ஸ்ரீ குமரகுரு

நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும். முருகன் மூல மந்திரம் : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ குமாரஸ்த்தவம் 1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம் 2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம் 3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம் 4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம் 5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம் 6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம் 7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம் 8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம் 9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம் 10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம் 11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம் 12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் 13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம் 14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம் 15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம் 16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம் 17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம் 18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம் 19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம் 20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம் 21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம் 22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம் 23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம் 24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம் 25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம் 26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம் 27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம் 28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம் 29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம் 30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம் 31. ஓம் பூத பதயே நமோ நம ஹ ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம் 32. ஓம் வேத பதயே நமோ நம ஹ ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம் 33. ஓம் புராண பதயே நமோ நம ஹ ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம் 34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம் 35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம் 36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம் 37. ஓம் அகார பதயே நமோ நம ஹ ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 38. ஓம் உகார பதயே நமோ நம ஹ ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 39. ஓம் மகார பதயே நமோ நம ஹ ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம் 41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம் 42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம் 43. ஓம் அமார பதயே நமோ நம ஹ ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம் 44. ஓம் குமார பதயே நமோ நம ஹ. ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம். ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆதி சங்கரர் அருளிச்செய்த சுப்ரமண்ய புஜங்கம்
சுப்ரமண்ய புஜங்கம் (தமிழாக்கம்)
ஸ்ரீ சுப்பிரமணியர் திருவடி சமர்ப்பணம் - by தமிழ்க்கவியாக்கம் : குற்றாலம் வள்ளிநாயகம் (கவிஞர் மதுபாலிகா) Ref : https://ia802202.us.archive.org/4/items/SubramanyaBhujangam/Subramanya%20Bhujangam.pdf
ஆசிரியர் குற்றாலம் வள்ளிநாயகம் அவர்களின் முன்னுரை :

ஓம் சரவண பவ!
ஆதிசங்கரர் அருளிச்செய்த ஸௌந்தர்ய லஹரிக்கும் கனகதாராவுக்கும் பிறகு சுப்ரமண்ய
புஜங்கத்தை தமிழ்க்கவிதையாக மொழியாக்கம் செய்ய
வேண்டுமெனத் தோன்றியது. நண்பர்களும் அவ்வாறே கேட்டுக்கொண்டனர். 

ஒப்பீட்டு நோக்கில் புஜங்க (சமஸ்கிருதத்தில்) வரிகள் படிக்க எளிமையாக
இருந்தன. மேலும் ப்ரம்மஸ்ரீ தேதியூர் சுப்ரமண்ய சாஸ்திரிகளுடைய
வியாக்யானம் மற்றும் கவிதாமணி அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களின்
தமிழ்க்கவியாக்கம் 

இவைகளை வாசித்துவிட்டு யாவருக்கும் புரியும் விதத்தில் தமிழில்
கவிதைகளாக எழுத முனைந்தேன். நான் எண்ணியது போல் அது அத்தனை சுலபமாக
இல்லை. செந்தூர்முருகனின் அருளாலும், ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமியின்
அனுக்கிரகத்தாலும் மட்டுமே இது  சாத்தியமாகி இருக்கிறது. 

சனாதன தர்மத்திற்கு புத்துயிரூட்டும் பணியில் ஆதி சங்கர பகவத் பாதாள்
அவர்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பிறசமயத்தார்களை தர்க்கத்திலும்,
வாதத்திலும் வென்று அத்வைத நெறியை நிலை நாட்ட முயற்சித்தார். ஆனால்
அயலாரின் ஏவல் (அபிசார ப்ரயோகம்) காரணமாக சங்கரரைப் கொடூரமான வியாதி
பீடித்தது. அவ்வியாதியை முறியடிக்கும் முகத்தான் ப்ரணவஸ்வரூபி,
வேதநாயகன், சிவசக்தி மைந்தன், அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தவன்,
வள்ளி தேவயானை சமேதனாய் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சுப்ரமண்ய
கடவுளை புஜங்கம் பாடித் துதித்தார். அவனருளால் நோய் நீங்கி தன்பயணத்தைத்
தொடர்ந்தார். 

- பகவத்பாதரின் ரோகத்தையும் அதனால் விளைந்த மனக்கிலேசத்தையும் நீக்கி
அருள்புரிந்த சண்முகனை நாமும் சுப்ரமண்ய புஜங்கப் பாடல்களால் ஸ்தோத்திரம்
செய்து வழிபட்டு உய்வடைவோம்.

1.விநாயகர்துதி

ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மான்யா 
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்த்தி 
எப்போதும் விளையாட்டுப் பிள்ளை மலைபோல வருகின்ற தடையெல்லாம் பொடியாக்கி சிலைபோல பாசாங்காய் நிற்கின்ற கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
ஐந்து முகங்கொண்ட அப்பன் சிவனாண்டி அகம்மகிழக் கொண்டாடும் கஜமுகன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
பிரம்மனும் இந்திரனும் தேவாதி தேவர்களும் வரம் வேண்டித் துதிக்கின்ற வல்லாளன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
அளவிட முடியாத அருள்கீர்த்தி உடையவன் செலவிட முடியாத செல்வம் அளிப்பவன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
புகலிடம் அவனென்று புகுந்தவர் நெஞ்சினில் பொன்னொளிர் ஜோதியாய் அமர்ந்தவன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை
இப்போதே வணங்கினேன் இனிதான மொழியிலே முப்போதும் அருளுவான் மூலவன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை


நூல் 

2. தடை அகலும்

நஜாநாமி சப்தம் நஜாநாமி சார்த்தம்
நஜாநாமி பத்யம் நஜாநாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யாஹ்ருதித் யோததே மே 
முகான்னிஸ்ஸரந்தே கிரச்சாபி சித்ரம்.

சங்கீத மறியாத என்னுள்ளே இன்றிங்கே சப்தஸ்வரம் ஒலிக்கின்றதேன்? சங்கத்தில் அமராத எந்நாவில் தன்னாலே சாகித்யம் பிறக்கின்ற தேன்?
தடதடவென வார்த்தைகள் தாளகதி தவறாமல் விடுவிடுவென வருகின்ற தேன்? தகதகவென ஜோதியாய் என்முன்னே சண்முகம் சத்தியமாய் ஒளிர்வதால் தான்


3. ஞானசித்தி 

மஹாதேவபாலம் பஜே லோகபாலம் 
மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம் மஹீதேவ தேவம் மஹாவேத பாவம் மயூராதிரூடம் மஹா வாக்ய கூடம்

மயிலேறி வருபவனே மால்மருகா மகாதேவ புத்திரனே வேல் முருகா மகாவாக்யப் பிரணவத்தின் உட்பொருளே மறைநான்கின் மெய்ப்பொருளே எழில்வடிவே!
நிறைகுடமாம் ஞானிகளின் சிந்தையிலே உறைபவனே உலகமெல்லாம் புரப்பவனே
குறைகளைவாய், கொடுநிறைவாய், குன்றுதொறும் பிறைநிலவாய் திகழ்பவனே சுப்ரமண்யா


4. க்தி பலப்படும் 


யதா ஸன்னிதானம் கதா மானவாமே பவாம் போதிபாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரே ஆஸ்தே தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.


தூய சக்தியின் சுந்தர மைந்தாஆய பிறவிகள் அனைத்தும் கடந்து
அக்கரை சேர்க்கவே அலைவாய் அமர்ந்தவா,அக்கறை கொண்டவா, ஆண்டவா, சரணம்


5. பிறவிபோம்

யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹந்தம்

அலைத் திவலை கரைதொட்டு அழிவதுபோல் மனக்கவலை தியானத்தால் தூளாகும்!

கடற்கரை அமர்ந்தானின் தாள் பணிவோம் மனக்கறை பரிதிமுன் பனியாகும்! 

