பரிப்பது என்றார் #797 என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் நன்று அது செய்வோம் என்று அங்கு அருள்செய நணுக வந்து வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனி செய்யும் இ வாது ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார் #798 அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று பொங்கிய வெகுளி கூர பொறாமை காரணமே ஆக தங்கள் வாய் சோர்ந்து தாமே தனி வாதில் அழிந்தோம் ஆகில் வெம் கழு ஏற்றுவான் இ வேந்தனே என்று சொன்னார் #799 மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் பொற்புற விடுவதற்கு போதுவது என்று கூற #800 பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் வள்ளலார் அவர்-தம் பின்பு மன்னன் மா ஏறி சென்றான் உள்ளவாறு அறிகிலாதார் உணர்வு மால் ஏறி சென்றார் #801 தென்னவன் வெப்பு தீர்ந்து செழு மணி கோயில் நீங்கி பின்னுற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு துன்னிய மாதர் மைந்தர் தொழுது வேறு இனைய சொன்னார் #802 மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த ஞானசம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் பால் நறும் குதலை செய்ய பவள வாய் பிள்ளையார் தாம் மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் #803 எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார் புரி சடை அண்ணல் நீறே பொருள் என கண்டோம் என்பார் பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் வரும் அழகு என்னே என்பார் வாழ்ந்தன கண்கள் என்பார் #804 ஏதமே விளைந்த இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் நாதனும் ஆலவாயில் நம்பனே காணும் என்பார் போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார் வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார் #805 அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார் கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார் வடி கொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார் விடிவதாய் முடிந்தது இந்த வெம் சமணர் இருளும் என்பார் #806 நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார்களோ என்பார் இருப்பு நெஞ்சு உடையரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர் என்பார் மருப்பு உடை கழுக்கோல் செய்தார் மந்திரியார்-தாம் என்பார் #807 ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் ஓடும் நீருடன் செலாது நிற்குமோ ஓலை என்பார் நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் நாடு எலாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார் #808 தோற்றவர் கழுவில் ஏற துணிவதே அருகர் என்பார் ஆற்றிய அருளின் மேன்மை பிள்ளையார்க்கு அழகு இது என்பார் நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் போற்றுவார் எல்லாம் சைவ நெறியினை போற்றும் என்பார் #809 இன்னன இரண்டு-பாலும் ஈண்டினர் எடுத்து சொல்ல மின் ஒளி மணி பொன் வெண்குடை மீது போத பல் மணி சிவிகை-தன் மேல் பஞ்சவன் நாட்டு உளோர்க்கு நல் நெறி காட்ட வந்தார் நான்_மறை வாழ வந்தார் #810 தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் என்று பல் மணி சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க #811 பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும் புன் நெறி அமணர் வேறு ஓர் புடை வர புகலி வேந்தர் மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் #812 கார் கெழு பருவம் வாய்ப்ப காமுறும் மகளிர் உள்ளம் சீர் கெழு கணவன்-தன்-பால் விரைவுற செல்லுமா போல் நீர் கெழு பௌவம் நோக்கி நிரை திரை இரைத்து செல்லும் பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு #813 ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதி பிள்ளையாரும் வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக என்றான் தோற்றவர் தோலார் என்று முன்னுற துணிந்து இட்டார்கள் #814 படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே #815 ஆறு கொண்டு ஓடும் ஏட்டை தொடர்ந்து எதிர் அணைப்பார் போல தேறு மெய் உணர்வு இலாதார் கரை மிசை ஓடி சென்றார் பாறும் அ பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் #816 காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு நாண் இலா அமணர்-தம்மை நட்டாற்றில் விட்டு போக சேணிடை சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் #817 வேறு ஒரு செயல் இலாதார் வெருவுற்று நடுங்கி தம்-பால் ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும் என்றார் #818 மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கி கூற ஆசு_இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு தேசு உடை பிள்ளையார்-தம் திருக்குறிப்பு அதனை நோக்க பாசுரம் பாடல் உற்றார் பரசமயங்கள் பாற #819 தென்னவன் மாறன்-தானும் சிரபுரத்து தலைவர் தீண்டி பொன் நவில் கொன்றையார்-தம் திருநீறு பூசப்பெற்று முன்னை வல் வினையும் நீங்க முதல்வனை அறியும் தன்மை உன்னினான் வினைகள் ஒத்து துலை என நிற்றலாலே #820 உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் நிலவு மெய் நெறி சிவ நெறியது என்பதும் கலதி வாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல் #821 அந்தணர் தேவர் ஆன் இனங்கள் வாழ்க என்று இந்த மெய் மொழி பயன் உலகம் இன்புற சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் வந்த அர்ச்சனை வழிபாடும் அன்ன ஆம் #822 வேள்வி நல் பயன் வீழ் புனல் ஆவது நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால் ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் #823 ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல் நெறி வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் வாழி அஞ்சு_எழுத்து ஓதி வளர்கவே #824 சொன்ன வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை இக பரத்தில் உயர் மன்னி வாழும் உலகத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர் #825 அரிய காட்சியர் என்பது அ வாதியை தெரியலாம் நிலையால் தெரியார் என உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல் அடையாளங்கள் பேசினார் #826 ஆயினும் பெரியார் அவர் என்பது மேய இ இயல்பே அன்றி விண் முதல் பாய பூதங்கள் பல் உயிர் அண்டங்கள் ஏயும் யாவும் இவர் வடிவு என்பது ஆம் #827 பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே என்பது யார் உணர்வான் எனும் சென்று எட்ட ஒணா மன் பெருந்தன்மையார் என வாழ்த்தினார் அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர் #828 வெந்த சாம்பல் விரை என்பது தமது அந்தம்_இல் ஒளி அல்லா ஒளி எலாம் வந்து வெந்து அற மற்று அ பொடி அணி சந்த மா கொண்ட வண்ணமும் சாற்றினார் #829 தமக்கு தந்தையர் தாய் இலர் என்பதும் அமைத்து இங்கு யாவையும் ஆங்கு அவை வீந்த போது இமைத்த சோதி அடங்கி பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பு இலர் என்றது ஆம் #830 தம்மையே சிந்தியார் எனும் தம்மை-தான் மெய்ம்மை ஆகி விளங்கு ஒளி தாம் என இம்மையே நினைவார் தம் இருவினை பொய்ம்மை வல் இருள் போக்குவர் என்றது ஆம் #831 எந்தையார் அவர் எவ்வகையார்-கொல் என்று இந்த வாய்மை மற்ற எப்பொருள் கூற்றினும் முந்தையோரை எ கூற்றின் மொழிவது என்று அம் தண் பூந்தராய் வேந்தர் அருளினார் #832 ஆதி ஆள்-பால் அவர்க்கு அருளும் திறம் நாதன் மாட்சிமை கேட்க நவிலும்-கால் ஓதும் எல்லை உலப்பு_இல ஆதலின் யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றது ஆம் #833 அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் முன்னை வல் வினையும் முடிவு எய்தும் அ தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர் #834 மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மை-தான் அன்னது ஒப்பு வேறு இன்மையில் சங்கரன் இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு அன்னவற்றால் அளப்பு_இலன் என்றதாம் #835 தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது ஆன்ற அங்கி புறத்து ஒளியாய் அன்பில் ஊன்ற உள் எழும் சோதியாய் நின்றனன் ஏன்று காண்பார்க்கு இது பொருள் என்றது ஆம் #836 மாதுக்கம் நீக்கல் உறுவீர் மனம் பற்றும் என்பது ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி போதித்த நோக்குற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து போதித்த பந்த பிறப்பின் நெறி பேர்-மின் என்று ஆம் #837 ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர் தாள் பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்-மின் என்று ஆண்ட சண்பை அரசர் அருளினார் #838 ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்த ஈசர் கூடும் கருணை திறம் என்றனர் கொள்கை மேலோர் #839 கருதும் கடிசேர்ந்த என்னும் திரு பாட்டில் ஈசர் மருவும் பெரும் பூசை மறுத்தவர் கோறல் முத்தி தரு தன்மையது ஆதல் சண்டீசர்-தம் செய்கை தக்கோர் பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் #840 வேத முதல்வன் எனும் மெய் திருப்பாட்டினில் நேர் ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் பாதம் முதலாம் பதினெண் புராணங்கள் என்றே ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தோர் #841 பாவுற்ற பார் ஆழி வட்ட திருப்பாட்டின் உண்மை காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது யாவர்க்கும் மேல் ஆய ஈசன் அருள் ஆழி பெற்று மேவுற்ற சீர் உற்றது என்றனர் வேத வாயர் #842 மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் தோலா மறை நான்_முகனும் தொடர்வாம் அமரர் ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த மேலாம் கருணை திறம் வெம் குருவேந்தர் வைத்தார் #843 ஆன அற்று அன்றி என்ற அ திருப்பாட்டில் கூடல் மா நகரத்து சங்கம் வைத்தவன் தேற்ற தேறா ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடு நீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் #844 வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய் பாசுரத்தை குறி ஏறிய எல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் சிறியேன் அறிவுக்கு அவர் தந்து திரு பாதம் தந்த நெறியே சிறிது யான் அறி நீர்மை கும்பிட்டேன் அன்பால் #845 அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் பலரும் உணர்ந்து உய்ய பகர்ந்து வரைந்து ஆற்றில் நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் #846 திரு உடை பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு மரு உறும் பிறவி ஆற்றில் மா தவர் மனம் சென்றால் போல் பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் இரு நிலத்தோர்கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி #847 எம்பிரான் சிவனே எல்லா பொருளும் என்று எழுதும் ஏட்டில் தம்பிரான் அருளால் வேந்தன்-தன்னை முன் ஓங்க பாட அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்தி செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே #848 ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார் ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் பாடு சேர் அமணர் அஞ்சி பதைப்புடன் பணிந்து நின்றார் #849 ஆற்றின் மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டி காற்று என விசையில் செல்லும் கடும் பரி ஏறிக்கொண்டு கோல் தொழில் திருத்த வல்ல குலச்சிறையார் பின் சென்றார் ஏற்று உயர் கொடியினாரை பாடினார் ஏடு தங்க #850 ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்து பாட கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடி காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு நீடு நீர் நடுவுள் புக்கு நின்ற ஏடு எடுத்து கொண்டார் #851 தலை மிசை வைத்துக்கொண்டு தாங்க அரும் மகிழ்ச்சி பொங்க அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் #852 மற்று அவர் பிள்ளையார்-தம் மலர் அடி வணங்கி போற்றி கொற்றவன் முதலாய் உள்ளோர் காண முன் கொணர்ந்த ஏடு பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட அற்று அருள் பெற்ற தொண்டர் அர ஒலி எழுந்தது அன்றே #853 மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இ சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார்-பால் அனுசிதம் முற்ற செய்தார் கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற #854 புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு தகவு இலா சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகை இலா வேந்தன் செய்கை விலக்கி இடாது இருந்த வேலை #855 பண்பு உடை அமைச்சனாரும் பார் உளோர் அறியும் ஆற்றால் கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட எண்_பெரும்_குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் #856 தோற்றவர் கழுவில் ஏறி தோற்றிட தோற்றும் தம்பம் ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்த்த தம்பம் வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் போற்று சீர் பிள்ளையார் தம் புகழ் சய தம்பம் ஆகும் #857 தென்னவன்-தனக்கு நீறு சிரபுர செல்வர் ஈந்தார் முன்னவன் பணிந்துகொண்டு முழுவதும் அணிந்து நின்றான் மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் #858 பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும் மேதினி புனிதம் ஆக வெண் நீற்றின் விரிந்த சோதி மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே #859 மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க ஊனமாம் சமணை நீக்கி உலகு எலாம் உய்ய கொண்ட ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க தேன் அலர் கொன்றையார்-தம் திரு நெறி நடந்தது அன்றே #860 மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க இறைவன் நல் நெறியின் ஓங்க இகத்தினில் அவனி இன்பம் குறைவு இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி நிறை கடல் பிறவி துன்பம் நீங்கிட பெற்றது அன்றே #861 அம் கயல் கண்ணி-தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் பங்கய செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று பொங்கு ஒளி சிவிகை ஏறி புகலியர் வேந்தர் போந்தார் மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார் #862 எண்_அரும் பெருமை தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்தி புண்ணிய பிள்ளையாரை புகழ்ந்து அடி போற்றி போத மண் எலாம் உய்ய வந்த வள்ளலார்-தம்மை கண்டு கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னிநாட்டவர்கள் எல்லாம் #863 ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண் முன் தோன்ற கண்டு பால் அறா வாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று மாலும் நான்_முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் சீல மா தவத்தோர் முன்பு சிவிகை-நின்று இழிந்து புக்கார் #864 தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும் நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய பொன் அடி கமலம் போற்றி உடன் புக புனிதர் கோயில் தன்னை முன் வலம்கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார் #865 கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய் எலாம் பொழிய வேத முதல்வரை பணிந்து போற்றி ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருள வல்ல மெய்யனே என்று வீடல் ஆலவாய் விளம்பல் உற்றார் #866 ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் மன்றில் நான்_மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் என்று பூம்புகலி மன்னர் இன் தமிழ் பதிகம் பாட #867 தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும் மன்னனே அமணர்-தங்கள் மாய்கையால் மயங்கி யானும் உன்னை யான் அறிந்திலேனை உறு பிணி தீர்த்து ஆட்கொள்ள இன் அருள் பிள்ளையாரை தந்தனை இறைவா என்றான் #868 சீர் உடை பிள்ளையாரும் சிறப்பு உடை அடியாரோடும் காரினில் பொலிந்த கண்டத்து இறைவர் தாள் வணங்கி காதல் ஆர் அருள் பெற்று போற்றி அங்கு-நின்று அரிது நீங்கி ஏர் இயல் மடத்தில் உள்ளால் இனிது எழுந்தருளி புக்கார் #869 நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும் மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை-தன்னில் போக கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிடும் விருப்பினாலே நாடி அங்கு இருந்து தங்கள் நாதரை பாடல்உற்றார் #870 திரு இயமகத்தின் உள்ளும் திருநீலகண்ட பாணர்க்கு அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவி தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே #871 பூழியன் மதுரை உள்ளார் புறத்து உளார் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே வாழி அ பதிகள் எல்லாம் மங்கலம் பொலிய செய்தார் #872 மீனவன் தேவியாரும் குலச்சிறையாரும் மிக்க ஞானசம்பந்தர் பாதம் நாள்-தொறும் பணிந்து போற்ற ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில் #873 செய் தவத்தால் சிவபாதஇருதயர் தாம் பெற்று எடுத்த வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை எய்திய பூம்புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார் #874 ஆன புகழ் திருநாவுக்கரசர்-பால் அவம் செய்த மானம் இலா அமணர் உடன் வாது செய்து வெல்வதற்கும் மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும் போனவர்-பால் புகுந்தபடி அறிவன் என புறப்படுவார் #875 துடி இடையாள்-தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான் அடி வணங்கி அலர் சண்பை அதன்-நின்றும் வழி கொண்டு படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் #876 மா மறையோர் வளம் பதிகளிடை தங்கி வழி செல்வார் தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை தாம் அணைந்து திரு ஆலவாய் அமர்ந்த தனி நாதன் பூ மருவும் சேவடி கீழ் புக்கு ஆர்வத்தோடும் பணிந்தார் #877 அங்கணரை பணிந்து போந்து அருகு அணைந்தார்-தமை வினவ இங்கு எம்மை கண் விடுத்த காழியர் இள ஏறு தங்கும் இடம் திருநீற்று தொண்டர் குழாம் சாரும் இடம் செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் #878 செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த அப்பர் எழுந்தருளினார் என கண்டோர் அடி வணங்கி ஒப்பு_இல் புகழ் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய எப்பொழுது வந்து அருளிற்று என்று எதிரே எழுந்தருள #879 சிவபாதஇருதயர் தாம் முன் தொழுது சென்று அணைய தவம் ஆன நெறி அணையும் தாதையார் எதிர்தொழுவார் அவர் சார்வு கண்டு அருளி திரு தோணி அமர்ந்து அருளி பவ பாசம் அறுத்தவர்-தம் பாதங்கள் நினைவுற்றார் #880 இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி அரும் தவத்தீர் எனை அறியா பருவத்தே எடுத்து ஆண்ட பெருந்தகை எம் பெருமாட்டி உடன் இருந்ததே என்று பொருந்து புகழ் புகலியின் மேல் திருப்பதிகம் போற்றி இசைத்தார் #881 மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெரு மகிழ்ச்சி உள் நிறைந்த காதலினால் கண் அருவி பாய்ந்து ஒழுக அண்ணலார்-தமை வினவி திருப்பதிகம் அருள்செய்தார் தண் நறும் பூம் செங்கமல தார் அணிந்த தமிழ் விரகர் #882 திருப்பதிகம் திருக்கடைக்காப்பு சாத்தி சிறப்பின் மிகு விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் அருப்புறு மெய் காதல் புரி அடியவர்கள்-தம்மோடும் பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் #883 ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத #884 தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை ஊன் நெகிழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழ கண்டே யான் உம்மை பிரியாத வண்ணம் இ நாட்டு இறைவர் பதி எனை பலவும் பணிவீர் என்று ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே #885 ஆறு அணிந்தார்-தமை வணங்கி அங்கு போற்ற அணி ஆப்பனூரை அணைந்து பணிந்து பாடி நீறு அணிந்த செல்வர் பதி பிறவும் சேர்ந்து நிலவு திருப்பதிகங்கள் நிகழ பாடி சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் ஏறு அணிந்த வெல் கொடியார் திருப்புத்தூரை எய்தி இறைஞ்சி சில நாள் இருந்தார் அன்றே #886 பற்றார் தம் புரங்கள் மலை சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார்-தம் பூவணத்தை புக்கு இறைஞ்சி புகழ்ந்து பாடி கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி குற்றாலம் குறும்பலா கும்பிட்டு ஏத்தி கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே #887 புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றி புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல் தொண்டர் உடன் நாளும் போற்றி செல்வார் விண்ணவரை செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டி திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் #888 செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்கு புடை வலம்கொண்டு உள் அணைவார் போல் செய்து பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த #889 சேதுவின்-கண் செம் கண் மால் பூசை செய்த சிவபெருமான்-தனை பாடி பணிந்து போந்து காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் கோது_இல் புகழ் பாண்டிமாதேவியார் மெய் குலச்சிறையார் குறை அறுத்து போற்றி செல்ல நாதர்-தமை நாள்-தோறும் வணங்கி ஏத்தி நளிர் வேலை கரையில் நயந்து இருந்தார் அன்றே #890 அ நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம்-தன்னில் மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செம் கண் மழ_விடையார்-தமை போற்றி வணங்கி பாடி சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் திருக்கேதீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் உன்னி மிக பணிந்து ஏத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார் #891 அ பதியை தொழுது வட திசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் புக்கு இறைஞ்சி பல பதியும் தொழுது போற்றி புணரி பொரு தலை கரைவாய் ஒழிய போந்தே செப்ப_அரிய புகழ் திருவாடானை சேர்ந்து செந்தமிழ்_மாலைகள் சாத்தி சிவனார் மன்னும் ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் #892 பதி நிலவு பாண்டிநாடு-அதனில் முக்கண் பரமனார் மகிழ் இடங்கள் பலவும் போற்றி விதி நிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண் நீற்றின் சார்வினால் மிக்கு உயர்ந்த கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் #893 அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் கொல் நவில் வேல் குலச்சிறையார் தாமும் கூடி குரை கழல்கள் பணிந்து குறை கொண்டு போற்ற சென்னி வளர் மதி அணிந்தார் பாதம் போற்றி சிரபுரத்து செல்வர் இனிது இருந்த நாளில் #894 பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட அங்கு அவர்-தம் திரு பாதம் பிரியல் ஆற்றாது உடன் போக ஒருப்படும் அ அளவு நோக்கி இங்கு நான் மொழிந்த அதனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று #895 சால மிக தளர்வாரை தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளி செய்த பின்பு மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் #896 பொன்னி வளம் தரு நாடு புகுந்து மிக்க பொருவு_இல் சீர் திருத்தொண்டர் குழாத்தினோடும் பன்னக பூண் அணிந்தவர்-தம் கோயில்-தோறும் பத்தர் உடன் பதி உள்ளோர் போற்ற சென்று கன்னி மதில் திருக்களரும் போற்றி கண்டம் கறை அணிந்தார் பாதாளீச்சுரமும் பாடி முன் அணைந்த பதி பிறவும் பணிந்து போற்றி முள்ளிவாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர் #897 மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் நிலை புரியும் ஓட கோல் நிலை இலாமை நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்தி போக கலை பயிலும் கவுணியர் கோன் அதனை கண்டு அ கரையின்-கண் எழுந்தருளி நின்ற காலை #898 தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர் எதிர் தோன்ற திரு உள்ளம் பணிய சென்று மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பை காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி நா வலமே கோல் ஆக அதன் மேல் நின்று நம்பர்-தமை கொட்டம் என நவின்று பாட #899 உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செல செல்ல உந்துதலால் ஊடு சென்று செம்பொன் நேர் சடையார்-தம் கொள்ளம்பூதூர்-தனை சேர அக்கரையில் சேர்ந்த பின்பு நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார் #900 நீண் நிலை கோபுரம்-அதனை இறைஞ்சி புக்கு நிகர் இலா தொண்டருடன் நெருங்க சென்று வாண் நிலவு கோயிலினை வலம்கொண்டு எய்தி மதி சடையார் திரு முன்பு வணங்கி நின்று தாணுவே ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா நாக பூணினாய் களிற்று உரிவை போர்த்த முக்கண் புனிதனே என பணிந்து போற்றி செய்தார் #901 போற்றி இசைத்து புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியன் முன் புன் சமயத்து அமணர்-தம்மோடு ஏற்ற பெரு வாதின் கண் எரியின் வேவா பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே #902 நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடை-நின்று இழிந்து சென்று பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் மாடு வலம்கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரை பாடக மெல் அடி எடுத்து பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய #903 தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி என் உள்ள துணை ஆகி ஆலவாயில் அமர்ந்து இருந்தவாறு என்-கொல் எந்தாய் என்று பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவி போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி மன்னு புகழ் பதி பிறவும் வணங்க சண்பை வள்ளலார் நல்லாறு வணங்கி செல்வார் #904 சீர் நிலவு திருத்தெளிச்சேரியினை சேர்ந்து சிவபெருமான்-தனை பரவி செல்லும் போது சார்வு அறியா சாக்கியர்-தம் போதிமங்கை சார்தலும் மற்று அது அறிந்த சைவர் எல்லாம் ஆர்கலியின் கிளர்ச்சி என சங்கு தாரை அளவு_இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து பார் குலவு தனிக்காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத #905 புல் அறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடி புகலியர்-தம் புரவலனார் புகுந்து தங்கள் எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர் முன் சென்று மல்கி எழும் திரு சின்ன ஒலிகளாலும் மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு தங்கள் கல்வியினில் மேம்பட்ட புத்தநந்தி முதலான தேரார்க்கும் கனன்று சொன்னார் #906 மற்றவர்கள் வெவ் உரையும் பிள்ளையார் முன் வரு சின்ன பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் பொற்பு உடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் என புக்க போது செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று வெற்றி புனை சின்னங்கள் வாதில் எமை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான் #907 புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும்-காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி இத்தகைய செயற்கு இவரை தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று முத்து நிரை சிவிகையின் மேல் மணியை வந்து முறை பணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார் #908 வரும் இடத்தில் அழகு இதாம் நமக்கு வாதில் மற்று இவர்-தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம் பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய் மேற்கோள் என புகலி வேந்தர் கூற அரு_மறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடையபிள்ளையார் திரு வாக்காலே உரும் இடித்து விழ புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க என பொறா உரை முன் விட்டார் #909 ஏறு உயர்த்தார் சைவ நெறி ஆணை உய்க்க எதிர் விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் மாறு_இல் வலி மந்திரமாம் அசனி போல வாய்மை உரை திருத்தொண்டர் வாக்கினாலே வேறு மொழி போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியும் தலையினையும் வெவ்வேறாக கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே #910 மற்றவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்-தன் தலையும் மெய்யும் அற்று விழ அத்திர வாக்கு-அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரசன் அடியார் எல்லாம் வெற்றி தரும் பிள்ளையார் தமக்கு சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க உற்ற விதி அதுவே ஆம் அர என்று எல்லாம் ஒதுக என அ ஒலி வான் உற்றது அன்றே #911 அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி வஞ்சனையோ இது-தான் மற்றவர்-தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் எஞ்சலின் மந்திர வாதம் அன்றி எம்மோடு பொருள் பேசுவற்கு இசைவது என்று தம் செயலின் மிக்கு உள்ள சாரி புத்தன்-தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார் #912 அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண் தரள சிவிகையின்-நின்று இழிந்து வேறு ஓர் சத்திரமண்டபத்தின் மிசை ஏறி நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து சாரும் புத்தர்களை அழைக்க என திரு முன் நின்றார் புகலி காவலர் போற்றி சென்றார் #913 சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் வென்றி மழ இளம் களிறு சண்பையாளி வேதபாரகன் மும்மை தமிழின் வேந்தன் நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் என கூறுதலும் நன்மை சாரா தன் தகைமை புத்தருடன் சாரிபுத்தன் சந்திரமண்டபமும் சார வந்தான் #914 அங்கு அணைந்து மண்டபத்து புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் எங்கும் நிகழ் திரு சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தை பொடி ஆக்கும் எதிர்_இல் அன்பர் பொங்கு புகழ் புகலி காவலர்-தம் பாதம் போற்றி அருளால் சாரிபுத்தன்-தன்னை உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரை செய்கின்றான் #915 கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதி மாறும் கணபங்க இயல்பு-தன்னில் பொற்பு உடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்த செய்ய உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்து உய்ய அற முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான் #916 என்று உரைத்த சாரிபுத்தன் எதிர் வந்து ஏற்ற இரும் தவத்து பெருந்தன்மை அன்பர்-தாமும் நன்று உமது தலைவன் தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்தி-தான் ஆவது என்றார் நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் ஒன்றிய அகம் அந்த விவேக முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் #917 ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் ஈங்கு உளன் என்ற அவனுக்கு விடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து ஓங்கு வடிவு அமைத்து விழ எடுக்கும் பூசை கொள்வார் ஆர் உரைக்க என உரைக்கல் உற்றான் #918 கந்தமாம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்து உளன் முத்தியில் என்றான் என்ன காணும் இந்திரியம் கண் முதல் ஆம் கரணம்-தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார் முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு வந்த வினை பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்து சொன்னான் #919 சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆன போது அவன் பெறுதல் இல்லை என்றார் முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் இன் உயிர் போய் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான் #920 இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக்காட்டிய துயிலும் இயல்பினான் போல் மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது செப்பிய அ கந்தத்தின் விளைவு இன்று ஆகி திரிவு இல்லா முத்தியில் சென்றிலனும் ஆனான் அப்படி அ கந்தத்துள் அறிவும் கெட்டால் அ முத்தி உடன் இன்பம் அணையாது என்றார் #921 அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் பெய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்து போனான் என்றாய் எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்த தீதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார் #922 உணர்வு பொது சிறப்பு என்ன இரண்டின் முன் உளவான மர பொதுமை உணர்த்தல் ஏனை புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு_இல்லா பொருள்கள் எல்லாம் கொணரும் விறகினை குவை செய்திடினும் வேறு குறைத்து அவற்றை தனித்தனியே இடினும் வெந்தீத்து உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் #923 எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக சொன்னாய் அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் தொடுத்த நிகழ்காலமே அன்றி ஏனை தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் கடுத்த எரி நிகழ் காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக்கு அது ஆம் என்றார் #924 ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய வாதம் மாறு ஒன்று இன்றி தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளி புகலி மன்னர் பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார் #925 புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்றாம்படி அன்பர் பொருந்த கூற மந்த உணர்வு உடையவரை நோக்கி சைவம் அல்லாது மற்று ஒன்றும் இல்லை என்றே அந்தம்_இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலை பொருள் உணர்ந்தார் அருளி செய்ய சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் #926 அன்று அவர்க்கு கவுணியர் கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவின்மை அகன்று நீங்கி முன் தொழுது விழுந்து எழுந்து சைவர் ஆனார் முகை மலர்_மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள்செய்து சண்பை வேந்தர் சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டி திருக்கடவூர் அதன் மருங்கு சேர வந்தார் #927 அந்நகரில் அடியார்கள் எதிர்கொள்ள புக்கு அருளி கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி மன்னி அமர்ந்து உரையும் நாள் வாகீச மா முனிவர் எ நகரில் எழுந்தருளிற்று என்று அடியார்-தமை வினவ #928 அங்கு அவரும் அடி போற்றி ஆண்ட அரசு எழுந்தருளி பொங்கு புனல் பூந்துருத்தி நகரின்-கண் போற்றி இசைத்து தங்கு திருத்தொண்டு செயும் மகிழ்ச்சியினால் சார்ந்து அருளி எங்கும் நிகழ்ந்திட இருந்தபடி எல்லாம் இயம்பினார் #929 அப்பரிசு அங்கு அவர் மொழிய ஆண்ட அரசினை காணும் ஒப்பு_அரிய பெரு விருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு மை பொருவு கறை கண்டர் கழல் வணங்கி அருள் பெற்று செப்ப_அரிய புகழ் புகலி பிள்ளையார் செல்கின்றார் #930 பூ விரியும் தடம் சோலை புடை பரப்ப புனல் பரக்கும் காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் மேவி இனிது அமர்ந்து இறைஞ்சி விருப்புறு மெய் தொண்டரோடு நாவரசர்-உழை சண்பை நகர் அரசர் நண்ணுவார் #931 அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி நம் தமையாளுடையவரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது முந்தை வினைப்பயன் என்று முகம் மலர அகம் மலர்வார் #932 எதிர் சென்று பணிவன் என எழுகின்ற பெரு விருப்பால் நதி தங்கு சடை முடியார் நல் பதங்கள் தொழுது அந்த பதி-நின்றும் புறப்பட்டு பரசமயம் சிதைத்தவர்-பால் முதிர்கின்ற பெரும் தவத்தோர் முன் எய்த வந்து அணைந்தார் #933 திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் உருக்கி எழும் மனம் பொங்க தொண்டர் குழாத்துடன் அணைந்தார் #934 வந்து அணைந்த வாகீசர் வண் புலி வாழ் வேந்தர் சந்த மணி திரு முத்தின் சிவிகையினை தாங்கியே சிந்தை களிப்புற வந்தார் திருஞானசம்பந்தர் புந்தியில் வேறு ஒன்று நிகழ்ந்திட முன் புகல்கின்றார் #935 அப்பர்-தாம் எங்கு உற்றார் இப்பொழுது என்று அருள்செய்ய செப்ப_அரிய புகழ் திருநாவுக்கரசர் செப்புவார் ஒப்பு_அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் இப்பொழுது தாங்கிவர பெற்று உய்ந்தேன் யான் என்றார் #936 அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி இவ்வாறு செய்து அருளிற்று என்னாம் என்று இறைஞ்சுதலும் செவ்வாறு மொழி நாவலர் திருஞானசம்பந்தர்க்கு எவ்வாறு செய தகுவது என்று எதிரே இறைஞ்சினார் #937 சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து வாழ்ந்து மன களிப்பினராய் மற்று இவரை வணங்கப்பெற்று ஆழ்ந்த பிறப்பு உய்ந்தோம் என்று அண்டம் எலாம் உற ஆர்த்தார் #938 திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர்-தமை பெருகு ஆர்வத்தொடும் அணைந்து தழீஇ கொள்ள பிள்ளையார் மரு ஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார் பொரு ஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திரு பூந்துருத்தி #939 அன்பர் குழாத்தொடும் செல்வார் ஆன் ஏற்றார் மகிழ் கோயில் முன் பணித்து ஆக சென்று கோபுரத்தை முன் இறைஞ்சி துன்பம் இலா திருத்தொண்டர் உடன் தொழுது புக்கு அருளி என்பு உருக வலம்கொண்டு பணிந்து ஏத்தி இறைஞ்சினார் #940 பொய்யிலியாரை பணிந்து போற்றியே புறத்து அணைவார் செய்ய சடையார் கோயில் திரு வாயில் முன்னாக மை அறு சீர் தொண்டர் குழாம் வந்து புடைசூழ உலகு உய்ய வந்தார் தங்களுடன் மகிழ்ந்து அங்கு இனிது இருந்தார் #941 வாக்கின் தனி மன்னர் வண் புகலி வேந்தர்-தமை போக்கும் வரவும் வினவ புகுந்தது எல்லாம் தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை தேக்கும் திரு வாயால் செப்பி அருள்செய்தார் #942 காழியினில் வந்த கவுணியர்-தம் போர் ஏற்றை ஆழி மிசை கல் மிதப்பில் வந்தார் அடி வணங்கி வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்-தான் ஓங்குதற்கு சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் #943 பிள்ளையார் தாமும் அவர் முன் தொழுது பேர் அன்பின் வெள்ளம் அனைய புகழ் மானியார் மேன்மையையும் கொள்ளும் பெருமை குலச்சிறையார் தொண்டினையும் உள்ள பரிசு எல்லாம் மொழிந்து ஆங்கு உவந்து இருந்தார் #944 தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து அன்னம் அனையார்க்கும் அமைச்சர்க்கும் அன்பு அருளி துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் #945 சொல்லின் பெரு வேந்தர் தொண்டை வள நாடு எய்தி மல்கு புகழ் காஞ்சி ஏகாம்பரம் என்னும் செல்வர் கழல் பணிந்து சென்றது எல்லாம் செப்புதலும் புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் #946 அங்கணரை போற்றி எழுந்த ஆண்ட அரசு அமர்ந்த பொங்கு திரு மடத்தில் புக்கு அங்கு இனிது அமர்ந்து திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடி கீழ் தங்கு மனத்தோடு தாள் பரவி செல்லும் நாள் #947 வாகீச மா முனிவர் மன்னும் திரு ஆலவாய் நாகம் அரைக்கு அசைத்த நம்பர் கழல் வணங்க போகும் பெரு விருப்பு பொங்க புகலியின் மேல் ஏகும் பெரும் காதல் பிள்ளையார் ஏற்று எழுவார் #948 பூந்துருத்தி மேவும் புனிதர்-தமை புக்கு இறைஞ்சி போந்து திரு வாயில் புறத்து அணைந்து நாவினுக்கு வேந்தர் திரு உள்ளம் மேவ விடைகொண்டு அருளி ஏந்தலார் எண்_இறந்த தொண்டருடன் ஏகினார் #949 மாடு புனல் பொன்னி இழிந்து வட கரையில் நீடு திரு நெய்த்தானம் ஐயாறு நேர்ந்து இறைஞ்சி பாடு தமிழ்_மாலைகளும் சாத்தி பரவி போய் ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார் #950 செம் கண் விடையார் திருப்பழனம் சேர்ந்து இறைஞ்சி பொங்கிய காதலின் முன் போற்றும் பதி பிறவும் தங்கி போய் சண்பை நகர் சார்ந்தார் தனி பொருப்பின் மங்கை திரு முலை பால் உண்டு அருளும் வள்ளலார் #951 தென்னாட்டு அமண் மாசு அறுத்து திருநீறே அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் முன்னாக வேதம் முழங்க எதிர்கொண்டார் #952 போத நீடு மா மறையவர் எதிர்கொள புகலி காவலரும் தம் சீத முத்து அணி சிவிகை-நின்று இழிந்து எதிர் செல்பவர் திரு தோணி நாதர் கோயில் முன் தோன்றிட நகை மலர் கரம் குவித்து இறைஞ்சி போய் ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் மணி கோபுரம் சென்று உற்றார் #953 அங்கு அ மா நிலத்து எட்டு உற வணங்கி புக்கு அஞ்சலி முடி ஏற பொங்கு காதலில் புடை வலம்கொண்டு முன் பணிந்து போற்றி எடுத்து ஓதி துங்க நீள் பெரும் தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர் கழல் பணிவுற்றார் #954 முற்றும் மெய் எலாம் புளகங்கள் முகிழ்த்து எழ முகந்து கண் களிகூர பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர பணிந்து ஏத்தி உற்று உமை சேர்வது எனும் திரு இயமகம் உவகையால் எடுத்து ஓதி வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் #955 சீரின் மல்கிய திருப்பதிகத்தினில் திருக்கடைக்காப்பு ஏற்றி வாரின் மல்கிய வன முலையாள் உடன் மன்னினார்-தமை போற்றி ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணி வாயில் #956 தாதையாரும் அங்கு உடன் பணிந்து அணைந்திட சண்பையார் தனி ஏறு மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் ஆதரித்து வாழ்த்துரை இரு மருங்கு எழ அணி மறுகிடை சென்று காதலித்தவர்க்கு அருள்செய்து தம் திரு மாளிகை கடை சார்ந்தார் #957 நறவம் ஆர் பொழில் புகலியில் நண்ணிய திருஞானசம்பந்தர் விறலியார் உடன் நீலகண்ட பெரும்பாணர்க்கு மிக நல்கி உறையுளாம் அவர் மாளிகை செல விடுத்து உள் அணைதரும் போதில் அறலின் நேர் குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணை உற்றார் #958 அங்கு அணைந்து அரு_மறை குல தாயர் வந்து அடி வணங்கிட தாமும் துங்க நீள் பெரும் தோணியில் தாயர் தாள் மனம் கொள தொழுவாராய் தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றி பொங்கும் இன் இசை திருப்பதிகம் பல பாடினார் புகழ்ந்து ஏத்தி #959 நீல மா விடம் திரு மிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் காலம் ஆனவை அனைத்தினும் பணிந்து உடன் கலந்த அன்பர்களோடும் சால நாள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிட குழை கம்பர் கோலம் ஆர்தர கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார் #960 தண்டக திரு நாட்டினை சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள்செய்வார் காலம் பெற்று அண்டருக்கு அறிவரும் பெரும் தோணியில் இருந்தவர் அருள் பெற்று தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் #961 அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அரு_மறை அங்கி வேட்டு அன்போடும் துப்பு நேர் சடையார்-தமை பரவியே தொழுதிடும் என சொல்லி மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் ஒப்பு_இலாதவர்-தமை வழியிடை பணிந்து உருகும் அன்போடு செல்வார் #962 செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி பல் பெருந்தொண்டர் எதிர்கொள பரமர்-தம் திருத்தினை நகர் பாடி அல்கு தொண்டர்கள்-தம்முடன் திருமாணிக்குழியினை அணைந்து ஏத்தி மல்கு வார் சடையார் திருப்பாதிரிப்புலியூரை வந்து உற்றார் #963 கன்னி மா வனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள்செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி மன்னுவார் பொழில் திருவடுகூரினை வந்து எய்தி வணங்கி போய் பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் #964 வக்கரை பெருமான்-தனை வணங்கி அங்கு அமரும் நாள் அருகாலே செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு தொக்க மெய் திருத்தொண்டர் வந்து எதிர்கொள தொழுது எழுந்து அணைவுற்றார் #965 ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்று அணைபவர் முன்னே பூதம் பாட நின்று ஆடுவார் திரு நடம் புலப்படும்படி காட்ட வேத பாலகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் கோது_இலா இசை குலவு குண்டைக்குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி #966 பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கி போய் அரவ நீள் சடை அங்கணர் தாம் மகிழ்ந்து உறை திருவாமாத்தூர் சிரபுரத்து வந்து அருளிய திரு மறை சிறுவர் சென்று அணைவுற்றார் #967 சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருவாமாத்தூர் பொன்ற அங்கு பூம் கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றி குன்ற வார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி நன்றும் இன்புற பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார் #968 கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரை கழல் பணிந்து ஏத்தி ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறை அணி நல்லூரை அணைந்து ஏத்தி பா அலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவு சீர் அடியார்கள் மேவும் அன்புறு மேன்மையாம் தன்மையை விளங்கிட அருள்செய்தார் #969 சீரின் மன்னிய பதிகம் முன் பாடி அ திருவறைஅணிநல்லூர் வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்-தம் மலை மிசை வலம்கொள்வார் பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்-தொறும் பணிந்து ஏத்தும் காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிட கண்டார் #970 அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் கண்ணால் பருகி கைதொழுது கலந்து போற்றும் காதலினால் உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடி தொண்டருடன் போந்து தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் #971 அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திரு மேனி எங்கும் ஆகி கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார் #972 ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் பூத நாதர்-அவர்-தம்மை பூவார் மலரால் போற்றி இசைத்து காதலால் அ திருமலையில் சில நாள் வைகி கமழ் கொன்றை வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார் #973 மங்கை பாகர் திருவருளால் வணங்கி போந்து வட திசையில் செம் கண் விடையர் பதி பலவும் பணிந்து புகலி செம்மலார் துங்க வரைகள் கான் பலவும் கடந்து தொண்டை திருநாட்டில் திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத்தூரை சேர்வுற்றார் #974 தேவர் முனிவர்க்கு ஒத்து அளித்தார் திருவோத்தூரில் திருத்தொண்டர் தா_இல் சண்பை தமிழ் விரகர் தாம் அங்கு அணைய களி சிறந்து மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் #975 சண்பை வேந்தர் தண் தரள சிவிகை-நின்றும் இழிந்து அருளி நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு பண்பின் நீடி பணிந்து எழுந்து பரமர் கோயிலுள் அடைந்தார் #976 வாரணத்தின் உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் ஆரணத்தின் உள் பொருளாய் நின்றார்-தன் முன் அணைந்து இறைஞ்சி நாரணற்கும் பிரமற்கும் நண்ண அரிய கழல் போற்றும் காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார் #977 தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல்_மாலைகளால் துதி செய்து முழுதும் ஆனார் அருள் பெற்று போந்து வைகி முதல்வர் தம்மை பொழுது-தோறும் புக்கு இறைஞ்சி போற்றி செய்து அங்கு அமர்வார் முன் அமுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார் #978 அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எலாம் மங்குலுற நீள் ஆண் பனையாய் காயாது ஆக கண்ட அமணர் இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு கடை உண்டோ என்று பொங்கு நகை செய்து இழைத்து உரைத்தார் அருள வேண்டும் என புகல #979 பரமனார் திருத்தொண்டர் பண்பு நோக்கி பரிவு எய்தி விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கு அருளி அரவும் மதியும் பகை தீர அணிந்தார்-தம்மை அடி வணங்கி இரவு போற்றி திருப்பதிகம் இசையில் பெருக எடுத்து அருளி #980 விரும்பு மேன்மை திருக்கடைக்காப்பு-அதனில் விமலர் அருளாலே குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் நெருங்கும் ஏற்று பனை எல்லாம் நிறைந்த குலைகளாய் குரும்பை அரும்பு பெண்ணை ஆகி இட கண்டோர் எல்லாம் அதிசயித்தார் #981 சீரின் மன்னும் திருக்கடைக்காப்பு ஏற்றி சிவனார் அருள் பெற்று பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்து பழுக்கும் பண்பினால் நேரும் அன்பர் தம் கருத்து நேரே முடித்து கொடுத்து அருளி ஆரும் உவகை திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார் #982 தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் என்ன ஆவன மற்று இவை என்று தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த பொன் ஆர் மேனி புரி சடையான் அன்றே என்று போற்றினார் #983 பிள்ளையார்-தம் திரு வாக்கில் பிறத்தலால் அ தாலமும் முன்பு உள்ள பாசம் விட்டு அகல ஒழியா பிறவி-தனை ஒழித்து கொள்ளும் நீர்மை காலங்கள் கழித்து சிவமே கூடினவால் வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்னாம் #984 அங்கண் அமரர் பெருமானை பணிந்து போந்து ஆடு அரவின் உடன் பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பல போற்றி மங்கை பாகர் அமர்ந்து அருளும் வயல் மாகறலை வழுத்தி போய் கொங்கு மலர் நீர் குரங்கணின் முட்டத்தை சென்று குறுகினார் #985 ஆதி முதல்வர் குரங்கணின் முட்டத்தை அணிந்து பணிந்து ஏத்தி நீதி வாழும் திருத்தொண்டர் போற்ற நிகர்_இல் சண்பையினில் வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் #986 நீடு காஞ்சி வாணரும் நிலவு மெய்ம்மை அன்பரும் மாடு சண்பை வள்ளலார் வந்து அணைந்த ஓகையால் கூடுகின்ற இன்ப நேர் குலாவு வீதி கோலினார் காடு கொண்ட பூகம் வாழை காமர் தோரணங்களால் #987 கொடி நிரைத்த வீதியில் கோல வேதிகை புறம் கடி கொள் மாலை மொய்த்த பந்தர் கந்த நீர் தசும்புடன் மடிவு_இல் பொன் விளக்கு எடுத்து மாதர் மைந்தர் மல்குவார் படி விளங்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார் #988 கோதைமார் ஆடலும் குலாவும் தொண்டர் பாடலும் வேத கீத நாதமும் மிக்கு எழுந்து விம்மவே காதல் நீடு காஞ்சி வாணர் கம்பலைத்து எழுந்து போய் மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் #989 சண்பை ஆளும் மன்னர் முன்பு தொண்டர் வந்து சார்தலும் பண்பு நீடி யானம் முன்பு இழிந்து இறைஞ்சு பான்மை கண்டு எண் பெருக்கும் மிக்க தொண்டர் அஞ்சலித்து எடுத்த சொல் மண் பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர் #990 சேண் உயர்ந்த வாயில் நீடு சீர் கொள் சண்பை மன்னனார் வாள் நிலாவும் நீற்று அணி விளங்கிட மனத்தினில் பூணும் அன்பர் தம்முடன் புகுந்திட புறத்து உளோர் காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் #991 வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ கயல் நெடும் கண் மாதரும் காதல் நீடும் மாந்தரும் புயல் பொழிந்ததாம் என பூவினொடு பொன் சுண்ணம் இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் #992 இன்ன வண்ணம் யாவரும் இன்பம் எய்த எய்துவார் பின்னு வார் சடை முடி பிரான் மகிழ்ந்த கோயில்கள் முன் உற பணிந்து போய் மொய் வரை திரு_மகள் மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் #993 கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து உம்பர் ஓங்கும் கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் #994 செம்பொன் மலை_கொடி தழுவ குழைந்து அருளும் திரு மேனி கம்பரை வந்து எதிர்வணங்கும் கவுணியர்-தம் காவலனார் பம்பு துளி கண் அருவி பாய்ந்து மயிர் புளகம் வர தம் பெருகு மன காதல் தள்ள நிலம் மிசை தாழ்ந்தார் #995 பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப மலரும் முகம் அளித்த திரு மணி வாயால் மறையான் என்று உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க நிலவு மிசை முதல்_தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ #996 பாடினார் பணிவுற்றார் பரிவுறும் ஆனந்த கூத்து ஆடினார் அகம் குழைந்தார் அஞ்சலி தம் சென்னியின் மேல் சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் #997 மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் பெருகிய கண் மழை பொழிய பெரும் புகலி பெருந்தகையார் உருகிய அன்புள் அலைப்ப உமை தழுவ குழைந்தவரை பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார் #998 புறத்து அணைந்த தொண்டருடன் போந்து அமைந்த திரு மடத்தில் பெறற்கு_அரும் பேறு உலகு உய்ய பெற்று அருளும் பிள்ளையார் மறப்பு_அரிய காதல் உடன் வந்து எய்தி மகிழ்ந்து உறைவார் அறம் பெரும் செல்வ காமகோட்டம் அணைந்து இறைஞ்சினார் #999 திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில் ஒரு போதும் தப்பாதே உள் உருகி பணிகின்றார் மருவு திரு இயமகமும் வளர் இருக்கும் குறள் மற்றும் பெருகும் இசை திருப்பதிக தொடை புனைந்தார் பிள்ளையார் #1000 நீடு திரு பொழில் காஞ்சி நெறிக்காரைக்காடு இறைஞ்சி சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி ஆடும் அவர் இனிது அமரும் அனேகதங்காவதம் பரவி மாடு திரு தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள் #1001 எண் திசையும் போற்றி இசைக்கும் திரு பதி மற்று அதன் புறத்து தொண்டருடன் இனிது ஏகி தொல்லை விடம் உண்டு இருண்ட கண்டர் மகிழ் மேல் தளியும் முதலான கலந்து ஏத்தி மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் #1002 அ பதியில் விருப்பினோடும் அங்கணரை பணிந்து அமர்வார் செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் மை பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார் #1003 திருமால் பேறு உடையவர்-தம் திருவருள் பெற்று எழுந்தருளி கரு மாலும் கருமாவாய் காண்பு_அரிய கழல் தாங்கி மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கி தம் பெருமாற்கு திருப்பதிக பெரும் பிணையல் அணிவித்தார் #1004 அங்கு உள்ள பிற பதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கி பொங்கு புனல் பால் ஆற்றின் புடையில் வட-பால் இறைவர் எங்கும் உறை பதி பணிவார் இலம்பை அம் கோட்டூர் இறைஞ்சி செம் கண் விடை உகைத்தவரை திருப்பதிகம் பாடினார் #1005 திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து பொருள் பதிக தொடை மாலை புரம் எரித்தபடி பாடி அருள் புகலி ஆண்தகையார் தக்கோலம் அணைந்து அருளி விருப்பினோடும் திருவூறல் மேவினார்-தமை பணிந்தார் #1006 தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி வழு_இல் தவம் புரிந்து ஏத்த மன்னினார்-தமை மலர்ந்த பழுது_இல் செழும் தமிழ்_மாலை பதிக இசை புனைந்து அருளி முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர் #1007 குன்ற நெடும் சிலை ஆளர் குலவிய பல் பதி பிறவும் நின்ற விருப்புடன் இறைஞ்சி நீடு திருத்தொண்டர் உடன் பொன் தயங்கு மணி மாட பூந்தராய் புரவலனார் சென்று அணைந்தார் பழையனூர் திரு ஆலங்காட்டு அருகு #1008 இம்மையிலே புவி உள்ளோர் யாரும் காண ஏழ்_உலகும் போற்றி இசைப்ப எம்மை ஆளும் அம்மை திரு தலையாலே நடந்து போற்றும் அம்மை அப்பர் திரு ஆலங்காடாம் என்று தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று செம்மை நெறி வழுவாத பதியின் மாடு ஓர் செழும் பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார் #1009 மாலை இடை யாமத்து பள்ளிகொள்ளும் மறையவனார் தம் முன்பு கனவிலே வந்து ஆலவனத்து அமர்ந்து அருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளி செய்ய ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து வேலை விடம் உண்டவர் தம் கருணை போற்றி மெய் உருகி திருப்பதிகம் விளம்பல்உற்றார் #1010 துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் எஞ்சல்_இலா வகை முறையே பழையன் ஊரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து ஏத்தி அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக்காப்பு அமைய சாத்தி பஞ்சுரம் ஆம் பழைய திறம் கிழமை கொள்ள பாடினார் பார் எல்லாம் உய்ய வந்தார் #1011 நீடும் இசை திருப்பதிகம் பாடி போற்றி நெடும் கங்குல் இருள் நீங்கி நிகழ்ந்த-காலை மாடு திருத்தொண்டர் குழாம் அணைந்த போது மாலையினில் திரு ஆலவனத்து மன்னி ஆடும் அவர் அருள்செய்தபடியை எல்லாம் அருளி செய்து அகம் மலர பாடி ஏத்தி சேடர் பயில் திரு பதியை தொழுது போந்து திருப்பாசூர் அதன் மருங்கு செல்லல் உற்றார் #1012 திருப்பாசூர் அணைந்து அருளி அங்கு மற்ற செழும் பதியோர் எதிர்கொள்ள சென்று புக்கு பொருப்பு அரையன் மட பாவை இட பாகத்து புராதனர் வேய் இடம் கொண்ட புனிதர் கோயில் விருப்பின் உடன் வலம்கொண்டு புக்கு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனி எல்லாம் முகிழ்ப்ப நின்றே அருள் கருணை திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசை பதிகம் அருளி செய்தார் #1013 மன்னு திருப்பதிக இசை பாடி போற்றி வணங்கி போந்து அ பதியில் வைகி மாடு பிஞ்ஞகர்-தம் வெண் பாக்கம் முதலாய் உள்ள பிற பதிகள் பணிந்து அணைவார் பெருகும் அன்பால் முன் நிறைந்த திரு வாய் மஞ்சன நீர் ஆட்டும் முதல் வேடர் கண்ணப்ப நாயனாரை உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்ற பெரு வேட்கை உடன் உவந்து சென்றார் #1014 மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி முக்கண் முதல் தலைவன் இடம் ஆகி உள்ள முகில் நெருங்கும் காரி கரை முன்னர் சென்று புக்கு இறைஞ்சி போற்றி இசைத்து அ பதியில் வைகி பூதியரோடு உடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர் #1015 இறைவர் திருக்காரிகரை இறைஞ்சி அப்பால் எண்_இல் பெருவரைகள் இரு மருங்கும் எங்கும் நிறை அருவி நிரை பலவாய் மணியும் பொன்னும் நிறை துவலை புடை சிதறி நிகழ் பல ஆகி அறை கழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்ற சிறை பெற்றவன் மேல் எழுவதற்கு சிறகு அடித்து பறக்க முயன்று உயர்ந்த போலும் சிலை நிலத்தில் எழுந்தருளி செல்லா நின்றார் #1016 மா தவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல மணி முத்தின் பரி சின்னம் வரம்பு_இன்று ஆக பூதி நிறை கடல் அணைவது என்ன சண்பை புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்ன தீது_இல் ஒலி பல முறையும் பொங்கி எங்கும் திருஞானசம்பந்தன் வந்தான் என்னும் நாதம் நிறை செவியின் வாய் மக்கள் எல்லாம் நலம் மருவு நினைவு ஒன்றாய் மருங்கு நண்ண #1017 கானவர்-தம் குலம் உலகு போற்ற வந்த கண்ணப்பர் திரு பாத செருப்பு தோய மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும் ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத தானமும் மற்று அவை கடந்து திரு காளத்தி சார எழுந்தருளினார் சண்பை வேந்தர் #1018 அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று செம்பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டி பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் உம்பர் தவம் புரிவார் அ பதியில் உள்ளோருடன் விரும்பி எதிர்கொள்ள உழை சென்று உற்றார் #1019 திசை அனைத்தும் நீற்றின் ஒளி தழைப்ப மண் மேல் சிவலோகம் அணைந்தது என சென்ற போது மிசை விளங்கும் மணி முத்தின் சிவிகை-நின்றும் வேத பாலகர் இழிந்து வணங்கி மிக்க அசைவு_இல் பெருந்தொண்டர் குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் #1020 வந்து அணைந்த மா தவத்தோர் வணங்கி தாழ்ந்து மறை வாழ்வே சைவ சிகாமணியே தோன்றும் இந்த மலை காளனோடு அத்தி-தம்மில் இகலி வழிபாடு செய இறைவர் மேவும் அந்தம்_இல் சீர் காளத்தி மலை ஆம் என்ன அவனி மேல் பணிந்து எழுந்து அஞ்சலி மேல் கொண்டு சிந்தை களி மகிழ்ச்சி வர திரு விராகம் வானவர் தானவர் என்று எடுத்து செல்வார் #1021 திருந்திய இன் இசை வகுப்பு திரு கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்து திகழ பாடி பொருந்து பெரும் தவர் கூட்டம் போற்ற வந்து பொன் முகலி கரை அணைந்து தொழுது போகி அரும் தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடை பிள்ளையார் அயன் மால் தேடும் மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலை அடிவாரம் சார வந்து தாழ்ந்தார் #1022 தாழ்ந்து எழுந்து திரு மலையை தொழுது கொண்டே தடம் சிலாதலம் சோபானத்தால் ஏறி வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்கு மணி நீள் வாயில் மருங்கு இறைஞ்சி உள் புகுந்து வளர் பொன் கோயில் சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி வீழ்ந்து எழுவார் கும்பிட்ட பயன் காண்பார் போல் மெய் வேடர் பெருமானை கண்டு வீழ்ந்தார் #1023 உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் வெள்ள செம் சடை கற்றை நெற்றி செம் கண் விமலரையும் உடன் கண்ட விருப்பும் பொங்கி பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் #1024 பங்கய கண் அருவி நீர் பாய நின்று பரவும் இசை திருப்பதிகம் பாடி ஆடி தங்கு பெரும் களி காதல் தகைந்து தட்ப தம் பெருமான் கழல் போற்றும் தன்மை நீட அங்கு அரிதில் புறம் போந்து அங்கு அயன் மால் போற்ற அரியார்-தம் திருமலை கீழ் அணைந்து இறைஞ்சி பொங்கு திருத்தொண்டர் மடம் காட்ட அங்கு புக்கு அருளி இனிது அமர்ந்தார் புகலி வேந்தர் #1025 யாவர்களும் அறிவ_அரிய இறைவன்-தன்னை ஏழ்_உலகும் உடையானை எண்_இலாத தேவர்கள்-தம் பெருமானை திருக்காளத்தி மலையின் மிசை வீற்றிருந்த செய்ய தேனை பூ அலரும் பொழில் புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள்-தோறும் புக்கு பா மலர் கொண்டு அடி போற்றி பருகி ஆர்ந்து பண்பு இனிய திரு பதியில் பயிலும் நாளில் #1026 அங்கண் வட திசை மேலும் குடக்கின் மேலும் அரும் தமிழின் வழக்கு அங்கு நிகழாது ஆக திங்கள் புனை முடியார்-தம் தானம்-தோறும் சென்று தமிழ் இசை பாடும் செய்கை போல மங்கை உடன் வானவர்கள் போற்றி இசைப்ப வீற்றிருந்தார் வட கயிலை வணங்கி பாடி செங்கமல மலர் வாவி திருக்கேதாரம் தொழுது திருப்பதிக இசை திருந்த பாடி #1027 கூற்று உதைத்தார் மகிழ்ந்த கோ கரணம் பாடி குலவு திரு பருப்பகத்தின் கொள்கை பாடி ஏற்றின் மிசை வருவார் இந்திரன்-தன் நீல பருப்பதமும் பாடி மற்று இறைவர் தானம் போற்றிய சொல் மலர் மாலை பிறவும் பாடி புகலியார்-தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் #1028 தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை ஒன்று திரு ஒற்றியூர் உறைவர்-தம்மை இறைஞ்சுவது திரு உள்ளத்து உன்னி அங்கண் இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று பொன் தரளம் கொழித்து இழி பொன் முகலி கூட புனைந்த திருப்பதிக இசை போற்றி போந்தார் #1029 மன்னு புகழ் திருத்தொண்டர் குழாத்தினோடும் மறை வாழ வந்தவர் தாம் மலையும் கானும் முன் அணைந்த பதி பிறவும் கடந்து போந்து முதல்வனார் உறை பதிகள் பலவும் போற்றி பல் மணிகள் பொன் வரன்றி அகிலும் சந்தும் பொருது அலைக்கும் பாலி வட கரையில் நீடு சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் #1030 திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி வரு வேற்று மனத்து அவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்து எய்தி வணங்கி போற்றி உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது பெரு வேட்கை தரு வாழ்வு பெற்ற தொண்டர் பெரும் பதியோர் எதிர்கொள்ள பேணி வந்தார் #1031 மிக்க திருத்தொண்டர் தொழுது அணைய தாமும் தொழுது இழிந்து விடையவன் என்று எடுத்து பாடி மை குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னு திரு கோபுரத்து வந்து தாழ்ந்து தக்க திருக்கடைக்காப்பு சாற்றி தேவர்-தம் பெருமான் திரு வாயில் ஊடு சென்று புக்கு அருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்று எடுத்து படியின் மேல் பொருந்த வீழ்ந்தார் #1032 பொன் திரள்கள் போல் புரிந்த சடையார்-தம்-பால் பொங்கி எழும் காதல் மிக பொழிந்து விம்மி பற்றி எழும் மயிர் புளகம் எங்கும் ஆகி பரந்து இழியும் கண் அருவி பாய நின்று சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி தொழுது புறத்து அணைந்து அருளி தொண்டரோடும் ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் #1033 இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் பன்னு தொல் புகழ் திரு மயிலாபுரி பதியில் மன்னு சீர் பெரும் வணிகர்-தம் தோன்றலார் திறத்து முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம் #1034 அரு நிதி திறம் பெருக்குதற்கு அரும் கலம் பலவும் பொரு கடல் செல போக்கி அ பொருள் குவை நிரம்ப வரும் மரக்கலம் மனை படப்பு அணைக்கரை நிரைக்கும் இருநிதி பெரும் செல்வத்தின் எல்லை_இல் வளத்தார் #1035 தம்மை உள்ளவாறு அறிந்த பின் சங்கரற்கு அடிமை மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கது ஓர் அன்பால் பொய்ம்மை நீக்கிய பொருள் இது என கொளும் உள்ள செம்மையே புரி மனத்தினார் சிவநேசர் என்பார் #1036 கற்றை வார் சடை முடியினார் அடியவர் கலப்பில் உற்ற செய்கையில் ஒழிவு இன்றி உருகிய மனமும் பற்று இலா நெறி பரசமயங்களை பாற்றும் செற்றம் மேவிய சீலமும் உடையாராய் திகழ்வார் #1037 ஆன நாள் செல அரு_மறை கவுணியர் பெருமான் ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய ஏனை வெம் சமண் சாக்கியம் இழித்து அழித்ததுவும் ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் #1038 செல்வம் மல்கிய சிரபுர தலைவர் சேவடி கீழ் எல்லை இல்லது ஓர் காதலின் இடையறா உணர்வால் அல்லும் நண்பகலும் புரிந்தவர் அருள் திறமே சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் #1039 நிகழும் ஆங்கு அவர் நிதி பெரும் கிழவனின் மேலாய் திகழும் நீடிய திருவினில் சிறந்து உளர் ஆகி புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்து உளார் எனினும் மகவு இலாமையின் மகிழ் மனை வாழ்க்கையின் மருண்டு #1040 அரிய நீர்மையில் அரும் தவம் புரிந்து அரன் அடியார்க்கு உரிய அர்ச்சனை உலப்பு_இல செய்த அ நலத்தால் கரிய ஆம் குழல் மனைவியார் வயிறு எனும் கமலத்து தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் #1041 நல்ல நாள் பெற ஓரையின் நலம் மிக உதிப்ப பல் பெரும் கிளையுடன் பெரு வணிகர் பார் முழுதும் எல்லை_இல் தனம் முகந்து கொண்டு யாவரும் உவப்ப மல்லல் ஆவண மறுகிடை பொழிந்து உளம் மகிழ்ந்தார் #1042 ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் ஈறு_இலாத பூசனைகள் யாவையும் மிக செய்து மாறு_இலா மறையவர்க்கு வேண்டின எல்லாம் அளித்து பேறு மற்று இதுவே எனும் பெரும் களி சிறந்தார் #1043 சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி வேத நீதியின் விதி உளி வழா வகை விரித்த சாதகத்தொடு சடங்குகள் தச தினம் செல்ல காதல் மேவிய சிறப்பினில் கடி விழா அயர்ந்தார் #1044 யாவரும் பெரு மகிழ்ச்சியால் இன்புற பயந்த பாவை நல் உறுப்பு அணி கிளர் பண்பு எலாம் நோக்கி பூவினாள் என வருதலில் பூம்பாவை என்றே மேவும் நாமமும் விளம்பினர் புவியின் மேல் விளங்க #1045 திங்கள்-தோறும் முன் செய்யும் அ திருவளர் சிறப்பின் மங்கலம் புரி நல்_வினை மாட்சியில் பெருக அங்கண் மா நகர் அமைத்திட ஆண்டு எதிர்அணைந்து தங்கு பேர் ஒளி சீறடி தளி நடை பயில #1046 தளரும் மின்னின் அங்குரம் என தமனிய கொடியின் வளர் இளம் தளிர் கிளை என மணி கிளர் ஒளியின் அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து இள வனப்பு இணை அனையவர்க்கு ஏழு ஆண்டு எய்த #1047 அழகின் முன் இளம் பதம் என அணி விளக்கு என்ன விழவு கொண்டு எழும் பேதையர் உடன் விளையாட்டில் கழலொடு அம்மனை கந்துகம் என்று மற்று இனைய மழலை மெல் கிளி குலம் என மனையிடை ஆடி #1048 பொன் தொடி சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து சிற்றில் முற்றவும் இழைத்து உடன் அடும் தொழில் சிறு சோறு உற்ற உண்டிகள் பயின்று ஒளி மணி ஊசல் ஆடி மற்றும் இன்புறு வண்டல் ஆட்டு அயர்வுடன் வளர #1049 தந்தையாரும் அ தளிர் இளம் கொம்பு அனாள் தகைமை இந்த வையகத்து இன்மையால் இன்புறு களிப்பு வந்த சிந்தையின் மகிழ்ந்து மற்று இவள் மணம் பெறுவன் அந்தம்_இல் என அரு நிதிக்கு உரியன் என்று அறைந்தார் #1050 ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனை தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் #1051 நெருப்பில் அஞ்சினார்-தங்களை நீரில் ஒட்டிய பின் மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்கள் ஏறியதும் விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி பொருப்பு வில்லியார் சாதனம் போற்றுவித்ததுவும் #1052 இன்னவாறு எலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்ப சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து மன்னு பூந்தராய் வள்ளலார்-தமை திசை நோக்கி சென்னி மேல் கரம் குவித்து வீழ்ந்து எழுந்து செந்நின்று #1053 சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் பெற்று எடுத்த பூம் பாவையையும் பிறங்கிய நிதியும் முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார் #1054 எல்லை_இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி முல்லை வெண் நகை முகிழ் முலையார் உடன் முடியாமல் மல்கு செல்வத்தின் வளமையும் மறை வளர் புகலி செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார் #1055 ஆற்று நாள்களில் அணங்கு அனார் கன்னிமாடத்தின் பால் தடம் பொழில் மருங்கினில் பனி மலர் கொய்வான் போற்றுவார் குழல் சேடியர் உடன் புறம் போந்து கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய #1056 அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் பொன் பிறங்கு நீர் புகலி காவலர்க்கு இது புணராது என்பது உள் கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் முன்பு அணைந்தது போல ஓர் முள் எயிற்று அரவம் #1057 மௌவல் மாதவி பந்தரில் மறைந்து வந்து எய்தி செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் கொவ்வை வாய் அவள் முகிழ் விரல் கவர்ந்தது குறித்து #1058 நாலு தந்தமும் என்புற கவர்ந்து நஞ்சு உகுத்து மேல் எழும் பணம் விரித்து நின்று ஆடி வேறு அடங்க நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ மாலை தீயிடை பட்டது போன்று உளம் மயங்கி #1059 தரையில் வீழ்தர சேடியர் வெருக்கொடு தாங்கி விரை செய் மாடத்தின் உள் கொடு புகுந்திட வணிகர் உரையும் உள்ளமும் நிலை அழிந்து உறு துயர் பெருக கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் #1060 விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் அடர்ந்த தீ விடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் திடம் கொள் மந்திரம் தியானம் பாவக நிலை முட்டி தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் #1061 மருந்தும் எண்_இல மாறு_இல செய்யவும் வலிந்து பொருந்து வல் விடம் ஏழு வேகமும் முறை பொங்கி பெரும் தடம் கண் மெல் கொடிஅனாள் தலை மிசை பிறங்கி திருந்து செய் வினை யாவையும் கடந்து தீர்ந்து_இலது-ஆல் #1062 ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இல ஆக மேவு காருட விஞ்சை வித்தகர் இது விதி என்று ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி பாவை மேல் விழுந்து அழுதனர் படர் ஒலி கடல் போல் #1063 சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் இந்த வெவ் விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட அந்தம்_இல் நிதி குவை என பறை அறைவித்தார் #1064 முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற அரசர் பாங்கு உளோர் உட்பட அவனி மேல் உள்ள கரை_இல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சி புரை_இல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திட போனார் #1065 சீரின் மன்னிய சிவநேசர் கண்டு உளம் மயங்கி காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர் சாரும் அவ்வளவும் உடல் தழலிடை அடக்கி சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் #1066 உடைய பிள்ளையார்க்கு என இவள்-தனை உரைத்ததனால் அடைவு துன்புறுவது அதற்கு இலையாம் நமக்கு என்றே இடர் ஒழிந்த பின் அடக்கிய என்பொடு சாம்பல் புடை பெருத்த கும்பத்தினில் புக பெய்து வைப்பார் #1067 கன்னிமாடத்தில் முன்பு போல் காப்புற அமைத்து பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் மன்னும் பொன் அர்¢ மாலைகள் அணிந்து வைத்தனர்-ஆல் #1068 மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்-தொறும் வழாமை பாலின் நேர் தரும் போனகம் பகல் விளக்கி இனைய சாலும் நன்மையில் தகுவன நாள்-தொறும் சமைத்தே ஏலுமா செய யாவரும் வியப்பு எய்தும் நாளில் #1069 சண்பை மன்னவர் திரு ஒற்றியூர் நகர் சார்ந்து பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்து இருந்த நண்பு மிக்க நல் வார்த்தை அ நல் பதி உள்ளோர் வண் புகழ் பெரு வணிகர்க்கு வந்து உரை செய்தார் #1070 சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே இன்ன தன்மையர் என ஒணா மகிழ் சிறந்து எய்த சென்னி வாழ் மதியார் திரு ஒற்றியூர் அளவும் துன்னு நீள் நடை காவணம் துகில் விதானித்து #1071 மகர தோரணம் வண் குலை கமுகொடு கதலி நிகர்_இல் பல் கொடி தாமங்கள் அணிபெற நிரைத்து நகர நீள் மறுகு யாவையும் நலம் புனைந்து அணியால் புகர்_இல் பொன் உலகம் இழிந்ததாம் என பொலிவித்தார் #1072 இன்னவாறு அணி செய்து பல் குறை அறுப்ப ஏவி முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் பொன் அடி தலம் தலை மிசை புனைவான் என்று எழுவார் அ நகர் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார் #1073 ஆய வேலையில் அரு_மறை புகலியர் பிரானும் மேய ஒற்றியூர் பணிபவர் வியன் நகர் அகன்று காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற #1074 மாறு_இல் வண் பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த நீறு சேர் தவ குழாத்தினை நீளிடை கண்டே ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று ஈறு_இலாத ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச #1075 காழி நாடரும் கதிர் மணி சிவிகை-நின்று இழிந்து சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் #1076 அ திறத்து முன் நிகழ்ந்தது திரு உள்ளத்து அமைத்து சித்தம் இன்புறும் சிவநேசர் தம் செயல் வாய்ப்ப பொய்த்த அ சமண் சாக்கியர் புறத்துறை அழிய வைத்த அ பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்து அருளி #1077 கங்கை வார் சடையார் கபாலீச்சரத்து அணைந்து துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி மங்கை பங்கர்-தம் கோயிலை வலம்கொண்டு வணங்கி செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் #1078 தேவ தேவனை திரு கபாலீச்சரத்து அமுதை பாவை பாகனை பரிவுறு பண்பினால் பரவி மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து நாவின் வாய்மையில் போற்றினார் ஞானசம்பந்தர் #1079 போற்றி மெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி நீற்றின் மேனியில் நிறை மயிர் புளகங்கள் நெருங்க கூற்று அடர்த்தவர் கோயிலின் புறம் போந்து அருளி ஆற்றும் இன் அருள் வணிகர் மேல்செல அருள்செய்வார் #1080 ஒருமை உய்த்த நல் உணர்வினீர் உலகவர் அறிய அருமையால் பெறு மகள் என்பு நிறைத்த அ குடத்தை பெரு மயானத்து நடம் புரிவார் பெரும் கோயில் திரு மதில் புறவாய்-தனில் கொணர்க என்று செப்ப #1081 அந்தம்_இல் பெரு மகிழ்ச்சியால் அவனி மேல் பணிந்து வந்து தம் திரு மனையினில் மேவி அம்மருங்கு கந்த வார் பொழில் கன்னிமாடத்தினில் புக்கு வெந்த சாம்பலோடு என்பு சேர் குடத்தை வேறு எடுத்து #1082 மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய ஆடல் மேவினார் திரு கபாலீச்சரம் அணைந்து நீடு கோபுரத்து எதிர் மணி சிவிகையை நீக்கி #1083 அங்கணாளர்-தம் அபிமுகத்தினில் அடி உறைப்பால் மங்கை என்பு சேர் குடத்தினை வைத்து முன் வணங்க பொங்கு நீள் புனல் புகலி காவலர் புவனத்து தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார் #1084 மாடம் ஓங்கிய மயிலை மா நகர் உளார் மற்றும் நாடு வாழ்பவர் நன்றி_இல் சமயத்தின் உள்ளோர் மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய நீடு தேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க #1085 தொண்டர்-தம் பெரும் குழாம் புடைசூழ்தர தொல்லை அண்டர் நாயகர் கோபுர வாயில் நேர் அணைந்து வண்டு வார் குழலாள் என்பு நிறைந்த மண் குடத்தை கண்டு தம்பிரான் கருணையின் பெருமையே கருதி #1086 இந்த மா நிலத்து இறந்துளோர் என்பினை பின்னும் நந்து நல் நெறிப்படுத்திட நன்மையாம் தன்மை அந்த என்பொடு தொடர்ச்சியாம் என அருள் நோக்கால் சிந்தும் அங்கம் அங்கு உடைய பூம்பாவை பேர் செப்பி #1087 மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும் அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல் விழா பொலிவு கண்டு ஆர்தல் உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் #1088 மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டு இட்ட என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் அன்ன மெய் திரு வாக்கு எனும் அமுதம் அ அங்கம் துன்ன வந்துவந்து உருவமாய் தொக்கது அ குடத்துள் #1089 ஆன தன்மையின் அ திரு பாட்டினில் அடைவே போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி ஏனை அ குடத்து அடங்கி முன் இருந்து எழுவதன் முன் ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார் #1090 தேற்றம்_இல் சமண் சாக்கிய திண்ணர் இ செய்கை ஏற்றது அன்று என எடுத்து உரைப்பார் என்ற போது கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் போற்று தாமரை போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள் #1091 எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திரு பாட்டு அடுத்த அம்முறை பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து தொடுத்த வெம் சமண் பாட்டினில் தோன்றிட கண்டு விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல் விரித்தார் #1092 ஆங்கனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் ஈங்கு இது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலை பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் ஓங்கிய ஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே #1093 தேவரும் முனிவர்-தாமும் திருவருள் சிறப்பு நோக்கி பூ வரு விரை கொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் யாவரும் இருந்த வண்ணம் எம்பிரான் கருணை என்றே மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் #1094 அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்தி பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் எங்கு உள செய்கை தான் மற்று என் செய்தவாறு இது என்று சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார் #1095 கன்னி-தன் வனப்பு-தன்னை கண்களால் முடிய காணார் முன்னுற கண்டார்க்கு எல்லாம் மொய் கரும் குழலின் பாரம் மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற #1096 பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் பூம்_கொடிக்கு அழகின் மாரி பொழிந்திட புயல் கீழ் இட்ட வாங்கிய வானவில்லின் வளர் ஒளி வனப்பு வாய்ப்ப #1097 பருவ மென் கொடிகள் பண்டு புரம் எரித்தவர் தம் நெற்றி ஒரு விழி எரியின் நீறாய் அருள் பெற உளனாம் காமன் செரு எழும் தனு அது ஒன்றும் சேம வில் ஒன்றும் ஆக இரு பெரும் சிலைகள் முன் கொண்டு எழுந்தன போல ஏற்ப #1098 மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள்-தன் கண்ணிணை வனப்பு காணில் காமரு வதன திங்கள் தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள ஒண் நிற கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ #1099 பணி வளர் அல்குல் பாவை நாசியும் பவள வாயும் நணிய பேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு மணி நிற கோபம் கண்டு மற்றது வவ்வ தாழும் அணி நிற காமரூபி அணைவதாம் அழகு காட்ட #1100 இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது வளம் மிகு வனப்பினாலும் வடிந்த தாள் உடைமையாலும் கிளர் ஒளி மகரம் வேறு கெழுமிய தன்மையாலும் அளவு_இல் சீர் அனங்கன் வென்றி கொடி இரண்டு அனைய ஆக #1101 வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த நல் பெரும் பணிலம் என்னும் நல் நிதி போன்று தோன்றி அல்பொலிவு கண்டார் தந்த அருட்கு அடையாளம் காட்ட #1102 எரி அவிழ் காந்தள் மென் பூ தலை தொடுத்து இசைய வைத்து திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற #1103 ஏர் கெழு மார்பில் பொங்கும் ஏந்து இளம் கொங்கை நாக கார் கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் ஆர் திருவருளில் பூரித்து அடங்கிய அமுத கும்ப சீர் கெழு முகிழை காட்டும் செவ்வியில் திகழ்ந்து தோன்ற #1104 காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை நேமி அம் புட்கள்-தம்மை அகப்பட நேரிது ஆய தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி #1105 பிணி அவிழ் மலர் மென் கூந்தல் பெண் அமுது அனையாள் செம்பொன் அணி வளர் அல்குல் தங்கள் அரவு செய் பிழையால் அஞ்சி மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி பணி உலகு ஆளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட #1106 வரி மயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி புரிவுறு பொன் பந்து என்ன பொலிந்து ஒளி விளங்கி பொங்க #1107 பூ அலர் நறும் மென் கூந்தல் பொன் கொடி கணைக்கால் காமன் ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் ஓவியர்க்கு எழுத ஒண்ணா பரட்டு ஒளி ஒளிருற்று ஓங்க #1108 கற்பகம் ஈன்ற செவ்வி காமரு பவள சோதி பொன் திரள் வயிர பத்தி பூம் துணர் மலர்ந்த போலும் நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் அற்புதம் எய்த தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றாள் #1109 எண்_இல் ஆண்டு எய்தும் வேதா படைத்தவள் எழிலின் வெள்ளம் நண்ணும் நான் முகத்தால் கண்டான் அவளினும் நல்லாள்-தன்-பால் புண்ணிய பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலி வேந்தர் கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் #1110 இன்னணம் விளங்கிய ஏர் கொள் சாயலாள் தன்னை முன் கண்ணுற கண்ட தாதையார் பொன் அணி மாளிகை புகலி வேந்தர் தாள் சென்னியில் பொருந்த முன் சென்று வீழ்ந்தனர் #1111 அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் பணம் புரி அரவு அரை பரமர் முன் பணிந்து இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ #1112 சீர் கெழு சிவ நேசர்-தம்மை முன்னமே கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி பார் கெழு மனையில் படர்-மின் என்றலும் #1113 பெருகிய அருள் பெறும் வணிகர் பிள்ளையார் மருவு தாமரை அடி வணங்கி போற்றி நின்று அருமையால் அடியனேன் பெற்ற பாவையை திருமணம் புணர்ந்து அருள்செய்யும் என்றலும் #1114 மற்று அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் கற்றை வார் சடையவர் கருணை காண்வர உற்பவிப்பித்தலால் உரை தகாது என #1115 வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார் அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் தணிவு_இல் நீள் பெரும் துயர் தணிய வேதநூல் துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் #1116 தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திட பள்ள நீர் செலவு என பரமர் கோயிலின் உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார் #1117 பான்மையால் வணிகரும் பாவை-தன் மணம் ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டு போய் வான் உயர் கன்னிமாடத்து வைத்தனர் தேன் அமர் கோதையும் சிவத்தை மேவினாள் #1118 தேவர் பிரான் அமர்ந்து அருளும் திரு கபாலீச்சரத்து மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி பாவலர் செந்தமிழ் பாடி பன்முறையும் பணிந்து எழுவார் #1119 தொழுது புறம் போந்து அருளி தொண்டர் குழாம் புடைசூழ பழுது_இல் புகழ் திரு மயிலை பதியில் அமர்ந்து அருளும் நாள் முழுது உலகும் தரும் இறைவர் முதல் தானம் பல இறைஞ்ச அழுது உலகை வாழ்வித்தார் அ பதியின் மருங்கு அகல்வார் #1120 திருத்தொண்டர் அங்கு உள்ளார் விடைகொள்ள சிவநேசர் வருத்தம் அகன்றிட மதுர மொழி அருளி விடைகொடுத்து நிருத்தர் உறை பிற பதிகள் வணங்கி போய் நிறை காதல் அருத்தியோடும் திருவான்மியூர் பணிய அணைவுற்றார் #1121 திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள அருகாக இழிந்து அருளி அவர் வணங்க தொழுது அன்பு தருவார்-தம் கோயில் மணி தடம் நெடும் கோபுரம் சார்ந்தார் #1122 மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திரு முன்றில் புக்கு அருளி கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து கொக்கு இறகும் மதி கொழுந்தும் குளிர் புனலும் ஒளிர்கின்ற செக்கர் நிகர் சடை முடியார் சேவடியின் கீழ் தாழ்ந்தார் #1123 தாழ்ந்து பல முறை பணிந்து தம்பிரான் முன் நின்று வாழ்ந்து களிவர பிறவி மருந்தான பெருந்தகையை சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்தி மிக இன்புற்றார் #1124 பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளி கண் பனிப்ப விரவு மயிர் புளகங்கள் மிசை விளங்க புறத்து அணைவுற்று அரவ நெடும் திரை வேலை அணி வான்மியூர் அதனுள் சிரபுரத்து புரவலனார் சில நாள் அங்கு இனிது அமர்ந்தார் #1125 அங்கண் அமர்வார் உலகு ஆள் உடையாரை அரும் தமிழின் பொங்கும் இசை பதிகங்கள் பல போற்றி போந்து அருளி கங்கை அணி மணி முடியார் பதி பலவும் கலந்து இறைஞ்சி செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் #1126 சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி நல் நெடும் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நல் கோயில் தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திரு முன்பு #1127 கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல் கொண்டு தலம் உற விழுந்து குலவு பெரு மகிழ்ச்சி உடன் மண்டிய பேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து அண்டர் பிரான் திரு மேனி வண்ணம் கண்டு அதிசயித்தார் #1128 இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று அரும் தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவி திருந்து மனம் கரைந்து உருக திருக்கடைக்காப்பு சாத்தி பெரும் தனி வாழ்வினை பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார் #1129 நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சி புறம் போந்து அங்கு உறைந்து அருளி பணிகின்றார் உமை_பாகர் அருள் பெற்று சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளி செந்துருத்தி அறைந்து அளிகள் பயில் சாரல் திருக்கழுக்குன்றினை அணைந்தார் #1130 சென்று அணையும் பொழுதின்-கண் திருத்தொண்டர் எதிர்கொள்ள பொன் திகழும் மணி சிவிகை இழிந்து அருளி உடன் போந்து மன்றல் விரி நறும் சோலை திருமலையை வலம்கொண்டு மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார் #1131 திருக்கழுக்குன்று அமர்ந்த செம் கனக தனி குன்றை பெருக்க வளர் காதலினால் பணிந்து எழுந்து பேராத கருத்தின் உடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று திருப்பதிகம் புனைந்து அருளி சிந்தை நிறை மகிழ் உற்றார் #1132 இன்புற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு_இல் பெருந்தொண்டருடன் மின் பெற்ற வேணியினார் அருள் பெற்று போந்து அருளி என்புற்ற மணி மார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து அன்புற்று மகிழ்ந்த திரு அச்சிறுபாக்கம் அணைந்தார் #1133 ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் என மொழியும் கோயில் திருப்பதிக இசை குலாவிய பாடலில் போற்றி மா தவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்று தீது அகற்றும் செய்கையினார் சில நாள் அமர்ந்து அருளி #1134 ஏறு அணிந்த வெல் கொடியார் இனிது அமர்ந்த பதி பிறவும் நீறு அணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்து இறைஞ்சி வேறு பல நதி கானம் கடந்து அருளி விரி சடையில் ஆறு அணிந்தார் மகிழ்ந்த திரு அரசிலியை வந்து அடைந்தார் #1135 அரசிலியை அமர்ந்து அருளும் அங்கண் அரசை பணிந்து பரசி எழு திரு புறவார் பனங்காட்டூர் முதலாய விரை செய் மலர் கொன்றையினார் மேவு பதி பல வணங்கி திரை செய் நெடும் கடல் உடுத்த திரு தில்லைநகர் அணைந்தார் #1136 எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் தில்லையில் வாழ் அந்தணர் மெய் திருத்தொண்டர் சிறப்பினொடு மல்கி எதிர் பணிந்து இறைஞ்ச மணி முத்தின் சிவிகை இழிந்து அல்கு பெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார் #1137 திரு எல்லையினை பணிந்து சென்று அணைவார் சேண் விசும்பை மருவி விளங்கு ஒளி தழைக்கும் வட திசை வாயிலை வணங்கி உருகு பெரும் காதலுடன் உள் புகுந்து மறையின் ஒலி பெருகி வளர் மணி மாட பெரும் திரு வீதியை அணைந்தார் #1138 நலம் மலியும் திரு வீதி பணிந்து எழுந்து நல் தவர்-தம் குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு வலமுற வந்து ஓங்கிய பேரம்பலத்தை வணங்கினார் #1139 வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால் அயனும் தொழும் பூத கணங்கள் மிடை திரு வாயில் பணிந்து எழுந்து கண் களிப்ப அணங்கு தனி கண்டு அருள அம்பலத்தே ஆடுகின்ற குணம் கடந்த தனி கூத்தர் பெரும் கூத்து கும்பிடுவார் #1140 தொண்டர் மனம் பிரியாத திருப்படியை தொழுது இறைஞ்சி மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து கண்ட பேரின் பத்தின் கரை_இல்லா நிலை அணைந்தார் #1141 அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தா காலத்தில் மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்து அருளி பொன் அணி மாளிகை வீதி புறத்து அணைந்து போது-தொறும் இன் இசை வண் தமிழ் பாடி கும்பிட்டு அங்கு இனிது இருந்தார் #1142 திருந்திய சீர் தாதையார் சிவபாதஇருதயரும் பொருந்து திரு வளர் புகலி பூசுரரும் மா தவரும் பெரும் திருமால் அயன் போற்றும் பெரும்பற்றப்புலியூரில் இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் #1143 ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் தாங்க_அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க ஓங்கு திரு தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆக தேன் கமழ் கொன்றை சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார் #1144 தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் அன்பு நெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடி போற்றி பொன் புரி செம் சடை கூத்தர் அருள் பெற்று போந்து அருளி இன்புறு தோணியில் அமர்ந்தார்-தமை வணங்க எழுந்தருள #1145 நல் தவர் தம் குழாத்தோடும் நம்பர் திரு நடம் செய்யும் பொன் பதியின் திரு எல்லை பணிந்து அருளி புறம் போந்து பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிற பதியும் புக்கு இறைஞ்சி கற்றவர்கள் பரவு திரு கழுமலமே சென்று அடைவார் #1146 பல் பதிகள் கடந்து அருளி பன்னிரண்டு பேர் படைத்த தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கி செல்வ மிகு பதி அதன் மேல் திருப்பதிகம் அருள்செய்வார் #1147 மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் என்னும் இசை சொல்_மாலை எடுத்து இயம்பி எழுந்தருளி புன்னை மணம் கமழ் புறவ புறம்பணையில் வந்து அணைந்தார் #1148 வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது காழி நகர் சேர்-மின் என கடை முடிந்த திருப்பதிகம் ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் #1149 சேண் உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் தான் நினைந்த ஆதரவின் தலைப்பாட்டு-தனை உன்னி நீள் நிலை கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சி புக்கு அருளி வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார் #1150 முன் இறைஞ்சி திருவருளின் முழு நோக்கம் பெற்று ஏறி பொன் இமய பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரை சென்னி மிசை குவித்த கரம் கொடு விழுந்து திளைத்து எழுந்து மன்னு பெரு வாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார் #1151 பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி விரவிய கண் அருவி நீர் வெள்ளத்தில் குளித்து அருளி அரவு அணிந்தார் அருள் பெருக புறம்பு எய்தி அன்பருடன் சிரபுரத்து பெருந்தகையார் தம் திரு மாளிகை சேர்ந்தார் #1152 மாளிகையின் உள் அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து தாள் பணியும் பெரும் கிளைக்கு தகுதியினால் தலையளிசெய்து ஆளுடைய தம் பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து நீள வரும் பேரின்பம் மிக பெருக நிகழும் நாள் #1153 காழி நாடு உடைய பிரான் கழல் வணங்கி மகிழ்வு எய்த ஆழியினும் மிக பெருகும் ஆசையுடன் திரு முருகர் வாழி திருநீலநக்கர் முதல் தொண்டர் மற்று எனையோர் சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் #1154 வந்தவரை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்து சண்பையர் கோன் அந்தம்_இல் சீர் அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பல பாடி #1155 பெரு மகிழ்ச்சியுடன் செல்ல பெரும் தவத்தால் பெற்றவரும் மருவு பெரும் கிளையான மறையவரும் உடன் கூடி திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு பருவம் இது என்று எண்ணி அறிவிக்க பாங்கு அணைந்தார் #1156 நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் கூட்டுவது மனம் கொள்வார் கோது_இல் மறை நெறி சடங்கு காட்டவரும் வேள்வி பல புரிவதற்கு ஓர் கன்னி-தணை வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள் #1157 மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் பெற்றம் உயர்த்தவர் அருள் முன் பெற்றதினால் இசையாது முற்றியது ஆயினும் கூடாது என்று அவர் முன் மொழிந்து அருள #1158 அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் இரு நிலத்து மறை வழக்கம் எடுத்தீர் நீர் ஆதலினால் வருமுறையால் அறு_தொழிலின் வைதிகமாம் நெறி ஒழுகும் திருமணம் செய்து அருளுதற்கு திரு உள்ளம் செய்யும் என #1159 மறை வாழ அந்தணர் வாய்மை ஒழுக்கம் பெருகும் துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் பிறை வாழும் திரு முடியில் பெரும் புனலோடு அரவு அணிந்த கறை வாழும் கண்டத்தார்-தமை தொழுது மனம் களித்தார் #1160 திருஞானசம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்கு தரு வாய்மை மறையவரும் தாதையரும் தாங்க_அரிய பெரு வாழ்வு பெற்றாராய் பிஞ்ஞகனார் அருள் என்றே உருகா நின்று இன்பமுறும் உள மகிழ்ச்சி எய்துவார் #1161 ஏதம்_இல் சீர் மறையவரில் ஏற்ற குலத்தோடு இசைவால் நாதர் திரு பெரு மணத்து நம்பாண்டார் நம்பி பெறும் காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் #1162 திருஞானசம்பந்தர் சீர் பெருக மணம் புணரும் பெரு வாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிக பேணி வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச தருவார் தண் பணை நல்லூர் சார்கின்றார் தாதையார் #1163 மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன் ஏக திக்கு நிகழ் திரு நல்லூர் பெரு மணத்தை சென்று எய்த தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் #1164 ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் அப்பு நிறை குடம் விளக்கு மறுகு எல்லாம் அணி பெருக்கி செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே எப்பொருளும் எய்தினேன் என தொழுது அங்கு எதிர்கொண்டார் #1165 எதிர்கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பமுறு மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்ப சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் முதிர் உணர்வின் மா தவரும் அணைந்த திறம் மொழிகின்றார் #1166 ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால் ஊனம்_இல் சீலத்து உம்-பால் மகள்_பேச வந்தது என ஆன பேர் அந்தணர்கள்-பால் அருள் உடைமை