6. துயர் கெடும் 

கிரௌ மன்னிவாஸே நராயே ()திரூடா

ததா பர்வதே ராஜதே தே ()திரூடா

இதீவப்ருவன் கந்த சைலாதி ரூட 

ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோ()ஸ்து


துவண்டு வருவோர்க்கு தோள்கொடுத்து துயர்துடைக்க, அகண்ட சண்முகமாய் அவனிருக்கும் திருத்தலமாம், சுகந்த மலையேறி துதிக்கவரும் பக்தர்கள் கயிலாய மலையேறும் பாக்கியத்தை அடைவார்கள்


7. வரம் உண்டு 

மஹாம்போதி தீரே மஹாபாப சோரே
முனீந்த் ரானுகூலே ஸுகந்தாக்ய சைலே
குஹாயாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹந்தம் 

நிலையாய் அன்பர் பாவம் துடைக்க அலைவாய்க் கரையில் மலைமேல் அமர்ந்தாய்!
தவமாய் யோகியர் நோன்புகள் நோற்க.
உயர்வாய் அம்மலை தேர்ந்தே மகிழ்ந்தார்!
உளமாம் குகையில் ஒளிரும் குகனே நலமே அருள்வாய் நாளும் சரணம்

8. பாவம் பொடிபடும் 

லஸத்ஸ்வர்ணகே ஹேந்ருணாம் காமதோஹே 

ஸுமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே

ஸமுத்யத் ஸஹல்ரார்க்க துல்ய ப்ரகாசம்

ஸதாபாவயே காத்திகேயம் ஸுரேசம்

பத்தரை மாற்றுத் தங்கப் பள்ளி ரத்தினக் கட்டில் ரம்மிய மலர்கள் ஒத்தின மஞ்சம் ஒளிரும் விளக்குகள் நித்தில அழகுக் கார்த்திகைப் பெண்களின் உத்தமப் புத்திரன் ஓம்ஓம் ஓமெனும் சப்தப் ப்ரணவ வடிவேல் முருகன்! மொத்தம் ஆயிரம் சூரியன் போல முன்னே அமர்ந்தான், முனைவோர் விருப்பம் எத்தனை யாயினும் நிறைவேற் றிடுவான்சித்தனாம் செந்தி லம்பதி சீலன்,
அத்தனின் மைந்தன் அம்பிகை நேசன்சத்குரு நாதனை பணிந்தேன் சரணம்


9.அபயம் 
ரணத்தம்ஸகே () மஞ்ஜுலே ()த்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மன:ஷட்பதோ மே பவக்லேச தப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாத பத்மே 

செக்கச் சிவந்த திருவடிகள் செந்தா மரையோ வியக்கின்றேன்,

ஒக்க அவற்றுள் அமர்ந்திருக்கும் வண்டென் மனதென நினைக்கின்றேன்!

திக்கித் திணறிநான் கவலையிலே சீர்மிகக் குலையும் வேளையிலே

சிக்கெனப் பிடித்தேன் உன்பாதம் சிக்கல் இனியிலை செந்தூரா

10. வழி பிறக்கும்

ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத் கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம்பாவயே ஸ்கந்த! தே தீப்யமானாம்  வெண்ணீ ரணிந்து பன்னீர் பூசி முன்னே நிற்கும் மூலவன் முருகனின் பொன்னிற ஆடை போர்த்திய இடையில் மின்னும் மணிகள் ஓசை எழுப்பும்

அவ்விடை காந்தியில் அகத்தைக் குவித்து அருந்தவம் புரிதலே அவனியில் மோட்சம்

11. ஆபத்து நீங்கும் 

புலிந்தேச கன்யா கனா போக துங்க 

ஸ்தனாலிங்கனாஸக்த காச்மீர ராகம் நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் 

வளைத்து அணைத்த வள்ளியின் தனங்கள் வழங்கிய குங்குமம் தீற்றிய மார்பன்!
முளைத்த தாரக அசுரனை வதைத்து முனிவர் தேவர் பக்தரைக் காத்த 
உழைப்பில் சிவந்த உத்தமத் தோளினன்உருகிய நெஞ்சினன் உதிர்க்கும் கருணையில்
கிளைக்கும் துயர்கெடும், கேண்மை பலப்படும் நினைப்பே அவனாய் நித்தமும் தொழுவோம்! 

12. ஞான சித்தி 

விதௌக்லுருப்த தண்டான் ஸ்வலீலா-த்ருதாண்டான் நிரஸ்தேப சுண்டான் த்விஷத் கால தண்டான் 

ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத்ராண சௌண்டான்

ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான்


தவறுகள் செய்வது பிரம்ம னாயினும் தண்டனை உண்டென காட்டியகை!

உயரிய தேவரின் எதிரிகளை உருத்தெரி யாமல் ஆக்கியகை!

மதத்தால் தன்நிலை மறந்தகரி மறுபடி சுயம்பெற உதவியகை!

ஜகத்தைப் புரப்பதை லீலையென சகஜமாய் கருதிடும் பன்னிருகை!

இகத்திலும் பரத்திலும் எமைக்காக்கும் இன்னல்கள் துடைக்கும் கந்தனின்கை!

சுகத்திலும் துயரிலும் உடனிருக்கும் ஜோதி சொரூபனின் தூக்கியகை

 

13. தாபங்கள் தீரும் 

ஸதா சாரதா: ஷண் ம்ருகாங்கா யதிஸ்யு:
ஸமுத்யந்த ஏவஸ்திதாச் சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைச் சஹீனா:
ததாத்வன்முகானாம்ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்
களங்க மில்லா சந்திரன் ஆறு கனகச் சுடரென முன்னும் பின்னும்
விளங்கித் துலங்கி ஜொலித் தாலும் வேலனே உந்தன் அறுமுக மாகுமோ?
குழந்தை முகத்தின் குமரக் கடவுளே குவித்தேன் கரங்கள் கொடுப்பாய் சாந்தி!
மழலைக் கவிதையை மகிழ்வாய் ஏற்று வரமாய் அமைதியை தருவாய் போற்றி

14.லாபமுண்டாகும்

ஸ்புரந்மந்த ஹாஸை: ஸஹாம்ஸானி ஸஞ்சத்
கடாக்ஷவலீப்ருங்க ஸங்கோஜ் வலானி 
ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸுனோ
தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி

விண்ணவர்கோன் பரமேசன் விழிதிறக்க உதித்தனே! சண்முகனே! செம்மலர்த்தேன் தின்னவரும் வண்டுகளாய்

மின்னிவரும் உன் பார்வைபுன்னகையோ அன்னங்கள் !

தென்னவனின் கமலமுகம் சிந்தையிலே தினம் மலரும்

15. கடைக்கண் பார்வை கிட்டும்

விசாலேஷுகர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம் தயாஸ்யந்தி ஷூத்வாதசஸ்வீக்ஷணேஷு

மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதச்சேத்

பவேத் தே தயா சீல காநாம ஹானி :

காதுவரை நீண்டகண்கள் பன்னிரண்டு 

கருணைமழை பொழிவதாகும் உனதுபார்வை போதுமந்த கடைவிழியின் கீற்றுமின்னல் 

மீதமுள்ள பிறவியாவும் ஓய்ந்துபோகும்

16. மனோரதம் நிறைவேறும்


கிரீடோஜ் ஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய:
ஸுதாங்கோத்பவோ மே()ஸிஜீவேதி ஷட்தா ஜபன் மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகன்னாத தேப்ய:

உயிர்களைக் காக்கும் சிரசுகள் ஆறும் உயர்ந்த ரத்தினக் கிரீடம் தரிக்கும்!

மந்திரம் அறுமுறை மகிழ்வுடன் ஜெபித்து மகேசன் உச்சி முகர்ந்த சிரங்களை

மனதில் அழுத்தி வணங்கினேன் சரணம்மறைகளைக் காக்கும் குகனே வருக!