யாம் என்று வான் அளவு நிறைந்த பெரு மனம் மகிழ்ச்சியொடு மொழிவார் #1167 உம்முடைய பெரும் தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த அம்மை திரு முலை பாலில் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு எம்முடைய குல_கொழுந்தை யாம் உய்ய தருகின்றோம் வம்-மின் என உரைத்து மனம் மகிழ்ந்து செலவிடுத்தார் #1168 பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து கார் உலவு மலர் சோலை கழுமலத்தை வந்து எய்தி சீர் உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பி பார் குலவும் திருமணத்தின் பான்மையினை தொடங்குவார் #1169 திருமணம் செய் கலியாண திரு நாளும் திகழ் சிறப்பின் மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப பெருகு மண நாள் ஓலை பெரும் சிறப்பினுடன் போக்கி அருள்புரிந்த நல் நாளில் அணி முளை பாலிகை விதைத்தார் #1170 செல்வம் மலி திரு புகலி செழும் திரு வீதிகள் எல்லாம் மல்கு நிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே எல்லை_இலா ஒளி முத்து மாலைகள் எங்கணும் நாற்றி அல்கு பெரும் திரு ஓங்க அணி சிறக்க அலங்கரித்தார் #1171 அரும் தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்ய பொருந்து திரு நாள் ஓலை பொருவு இறந்தார் கொண்டு அணைய திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு வரும் தவத்தான் மகள் கொடுப்பார் வதுவை_வினை தொடங்குவார் #1172 மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி நல் நிலைமை திரு நாளுக்கு எழு நாளாம் நல் நாளில் பல் மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் #1173 சேண் உயரும் மாடங்கள் திரு பெருகு மண்டபங்கள் நீள் நிலைய மாளிகைகள் நிகர்_இல் அணி பெற விளக்கி காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி வாள் நிலவு மணி கடை-கண் மங்கல கோலம் புனைந்து #1174 நீடு நிலை தோரணங்கள் நீள் மருகு-தொறும் நிரைத்து மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடை போக்கி சேடு உயரும் வேதிகைகள் செழும் சாந்து கொடு நீவி பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் #1175 மன்றல் வினை திரு முளை நாள் தொடங்கி வரும் நாள் எல்லாம் முன்றில்-தொறும் வீதி-தொறும் முக நெடு வாயில்கள்-தொறும் நின்று ஒளிரும் மணி விளக்கு நிறை வாச பொன் குடங்கள் துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் #1176 எங்கணும் மெய் திருத்தொண்டர் மறையவர்கள் ஏனையோர் மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி பொங்கு திரு புகலி-தனில் நாள்-தோறும் புகுந்து ஈண்ட அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும் சிறப்பு மிக அளித்தார் #1177 மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப பொங்கிய நான்_மறை ஓசை கடல் ஓசை மிசை பொலிய தங்கு நறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையின் உடன் செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக #1178 எண் திசையில் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்க பண்ட நிறை சாலைகளும் பல வேறு விதம் பயில மண்டு பெரு நிதி குவைகள் மலை பிறங்கல் என மலிய உண்டி வினை பெரும் துழனி ஓவாத ஒலி ஓங்க #1179 மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற தாமரையோன் அனைய பெரும் தவ மறையோர்-தாம் எடுத்த பூ மருவு பொன் கலச புண்ணிய நீர் பொலிவு எய்த #1180 குங்குமத்தின் செழும் சேற்றின் கூட்டு அமைப்போர் இனம் குழும பொங்கு விரை புது கலவை புகை எடுப்போர் தொகை விரவ துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க எங்கும் மலர் பிணை புனைவோர் ஈட்டங்கள் மிக பெருக #1181 இனைய பல வேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர் நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் தனை இறைவர் தாம் ஏவ சமைத்தது போல் அமைந்து உளதால் #1182 மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும் நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் நீறு சேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் #1183 வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க ஓத நீர் உலகில் இயல் முறை ஒழுக்கமும் பெருக காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார் #1184 நகர் வலம் செய்து புகுந்த பின் நவ மணி அணைந்த புகர்_இல் சித்திரவிதன மண்டபத்தினில் பொலிய பகரும் வைதிக விதி சமாவர்த்தன பான்மை திகழ முற்றிய செம்மலார் திரு முன்பு சேர்ந்தார் #1185 செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின் வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த அம் பொன் வாச நீர் பொன் குடம் அரசு இலை தருப்பை பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் #1186 நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாச போது சாந்து அணி பூம் துகில் புணைந்த புண்ணியம் போல் மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி #1187 ஆர்வம் மிக்கு எழும் அன்பினால் மலர் அயன் அனைய சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் பார் வழிப்பட வரும் இருவினைகளின் பந்த சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த #1188 கண்ட மாந்தர்கள் கடி மணம் காண வந்து அணைவார் கொண்ட வல் வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே #1189 நிறைந்த கங்குலின் நிதி மழை விதி முறை எவர்க்கும் புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் பரந்த பேர் இருள் துரந்து வந்து தொழுதனன் பகலோன் #1190 அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார் தம் சிவ திருமணம் செய தவம் செய் நாள் என்று மஞ்சன தொழில் புரிந்து என மாசு இருள் கழுவி செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் #1191 பரம்பு தம் வயின் எங்கணும் உள்ள பல் வளங்கள் நிரம்ப முன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் தரம் கடந்தவர் தம் திரு கல்லியாணத்தின் வரம்பு_இல் தன் பயன் காட்டுவது ஒத்தது வையம் #1192 நங்கள் வாழ்வு என வரும் திருஞானசம்பந்தர் மங்கல திருமண எழுச்சியின் முழக்கு என்ன துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி #1193 அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை எவ்வுலகும் விளக்கு மா மண விழாவுடன் விரைந்து செல்வன போல் துளக்கு_இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி #1194 சந்த மென் மலர் தாது அணி நீறு மெய் தரித்து கந்தம் மேவும் வண்டு ஒழுங்கு எனும் கண்டிகை பூண்டு சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத மந்த சாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து #1195 எண் திசை திறத்து யாவரும் புகலி வந்து எய்தி மண்டும் அ திருமண எழுச்சியின் அணி வாய்ப்ப கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன வெண் துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு #1196 ஏல இ நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் காலை செய் வினை முற்றிய கவுணியர் பெருமான் மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி சீலம் ஆர் திருவருளினால் மணத்தின் மேல் செல்வார் #1197 காழி மா நகர் வேதியர் குழாத்தொடும் கலந்து சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல வாழி மா மறை முழங்கிட வளம் பதி வணங்கி நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் #1198 ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ள கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த வான துந்துபி முழக்குடன் மங்கல இயங்கள் #1199 சங்கொடு தாரை சின்னம் தனி பெரும் காளம் தாளம் வங்கியம் ஏனை மற்று மலர் துளை கருவி எல்லாம் பொங்கிய ஒலியின் ஓங்கி பூசுரர் வேத கீதம் எங்கணும் எழுந்து மல்க திருமணம் எழுந்தது அன்றே #1200 கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு-பால் மிக்க ஏதம்_இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு-பால் ஏத்தும் நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு-பால் ஆக #1201 விண்ணினை விழுங்க மிக்க வெண் துகில் பதாகை வெள்ளம் கண் வெறி படைப்ப மிக்க கதிர் விரி கவரி கானம் மண்ணிய மணி பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண #1202 சிகையொடு மான் தோல் தாங்கும் இடையும் ஆசானும் செல்வார் புகை விடும் வேள்வி செம் தீ இல்லுடன் கொண்டு போவார் தகைவு_இலா விருப்பின் மிக்க பதிகங்கள் விளம்பி சார்வார் வகை அறு பகையும் செற்ற மா தவர் இயல்பின் மல்க #1203 அறு வகை விளங்கும் சைவத்து அளவு_இலா விரதம் சாரும் நெறி வழி நின்ற வேடம் நீடிய தவத்தில் உள்ளோர் மறு_அறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோக குறி நிலை பெற்ற தொண்டர் குழாம் ஆகி ஏக #1204 விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் #1205 மற்று இவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி முற்ற இ தலத்தில் உள்ளோர் மொய்த்து உடன் படரும் போதில் அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணம் மேல் செல்லும் பொற்பு அமை மணத்தின் சாயை போன்று முன் பொலிய செல்ல #1206 தவ அரசு ஆள உய்க்கும் தனி குடை நிழற்ற சாரும் பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்து கொண்டு புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து சிவன் அமர்ந்து உறையும் நல்லூர் திரு பெருமணத்தை சேர்ந்தார் #1207 பெருமண கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் வரு மண திறத்தின் முன்னர் வழி எதிர்கொள்ள சென்று திருமணம் புணர எய்தும் சிரபுர செம்மலார்-தாம் இருள் மணந்து இலங்கும் கண்டத்து இறைவர்-தம் கோயில் புக்கார் #1208 நாதரை பணிந்து போற்றி நல் பொருள் பதிகம் பாடி காதல் மெய் அருள் முன் பெற்று கவுணியர் தலைவர் போந்து வேதியர் வதுவை கோலம் புனைந்திடவேண்டும் என்ன பூத நாயகர்-தம் கோயில் புறத்து ஒரு மடத்தில் புக்கார் #1209 பொன் குடம் நிறைந்த வாச புனித அஞ்சனம் நீராட்டி வில் பொலி வெண் பட்டு ஆடை மேதக விளங்க சாத்தி நல் திரு உத்தரீய நறும் துகில் சாத்தி நான பற்பல கலவை சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர் #1210 திருவடி மலர் மேல் பூத்த செழு நகை சோதி என்ன மருவிய தரள கோவை மணி சரி அணைய சாத்தி விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த பெருகு ஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி #1211 தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி #1212 ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி #1213 வாள் விடு வயிர கட்டு மணி விரல் ஆழி சாத்தி தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி #1214 திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர் ஒளி வடமும் சாத்தி பெருக்கிய வனப்பின் செவ்வி பிறங்கிய திரு ஆர் காதில் வருக்க வெண் தரள கொத்தின் வடி குழை விளங்க சாத்தி #1215 நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி ஏற்ப வைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார் #1216 இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை எவ்வுலகோரும் ஏத்த தொழுது தாம் எடுத்து பூண்டார் #1217 அழகினுக்கு அணியாம் வெண் நீறும் அஞ்சு_எழுத்தும் ஓதி சாத்தி பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி மழ_விடை_மேலோர் தம்மை மனம் கொள வணங்கி வந்து முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேல் கொண்ட போது #1218 எழுந்தன சங்க நாதம் இயம்பின இயங்கள் எங்கும் பொழிந்தன விசும்பில் விண் ஏர் கற்பக புது பூ_மாரி தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் #1219 படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் அடர் புனை செம்பொன் பாண்டில் அணி துகில் சதுக்கம் மல்க கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல வட நிரை அணிந்த முத்தின் மணி குடை நிழற்ற வந்தார் #1220 சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் ஏர் அணி காளம் சின்னம் இலங்கு ஒளி தாரை எல்லாம் பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று #1221 மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திரு நாமங்கள் எண்_இல பலவும் ஏத்தி சின்னங்கள் எழுந்தபோது அ அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப்பெற்ற புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க #1222 முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து பொற்புறும் சடங்கு முன்னர் பரிவுடன் செய்து அ வேலை #1223 செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் #1224 மா மறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர் சென்று மன்னும் தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த காமர் பொன் கலச நல் நீர் இருக்குடன் கலந்து வீச #1225 விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச மண்ணகம் நிறைந்த கந்த மந்தமாருதமும் வீச கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்களூடு புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார் #1226 பொன் அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப மன்னிய தரள பத்தி வளர் மணி சிவிகை-நின்றும் பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் #1227 மறை குல மனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம் நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் உறை பொலி கலவை ஏந்தி உடன் எதிர் ஏற்று நின்றார் #1228 ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில் ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி பாங்கு ஒளி பரப்ப நின்றார் பரசமயங்கள் வீழ்த்தார் #1229 எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் மதுரமங்கல முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து கதிர் மணி கரக வாச கமழ் புனல் ஒழுக்கி காதல் விதி முறை வலம்கொண்டு எய்தி மேவும் நல் வினைகள் செய்தார் #1230 மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்ல கங்கையின் கொழுந்து செம்பொன் இம வரை கலந்தது என்ன அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள் புக்கார் எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் #1231 அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை #1232 திருமகள் கொடுக்க பெற்ற செழு மறை முனிவர்-தாமும் அருமையான் முன் செய் மெய்ம்மை அரும் தவ மனைவியாரும் பெரு மகிழ்ச்சியினால் பாதம் விளக்குவார் பிள்ளையார் முன் உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் #1233 வந்து முன் எய்தி தான் முன் செய் மா தவத்தின் நன்மை நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் கந்தவார் குழலினார் பொன் கரக நீர் எடுத்து வார்ப்ப புந்தியால் நினை தியானம் புரி சடையான் என்று உன்னி #1234 விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர் தலை மேல் கொண்டு பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் உருப்பு ஒலி உதர துள்ளும் பூரித்தார் உவகை பொங்கி அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் #1235 பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் தரு முறை கோத்திரத்தின் தம் குலம் செப்பி என்-தன் அரு நிதி பாவையாரை பிள்ளையர்க்கு அளித்தேன் என்றார் #1236 நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண பெற்றவர் உடன் பிறந்தார் பெரு மண பிணை அன்னாரை சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் #1237 ஏகமாம் சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வல-பால் எய்தி நாகம் ஆர் பண பேர் அல்குல் நல் தவ கொழுந்து அன்னாரை மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை மேகமொடு இசையும் மின்னு கொடி என விளங்க வைத்தார் #1238 புனித மெய் கோல நீடு புகலியார் வேந்தர்-தம்மை குனி சிலை புருவ மென் பூம் கொம்பனார் உடனே கூட நனி மிக கண்ட போதின் நல்ல மங்கலங்கள் கூறி மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி #1239 பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் சித்திர விதானத்தின் கீழ் செழும் திருநீலநக்கர் முத்தமிழ் விரகர் முன்பு முதன் மறை முறையினோடு மெய்த்த நம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய #1240 மறை ஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த பொறை அணி முந்நூல் மார்பர் புகர்_இல் பொரிகை அட்டி இறைவரை ஏத்தும் வேலை எரி வலம்கொள்ள வேண்டி #1241 அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு ஒரு படும் உடைய பிள்ளையார் திரு உள்ளம்-தன்னில் விருப்புறும் அங்கியாவார் விடை உயர்த்தவரே என்று திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் #1242 மந்திர முறையால் உய்த்த எரி வலம் ஆக மாதர் தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் அந்தம்_இல் சிவன் தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க #1243 மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டி குல மணம் புரிவித்தார்-தம் கோயிலை நோக்கி வந்தார் #1244 சிவன் அமர்ந்து அருளும் செல்வ திரு பெருமணத்துள் எய்தி தவ நெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கி பவம் அற என்னை முன்னாள் ஆண்ட அ பண்பு கூட நவம் மலர் பாதம் கூட்டும் என்னும் நல் உணர்வு நல்க #1245 காதல் மெய் பதிகம் நல்லூர் பெரு மணம் எடுத்து கண்டோர் தீதுறு பிறவி பாசம் தீர்த்தல் செம்பொருளாக கொண்டு நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்பனே உன் பாத மெய் நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட #1246 தேவர்கள் தேவர்-தாமும் திருவருள்புரிந்து நீயும் பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்-பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்று மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி #1247 கோயில் உள் பட மேல் ஓங்கும் கொள்கையால் பெருகும் சோதி வாயிலை வகுத்து காட்ட மன்னு சீர் புகலி மன்னர் பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் #1248 ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று ஆன சீர் நமச்சிவாய திருப்பதிகத்தை அங்கண் வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக என்ன #1249 வரு முறை பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி உரு எனும் துயர கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் திருமணத்துடன் சேவித்து முன் செலும் சிறப்பினாலே மருவிய பிறவி நீங்க மன்னு சோதியினுள் புக்கார் #1250 சீர் பெருகு நீலநக்கர் திரு முருகர் முதல் தொண்டர் ஏர் கெழுவு சிவபாதஇருதயர் நம்பாண்டார் சீர் ஆர் திரு மெய் பெரும்பாணர் மற்று எனையோர் அணைந்துளோர் பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் #1251 அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கி சென்றோர்கள் மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினை பாசம் துணிவித்த உணர்வினராய் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார் #1252 ஆறு வகை சமயத்தில் அரும் தவரும் அடியவரும் கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும் ஈறு_இல் பெரும் சோதியின் உள் எல்லாரும் புக்கதன் பின் #1253 காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி தீது அகற்ற வந்து அருளும் திருஞானசம்பந்தர் நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள் புகுவார் போத நிலை முடிந்த வழி புக்கு ஒன்றி உடன் ஆனார் #1254 பிள்ளையார் எழுந்தருளி புக்கு அதன் பின் பெரும் கூத்தர் கொள்ள நீடிய சோதி குறி நிலை அ வழி கரப்ப வள்ளலார்-தம் பழைய மண கோயில் தோன்றுதலும் தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் #1255 கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதல் ஆனோர் எண்_இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார் #1256 அரும் தமிழாகரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணி மேல் பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் வரும் தகைமை கலிக்காமனார் செய்கை வழுத்துவேன் மேல் @2 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் #1 நீடு வண் புகழ் சோழர் நீர் நாட்டிடை நிலவும் மாடு பொன் கொழி காவிரி வட கரை கீழ்-பால் ஆடு பூம் கொடி மாடம் நீடிய அணி நகர்-தான் பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் #2 இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு #3 விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடு வீதி முழவு அறாதன மொய் குழலியர் நட அரங்கம் மழவு அறாதன மங்கலம் பொலி மணி முன்றில் உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இரும் குடிகள் #4 நீரினில் பொலி சடை முடி நெற்றி நாட்டத்து காரினில் திகழ் கண்டர்-தம் காதலோர் குழுமி பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர் தாள் பரவும் சீரின் மிக்கது சிவபுரி என தகும் சிறப்பால் #5 இன்ன வாழ் பதி அதனிடை ஏயர் கோ குடி-தான் மன்னிய நீடிய வளவர் சேனாபதி குடி ஆம் தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினது-ஆல் #6 அங்கண் மிக்க அ குடியினில் அவதரித்து உள்ளார் கங்கை வாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் தங்கள் நாயகர் அடி பணிவார் அடி சார்ந்து பொங்கு காதலின் அவர் பணி போற்றுதல் புரிந்தார் #7 புதிய நாள் மதி சடை முடியார் திரு புன்கூர்க்கு அதிகம் ஆயின திருப்பணி அநேகமும் செய்து நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று துதியினால் பரவி தொழுது இன்புறுகின்றார் #8 நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு யாவர் இ செயல் புரிந்தனர் என்று அவர் இழிப்ப தேவர் தம்பிரான்-அவர் திறம் திருத்திய அதற்கு மேய வந்த அ செயலினை விளம்புவான் உற்றேன் #9 திருத்தொண்டத்தொகை அருளி திருநாவலூராளி கருத்து ஒன்று காதலினால் கனக மதில் திருவாரூர் ஒருத்தர் கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து பெருத்து எழும் மெய் அன்பினால் பிரியாது அங்கு உறையும் நாள் #10 தாளாண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த வேளாளர் குண்டையூர் கிழார் எனும் மேதக்கோர் வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று ஆளாக கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார் #11 செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின் இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் மன்னிய சீர் வன் தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் பல் நெடு நாள் பரவையார் மாளிகைக்கு படி சமைத்தார் #12 ஆன செயல் அன்பின் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார் #13 வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க இன்று குறை ஆகின்றது என் செய்கேன் என நினைந்து துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார் #14 ஆரூரன்-தனக்கு உன்-பால் நெல் தந்தோம் என்று அருளி நீர் ஊரும் சடை முடியார் நிதி கோமான் தனை ஏவ பேரூர் மற்று அதன் எல்லை அடங்கவும் நெல் மலை பிறங்கல் கார் ஊரும் நெடும் விசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியது-ஆல் #15 அ இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அது கண்டே எவ்வுலகின் நெல் மலை-தான் இது என்றே அதிசயித்து செவ்விய பொன் மலை வளத்தார் திருவருளின் செயல் போற்றி கொவ்வை வாய் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார் #16 நாவலூர் மன்னன் ஆர்க்கு நயனார் அளித்த நெல் இங்கு யாவரால் எடுக்கல் ஆகும் இ செயல் அவர்க்கு சொல்ல போவன் யான் என்று போந்தார் புகுந்தவாறு அருளி செய்து தேவர்-தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார் #17 குண்டையூர் கிழவர்-தாமும் எதிர்கொண்டு கோது_இல் வாய்மை தொண்டனார் பாதம்-தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்று முட்ட அண்டர் தம்பிரானார் தாமே நெல் மலை அளித்தார் என்று #18 மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல் மலையின் ஆக்கம் இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று இனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார் #19 விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலை தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி எண்_இல் சீர் பரவை இல்லத்து இ நெல்லை எடுக்க ஆளும் தண் நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றி ஒண்ணாது என்று #20 ஆள் இட வேண்டி கொள்வார் அருகு திரு பதி ஆன கோளிலியில் தம் பெருமான் கோயிலினை வந்து எய்தி வான் அளவு கண் மடவாள் வருந்தாமே எனும் பதிகம் மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் #21 பகல் பொழுது கழிந்து அதன் பின் பரவை மனை அளவு அன்றி மிக பெருகும் நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறைய புக பெய்து தருவன நம் பூதங்கள் என விசும்பில் நிகர்ப்பு அரியது ஒரு வாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால் #22 தம்பிரான் அருள் போற்றி தரையின் மிசை விழுந்து எழுந்தே உம்பரால் உணர்வு அரிய திரு பாதம் தொழுது ஏத்தி செம்பொன் நேர் சடையாரை பிற பதியும் தொழுது போய் நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார் #23 பூங்கோயில் மகிழ்ந்து அருளும் புராதனரை புக்கு இறைஞ்சி நீங்காத பெரும் மகிழ்ச்சி உடன் ஏத்தி புறம் போந்து பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றி இசைக்க பரவையார் ஓங்கு திரு மாளிகையினுள் அணைந்தார் ஆரூரர் #24 கோவை வாய் பரவையார் தாம் மகிழும்படி கூறி மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்ததன் பின் சேவின் மேல் உமையோடும் வருவார் தம் திருவருளின் ஏவலினால் அ இரவு பூதங்கள் மிக்கு எழுந்து #25 குண்டையூர் நெல் மலையை குறள் பூத படை கவர்ந்து வண்டு உலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே அண்டர்பிரான் திரு ஆரூர் அடங்கவும் நெல் மலை ஆக்கி கண்டவர் அற்புதம் எய்தும் காட்சி பெற அமைத்தன-ஆல் #26 அ விரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு எவ்வுலகில் விளைந்தன நெல் மலை இவை என்று அதிசயித்து நவ்வி மதர் திரு நோக்கின் நங்கை புகழ் பரவையார்க்கு இ உலகு வாழ வரும் நம்பி அளித்தன என்பார் #27 நீக்க_அரிய நெல் குன்று-தனை நோக்கி நெறி பலவும் போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் பாக்கியத்தின் திரு வடிவாம் பரவையார்க்கு இ நெல்லும் போக்கும் இடம் அரிது ஆகும் என பலவும் புகல்கின்றார் #28 வன் தொண்டர் தமக்கு அளித்த நெல் கண்டு மகிழ் சிறப்பார் இன்று உங்கள் மனை எல்லைக்கு உட்படும் நெல் குன்று எல்லாம் பொன் தங்கு மாளிகையில் புக பெய்து கொள்க என வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ் பரவையார் #29 அணி ஆரூர் மருகு அதனில் ஆளி அங்கு பறை அறைந்த பணியாலே மனை நிறைத்து பாங்கு எங்கும் நெல் கூடு அணியாமல் கட்டி நகர் களிகூர பரவையார் மணி ஆரம் புனை மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் #30 நம்பி ஆரூர் திருவாரூரில் நயந்து உறை நாள் செம்பொன் புற்று இடம் கொண்டு வீற்றிருந்த செழும் தேனை தம் பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார் #31 குலவு புகழ் கோட்டிலியார் குறை இரந்து தம் பதி-கண் அலகு_இல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடி வணங்கி நிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன் பின் நேர் இறைஞ்ச பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் #32 தேவர் ஒதுங்க திருத்தொண்டர் மிடையும் செல்வ திருவாரூர் காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி நாவலூரர் அருள் பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணி பாவை_பாகர்-தமை பணிந்து பாடும் விருப்பில் சென்று அணைவார் #33 மாலும் அயனும் உணர்வு அரியர் மகிழும் பதிகள் பல வணங்கி ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண ஏலும் வகையால் அலங்கரித்து அங்கு அவரும் எதிர்கொண்டு இனிது இறைஞ்சி கோல மணி மாளிகையின்-கண் ஆர்வம் பெருக கொடு புக்கார் #34 தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் #35 பூம் தண் பனி நீர் கொடு சமைத்த பொருவு_இல் விரை சந்தன கலவை வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான் மத சேறு தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்_இல் மணி பாசனத்து ஏந்தி #36 வேறுவேறு திருப்பள்ளி தாம பணிகள் மிக எடுத்து மாறு_இலாத மணி திரு ஆபரண வருக்கம் பல தாங்கி ஈறு_இல் விதத்து பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி ஆறு புனைந்தார் அடி தொண்டர் அளவு_இல் பூசை கொள அளித்தார் #37 செங்கோல் அரசன் அருள் உரிமை சேனாபதி ஆம் கோட்புலியார் நம் கோமானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினால் தம் கோ மனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சி தலைசிறந்த பொங்கு ஓதம் போல் பெரும் காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார் #38 ஆன விருப்பின் மற்று அவர்-தாம் அருமையால் முன் பெற்று எடுத்த தேன் ஆர் கோதை சிங்கடியார்-தமையும் அவர் பின் திரு உயிர்த்த மான் ஆர் நோக்கின் வன பகையார்-தமையும் கொணர்ந்து வன் தொண்டர் தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் #39 அடியேன் பெற்ற மக்கள் இவர் அடிமை ஆக கொண்டு அருளி கடி சேர் மலர் தாள் தொழுது உய்ய கருணை அளிக்க வேண்டும் என தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே மகண்மையா கொண்டார் பரவையார்-தம் கொழுநனார் #40 கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து காதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உள் கசிவால் அணைத்து உச்சி மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி நாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர் #41 வென்றி வெள் ஏறு உயர்த்து அருளும் விமலர் திரு கோபுரம் இறைஞ்சி ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் சென்று புக்கு பணிந்து திருப்பதிகம் பூணாண் என்று எடுத்து கொன்றை முடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலியாரை #42 சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின்னிடை சிங்கடியாரை பிறப்பித்து எடுத்த பிதா ஆக தம்மை நினைத்த பெற்றியினால் மறப்பு_இல் வகை சிங்கடி அப்பன் என்றே தம்மை வைத்து அருளி நிற பொற்பு உடைய இசை பாடி நிறைந்த அருள் பெற்று இறைஞ்சினார் #43 அங்கு-நின்றும் எழுந்தருளி அளவு_இல் அன்பின் உள் மகிழ செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி மங்கை பாகர் தம்மை பதிகம் வலிவலத்து கண்டேன் என்று எங்கும் நிகழ்ந்த தமிழ்_மாலை எடுத்து தொடுத்த இசை புனைவார் #44 நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர் என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்தருளி மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமை திருவாரூர் சென்று குறுகி பூங்கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து #45 இறைஞ்சி போந்து பரவையார் திரு மாளிகையில் எழுந்தருளி நிறைந்த விருப்பின் மேவும் நாள் நீடு செல்வ திருவாரூர் புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றி புற்று இடமாய் உறைந்த பெருமான் கழல் பிரியாது ஓவா இன்பம் உற்று இருந்தார் #46 செறி புன் சடையார் திருவாரூர் திரு பங்குனி உத்தர திரு நாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவு அறுக்க நிறையும் பொன் கொண்டு அணைவதற்கு நினைந்து நம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந்தருளி சென்று அங்கு எய்தினார் #47 சென்று விரும்பி திருப்புகலூர் தேவர் பெருமான் கோயில் மணி முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சி தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து நின்று பதிக இசை பாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார் #48 சிறிது பொழுது கும்பிட்டு சிந்தை முன்னம் அங்கு ஒழிய வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன் தொண்டர் அறிவு கூர்ந்த அன்பர் உடன் அணி முன்றிலின் ஓர் அருகு இருப்ப மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் #49 துயில் வந்து எய்த தம்பிரான் தோழர் அங்கு திருப்பணிக்கு பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய வெயில் உந்திய வெண் பட்டு அதன் மேல் விரித்து பள்ளி மேவினார் #50 சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் பொன் திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி #51 தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் கொண்டு கோயில் உள் புக்கு குறிப்பில் அடங்கா பேர் அன்பு மண்டு காதல் உற வணங்கி வாய்ந்த மதுர மொழி மாலை பண்டு அங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்து பாடினார் #52 பதிகம் பாடி திருக்கடைக்காப்பு அணிந்து பரவி புறம் போந்தே எதிர்_இல் இன்பம் இம்மையே தருவார் அருள் பெற்று எழுந்தருளி நிதியின் குவையும் உடன் கொண்டு நிறையும் நதியும் குறை மதியும் பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் #53 செய்ய சடையார் திருப்பனையூர் புறத்து திரு கூத்தொடும் காட்சி எய்த அருள் எதிர் சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி ஐயர்-தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள் பெற்று உடன்போந்தார் #54 வளம் மல்கிய சீர் திருப்பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி அளவு_இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர் தளவ முறுவல் பரவையார்-தம் மாளிகையில் புக தாமும் உளம் மன்னிய தம் பெருமானார்-தம்மை வணங்கி உவந்து அணைந்தார் #55 வந்து பரவை பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் அம் தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சி சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப்பாடியார்-தம் காவலனார் #56 பல நாள் அமர்வார் பரமர் திருவருளால் அங்கு-நின்றும் போய் சிலை மா மேரு வீரனார் திரு நன்னிலத்து சென்று எய்தி வலமா வந்து கோயிலின் உள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலம் ஆர்கின்ற தண் இயல் வெம்மையினான் என்னும் தமிழ்_மாலை #57 பாடி அங்கு வைகிய பின் பரமர் வீழிமிழலையினில் நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி நாடு மகிழ அவ்வளவு நடை காவணம் பாவாடைஉடன் மாடு கதலி பூகம் நிரை மல்க மணி தோரணம் நிரைத்து #58 வந்து நம்பி-தம்மை எதிர்கொண்டு புக்கார் மற்று அவரும் சிந்தை மலர்ந்து திரு வீழிமிழலை இறைஞ்சி சேண் விசும்பின் முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில்-தன்னை முன் வணங்கி பந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார் #59 படம் கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவிய விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகம் உடன் பரவி அடங்கல் வீழி கொண்டு இருந்தீர் அடியேனுக்கும் அருளும் என தடம் கொள் செம் சொல் தமிழ்_மாலை சாத்தி அங்கு சாரும் நாள் #60 வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர்-பால் தேசு மிக்க திருவருள் முன் பெற்று திருவாஞ்சியத்து அடிகள் பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் மாசு_இல் பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரை புத்தூர் அணைந்தார் #61 செழு நீர் நறையூர் நிலவு திரு சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி விழு நீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள மழுவோடு இள மான் கரதலத்தில் உடையார் திரு புத்தூர் வணங்கி தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் #62 புனிதனார் முன் புகழ் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில் பனி வெண் திங்கள் அணி சடையார் பதிகள் பலவும் பணிந்து போந்து இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடுதுறையில் #63 விளங்கும் திருவாவடுதுறையில் மேயார் கோயில் புடைவலம்கொண்டு உளம் கொண்டு உருகும் அன்பினுடன் உள் புக்கு இறைஞ்சி ஏத்துவார் வளம் கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் தளம் கொள் பிறப்பும் சிறப்பித்து தமிழ் சொல்_மாலை சாத்தினார் #64 சாத்தி அங்கு வைகு நாள் தயங்கும் அன்பருடன் கூட பேர்த்தும் இறைஞ்சி அருள் பெற்றும் பெண்_ஓர்_பாகத்து_அண்ணலார் தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் #65 மன்னு மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுர சொல் மலர்கள் பன்னி புனைந்து பணிந்து ஏத்தி பரவி போந்து தொண்டருடன் அ நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாசேச்சரத்தை முன்னி புக்கு வலம்கொண்டு முதல்வர் திரு தாள் வணங்கினார் #66 பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை திருவின் மலியும் சிவபுரத்து தேவர் பெருமான் கழல் வணங்கி உருகும் சிந்தை உடன் போந்தே உமையோர் பாகர் தாம் மகிழ்ந்து மருவும் பதிகள் பிற பணிந்து கலையநல்லூர் மருங்கு அணைந்தார் #67 செம்மை மறையோர் திரு கலையநல்லூர் இறைவர் சேவடி கீழ் மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவி தொழுது எழுவார் கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் மெய்ம்மை புராணம் பலவும் மிக சிறப்பித்து இசையின் விளம்பினார் #68 அங்கு-நின்று திரு குடமூக்கு அணைந்து பணிந்து பாடி போய் மங்கை_பாகர் வலஞ்சுழியை மருவி பெருகும் அன்பு உருக தங்கு காதல் உடன் வணங்கி தமிழால் பரசி அரசினுக்கு திங்கள் முடியார் அடி அளித்த திரு நல்லூரை சென்று அணைந்தார் #69 நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவர் நம்பர் பதி எல்லாம் இறைஞ்சி ஏத்தி போந்து இசையால் பரவும் தம்முடைய சொல் ஊதியமா அணிந்தவர்-தம் சோற்று துறையின் மருங்கு எய்தி அல்லூர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடி பணிவார் #70 அழல் நீர் ஒழுகி அனைய எனும் அம் சொல் பதிகம் எடுத்து அருளி கழல் நீடிய அன்பினில் போற்றும் காதல் கூர பரவிய பின் கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர் முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் #71 தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திரு ஐயாறு அதனை மேவி வணங்கி பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சி சேவில் வருவார் திரு ஆலம்பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு பாவு சயனத்து அமர்ந்து அருளி பள்ளிகொள்ள கனவின்-கண் #72 மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று குழகு ஆகிய தம் கோலம் எதிர்காட்டி அருள குறித்து உணர்ந்து நிழலார் சோலை கரை பொன்னி வட-பால் ஏறி நெடு மாடம் அழகார் வீதி மழபாடி அணைந்தார் நம்பி ஆரூரர் #73 அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணை குணம் கொள் அருளின் திறம் போற்றி கொண்ட புளகத்துடன் உருகி புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து #74 அன்னே உன்னை அல்லல் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தி தன் நேர் இல்லா பதிக மலர் சாத்தி தொழுது புறம்பு அணைந்து மன்னும் பதியில் சில நாள்கள் வைகி தொண்டருடன் மகிழ்ந்து பொன்னி கரையின் இரு மருங்கும் பணிந்து மேல்-பால் போதுவார் #75 செய்ய சடையார் திரு ஆனைக்காவில் அணைந்து திருத்தொண்டர் எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சி கோயில் உள் புகுந்தே ஐயர் கமல சேவடி கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து மெய்யும் முகிழ்ப்ப கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார் #76 மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர்-தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் உறையூர் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி #77 வளவர் பெருமான் மணி ஆரம் சாத்தி கொண்டு வரும் பொன்னி கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற அளவு_இல் திருமஞ்சன குடத்துள் அது புக்கு ஆட்ட அணிந்து அருளி தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்க சாற்றினார் #78 சாற்றி அங்கு தங்கு நாள் தயங்கும் பவள திரு மேனி நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறை விருப்பால் போற்றி அங்கு-நின்றும் போய் பொருவு_இல் அன்பர் மருவிய தொண்டு ஆற்றும் பெருமை திருப்பாச்சில் ஆச்சிரமம் சென்று அடைந்தார் #79 சென்று திரு கோபுரம் இறைஞ்சி தேவர் மலிந்த திருந்து மணி முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி நன்று பெருகும் பொருள் காதல் நயப்பு பெருக நாதர் எதிர் நின்று பரவி நினைந்த பொருள் அருளாது ஒழிய நேர் நின்று #80 அன்பு நீங்கா அச்சம் உடன் அடுத்த திரு தோழமை பணியால் பொன் பெறாத திரு உள்ளம் புழுங்க அழுங்கி புறம்பு ஒரு-பால் முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார் போல் என்பு கரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார் #81 நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடை புலம் கெழும் பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர் #82 இ வகை பரவி திருக்கடைக்காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழு நிதி குவை அளித்து அருள மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அ பதியிடை வைகி எ வகை மருங்கும் இறைவர்-தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள் #83 அ பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரை கண்டார் #84 கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆக குலவு சொல் கார் உலாவிய என்று அண்டர் நாயகரை பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார் #85 பரவி அ பதிக திருக்கடைக்காப்பு சாத்தி முன் பணிந்து அருள் பெற்று கரவு_இல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்து அருளி விரவிய ஈங்கோய் மலை முதல் ஆக விமலர் தம் பதி பல வணங்கி குரவலர் சோலை அணி திரு பாண்டி கொடு முடி அணைந்தனர் கொங்கில் #86 கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி சங்க வெண் குழையார் உழை வலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிட தொழுது புனிதர் பொன் மேனியை நோக்கி இங்கு இவர்-தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய் குறிப்பினில் எடுப்ப #87 அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு_எழுத்து அறிய எப்பொழுதும் எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்று பற்று இலேன் என செழும் தமிழால் நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாய திருப்பதிகம் #88 உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை நிலவிய சிந்தையுடன் திருவருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் பலவும் முன் பணிந்து பரமர் தாள் போற்றி போந்து தண் பனி மலர் படப்பை குலவும் அ கொங்கில் காஞ்சி-வாய் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால் #89 அ திரு பதியை அணைந்து முன் ஆண்டவர் கோயில் உள் புகுந்து மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க நித்தனார் தில்லை மன்று உள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர் காட்ட கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் #90 காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரை_இல் அன்பு என்பினை உருக்க பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்க தாண்டவம் புரியும் தம்பிரானாரை தலைப்பட கிடைத்த பின் சைவ ஆண்தகையாருக்கு அடுத்த அ நிலைமை விளைவை யார் அளவு அறிந்து உரைப்பார் #91 அ நிலை நிகழ்ந்த ஆர் அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம் பதி அதனிடை மருவி பொன் மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரி நடம் கும்பிட பெற்றால் என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் #92 ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் பாயும் நீர் நதியும் பல பல கடந்து பரமர் தம் பதி பல பணிந்து மேய வண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக்கூடலும் பணிந்து சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் #93 வீடு தரும் இ கற்குடியில் விழுமியாரை பணிந்து இறைஞ்சி நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடி பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சி தேடும் இருவர் காண்ப அரியார் திருவாறை மேல் சென்று அணைந்தார் #94 செம்பொன் மேரு சிலை வளைத்த சிவனார் ஆறை மேல் தளியில் நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள் கூட உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் இம்பர் வாழ இன்னம்பர் நகரை சேர எய்தினார் #95 ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் போரின் மலியும் கரி உரித்தார் மருவும் புறம் பயம் போற்ற சேரும் உள்ளம் மிக்கு எழ மெய் பதிகம் பாடி சென்றார் #96 அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழ போதும் என்று எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே #97 அ பதி கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய்நல்லூரினில் ஒப்பு_அரும் தனி வேதியன் பழ ஓலை காட்டி நின்று ஆண்டவர் இ பதி-கண் வந்து எய்த என்ன தவங்கள் என்று எதிர்கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் #98 நீடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரொடு உள் அணைந்து ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலி நின்று ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் #99 அங்கு நீடு அருள் பெற்று உள் ஆர்வம் மிக பொழிந்து எழும் அன்பினால் பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் அன்பரோடு எய்தினார் #100 வம்பு நீடு அலங்கல் மார்பின் வன் தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி தம்பிரான் அமர்ந்த தானம் பலப்பல சார்ந்து தாழ்ந்து கொம்பனார் ஆடல் நீடு கூடலையாற்றூர் சார #101 செப்ப_அரும் பதியில் சேரார் திரு முதுகுன்றை நோக்கி ஒப்பு_அரும் புகழார் சொல்லும் ஒருவழி உமையாளோடு மெய் பரம்பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் முப்புரிநூலும் தாங்கி நம்பிஆரூரர் முன்பு #102 நின்றவர்-தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய் தாழ்வார் இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்ன குன்ற வில்லாளி யாரும் கூடலையாற்றூர் ஏற சென்றது இ வழி-தான் என்று செல் வழி துணையாய் செல்ல #103 கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் வண்டலர் கொன்றையாரை வடிவு உடை மழு என்று ஏத்தி அண்டர்-தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினோடும் கூடலையாற்றூர் புக்கார் #104 கூடலையாற்றூர் மேவும் கொன்றை வார் சடையினார்-தம் பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க ஆடக பொதுவில் ஆடும் அறை கழல் வணங்கி போற்றி நீடு அருள் பெற்று போந்து திரு முதுகுன்றில் நேர்ந்தார் #105 தட நிலை கோபுரத்தை தாழ்ந்து முன் இறைஞ்சி கோயில் புடை வலம்கொண்டு புக்கு போற்றினர் தொழுது வீழ்ந்து நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்_மாலை தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று #106 நாதர்-பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் கோது_அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட #107 பனி மதி சடையார்-தாமும் பன்னிரண்டாயிரம் பொன் நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி தனி வரும் மகிழ்ச்சி