அனலில் புழுவாய் துடிக்கும் உயிர்களை அடைக்கலம் ஏற்கும் முருகா வருக

 

17. வீரம பிறக்கும்

ஸ்புரத் ரத்ன கேயூர ஹாராபி ராம:
சலத் குண்டல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸா: கரே சாருசக்தி:
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ்தனூஜ
சுடர்விடும் ரத்தினத் தோள்காப்பு, மாலைகள் இடைவிடா தாடுமுன் காதணிக் குண்டலம்
இளமையை பறைசாற்றும் கன்னக் கதுப்புகள் இடைதனில் சுற்றிய மரகதப் பட்டுடை
இமைப்பில் திரிபுரம் எரித்தவன் கனிந்து இமைக்கச் சுடராய் உதித்தவா, சக்தி
உமைவேல் கொண்டு நின்றவா வேலவா எமைநீ காக்கவா, இக்கணம் எழுந்துவா

18. அன்பு நிலைக்கும்

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
()ஹ்வயத்யா தராச் சங்கரே மாதுரங்காத் 
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம் 
ஹராச்லிஷ்ட காத்ரம் பஜே பாலமூர்த்திம் 

அம்மை மடியிருப்பாய் அழகா குமராவென

அத்தன் அழைத்திடவே அவசரமாய் எழுந்தேநீ

அப்பன் கையணைப்பில் அகமகிழப் போயிருப்பாய்,

இம்மை, எழுமைக்கும் இறைவன்நீ வணங்குகிறேன்

19.வினை தீரும்

குமாரேச ஸூனோ! குஹ! ஸ்கந்த! ஸேனா

பதே! சக்திபாணே! மயூராதி ரூட!

புஸிந்தாத்மஜா காந்த! பக்தார்திஹாரின்!

ப்ரபோ! தாரகாரே! ஸதா ரக்ஷமாம் த்வம்


குமரனே மகேசனின் மைந்தனே குகனே கந்தனே தளபதியே

வேலனே சத்தியுமை பாலனே வேரோடு வினைகளை அழிப்போனே!

மயிலேறும் கடவுளே மால்மருகா ஒயிலான வள்ளியின் காதலனே

அசுரர்களின் காலனாய் அவதரித்தோய் அடியாரைக் காத்திடுவாய் வணங்குகிறோம்!

 

20. தரிசனம் கிட்டும் 

ப்ரசாந்தேந்த் ரியே நஷ்டஸம்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாலோ பவா ()க்ரே குஹத்வம் 

கருணா மூர்த்தியே கந்தவேளே கடைசி நொடியில் நினைவிழந்து

கபம்வாய் நுரைக்க உணர்விழந்து கைகால் அசைவுகள் ஏதுமின்றி

மெய்வாய் நடுங்க விதிர்விதிர்த்து பொய்யாம் உறவுகள் விலகி நிற்கும்

பொழுதினில் வருவாய் சண்முகனே தருவாய் தரிசனம் புண்ணியனே

21. எமபயம் தீரும்

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஷ்ய மா பைரிதித்வம்
புரச்சக்தி பாணிர் மமாயாஹி சீக்ரம் 

கட்டு உருட்டென காலதூதாள் எட்டி மிரட்டியென் கண்முன்னே

சுட்டுக் கொளுத்திட நிற்கையிலே சுடராய் வருவாய் மயில் மீது!

இடரைக் களையும் வேல்கொண்டு இனிமேல் பயமிலை எனச்சொல்லி

இன்னுயிர் காப்பாய் சரவணனேஎன்னுயிர் அடைக்கலம் பவகுகனே

22. முக்தி கிட்டும் 

ப்ரணம்யாஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே ()னேக வாரம்
நவக்தும் க்ஷமோ ()ஹம் ததாநீம்
க்ருபாப்தே நகார்யாந்த காலே மனாகப்யுபேக்ஷா
 
கருணா மூர்த்தியே கதிர்வேலா கால்களில் விழுந்தே தண்டனிட்டேன்! ஒருநாள் கூட மறவாமல் உன்னருள் வேண்டி தவமிருந்தேன்! வாழ்வின் இறுதிக் கணங்களிலே தன்வய மிழந்து தவிக்கையிலே ஊழ்வினை என்றே உதறாமல் ஓடி வருவாய் வடிவேலா

23. கிலேசம் அகலும்

ஸஹஸ்ராண்ட போக்தாத்வயா சூரநாமா
ஹதஸ்தாரகஸ் ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதி ஸ்தம் மன: க்லேச மேகம்
நஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி?

அண்டங்கள் ஆயிரம் ஆண்டவனை சூரனை துண்டுதுண்டாக்கினாய் தொடர்ந்தாய் சம்ஹாரம்
தாரகா அசுரனும் தம்பிகளும் படைகளும் தானழிந்து அவர்கள்தம் பாவங்களும் பொசுங்கின!
ஆனாலும் என் மனதை ஆட்டுவிக்கும் கவலைகளை ஏனோ துடைக்காமல் இருக்கின்றாய் செந்தூரா
தூணாம்
உன்பாதம் பற்றினேன் வினையறுப்பாய், வீணாய் வேறெங்கும் விடைதேடி அலையமாட்டேன்

24. மனநோய் தீரும்

அஹம் ஸர்வதா துக்க பாரா வஸந்நோ

பவான் தீனபந்துஸ்த்வ தன்யம் நயாசே!

பவத்பக்தி ரோதம் ஸதாக்லுருப்த பாதம்

மமாதிம் த்ருதம் நாச'யோமா ஸுதத்வம் 


எமை வாட்டும் மனக்கவலை துக்கங்கள், சோகங்கள்

இவைகளை நீ அழித்துவிடு எந்தனுக்கு வாழ்வுகொடு!

உமைமைந்தா காத்திகேயா உரிமையுடன் கேட்கின்றேன்

உனைப்போல ஏழையர்க்கு உதவுகின்ற பேருண்டா

 

25. ஏவல் முறியும்

அபஸ்மார குஷ்ட்ட க்ஷயார்ச: ப்ரமேஹ:
ஜ்வரோன் மாத குல்மாதி ரோகாமஹாந்த:
பிசாசாச்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரேத்ரவந்தே 


வலிப்பு நோய் மனோவியாதி வாத நோய் குஷ்டம் ஜுரம் பலப்பல நோயெல்லாம் பகவானே உன் கோவில்
இலவுதியைப் பார்த்தவுடன் எங்கோ பறந்து போகும்! உடம்பினிலே அதைப்பூசி உள்ளுக்குள் அருந்திவிட
தடந்தோளா உன்னெதிரே தாரகாசுரன் வீழ்ந்தாற்போல் இடந்தெறியா தழிந்துவிடும் இன்னல்களும் வியாதிகளும்!
திடம்படும் உடம்புமனம் சிந்தனையும் தெளிவாகும்! கடன் நீங்கிப் பிறவி நோய்க் கலிதீரும் உளமாறும்

26. த்திய தரிசனம் 

த்ருசிஸ்கந்த மூர்த்தி: ச்ருதெள ஸ்கந்த கீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா

கந்தனின் மூர்த்தியை காணட்டும் கண்கள்! கந்தனின் கீர்த்தியே கேட்கட்டும் செவிகள்!
கந்தனின் லீலைகளை பேசட்டும் வாக்கு! கந்தனின் சேவைக்கே இருக்கட்டும் கைகள்
கந்தனுக் காகவே சிந்தனையும் செயல்களும் கந்தனுக் கென்றே யென் எண்சாண் உடம்பும்!
கந்தனின் சந்நிதியில் சகலமும் சமர்ப்ப ணம்! கந்தனின் திருவடியே சாஸ்வதம், சரணம்

27. வரம் பெறலாம்

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்

அபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:

ந்ருணா மந்த்ய ஜானா மபி ஸ்வார்த்த தானே

குஹாத் தேவமன்யம் நஜானே நஜானே 

தண்டனிடும் பக்தருக்கும் தவமிருக்கும் முனிவருக்கும் கண்டவுன் வரமருளும் கடவுளர்கள் கோடியுண்டு!
வீணே வாழ்நாளை கழிக்கின்ற மனிதருக்கும் விரக்தியிலே தருமத்தை மறந்துவிட்ட ஏழையர்க்கும் 
தானாய் முன்வந்து காக்கின்ற அருட்கடவுள் சேனா பதியே திருச் செந்தூர் ஜெயந்திபுரக்
கோனே உனைத்தவிர யாருண்டு? சரணடைந்தேன்! வானே, வளர்மதியேவள்ளலே! வாழ்விப்பாய்