பொங்க தாழ்ந்து எழுந்து அருகு சென்று கனி விடம் மிடற்றினார் முன் பின் ஒன்று கழறல் உற்றார் #108 அருளும் இ கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்ன தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி பொருளினை முழுதும் ஆரூர் குளத்தில் போய் கொள்க என்றார் #109 என்று தம்பிரானார் நல்கும் இன் அருள் பெற்ற பின்னர் வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் பொன் திரள் எடுத்து நீருள் புகவிட்டு போதுகின்றார் அன்று எனை வலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று #110 மேவிய காதல் தொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் காவியம் கண்டர் கூத்து கண்டு கும்பிடுவது என்று வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் #111 மாடு உள பதிகள் சென்று வணங்கி போய் மங்கை பாகர் நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்த கூத்தர் ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு சேடு உயர் மாடம் மன்னும் செழும் திரு வீதி சார்ந்தார் #112 பொன் திரு வீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் நல் திரு வாயில் நண்ணி நறை மலி அலங்கல் மார்பர் மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் #113 ஆடிய திரு முன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளி வளர் கனக மன்றில் நாடகம் செய்ய தாளை நண்ணுற உள் நிறைந்து நீடும் ஆனந்த வெள்ள கண்கள் நீர் நிறைந்து பாய #114 பரவு வாய் குளறி காதில் படி திரு படியை தாழ்ந்து விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை உரனுறு திருக்கூத்து உள்ளம் ஆர்தர பெருகி நெஞ்சில் கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள #115 மடித்து ஆடும் அடிமை-கண் என்று எடுத்து மன் உயிர்கட்கு அருளும் ஆற்றல் அடுத்து ஆற்று நல் நெறி-கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் தடுப்பானை பேரூரில் கண்ட நிலை சிறப்பித்து தனி கூத்து என்றும் நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி #116 மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே ஆளான வன் தொண்டர் அந்தணர்கள் தாம் போற்ற அமர்ந்து வைகி மாளாத பேர் அன்பால் பொன் பதியை வணங்கி போய் மறலி வீழ தாளாண்மை கொண்டவர்-தம் கருப்பறியலூர் வணங்கி சென்று சார்ந்தார் #117 கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த போற்றி இசைத்து புறத்து அணைந்த பதியில் வைகி புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி சாற்றிய மெய் திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்_மாலை புனைந்து ஆங்கு சாரும் நாளில் #118 கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் மண்ணி வளம் படி கரையை நண்ணி அங்கு மாது_ஒரு_பாகத்தவர் தாள் வணங்கி போற்றி எண்_இல் புகழ் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ்கொளிபுத்தூர் எய்தாது புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி #119 திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தி தேவர் பெருமானார்-தம் கோயில் வாயில் உரு பொலியும் மயிர் புளகம் விரவ தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் பொருப்பு அரையன் மட பாவை இட-பாலானை போற்றி இசைத்து புறம் போந்து தங்கி பூ மென் கருப்பு வயல் வாழ்கொளிபுத்தூரை நீங்கி கான் நாட்டு முள்ளூரில் கலந்த போது #120 கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடை மாலை மலர சாத்தி தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் #121 எ திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள்பாடியினை அடைவோம் என்னும் சித்த நிலை திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி அத்தர்-தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்று திரு வேள்விக்குடியில் எய்தி முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் #122 காட்டு நல் வேள்வி கோலம் கருத்துற வணங்கி காதல் நாட்டிய உள்ளத்தோடு நம்பிஆரூரர் போற்றி ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சி போந்து #123 எஞ்சாத பேர் அன்பில் திருத்தொண்டர் உடன் எய்தி நஞ்சு ஆரும் கறை மிடற்றார் இடம் பலவும் நயந்து ஏத்தி மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர் தடங்கள் புடைசூழும் செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் #124 செல்வ மலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும் மல்கு திரு கோபுரத்து வந்து இறைஞ்சி உள் புக்கு அங்கு எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து பல்கு திருத்தொண்டருடன் பரமர் திரு முன் அணைந்தார் #125 மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து தாவாத புகழ் பரவையார் திரு மாளிகை சார்ந்தார் #126 பொங்கு பெரு விருப்பினொடு புரி குழலார் பலர் போற்ற பங்கய கண் செம் கனிவாய் பரவையார் அடி வணங்கி எங்களையும் நினைந்து அருளி என இயம்ப இனிது அளித்து மங்கை நல்லார் அவரோடு மகிழ்ந்து உறைந்து வைகும் நாள் #127 நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல் நிதியம் தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் கோயிலின் மாளிகை மேல் பால் குளத்தில் அவர் அருளாலே போய் எடுத்து கொடு போத போதுவாய் என புகல #128 என்ன அதிசயம் இது-தான் என் சொன்னவாறு என்று மின் இடையார் சிறு முறுவல் உடன் விளம்ப மெய் உணர்ந்தார் நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் பொன் அடைய எடுத்து உனக்கு தருவது பொய்யாது என்று #129 ஆங்கு அவரும் உடன் போத அளவு இறந்த விருப்பின் உடன் பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரை புக்கு இறைஞ்சி ஓங்கு திரு மாளிகையை வலம் வந்து அங்கு உடன் மேலை பாங்கு திரு குளத்து அணைந்தார் பரவையார் தனி துணைவர் #130 மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி முற்று இழையார்-தமை நிறுத்தி முனைப்பாடி திரு நாடர் கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து அற்றை நாள் இட்டு எடுப்பார் போல் அங்கு தடவுதலும் #131 நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று மாற்றுறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்து அருள ஆற்றினில் இட்டு குளத்தில் தேடுவீர் அருள் இதுவோ சாற்றும் என கோல் தொடியார் மொழிந்து அருள தனி தொண்டர் #132 முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூம் குழல் பரவை தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில் பொன் செய்த மேனியினீர் என பதிகம் போற்றி இசைத்து #133 முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம் இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார் #134 ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை கூத்தா தந்து அருள்வாய் இ கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும் #135 கொந்து அவிழ் பூம் கொன்றை முடி கூத்தனார் திருவருளால் வந்து எழும் பொன் திரள் எடுத்து வரன் முறையால் கரை ஏற்ற அந்தரத்து மலர்_மாரி பொழிந்து இழிந்தது அவனி உள்ளோர் இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் என தொழுவார் #136 ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க நீலமிடற்றவர் அருளால் உரை தாழ பின்னும் நெடு மால் அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன் தொண்டர் #137 மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக்கொண்டு கரை ஏறினார் #138 கரை ஏறி பரவையார் உடன் கனக ஆனது எலாம் நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார் விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் #139 வந்து திரு மாளிகையின் உள் புகுந்து மங்கல வாழ்த்து அந்தம்_இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்ப சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் கந்த மலி மலர் சோலை நாவலர்-தம் காவலனார் #140 அணி ஆரூர் மணி புற்றின் அமர்ந்து அருளும் பரம்பொருளை பணிவார் அங்கு ஒரு நாளில் பாராட்டும் திருப்பதிகம் தணியாத ஆனந்தம் தலை சிறப்ப தொண்டருடன் துணிவு ஆய பொருள் வினவி தொழுது ஆடி பாடுவார் #141 பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி உள் நிறையும் மன களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப கண் நிறையும் புனல் பொழிய கரை இகந்த ஆனந்தம் எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார் #142 இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறு_இல் அரு_மறை பரவும் வன் புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே அன்புற்ற காதலுடன் அளவு_இறந்த பிற பதியும் பொன் புற்கு என்றிட ஒளிரும் சடையாரை தொழ போவார் #143 பரிசனமும் உடன் போத பாங்கு அமைந்த பதிகள்-தொறும் கரி உரிவை புனைந்தார்-தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தி துரிசு அறு நல் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்கு புரிவுறு மெய் தொண்டர் எதிர்கொள்ள புக்கு அணைந்தார் #144 விண் தடவு கோபுரத்தை பணிந்து கரம் மேல் குவித்து கொண்டு புகும் தண்ணலார் கோயிலினை வலம் செய்து மண்டிய பேர் அன்பினொடு மன்னும் திரு நள்ளாறர் புண்டரிக சேவடி கீழ் பொருந்த நிலம் மிசை பணிந்தார் #145 அங்கணரை பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் மங்குல் அணி மணி மாட திருக்கடவூர் வந்து எய்தி திங்கள் வளர் முடியார்-தம் திரு மயானமும் பணிந்து பொங்கும் இசை பதிகம் மருவார் கொன்றை என போற்றி #146 திரு வீரட்டானத்து தேவர் பிரான் சின கூற்றின் பொரு வீரம் தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி மரு ஈர தமிழ்_மாலை புனைந்து ஏத்தி மலை வளத்த பெரு வீரர் வலம் புரத்து பெருகு ஆர்வத்தொடும் சென்றார் #147 வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி உரை ஓசை பதிகம் எனக்கு இனி ஓதி போய் சங்கம் நிரையோடு துமி தூப மணி தீபம் நித்தில பூம் திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார் #148 தேவர் பெருமான்-தன்னை திருச்சாய்க்காட்டினில் பணிந்து பாவலர் செந்தமிழ்_மாலை திருப்பதிகம் பாடி போய் மேவலர்-தம் புரம் எரித்தார் வெண் காடு பணிந்து ஏத்தி நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளி திரு நகரில் #149 நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல் தமிழின் புனித நறும் தொடை புனைந்து திரு செம்பொன் பள்ளி முதல் பனி மதி சேர் சடையார் தம் பதி பலவும் பணிந்து போய் தனி விடை மேல் வருவார் தம் திரு நின்றியூர் சார்ந்தார் #150 நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி ஒன்றிய அன்பு உள் உருக பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்க பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம் சொல் திருப்பதிகம் அருள்செய்தார் #151 அ பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகல் இடத்தில் செப்ப_அரிய புகழ் நீடூர் பணியாது செல் பொழுதில் ஒப்பு_அரிய உணர்வினால் நினைந்து அருளி தொழல் உறுவார் மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் #152 மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது விடல் ஆமே எனும் காதல் விருப்புறும் அ திருப்பதிகம் அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி உடல் ஆரும் மயிர் புளகம் மிக பணிந்து அங்கு உறைகின்றார் #153 அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்து இறைஞ்சி கொங்கு அலரும் மலர் சோலை திரு கோலக்கா அணைய கங்கை சடை கரந்தவர்-தாம் எதிர் காட்சி கொடுத்து அருள பொங்கு விருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார் #154 திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திரு தாளம் அளித்தபடி சிறப்பித்து பொருள் மாலை திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார் #155 மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று தாவாத புகழ் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி நாவார் முத்தமிழ் விரகர் நல் பதங்கள் பரவி போய் மேவார் தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார் #156 உண் நீரின் வேட்கையுடன் உறு பசியால் மிக வருந்தி பண் நீர்மை மொழி பரவையார் கொழுநர் வரும் பாங்கர் கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து தண்ணீரும் பொதி சோறும் கொண்டு வழி சார்கின்றார் #157 வேனில் உறு வெயில் வெம்மை தணிப்பதற்கு விரை குளிர் மென் பான் நல் மலர் தடம் போலும் பந்தர் ஒரு-பால் அமைத்தே ஆன மறை வேதியராய் அருள் வேடம் கொண்டிருந்தார் மான் அமரும் திரு கரத்தார் வன் தொண்டர்-தமை பார்த்து #158 குருகாவூர் அமர்ந்து அருளும் குழகர் வழி பார்த்திருப்ப திருவாரூர் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன் வருவார் அ பந்தரிடை புகுந்து திரு மறைவர்-பால் பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாயநம என பேசி #159 ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர் நோக்கி சால மிக பசித்தீர் இ பொதி சோறு தருகின்றேன் காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி ஏலம் நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்பு தீரும் என #160 வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்து அருளி பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி சென்று திருத்தொண்டருடன் திரு அமுது செய்து அருளி #161 எண் நிறைந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்த பண்ணிய பின் அ மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த உள் நிறைந்த ஆர் அமுதாய் ஒருகாலும் உலவாதே புண்ணியனார் தாம் அளித்த பொதி சோறு பொலிந்ததால் #162 சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து பொங்கி வரும் ஆதரவால் அவர் நாமம் புகழ்ந்து ஏத்தி அங்கு அயர்வால் பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயில கங்கை சடை கரந்தார் அ பந்தரொடும் தாம் கரந்தார் #163 சித்த நிலை திரியாத திருநாவலூர் மன்னர் அ தகுதியினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து மெய் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார் #164 குருகாவூர் அமர்ந்து அருளும் குழகனார் கோயிலினுக்கு அருகார் பொன் கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் புக்கு வரு காதல் கூர வலம்கொண்டு திரு முன் வணங்கி பருகா இன் அமுதத்தை கண்களால் பருகினார் #165 கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி உள் நாடும் பெரும் காதல் உடையவர்-தாம் புறத்து எய்தி நண்ணும் ஆர்வ தொண்டருடன் அங்கு இனிது நயந்து இருந்தார் #166 அ நாளில் தம் பெருமான் அருள் கூட பணிந்து அகன்று மின் ஆர் செம் சடை முடியார் விரும்பும் இடம் பல வணங்கி கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் #167 சீர் வளரும் திரு தில்லை திரு வீதி பணிந்து புகுந்து ஏர் வலர் பொன் திரு மன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சி பார் வளர மறை வளர்க்கும் பதி-அதனில் பணிந்து உறைவார் போர் வளர் மேரு சிலையார் திரு தினைமாநகர் புகுந்தார் #168 திரு தினைமாநகர் மேவும் சிவ கொழுந்தை பணிந்து போய் நிருத்தனார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கி பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர் கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் #169 திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு வரு நாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள் அணைய செரு நாகத்து உரி புனைந்தார் செழும் கோயில் உள் அணைந்தார் #170 மேவிய அ தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடி கமலத்து அருள் போற்றி கோவலன் நான்_முகன் எடுத்து பாடியே கும்பிட்டார் #171 நலம் பெருகும் அ பதியில் நாடி அன்பொடு நயந்து குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து சலம் பெருகும் சடை முடியார் தாள் வணங்கி அருள் பெற்று பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் #172 தண்டகமாம் திரு நாட்டு தனி விடையார் மகிழ் இடங்கள் தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே எண் திசையார் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார் #173 தேன் ஆர்ந்த மலர் சோலை திருக்கழுக்குன்றத்து அடியார் ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்து அருளி தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி பா நாடும் இன் இசையின் திருப்பதிகம் பாடினார் #174 பாடிய அ பதியின்-கண் இனிது அமர்ந்து பணிந்து போய் நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்-தனை நண்ணி ஆடக மா மதில் புடைசூழ் ஆல கோயிலின் அமுதை கூடிய மெய் அன்பு உருக கும்பிட்டு புறத்து அணைந்தார் #175 அணைந்து அருளும் அ வேலை அமுது செயும் பொழுதாக கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை தணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திரு வாயில் புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடி புரவலனார் #176 வன் தொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்து ஆனார் மின் தங்கு வெண் தலை ஓடு ஒழிந்து ஒரு வெற்று ஓடு ஏந்தி அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் புறப்பட்டு சென்று அன்பர் முகம் நோக்கி அருள் கூற செப்புவார் #177 மெய் பசியால் மிக வருந்தி இளைத்து இருந்தீர் வேட்கை விட இப்பொழுதே சோறு இரந்து இங்கு யான் உமக்கு கொணர்கின்றேன் அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் என செப்பி அவர் கச்சூர் மனை-தோறும் சென்று இரப்பார் #178 வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க கண்டவர்கள் மனம் உருக கடும் பகல் போது இடும் பலிக்கு புண்டரிக கழல் புவி மேல் பொருந்த மனை-தொறும் புக்கு கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார் #179 இரந்து தாம் கொடு வந்த இன் அடிசிலும் கறியும் அரந்தை தரும் பசி தீர அருந்துவீர் என அளிப்ப பெருந்தகையார் மறையவர் தம் பேர் அருளின் திறம் பேண நிரந்த பெரும் காதலினால் நேர் தொழுது வாங்கினார் #180 வாங்கிய அ திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்த ஓங்கு தவ தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்ப ஆங்கு அருகு நின்றார் போல் அவர்-தம்மை அறியாமே நீங்கினார் எ பொருளும் நீங்காத நிலைமையினார் #181 திருநாவலூராளி சிவயோகியார் நீங்க வரு நாம மறையவனார் இறையவனார் என மதித்தே பெரு நாத சிலம்பு அணி சேவடி வருந்த பெரும் பகல் கண் உரு நாடி எழுந்தருளிற்று என் பொருட்டாம் என உருகி #182 முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்-தம் பெரும் கருணை அதுவாம் என்று அதிசயம் வந்து எய்த கண்ணீர் மழை அருவி புதுவார் புனலின் மயிர் புளகம் புதைய பதிகம் போற்றி இசைத்து மது வார் இதழி முடியாரை பாடி மகிழ்ந்து வணங்கினார் #183 வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கை பாகர் மகிழ்ந்த இடம் முந்தி தொண்டர் எதிர்கொள்ள புக்கு முக்கண் பெருமானை சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செம் சொல் தொடை புனைந்தே அந்தி செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார் #184 அன்று வெண்ணெய்நல்லூரில் அரியும் அயனும் தொடர் அரிய வென்றி மழ வெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து நின்று சபை முன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்-தாம் இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் #185 மல்கு மகிழ்ச்சி மிக பெருக மறுகு மணி தோரணம் நாட்டி அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர பல்கு தொண்டருடன் கூடி பதியின் புறம் போய் எதிர்கொண்டார் #186 ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி நீண்ட மதில் கோபுரம் கடந்து நிறை மாளிகை வீதியில் போந்து பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப ஈண்டு தொண்டர் பெருகு திரு ஏகாம்பரம் சென்று எய்தினார் #187 ஆழி நெடு மால் அயன் முதலாம் அமரர் நெருங்கு கோபுரம் முன் பூழியுற மண் மிசை மேனி பொருந்த வணங்கி புகுந்து அருளி சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு வாழி மணி பொன் கோயிலினுள் வந்தார் அணுக்க வன் தொண்டர் #188 கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆர தழுவி கொண்டு இருந்த மை உலாவும் கரும் நெடும் கண் மலையாள் என்றும் வழிபடு பூம் செய்ய கமல சேவடி கீழ் திருந்து காதலுடன் வீழ்ந்தார் #189 வீழ்ந்து போற்றி பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் வாழ்ந்த சிந்தை உடன் பாடி மாறா விருப்பில் புறம் போந்து சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார் #190 சீரார் காஞ்சி மன்னும் திரு காமகோட்டம் சென்று இறைஞ்சி நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திருமேற்றளி மேவி ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் #191 ஓண காந்தன்தளி மேவும் ஒருவர்-தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமை திறம் பேசி காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் யாணர் பதிகம் எடுத்து ஏத்தி எண்_இல் நிதி பெற்று இனிது இருந்தார் #192 அங்கண் அமர்வார் அனேகதங்காபதத்தை எய்தி உள் அணைந்து செம் கண் விடையார்-தமை பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்த தமிழ் தங்கும் இடமாம் என பாடி தாழ்ந்து பிறவும் தானங்கள் பொங்கு காதலுடன் போற்றி புரிந்த பதியில் பொருந்தும் நாள் #193 பாடல் இசையும் பாணியினால் பாவை தழுவ குழை கம்பர் ஆடல் மருவும் சேவடிகள் பரவி பிரியாது அமர்கின்றார் நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனம்காட்டூரில் வந்து அடைந்தார் #194 செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழ் பதிகம் நல்ல இசையின் உடன் பாடி போந்து புறம்பு நண்ணுவார் #195 மன்னும் திருமால் பேறு அணைந்து வணங்கி பரவி திருவல்லம் தன்னுள் எய்தி இறைஞ்சி போய் சாரும் மேல்-பால் சடை கற்றை பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கி பெருந்தொண்டர் சென்னி முகில் தோய் தடம் குவட்டு திரு திருக்காளத்தி மலை சேர்ந்தார் #196 தடுக்கலாகா பெரும் காதல் தலை நின்று அருளும் கண்ணப்பர் இடுக்கண் களைந்து ஆட்கொண்டு அருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறும் அடுப்ப திரு முன் சென்று எய்தி மலை மேல் மருந்தை வணங்கினார் #197 வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுர இசை அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் மணம் கொள் மலர் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில் #198 வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள் நிறைந்து திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி காதல் சிறந்து இருந்தார் #199 அங்கு சில நாள் வைகிய பின் அருளால் போந்து பெரு விடையார் தங்கும் இடங்கள் எனை பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ் பாடி பொங்கு புணரி கரை மருங்கு புவியுள் சிவலோகம் போல திங்கள் முடியார் அமர்ந்த திருவொற்றியூரை சென்று அடைந்தார் #200 அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள எண்_இல் பெருமை ஆதி புரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் வண்ண வீதி வாயில்-தொறும் வாழை கமுகு தோரணங்கள் சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் #201 வர மங்கல நல்லியம் முழங்க வாச மாலை அணி அரங்கில் புர மங்கையர்கள் நடம் ஆட பொழியும் வெள்ள பூ_மாரி அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பர் உடன் புகுந்தார் பிரமன் தலையில் பலி உவந்த பிரானார் விரும்பும் தொண்டர் #202 ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டி சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் கொற்ற மழ ஏறு உடையவர்-தம் கோயில் வாயில் எய்தினார் #203 வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்து வளர் கூனல் இளம் வெண் பிறை சடையார் கோயில் வலம்கொண்டு எதிர் குறுகி ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் #204 ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது_இல் அமுத இசை கூட பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்து பாடினார் #205 பாடி அறிவு பரவசமாம் பரிவு பற்ற புறம் போந்து நீடு விருப்பில் பெரும் காதல் நிறைந்த அன்பர் பலர் போற்ற தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திரு பாதம் கூடும் காலங்களில் அணைந்து பரவி கும்பிட்டு இனிது இருந்தார் #206 இந்த நிலமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்காக அம் தண் கயிலை மலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் வந்து புவி மேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன் தொண்டர் சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் #207 நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின் மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் பால் ஆதரவு தரும் மகளார் ஆகி பார் மேல் அவதரித்தார் ஆலாலம் சேர் கறை மிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார் #208 மலையான் மடந்தை மலர் பாதம் மறவா அன்பால் வந்த நெறி தலையாம் உணர்வு வந்து அணைய தாமே அரிந்த சங்கிலியார் அலையார் வேல் கண் சிறு மகளிர் ஆயத்தோடும் விளையாட்டு நிலை ஆயின அ பருவங்கள்-தோறும் நிகழ நிரம்புவார் #209 சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த சாரும் பதத்தில் தந்தையார் தம்-கண் மனைவியார்க்கு உரைப்பார் #210 வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உள்ளோர்க்கு இசையும் படிவம் அன்றி மேல் பட்ட பரிசாம் பான்மை அறிகிலோம் கடி சேர் மணமும் இனி நிகழும் காலம் என்ன கற்பு வளர் கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார் #211 தாயாரோடு தந்தையார் பேச கேட்ட சங்கிலியார் ஏயும் மாற்றம் அன்று இது எம்பெருமான் ஈசன் திருவருளே மேய ஒருவர்க்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று ஆய உணர்வு மயங்கி மிக அயர்ந்தே அவனி மேல் விழுந்தார் #212 பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்து பரிந்து எடுத்தே ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னே உற்றது என தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் #213 என்று தம்மை ஈன்று எடுத்தார் வினவ மறை விட்டு இயம்புவார் இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என் பரிசுக்கு இசையாது வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் சென்று திருவொற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என #214 அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும் வந்த உள்ளத்தினர் ஆகி மற்ற மாற்றம் மறைத்து ஒழுக பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் சிந்தை விரும்பி மகள்_பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார் #215 தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால் ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் #216 தையலார் சங்கிலியார் தம் திறத்து பேச தகா வார்த்தை உய்ய வேண்டும் நினைவு உடையார் உரையார் என்று அங்கு உலகு அறிய செய்த விதி போல் இது நிகழ சிறந்தார்க்கு உள்ளபடி செப்பி நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார் #217 அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவர்-ஆல் வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்று ஒன்றும் குணங்கள் இவையாம் இனி இவள் தான் குறித்தபடியே ஒற்றிநகர் பணம் கொள் அரவ சடையார்-தம்-பால் கொண்டு அணைவோம் என பகர்வார் #218 பண் ஆர் மொழி சங்கிலியாரை நோக்கி பயந்தாரொடும் கிளைஞர் தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று #219 பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே மற்று செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார்-தாம் சொற்ற வண்ணம் செய துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் செற்ற சிலையார் திருவொற்றியூரில் கொண்டு சென்று அணைந்தார் #220 சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயில் உள் புகுந்து துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் கன்னிமாடம் மருங்கு அமைத்து கடி சேர் முறைமை காப்பு இயற்றி மன்னும் செல்வம் தக வகுத்து தந்தையார் வந்து அடி வணங்கி #221 யாங்கள் உமக்கு பணி செய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி ஓங்கு கன்னிமாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார் தாங்கற்கு அரிய கண்கள் நீர் தாரை ஒழுக தரியாதே ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் #222 காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் பூத நாதர் கோயிலினில் காலம்-தோறும் புக்கு இறைஞ்சி நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்ய சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து #223 பண்டு கயிலை திருமலையில் செய்யும் பணியின் பான்மை மனம் கொண்ட உணர்வு தலை நிற்ப குலவு மென் கொடி அனையார் வண்டு மருவும் திரு மலர் மெல் மாலை காலங்களுக்கு ஏற்ப அண்டர் பெருமான் முடி சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள் #224 அந்தி வண்ணத்து ஒருவர் திருவருளால் வந்த ஆரூரர் கந்த மாலை சங்கிலியார் தம்மை காதல் மணம் புணர வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத முந்தை விதியால் வந்து ஒரு நாள் முதல்வர் கோயில் உள் புகுந்தார் #225 அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அங்கணரை பண்டை முறைமையால் பணிந்து பாடி பரவி புறம் போந்து தொண்டு செய்வார் திரு தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் புண்டரீக தடம் நிகழ் பூம் திரு மண்டபத்தின் உள் புகுந்தார் #226 அன்பு நாரா அஞ்சு_எழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே என்பு உள் உருக்கும் அடியாரை தொழுது நீங்கி வேறு இடத்து முன்பு போல திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணி கொடுத்து மின் போல் மறையும் சங்கிலியார்-தம்மை விதியால் கண்ணுற்றார் #227 கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை சேவார் கொடியார் திருத்தொண்டர் கண்ட போது சிந்தை நிறை காவாது அவர்-பால் போய் விழ தம்-பால் காமனார் துரந்த பூ வாளிகள் வந்துற வீழ தரியார் புறமே போந்து உரைப்பார் #228 இன்ன பரிசு என்று அறிவ_அரிது-ஆல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவி புதிய மதி தன்னுள் நீர்மையால் குழைத்து சமைத்த மின்னு கொடி போல்வாள் என்னை உள்ளம் திரிவித்தாள் யார்-கொல் என்று அங்கு இயம்புதலும் #229 அங்கு நின்றார் விளம்புவார் அவர்-தாம் நங்கை சங்கிலியார் பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன இருவரால் இ பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார் மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவளாம் என மருண்டார் #230 மின்னார் சடையார் தமக்கு ஆளாம் விதியால் வாழும் எனை வருத்தி தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே என் ஆர் உயிரும் எழில் மலரும் கூட பிணைக்கும் இவள்-தன்னை பொன் ஆர் இதழி முடியார்-பால் பெறுவேன் என்று போய் புக்கார் #231 மலர் மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்து அறியா நிலவு மலரும் திரு முடியும் நீடும் கழலும் உடையாரை உலகம் எலாம் தாம் உடையாராயும் ஒற்றியூர் அமர்ந்த இலகு சோதி பரம்பொருளை இறைஞ்சி முன் நின்று ஏத்துவார் #232 மங்கை ஒரு-பால் மகிழ்ந்ததுவும் அன்றி மணி நீள் முடியின் கண் கங்கை-தன்னை கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த திங்கள் வதன சங்கிலியை தந்து என் வருத்தம் தீரும் என #233 அண்ணலார் முன் பலவும் அவர் அறிய உணர்த்தி புறத்து அணைந்தே எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆமாறு எண்ணும் என் நெஞ்சில் திண்ணம் எல்லாம் உடைவித்தாள் செய்வது ஒன்றும் அறியேன் யான் தண் நிலா மின் ஒளிர் பவள சடையீர் அருளும் என தளர்வார் #234 மதி வாள் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்ப கதிரோன் மேலை கடல் காண மாலை கடலை கண்டு அயர்வார் முதிரா முலையார்-தம்மை மணம் புணர்க்க வேண்டி முளரி வளை நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்துநினைந்து அழிய #235 உம்பர் உய்ய உலகு உய்ய ஓல வேலை விடம் உண்ட தம்பிரான் ஆனார் வன் தொண்டர் தம்-பால் எய்தி சங்கிலியை இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும் தவத்து கொம்பை உனக்கு தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன #236 அன்று வெண்ணெய்நல்லூரில் வலிய ஆண்டு கொண்டு அருளி ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க இன்றும் இவளை மணம் புணர்க்க என்று நின்றீர் என போற்றி மன்றல் மலர் சேவடி இணை கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன் தொண்டர் #237 ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக்கு அருளி கருணையினால் நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறை மதியம் தீண்டு கன்னிமாடத்து சென்று திகழ் சங்கிலியாராம் தூண்டு சோதி விளக்கு அனையார்-தம்-பால் கனவில் தோன்றினார் #238 தோன்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் பேற்றுக்கு என் யான் செய்வது என பெரிய கருணை பொழிந்து அனைய நீற்று கோல வேதியரும் நேர் நின்று அருளி செய்கின்றார் #239 சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான் மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய்நல்லூரில் யாரும் அறிய யான் ஆள உரியான் உன்னை எனை இரந்தான் வார் கொள் முலையாய் நீ அவனை மனத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார் #240 ஆதி தேவர் முன் நின்று அங்கு அருளி செய்த பொழுதின்-கண் மாதரார் சங்கிலியாரும் மாலும் அயனும் அறிவு_அரிய சீத மலர் தாமரை அடி கீழ் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று வேத முதல்வர் முன் நடுக்கம் எய்தி தொழுது விளம்புவார் #241 எம்பிரானே நீர் அருளி செய்தார்க்கு உரியேன் யான் இமையோர் தம்பிரானே அருள் தலை மேல் கொண்டேன் தக்க விதி மணத்தால் நம்பி ஆரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமய கொம்பின் ஆகம் கொண்டீர்க்கு கூறும் திறம் ஒன்று உளது என்பார் #242 பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணி தொழுது உரைப்பார் மன்னும் திருவாரூரின்-கண் அவர் தாம் மகிழ்ந்து உறைவது என்னும் தன்மை அரிந்து அருளும் எம் பிராட்டி திரு முலை தோய் மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் #243 மற்று அவர்-தம் உரைகொண்டு வன் தொண்டர் நிலைமையினை ஒற்றிநகர் அமர்ந்த பிரான் உணர்ந்து அருளி உரைசெய்வார் பொன்_தொடியாய் உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி #244 வேய் அனைய தோளியார்-பால் நின்று மீண்டு அருளி தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து நீ அவளை மணம் புணரும் நிலை உரைத்தோம் அதற்கு அவள்-பால் ஆயது ஒரு குறை உன்னால் அமைப்பது உளது என்று அருள #245 வன் தொண்டர் மனம் களித்து வணங்கி அடியேன் செய்ய நின்ற குறையாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு ஒன்றி உடனே நிகழ்வது ஒரு சபதம் அவள் முன்பு சென்று கிடைத்து இ இரவே செய்க என அருள்செய்தார் #246 என் செய்தால் இது முடியும் அது செய்வன் யான் அதற்கு மின் செய்த புரி சடையீர் அருள் பெறுதல் வேண்டும் என முன் செய்த முறுவலுடன் முதல்வர் அவர் முகம் நோக்கி உன் செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்து அருள #247 வம்பு அணி மென் முலை அவர்க்கு மனம் கொடுத்த வன் தொண்டர் நம்பர் இவர் பிற பதியும் நயந்த கோலம் சென்று கும்பிடவே கடவேனுக்கு இது விலக்காம் என குறிப்பால் தம் பெருமான் திரு முன்பு தாம் வேண்டும் குறை இரப்பார் #248 சங்கரர் தாள் பணிந்து இருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் மங்கை அவள்-தனை பிரியா வகை சபதம் செய்வதனுக்கு அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுது கோயில் விட தங்கும் இடம் திரு மகிழ் கீழ் கொள வேண்டும் என தாழ்ந்தார் #249 தம்பிரான் தோழர் அவர் தாம் வேண்டி கொண்டு அருள உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் நம்பி நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள எம்பிரானே அரியது இனி எனக்கு என் என ஏத்தி #250 அஞ்சலி சென்னியில் மன்ன அருள் பெற்று புறம் போத செம் சடையார் அவர்-மாட்டு திருவிளையாட்டினை மகிழ்ந்தோ வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் #251 சங்கிலியார் தம் மருங்கு முன்பு போல் சார்ந்து அருளி நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே கொங்கு அலர் பூ மகிழின் கீழ் கொள்க என குறித்து அருள #252 மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் அற்றம் எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆக பெற்றது யான் என கண்கள் பெரும் தாரை பொழிந்து இழிய வெற்றி மழ_விடையார்-தம் சேவடி கீழ் வீழ்ந்து எழுந்தார் #253 தையலார் தமக்கு அருளி சடா மகுடர் எழுந்தருள எய்திய போது அதிசயத்தால் உணர்ந்து எழுந்த அ இரவின்-கண் செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தே கண் துயிலார் ஐயம் உடன் அருகு துயில் சேடியாரை அணைந்து எழுப்பி #254 நீங்கு துயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்து அறியும் அவர் தாம் கனவில் எழுந்தருளி தமக்கு அருளி செய்தது எலாம் பாங்கு அறிய மொழிய அவர் பயத்தின் உடன் அதிசயமும் தாங்கு மகிழ்ச்சியும் எய்த சங்கிலியார்-தமை பணிந்தார் #255 சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத கோயிலின் முன் காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர் #256 நின்றவர் அங்கு எதிர் வந்த நேர்_இழையார் தம் மருங்கு சென்று அணைந்து தம் பெருமான் திருவருளின் திறம் கூற மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் ஒன்றிய நாணொடு மடவாருடன் ஒதுங்கி உள் புகுந்தார் #257 அங்கு அவர் தம் பின் சென்ற ஆரூரர் ஆய்_இழையீர் இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்ப திங்கள் முடியார் திரு முன் போதுவீர் என செப்ப சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார் #258 எம்பெருமான் இதற்காக எழுந்தருளி இமயவர்கள் தம் பெருமான் திரு முன்பு சாற்றுவது தகாது என்ன நம் பெருமான் வன் தொண்டர் நாதர் செயல் அறியாதே கொம்பு அனையீர் யான் செய்வது எங்கு என்று கூறுதலும் #259 மாதர் அவர் மகிழ் கீழே அமையும் என மனம் அருள்வார் ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் ஆதலினால் உடன்படவே அமையும் என துணிந்து ஆகில் போதுவீர் என மகிழ் கீழ் அவர் போத போய் அணைந்தார் #260 தாவாத பெரும் தவத்து சங்கிலியாரும் காண மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து மேவாது இங்கு யான் அகலேன் என நின்று விளம்பினார் பூ ஆர் தண் புனல் பொய்கை முனைப்பாடி புரவலனார் #261 மேவிய சீர் ஆரூரர் மெய் சபதம் வினை முடிப்ப காவியின் நேர் கண்ணாரும் கண்டு மிக மனம் கலங்கி பாவியேன் இது கண்டேன் தம்பிரான் பணியால் என்று ஆவி சோர்ந்து அழிவார் அங்கு ஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார் #262 திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றி பொரு நாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள் புகுந்து இறைஞ்சி அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது என பெரு நாமம் எடுத்து ஏத்தி பெரு மகிழ்ச்சி உடன் போந்தார் #263 வார் புனையும் வன முலையார் வன் தொண்டர் போனதன் பின் தார் புனையும் மண்டபத்து தம்முடைய பணி செய்து கார் புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி ஏர் புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர #264 அன்று இரவே ஆதி புரி ஒற்றி கொண்டார் ஆட்கொண்ட பொன் திகழ் பூண் வன் தொண்டர் புரிந்த வினை முடித்து அருள நின்ற புகழ் திருவொற்றியூர் நிலவு தொண்டர்க்கு மன்றல் வினை செய்வதற்கு மனம் கொள்ள உணர்த்துவார் #265 நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலி தன்னை இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து உம்பர் வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலை மேல் கொண்டு எழுவார் #266 மண் நிறைந்த பெரும் செல்வத்து திருவொற்றியூர் மன்னும் எண் நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோர் உடன் ஈண்டி உள் நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூ_மழை பொழிய கண் நிறைந்த பெரும் சிறப்பில் கலியாணம் செய்து அளித்தார் #267 பண்டு நிகழ் பான்மையினால் பசுபதி-தன் அருளாலே வண்டு அமர் பூம்_குழலாரை மணம் புணர்ந்த வன் தொண்டர் புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் #268 யாழின் மொழி எழில் முறுவல் இரு குழை மேல் கடை பிறழும் மாழை விழி வன முலையார் மணி அல்குல் துறை படிந்து வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சி கண் ஊழியாம் ஒரு கணம் தான் அ ஊழி ஒரு கணம் ஆம் #269 இ நிலையில் பேர் இன்பம் இனிது அமர்வார் இறை உறையும் மன்னு புகழ் ஒற்றியூர் அதனில் மகிழ் சிறப்பினால் சென்னி மதி புனைவார்-தம் திரு பாதம் தொழுது இருந்தார் முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல #270 பொங்கு தமிழ் பொதிய மலை பிறந்து பூம் சந்தனத்தின் கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல் அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டு அருளும் வகை நினைந்தார் #271 வெண் மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்பெருமான் ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே பண் அமரும் மொழி பரவையார் பாடல் ஆடல்-தனை கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் #272 பூங்கோயில் அமர்ந்தாரை புற்று இடம் கொண்டு இருந்தாரை நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை பாங்காக தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார் #273 மின் ஒளிர் செம் சடையானை வேத முதல் ஆனானை மன்னு புகழ் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் #274 பின் ஒரு நாள் திருவாரூர்-தனை பெருக நினைந்து அருளி உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் தன்னை அகல புக்கார் தாம் செய்த சபதத்தால் முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் #275 செய்வதனை அறியாது திகைத்து அருளி நெடிது உயிர்ப்பார் மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் இ வினை வந்து எய்தியது ஆம் என என நினைந்து எம்பெருமானை எய்திய இ துயர் நீங்க பாடுவேன் என நினைந்து #276 அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது_ஓர்_பாகனார் மலர் பதம் உன்னி இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும் பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் #277 அங்கு நாதர் செய் அருள் அது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி #278 தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்து அருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரை கொண்ட வெம் துயர் களை என பரவி குறித்த காதலின் நெறி கொள வருவார் வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி காயும் நாகத்தார் கோயிலை அடைந்தார் #279 அணைந்த தொண்டர்கள் உடன் வலமாக அங்கண் நாயகர் கோயில் முன் எய்தி குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று வணங்கி நீர் மகிழ் கோயில் உளீரே என்ற வன் தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினார் ஏதிலார் போல #280 பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்து பெண் பாகம் விழை வடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார் #281 முன் நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழி மாலை பன்னும் இசை திருப்பதிகம் பாடிய பின் பற்று ஆய என்னுடைய பிரான் அருள் இங்கு இத்தனை-கொலாம் என்று மன்னு பெருந்தொண்டர் உடன் வணங்கியே வழி கொள்வார் #282 அங்கணர் தம் பதி அதனை அகன்று போய் அன்பருடன் பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி தங்குவார் அம்மை திரு தலையாலே வலம்கொள்ளும் திங்கள் முடியார் ஆடும் திருவாலங்காட்டின் அயல் #283 முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளி பன்னும் இசை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் அ நின்று வணங்கி போய் திருவூறல் அமர்ந்து இறைஞ்சி கன்னி மதில் மணி மாட காஞ்சி மா நகர் அணைந்தார் #284 தேன் நிலவு பொழில் கச்சி காமகோட்டத்தில் ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் ஆன திரு அறம் புரக்கும் அம்மை திரு கோயிலின் முன் வானில் வளர் திரு வாயில் வணங்கினார் வன் தொண்டர் #285 தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்து போய் தொல் உலகம் முழுதும் அளித்து அழிக்கும் முதல்வர் திரு ஏகம்பம் பழுது_இல் அடியார் முன்பு புக புக்கு பணிகின்றார் இழுதையேன் திரு முன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி #286 விண் ஆள்வார் அமுது உண்ண மிக்க பெரும் விடம் உண்ட கண்ணாளா கச்சி ஏகம்பனே கடையானேன் எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள வண்ணா கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார் #287 பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து செம் கயல் கண் மலை_வல்லி பணிந்த சேவடி நினைந்து பொங்கிய அன்பொடு பரவி போற்றிய ஆரூரருக்கு மங்கை தழுவ குழைந்தார் மறைந்த இட கண் கொடுத்தார் #288 ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து ஆலம் தான் உகந்தவன் என்று எடுத்து ஆடி பாடினார் #289 பாடி மிக பரவசமாய் பணிவார்க்கு பாவையுடன் நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சி சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு கூடிய மெய் தொண்டருடன் கும்பிட்டு இனிது அமர்வார் #290 மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி பூ மலிவார் சடையாரை போற்றி அருள் அது ஆக தே மலர் வார் பொழில் காஞ்சி திரு நகரம் கடந்து அகல்வார் பா மலர் மாலை பதிகம் திருவாரூர் மேல் பரவி #291 அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் எந்தை பிரான் திருவாரூர் என்று-கொல் எய்துவது என்று சந்த இசை பாடி போய் தாங்க_அரிய ஆதரவு வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார் #292 மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும் சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி பன்னு தமிழ்_தொடை சாத்தி பரவியே போந்து அணைந்தார் அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் #293 அங்கணரை ஆமாத்தூர் அழகர்-தமை அடி வணங்கி தங்கும் இசை திருப்பதிகம் பாடி போய் தாரணிக்கு மங்கலமாம் பெரும் தொண்டை வள நாடு கடந்து அணைந்தார் செம் கண் வளவன் பிறந்த சீர் நாடு நீர் நாடு #294 அ நாட்டின் மருங்கு திரு அரத்துறையை சென்று எய்தி மின் ஆரும் படை மழுவார் விரை மலர் தாள் பணிந்து எழுந்து சொல்_மாலை மலர் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி மன் ஆர்வ திருத்தொண்டருடன் மகிழ்ந்து வைகினார் #295 பரமர் திரு அரத்துறையை பணிந்து போய் பல பதிகள் விரவி மழ விடை உயர்த்தார் விரை மலர் தாள் தொழுது ஏத்தி உரவு நீர் தடம் பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி அரவு அணிந்தார் அமர்ந்த திருவாவடு தண் துறை அணைந்தார் #296 அங்க அணைவார்-தமை அடியார் எதிர்கொள்ள புக்கு அருளி பொங்கு திரு கோயிலினை புடை வலம்கொண்டு உள் அணைந்து கங்கை வாழ் சடையாய் ஓர் கண் இலேன் என கவல்வார் இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார் #297 திருப்பதிகம் கொடு பரவி பணிந்து திருவருளால் போய் விருப்பினொடும் திருத்துருத்தி-தனை மேவி விமலர் கழல் அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன் மேல் உற்ற பிணி வருத்தம் எனை ஒழித்து அருள வேண்டும் என வணங்குவார் #298 பரவியே பணிந்தவர்க்கு பரமர் திருவருள்புரிவார் விரவிய இ பிணி அடைய தவிப்பதற்கு வேறு ஆக வர மலர் வண்டு அறை தீர்த்த வட குளித்து குளி என்ன கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் #299 மிக்க புனல் தீர்த்தத்தின் முன் அணைந்து வேதம் எலாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தியார்-தமை தொழுது புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி அக்கணமே மணி ஒளி சேர் திரு மேனி ஆயினார் #300 கண்டவர்கள் அதிசயிப்ப கரை ஏறி உடை புனைந்து மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் எண் திசையும் அறிந்து உய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார் #301 பண் நிறைந்த தமிழ் பாடி பரமர் திருவருள் மறவாது எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி உள் நிறைந்த பதி பிறவும் உடையவர் தாள் வணங்கி போய் கண் நிறைந்த திருவாரூர் முன் தோன்ற காண்கின்றார் #302 அன்று திரு நோக்கு ஒன்றால் ஆர கண்டு இன்புறார் நின்று நிலம் மிசை வீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி வன் தொண்டர் திருவாரூர் மயங்கு மாலையில் புகுந்து துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் #303 பொங்கு திருத்தொண்டருடன் உள் அணைந்து புக்கு இறைஞ்சி துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே இங்கு எமது துயர் களைந்து கண் காண காட்டாய் என்று அங்கணர்-தம் முன் நின்று பாடி அரும் தமிழ் புணைந்தார் #304 ஆறு அணியும் சடையாரை தொழுது புறம் போந்து அங்கண் வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன் கூடி ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் #305 ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கி கோது_இல் இசையால் குருகு பாய என கோத்து எடுத்தே ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் #306 சீர் பெருகும் திரு தேவாசிரியன் முன் சென்று இறைஞ்சி கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து தார் பெருகு பூங்கோயில்-தனை வணங்கி சார்ந்து அணைவார் ஆர்வம் மிகு பெரும் காதலால் அவனி மேல் வீழ்ந்தார் #307 வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே வாழ்ந்த மலர் கண் ஒன்றால் ஆராமல் மனம் அழிவார் ஆழ்ந்த துயர் கடலிடை-நின்று அடியேனை எடுத்து அருளி தாழ்ந்த கருத்தினை நிரப்பி கண் தாரும் என தாழ்ந்தார் #308 திருநாவலூர் மன்னர் திருவாரூர் வீற்றிருந்த பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை பருகா இன் அமுதை கண்களால் பருகுதற்கு மருவு ஆர்வத்துடன் மற்றை கண் தாரீர் என வணங்கி #309 மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் மாளாமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானை தாள் ஆதரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று ஆளாம் திரு தோழமை திறத்தால் அம் சொல் பதிகம் பாடினார் #310 பூத முதல்வர் புற்று இடம் கொண்டு இருந்த புனிதர் வன் தொண்டர் காதல் புரி வேதனைக்கு இரங்கி கருணை திரு நோக்கு அளித்து அருளி சீத மலர் கண் கொடுத்து அருள செவ்வே விழித்து முகம் மலர்ந்து பாத மலர்கள் மேல் பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் #311 விழுந்தும் எழுந்தும் பல முறையால் மேவி பணிந்து மிக பரவி எழுந்த களிப்பினால் ஆடி பாடி இன்ப வெள்ளத்தில் அழுந்தி இரண்டு கண்ணாலும் அம் பொன் புற்றினிடை எழுந்த செம் தண் பவள சிவ கொழுந்தின் அருளை பருகி திளைக்கின்றார் #312 காலம் நிரம்ப தொழுது ஏத்தி கனக மணி மாளிகை கோயில் ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழிய புறம் போந்து சீலம் உடைய அன்பருடன் தேவாசிரியன் மருங்கு அணைந்தார் #313 நங்கை பரவையார்-தம்மை நம்பி பிரிந்து போன அதன் பின் தங்கு மணி மாளிகையின்-கண் தனிமை கூர தளர்வார்க்கு கங்குல் பகலாய் பகல் கங்குல் ஆகி கழியா நாள் எல்லாம் பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் #314 செம்மை நெறி சேர் திருநாவலூர் ஒற்றியூர் சேர்ந்து கொம்மை முலையார் சங்கிலியார் தம்மை குலவு மணம் புணர்ந்த மெய்ம்மை வார்த்தை தாம் அவர்-பால் விட்டார் வந்து கட்டு உரைப்ப தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார் #315 மென் பூம் சயனத்திடை துயிலும் மேவார் விழித்தும் இனிது அமரார் பொன் பூம் தவிசின் மிசை இனி இரார் நில்லார் செல்லார் புறம்பு ஒழியார் மன் பூ வாளி மழை கழியார் மறவார் நினையார் வாய் விள்ளார் என்பு ஊடுருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார் #316 ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர் கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் கோயில் முன் குறுக பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் போன பெருமை பரிசனங்கள் புகுதப்பெறாது புறம் நின்றார் #317 நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருவாரூரர் எதிர் சென்று மொழிவார் திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எலாம் ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் இன்று புறமும் சென்று எய்த பெற்றிலோம் என்று இறைஞ்சினார் #318 மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் உற்ற இதனுக்கு இனி என்னே செயல் என்று உணர்வார் உலகு இயல்பு கற்ற மாந்தர் சிலர்-தம்மை காதல் பரவையார் கொண்ட செற்ற நிலைமை அறிந்தவர்க்கு தீர்வு சொல்ல செல விட்டார் #319 நம்பி அருளால் சென்ற அவரும் நங்கை பரவையார் தமது பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் வெம்பு புலவி கடல் அழுந்தும் மின் நேர் இடையார் முன் எய்தி எம் பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார் #320 பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர் முன் மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் ஏதம் மருவும் அவர் திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சி புறம் போந்தார் #321 போந்து புகுந்தபடி எல்லாம் பூம் தண் பழன முனைப்பாடி வேந்தர் தமக்கு விளம்புதலும் வெருவுற்று அயர்வார் துயர் வேலை நீந்தும் புணையாம் துணை காணார் நிகழ்ந்த சிந்தை ஆகுலம் நெஞ்சில் காந்த அழிந்து தோய்ந்து எழார் கங்குல் இடை யாம கடலுள் #322 அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி பெருகு புவனம் சலிப்பு இன்றி பேயும் உறங்கும் பிறங்கு இருள்வாய் முருகு விரியும் மலர் கொன்றை முடி மேல் அரவும் இள மதியும் செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார் #323 முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய என்னை உடையாய் நினைந்த அருளாய் இந்த யாமத்து எழுந்தருளி அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யலாம் அன்றி பின்னை இல்லை செயல் என்று பெருமான் அடிகள்-தமை நினைந்தார் #324 அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய #325 தம் பிரானார் எழுந்தருள தாங்கற்கு_அரிய மகிழ்ச்சியினால் கம்பியா நின்ற அவயவங்கள் கலந்த புளகம் மயிர் முகிழ்ப்ப நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய அம்பிகா வல்லவர் செய்ய அடி தாமரையின் கீழ் விழுந்தார் #326 விழுந்து பரவி மிக்க பெரும் விருப்பினோடும் எதிர் போற்றி எழுந்த நண்பர்-தமை நோக்கி என் நீ உற்றது என்று அருள தொழுது தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசு இடைப்பட்டு அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆள வேண்டும் உமக்கு என்று #327 அடியேன் அங்கு திருவொற்றியூரில் நீரே அருள்செய்ய வடி வேல் ஒண் கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம் எல்லாம் கொடி ஏர் இடையாள் பரவை தான் அறிந்து தன்-பால் யான் குறுகில் முடிவேன் என்று துணிந்து இருந்தாள் என் நான் செய்வது என மொழிந்து #328 நாயன் நீரே நான் உமக்கு இங்கு அடியேன் ஆகில் நீர் எனக்கு தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி அவ்வளவும் போய் இ இரவே பரவையுறு புலவி தீர்த்து தாரும் என #329 அன்பு வேண்டும் தம் பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கி துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே பொன் செய் மணி பூண் பரவை-பால் போகின்றோம் என்று அருள்செய்தார் #330 எல்லை இல்லா களிப்பினராய் இறைவர் தாளில் விழுந்து எழுந்து வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன் தொண்டர் முல்லை முகை வெண் நகை பரவை முகில் சேர் மாடத்திடை செல்ல நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி என தொழுதார் #331 அண்டர் வாழ கருணையினால் ஆலகாலம் அமுது ஆக உண்ட நீல கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு_அரியர் வண்டு வாழும் மலர் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கி தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள #332 தேவாசிரியன் முறை இருக்கும் தேவர் எலாம் சேவித்து போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய ஓவா அணுக்க சேவகத்தில் உள்ளோர் பூத கண நாதர் மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக #333 அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அ இருடிகளும் மருவு நண்பின் நிதி கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்த தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத #334 மாலும் அயனும் காணாதார் மலர் தாள் பூண்டு வந்து இறைஞ்சும் காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த ஆலம் இருண்ட கண்டத்தான் அடி தாமரை மேல் சிலம்பு ஒலிப்ப நீல மலர் கண் பரவையார் திரு மாளிகையை நேர் நோக்கி #335 இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின் தொடர அறை கொள் திரை நீர் தொடர் சடையில் அரவு தொடர அரிய இளம் பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் மறைகள் தொடர வன் தொண்டர் மனமும் தொடர வரும் பொழுது #336 பெரு வீரையினும் மிக முழங்கி பிறங்கு மத குஞ்சரம் உரித்து மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் திரு வீதியினில் அழகர் அவர் மகிழும் செல்வ திருவாரூர் ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளதாம்-ஆல் #337 ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் கோல மணி மாளிகை வாயில் குறுகுவர் முன் கூட தம் பால் அங்கு அணைந்தார் புறம் நிற்ப பண்டே தம்மை அர்ச்சிக்கும் சீலம் உடைய மறை முனிவர் ஆகி தனியே சென்று அணைந்தார் #338 சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன் முன்பு நின்று பாவாய் திறவாய் என்று அழைப்ப நெறி மென்_குழலாரும் ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூசனை செய் துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து #339 பாதி மதி வாழ் முடியாரை பயில் பூசனையின் பணி புரிவார் பாதி இரவில் இங்கு அணைந்தது என்னே என்று பயம் எய்தி பாதி உமையாள் திரு வடிவில் பரமர் ஆவது அறியாதே பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் #340 மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை முன் நின்றாரை கண்டு இறைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்-கண் என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் #341 கங்கை நீர் கரந்த வேணி கரந்தவர் அருளி செய்வார் நங்கை நீ மாறாது செய்யின் நான் வந்து உரைப்பது என்ன அம் கயல்_விழியினாரும் அதனை நீர் அருளி செய்தால் இங்கு எனக்கு இசையும் ஆகில் இசையவாம் என்று சொல்லி #342 என் நினைந்து அணைந்து என்-பால் இன்னது என்று அருளி செய்தால் பின்னை அது இயலும் ஆகில் ஆம் என பிரானார்-தாமும் மின் இடை மடவாய் நம்பி இங்கு வர வேண்டும் என்ன நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் #343 பங்குனி திரு நாளுக்கு பண்டு போல் வருவார் ஆகி இங்கு எனை பிரிந்து போகி ஒற்றியூர் எய்தி அங்கே சங்கிலி தொடக்கு உண்டாருக்கு இங்கு ஒரு சார்வு உண்டோ நீர் கங்குலின் வந்து சொன்ன காரியம் அழகு இது என்றார் #344 நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த ஏதங்கள் மனத்து கொள்ளாது எய்திய வெகுளி நீக்கி நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது ஆதலின் மறுத்தல் செய்யல் அடாது என அருளி செய்தார் #345 அரு_மறை முனிவரான ஐயரை தையலார்-தாம் கருமம் ஈது ஆக நீர் இ கடை தலை வருகை மற்று உம் பெருமைக்கு தகுவது அன்று-ஆல் ஒற்றியூர் உறுதி பெற்றார் வருவதற்கு இசையேன் நீரும் போம் என மறுத்து சொன்னார் #346 நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை தம் பரிசு அறிய காட்டார் தனி பெரும் தோழனார்-தம் வெம்பு உறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் #347 தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி போதர தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரை காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்து உள் கொள்வார் #348 போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் ஆய என் அயர்வு-தன்னை அறிந்து எழுந்தருளினார் தாம் சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று #349 வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர் அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் பொழி மலர்_மாரி வீழ ஒதுங்குவார் புன்கண் உற்றார் #350 பரவையார்-தம்-பால் நம்பி தூதராம் பாங்கில் போன அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் இரவும்-தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட உரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார் #351 சென்று தம் பிரானை தாழ்ந்து திரு முகம் முறுவல் செய்ய ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி செய்து அணைந்தார் என்றே அன்று நீர் ஆண்டுகொண்ட அதனுக்கு தகவே செய்தீர் இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் #352 அ மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர் தாம் அருளி செய்வார் நம்மை நீ சொல்ல நாம் போய் பரவை-தன் இல்லம் நண்ணி கொம்மை வெம் முலையினாட்கு உன் திறம் எலாம் கூற கொள்ளாள் வெம்மை தான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார் #353 அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும் துண்ணென நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளி செய்த வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள் நாங்கள் எண்ணலார் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று #354 வானவர் உய்ய வேண்டி மறி கடல் நஞ்சை உண்டீர் தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் நான்_மறை சிறுவர்க்காக காலனை காய்ந்து நட்டீர் யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார் #355 ஆவதே செய்தீர் இன்று என் அடிமை வேண்டா விட்டால் பாவியேன்-தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என் நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார் #356 தம்பிரான் அதனை கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்-பால் போய் அ கொம்பினை இப்பொழுதே நீ குறுகுமா கூறுகின்றோம் வெம்புறு துயர் நீங்கு என்றார் வினை எல்லாம் விளைக்க வல்லார் #357 மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர்-தாமும் முயங்கிய கலக்கம் நீங்கி உம் அடி தொழும்பன் ஏனை பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற #358 அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக பொன் புரி சடையார் மாதர் புனித மாளிகையில் சென்றார் #359 மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு முதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதல்வர் ஆகும் அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சி கெட்டேன் எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார் #360 கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் கொண்டு அணைந்த வரை யான் உட்கொண்டிலேன் பாவியேன் என்று ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் #361 வெறியுறு கொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை அறிவுறு கோலத்தோடும் அளவு_இல் பல் பூத நாதர் செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல மறு_இல் சீர் பரவையார்-தம் மாளிகை புகுந்தார் வந்து #362 பாரிட தலைவர் முன்னம் பல் கண நாதர் தேவர் நேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே பேரருளாளர் எய்தப்பெற்ற மாளிகை-தான் தென்-பால் சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே #363 ஐயர் அங்கு அணைந்த போதில் அகிலலோகத்து உள்ளாரும் எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் மெய்யுறு நடுக்கத்தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்க செய்ய தாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார் #364 அரி அயற்கு அரியர்-தாமும் ஆய்_இழையாரை நோக்கி உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் முருகு அலர் குழலாய் இன்னம் முன்பு போல் மறாதே நின்-பால் பிரிவுற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார் #365 பெரும் தடம் கண்ணினாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி வருந்திய உள்ளத்தோடு மலர் கரம் குழல் மேல் கொண்டே அரும் திரு மறையோர் ஆகி அணைந்தீர் முன் அடியேன் செய்த இரும் தவ பயனாம் என்ன எய்திய நீரோ என்பார் #366 துளி வளர் கண்ணீர் வார தொழுது விண்ணப்பம் செய்வார் ஒளி வளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது அளி வரும் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றார் #367 நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போக திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் #368 ஆதியும் மேலும் மால் அயன் நாடற்கு அருளாதார் தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே வீதியில் ஆடி பாடி மகிழ்ந்தே மிடைகின்றார் பூதியில் நீடும் பல் கண நாத புகழ் வீரர் #369 அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த மின்_இடையார்-பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடும் கங்கை ததும்ப திருவாரூர் மன்னவனார் அ மறையவனார்-பால் வந்து உற்றார் #370 அன்பரும் என்-பால் ஆவி அளிக்கும்படி போனார் என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர பொன் புரி முந்நூல் மார்பினர் செல்ல பொலி வீதி முன்பு உற நேரும் கண் இணை தானும் முகிழார்-ஆல் #371 அ நிலைமை-கண் மன்மதன் வாளிக்கு அழிவார்-தம் மன் உயிர் நல்கும் தம் பெருமானார் வந்து எய்த முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் #372 எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர் செய்யும் கொம்பு அனையாள் பால் என் கொடு வந்தீர் குறை என்ன தம் பெருமானும் தாழ் குழல் செற்றம் தணிவித்தோம் நம்பி இனி போய் மற்று அவள்-தன்-பால் நணுகு என்ன #373 நந்தி பிரானார் வந்து அருள்செய்ய நலம் எய்தும் சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தி திகழ்கின்றார் பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் எந்தை பிரானே என் இனி என்-பால் இடர் என்றார் #374 என்று அடி வீழும் நண்பர்-தம் அன்புக்கு எளிவந்தார் சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் பொன் திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ #375 தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது #376 முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப மின் திகழ் பொலம் பூ_மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல் செய் மதுர சீதம் சீகரம் கொண்டு மந்த தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட #377 மாலை தண் கலவை சேறு மான் மத சாந்து பொங்கும் கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள சாலும் மெய் கலன்கள் கூட சாத்தும் பூண் ஆடை வர்க்கம் பாலன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல #378 இ வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் மை வளர் நெடும் கணாரும் மாளிகை அடைய மன்னும் செய் வினை அலங்காரத்து சிறப்பு அணி பலவும் செய்து நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் #379 பூ மலி நறும் பொன் தாமம் புனை மணி கோவை நாற்றி காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் மா மணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார் #380 வண்டு உலாம் குழலார் முன்பு வன் தொண்டர் வந்து கூட கண்ட போது உள்ளம் காதல் வெள்ளத்தின் கரை காணாது கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அ குரிசிலாரும் தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் #381 இருவரும் தம் பிரானார் தாம் இடை ஆடி செய்த திருவருள் கருணை வெள்ள திறத்தினை போற்றி சிந்தை மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார் #382 ஆரண கமல கோயில் மேவி புற்று இடம் கொண்டு ஆண்ட நீர் அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றி பார் அணி விளக்கும் செம் சொல் பதிக மாலைகளும் சாத்தி தார் அணி மணி பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில் #383 நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுகம் ஒன்று இன்றி நின்று தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் #384 நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால ஏயும் என்று இதனை செய்வான் தொண்டனாம் என்னே பாவம் பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் #385 காரிகை-தன்-பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவ பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவ தேர் அணி வீதியூடு செல்வது வருவது ஆகி ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று #386 நம்பர் தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா எம்பிரான் இசைந்தால் ஏவப்பெறுவதே இதனுக்கு உள்ளம் கம்பியாதவனை யான் முன் காணும் நாள் எ நாள் என்று #387 அரிவை காரணத்தினாலே ஆளுடை பரமர்-தம்மை இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை வரவு எதிர் காண்பேன் ஆகில் வருவது என்னாம்-கொல் என்று விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி #388 ஈறு_இலா புகழின் ஓங்கும் ஏயர்கோனார் தாம் எண்ணி பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி வேறு இனி இதற்கு தீர்வு வேண்டுவார் விரி பூம் கொன்றை ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து #389 நாள்-தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி நீடிய தொண்டர்-தம்முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார்-தம்-பால் மேனி வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் #390 ஏதம் இல் பெருமை செய்கை ஏயர்-தம் பெருமான் பக்கல் ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து பூத நாயகர்-தம் பொன் தாள் பற்றியே போற்றுகின்றார் #391 சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்து அடி போற்றி செய்ய எம்-தமை ஆளும் ஏயர் காவலர்-தம்-பால் ஈசர் வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு #392 எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழிவழி சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து #393 மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்று-ஆல் பெற்றம் மேல் உயர்த்தீர் செய்யும் பெருமையை அறிந்தார் யாரே உற்றவன் தொண்டற்கே ஆம் உறுதியே செய்தீர் என்ன கற்றை வார் சடையார்-தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே #394 வன் தொண்டர்-தம்-பால் சென்று வள்ளலார் அருளி செய்வார் இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு நன்று மெய் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர் #395 அண்ணலார் அருளி செய்து நீங்க ஆரூரர் தாமும் விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்கு திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் #396 நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் ஏதம் இங்கு எய்த எய்தில் யான் செய்வது என்னாம் என்பார் #397 மற்றவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாய பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே #398 கருத அரும் பெருமை நீர்மை கலிக்காமர் தேவியாரும் பொருவு_அரும் கணவரோடு போவது புரியும்-காலை மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்து பின்னும் #399 கணவர்-தம் செய்கை-தன்னை கரந்து காவலரை நம்பி அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர் போம் என்ன புணர் நிலை வாயில் தீபம் பூரணகும்பம் வைத்து துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் #400 செம்மை சேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற நம்மை ஆளுடைய நம்பி நகை முகம் அவர்க்கு நல்கி மெய்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து மிக்க மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது #401 பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த நான்_மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் #402 மாதர்-தம் ஏவலாலே மனை தொழில் மாக்கள் மற்று இங்கு ஏதம் ஒன்று இல்லை உள்ளே பள்ளிகொள்கின்றார் என்ன தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் #403 வன் தொண்டர் பின்னும் கூற மற்றவர் தம்மை காட்ட துன்றிய குருதி சோர தொடர் குடர் சொரிந்து உள் ஆவி பொன்றியே கிடந்தார்-தம்மை கண்ட பின் புகுந்தவாறு நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார் #404 கோளுறும் மனத்தர் ஆகி குற்று உடைவாளை பற்ற ஆளுடை தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் #405 மற்றவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் கொற்றவனாரும் நம்பி குரை கழல் பணிந்து வீழ்ந்தார் அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் பொன் தட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற #406 இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே பொருவு_அரும் மகிழ்ச்சி பொங்க திரு புன்கூர் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி #407 சில பகல் கழிந்த பின்பு திருமுனைப்பாடி நாடர் மலர் புகழ் திருவாரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் நிலவினார்-தம்மை கும்பிட்டு உறைந்தனர் நிறைந்த அன்பால் #408 அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் தங்கு நாள் ஏயர்கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே செம் கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பினோடும் #409 நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம் வள்ளலார் ஏயர்கோனார் மலர் அடி வணங்கி புக்கேன் உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப மேல் @3 திருமூல நாயனார் புராணம் #1 அந்தி இளம் பிறை கண்ணி அண்ணலார் கயிலையினில் முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெரு நாயகம் ஆகி இந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும் நந்தி திருவருள் பெற்ற நான்_மறை யோகிகள் ஒருவர் #2 மற்று அவர் தாம் அணிமாஆதி வரும் சித்தி பெற்று உடையார் கொற்றவனார் திரு கயிலை மலை-நின்றும் குறுமுனி-பால் உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு நல் தமிழின் பொதிய மலை நண்ணுதற்கு வழி கொண்டார் #3 மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர் பன்னு புகழ் பசுபதி நேபாளத்தை பணிந்து ஏத்தி துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை அன்ன மலி அகன் துறை நீர் அரும் கரையின் மருங்கு அணைந்தார் #4 கங்கை நீர் துறை ஆடி கருத்து உறை நீள் கடல் ஏற்றும் அங்கணர் தாம் மகிழ்ந்து அருளும் அவிமுத்தம் பணிந்து ஏத்தி மங்குல் வளர் வரை விந்தம் மன்னு பருப்பதம் இறைஞ்சி திங்கள் அணி சடையார் திருக்காளத்தி மலை சேர்ந்தார் #5 நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கி ஆடு திரு அரங்கு ஆன ஆலவனம் தொழுது ஏத்தி தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்து மாடு உயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார் #6 நல் பதி அங்கு அமர் யோக முனிவர்களை நயந்து போய் கல் புரிசை திருவதிகை கலந்து இறைஞ்சி கறை கண்டர் அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி பொன் பதியாம் பெரும்பற்றப்புலியூரில் வந்து அணைந்தார் #7 எ உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரை செவ்விய அன்புற வணங்கி சிந்தை களிவர திளைத்து வவ்விய மெய் உணர்வின் கண் வரும் ஆனந்த கூத்தை அ இயல்பில் கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார் #8 தட நிலை மாளிகை புலியூர்-தன்னில் உறைந்து இறைஞ்சி போய் அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே விடம் அளித்தது என கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார் #9 காவிரி நீர் பெரும் தீர்த்தம் கலந்து ஆடி கடந்து ஏறி ஆவின் அரும் கன்று உறையும் ஆவடுதண்துறை அணைந்து சேவில் வரும் பசுபதியார் செழும் கோயில் வலம் வந்து மேவு பெரும் காதலினால் பணிந்து அங்கு விருப்பு உறுவார் #10 அ நிலைமை தானத்தை அகலாதது ஒரு கருத்து முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த பின்னும் அகன்று ஏகுவார் பேண வரும் கோ குலங்கள் பொன்னி நதி கரை புறவில் புலம்புவன எதிர் கண்டார் #11 அந்தணர்-தம் சாத்தனூர் ஆ மேய்ப்பார் குடி தோன்றி முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் வந்து தனி மேய்கின்றான் வினை மாள வாழ்நாளை வெம் தொழில் வன் கூற்று உண்ண வீடி நிலத்திடை வீழ்ந்தான் #12 மற்றவன்-தன் உடம்பினை அ கோ குலங்கள் வந்து அணைந்து சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக நல் தவ யோகியார் காணா நம்பர் அருளாலே ஆ உற்ற துயர் இவை நீங்க ஒழிப்பன் என உணர்கின்றார் #13 இவன் உயிர் பெற்று எழில் அன்றி ஆக்கள் இடர் நீங்கா என்று அவன் உடலில் தம் உயிரை அடைவிக்க அருள்புரியும் தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து தாம் முயன்ற பவன வழி அவன் உடலில் தம் உயிரை பாய்த்தினார் #14 பாய்த்திய பின் திருமூலராய் எழலும் பசுக்கள் எலாம் நா தழும்ப நக்கி மோந்து அணைந்து கனைப்பொடு நயந்து வாய்த்து எழுந்த களிப்பினால் வால் எடுத்து துள்ளி பின் நீத்த துயரின ஆகி நிரைந்து போய் மேய்ந்தன-ஆல் #15 ஆவின் நிரை மகிழ்வுற கண்ட அளிகூர்ந்த அருளினராய் மேவி அவை மேய் விடத்து பின் சென்று மேய்ந்தவை-தாம் காவிரி முன் துறை தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற பூ விரி தண் புறவின் நிழல் இனிதாக புறங்காத்தார் #16 வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய சைவ நெறி மெய் உணர்ந்தோர் ஆன் இனங்கள் தாமே முன் பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி வைய நிகழ் சாத்தனூர் வந்து எய்த பின் போனார் #17 போனவர் தாம் பசுக்கள் எல்லாம் மனை-தோறும் புக நின்றார் மானம் உடை மனையாளும் வைகிய பின் தாழ்ந்தார் என்று ஆன பயத்துடன் சென்றே அவர் நின்ற வழி கண்டாள் ஈனம் இவர்க்கு அடுத்தது என மெய் தீண்ட அதற்கு இசையார் #18 அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் தங்கி வெரு உற மயங்கி என் செய்தீர் என தளர இங்கு உனக்கு என்னுடன் அணைவு ஒன்று இல்லை என எதிர்மறுத்து பொங்கு தவத்தோர் ஆங்கு ஓர் பொது மடத்தின் உள் புகுந்தார் #19 இல்லாளன் இயல்பு வேறு ஆனமை கண்டு இரவு எல்லாம் சொல் ஆடாது இருந்தவர்-பால் அணையாது துயிலாதாள் பல்லார் முன் பிற்றை நாள் இவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப நல்லார்கள் அவர் திறத்து நாடியே நயந்து உரைப்பார் #20 பித்துற்ற மயல் அன்று பிறிது ஒரு சார்பு உளது அன்று சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் வைத்த கருத்தினர் ஆகி வரம்பு_இல் பெருமையில் இருந்தார் இ தகைமை அளப்பு_அரிதால் யாராலும் என உரைப்பார் #21 பற்று அறுத்த உபதேச பரமர் பதம் பெற்றார் போல் முற்றும் உணர்ந்தனர் ஆகும் முன்னை நிலைமையில் உங்கள் சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி மற்று அவளும் மையலுற மருங்கு உள்ளார் கொண்டு அகன்றார் #22 இ நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து ஆங்கு ஆன் நிரைகள் வந்த நெறியே சென்று வைத்த காப்பினில் உய்த்த முந்தை உடல் பொறை காணார் முழுது உணர்ந்த மெய்ஞ்ஞான சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் #23 தண் நிலவு ஆர் சடையார் தாம் தந்த ஆகம பொருளை மண்ணின் மிசை திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்ப கண்ணிய அ திருவருளால் அ உடலை கரப்பிக்க எண் நிறைந்த உணர்வு உடையார் ஈசர் அருள் என உரைத்தார் #24 சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ செற்றம் முதல் கடிந்தவர்-தாம் ஆவடுதண்துறை சேர்ந்தார் #25 ஆவடுதண்துறை அணைந்து அங்கு அரும் பொருளை உற வணங்கி மேவுவார் புற குட-பால் மிக்கு உயர்ந்த அரசின் கீழ் தே இருக்கை அமர்ந்து அருளி சிவயோகம் தலை நின்று பூ அலரும் இதயத்து பொருளோடும் உணர்ந்து இருந்தார் #26 ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாக பரம்பொருளாம் ஏன எயிறு அணிந்தாரை ஒன்று அவன்-தான் என எடுத்து #27 முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து சென்னி மதி அணிந்தார்-தம் திருவருளால் திரு கயிலை தன்னில் அணைந்து ஒருக்காலும் பிரியாமை தாள் அடைந்தார் #28 நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம் மலர்ந்த மொழி திருமூலத்தேவர் மலர் கழல் வணங்கி அலர்ந்த புகழ் திருவாரூர் அமணர் கலக்கம் கண்ட தலம் குலவு விறல் தண்டிஅடிகள் திறம் சாற்றுவாம் மேல் @4 தண்டியடிகள் புராணம் #1 தண்டிஅடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமை தவம் உடையார் அண்ட வாணர் மறை பாட ஆடும் செம்பொன் கழல் மனத்து கொண்ட கருத்தின் அகம் நோக்கும் குறிப்பே அன்றி புற நோக்கும் கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார் #2 காணும் கண்ணால் காண்பது மெய் தொண்டே ஆன கருத்து உடையார் பேணும் செல்வ திருவாரூர் பெருமான் அடிகள் திரு அடிக்கே பூணும் அன்பினால் பரவி போற்றும் நிலைமை புரிந்து அமரர் சேணும் அறிய_அரிய திருத்தொண்டில் செறிய சிறந்து உள்ளார் #3 பூ ஆர் சடில திரு முடியார் மகிழ்ந்த செல்வ பூங்கோயில் தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய் செம்மை புரி நாவால் இன்பமுறும் காதல் நமச்சிவாய நல் பதமே ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில் #4 செம் கண் விடையார் திரு கோயில் குட-பால் தீர்த்த குளத்தின் பாங்கு எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் அங்கு அ நிலைமை-தனை தண்டிஅடிகள் அறிந்தே ஆதரவால் இங்கு நான் இ குளம் பெருக கல்ல வேண்டும் என்று எழுந்தார் #5 குழி வாய் அதனில் குறி நட்டு கட்டும் கயிறு குள குலையின் இழிவாய் புறத்து நடு தறியோடு இசைய கட்டி இடை தடவி வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவி போய் ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் #6 நண்ணி நாளும் நல் தொண்டர் நயந்த விருப்பால் மிக பெருகி அண்ணல் தீர்த்த குளம் கல்லக்கண்ட அமணர் பொறார் ஆகி எண்ணி தண்டிஅடிகள்-பால் எய்தி முன் நின்று இயம்புவார் மண்ணை கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார் #7 மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் தேசு பெருகும் திருத்தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் பூசு நீறு சாந்தம் என புனைந்த பிரானுக்கு ஆன பணி ஆசு_இலா நல் அறம் ஆவது அறிய வருமோ உமக்கு என்றார் #8 அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார் #9 வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் அல்லால் வேறு காணேன் யான் அது நீர் அறிதற்கு ஆர் என்பார் நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் என்று எடுத்து உரைத்தார் #10 அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் பெருகும் இ ஊரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி தருகை கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார் #11 வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டிஅடிகள்-தாம் மை கொள் கண்டர் பூங்கோயில் மணி வாயிலின் முன் வந்து இறைஞ்சி ஐயனே இன்று அமணர்கள்-தாம் என்னை அவமானம் செய்ய நைவது ஆனேன் இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார் #12 பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது அழுது கங்குல் அவர் துயில கனவில் அகிலலோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளி செய்கின்றார் #13 நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழி தந்த வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர்-பால் நீங்கி அ இரவே துஞ்சும் இருளில் அரசன்-பால் தோன்றி கனவில் அருள்புரிவார் #14 தண்டி நமக்கு குளம் கல்லக்கண்ட அமணர் தரியாராய் மிண்டு செய்து பணி விலக்க வெகுண்டான் அவன்-பால் நீ மேவி கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளி தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்தருளினார் அ தொழில் உவப்பார் #15 வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்ப பூம் தண் கொன்றை வேய்ந்தவரை போற்றி புலர தொண்டர்-பால் சார்ந்து புகுந்தபடி விளம்ப தம் பிரானார் அருள் நினைந்தே ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் #16 மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லி பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டை பறித்தார் என்று இயம்பி #17 அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் என்ன இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஓட்டினார் இது மேல் வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார் #18 அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் மருவும் தொண்டர் முன் போக மன்னன் பின் போய் மலர் வாவி அருகு நின்று விறல் தண்டிஅடிகள்-தம்மை முகம் நோக்கி பெருகும் தவத்தீர் கண் அருளால் பெறுமா காட்டும் என பெரியோர் #19 ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு_எழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் #20 தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாற கண்டு பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றான் #21 தண்டிஅடிகள்-தம்முடனே ஒட்டி கெட்ட சமண் குண்டர் அண்டர் போற்றும் திருவாரூர்-நின்றும் அகன்று போய் கழிய கண்ட அமணர்-தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி #22 குழியில் விழுவார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார் வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் அழியும் பொருளை வட்டித்து இங்கு கழிந்தோம் என்பார் அரசனுக்கு பழி ஈது ஆமோ என்று உரைப்பார் பாய்கள் இழப்பர் பறி தலையார் #23 பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் சால நெருங்கி எதிர்எதிரே தம்மில்தாமே முட்டிடுவார் மாலும் மனமும் அழிந்து ஓடி வழிகள் அறியார் மயங்குவார் #24 அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து மன்னவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான் #25 மன்னன் வணங்கி போயின பின் மாலும் அயனும் அறியாத பொன் அம் கழல்கள் போற்றி இசைத்து புரிந்த பணியும் குறை முடித்தே உன்னும் மனத்தால் அஞ்சு_எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார் #26 கண்ணின் மணிகள் அவை இன்றி கயிறு தடவி குளம் தொட்ட எண்_இல் பெருமை திருத்தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி விண்ணில் வாழ்வார் தாம் வேண்ட புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் மேல் @5 மூர்க்க நாயனார் புராணம் #1 மன்னி பெருகும் பெரும் தொண்டை வள நாடு அதனில் வயல் பரப்பும் நல் நித்திலம் வெண் திரை பாலி நதியின் வட-பால் நலம் கொள் பதி அன்ன பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கினிடை மின்னு கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடும் வேற்காடு #2 செம்பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடை கற்றை நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும் தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் #3 கோது_இல் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கி ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார் காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்ய கண்டு உண்ணும் நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் #4 தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து மேய அடியார்-தமை போற்றி விருப்பால் அமுது செய்வித்தே ஆய பொருளும் அவர் வேண்டும்படியால் உதவி அன்பு மிக ஏயுமாறு நாள்-தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் #5 இன்ன செயலின் ஒழுகு நாள் அடியார் மிகவும் எழுந்தருள முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன் மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் #6 அங்கண் அ ஊர் தமக்கு ஒரு-பால் அடியார்-தங்கட்கு அமுத ஆக்க எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்து அயர்வார் தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால் பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் #7 பெற்றம் ஏறி பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள் உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர் செற்ற சிலையார் திரு குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் #8 இருள் ஆரும் மணி கண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்க பொருள் ஆயம் எய்துதற்கு புகழ் குடந்தை அம்பலத்தே உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் #9 முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் #10 சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் தீது அகல அமுது ஆக்குவார் கொள்ள தாம் தீண்டார் காதல் உடன் அடியார்கள் அமுது செய கடை பந்தி ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் #11 நாதன்-தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்-தோறும் ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே ஏதங்கள் போய் அகல இ உலகை விட்டு அதன் பின் பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார் #12 வல்லார்கள்-தமை வென்று சூதினால் வந்த பொருள் அல்லாரும் கறை கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும் நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி சொல்லார் சீர் சோமாசிமாறர் திறம் சொல்லுவாம் மேல் @6 சோமாசி மாற நாயனார் புராணம் #1 சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர் ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால் பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார் #2 யாழின் மொழியாள் தனி பாகரை போற்றும் யாகம் ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன ஏழும் உவப்ப புரிந்து இன்புற செய்த பேற்றால் வாழும் திறம் ஈசர் மலர் கழல் வாழ்த்தல் என்பார் #3 எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் அத்தன்மையராம் நமை ஆள்பவர் என்று கொள்வார் சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை நித்தம் நியமம் என போற்றும் நெறியில் நின்றார் #4 சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி ஆரம் திகழ் மார்பின் அணுக்க வன் தொண்டர்க்கு அன்பால் சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கி பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார் #5 துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம் வென்று இங்கு இது நல் நெறி சேரும் விளக்கம் என்றே வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப என்றும் நிலவும் சிவலோகத்தில் இன்பம் உற்றார் #6 பணையும் தடமும் புடைசூழும் ஒற்றியூரில் பாகத்தோர் துணையும் தாமும் பிரியாதார் தோழ தம்பிரானாரை இணையும் கொங்கை சங்கிலியார் எழில் மென் பணை தோள் எய்துவிக்க அணையும் ஒருவர் சரணமே அரணம் ஆக அடைந்தோமே மேல்7.வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் @1 சாக்கிய நாயனார் புராணம் #1 அறு சமய தலைவராய் நின்றவருக்கு அன்பராய் மறு சமய சாக்கியர்-தம் வடிவினால் வரும் தொண்டர் உறுதி வர சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து மறு_இல் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம் #2 தாளாளர் திருச்சங்க மங்கையினில் தகவு உடைய வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார் #3 அ நாளில் எயில் காஞ்சி அணி நகரம் சென்று அடைந்து நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் முன்னாக சாக்கியர்-தாம் மொழி அறத்தின் வழி சார்ந்து மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார் #4 அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது தன் நிலையும் புற சமய சார்வுகளும் பொருள் அல்ல என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார் #5 செய் வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் என கொண்டே இ இயல்பு சைவ நெறி அல்லவற்றுக்கு இல்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார் #6 எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார் #7 எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் பொல்லா வேட சாக்கியரே ஆகி புல்லர் ஆகுவார் அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன வல்லார் இவர் அ வேடத்தை மாற்றாது அன்பின் வழி நிற்பார் #8 காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் நாணாது நேடிய மால் நான்_முகனும் காண நடு சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் #9 நாள்-தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து மாடு ஓர் வெள்ளிடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் நீடோடு களி உவகை நிலைமை வர செயல் அறியார் பாடு ஓர் கல் கண்டு அதனை பதைப்போடும் எடுத்து எறிந்தார் #10 அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரி செயலினால் இகழ்வனவே செய்தாலும் இளம் புதல்வர்க்கு இன்பமே நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார் #11 அன்று போய் பிற்றை நாள் அ நியதிக்கு அனையும்-கால் கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்பு-அதனை நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார் #12 தொடங்கிய நாள் அருளிய அ தொழில் ஒழியா வழி தொடரும் கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடை படம் புனை வேடம் தவிரார் பசுபதியார்-தம் செயலே அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் #13 இ நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் #14 கல்லாலே எறிந்ததுவும் அன்பு ஆனபடி காணில் வில் வேடர் செருப்பு அடியும் திரு முடியில் மேவிற்று-ஆல் நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆம்-ஆல் #15 அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ண புகுகின்றார் எங்கள் பிரான்-தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து பொங்கியது ஓர் காதலுடன் மிக விரைந்து புறப்பட்டு வெம் கரியின் உரி புனைந்தார் திரு முன்பு மேவினார் #16 கொண்டது ஒரு கல் எடுத்து குறி கூடும் வகை எறிய உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கையோடும் கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவியொடும் தோன்றினார் #17 மழ விடை மேல் எழுந்தருளி வந்த ஒரு செயலாலே கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி விழ அருள் நோக்கு அளித்து அருளி மிக்க சிவலோகத்தில் பழ அடிமை பாங்கு அருளி பரமர் எழுந்தருளினார் #18 ஆதியார்-தம்மை நாளும் கல் எறிந்து அணுகப்பெற்ற கோது_இல் சீர் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி மேல் @2 சிறப்புலி நாயனார் புராணம் #1 பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளோர் இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரை சண்பை மன்னனார் அருளி செய்த மறை திரு ஆக்கூர் அ ஊர் #2 தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும் #3 ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்-தம் திருத்தொண்டு ஏற்ற சீலராய் சாலும் ஈகை திறத்தினில் சிறந்த நீரார் #4 ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்து உள் தங்கி நிதி மழை மாரி போன்றார் #5 அஞ்சு_எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே #6 அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர்-தன்னில் மறை பெரு வள்ளலார் வண் சிறப்புலியார் தாள் வாழ்த்தி சிறப்பு உடை திரு செங்காட்டம் குடியினில் செம்மை வாய்ந்த விறல் சிறுத்தொண்டர் செய்த திரு தொழில் விளம்பல் உற்றேன் மேல் @3 சிறுத்தொண்ட நாயனார் புராணம் #1 உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செம் தீ வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் கருநாட்ட கடைசியர் தம் களி நாட்டும் காவேரி திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக்குடி ஆகும் #2 நிலவிய அ திரு பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார் பலர் புகழும் திரு நாமம் பரஞ்சோதியார் என்பார் #3 ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் பாயும் மத குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார் #4 உள்ளம் நிறை கலை துறைகள் ஒழிவு_இன்றி பயின்று அவற்றால் தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு பள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார் #5 ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே ஆசு_இல் புகழ் மன்னவன்-பால் அணுக்கராய் அவற்கு ஆக பூசல் முனை களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர் தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்-பால் சிறந்தார் #6 மன்னவர்க்கு தண்டு போய் வட புலத்து வாதாவி தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து பல் மணியும் நிதி குவையும் பகட்டு இனமும் பரி தொகையும் இன்னை எண்_இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார் #7 கதிர் முடி மன்னனும் இவர்-தம் களிற்று உரிமை ஆண்மையினை அதிசயித்து புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார் மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால் எதிர் இவருக்கு இ உலகில் இல்லை என எடுத்து உரைத்தார் #8 தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன் வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் என வெருவுற்று எம்பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான் #9 இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமை தொழிற்கு அடுத்த திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு நிறைந்த நிதி குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான் #10 உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர் எம்முடைய மன கருத்துக்கு இனிதாக இசைந்து உமது மெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்து செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடைகொடுத்தான் #11 மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்து அடைந்து பன்னு புகழ் பரஞ்சோதியார் தாமும் பனி மதி வாழ் சென்னியரை கணபதீச்சரத்து இறைஞ்சி திருத்தொண்டு முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார் #12 வேத காரணர் அடியார் வேண்டிய மெய் பணி செய்ய தீது_இல் குடி பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும் காதல் மனை கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார் #13 நறை இதழி திரு முடியார் அடியாரை நாள்-தோறும் முறைமையினில் திரு அமுது முன் ஊட்டி பின் உண்ணும் நிறை உடைய பெரு விருப்பில் நியதி ஆக கொள்ளும் துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் #14 தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம் மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார் மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் #15 சீத மதி அரவினுடன் செம் சடை மேல் செறிவித்த நாதன் அடியார்-தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் மே தகையார் அவர் முன்பு மிக சிறியராய் அடைந்தார் ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல் #16 கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர உள் நிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழு_இன்றி எண்_இல் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செய நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின்-கண் #17 நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்து பேராளர் அவர்-தமக்கு பெருகு திரு மனை அறத்தின் வேர் ஆகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை-பால் சீராள தேவர் எனும் திரு மைந்தர் அவதரித்தார் #18 அருமையினில் தனி புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த பெருமையினில் கிளை களிப்ப பெறற்கு அரிய மணி பெற்று வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளர திரு மலி நெய் ஆடல் விழா செங்காட்டங்குடி எடுப்ப #19 மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப அங்கணர்-தம் சீர் அடியார்க்கு அளவு_இறந்த நிதி அளித்து தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும் பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புணைந்தார் #20 ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறை பாராட்டு சீர் பெருக செய்ய வளர் திரு மகனார் சீறடியில் தார் வளர் கிண்கிணி அசைய தளர் நடையின் பதம் சார்ந்தார் #21 சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில் பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் #22 வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து தந்தையாரும் பயந்த தாயாரும் தனி சிறுவர் சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் #23 அ நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்தருள முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர் பொன் மார்பில் சிறுத்தொண்டர் புகலி காவலனார்-தம் நல் நாம சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார் #24 சண்பையர்-தம் பெருமானும் தாங்க_அரிய பெரும் காதல் பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து நண்பு அருளி எழுந்தருள தாம் இனிது நயப்புற்றார் #25 இ தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை அத்தர் திரு அடி இணை கீழ் சென்று அணைய அவருடைய மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் சித்தம் மகிழ் வயிரவராய் திருமலையின்-நின்று அணைகின்றார் #26 மடல் கொண்ட மலர் இதழி நெடும் சடையை வனப்பு எய்த கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆக பரப்பி #27 அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற #28 அருகு திரு முடி செருகும் அந்தி இளம் பிறை-தன்னை பெருகு சிறு மதி ஆக்கி பெயர்த்து சாத்தியது என்ன விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க #29 வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும் அ அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என அழகை வவ்வும் திரு காதின் மணி குழை சங்கு வளைத்து அதனுள் செவ் அரத்த மலர் செறித்த திரு தோடு புடை சிறக்க #30 களம் கொள் விடம் மறைத்து அருள கடல் அமுத குமிழி நிரைத்து துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என உளம் கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருக பெருக விளங்கும் திரு கழுத்தினிடை வெண் பளிங்கின் வடம் திகழ #31 செம் பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்தி பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது சாத்தும் அம் பவள திரு மேனி கஞ்சுகத்தின் அணி விளங்க #32 மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திரு மேனி விளைந்தது என அக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும் கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க #33 பொருவு_இல் திருத்தொண்டர்க்கு புவி மேல் வந்து அருள்புரியும் பெருகு அருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர் வரும் அன்பின் வழி நிற்பீர் என மறை பூண்டு அறைவன போல் திருவடி மேல் திரு சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப #34 அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட #35 அருள் பொழியும் திரு முகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கி புவி ஏத்த தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் #36 தண்டாதது ஒரு வேட்கை பசி உடையார்-தமை போல கண்டாரை சிறுத்தொண்டர் மனை வினவி கடிது அணைந்து தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர் வண்டு ஆர் பூம் தாரார் இ மனைக்கு உள்ளாரோ என்ன #37 வந்து அணைந்து வினவுவார் மா தவரே ஆம் என்று சந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி அந்தம்_இல் சீர் அடியாரை தேடி அவர் புறத்து அணைந்தார் எம்-தமை ஆள் உடையீரே அகத்து எழுந்தருளும் என #38 மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடை தலை எய்தி #39 அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு எம்பெருமான் யாவரையும் கண்டிலர் தேடி போனார் வம்பு என நீர் எழுந்தருளி வரும் திரு வேடம் கண்டால் தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனி தாழார் #40 இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும் என்ன ஒப்பு_இல் மனை அறம் புரப்பீர் உத்தராபதி உள்ளோம் செப்ப_அரும் சீர் சிறுத்தொண்டர்-தமை காண சேர்ந்தனம் யாம் எ பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி #41 கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண் வண்ண மலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்-தாம் நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி அண்ணலார் திரு ஆத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார் #42 நீர் ஆர் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும் பார் ஆதரிக்கும் திரு வேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார் #43 அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார் வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் துடி சேர் கரத்து பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய் கடி சேர் திரு ஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து #44 என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்தி சென்று கண்டு திரு பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர் நின்ற தொண்டர்-தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர் என்று திருவாய்மலர்ந்து அருள இறைவர்-தம்மை தொழுது உரைப்பார் #45 பூதி அணி சாதனத்தவர் முன் போற்ற போதேன் ஆயிடினும் நாதன் அடியார் கருணையினால் அருளி செய்வார் நான் என்று கோது_இல் அன்பர்-தமை அமுது செய்விப்பதற்கு குல பதியில் காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமை கண்டேன் #46 அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும் என நெடியோன் அறியா அடியார்-தாம் நிகழும் தவத்தீர் உமை காணும் படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மை பரிந்து ஊட்ட முடியாது உமக்கு செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள #47 எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு-அதனை கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளி செய்யும் கடிது அமைக்க தண் ஆர் இதழி முடியார்-தம் அடியார் தலைப்பட்டால் தேட ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார் #48 அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற பெரிய பயிரவ கோல பெருமான் அருளி செய்வார் யாம் பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார் #49 சால நன்று மு நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசு-தான் இன்னது என ஏல அருளி செயப்பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்து காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் #50 பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும் நண்பு மிக்கீர் நாம் உண்ண படுக்கும் பசுவும் நர பசுவாம் உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம் புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார் #51 யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளி செய்யும் என நாதன்-தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனை தாதை அரிய தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார் #52 அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்ய பெறில் என்று கதும்என் விரைவில் அவர் அவர் இசைய பெற்று களிப்பால் காதலொடு மது மென் கமல மலர் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார் #53 அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மை முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாத மிசை இறைஞ்சி பின்பு கணவர் முகம் நோக்கி பெருகும் தவத்தோர் செயல் வினவ #54 வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மா தவர்-தாம் உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கு ஓர் சிறுவனுமாய் கொள்ளும் பிராயம் ஐந்து உளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய் பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்க பெறின் என்றார் #55 அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் பெரிய பயிரவ தொண்டர் அமுது செய்ய பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு வரும் அ சிறுவன்-தனை பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும் #56 மனைவியார்-தம் முகம் நோக்கி மற்று இ திறத்து மைந்தர்-தமை நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்று தனையன்-தன்னை தந்தை தாய் அரிவார் இல்லை தாழாதே எனை இங்கு உய்ய நீ பயந்தான்-தன்னை அழைப்போம் யாம் என்றார் #57 என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர் இன்று தாழாது அமுது செய்ய பெற்று இங்கு அவர்-தம் மலர்ந்த முகம் நன்று காண்பது என நயந்து நம்மை காக்க வரும் மணியை சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார் #58 காதல் மனையார்-தாம் கூற கணவனாரும் காதலனை ஏதம் அகல பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழி புதல்வன் ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்த கடிது அகன்றார் #59 பள்ளியினில் சென்று எய்துதலும் பாத சதங்கை மணி ஒலிப்ப பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல் கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் வள்ளலார் தம் முன் சென்று மைந்தன்-தன்னை எதிர் வாங்கி #60 குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கி பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திரு மஞ்சனம் ஆட்டி எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் #61 அச்சம் எய்தி கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன் உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார் பொச்சம் இல்லா திருத்தொண்டர் புனிதர்-தமக்கு கறி அமைக்க மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார் #62 ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில் சென்று புக்கு பிள்ளை-தனை பெற்ற தாயார் செழும் கலங்கள் நன்று கழுவி கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை வென்ற தாதையார் தலையை பிடிக்க விரைந்து மெய் தாயார் #63 இனிய மழலை கிண்கிணி கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய தனி மா மகனை தாதையார் கருவி கொண்டு தலை அரிவார் #64 பொருவு_இல் பெருமை புத்திரன் மெய் தன்மை அளித்தான் என பொலிந்து மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார் அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார் #65 அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது என கழித்து மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்து கூட்டி கடிது அமைப்பார் #66 மட்டு விரி பூம் குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும் கலத்து பட்ட நறையால் தாளித்து பலவும் மற்றும் கறி சமைத்து சட்ட விரைந்து போனகமும் சமைத்து கணவர்-தமக்கு உரைத்தார் #67 உடைய நாதர் அமுது செய உரைத்தபடியே அமைவதற்கு அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகி களிகூர விடையில் வருவார் தொண்டர்-தாம் விரைந்து சென்று மெல் மலரின் புடை வண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார் #68 அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்-பால் நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு பண்ணினேனாய் பசித்து அருள தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன் எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார் #69 இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் நிறையும் பெருமை சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும் குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போல கொண்டு மனை புகுந்தார் #70 வந்து புகுந்து திரு மனையில் மனைவியார் தாம் மா தவரை முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனை சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றி தவிசு அடுத்த கந்த மலர் ஆசனம் காட்டி கமழ் நீர் கரகம் எடுத்து ஏந்த #71 தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென் மலர் சாந்தம் ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் #72 பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூம் குஞ்சி பயிரவராம் புனிதர்-தம்மை போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்க படைக்க என #73 பரிசு விளங்க பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றி தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல் விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார் #74 சொன்ன முறையில் படுத்த பசு தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது என கழித்தோம் என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார் #75 சிந்தை கலங்கி சிறுத்தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயர சந்தனத்தார் எனும் தாதியார்-தாம் அந்த தலை இறைச்சி வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்து கொடுக்க முகம் மலர்ந்தார் #76 வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி ஈங்கு நமக்கு தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இ பாங்கு நின்றார்-தமை கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள ஏங்கி கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார் #77 அகத்தின் புறத்து போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து முகத்தில் வாட்டம் மிக பெருக பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார் இகத்தும் பரத்தும் இனி யாரை காணேன் யானும் திருநீறு சகத்தில் இடுவார்-தமை கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச #78 உம்மை போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை-தம்மை கலம் திருத்தி வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ண புகலும் தடுத்து அருளி #79 ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன்-தன்னை அழையும் என ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார் #80 நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர் தாம் அங்கு அருளி செய்ய தரியார் தலைவர் அமுது செய்து அருள யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால் பூ மென் குழலார்-தம்மோடும் புறம் போய் அழைக்க புகும் போது #81 வையம் நிகழும் சிறுத்தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார் தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய் தாம் அழைப்பார் செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட #82 பரமர் அருளால் பள்ளியின்-நின்று ஓடி வருவான் போல் வந்த தரம் இல் வனப்பின் தனி புதல்வன்-தன்னை எடுத்து தழுவி தம் கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ண பெற்றோம் எனும் பொலிவால் #83 வந்த மகனை கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார் முந்தவே அ பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருள சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார் வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் #84 செய்ய மேனி கரும் குஞ்சி செழும் அஞ்சுகத்து பயிரவர் யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே என தேடி மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த தையலோடும் சரவணத்து தனயரோடும் தாம் அணைவார் #85 தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர் முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்தருளி பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார் #86 அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர் முன்பு தோன்றும் பெரு வாழ்வை முழுதும் கண்டு பரவசமாய் என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார் பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள்புரிவார் #87 கொன்றை வேணியார்-தாமும் பாகம் கொண்ட குல_கொடியும் வென்றி நெடு வேல் மைந்தரும் தம் விரை பூம் கமல சேவடி கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார் #88 ஆறு முடி மேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா ஊறு_இலாத தனி புதல்வன்-தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்ட பேறு பெற்றார் சேவடிகள் தலை மேல் கொண்டு பிற உயிர்கள் வேறு கழறிற்றறிவார்-தம் பெருமையும் தொழுது விளம்புவாம் மேல் @4 கழறிற்று அறிவார் நாயனார் புராணம் #1 மா வீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டு பா வீற்றிருந்த பல் புகழார் பயிலும் இயல்பில் பழம் பதி-தான் சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் #2 காலை எழும் பல் கலையின் ஒலி களிற்று கன்று வடிக்கும் ஒலி சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி பாலை விபஞ்சி பயிலும் ஒலி பாடல் ஆடல் முழவின் ஒலி வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது-ஆல் #3 மிக்க செல்வம் மனைகள்-தொறும் விளையும் இன்பம் விளங்குவன பக்கம் நெருங்கும் சாலை-தொறும் பயில் சட்ட அறங்கள் பல்குவன தக்க அணி கொள் மாடங்கள்-தொறும் சைவ மேன்மை சாற்றுவன தொக்க வளங்கள் இடங்கள்-தொறும் அடங்க நிதியம் துவன்றுவன #4 வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ் சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் கோதை அரசர் மகோதை என குலவும் பெயரும் உடைத்து உலகில் #5 முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் அருதி அழியும் கலி நீக்கி அறம் கொள் சைவ திறம் தழைப்ப திருகு சின வெம் களி யானை சேரர் குலமும் உலகும் செய் பெருகும் தவத்தால் அரன் அருளால் பிறந்தார் பெருமாக்கோதையர் #6 திரு மா நகரம் திரு அவதாரம் செய் விழவின் சிறப்பினால் வரும் மா களிகூர் நெய் ஆடல் எடுப்ப வான மலர்_மாரி தரும் மா விசும்பின் மிக நெருங்க தழங்கும் ஒலி மங்கலம் தழைப்ப பெரு மா நிலத்தில் எவ்வுயிரும் பெருகு மகிழ்ச்சி பிறங்கின-ஆல் #7 மண் மேல் சைவ நெறி வாழ வளர்ந்து முன்னை வழி அன்பால் கண் மேல் விளங்கு நெறியினார் கழலே பேணும் கருத்தினராய் உள் மேவிய அன்பினர் ஆகி உரிமை அரசர் தொழில் புரியார் தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் #8 உலகின் இயல்பும் அரசு இயல்பும் உறுதி அல்ல என உணர்வார் புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து மலரும் முகையும் கொணர்ந்து திரு மாலை சாத்த மகிழ்ந்து அமைத்து #9 திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் இட்டு திரு மெழுக்கு வரும் அன்புடன் இன்புற சாத்தி மற்றும் உள்ள திருப்பணிகள் பெருமை பிறங்க செய்து அமைத்து பேணும் விருப்பில் திரு பாட்டும் ஒருமை நெறியின் உணர்வு வர ஓதி பணிந்தே ஒழுகும் நாள் #10 நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ் சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் காரின் மலிந்த கொடை நிழல் மேல் கவிக்கும் கொற்ற குடை நிழல் கீழ் தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்து தவம் சார்ந்தான் #11 வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் சார் தவத்தின் மருவிய பின் சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி முந்தை மரபில் முதல்வர் திருத்தொண்டு முயல்வார் முதற்று ஆக இந்து முடியார் திருவஞ்சை களத்தில் அவர்-பால் எய்தினார் #12 எய்தி அவர்-தம் எதிர் இறைஞ்சி இரும் தண் சாரல் மலை நாட்டு செய்தி முறைமையால் உரிமை செங்கோல் அரசு புரிவதற்கு மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என பொய் தீர் வாய்மை மந்திரிகள் போற்றி புகன்ற பொழுதின்-கண் #13 இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறு ஆக இவர் மொழிந்தார் அன்பு நிலைமை வழுவாமை அரசு புரக்க அருள் உண்டேல் என்பும் அரவும் புனைந்தாரை இடை பெற்று அறிவேன் என புக்கு முன்பு தொழுது விண்ணப்பம் செய்தார் முதல்வர் அருளினால் #14 மேவும் உரிமை அரசு அளித்தே விரும்பும் காதல் வழிபாடும் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறு_இல்லா தா_இல் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் #15 ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து இறைஞ்சி புறம் போந்து அரசு அளித்தல் ஊனம் ஆகும் திருத்தொண்டுக்கு எனினும் உடையான் அருளாலே மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் அமைச்சர்க்கு உடன் படலும் மான அமைச்சர் தாள் பணிந்து அ வினை மேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார் #16 உரிமை நாளில் ஓரை நலன் எய்த மிக்க உபகரணம் பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் பிறங்க மங்கலம் செய்து இருமை உலகுக்கு ஒருமை முடி கவித்தார் எல்லா உயிரும் மகிழ் தரும நிலைமை அறிந்து புவி தாங்கும் கழறிற்றறிவார்-தாம் #17 தம்பிரானார் கோயில் வலம்கொண்டு திரு முன் தாழ்ந்து எழுந்து கும்ப யானை மேல் கொண்டு கொற்றக்குடையும் சாமரையும் நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் #18 மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால் உழையில் பொலிந்த திரு கரத்தார் அடியார் வேடம் என்று உணர்ந்தே இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் #19 சேரர் பெருமான் தொழ கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி யார் என்று அடியேனை கொண்டது அடியேன் அடி வண்ணான் என சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின் வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது ஏகும் என மொழிந்தார் #20 மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு மதி நீடு அமைச்சர் எலாம் சென்னி மிசை அஞ்சலி செய்து போற்ற சின மால் களிறு ஏறி மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு பொன்னின் மணி மாளிகை வாயில் புக்கார் புனை மங்கலம் பொலிய #21 யானை மிசை-நின்று இழிந்து அருளி இலங்கும் மணி மண்டபத்தின்-கண் மேன்மை அரி ஆசனத்து ஏறி விளங்கும் கொற்றக்குடை நிழற்ற பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார் #22 உலகு புரக்கும் கொடை வளவர் உரிமை செழியர் உடன் கூட நிலவு பெரு முக்கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி அலகு_இல் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து மலரும் திருநீற்று ஒளி வளர மறைகள் வளர மண் அளிப்பார் #23 நீடும் உரிமை பேர் அரசால் நிகழும் பயனும் நிறை தவமும் தேடும் பொருளும் பெரும் துணையும் தில்லை திருச்சிற்றம்பலத்துள் ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் கூடும் அன்பில் அர்ச்சனை மேல் கொண்டார் சேரர் குல பெருமாள் #24 வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம் தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் ஈசர்க்கு ஏற்ற பரிசினால் அர்ச்சித்து அருள எந்நாளும் பூசைக்கு அமர்ந்த பெரும் கூத்தர் பொற்பு ஆர் சிலம்பின் ஒலி அளித்தார் #25 நம்பர் தாளின் வழிபாட்டால் நாளும் இன்புற்று அமர்கின்றார் இம்பர் உலகில் இரவலர்க்கும் வறியோர் எவர்க்கும் ஈகையினால் செம்பொன் மழையாம் என பொழிந்து திருந்து வெற்றி உடன் பொருந்தி உம்பர் போற்ற தம் பெருமாற்கு உரிய வேள்வி பல செய்தார் #26 இன்ன வண்ணம் இவர் ஒழுக எழில் கொள் பாண்டி நல் நாட்டு மன்னும் மதுரை திரு ஆலவாயில் இறைவர் வரும் அன்பால் பன்னும் இசை பாடலில் பரவும் பாணனார் பத்திரனார்க்கு நன்மை நீடு பெரும் செல்வம் நல்க வேண்டி அருள்புரிவார் #27 இரவு கனவில் எழுந்தருளி என்-பால் அன்பால் எப்பொழுதும் பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை விரவு கதிர் செய் நவ மணி பூண் வேண்டிற்று எல்லாம் குறைவு இன்றி தர நம் ஓலை தருகின்றோம் தாழாது ஏகி வருக என்று #28 அதிர் கழல் உதியர் வேந்தற்கு அருள்செய்த பெருமையாலே எதிர்_இல் செல்வத்துக்கு ஏற்ற இருநிதி கொடுக்க என்று மதி மலி புரிசை என்னும் வாசகம் வரைந்த வாய்மை கதிர் ஒளி விரிந்த தோட்டு திரு முகம் கொடுத்தார் காண #29 சங்க புலவர் திரு முகத்தை தலை மேல் கொண்டு பத்திரனார் அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை நாடு அணைய வந்து எய்தி துங்க பரிசை கொடுங்கோளூர்-தன்னில் புகுந்து துன்னு கொடி மங்குல் தொடக்கும் மாளிகை முன் வந்து மன்னர்க்கு அறிவித்தார் #30 கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய எழுந்து நடுக்கம் மிக எய்தி ஓட்ட தம் பொன் மாளிகையின் புறத்தில் உருகும் சிந்தை உடன் பாட்டின் தலைமை பாணனார் பாதம் பலகால் பணிகின்றார் #31 அடியேன் பொருளா திரு முகம் கொண்டு அணைந்தது என்ன அவர்-தாமும் கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் முடி மேல் கொண்டு கூத்து ஆடி மொழியும் குழறி பொழி கண்ணீர் பொடியார் மார்பில் பரந்து விழ புவி மேல் பலகால் வீழ்ந்து எழுந்தார் #32 பரிவில் போற்றி திரு முகத்தை பலகால் தொழுது படி எடுக்க உரிய வகையில் எடுத்து ஓதி உம்பர் பெருமான் அருள் போற்றி விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் பெரிது விரைவில் கொடு போந்து பேணு அமைச்சர்க்கு அருள்செய்வார் #33 தங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதி குவையாய் பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம் அங்கண் ஒன்றும் ஒழியாமை அடைய கண்டு புறப்பட்டு தங்கும் பொதி செய் தாளின் மேல் சமைய ஏற்றி கொணரும் என #34 சேரர் பெருமான் அருள்செய்ய திருந்து மதிநூல் மந்திரிகள் சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் எல்லாம் நிறைந்த பெரும் சீர் கொள் நிதியும் எண்_இறந்த எல்லாம் பொதி செய்து ஆளின் மேல் பாரில் நெருங்க மிசை ஏற்றி கொண்டு வந்து பணிந்தார்கள் #35 பரந்த நிதியின் பரப்பு எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு நிரந்த தனங்கள் வேறுவேறு நிரைத்து கட்டி மற்று இவையும் உரம் தங்கிய வெம் கரி பரிகள் முதலாம் உயிர் உள்ளன தனமும் புரந்த அரசும் கொள்ளும் என மொழிந்தார் பொறையர் புரவலனார் #36 பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார் காண கொடுத்த நிதி எல்லாம் கண்டு மகிழ்வுற்று அதிசயித்து பேண எனக்கு வேண்டுவன அடியேன் கொள்ள பிஞ்ஞகனார் ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச #37 இறைவர் ஆணை மறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர் நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் நிலத்தை நெளிய உடன் கொண்டே உறை மும்மதத்து களிறு பரி உள் இட்டன வேண்டுவ கொண்டோர் பிறை வெண் கோட்டு களிற்று மேல் கொண்டு போந்தார் பெரும்பாணர் #38 பண்பு பெருகும் பெருமாளும் பாணனார் பத்திரனார் பின் கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய நண்பு சிறக்கும் அவர்-தம்மை நகரின் புறத்து விடைகொண்டு திண் பொன் புரிசை திரு மதுரை புக்கார் திருந்தும் இசை பாணர் #39 வான வரம்பர் குலம் பெருக்கும் மன்னனாரும் மறித்து ஏகி கூனல் இளம் வெண் பிறை கண்ணி முடியார் அடிமை கொண்டு அருளும் பான்மை அருளின் பெருமையினை நினைந்து பலகால் பணிந்து ஏத்தி மேன்மை விளங்கு மாளிகை மண்டபத்து உள் அரசு வீற்றிருந்தார் #40 அளவு_இல் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின் உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றி களவு கொலைகள் முதலான கடிந்து கழறிற்றறிவார்-தாம் வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள் #41 வான கங்கை நதி பொதிந்த மல்கு கடையார் வழிபட்டு தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் தேன் நக்கு அலர்ந்த கொன்றையின் ஆர் ஆடல் சிலம்பின் ஒலி முன் போல் மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி #42 பூசை கடிது முடித்து அடியேன் என்னோ பிழைத்தது என பொருமி ஆசை உடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம் யாது என்று தேசின் விளங்கும் உடைவாளை உருவி திரு மார்பினில் நாட்ட ஈசர் விரைந்து திரு சிலம்பின் ஓசை மிகவும் இசைப்பித்தார் #43 ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் கூட தலை மேல் குவித்து அருளி கொண்டு வீழ்ந்து தொழுது எழுந்து நீட பரவி மொழிகின்றார் நெடுமால் பிரமன் அரு_மறை முன் தேடற்கு அரியாய் திருவருள் முன் செய்யாது ஒழிந்தது என் என்றார் #44 என்ற பொழுதில் இறைவர்-தாம் எதிர்நின்று அருளாது எழும் ஒலியால் மன்றினிடை நம் கூத்து ஆடல் வந்து வணங்கி வன் தொண்டன் ஒன்றும் உணர்வால் நமை போற்றி உரை சேர் பதிகம் பாடுதலால் நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் #45 என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று பொன் நேர் சடையார் திருநடம் செய் புலியூர் பொன் அம்பலம் இறைஞ்சி தன் நேர் இல்லா வன் தொண்டர்-தமையும் காண்பான் என விரும்பி நல் நீர் நாட்டு செல நயந்தார் நாம சேரர் கோமானார் #46 பொன் ஆர் மௌலி சேரலனார் போற்றும் அமைச்சர்க்கு அஃது இயம்பி நல் நாள் கொண்டு பெரும் பயணம் எழுக என்று நலம் சாற்ற மின் ஆர் அயில் வேல் குல மறவர் வென்றி நிலவும் சிலை வீரர் அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் #47 இட்ட நல் நாள் ஓரையினில் இறைவர் திருவஞ்சைக்களத்து மட்டு விரி பூம் கொன்றையினார்-தம்மை வலம்கொண்டு இறைஞ்சி போய் பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் #48 யானை அணிகள் பரந்து வழி எங்கும் நிரந்து செல்லுவன மான மலை நாட்டினில் மலிந்த மலைகள் உடன் போதுவ போன்ற சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் #49 புரவி திரள்கள் ஆ யோக பொலிவின் அசைவில் போதுவன அரவ சேனை கடல் தரங்கம் மடுத்து மேல்மேல் அடர்வன போல் விரவி பரந்து சென்றன-ஆல் மிசையும் அவலும் ஒன்றாக நிரவி பரந்த நெடும் சேனை நேமி நெளிய சென்றன-ஆல் #50 அ நாட்டு எல்லை கடந்து அணைய அமைச்சர்க்கு எல்லாம் விடை அருளி மின் ஆர் மணி பூண் மன்னவனார் வேண்டுவாரை உடன்கொண்டு கொன் ஆர் அயில் வேல் மறவர் பயில் கொங்கர் நாடு கடந்து அருளி பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் பொன்னி நீர் நாட்டிடை போவார் #51 சென்ற திசையில் சிவன் அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ள குன்றும் கானும் உடை குறும்பர் இடங்கள்-தோறும் குறை அறுப்ப துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து வென்றி விடையார் இடம் பலவும் மேவி பணிந்து செல்கின்றார் #52 பொருவு_இல் பொன்னி திரு நதியின் கரை வந்து எய்தி புனித நீர் மருவு தீர்த்தம் மகிழ்ந்து ஆடி மருங்கு வட-பால் கரை ஏறி திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் மன்றுள் நடம் போற்ற உருகும் மனத்தின் உடன் சென்றார் ஒழியா அன்பின் வழி வந்தார் #53 வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த போதில் எதிர்வணங்கி சந்த விரை பூம் திரு வீதி இறைஞ்சி தலை மேல் கரம் முகிழ்ப்ப சிந்தை மகிழ எழு நிலை கோபுரத்தை அணைந்தார் சேரலனார் #54 நிலவும் பெருமை எழு நிலை கோபுரத்தின் முன்னர் நிலத்து இறைஞ்சி மலரும் கண்ணீர் துளி ததும்ப புகுந்து மாளிகை வலம்கொண்டு உலகு விளக்கும் திரு பேரம்பலத்தை வணங்கி உள் அணைந்தார் அலகு_இல் அண்டம் அளித்தவர் நின்று ஆடும் திருச்சிற்றம்பலம் முன் #55 அளவு_இல் இன்ப பெரும் கூத்தர் ஆட எடுத்த கழல் காட்ட உளமும் புலனும் ஒருவழி சென்று உருக போற்றி உய்கின்றார் களனில் விடம் வைத்து அளித்த அமுது அன்றி மன்றில் கழல் வைத்து வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு அளித்த கருணை வழுத்தினார் #56 ஆரா ஆசை ஆனந்த கடலுள் திளைத்தே அமர்ந்து அருளால் சீரார் வண்ண பொன் வண்ணத்து திரு அந்தாதி திருப்படி கீழ் பார் ஆதரிக்க எடுத்து ஏத்தி பணிந்தார் பருவ மழை பொழியும் காரால் நிகர்க்க அரிய கொடை கையார் கழறிற்றறிவார்-தாம் #57 தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என செம்பொன் மணி மன்றில் எடுத்த செய்ய பாதத்து திருச்சிலம்பின் இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் #58 ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் கூட பெற்ற பெரும் பேற்றின் கொள்கை வாய்ப்ப கும்பிடுவார் நீட பணியும் காலம் எலாம் நின்று தொழுது புறம் போந்து மாட திரு மாளிகை வீதி வணங்கி புறத்து வைகினார் #59 பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் அரவும் புனலும் சடை ஆட ஆடுவார் கூத்து ஆராமை விரவும் காதல் மிக்கு ஓங்க வேதம் படியும் திரு படி கீழ் இரவும் பகலும் பணிந்து ஏத்தி இன்பம் சிறக்கும் அ நாளில் #60 ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு கூடும் பரிசால் முன்பு அருளி செய்த நாவலூர் கோவை நீடும் பெரும் காதலில் காண நிறைந்த நினைவு நிரம்பாமல் தேடும் பாதர் அருளினால் திருவாரூர் மேல் செல எழுந்தார் #61 அறிவின் எல்லை ஆய திரு தில்லை எல்லை அமர்ந்து இறைஞ்சி பிறவி இலாத திருவடியை பெருகும் உள்ளத்தினில் பெற்று செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி மறி சேர் கரத்தார் கோயில் பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார் #62 வழியில் குழியில் செழு வயலின் மதகின் மலர் வாவிகளின் மடு சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ள கழனி ஆரூர் கண்ணுற்றார் #63 நம்பி-தாமும் அ நாள் போய் நாகை காரோணம் பாடி அம் பொன் மணி பூண் நவ மணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் தம்பிரானை பணிந்து ஏத்தி திருவாரூரில் சார்ந்து இருந்தார் #64 வந்து சேரர் பெருமானார் மன்னும் திருவாரூர் எய்த அந்தணாளர் பெருமானும் அரசர் பெருமான் வரப்பெற்று சிந்தை மகிழ எதிர்கொண்டு சென்று கிடைத்தார் சேரலனார் சந்தம் விரைத்தார் வன் தொண்டர் முன்பு விருப்பின் உடன் தாழ்ந்தார் #65 முன்பு பணிந்த பெருமாளை தாமும் பணிந்து முகந்து எடுத்தே அன்பு பெருக தழுவ விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாது அலைபவர் போல் என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார் #66 ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் அளவு_இல் மகிழ்வு எய்த மான சேரர் பெருமானார் தாமும் வன் தொண்டரும் கலந்த பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார் பரவும் மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்கு ஆகி விளங்கியது-ஆல் #67 ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் இன்ப மொழி உரைத்து மருவ இனியார்-பால் செய்வது என்னாம் என்னும் மகிழ்ச்சியினால் பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் #68 சென்று தேவ ஆசிரியனை முன் இறைஞ்சி திரு மாளிகை வலம்கொண்டு ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் உடைய நம்பி முன் ஆக நின்று தொழுது கண் அருவி வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே என்றும் இனிய தம் பெருமான் பாதம் இறைஞ்சி ஏத்தினார் #69 தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார் தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் #70 அங்கண் அருள் பெற்று எழுவாரை கொண்டு புறம் போந்து ஆரூரர் நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் பொங்கும் விளக்கும் நிறை குடமும் பூ மாலைகளும் புகை அகிலும் எங்கும் மடவார் எடுத்து ஏத்த அணைந்து தாமும் எதிர்கொண்டார் #71 சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப கோது_இல் குணத்து பரவையார் கொழுநனார்க்கும் தோழர்க்கும் நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் முறை அளித்தார் #72 தாண்டும் புரவி சேரர் குல பெருமாள் தமக்கு திரு அமுது தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்து கறியும் போனகமும் ஈண்ட சமைப்பித்து உடன் வந்தார்க்கு எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார் #73 அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் அடியார்க்கு ஏற்கும்படியாக விரவி பெருகும் அன்பின் உடன் விரும்பும் அமுது சமைத்து அதன் பின் புரசை களிற்று சேரலன் ஆர் புடைசூழ்ந்து அவரோடு அமுது செய பரவை பிறந்த திரு அனைய பரவையார் வந்து அறிவித்தார் #74 சேரர் பெருமான் எழுந்தருளி அமுது செய்ய செய் தவத்தால் தாரின் மலி பூம் குழல் மடவாய் தாழாது அமுது செய்வி என பாரின் மலி சீர் வன் தொண்டர் அருளி செய்ய பரிகலங்கள் ஏரின் விளங்க திரு கரத்தில் இரண்டில் படியாய் ஏற்றுதலும் #75 ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெருவுறலும் நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையார்க்கு இறையவனார் #76 ஒக்க அமுது செய்து அருள உயர்ந்த தவத்து பரவையார் மிக்க விருப்பால் அமுது செய்வித்து அருளி மேவும் பரிசனங்கள் தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் #77 பனி நீர் விரவு சந்தனத்தின் பசும் கர்ப்பூர விரை கலவை வனிதை அவர்கள் சமைத்து எடுப்ப கொடுத்து மகிழ் மான் மத சாந்தும் புனித நறும் பூ மாலைகளும் போற்றி கொடுத்து பொன்_கொடியார் இனிய பஞ்ச வாசமுடன் அடைக்காய் அமுதும் ஏந்தினார் #78 ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த எல்லாம் அமர்ந்து அருளி தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து மேய விருப்பின் உடன் இருப்ப கழறிற்றறிவார் மெய் தொண்டின் சேய நீர்மை அடைந்தாராய் நம்பி செம்பொன் கழல் பணிந்தார் #79 மலை நாட்டு அரசர் பெருமானார் வணங்க வணங்கி எதிர் தழுவி கலை நாள் பெருகு மதி முகத்து பரவையார்-தம் கணவனார் சிலை நாட்டிய வெல் கொடியாரை சேர தந்தார் என கங்கை அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் #80 செல்வ திருவாரூர் மேவும் செம் புற்றில் இனிது அமர்ந்த வில் வெற்பு உடையார் கழல் வணங்கி வீதிவிடங்கப்பெருமானை மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து நாளும் மனம் மகிழ்ந்து சொல் வித்தகர் தாம் இருவர்களும் தொடர்ந்த காதலுடன் சிறந்தார் #81 இவ்வாறு ஒழுகும் நாளின்-கண் இலங்கு மணி பூண் வன் தொண்டர் மை வாழ் களத்து மறையவனார் மருவும் இடங்கள் பல வணங்கி செய்வார் கன்னி தமிழ்நாட்டு திரு மா மதுரை முதலான மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் #82 சேரர் பிரானும் ஆரூரர்-தம்மை பிரியா சிறப்பாலும் வாரம் பெருக தமக்கு அன்று மதுரை ஆலவாய் அமர்ந்த வீரர் அளித்த திரு முகத்தால் விரும்பும் அன்பின் வணங்குதற்கு சார எழுந்த குறிப்பாலும் தாமும் உடனே செல துணிந்தார் #83 இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர் ஒருவர் மலர் தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் பொருவு_இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத #84 சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி காவில் பயிலும் புறம்பு அணையை கடந்து போந்து கீழ்வேளூர் மேவி பரமர் கழல் வணங்கி போந்து வேலை கழி கானல் பூவில் திகழும் பொழில் நாகை புகுந்து காரோணம் பணிந்தார் #85 திருக்காரோண சிவ கொழுந்தை சென்று பணிந்து சிந்தையினை உருக்கு ஆர்வ செந்தமிழ்_மாலை சாத்தி சில நாள் உறைந்து போய் பெருக்கு ஆறு உலவு சடை முடியார் இடங்கள் பலவும் பணிந்து ஏத்தி அருள் காரணர்-தம் திருமறைக்காடு அணைந்தார் சேரர் ஆரூரர் #86 முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்று இறைஞ்சி செந்நீர் வாய்மை திருநாவுக்கரசும் புகலி சிவ கன்றும் அந்நேர் திறக்க அடைக்க என பாடும் திரு வாயிலை அணைந்து நல் நீர் பொழியும் விழியினராய் நாயன்மாரை நினைந்து இறைஞ்சி #87 நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அரு மணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழை பழித்து என்னும் அறைந்த பதிக தமிழ்_மாலை நம்பி சாத்த அருள் சேரர் சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதி திளைத்து எழுந்தார் #88 எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெருந்தொண்டரும் சில நாள் செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு அழுந்து மிடற்றார் அகத்தியான்பள்ளி இறைஞ்சி அவிர் மதிய கொழுந்து வளர் செம் கடை குழகர் கோடி கோயில் குறுகினார் #89 கோடி குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் நாடி காணாது உள் புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் வாடி கடிதாய் கடல் காற்று என்று எடுத்து மலர் கண்ணீர் வார பாடி காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் #90 அங்கு வைகி பணிந்து அருளால் போவார் அகன் கோணாட்டு அரனார் தங்கும் இடங்கள் வணங்கி போய் பாண்டிநாடு-தனை சார்ந்து திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி போந்து சேண் விளங்கும் மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் #91 சேரமான் தோழரும் அ சேரர் பிரானும் பணி பூண் ஆர மார்பரை ஆலவாயினில் வணங்க வாரமா வந்து அணைய வழுதியார் மன காதல் கூர மாநகர் கோடித்து எதிர்கொண்டு கொடு புக்கார் #92 தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார் அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி மன்னு திரு ஆலவாய் மணி கோயில் வந்து அணைந்தார் #93 திரு ஆலவாய் அமர்ந்த செம் சடையார் கோயில் வலம் வருவார் முன் வீழ்ந்து இறைஞ்சி வன் தொண்டர் வழி தொண்டு தருவாரை போற்றி இசைத்து தாழ்ந்து எழுந்து வாழ்ந்த தமிழ் பெரு வாய்மை மலர் புனைந்து பெரு மகிழ்ச்சி பிறங்கினார் #94 படி ஏறு புகழ் சேரர் பெருமானும் பார் மிசை வீழ்ந்து