28.குடும்ப மேன்மை

களத்ரம் ஸுதா பந்து வர்க்க: பசுர்வா
நரோ வா()நாரீக்ருஹே யே மதீயா:
பஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம் 
ஸ்மரந்தச்ச தே ஸந்து ஸர்வே குமார 

மனைவியும் மக்களும் சுற்றமும் பசுக்களும் மனையில் உள்ள அனைவரும் உன்னை
மனதால் வரித்து வணங்கி மகிழ்வர் புனையும் பாடலும் பூஜையும் நின்னையே
புகழும் வழுத்தும் நினைவினில் நிறுத்தும்அனைத்தும் நீயே ஆனாய் குமரா!
அலைவாய் அமர்ந்த சண்முகத் தரசே அருள்வாய் சேவற்கொடியுடை குகனே


29. விஷம் இறங்கும்

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே சதுஷ்டா

ததா வ்யாத யோ பாதகாயே மதங்கே

பவச் சக்தி தீக்ஷணாக்ர பின்னாஸ் ஸுதூரே

வினச்'யந்து தே சூர்ணிதக்ரௌஞ்ச சை'ல 

கூர்வேலால் கிரௌஞ்ச மலையை பிளந்தவா குறிவைத்து என்னைத் தாக்க வரும்
பக்ஷிகள் பூச்சிகள்மிருகங்கள் புரியாத வியாதிகள் யாவையும் எதிர்கொண்டு தூள்தூளாக்குவாய்.

தோகை மயில்மீது சக்திவேல் கையேந்தி தோழனாய் விரைந்துவா துயரெலாம் போக்கவா!

வாகை சூடிவா வள்ளியொடு தேவயானி காதலனாய் கண்முன்னே இக்கணமே தோன்றுவாய்!  


30.பழிவிலகும்

ஜனித்ரீ பிதா சஸ்வபுத்ராபராதம் 

ஸஹேதே நகிம் தேவஸேனாதி நாத

அஹம் சாதிபாலோ பவான் லோக

தாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேஈ 


பெற்றவன் நீயன்றோ , குழவியான் குற்றம் செய்யினும் பொறுத்தருள்!

பெற்றற் கரிய பேறே! தேவர்களின் உற்ற சேனாபதித் தலைவா!

தெற்றை மன்னித்தே எனக்காப்பாய்! எந்நாட்டவர்க்கும் இளவரசே

31..புகழ் ஓங்கும்
நம:கேகினே சக்தயே சாபிதுப்யம்
நம: ச்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன: ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோ ()ஸ்து 
வேத வடிவே மயிலே போற்றி வேலவன் தாங்கும் வேலே போற்றி
தத்வ ஸ்வரூப செம்மறி போற்றி தலைவனின் கொடியமர் சேவல் போற்றி
அண்ணலின் கால்தொடும் கடலே போற்றி அலைவாய் செந்தூர் அமர்ந்தாய் போற்றி
கந்தா கடம்பா கதிர்வேல் போற்றி  எந்தன் வணக்கம் ஏற்பாய் போற்றி

32. வெற்றி உறுதி

ஜயானந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயா மோக கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதாமுக்தி தானேச' ஸுனோ 

ஆனந்த மூர்த்தியே போற்றி  அருள்வெள்ள ஜோதியே போற்றி

வான்தொடும் கீர்த்தியே போற்றி வளர்கின்ற அனுபூதி போற்றி 

பேணுவாய் உயிர்களை போற்றி  பிறப்பின்றி தேற்றுவாய் போற்றி  

தீனர்களின் நாயகா போற்றி  சிவபாலா முருகா போற்றி 

23. மங்களம் (நூற்பயன்)

புஜங்காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் :
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸுபுத்ரான் களத்ரம் தனம் தீர்க்க மாயு:
லபேத் ஸ்கந்த ஸாயுஜ்ய மந்தே நரஸ்

அப்பன் கந்தனை நினைத்து வணங்கி தப்பா தனுதினம் புஜங்கம் படிக்க
இனியாள் மனைவி இயைந்த மக்கள் நனிமிகு செல்வம் நயந்த வாழ்க்கை 
நெடிய ஆயுள்  நிகரில் மகிழ்ச்சி அனைத்தும் எய்துவர்  அவனருளாலே!
சரவண பவனை சண்முகக் கடவுளை சிரமேற் கொண்டு  சிந்தையில் இருத்த 
வரமாய்க் கந்தனின் பதமலர் அடையலாம் வாழ்க வள்ளி குஞ்சரி மணாளன்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------- ஸ்ரீ சுப்பிரமணியர் புஜங்கம் தமிழாக்கம் - கவியரசு

 முன்னுரை


'புஜங்கம்' என்றால் 'தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு' என்று பொருள்.
இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை
பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.

ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டுபொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச்
செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவபரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி
'ஜயந்தி புரம்' எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, 'ஜய வின்ப வடிவமாய்' விளங்கும் என்
குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித்
திருநீறும் அளித்தருளினார்.

ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி
புரத்தை அடைந்தார்.அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில்
வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே 'பாம்பு' எனும் பொருளைத் தரும் 'புஜங்கம்' என்னும் பெயரைக் கொண்ட
புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத்
திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார்.இது தான் 'திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்' தோன்றிய வரலாறாகும்.

பத்திச் சுவை நனி சொட்டச் சொட்ட அமைந்த இந்நூலைத் தமிழில் மொழியாக்கம்
செய்தவர் 'கவியரசு' அவர்கள்.இவர் தென்மொழி, வடமொழி இரண்டிலும் வல்லவர். தமிழ் மொழிபெயர்ப்பு மூல நூல்
போன்றே அமைந்துள்ளது.மூல நூலில் அமைந்துள்ள கருத்துக்களில் ஒன்றையும் விட்டுவிடாமல்
'புஜங்கம்' என்னும் யாப்பிலேயே மொழிபெயர்த்துள்ளமை சுவைத்து மகிழத்தக்கது.
புஜங்க விருத்த யாப்புக் குறித்தும் இம்மொழிபெயர்ப்புக் குறித்தும்
ஓரறிஞரின் கருத்து வருமாறு:

புஜங்க விருத்தத்தின் அமைப்பு, `யமாதா யமாதா யமாதா யமாதா`என்று நான்கு வரிகள் கொண்டதாக இருக்கும். லகூகூ லகூகூ லகூகூ லகூகூ
என்றும் இதைக் குறிப்பிடலாம். `ல்`என்பது `லகு`விற்கு எடுத்துக்காட்டாகவும், 'கூ` என்பது `குரு`விற்கு எடுத்துக்காட்டாகவும் தரப்பட்டுள்ளன. குறிலானது `லகு` என்றும் நெடிலானது `குரு` என்றும் அழைக்கப்படுகின்றன. லகுவானது ஒற்றடுத்து வரின் அதுவும்
'குரு' என்று கொள்ளப்படும்.

01.விநாயக வணக்கம்

எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான் இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான் பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன் பொன்றாத திருவாள னருள்பேணு வோமே. ...... 1

எந்நாளும் இளையோன் வினைக்குன்று அழிப்பான் இபமாமுகன் பஞ்சவதனன் மதிப்பான் பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன் பொன்றாத திருவாளனருள் பேணுவோமே. ...... 1 விநாயகன் எப்பொழுதும் இளமைப் பருவ முடையோன். நம்முடைய மலை போன்ற தீவினைகளை நாம் அவனை வணங்கிய மாத்திரத்தில் பொடிப்பொடியாக்கி விடுவான். யானை முகனாயினும் பஞ்சவதனனாலும் (சிங்கத்தாலும், ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகத்தினையுடைய சிவனால்) மதிக்கப்படுகிறான். திருமால் முதலிய தேவர்களாலும் முனிவர்களாலும் தேடப்படும் கணேசன். அளவற்ற மங்களமுடையோனாகிய கணேசனின் அருளை நாடுவோமே. வினைக்குன்று - வினையாகியமலை. இபமா முகன் - யானைமுகன். குன்றை அழித்து விளையாடல் யானைக்கு இயல்பு. மேட்டினைக் கண்டால் கொம்பாலும் காலாலும் அதனைச் சிதைத்து விளையாடுதல் யானையின் இயல்பு. 'இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (திருக்குறள்) ... ஆதலின், வினை மலையை அழித்தல் விநாயகராகிய யானை முகவருக்கு இயல்பு. பஞ்சவதனன்- சிங்கம்; சிவன். இச்சொல் சிங்கத்தை நோக்கும்போது பெரிய முகத்தை உடையது எனவும், சிவனை உணர்த்துங்கால் ஐந்து முகங்களை உடையவன் எனவும் பொருள் தரும். யானையைச் சிங்கம் கொல்லுதல் இயல்பு. ஆனால் இபமாமுகனைப் பஞ்சவதனன் மகிழ்ந்து மதிக்கின்றான் என்பது ஒரு நயம். பொன்னாகர் சுர நாடு புனிதன்: பொன்+ஆகர் = திருமகளை மார்பில் உடையவர் - திருமால் பொன்+ஆகர் = பொன்னிறமான உடலினர் - பிரமன் பொன் +நாகர் = பொன்மயமான வானுலக அரசன் - இந்திரன் பொன்+நாகர்+சுரர் = பொன்மயமான சுவர்க்கத்தில் வாழ்கின்றவர்களாகிய தேவர்கள் பொன்+நாகர் = அழகிய நாகலோகத்தார்கள். நாகலோகம், பாதாளம்
02. நூல் - அவையடக்கம்

சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே. ...... 2

சொல் ஏது பொருள் ஏது கவியேது வசனம் துகளேதும் இல்லாத என்பதறியேன் எல் ஏறும் அறுமா முகச் சோதி இதயத்து இருந்தே நறும் தேனெனும் பாடல் தருமே. ...... 2 உன்னைத் துதிக்கக் குற்றமற்ற சொல்லோ, பொருளோ, கவியோ, வசனமோ நான் அறிந்தவனல்லன். ஆயினும் உன் ஒப்பில்லா ஆறுமுகங்களுடைய பெருஞ்சோதி எனது நெஞ்சில் குடி கொண்டு நல்ல தேனாகிய பாட்டை ஊற்றெடுக்கச் செய்கிறது. துகளேதும் இல்லாத என்ற அடைமொழியைச் சொல், பொருள், கவி, வசனம் என்ற நான்கிற்கும் கூட்டிக் கொள்க. எல் ஏறும் - எல்லா ஒளிகளினும் மிக்க. அறுமா முகச் சோதி - முருகனாகிய பரஞ்சோதி. சோதியானது இதயமாகிய கமலத்திலிருந்து, அதனை மலர்த்துதலால் அதிலிருந்து கவியாகிய தேனூறும். 03.செந்தில் நாயகன் வணக்கம்

மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன். ...... 3

மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன் மனந் தன் வசம் கொள் மகான் உள்ளம் உறைவோன்

பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன் சேய் பனவர்க்கு மெய்த் தே வை நினைவின் கண் வைத்தேன். ...... 3
மயில்வாகனன், நான்கு வேதங்களும் கூறுகின்ற பொருளோன், காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவன். மகான்களுடைய உள்ளத்தில் உறைபவன். ஞானிகள் பயின்றுவரும் 'தத்வமஸி' முதலிய நான்கு மகா வாக்கியங்களின் இலக்கானவன். சிவபெருமானின் பிள்ளை. அந்தணர்களுக்கு உண்மைத் தெய்வமானவன். இவனைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன். முருகன் நான்கு வேதங்களாலும் புகழப்படுகின்ற பரம்பொருள். மனத்தைத் தன் வசமாக்கிய பெரும் தவசிகளின் உள்ளத்து உறைவோன். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற பெரியோன் எனவும் கொள்ளலாம். மகாவாக்கு 'தத்வமசி' முதலிய மகாவாக்கியங்களின் இலட்சியமாக (சொல்லின் பொருளாக) உள்ளவன். பனவர்க்கு மெய்த்தே - பிரம்ம ஞானிகளாகிய அந்தணர்கள் வழிபடும் உண்மைத் தெய்வம். தே - தெய்வம். 04.

என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம். ...... 4

என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலையினை ஏறினார் என்று நில மேல் விளக்கி
துன்னுங் கடல் செந்திலுறைகின்ற தூயோன் துங்க(ம்)ப் பராசக்திஅருள் சேயை நினைவாம். ...... 4 'என் சந்நிதிக்கு யார் வந்து என்னை வணங்குகிறார்களோ அவர்கள் பிறவிக் கடலை நீந்தியவர்களாகிறார்கள்.' எனும் இந்தத் தத்துவத்தை இவ்வுலகின்மேல் விளக்கிய தூயோன், செந்திற் கடற்கரையில் வீற்றிருக்கின்றான். அன்னை பராசத்தியின் அருட்சேயாகிய செந்திலாதிபனை நினைவில் வைப்போம். வேலை - கடல். துங்கம் - மேன்மை, உயர்ச்சி.
05.
திரைபொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்களென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே. ...... 5
திரை பொன்று மாபோலும் வினைபொன்று இன்றே திரு முன்பு வம்மின்கள் என நின்றவன் போல்

திரை பந்தியாய் வந்த கரை நின்ற செந்திற் சேயோனை இதயத்திலே வைத்துளேனே. ...... 5 'என் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல்போல, என்னை அடையும் மக்களின் தீவினைகளும் அழிந்துவிடும். ஆகையால் என் முன் வாருங்கள்' என்று உணர்த்துவது போல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தழியும். அத்தகைய சீரலைவாயில் நின்ற செந்திற்குமரனை என் மனத்தில் வைத்துளேன். செந்தில் நாயகன் கடற்கரையில் நின்று அடியார்களை அங்கு வருமாறு அழைக்கிறார். அது, பிறவிக் கடலை நீந்த விரும்புவோர் இங்கே வாருங்கள் என அவன் அழைப்பது போலும். திரை - கடலலை. பந்தி - வரிசை. பொன்றல் - அழிதல். வம்மின் - வாருங்கள். கடலலை கரை சேர்ந்தவுடன் அழிந்துவிடுகிறது. அதுபோலக் கரையில் நின்ற செந்தில் நாயகனின் திருமுன்பை அடைந்தவர்களுடைய வினை பொன்றும் என்பது கருத்து.
06.

இதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே. ...... 6


இதிலேறினோர் கைலையதிலேறினோரே என்பானெனக் கந்தவரை மீது நின்றோன் மதிபோலு மறுமா முகச் செந்தினாதன் மலர் போலு மடிவாழ்க யாம் வாழுமாறே. ...... 6 'என் இருப்பிடமாகிய இக்குன்றிலே ஏறினோர்கள், கயிலை மலை ஏறுவது உறுதி' (சிவசாமீப்பியம் பெறுவர் என்றவாறு) என்பதை உணர்த்த, கந்தமாதன பருவதத்தின் மீது நிற்கின்றான். மதிபோன்ற ஆறுமுகங்களுடைய செந்திலாதிபனின் மலர்போன்ற திருவடிகள் நாம் உய்யும் பொருட்டு என்றும் வாழ்க. கந்தவரை - சந்தனாசலம் (சந்தனமலை). செந்திலுக்குச் சந்தனாசலம் என்பதொரு பெயர். அது கைலை மலைக்கு நிகரானது. திருச்செந்தூர் சந்தனக் கல் மயமான மலையாக உள்ளது. 'கயிலை மலையனைய செந்திற்பதி வாழ்வே' - 'இயலிசையில் உசித' திருச்செந்தூர் திருப்புகழ். திருச்செந்தூரை அடைந்தவர்கள் கயிலாய கதி அடைவது உறுதி. 07.
பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே. ...... 7
பெருவேலையோரத்திலே பாவநீக்கும் பிரசித்தி சேர் சித்தர் வாழ் கந்தவெற்பில்
ஒரு சோதி வடிவோடு குகை மேவு செந்தூர் உயிருக் கொருயிர் செம்பொனடி பற்றுவோமே. ...... 7 பெரிய கடலோரத்தில் பாவத்தை நீக்கக் கூடிய பிரசித்தி பெற்ற சித்தர்கள் வாழ்ந்த கந்தமலையில், ஒப்பற்ற பிரகாசமான வடிவோடு, செந்திற் குகையில் வீற்றிருப்பவனும் உயிருக்குள் உயிராய் விளங்குபவனுமாகிய குகனின் பொன் போன்ற திருவடிகளைப் பற்றுவோமாக. பெருவேலை - பெரிய சமுத்திரம். கந்த வெற்பானது தன்னையடைந்தவர்களின் பாவத்தை நீக்குவதில் பிரசித்தி பெற்றது. சித்தர்கள் வாழ்வது. ஆன்மாக்களின் இதயமாகிய குகையில் சோதி வடிவாக அமர்ந்திருக்கும் பரம்பொருளே குகன். புறத்தும் அவன் செந்தூரில் கந்தவெற்பு குகையிலமர்ந்து இருக்கின்றான். இதுவரை விநாயக வணக்கமும் செந்தில்நாயகன் வணக்கமும் கூறப்பட்டன. இனி முருகனது திருவுருவச் சிறப்புப் பாதாதி கேசமாகக் கூறப்படுகின்றது. 08.முருகன் திருமேனிச் சிறப்பு
பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ. ...... 8
பொற் கோயிலிற் பொன்மணிக்கட்டிலேறிப் பொலிகின்ற ஒருகோடி ரவி மங்க வீசும்
விற்கோலம் நற் செந்திலிற் கார்த்திகேயன் விபுதேசனைச் சிந்தை விழைகின்றதாலோ. ...... 8 அழகிய திருக்கோவிலில், பன்மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது, பிரகாசிக்கின்ற ஒருகோடி சூரியர்களுடைய பிரகாசமும் மங்கிவிடுமாறு எல்லையற்ற சோதியையுடைய கார்த்திகேயன், தேவதேவன், வீற்றிருக்கும் மகத்துவத்தைச் சிந்தனை செய்து வணங்குவோமே. பொன்மணிக் கட்டில் - பொன்னாலும் மணியாலுமாகிய சிங்காசனம். ஒருகோடி ரவி - ஒருகோடி சூரியர்கள். விற்கோலம் (விற்+கோலம்) = ஒளிபொருந்திய திருமேனி. விபுதேசன் - தேவதேவனாகிய முருகன். 09.திருவடிச் சிறப்பு

அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா மரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே. ...... 9

அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத் தாமரைமேவும் அளி நெஞ்ச ம(அ)லைவாயின் முருகே. ...... 9 அன்னப்பறவைகள் விளங்குவதாகவும், சிவப்பு நிறமுள்ளதாயும், அமுதம் பொழிவதாகவும், பிறப்பென்ற விடாயைத் தவிர்க்கக் கூடியதாகவும், பிரகாசத்துடன் விளங்குவதாகவும் உள்ள அலைவாயிலில் வீற்றிருக்கும் முருகனின் பாத தாமரைகளின் மீது என் மனதாகிய வண்டானது சதா ரீங்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டுகின்றேன். முருகன் திருவடி தாமரையாகும். அடியார்கள் நெஞ்சம் அதில் மொய்க்கும் வண்டாகும். தாமரையில் அஞ்சம் (அன்னம்) விளங்கும். அஞ்சம் - ஹம்சம் - அன்னம். அளி - வண்டு. முருகன் திருவடித் தாமரையில் ஹம்சம் என்னும் மகாமந்திரம் பொருந்தி விளங்குகிறது. திருவடித் தாமரை சிவந்து அழகு நிறைந்து அமுதம் பொழிகிறது. அலைவாய் - திருச்செந்தூர். இது தாமரைக்கும் திருவடிக்கும் சிலேடை- இரட்டுற மொழிதல். 10.திரு அரைச் சிறப்பு  

இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்பொன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யுனுமே. ...... 10
இலகும் பொன் உடை மீது கணகண்கனென்றே இசை கிண்கிணீ கச்சையொடு பட்டையம் பொன்

அலகில் விலது வீசு செந்தூரி லம்மான் அரை நீடு மழகென்றன் அக(ம்)மேவி யுனுமே. ...... 10 ஒளிரும் தங்கமயமான உடைமீது இடுப்பில் இசைகின்ற கணகணவென ஒலிக்கும் பொற்சலங்கைகள்; இவை எல்லையற்ற பிரகாசத்தைக் கொடுக்கின்றன. அத்தகைய அழகுடைய செந்தூரி லம்மானை அகத்தில் இருத்தி தியானிப்போம். முருகன் தன்னுடைய அரையில் (இடுப்பில்) பொன்னுடையும், அதன்மேல் கச்சையும் ஒட்டியாணமும் அணிந்துள்ளான். பொன் உடை - பீதாம்பரம். பட்டை- ஒட்டியாணம். வில் - ஒளி. அரை - இடுப்பு. அகம் - மனம். 11.திருமார்பின் சிறப்பு


குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன். ...... 11

குறமாதின் இரு துங்க தனம் குங்குமந்தான் கொடு சேந்ததோ அன்பர்குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்றதோ நின்திருமார்பில் ஒளி செந்திலாயஃது தொழுவேன். ...... 11 குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ? அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன். துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்கள். அநுராகம் - காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. சேந்தல் - சேத்தல் - சிவத்தல். 12.திருக் கைகளின் சிறப்பு

அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே. ...... 12


அயனைப் புடைத் த(அ)ண்ட நிரையைப் புரந்தே ஆனைக் கை வென்றந்தகனையும் துரந்தே

துயரிந்த்ரன் பகை வென்ற பயமென்ற நின்கை துணை செய்க உயர் செந்திலிறைவா எமக்கே. ...... 12 பிரமனைப் புடைத்துச் சிறையிலிட்டு, அண்டங்களை எல்லாம் காத்தருளி, யானையின் தும்பிக்கையையும் வடிவினால் வென்று, எமனை ஓட்டி, சூரபதுமனைக் கொன்று இந்திரனின் துயரை நீக்கி, தனை அடைந்தோருக்கு என்றும் அபயமளிக்கின்ற நின் கை எனக்குத் துணை செய்தருள்க. அயன் - பிரமன். அண்டநிரை - உலகக் கூட்டங்கள். அபயம் என்றல் - அஞ்சேல் என்பது. 13.திருமுகச் சிறப்பு

பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ. ...... 13

பனியென்று முளவாயோர் பங்கம் படாமல் பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதி மூவிரண்டென்று முளவேல் நளிர் செந்திலோ ஆறு முக மொக்கு மாலோ. ...... 13 எப்போதும் குளிர்ந்தனவாய், களங்கம் இல்லாதனவாய், பரிபூரணமான நிலவை எல்லாத் திக்கிலும் வீசுகின்ற மதியங்கள் ஆறு என்றைக்கும் உள்ளனவானால் அவை திருச்செந்திலாதிபனின் முகங்களுக்கு ஒப்பாகும். அவ்வாறு இல்லாமையால் முருகன் திருமுகங்கள் ஒப்பில்லாதனவாம். பங்கம் - களங்கம். நளிர் - குளிர்ச்சி. தவ - மிகவும். இது இல்பொருளுவமை.

14.

சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண்டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன். ...... 14

சிவன் மைந் நகை என்ற அனமென்று மேவித் திகழுங் கடைக் கண்களெனும் வண்டுலாவித்

தவவின்சொலமுதூறு கொவ்வைச்செவிதழ்சேர் சலச(ம்) ங்கள் எனு மாறு முகம் என்று காண்பேன்?. ...... 14 சிவனின் மைந்தனாகிய உன்முகத்தில் விளங்கும் புன்னகை தாமரை மலரிலிருக்கும் அன்னப்பறவைக்கு நிகரானது. எப்பொழுதும் சலித்துக் கொண்டிருக்கும் உன் கடைக்கண் பார்வைகளோ, தாமரை மலரிலுள்ள வண்டுகளை ஒக்கும். மேன்மையான அமுதூறும் இன்சொற்களையுடைய திருவாயிதழ் தாமரையிதழ் ஒக்கும். இத்தகைய ஆறுசெந்தாமரை மலர்கள் போன்றுள்ள உன் ஆறுமுகங்களை என்று காண்பேன்? சலசம் - தாமரை. தவ - மிக. அனம் - அன்னம்.
15.திருக்கண்களின் சிறப்பு

குறைவென்கொ லோசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன்மீதி லொருபோது விழுமேல். ...... 15

குறைவு என்கொலோ? செந்திலாய்! காதளாவிக் குறையாத அருள் வீசு விழி பன்னிரண்டில்,
இறையே, ஓர் விழியின் கடைப்பார்வை ,தொழும் இவ் எளி நாயினேன் மீது ஒருபோது விழுமேல். ...... 15 முருகனின் கண்கள் காதளவில் நீண்டுள்ளன. அருளொளி வீசுகின்றன. அத்தகைய பன்னிரு கண்களில் ஒன்றன் பார்வையாவது எளியேனாகிய என்மீது வீசினால் உனக்கு என்ன குறைவு உண்டாகும்? உனக்கு ஒன்றும் குறைந்துபோகாது. உனக்குப் பெருமையே உண்டாகும் என்பது குறிப்பு. இறையே - சிறிதே. எளி நாயினேன் - இழிந்த நாய் போன்ற என்மேல். ஒருபோது - ஒருதடவை. ஏ செந்தில்! உன் திருக்கண்பார்வை என்மேல் படுமாயின் அதன்பின் எனக்கு என்ன குறைவு உண்டு என்றும் பொருள்படும்.

16.திருமுடிச் சிறப்பு

எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே. ...... 16

எனதங்கம் நீ மைந்த வாழ்க என்று மோந்தே ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நின திங்கள் முகம் ஆறு மறவாது பணிவேன் நிலைநின்ற செந்தூரில் வெளி நின்ற தேவே. ...... 16 சிவபெருமான், முருகனை, 'மைந்த, நீ என் உடம்பே,' என்று சொல்லி, முருகனது முகத்தை முகர்ந்து களிக்கின்றான். அத்தகைய கிரீடமணிந்த திங்கள் போன்ற திருமுகத்தை நான் மறவாது தியானம் பண்ணுவேன். அங்கம் - உடல். இத்துடன் பாதாதிகேச வருணனை முடிந்தது. 17.வேண்டுகோள்
வரவேணு மடியேன் முனெசெந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச. ...... 17
வரவேணு அடியேன் முன் செந்தினாதன் மணிமாலை கேயூர அசை குண்டலங்கள்
பிரகாசமிக மாடையுடையோடு கையிற் பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச. ...... 17 மார்பில் நவரத்தின மணி மாலைகளுடனும், தோள்களில் ஆபரணங்களுடனும் கையில் குறி பிசகாத வடிவேலின் மிகுசோதி வீசவும் செந்திலாதிபன் அடியேன் முன் தோன்றி என்னை உய்விக்க வேண்டுகின்றேன். 18.தோத்திரங்கள்
குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன். ...... 18
குமரா எனச் சங்கரன் கைகள் நீட்டக் குதித்து அம்மை மடி நின்று பரனைத் தழீஇக்கொண்டு
அமரா மகிழ்ந்தாடு செந்தூரில் எம்மான் அழகான மழமேனி மறவாது நினைவேன். ...... 18 அம்மையின் மடியில் மழமேனியுடன் முருகன் வீற்றிருக்கக், 'குமரா' என்றழைத்துச் சங்கரன் கைகளை நீட்டுகின்றார். அம்மையின் மடியினின்றும் முருகன் குதித்துச் சென்று அப்பனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடுகின்றார். இவ்வாறு பரனைத் தழுவிக் கொண்டு மகிழ்ந்து விளையாடுகின்ற செந்தூரனாகிய எம்பிரானின் அழகான இளமேனியை நான் மறவாது நினைப்பேன். அமரா - அமர்ந்து, இருந்து. விரும்பி எனலுமாம். மழமேனி - குழந்தைத் திருமேனி. 19.
குமாரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
எமார்வ ப்ரபோ தாரகாரீ மயூரா
இனாநீவு வாய்செந்தி லாயஞ்ச லென்னே. ...... 19
குமாரா சிவன் சேய் குறக் கன்னி நாதா குகா கந்த சேனாபதீ சத்திபாணீ எம் ஆர்வப் பிரபோ தாரகாரீ

மயூரா இனா நீவுவாய்செந்திலா அஞ்சல் என்னே. ...... 19
மாரன் என்ற மன்மதனை வென்ற குமரா! சிவகுமாரா! குறவள்ளியின் கணவனே! ஆன்மாக்களின் இதய தாமரைக் குகையில் வாழ்பவனே! ஆறு குழந்தைகளும் ஒன்றாகத் திரட்டப்பட்டுக் கந்தன் என்ற திருப்பெயருடன் வழங்குபவனே! தேவசேனாபதியே! பராசத்தியின் வடிவாகிய சத்தி வேலினைக் கையில் ஏந்தியவனே! எம்முடைய அன்பினை உடைய பிரபுவே! தாரகாசூரனை அழித்தவனே! மயில்வாகனனே! என்று நாமங்கள் பல ஓதித் தொழுவாரின் துன்பங்களை நீக்குபவனே!. செந்திலாதிபனே! என்னை அஞ்சல் என்று அருள்வாயாக. குமரன் - என்றும் இளையோன், மாரனைத் (மன்மதன்) தாழ்வுசெய்தவன்; அஞ்ஞானத்தை அழிப்பவன் எனப் பலபொருள்கள் தரும். சிவன் சேய் - 'சிவனின் சேய்' என்றும் 'சிவனே சேயாக வந்தவன்' என்றும் பொருள்படும்.
20.
ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதே
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே. ...... 20
ஐயுந்தி மெய் நொந்து பொறி ஐந்து ஓய்ந்தே அறிவின்றி உளம் அஞ்சி உயிர் மங்கும் போதே
நெய் நின்றவடி வேல செந்தூர யாரே நினை அன்றி எனை அஞ்சல் எனும் ஆவலாரே. ...... 20 கோழை மேலிட்டு, உடல் நலிந்து, ஐம்பொறிகளும் வலி கெட்டு, அறிவு தடுமாறி, உள்ளம் நடுக்கங் கண்டு உயிர் மங்கும்பொழுது, குருதிப் பசை கொண்ட வடிவேலை யுடைய செந்தூரனே! உன்னையன்றி வேறுயார் எனக்கு அபயமளிக்க வல்லார்?
21.
யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே. ...... 21
இயம தூதர் சுடு வெட்டு பிள வென்று அதட்டி எனை வெஞ் சினத்தோடு ஒறுக்கென்று வந்தால்
நம தன்ப அஞ்சேல் எனச் சத்தி ஏந்தி நவி ரத்தின் மிசை செந்திலாய் வந்து காவே. ...... 21 எம தூதர்கள் என்னை, 'சுடு', 'வெட்டு' 'பிள', என்று வெஞ்சினத்துடன் அதட்டி வருங்காலத்து, செந்தூரா! `நமது அன்பனே அஞ்சேல்` என உன் சத்திவேலினை ஏந்திக்கொண்டு மயில் மீதேறி வந்து எனக்குக் காட்சி கொடுத்துக் காத்தருளல் வேண்டும். 22.அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைவிட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே. ...... 22
உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன் ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்

அயர்கின்ற அவ்வேளை கைவிட்டிடேலென் ஐயா உனக்கே கையடையாகினேனே. ......22 உயிர் மங்கும் பொழுது உனது தாள்களை நினைக்கச் சத்தியற்றவனாகி விடுவேன். ஓ! செந்திலாய்! எனச் சொல்ல இயலாதவனாகி விடுவேன். கைகள் குவியேன். அயர்வடைகின்ற அவ்வேளையில், ஐயா! அடியேனைக் கை விட்டிடேல். இன்றே உனக்கு நான் அடைக்கலமானேன்.
23.மன வேதனை நீக்க வேண்டல்
அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவேல அலைவாய்
மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே. ...... 23
அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன் அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்