அடியேனை பொருளாக அளித்த திரு முக கருணை முடிவு ஏது என்று அறிந்திலேன் என மொழிகள் தடுமாற கடி ஏறு கொன்றையார் முன் பரவி களிகூர்ந்தார் #95 செம்பியனார் உடன் செழியர் தாம் பணிந்து சேரருடன் நம்பியும் முன் புறத்து அணைய நண்ணிய பேர் உவகையால் உம்பர்பிரான் கோயிலின் இன்று உடன் கொண்டுபோய் இருவர்க்கும் பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் #96 உளம் மகிழ கும்பிட்டு அங்கு உறையும் நாள் உதியர் உடன் கிளர் ஒளி பூண் வன் தொண்டர் தாம் இருந்த இடம் கெழுமி வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு அளவளாவிய விருப்பால் அமர்ந்து கலந்து இனிது இருந்தார் #97 அ நாளில் மதுரை நகர் மருங்கு அரனார் அமர் பதிகள் பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத செந்நாவின் முனைப்பாடி திரு நாடர் சென்று இறைஞ்சி சொல்_மாலைகளும் சாத்தி தொழ திருப்பூவணத்தை அணைந்தார் #98 நீடு திருப்பூவணத்து அணித்து ஆக நேர் செல்ல மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அ பதி காட்ட தேடு மறைக்கு அரியாரை திருவுடையார் என்று எடுத்து பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் #99 சென்று திருப்பூவணத்து தேவர் பிரான் மகிழ் கோயில் முன்றில் வலம்கொண்டு இறைவர் முன் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று பரவி பாடி நேர் நீங்கி உடன் பணிந்த வென்றி முடி வேந்தருடன் போந்து அங்கண் மேவினார் #100 அ பதியில் அமர்ந்து இறைஞ்சி சில நாளில் ஆரூரர் மு பெரும் வேந்தர்களோடு முதன் மதுரை நகர் எய்தி மெய் பரிவில் திரு ஆலவாயுடையார் விரை மலர் தாள் எப்பொழுதும் பணிந்து ஏத்தி இன்புற்று அங்கு அமர்கின்றார் #101 செம் சடையார் திருவாப்பனூர் திருவேடகம் முதலாம் நஞ்சு அணியும் கண்டர் அவர் நயந்த பதி நண்ணியே எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து மஞ்சு அணையும் மதில் மதுரை மாநகரில் மகிழ்ந்து இருந்தார் #102 பரமர் திருப்பரங்குன்றில் சென்று பார்த்திபரோடும் புரம் எரித்தார் கோயில் வலம்கொண்டு புகுந்து உள் இறைஞ்சி சிரம் மலி மாலை சடையார் திருவடி கீழ் ஆட்செய்யும் அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார் #103 கோத்திட்டை என்று எடுத்து கோது_இல் திருப்பதிக இசை மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே ஏத்திய வண் தமிழ்_மாலை இன் இசை பாடி பரவி சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில் #104 இறைவர் திருத்தொண்டு புரி அருமையினை இரு நிலத்து முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி மறை முந்நூல் மணி மார்பின் வன் தொண்டர்-தமை பணிந்தார் நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் பதி தொழ நினைந்தார் #105 அ நாட்டு திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்ச மலை நல் நாட்டு வேந்தருடன் நம்பி-தாம் எழுந்தருள மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார் தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் #106 இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் பொருவு_அரும் சீர் வன் தொண்டர் புகழ் சேரர் உடன் புனிதர் மருவிய தானம் பலவும் பணிந்து போய் மலை சாரல் குரு மணிகள் வெயில் எறிக்கும் குற்றாலம் சென்று அடைந்தார் #107 குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் குரை கழல் வணங்கி சொல் தாம மலர் புனைந்து குறும்பலா தொழுது இப்பால் முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள் செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் #108 நெல்வேலி நீற்று அழகர்-தமை பணிந்து பாடி நிகழ் பல்வேறு பதி பிறவும் பணிந்து அன்பால் வந்து அணைந்தார் வில் வேடராய் வென்றி விசயன் எதிர் பன்றி பின் செல் வேத முதல்வர் அமர் திரு இராமேச்சரத்து #109 மன்னும் இராமேச்சரத்து மா மணியை முன் வணங்கி பன்னும் தமிழ்_தொடை சாத்தி பயில்கின்றார் பாம்பு அணிந்த சென்னியர் மா தோட்டத்து திருக்கேதீச்சரம் சார்ந்த சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார் #110 திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை பரிவினால் தொழுது அகன்று பரமர் பதி பிற பணிந்து பெரு விமானத்து இமையோர் வணங்கும் பெரும் திருச்சுழியல் மருவினார் வன் தொண்டர் மலை வேந்தருடன் கூட #111 திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலை சிலையாரை கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின் இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் #112 அங்கணரை பணிந்து உறையும் ஆரூரர்க்கு அ ஊரில் கங்குலிடை கனவின்-கண் காளையாம் திரு வடிவால் செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் எங்கும் இலா திரு வேடம் என்பு உருக முன் காட்டி #113 கான பேர் யாம் இருப்பது என கழறி கங்கை எனும் வான_பேர்_ஆறு உலவும் மா முடியார் தாம் அகல ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் ஏன பேர் எயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் #114 கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளி புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் தொண்டர் அடி தொழலும் எனும் சொல் பதிக தொடை புனைவார் #115 காளையார்-தமை கண்டு தொழ பெறுவது என் என்று தாளை நாளும் பரவ தருவார்-பால் சார்கின்றார் ஆளை நீளிடை காண அஞ்சிய நீர் நாய் அயலே வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் #116 மன்னு திருக்கானப்பேர் வளம் பதியில் வந்து எய்தி சென்னி வளர் மதி அணிந்தார் செழும் கோயில் வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் அணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்து பன்னு செழும் தமிழ்_மாலை பாடினார் பரவினார் #117 ஆராத காதலுடன் அ பதியில் பணிந்து ஏத்தி சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளி கார் ஆரும் மலர் சோலை கானப்பேர் கடந்து அணைந்தார் போர் ஆன் ஏற்றார் கயிலை பொருப்பர் திருப்புனவாயில் #118 புனவாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு மனம் ஆர்வமுற சித்த நீ நினை என்னொடு என்றே வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அ பதியில் சின யானை உரித்து அணிந்தார் திரு பாதம் தொழுது இருந்தார் #119 திருப்புனவாயில் பதியில் அமர்ந்த சிவனார் மகிழும் விருப்பு உடைய கோயில் பல பணிந்து அருளால் மேவினார் பொருப்பினொடு கான் அகன்று புனல் பொன்னி நாடு அணைந்து பருப்பத வார் சிலையார்-தம் பாம்பு அணி மா நகர்-தன்னில் #120 பாதாளீச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும் வேதாதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன் சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார் #121 திருநாவலூர் வேந்தர் சேரர் குல வேந்தருடன் வருவாரை திருவாரூர் வாழ்வார்கள் எதிர்கொள்ள தரும் காதலுடன் வணங்கி தம் பெருமான் கோயிலினுள் பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் பேறு பெற புகுந்தார் #122 வாச மலர் கொன்றையார் மகிழ் கோயில் வலம்கொண்டு நேசமுற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி ஏசறவால் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால் பாச வினை தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார் #123 பரவையார் மாளிகையில் பரிசனங்கள் முன் எய்த விரவு பேர் அலங்கார விழு செல்வம் மிக பெருக வரவு எதிர்கொண்டு அடி வணங்க வன் தொண்டர் மலை நாட்டு புரவலனாரையும் கொண்டு பொன் அணி மாளிகை புகுந்தார் #124 பரவியே பரவையார் பரிவுடனே பணிந்து ஏத்தி விரவிய போனகம் கறிகள் விதம் பலவாக சமைத்து பரிகலமும் பாவாடை பகல் விளக்கும் உடன் அமைத்து திரு அமுது செய்வித்தார் திருந்திய தேன் மொழியினார் #125 மங்கலமாம் பூசனைகள் பரவையார் செய மகிழ்ந்து தங்கி இனிது அமர்கின்றார் தம்பிரான் கோயிலினுள் பொங்கு பெரும் காலம் எலாம் புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து நங்கள் பிரான் அருள் மறவா நல் விளையாட்டினை நயந்தார் #126 நிலை செண்டும் பரி செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி விலக்க_அரும் போர் தகர் பாய்ச்சல் கண்டு அருளி வென்றி பெற மலைக்கு நெடு முள் கணை கால் வாரண போர் மகிழ்ந்து அருளி அலைக்கும் அற பல புள்ளின் அமர் விரும்பி அமர்கின்றார் #127 விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு பரவையார்-தம் கொழுநனார்-தம்மை பணிந்து கொண்டு அணைவான் இரவும் பகலும் தொழுது இரக்க இசைந்தார் அவரும் எழுந்தருள #128 நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் நம்பி எழுந்தருள திங்கள் முடியார் திருவருளை பரவி சேரமான் பெருமாள் எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற பூசை செய்து அருளி பொங்கும் முயற்சி இருவரும் போய் புக்கார் புனிதர் பூங்கோயில் #129 தம்பிரானை தொழுது அருளால் போந்து தொண்டர் சார்ந்து அணைய நம்பி ஆரூரரும் சேரர் நல் நாட்டு அரசனார் ஆய பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் செம்பொன் நீடு மதில் ஆரூர் தொழுது மேல்-பால் செல்கின்றார் #130 பொன் பரப்பி மணி வரன்றி புனல் பரக்கும் காவேரி தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி மின் பரப்பும் சடை அண்ணல் விரும்பும் திரு கண்டியூர் அன்பு உருக்கும் சிந்தை உடன் பணிந்து புறத்து அணைந்தார்கள் #131 வட கரையில் திருவையாறு எதிர் தோன்ற மலர் கரங்கள் உடல் உருக உள் உருக உச்சியின் மேல் குவித்து அருளி கடல் பரந்தது என பெருகும் காவிரியை கடந்து ஏறி தொடர்வு உடைய திருவடியை தொழுவதற்கு நினைவுற்றார் #132 ஐயாறு அதனை கண்டு தொழுது அருள ஆரூர்-தமை நோக்கி செய்யாள் பிரியா சேரமான் பெருமாள் அருளி செய்கின்றார் மையார் கண்டர் மருவு திருவையாறு இறைஞ்ச மனம் உருகி நையா நின்றது இவ்வாறு கடந்து பணிவோம் நாம் என்ன #133 ஆறு பெருகி இரு கரையும் பொருது விசும்பில் எழுவது போல் வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப நீறு விளங்கும் திரு மேனி நிறுத்தர் பாதம் பணிந்து அன்பின் ஆறு நெறியா செல உரியார் தரியாது அழைத்து பாடுவார் #134 பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளி பாடும் திரு பாட்டின் முடிவில் அரவம் புனைவார்-தமை ஐயாறு உடைய அடிகளோ என்று விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமை திருப்பதிகம் நிரவும் இசையில் வன் தொண்டர் நின்று தொழுது பாடுதலும் #135 மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் கன்று தடை உண்டு எதிர் அழைக்க கதறி கனைக்கும் புனிற்று ஆ போல் ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என நின்று மொழிந்தார் பொன்னி மா நதியும் நீங்கி நெறி காட்ட #136 விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு மேல்-பால் பளிக்கு வெற்பு என்ன நண்ணி நிற்க கீழ்-பால் நீர் வடிந்த நடுவு நல்ல வழி பண்ணி குளிர்ந்த மணல் பரப்ப கண்ட தொண்டர் பயில் மாரி கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் #137 நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர் செம்பொன் முந்நூல் மணி மார்பர் சேரர் பெருமான் எதிர்வணங்கி உம்பர் நாதர் உமக்கு அளித்தது அன்றோ என்ன உடன் மகிழ்ந்து தம்பிரானை போற்றி இசைத்து தடம் காவேரி நடு அணைந்தார் #138 செம் சொல் தமிழ் நாவலர் கோனும் சேரர் பிரானும் தம் பெருமான் எஞ்சல்_இல்லா நிறை ஆற்றினிடையே அளித்த மணல் வழியில் தஞ்சம் உடைய பரிசனமும் தாமும் ஏறி தலைச்சென்று பஞ்ச நதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார் #139 அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது ஆற்றி திளைத்து இறைஞ்சி தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி பொங்கு நதியின் முன் வந்தபடியே நடுவு போந்து ஏற துங்க வரை போல் நின்ற நீர் துரந்து தொடர பெருகியதால் #140 ஆய செயலின் அதிசயத்தை கண்டு அக்கரையில் ஐயாறு மேய பெருமான் அருள் போற்றி வீழ்ந்து தாழ்ந்து மேல்-பால் போய் தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி சேய கொங்க நாடு அணைந்தார் திருவாரூரர் சேரருடன் #141 கொங்கு நாடு கடந்து போய் குலவு மலை நாட்டு எல்லையுற நங்கள் பெருமான் தோழனார் நம்பி தம்பிரான் தோழர் அங்கண் உடனே அணைய எழுந்தருளா நின்றார் எனும் விருப்பால் எங்கும் அ நாட்டு உள்ளவர்கள் எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர் #142 பதிகள் எங்கும் தோரணங்கள் பாங்கர் எங்கும் பூ வனங்கள் வதிகள் எங்கும் குளிர் பந்தர் மனைகள் எங்கும் அகில் புகை கார் நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ #143 திசைகள்-தோறும் வரும் பெருமை அமைச்சர் சேனை பெரு வெள்ளம் குசை கொள் வாசி நிரை வெள்ளம் கும்ப யானை அணி வெள்ளம் மிசை கொள் பண்ணும் பிடி வெள்ளம் மேவும் சோற்று வெள்ளம் கண்டு அசைவு_இல் இன்ப பெரு வெள்ளத்து அமர்ந்து கொடுங்கோளூர் அணைந்தார் #144 கொடுங்கோளூரின் மதில் வாயில் அணி கோடித்து மருகில் உடுத்து தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக விடும் கோதை பூம் தாமங்கள் நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து #145 நகர மாந்தர் எதிர்கொள்ள நண்ணி எண்_இல் அரங்கு-தொறும் மகர குழை மாதர்கள் பாடி ஆட மணி வீதியில் அணைவார் சிகர நெடும் மாளிகை அணையார் சென்று திருவஞ்சைக்களத்து நிகர்_இல் தொண்டர்-தமை கொண்டு புகுந்தார் உதியர் நெடுந்தகையார் #146 இறைவர் கோயில் மணி முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி எதிர் புக்கு நிறையும் காதலுடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்து பிறை கொள் முடியார்-தமை பாடி பரவி பெருமாளுடன் தொழுதார் #147 தொழுது தினைத்து புறம் போந்து தோன்ற பண்ணும் பிடி மேல் பார் முழுதும் ஏத்த நம்பியை முன் போற்றி பின்பு தாம் ஏறி பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் பொழுது மறுகில் இரு புடையும் மிடைந்தார் வாழ்த்தி புகல்கின்றார் #148 நல்ல தோழர் நம் பெருமாள் தமக்கு நம்பி இவர் என்பார் எல்லை இல்லா தவம் முன்பு என் செய்தோம் இவரை தொழ என்பார் செல்வம் இனி என் பெறுவது நம் சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார் சொல்லும் தரமோ பெருமாள் செய் தொழிலை பாரீர் என தொழுவார் #149 பூவும் பொரியும் பொன் துகளும் பொழிந்து பணிவார் பொருவு_இல் இவர் மேவும் பொன்னி திரு நாடே புவிக்கு திலதம் என வியப்பார் பாவும் துதிகள் எம்மருங்கும் பயில வந்து மாளிகையின் மாவும் களிறும் நெருங்கும் மணி வாயில் புகுந்து மருங்கு இழிந்தார் #150 கழறிற்றறியும் திருவடியும் கலை நாவலர்-தம் பெருமானாம் முழவில் பொலியும் திரு நெடும் தோள் முனைவர்-தம்மை உடன் கொண்டு விழவில் பொலியும் மாளிகையில் விளங்கு சிங்காசனத்தின் மிசை நிழல் திக்கு ஒளிரும் பூணாரை இருத்தி தாமும் நேர் நின்று #151 செம்பொன் கரக வாச நீர் தேவிமார்கள் எடுத்து ஏத்த அம் பொன் பாதம் தாம் விளக்கி அருள புகலும் ஆரூரர் தம் பொன் தாளை வாங்கி இது தகாது என்று அருள தரணியில் வீழ்ந்து எம் பெற்றிமையால் செய்தன இங்கு எல்லாம் இசைய வேண்டும் என #152 பெருமாள் வேண்ட எதிர் மறுக்கமாட்டார் அன்பில் பெருந்தகையார் திருமா நெடும் தோள் உதியர் பிரான் செய்த எல்லாம் கண்டு இருந்தார் அருமானம் கொள் பூசனைகள் அடைவே எல்லாம் அளித்து அதன் பின் ஒரு மா மதி வெண்குடை வேந்தர் உடனே அமுது செய்து வந்தார் #153 சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி ஆரம் நறு மென் கலவை மான் மத சாந்து ஆடை அணி மணி பூண் ஈர விரை மென் மலர் பணிகள் இனைய முதலாயின வருக்கம் சார எடுத்து வன் தொண்டர் சாத்தி மிக தமக்கு ஆக்கி #154 பாடல் ஆடல் இன்னியங்கள் பயில்தல் முதலாம் பண்ணையினில் நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு காலம்-தொறும் நிகழ மாடு விரை பூம் தரு மணம் செய் ஆராமங்கள் வைகுவித்து கூட முனைப்பாடியார் கோவை கொண்டு மகிழ்ந்தார் கோதையார் #155 செண்டு ஆடும் தொழில் மகிழ்வும் சிறு சோற்று பெரும் சிறப்பும் வண்டு ஆடும் மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் தண்டாமும் மத கும்ப தட மலை போர் சல மற்போர் கண்டு ஆரா விருப்பு எய்த காவலனார் காதல் செய் நாள் #156 நாவலர்-தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார் #157 திருவாரூர்-தனை நினைந்து சென்று தொழுவேன் என்று மரு ஆர்வ தொண்டருடன் வழி கொண்டு செல் பொழுதில் ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் #158 வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினராய் இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன ஒன்று நீர் வருந்தாதே உமது பதியின்-கண் இருந்து அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார் #159 ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாத மலர் தேர் ஊரும் நெடும் வீதி திருவாரூர்க்கு எழுந்தருள நேர் ஊரும் மன காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார் #160 மன்னவனார் அது மொழிய வன் தொண்டர் எதிர் மொழிவார் என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர் பெருமானை வன் நெஞ்ச கள்வனேன் மறந்து இரேன் மதி அணிந்தார் இன் அருளால் அரசளிப்பீர் நீர் இருப்பீர் என இறைஞ்ச #161 மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள்-தமை அழைத்து பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த நல் பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் பற்பலவாம் ஆளின் மிசை ஏற்றிவர பண்ணும் என #162 ஆங்கு அவரும் அன்று வரை ஆயம் ஆகிய தனங்கள் ஓங்கிய பொன் நவ மணிகள் ஒளிர் மணி பூண் துகில் வருக்கம் ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப தாங்கு பொதி வினைஞர் மேல் தலம் மலிய கொண்டு அணைந்தார் #163 மற்று அவற்றின் பரப்பு எல்லாம் வன் தொண்டர் பரிசனத்தின் முற்படவே செல விட்டு முனைப்பாடி திரு நாடார் பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் வெற்பு உயர் தோளுற தழுவி விடை அளித்தார் வன் தொண்டர் #164 ஆரூரர் அவர் தமக்கு விடை அருளி அங்கு அன்று கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும் நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய சீர் ஊரும் திரு முருகன் பூண்டி வழி செல்கின்றார் #165 திரு முருகன் பூண்டி அயல் செல்கின்ற போழ்தின்-கண் பொரு விடையார் நம்பிக்கு தாமே பொன் கொடுப்பது அலால் ஒருவர் கொடுப்ப கொள்ள ஒண்ணாமைக்கு அது வாங்கி பெருகு அருளால் தாம் கொடுக்க பெறுவதற்கோ அது அறியோம் #166 வென்றி மிகு பூதங்கள் வேடர் வடிவாய் சென்று வன் தொண்டர் பண்டாரம் கவர அருள் வைத்து அருள அன்றினார் புரம் எரித்தார் அருளால் வேட்டுவ படையாய் சென்று அவர் தாம் வரும் வழியில் இரு-பாலும் செயிர்த்து எழுந்து #167 வில் வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து கொல்வோம் இங்கு இட்டுப்போம் என கோபத்தால் குத்தி எல்லை_இல் பண்டாரம் எல்லாம் கவர்ந்து கொள இரிந்தோடி அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் மருங்கு அணைந்தார் #168 ஆரூரர்-தம்-பால் அ வேடுவர் சென்று அணையாதே நீர் ஊரும் செம் சடையார் அருளினால் நீங்க அவர் சேர் ஊராம் திரு முருகன் பூண்டியினில் சென்று எய்தி போர் ஊரும் மழ_விடையார் கோயிலை நாடி புக்கார் #169 அங்கணர்-தம் கோயிலினை அஞ்சலி கூப்பி தொழுது மங்குலுற நீண்ட திரு வாயிலினை வந்து இறைஞ்சி பொங்கு விருப்புடன் புக்கு வலம்கொண்டு புனித நதி திங்கள் முடிக்கு அணிந்தவர்-தம் திரு முன்பு சென்று அணைந்தார் #170 உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் மருவிய தம் பெருமான் முன் வன் தொண்டர் பாடினார் வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெம் சிலை அம் சொல் பதிகம் #171 பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் அவர் அருளால் வேடுவர் தாம் பறித்த பொருள் அவை எல்லாம் விண் நெருங்க நீடு திரு வாயிலின் முன் குவித்திடலும் நேர் இறைஞ்சி ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் #172 கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி மை கொண்ட மிடற்றாரை வணங்கி போய் கொங்கு அன்று மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும் செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் #173 நாவலர் மன்னவர் அருளால் விடைகொண்ட நரபதியார் ஆவியின் ஒன்றா நண்பின் ஆரூரர்-தமை நினைந்து மா அலரும் சோலை மாகோதையினில் மன்னி மலை பூவலயம் பொது நீக்கி அரசு உரிமை புரிந்து இருந்தார் #174 இ நிலைமை உதியர் பிரான் எம்பிரான் வன் தொண்டர் பொன்னி வள நாடு அகன்று மாகோதையினில் மேல் புகுந்து மன்னு திரு கயிலையினில் மத வரை மேல் எழுந்தருள முன்னர் வய பரி உகைக்கும் திரு தொழில் பின் மொழிகின்றாம் #175 மலை மலிந்த திரு நாட்டு மன்னவனார் மா கடல் போல் சிலை மலிந்த கொடி தானை சேரலனார் கழல் போற்றி நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ் கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் மேல் @5 கணநாத நாயனார் புராணம் #1 ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திரு முலை அமுது உண்ட வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா ஊழி மா கடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய் காழி மா நகர் திரு மறையவர் குல காவலர் கணநாதர் #2 ஆய அன்பர்-தாம் அணி மதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி நாயனார்க்கு நல் திருப்பணி ஆயின நாளும் அன்பொடு செய்து மேய அ திருத்தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்கு தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் #3 நல்ல நந்தவன பணி செய்பவர் நறும் துணர் மலர் கொய்வோர் பல் பணி தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சன பணிக்கு உள்ளோர் அல்லும் நண்பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர் எல்லை_இல் விளக்கு எரிப்பவர் திருமுறை எழுதுவோர் வாசிப்போர் #4 இனைய பல் திருப்பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அ திருத்தொண்டின் வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிட செய்தே அனைய அ திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்புற வழிபடும் தொழில் மிக்கார் #5 இ பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி மெய் பெரும் திருஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் ஒப்பு_இல் காதல் கூர் உளம் களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் #6 ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும் ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி மான நல் பெரும் கணங்களுக்கு நாதராம் வழி தொண்டின் நிலை பெற்றார் #7 உலகம் உய்ய நஞ்சு உண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி அலகு_இல் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும் மலர் பெரும் புகழ் புகலியில் வரும் கணநாதனார் கழல் வாழ்த்தி குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் மேல் @6 கூற்றுவ நாயனார் புராணம் #1 துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம் நல் நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார் பல் நாள் ஈசர் அடியார்-தம் பாதம் பரவி பணிந்து ஏத்தி முன் ஆகிய நல் திருத்தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார் #2 அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடி படுப்பார் பொருளின் முடிவும் காண்பு_அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க மருளும் களிறு பாய் புரவி மணி தேர் படைஞர் முதல் மாற்றார் வெருளும் கருவி நான்கு நிறை வீர செருக்கின் மேலானார் #3 வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி மன்றல் மாலை மிலைந்து அவர்-தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார் #4 மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு தில்லை வாழ் அந்தணர்-தம்மை வேண்ட அவரும் செம்பியர்-தம் தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று நல்கார் ஆகி சேரலன்-தன் மலை நாடு அணைய நண்ணுவார் #5 ஒருமை உரிமை தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியை பெருமை முடியை அருமை புரி காவல் பேணும்படி இருத்தி இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் வரும் ஐயுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார் #6 அற்றை நாளில் இரவின்-கண் அடியேன் தனக்கு முடி ஆக பெற்ற பேறு மலர் பாதம் பெறவே வேண்டும் என பரவும் பற்று விடாது துயில்வோர்க்கு கனவில் பாத மலர் அளிக்க உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனி புரந்தார் #7 அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுத திரு நடம் செய் தம்பிரானார் புவியில் மகிழ கோயில் எல்லாம் தனித்தனியே இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடி சேர்ந்தார் #8 காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து கோது அங்கு அகல முயல் களந்தை கூற்றனார்-தம் கழல் வணங்கி நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் போதம் மருவி பொய் அடிமை இல்லா புலவர் செயல் புகல்வாம் #9 தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர் பாதம் யானும் பரவி தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன் மேல்8.பொய்யடிமை இல்லாத சருக்கம் @1 பொய்யடிமை இல்லாத புலவர் புராணம் #1 செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர் மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார் #2 பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால் சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள் #3 ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் மேல் @2 புகழ்ச் சோழ நாயனார் புராணம் #1 குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும் மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர் உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் #2 அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும் இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும் வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம் #3 நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய் மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும் ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம் #4 பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும் போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும் சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம் #5 படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம் #6 துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர் வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு #7 கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண் பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால் #8 அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார் மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும் சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர் பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார் #9 ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில் #10 பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம் நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார் #11 அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில் மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் #12 வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ் இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில் முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார் #13 மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன் கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம் நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் #14 திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர் உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள் #15 சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளி தாமம் அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும் கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார் #16 விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும் துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர் அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார் #17 ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார் #18 அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக மிடல் உடை நால் கருவியுற வெம் சமரம் மிக விளைத்தார் #19 வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும் உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல் #20 கயமொடு கயம் எதிர் குத்தின அயமுடன் அயம் முனை முட்டின வயவரும் வயவரும் உற்றனர் வியன் அமர் வியல் இடம் மிக்கதே #21 மலையொடு மலைகள் மலைந்து என அலை மத அருவி கொழிப்பொடு சிலையினர் விசையின் மிசை தெறு கொலை மத கரி கொலை உற்றவே #22 சூறை மாருதம் ஒத்து எதிர் ஏறு பாய் பரி வித்தகர் வேறுவேறு தலை பெய்து சீறி ஆவி செகுத்தனர் #23 மண்டு போரின் மலைப்பவர் துண்டம் ஆயிட உற்று எதிர் கண்டர் ஆவி கழித்தனர் உண்ட சோறு கழிக்கவே #24 வீடினார் உடலில் பொழி நீடுவார் குருதி புனல் ஓடும் யாறு என ஒத்தது கோடு போல்வ பிண குவை #25 வான் நிலாவு கரும் கொடி மேல் நிலாவு பருந்து இனம் ஏனை நீள் கழுகின் குலம் ஆன ஊணொடு எழுந்தவே #26 வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள் சுரிகைப்படைசத்தி கழுக்கடை வேல் எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல் முரி உற்றன உற்றன மொய் களமே #27 வடி வேல் அதிகன் படை மாள வரை கடி சூழ் அரண கணவாய் நிரவி கொடி மா மதில் நீடு குறும் பொறையூர் முடி நேரியனார் படை முற்றியதே #28 முற்றும் பொரு சேனை முனை தலையில் கல் திண் புரிசை பதி கட்டு அழிய பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய சுற்றும் படை வீரர் துணித்தனரே #29 மாறுற்ற விறல் படை வாள் அதிகன் நூறுற்ற பெரும் படை நூழில் பட பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே #30 அதிகன் படை போர் பொருது அற்ற தலை பொதியின் குவை எண்_இல போயின பின் நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா எதிரும் கரி பற்றினர் எண்_இலரே #31 அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம் இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள் தரணி தலைவன் கழல் சார்வுறவே #32 மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய் முன் வந்த கரும் தலை மொய் குவை-தான் மின்னும் சுடர் மா முடி வேல் வளவன் தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர் #33 மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார் எண்_இல் பெருகும் தலை யாவையினும் நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே #34 கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார் #35 முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல் திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான் அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார் #36 தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார் நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார் சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும் பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார் #37 என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார் நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார் #38 அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார் செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து பொய் மாற்றும் திருநீற்று புனை கோலத்தினில் பொலிந்தார் #39 கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார் அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார் #40 புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின் அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார் #41 முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் மேல் @3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் #1 கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி நாடு ஆளும் காவலனார் நரசிங்கமுனையரையர் #2 இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய் தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார் #3 சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார் #4 ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும் வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன் நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் #5 ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார் #6 மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார் உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த பெற்றியினார்-தமை மிகவும் கொண்டாடி பேணுவார் #7 சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் #8 இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும் செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் #9 விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும் கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம் மேல் @4 அதிபத்த நாயனார் புராணம் #1 மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின் தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல் நன்மை சான்றது நாகப்பட்டின திரு நகரம் #2 தாம நித்தில கோவைகள் சரிந்திட சரிந்த தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு #3 பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல் கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் #4 நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் #5 அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி #6 புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் #7 உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல் அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும் #8 வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய #9 அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும் வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர் #10 ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள் ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார் #11 முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால் #12 வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால் ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் #13 மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் #14 சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் #15 ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார் #16 வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் #17 என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர் பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார் #18 அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல் முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ #19 பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார் #20 தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் மேல் @5 கலிக்கம்ப நாயனார் புராணம் #1 உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய் வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் #2 மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார் கற்றை சடையார் கழல் காதலுடனே வளர்ந்த கருத்து உடையார் அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார் #3 ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால் தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார் #4 அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள் மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம் தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார் #5 திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும் பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண் #6 முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய் என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும் அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம் பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார் #7 கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர் மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர் மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார் #8 வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் #9 விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார் அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார் #10 ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த காதல் அன்பர் கலிநீதியார்-தம் பெருமை கட்டுரைப்பாம் மேல் @6 கலிய நாயனார் புராணம் #1 பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும் கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர் #2 பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும் ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும் #3 பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள் அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் #4 கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு #5 எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும் பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும் தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு #6 அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார் மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார் முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார் #7 எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம் செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும் அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார் #8 எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக #9 திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம் பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர் வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார் #10 வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும் களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார் #11 செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம் பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும் தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார் #12 அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய் எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின் செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார் #13 மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில் தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார் #14 பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள் அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில் மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார் #15 திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி #16 மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல் பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம் பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார் #17 தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில் யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம் மேல் @7 சத்தி நாயனார் புராணம் #1 களமர் கட்ட கமலம் பொழிந்த தேன் குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர் #2 வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம் பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார் விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும் அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார் #3 அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை வைத்த நாவை வலித்து அரி சத்தியால் சத்தியார் எனும் திரு நாமமும் தாங்கினார் #4 தீங்கு சொற்ற திரு இலர் நாவினை வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன் ஓங்கு சீர் தொண்டின் உயர்ந்தனர் #5 அன்னது ஆகிய ஆண்மை திருப்பணி மன்னு பேர் உலகத்தில் வலி உடன் பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர் #6 ஐயம் இன்றி அரிய திருப்பணி மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர் வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார் செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர் #7 நாயனார் தொண்டரை நலம் கூறலார் சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து ஆய மா தவத்து ஐயடிகள் எனும் தூய காடவர்-தம் திறம் சொல்லுவாம் மேல் @8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் #1 வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார் ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார் #2 திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும் பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன் அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில் #3 மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார் #4 தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம் கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார் #5 பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர் திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார் விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார் #6 அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார் #7 இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ் மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார் கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் #8 பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம் #9 உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர் குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார் மேல்9.