மண்டும்பலஞ்செற்ற வடிவேல அலைவாய் மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே. ...... 23
ஓராயிரம் அண்டங்களைக் கொண்ட சூரபதுமன், அவன் தம்பிமார்களாகிய சிங்கமுகன், ஆனைமுகன், ஆகியவர்களின் வலிமையை நாசஞ் செய்தழித்த வடிவேலைக் கையில் தாங்கி அலைவாயில் வீற்றிருக்கும் அதிபனே! என் மனநோயை ஒழிப்பாயாக. 24.நீயே அடைக்கலம்
அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே. ...... 24
அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன் அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு

நொடியேநுண் பொடியாக அருள்வாய் மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே. ......24
ஒளி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு செந்தூரிலமர்ந்திருக்கும், தேவர்களுக்கெல்லாம் மணியாய் விளங்குபவனே! அடியேனோ எப்பொழுதும் துன்பப்படுபவன். நீயோ ஏழைபங்கன். உன்னைத் தவிர எனக்குத் துணையாக வேறு யாரையும் அறியேன். சிறியேனாகிய என்னை அணுகும் துன்பங்கள் யாவும் பொடிப் பொடியாக அருளுவாயாக. 25.இலை விபூதி மகிமை

கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே. ...... 25
கண்டால் நினிலை நீறு கைகால் வலிப்புக் காச(ம்)ங் கயம் குட்ட(ம்) முதலாய நோயும்
விண்டோடுமே பூத(ம்) பைசாசம் யாவும் வினை யாவுமே செந்திலமர் தேவ தேவே. ...... 25 செந்திலம்பதியில் அமர்ந்தருளும் தேவ தேவா! உன்னுடைய இலை விபூதியைக் கண்ட மாத்திரத்தில் கை கால் வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலாய நோயும் பூதம், பைசாசம், தீவினைகள் யாவுமே விட்டோடிடும். 26.பிரார்த்தனை
செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க. ...... 26
செந்திற் குமாரன்றனைக் கண்கள் காண்க செவி எந்தை புகழ் கேட்க வாய் சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கை செய்வதாக கடையேன் அவன் தொண்டனெனும் வாழ்வு சேர்க. ...... 26 27.முருகனே ஏழை பங்கன்
பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
பிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே. ...... 27

பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தியோர்க்கும் பிரியங்கடருவார்கள் புலையர்க்கு அருள்வார் பிறர்யாவர் மணி வாரி அலைவீசு செந்திற் பிரானன்றி அறியேன் சொனேன் நம்புவீரே. ...... 27 பிரம்ம, விஷ்ணு, ருத்ரன், இந்திரன் முதலிய தேவர்களோ தங்களை அன்புடன் வணங்கும் முனிவர்களுக்கும், பக்தியுள்ள மேலான ஜாதியினருக்கு மட்டுமே அருள்புரிவார்கள். ஆனால் மணிவாரி அலைவீசும் செந்திற் பிரானன்றி வேறு யாரும் புலையருக்கும் (சண்டாளருக்கும்) அருள்புரிந்து அவர்களைத் தடுத்தாட்கொண்டார் என்பதை யானறியேன். இதை நீங்கள் நம்புவீர்களாக. நம்செந்திற் குமாரன் ஜாதி பேதமற்ற கருணாமூர்த்தி. 28.வழிவழி அடிமையாக வேண்டுதல்
மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபூசை புரிவோர்கள் தொழுவோர்
உனையோது வோராக அருள்செந்தி லானே. ...... 28
மனை மக்கள் உறவாள ரடியார்கள் தோழர் மற்றுள்ள பேர்என்றன் மனைவாழும் யாரும்
உனை யன்பு கொடு பூசை புரிவோர்கள் தொழுவோர் உனை யோது வோராக அருள் செந்திலானே. ...... 28 29.பகை நீக்கி அருள வேண்டுதல்
கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
வடிவிக்ர மச்சத்தி யாலே யழித்தே
வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே. ...... 29
கொடி தென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள் கொடு நஞ்ச வகை யென்னை மெலிவிக்க
வந்தால்
வடி விக்ரமச் சத்தியாலே யழித்தே வாழ்விக்கவே செந்தில்வாழ் கந்த வேளே. ...... 29

30. பிழை பொறுக்க வேண்டுதல்
மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளே
மன்னிக்க யான் செய்த புன்மைக் குழாமே. ...... 30
மகார் செய்த பிழை பெற்ற பேர் மன்னியாரோ மகனல்லனோ யான் விண் மண் பெற்ற தந்தாய்
மகா தேவ செந்தூரில் வாழ் கந்தவேளே மன்னிக்க யான் செய்த புன்மைக் குழாமே. ...... 30 சிறு குழந்தைகள் செய்த பிழைகளைப் பெற்றோர் மன்னிக்க மாட்டார்களா? அடியேன் உன் மகனல்லவோ? விண்மண் பெற்ற தந்தையே! மகாதேவா! செந்தூரில் வாழும் கந்தவேளே! மன்னித்தருளுக! யான் செய்த திரளான பாவங்களை. 31. போற்றி
மயில்போற்றி வேல்போற்றி மறியாடு போற்றி
வன்காற் படைச்சேவ லும்போற்றி நந்தூர்
உயர்வெண் டிரைச்சிந்து வும்போற்றி முருகோன்
உபயப் பதம்போற்றி யுரைசெந்தில் போற்றி. ...... 31
மயில் போற்றி வேல் போற்றி மறியாடு போற்றி வன் காற்படைச் சேவலும் போற்றி நந்தூர்
உயர் வெண்டிரைச் சிந்துவும் போற்றி முருகோன் உபயப் பதம் போற்றி யுரைசெந்தில் போற்றி. ......31
32.வாழ்த்து
ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
ஜயப்பாவு புகழோய் ஜயத்தாவி லின்போய்
ஜயவின்ப சிந்து ஜயச்சர்வ பந்து
ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே. ...... 32
ஜய வின்ப வடிவா ஜயச்சோதி ரூபா ஜயப் பாவு புகழோய் ஜயத்தாவி லின்போய்
ஜய வின்ப சிந்து ஜயச்சர்வ பந்து ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில்வாழ்வே. ...... 32 வெற்றியைத் தரும் இன்பவடிவான சுப்பிரமணியக் கடவுளே! வெற்றிச் சுடருருவ மூர்த்தி! வெற்றி பரவும் புகழுடையோய்! குற்றமில்லாத இன்ப வெள்ளப் பெருக்கே! வெற்றியும் இன்பமும் திகழும் செந்தூரா! எல்லா உயிர்களுக்கும் அபயமளிக்கும் தந்தையே! இன்ப வெள்ள வள்ளலே! செந்திலம்பதியின் வெற்றியை நாட்டி விளங்கும் கந்தவேளே! அடியேனை ஆதரித்தருளுக!
நூற்பயன்
திருச்செந்தி நாதன் பதத்தே மணக்கும்
திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தே படிப்போர்
திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்
சிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்து வாரே. ...... 33

திருச் செந்திநாதன் பதத்தே மணக்கும் திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தே படிப்போர் திருப் பெண்டு மக்கட் சிறப் பின்ப வாழ்வும் சிறக்கத் திகழ்ந் தின்ப வீடெய்துவாரே. ...... 33 திருச்செந்தில் நாதன் திருவடியில் மணக்கும் புஜங்க மென்னும் இப்பாடல்களை ஆர்வத்துடன் படிப்போர் திருமகள் போன்ற பெண்டு, பிள்ளைகள், சிறப்பு, இன்பவாழ்வு முதலியவற்றால் சிறப்படைந்து நீடூழி வாழ்ந்து பேரின்ப மயமான வீடெய்துவாரே. செந்தில் நாயகன் சேவடி வாழ்க!

No comments:

Post a Comment

தொடர்பு படிவம்

Name

Email *

Message *