கறைக்கண்டன் சருக்கம் @1 கணம்புல்ல நாயனார் புராணம் #1 திரு கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கி பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் இருக்கு வேளூர் என்பது இ உலகில் விளங்கும் பதி #2 அ பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு_இறந்த எ பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் ஒப்பு_இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் மெய்ப்பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் #3 தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று ஓவாத ஒளி விளக்கு சிவன் கோயில் உள் எரித்து நா ஆர பரவுவார் நல்குரவு வந்து எய்த தேவாதி தேவர் பிரான் திரு தில்லை சென்று அடைந்தார் #4 தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த வில்லியார் திருப்புலீச்சரத்தின்-கண் விளக்கு எரிக்க இல்லிடை உள்ளன மாறி எரித்து வரும் அ நாளில் #5 ஆய செயல் மாண்டதன் பின் அயல் அவர்-பால் இரப்பு அஞ்சி காய முயற்சியில் அரிந்த கணம் புல்லு கொடு வந்து மேய விலைக்கு கொடுத்து விலை பொருளால் நெய் மாறி தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் #6 இ வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் மெய் வருந்தி அரிந்து எடுத்து கொடு வந்து விற்கும் புல் எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இ பணி ஒழியார் அ அரி புல் வினை மாட்டி அணி விளக்கு ஆயிட எரிப்பார் #7 முன்பு திரு விளக்கு எரிக்கும் முறை யாமம் குறையாமல் மென் புல்லும் விளக்கு எரிக்க போதாமை மெய்யான அன்பு புரிவார் அடுத்த விளக்கு தம் திரு முடியை என்பு உருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் #8 தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலை திரு விளக்கு பொங்கிய அன்புடன் எரித்த பொருவு_இல் திருத்தொண்டருக்கு மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருள சிவலோகத்து எங்கள் பிரான் கணம்புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் #9 மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி வேரியார் மலர் சோலை விளங்கு திருக்கடவூரில் காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் மேல் @2 காரிநாயனார் புராணம் #1 மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய குறையாத தமிழ் கோவை தம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் #2 அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்த உரை நயம் ஆக்கி கொங்கு அலர் தார் மன்னவர்-பால் பெற்ற நிதி குவை கொண்டு வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறை சென்னி சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் #3 யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழி பயன் இயம்ப தேவர்க்கு முதல் தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்-தம் கா உற்ற திரு கயிலை மறவாத கருத்தினர் ஆய் #4 ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி ஆய்ந்த உணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை தோய்ந்த நெடும் சடையார்-தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்த மனம் போல் உடம்பும் வட கயிலை மலை சேர்ந்தார் #5 வேரியார் மலர் கொன்றை வேணியார் அடி பேணும் காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் வாரியார் மத_யானை வழுதியர்-தம் மதி மரபில் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் மேல் @3 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம் #1 தடுமாறும் நெறி-அதனை தவம் என்று தம் உடலை அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்தது-ஆல் #2 அந்நாளில் ஆளுடையபிள்ளையார் அருளாலே தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலிகின்றார் #3 ஆய அரசு அளிப்பார்-பால் அமர் வேண்டி வந்து ஏற்ற சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து பாய படை கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம் காயும் மத_களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார் #4 எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் படுத்த நெடும் கரி துணியும் பாய்மாவின் அறு குறையும் அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக #5 வய பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும் கய பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க #6 தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல் தோயும் நெடும் குருதி மடு குளித்து நிணம் துய்த்து ஆடி போய பருவம் பணி கொள் பூதங்களே அன்றி பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது என பிறங்க #7 இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில் பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து முனை அழிந்த வட புலத்து முதல் மன்னர் படை சரிய புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து #8 வளவர் பிரான் திரு மகளார் மங்கையருக்கரசியார் களப மணி முலை திளைக்கும் தட மார்பில் கவுரியனார் இள அரவு வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம் அளவு_இல் புகழ் பெற விளங்கி அருள் பெருக அரசு அளித்தார் #9 திரை செய் கடல் உலகின்-கண் திருநீற்றின் நெறி விளங்க உரை செய் பெரும் புகழ் விளக்கி ஓங்கு நெடுமாறனார் அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே பரசு பெரும் சிவலோகத்தில் இன்புற்று பணிந்து இருந்தார் #10 பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி பல் மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பை தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம் மேல் @4 வாயிலார் நாயனார் புராணம் #1 சொல் விளங்கும் சீர் தொண்டை நல் நாட்டினிடை மல்லல் நீடிய வாய்மை வளம் பதி பல் பெரும் குடி நீடு பரம்பரை செல்வம் மல்கு திருமயிலாபுரி #2 நீடு வேலை-தன்-பால் நிதி வைத்திட தேடும் அ பெரும் சேம வைப்பாம் என ஆடு பூம் கொடி மாளிகை அ பதி மாடு தள்ளும் மரக்கல செப்பினால் #3 கலம் சொரிந்த கரி கரும் கன்று முத்து அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் #4 தவள மாளிகை சாலை மருங்கு இறை துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும்-ஆல் #5 வீதி எங்கும் விழா அணி காளையர் தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் ஓதி எங்கும் ஒழியா அணி நிதி பூதி எங்கும் புனை மணி மாடங்கள் #6 மன்னு சீர் மயிலை திரு மா நகர் தொன்மை நீடிய சூத்திர தொல் குல நன்மை சான்ற நலம் பெற தோன்றினார் தன்மை வாயிலார் என்னும் தபோதனர் #7 வாயிலார் என நீடிய மா குடி தூய மா மரபின் முதல் தோன்றியே நயனார் திருத்தொண்டின் நயப்புறு மேய காதல் விருப்பின் விளங்குவார் #8 மறவாமையான் அமைத்த மன கோயில் உள் இருத்தி உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி இறவாத ஆனந்தம் எனும் திரு மஞ்சனம் ஆட்டி அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார் #9 அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார்-தமை நாளும் நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே திகழ நெடு நாள் செய்து சிவபெருமான் அடி நிழல் கீழ் புகல் அமைத்து தொழுது இருந்தார் புண்ணிய மெய் தொண்டனார் #10 நீர் ஆரும் சடையாரை நீடு மன ஆலயத்து உள் ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்-பால் பேராத நெறி பெற்ற பெருந்தகையார்-தமை போற்றி சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம் மேல் @5 முனையடுவார் நாயனார் புராணம் #1 மாறு கடிந்து மண் காத்த வளவர் பொன்னி திரு நாட்டு நாறு விரை பூம் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன் ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும் சேறு நறு வாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் #2 விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமை குடி முதல்வர் களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் #3 மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்-பால் மா நிதியம் ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்து கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்று சென்று எறிந்து போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் #4 இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள் சொன்ன சொன்னபடி நிரம்ப கொடுத்து தூய போனகமும் கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள்ளுறுத்த கலந்து அளித்து மன்னும் அன்பின் நெறி பிறழா வழி தொண்டு ஆற்றி வைகினார் #5 மற்று இ நிலைமை பல் நெடு நாள் வையம் நிகழ செய்து வழி உற்ற அன்பின் செம் நெறியால் உமையாள் கணவன் திருவருளால் பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற உழந்த முனையடுவார் என்னும் நாமம் முன் உடையார் #6 யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார்-தமக்கு இன்பம் மேவ அளிக்கும் முனையடுவார் விரை பூம் கமல கழல் வணங்கி தேவர் பெருமான் சைவ நெறி விளங்க செங்கோல் முறை புரியும் காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் #7 செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும் குறி உண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால் வெறி உண் சோலை திரு முருகன் பூண்டி வேடர் வழி பறிக்க பறியுண்டவர் எம் பழ வினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே மேல்10.கடல் சூழ்ந்த சருக்கம் @1 கழற்சிங்க நாயனார் புராணம் #1 படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார் கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார் #2 காடவர் குரிசிலார்-ஆம் கழல் பெரும் சிங்கனார்-தாம் ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில் #3 குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார் சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார் #4 அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால் முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில் விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள் உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி #5 கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம் சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள் #6 புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர் இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் #7 வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில் சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள் ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார் #8 வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர் இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை #9 அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர் முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று #10 கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே #11 ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே #12 அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம் மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும் திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல் பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே #13 வையகம் நிகழ காதல் மா தேவி-தனது செய்ய கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும் மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம் மேல் @2 இடங்கழி நாயனார் புராணம் #1 எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில் அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம் செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின் கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு #2 முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள் பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல் குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் #3 அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின் பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர் #4 இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார் அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும் தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார் #5 சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும் மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில் #6 சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார் அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன் எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது #7 அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின் நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில் புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார் #8 மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும் அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார் #9 நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார் #10 எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார் #11 மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில் எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம் மேல் @3 செருத்துணை நாயனார் புராணம் #1 உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம் தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர் #2 சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர் நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் #3 ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில் ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள் #4 உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர் இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி #5 கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் #6 அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம் தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல் உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள் எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் #7 செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம் அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம் மேல் @4 புகழ்த்துணை நாயனார் புராணம் #1 செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார் அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார் #2 தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள் பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும் எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும் கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் #3 மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்கமாட்டாமை ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் #4 சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் #5 பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார் #6 அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின் மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார் #7 பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம் வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர் கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம் மேல் @5 கோட்புலி நாயனார் புராணம் #1 நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண் குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார் தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார் #2 மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும் பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள் #3 வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார் பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் #4 தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல் #5 மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம் உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார் #6 மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர் அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் #7 எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து #8 எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல் நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன் வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார் #9 தந்தையார் தாயார் மற்று உடன்பிறந்தார் தாரங்கள் பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும் சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார் #10 பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார் #11 அ நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார் #12 அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில் பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம் #13 மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல் @1 பத்தாராய்ப் பணிவார் புராணம் #1 ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் கூசி மிக குதுகுதுத்து கொண்டாடி மனம் மகிழ்வுற்று ஆசையினால் ஆவின் பின் கன்று அணைந்தால் போல் அணைந்து பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் #2 தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் யாவர்களும் அர்ச்சிக்கும்படி கண்டால் இனிது உவந்து பாவனையால் நோக்கினால் பலர் காண பயன் பெறுவார் மேவு_அரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் #3 அங்கணனை அடியாரை ஆராத காதலினால் பொங்கி வரும் உவகையுடன் தாம் விரும்பி பூசிப்பார் பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் தங்களுக்கும் சார்வு_அரிய சரண் சாரும் தவம் உடையார் #4 யாதானும் இ உடம்பால் செய் வினைகள் ஏறு உயர்த்தார் பாதாரவிந்தத்தின்-பால் ஆக எனும் பரிவால் காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கரு குழியில் போதார்கள் அவர் புகழ்க்கு புவனம் எல்லாம் போதா-ஆல் #5 சங்கரனை சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திரு முடியார் செங்கமல மலர் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் #6 ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிக களிப்பு எய்தி பேசினவாய் தழுதழுப்ப கண்ணீரின் பெரும் தாரை மாசு_இலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிர்ப்ப கூசியே உடல் கம்பித்திடுவார் மெய் குணம் மிக்கார் #7 நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்று ஆடும் மலர் பாதம் ஒருக்காலும் மறவாமை குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார் #8 சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டி தாம் அதனால் பங்கம் அற பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் அங்கணனை திருவாரூர் ஆள்வானை அடி வணங்கி பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய் போற்றுவார் மேல் @2 பரமனையே பாடுவார் புராணம் #1 புரம் மூன்றும் செற்றானை பூண் நாகம் அணிந்தானை உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானை கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை பரமனையே பாடுவார்-தம் பெருமை பாடுவாம் #2 தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக ஒன்றிய மெய் உணர்வோடும் உள் உருகி பாடுவார் பன்றியுடன் புள் காணா பரமனையே பாடுவார் மேல் @3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் #1 காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்-தம் பதம் கடந்து பூரண மெய் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்த தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரண கூத்தர் அடி தொண்டின் வழி அடைந்தார் மேல் @4 திருவாரூர் பிறந்தார் புராணம் #1 அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான் மரு ஆரும் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும் திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ #2 திரு கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திரு கணத்தார் பெருக்கிய சீர் திருவாரூர் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கிய ஐம்பொறி அடக்கி மற்றவர்-தம் தாள் வணங்கி ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே மேல் @5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் #1 எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதிகரித்து மெய் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் #2 தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அ பெருந்தகையார் குல பெருமை ஆம் புகழும் பெற்றியதோ #3 நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர்-தங்கள் கமல மலர் கழல் வணங்கி கசிந்து சிந்தை பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் அறிந்தவாறு புகலல்உற்றேன் மேல் @6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் #1 ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம்பெருமான் நீர் அணிந்த வேணி காதார் வெண் திரு குழையான் அருளி செய்த கற்பம் அநுகற்பம் உபகற்பம்-தான் ஆம் ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இருவினைகள் கழிவதாக #2 அம்பலத்தே உலகு உய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் இம்பர் மிசை அநாமயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கி-தனில் உணர்வுக்கு எட்டா எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் #3 ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு சீர் அணியும்படி வெந்து கொண்ட செல்வ திருநீறாம் அநுகற்பம் தில்லை மன்று உள் வார் அணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்க கூத்தர் மொழி வாய்மையாலே #4 அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆன் நிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டை ஆக்கி மடம்-அதனில் பொலிந்து இருந்த சிவாங்கி-தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் #5 இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் அந்தம்_இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லா பூமி முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய் புண்டரம் சந்திரனில் பாதி நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே #6 சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி-தன்னில் பூதியினை புதிய ஆசனத்து கொண்டு புலி அதளின் உடையானை போற்றி நீற்றை ஆதி வரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே மேல் @7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் #1 மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் நா வேய்ந்த திருத்தொண்டத்தொகையில் கூறும் நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும் பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே #2 செற்றார்-தம் புரம் எரித்த சிலையார் செல்வ திரு முருகன் பூண்டியினில் செல்லும் போதில் சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல் கணமே உடன் செல்ல முடியா பேறு பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னை பிறவியினில் செய்த தவம் பெரிய ஆமே மேல்12.மன்னிய சீர்ச் சருக்கம் @1 பூசலார் நாயனார் புராணம் #1 அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணி ஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மை நன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்த நின்ற ஊர் பூசலார்-தம் நினைவினை உரைக்கல்உற்றார் #2 உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெரும் தொண்டை நாட்டு நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர் குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை நிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊர் ஆம் #3 அரு_மறை மரபு வாழ அ பதி வந்து சிந்தை தரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல் மேல் சார வரு நெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மை பொருள் பெறு வேத நீதி கலை உணர் பொலிவின் மிக்கார் #4 அடுப்பது சிவன்-பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொள கொடுத்தும் கங்கை மடு பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில் எடுப்பது மனத்து கொண்டார் இருநிதி இன்மை எண்ணார் #5 மனத்தினால் கருதி எங்கும் மா நிதி வருந்தி தேடி எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார் நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம் தினைத்துணை முதலா தேடி சிந்தையால் திரட்டி கொண்டார் #6 சாதனத்தோடு தச்சர்-தம்மையும் மனத்தால் தேடி நாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டே ஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால் காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார் #7 அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம் வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான முடிவுறு சிகரம்-தானும் முன்னிய முழத்தில் கொண்டு நெடிது நாள் கூட கோயில் நிரம்பிட நினைவால் செய்தார் #8 தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி வாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும் தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரும் நாளில் #9 காடவர் கோமான் கச்சி கல்தளி எடுத்து முற்ற மாடு எலாம் சிவனுக்கு ஆக பெரும் செல்வம் வகுத்தல் செய்வான் நாட மால் அறியாதாரை தாபிக்கும் அந்நாள் முன் நாள் ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவிடை கனவில் எய்தி #10 நின்ற ஊர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருள போந்தார் #11 தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி திண் திறல் மன்னன் அந்த திருப்பணி செய்தார்-தம்மை கண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும் தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் #12 அ பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில் எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் மெய் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன் #13 பூசுரர் எல்லாம் வந்து புரவலன்-தன்னை காண மாசு_இலா பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம் ஆசு_இல் வேதியன் இ ஊரான் என்று அவர் அழைக்க ஒட்டான் ஈசனார் அன்பர்-தம்-பால் எய்தினான் வெய்ய வேலான் #14 தொண்டரை சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்கு எண் திசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு அண்டர் நாயகரை தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மை கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் #15 மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி என்னையோர் பொருளா கொண்டே எம்பிரான் அருள்செய்தாரேல் முன் வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில் இன்னது ஆம் என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்து சொன்னார் #16 அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே புரை_அறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி விரை செறி மாலை தாழ நில மிசை வீழ்ந்து தாழ்ந்து முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் #17 அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார்-தம்மை நன் பெரும் பொழுது சார தாபித்து நலத்தினோடும் பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணி பொன் புனை மன்றுள் ஆடும் பொன் கழல் நீழல் புக்கார் #18 நீண்ட செம் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கி பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொன் தாள் போற்றி ஆண்தகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வ பாண்டிமாதேவியார்-தம் பாதங்கள் பரவல் உற்றேன் மேல் @2 மங்கையர்க்கரசியார் புராணம் #1 மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இரும் தமிழ்நாடு உற்ற இடர் நீக்கி தங்கள் பொங்கு ஒளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே #2 பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் மாசு_இல் புகழ் நெடுமாறன் தனக்கு சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னி பின்னை ஆசு_இல் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார் #3 வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி ஒருநாளும் தம் செயலில் வழுவாது அன்பர்க்கு உடை கீளும் கோவணமும் நெய்து நல்கும் பெரு நாம சாலியர் தம் குலத்தில் வந்த பெருந்தகையார் நேசர் திறம் பேசல் உற்றாம் மேல் @3 நேச நாயனார் புராணம் #1 சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும் பார் வளர் புகழின் மிக்க பழம் பதி மதி தோய் நெற்றி கார் வளர் சிகர மாட காம்பீலி என்பது ஆகும் #2 அ நகர்-அதனில் வாழ்வார் அறுவையர் குலத்து வந்தார் மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார் பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம் சென்னியில் கொண்டு போற்றும் தேசினார் நேசர் என்பார் #3 ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடி போதுக்கு ஆக்கி ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு_எழுத்துக்கு ஆக்கி தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக பாங்கு உடை உடையும் கீளும் பழுது_இல் கோவணமும் நெய்வார் #4 உடையொடு நல்ல கீளும் ஒப்பு_இல் கோவணமும் நெய்து விடையவர் அடியார் வந்து வேண்டுமாறு ஈயும் ஆற்றால் இடையறாது அளித்து நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி அடைவுறு நலத்தர் ஆகி அரன் அடி நீழல் சேர்ந்தார் #5 கற்றை வேணி முடியார்-தம் கழல் சேர்வதற்கு கலந்த வினை செற்ற நேசர் கழல் வணங்கி சிறப்பால் முன்னை பிறப்பு உணர்ந்து பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட கொற்ற வேந்தர் கோச்செங்கண் சோழர் பெருமை கூறுவாம் மேல் @4 கோச்செங்கண் சோழ நாயனார் புராணம் #1 துலையில் புறவின் நிறை அளித்த சோழர் உரிமை சோணாட்டில் அலையில் தரளம் அகிலொடு சந்து அணி நீர் பொன்னி மணி கொழிக்கும் குலையில் பெருகும் சந்திரதீர்த்தத்தின் மருங்கு குளிர் சோலை நிலையில் பெருகும் தரு மிடைந்த நெடும் தண் கானம் ஒன்று உளது-ஆல் #2 அ பூம் கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரி தேடும் மெய் பூம் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி மை பூம் குவளை களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும்-ஆல் #3 ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்கு பெயர் ஆக ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் #4 நன்றும் இழைத்த சிலம்பி வலை பரப்பை நாதன் அடி வணங்க சென்ற யானை அநுசிதம் என்று அதனை சிதைக்க சிலம்பி-தான் இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை அன்று கழித்த பிற்றை நாள் அடல் வெள் யானை அழித்தது-ஆல் #5 எம்பிரான்-தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து வெம்பி சிலம்பி துதிக்கையினில் புக்கு கடிப்ப வேகத்தால் கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் #6 தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத_யானைக்கும் வரம் கொடுத்து முறையில் சிலம்பி-தனை சோழர் குலத்து வந்து முன் உதித்து நிறையில் புவனம் காத்து அளிக்க அருள்செய்து அருள நிலத்தின்-கண் #7 தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன் தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து மன்னு புகழ திருத்தில்லை மன்று ஆடும் மலர் பாதம் சென்னி உற பணிந்து ஏத்தி திரு படி கீழ் வழிபடு நாள் #8 மக்கள் பேறு இன்மையினால் மா தேவி வரம் வேண்ட செக்கர் நெடும் சடை கூத்தர் திரு உள்ளம் செய்தலினால் மிக்க திருப்பணி செய்த சிலம்பி குல வேந்து மகிழ் அ கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய #9 கழையார் தோளி கமலவதி-தன்-பால் கருப்ப நாள் நிரம்பி விழைவார் மகவு பெற அடுத்த வேலை-அதனில் காலம் உணர் பழையார் ஒரு நாழிகை கழித்து பிறக்கு மேல் இ பசும் குழவி உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் #10 பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அரு மணியை இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள் #11 தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன் ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் மேவும் உரிமை முடி கவித்து தானும் விரும்பு பெரும் தவத்தின் தாவு_இல் நெறியை சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான் #12 கோதை வேலர் கோச்செங்கண் சோழர்-தாம் இ குவலயத்தில் ஆதிமூர்த்தி அருளால் முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெரும் தண் சிவ ஆலயங்கள் காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார் #13 ஆனைக்காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து அங்கு மானை தரித்த திரு கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க பால் நல் களத்து தம் பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார் #14 மந்திரிகள்-தமை ஏவி வள்ளல் கொடை அனபாயன் முந்தை வரும் குல முதலோராய முதல் செங்கணார் அந்தம்_இல் சீர் சோணாட்டில் அகல் நாடு-தொறும் அணியார் சந்திரசேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார் #15 அ கோயில்-தொறும் சிவனுக்கு அமுது படி முதலான மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்து திக்கு அனைத்தும் தனி செங்கோல் முறை நிறுத்தி தேர் வேந்தர் முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார் #16 திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் பெருமானை அடி வணங்கி பேர் அன்பு தலை சிறப்ப உருகா நின்று உளம் களிப்ப தொழுது ஏத்தி உறையும் நாள் வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார் #17 தேவர் பிரான் திருத்தொண்டில் கோச்செங்கண் செம்பியர் கோன் பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளி புவனியின் மேல் ஏவிய நல் தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற மேவினார் திருத்தில்லை வேந்தர் திரு அடி நிழல் கீழ் #18 கரு நீல மிடற்றார் செய்ய கழல் அடி நீழல் சேர வரும் நீர்மை உடைய செம் கண் சோழர்-தம் மலர் தாள் வாழ்த்தி தரு நீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் திருநீலகண்டபாணர் திறம் இனி செப்பல்உற்றேன் மேல் @5 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் #1 எருக்கத்தம்புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன்-தன் சீர் திரு தகும் யாழில் இட்டு பரவுவார் செழும் சோணாட்டில் விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் பருப்பத சிலையார் மன்னும் ஆலவாய் பணிய சென்றார் #2 ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் #3 மற்று அவர் கருவி பாடல் மதுரை நீடு ஆலவாயில் கொற்றவன் திருவுள்ளத்து கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் அற்றை நாள் கனவில் ஏவ அருள் பெரும்பாணனாரை தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் #4 அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை_பாகன் தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே மன் பெரும்பாணனாரும் மா மறை பாட வல்லார் முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரை பாடுகின்றார் #5 திரிபுரம் எரித்தவாறும் தேர் மிசை நின்றவாறும் கரியினை உரித்தவாறும் காமனை காய்ந்தவாறும் அரி அயற்கு அரியவாறும் அடியவர்க்கு எளியவாறும் பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே #6 அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் செந்தமிழ் பாணனாரும் திருவருள் பெற்று சேர்ந்தார் #7 தமனிய பலகை ஏறி தந்திரி கருவி வாசித்து உமை_ஒரு_பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி இமையவர் போற்ற ஏகி எண்_இல் தானங்கள் கும்பிட்டு அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் #8 கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் வாயில் வேறு வட திசையில் வகுப்ப புகுந்து வணங்கினார் #9 மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி சால காலம் அங்கு இருந்து தம்பிரான்-தன் திருவருளால் சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின்-நின்றும் போய் ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி #10 ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசை பாணர் #11 ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் மேன்மை பதிகத்து இசை யாழில் இட பெற்று உடனே மேய பின் பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் #12 வரும் பான்மையினில் பெரும்பாணர் மலர் தாள் வணங்கி வயல் சாலி கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் மேல் @6 சடைய நாயனார் புராணம் #1 தம்பிரானை தோழமை கொண்டு அருளி தமது தடம் புயம் சேர் கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் எம்பிரானை சேரமான் பெருமாள் இணை_இல் துணைவராம் நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ மேல் @7 இசை ஞானியார் புராணம் #1 ஒழியா பெருமை சடையனார் உரிமை செல்வ திருமனையார் அழியா புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி-தனை பயந்தார் இழியா குலத்தின் இசைஞானி பிராட்டியாரை என் சிறு புன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாது-ஆல்மேல் @13.வெள்ளானைச் சருக்கம் #1 மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் காலை மலர் செங்கமல கண் கழற்று அறிவார் உடன் கூட ஆலம் உண்டார் திரு கயிலை அணைந்தது அறிந்தபடி உரைப்பாம் #2 படியில் நீடும் பத்தி முதல் அன்பு நீரில் பணைத்து ஓங்கி வடிவு நம்பி ஆரூரர் செம்பொன் மேனி வனப்பு ஆக கடிய வெய்ய இருவினையின் களைகட்டு எழுந்து கதிர் பரப்பி முடிவு_இலாத சிவ போகம் முதிர்ந்து முறுகி விளைந்தது-ஆல் #3 ஆரம் உரகம் அணிந்த பிரான் அன்பர் அணுக்க வன் தொண்டர் ஈர மது வார் மலர் சோலை எழில் ஆரூரில் இருக்கும் நாள் சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி சாரல் மலை நாடு அணைவதற்கு தவிரா விருப்பின் உடன் போந்தார் #4 நல் நீர் பொன்னி திரு நாட்டு நாதர் மகிழும் திரு பதிகள் முன்னி இறைஞ்சி அகன்று போய் முல்லை படப்பை கொல்லை மான் துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் சென்னி மிசை வைத்தவர் செல்வ திருப்புக்கொளியூர் சென்று அடைந்தார் #5 மறையோர் வாழும் அ பதியின் மாட வீதி மருங்கு அணைவார் நிறையும் செல்வத்து எதிர் மனைகள் இரண்டில் நிகழ் மங்கல இயங்கள் அறையும் ஒலி ஒன்றினில் ஒன்றில் அழுகை ஒலி வந்து எழுதலும் ஆங்கு உறையும் மறையோர்களை இரண்டும் உடனே நிகழ்வது என் என்றார் #6 அந்தணாளர் வணங்கி அரும் புதல்வர் இருவர் ஐயாண்டு வந்த பிராயத்தினர் குளித்த மடுவில் முதலை ஒரு மகவை முந்த விழுங்க பிழைத்தவனை முந்நூல் அணியும் கலியாணம் இந்த மனை மற்று அந்த மனை இழந்தார் அழுகை என்று உரைத்தார் #7 இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் மொய்த்த முகைத்தார் வன் தொண்டர்-தம்மை முன்னே கண்டு இறைஞ்ச வைத்த சிந்தை மறையோனும் மனைவி-தானும் மகவு இழந்த சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் #8 துன்பம் அகல முகம் மலர்ந்து தொழுவார்-தம்மை முகம் நோக்கி இன்ப மைந்தன்-தனை இழந்தீர் நீரோ என்ன எதிர்வணங்கி முன்பு புகுந்து போனது அது முன்னே வணங்க முயல்கின்றோம் அன்பு பழுது ஆகாமல் எழுந்தருள பெற்றேம் என தொழுதார் #9 மைந்தன்-தன்னை இழந்த துயர் மறந்து நான் வந்து அணைந்து அதற்கே சிந்தை மகிழ்ந்தார் மறையோனும் மனைவி-தானும் சிறுவனை யான் அந்த முதலையின் வாய்-நின்றும் அழைத்து கொடுத்த அவிநாசி எந்தை பெருமான் கழல் பணிவேன் என்றார் சென்றார் இடர் களைவார் #10 இவ்வாறு அருளி செய்து அருளி இவர்கள் புதல்வன்-தனை கொடிய வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் வை வாள் எயிற்று முதலை கொடுவருதற்கு எடுத்தார் திருப்பதிகம் #11 உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியா முன் உயர்ந்த வரை பான்மையில் நீள் தடம் புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து திரை பாய் புனலின் முதலை வாயில் உடலில் சென்ற ஆண்டுகளும் தரை-பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான் #12 பெரு வாய் முதலை கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளை-தனை உருகா நின்ற தாய் ஓடி எடுத்து கொடுவந்து உயிர் அளித்த திருவாளன்-தன் சேவடி கீழ் சீல மறையோனொடு வீழ்ந்தாள் மருவார் தருவின் மலர்_மாரி பொழிந்தார் விசும்பில் வானோர்கள் #13 மண்ணில் உள்ளார் அதிசயித்தார் மறையோர் எல்லாம் உத்தரியம் விண்ணில் ஏற விட்டு ஆர்த்தார் வேத நாதம் மிக்கு எழுந்தது அண்ணலாரும் அவிநாசி அரனார்-தம்மை அரு_மறையோன் கண்ணின் மணியாம் புதல்வனையும் கொண்டு பணிந்தார் காசினி மேல் #14 பரவும் பெருமை திருப்பதிகம் பாடி பணிந்து போந்து அன்பு விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார் முரசம் இயம்ப கலியாணம் முடித்து முடி சேரலர்-தம்-பால் குரவ மலர் பூம் தண் சோலை குலவு மலை நாடு அணைகின்றார் #15 சென்ற சென்ற குட புலத்து சிவனார் அடியார் பதிகள்-தொறும் நன்று மகிழ்வுற்று இன்புற்று நலம் சேர் தலமும் கானமும் துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி குன்ற வள நாட்டு அகம் புகுந்தார் குலவும் அடியேன் அகம் புகுந்தார் #16 முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு அ நாட்டு அரனார் அடியார்கள் முன்னே ஓடி அறிவிப்ப பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் #17 செய்வது ஒன்றும் அறியாது சிந்தை மகிழ்ந்து களிகூர்ந்து என் ஐயன் அணைந்தான் எனை ஆளும் அண்ணல் அணைந்தான் ஆரூரில் சைவன் அணைந்தான் என் துணையாம் தலைவன் அணைந்தான் தரணி எலாம் உய்ய அணைந்தான் அணைந்தான் என்று ஓகை முரசம் சாற்றுவித்தார் #18 பெருகு மதிநூல் அமைச்சர்களை அழைத்து பெரியோர் எழுந்தருள பொருவு_இல் நகரம் அலங்கரித்து பண்ணி பயணம் புறப்படுவித்து அருவி மத மால் யானையினை அணைந்து மிசை கொண்ட அரசர் பெரும் தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் #19 மலை நாட்டு எல்லை உள் புகுந்து வந்த வன் தொண்டரை வரையில் சிலை நாட்டிய வெல் கொடி தானை சேரர் பெருமான் எதிர் சென்று தலை நாள் கமல போது அனைய சரணம் பணிய தா_இல் பல கலை நாட்டு அமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனர்-ஆல் #20 சிந்தை மகிழும் சேரலனார் திரு ஆரூரர் எனும் இவர்கள் தந்த மணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய் முந்த எழும் காதலில் தொழுது முயங்கு உதியர் முதல் வேந்தர் எந்தை பெருமான் திருவாரூர் செல்வம் வினவி இன்புற்றார் #21 ஒருவர் ஒருவரில் கலந்து குறைபாடு இன்றி உயர் காதல் இருவர் நண்பின் செயல் கண்ட இரண்டு திறத்து மாந்தர்களும் பெருகு மகிழ்ச்சி கலந்து ஆர்த்தார் பெருமாள் தமிழின் பெருமாளை வருகை வரையின் மிசை ஏற்றி தாம் பின் மதி வெண்குடை கவித்தார் #22 உதியர் பெருமாள் பெரும் சேனை ஓதம் கிளர்ந்தது என ஆர்ப்ப கதிர் வெண் திருநீற்று அன்பர் குழாம் கங்கை கிளர்ந்தது என ஆர்ப்ப எதிர் வந்து இறைஞ்சும் அமைச்சர் குழாம் ஏறும் இவுளி துகள் ஆர்ப்ப மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் #23 ஆரண மொழிகள் முழங்கிட ஆடினர் குணலைகள் அந்தணர் வாரண மத மழை சிந்தின வாசிகள் கிளர் ஒளி பொங்கின பூரண கலசம் மலிந்தன பூ_மழை மகளிர் பொழிந்திடும் தோரண மருகு புகுந்தது தோழர்கள் நடவிய குஞ்சரம் #24 அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய பரிபுர ஒலிகள் கிளர்ந்தன பணை முரசு ஒலிகள் பரந்தன சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி விரி தரு பவன நெடும் கடை விறல் மத_கரியின் இழிந்தனர் #25 தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் நான்_மறை முனிவர்கள் மங்கல நாம நல் மொழிகள் விளம்பிட மேல் நிறை நிழல் செய வெண்குடை வீசிய கவரி மருங்கு உற வானவர் தலைவரும் நண்பரும் மாளிகை நடுவு புகுந்தனர் #26 அரியணை-அதனில் விளங்கிட அடல் மழ விடை என நம்பியை வரி மலர் அமளி அமர்ந்திட மலையர்கள் தலைவர் பணிந்து பின் உரிமை நல் வினைகள் புரிந்தன உரை முடிவு_இல என முன் செய்து பரிசனம் மனம் மகிழும்படி பல பட மணி நிதி சிந்தினர் #27 இன்ன தன்மையில் உதியர்கள் தலைவர்-தாம் இடர் கெட முனைப்பாடி மன்னர் தம்முடன் மகிழ்ந்து இனிது உறையும் நாள் மலை நெடு நாடு எங்கும் பன்னகம் புனை பரமர் தம் திரு பதி பல உடன் பணிந்து ஏத்தி பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் #28 ஆய செய்கையில் நாள் பல கழிந்த பின் அரசர்கள் முதல் சேரர் தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் சேய நல் நெறி குறுகிட குறுகினார் திருவஞ்சைக்களம்-தன்னில் #29 கரிய கண்டர்-தம் கோயிலை வலம்கொண்டு காதலால் பெருகு அன்பு புரியும் உள்ளத்தர் உள் அணைந்து இறைவர்-தம் பூம் கழல் இணை போற்றி அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை சரியவே தலைக்கு தலை மாலை என்று எடுத்தனர் தமிழ்_மாலை #30 எடுத்த அ திருப்பதிகத்தின் உள் குறிப்பு இ உலகினில் பாசம் அடுத்த வாழ்க்கையை அறுத்திட வேண்டும் என்று அன்பர் அன்பினில் பாட கடுத்த தும்பிய கண்டர்-தம் கயிலையில் கணத்தவருடன் கூட தடுத்த செய்கை-தான் முடிந்திட தம் கழல் சார்பு தந்து அளிக்கின்றார் #31 மன்றல் அம் தரு மிடைந்த பூம் கயிலையில் மலை_வல்லியுடன் கூட வென்றி வெள் விடை பாகர் தாம் வீற்றிருந்து அருளிய பொழுதின்-கண் ஒன்று சிந்தை நம் ஊரனை உம்பர் வெள் யானையின் உடன் ஏற்றி சென்று கொண்டு இங்கு வாரும் என்று அயன் முதல் தேவர்கட்கு அருள்செய்தார் #32 வான நாடர்கள் அரி அயன் முதலினோர் வணங்கி முன் விடைகொண்டு தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர கால் நிலம் கொள வலம்கொண்டு மேவினார் கடி மதில் திரு வாயில் #33 தேவர்-தம் குழாம் நெருங்கிய வாய்தலில் திருநாவலூரர்-தம் காவல் மன்னரும் புறப்பட எதிர்கொண்டு கயிலை வீற்றிருக்கின்ற பூ அலம்பு தண் புனல் சடை முடியவர் அருளி இ பாடு என போற்றி ஏவல் என்ற பின் செய்வது ஒன்று இலாதவர் பணிந்து எழுந்து எதிர் ஏற்றார் #34 ஏற்ற தொண்டரை அண்டர் வெள் ஆனையின் எதிர் வலம்கொண்டு ஏற்ற நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப போற்றி வானவர் பூ_மழை பொழிந்திட போதுவார் உயிர் எல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர் பெரும் துணைவரை மனத்தினில் கொடு சார்ந்தார் #35 சேரர் தம்பிரான் தோழர்-தம் செயல் அறிந்து அப்போதே சார நின்றது ஓர் பரியினை மிசை கொண்டு திருவஞ்சைக்களம் சார்வார் வீர வெண் களிறு உகைத்து விண் மேல் செலும் மெய் தொண்டர்-தமை கண்டார் பாரில் நின்றிலர் சென்ற தம் மனத்தொடு பரியும் முன் செலவிட்டார் #36 விட்ட வெம் பரி செவியினில் புவி முதல் வேந்தர்-தாம் விதியாலே இட்டமாம் சிவ மந்திரம் ஓதலின் இரு விசும்பு எழ பாய்ந்து மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை முட்ட எய்தி வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன்னாக #37 உதியர் மன்னவர்-தம் பெரும் சேனையின் உடன் சென்ற படை வீரர் கதி கொள் வாசியில் செல்பவர்-தம்மை தம் கண் புலப்படும் எல்லை எதிர் விசும்பினில் கண்டு பின் கண்டிலர் ஆதலின் எல்லாரும் முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் #38 வீர யாக்கையை மேல் கொண்டு சென்று போய் வில்லவர் பெருமானை சார முன் சென்று சேவகம் ஏற்றனர் தனி தொண்டர் மேல் கொண்ட வாரும் மும்மதத்து அருவி வெள் ஆனைக்கு வய பரி முன் வைத்து சேரர் வீரரும் சென்றனர் மன்றவர் திருமலை திசை நோக்கி #39 யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் தானை முன் செல தான் எனை முன் படைத்தான் எனும் தமிழ்_மாலை மான வன் தொண்டர் பாடி முன் அணைந்தனர் மதி நதி பொதி வேணி தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் #40 மாசு_இல் வெண்மை சேர் பேர் ஒளி உலகு எலாம் மலர்ந்திட வளர் மெய்ம்மை ஆசு_இல் அன்பர்-தம் சிந்தை போல் விளங்கிய அணி கிளர் மணி வாயில் தேசு தங்கிய யானையும் புரவியும் இழிந்து சேணிடை செல்வார் ஈசர் வெள்ளி மா மலை தடம் பல கடந்து எய்தினார் மணி வாயில் #41 அங்கண் எய்திய திரு அணுக்கன் திரு வாயிலின் அடல் சேரர் தங்கள் காவலர் தடை உண்டு நின்றனர் தம்பிரான் அருளாலே பொங்கு மா மதம் பொழிந்த வெள் ஆனையின் உம்பர் போற்றிட போந்த நங்கள் நாவலூர் காவலர் நண்ணினார் அண்ணலார் திரு முன்பு #42 சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு அகன்று கோவினை கண்டு அணைந்தது என காதலின் விரைந்து எய்தி நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து ஒன்றும் மேனியர் ஊரனே வந்தனை என்றனர் உலகு உய்ய #43 அடியனேன் பிழை பொறுத்து எனை ஆண்டு கொண்டு அ தொடக்கினை நீக்கி முடிவு_இலா நெறி தரும் பெரும் கருணை என் தரத்ததோ என முன்னர் படியும் நெஞ்சொடு பல் முறை பணிந்து எழும் பரம்பரை ஆனந்த வடிவு நின்றது போன்று இன்ப வெள்ளத்து மலர்ந்தனர் வன் தொண்டர் #44 நின்ற வன் தொண்டர் நீர் அணி வேணிய நின் மலர் கழல் சார சென்று சேரலன் திரு மணி வாயிலின் புறத்தினன் என செப்ப குன்ற_வில்லியார் பெரிய தேவரை சென்று கொணர்க என அவர் எய்தி வென்றி வானவர்க்கு அருளிப்பாடு என அவர் கழல் தொழ விரைந்து எய்தி #45 மங்கை_பாகர்-தம் திரு முன்பு சேய்த்து ஆக வந்தித்து மகிழ்வு எய்தி பொங்கும் அன்பினில் சேரலர் போற்றிட புது மதி அலைகின்ற கங்கை வார் சடை கயிலை நாயகர் திரு முறுவலின் கதிர் காட்டி இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என் என அருள்செய்தார் #46 அரசர் அஞ்சலி கூப்பி நின்று அடியனேன் ஆரூரர் கழல் போற்றி புரசை யானை முன் சேவித்து வந்தனன் பொழியும் நின் கருணை தொண்டு இரை செய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திரு முன்பு வர பெற்றேன் விரை செய் கொன்றை சேர் வேணியாய் இனியொரு விண்ணப்பம் உளது என்று #47 பெருகு வேதமும் முனிவரும் துதிப்பு_அரும் பெருமையாய் உனை அன்பால் திரு உலா புறம் பாடினேன் திரு செவி சாத்திட பெற வேண்டும் மருவு பாசத்தை அகன்றிட வன் தொண்டர் கூட்டம் வைத்தாய் என்ன அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் #48 சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு நாரி_பாகரும் நலம் மிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார் ஊரன் ஆகிய ஆலாலசுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும் சார நங்கண் நாதராம் தலைமையில் தங்கும் என்று அருள்செய்தார் #49 அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு மன்னும் வன் தொண்டர் ஆலாலசுந்தரர் ஆகி தாம் வழுவாத முன்னை நல் வினை தொழில் தலை நின்றார் முதல் சேரர் பெருமானும் நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார் #50 தலத்து வந்து முன் உதயம் செய் பரவையார் சங்கிலியார் என்னும் நலத்தின் மிக கவர் வல் வினை தொடக்கு_அற நாயகி அருளாலே அலத்த மெல் அடி கமலினியாருடன் அனிந்திதையார் ஆகி மலை தனி பெருமான் மகள் கோயிலில் தம் தொழில் வழி நின்றார் #51 வாழி மா தவர் ஆலாலசுந்தரர் வழியிடை அருள்செய்த ஏழிசை திருப்பதிகம் இ உலகினில் ஏற்றிட எறி முந்நீர் ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் #52 சேரர் காவலர் விண்ணப்பம் செய்த அ திரு உலா புறம் அன்று சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்த பாரில் வேதியர் திருப்பிடவூர்-தனில் வெளிப்பட பகர்ந்து எங்கும் நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே #53 என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று உளார் அடியார் அவர் வான் புகழ் நின்றது எங்கும் நிலவி உலகு எலாம் மேல் |
No comments:
Post a Comment